எனது இப்பதிவில் செந்தழல் ரவி அவர்கள் விளையாட்டாகப் போட்ட இப்பின்னூட்டத்தை குறித்து மதுமேகம் என்ற பெயரில், அனானி ஆப்ஷனில் வந்த பதிவர் ஒருவர் குறை கூறியுள்ளார். ஏட்டிக்கு போட்டியாக அவர் ஏசுபிரானை பற்றி இட்ட பின்னூட்டத்தை நான் ஏற்காதது அவருக்கு தவறாகப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விஷயங்களை விளக்குவதே இப்பதிவு. கூடவே கிருஷ்ணர் புராணமும் வரும்.
முதலில் செந்தழல் ரவி அவர்கள் பின்னூட்டத்தைப் பார்ப்போம்.
"கிருஷணன் ஒரு நீக்ரோ. அதனால் தான் கோபியர்கள் சுற்றிச்சுற்றி வந்தனர். கிருஷ்னர் அலாவுதீன் கில்ஜி மாதிரி அடிமை வம்சத்தை சார்ந்த மன்னர். அவர் ஆப்ரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ஆப்ரிக்க அடிமை நீக்ரோ குழந்தை...
பகுத்தறிவோடு சிந்தித்தால் மேலும் விளங்கும்...
அரசன் கம்சன் கணவன் மனைவி இருவரையும் அடைத்து வைத்ததாக சொல்கிறார்கள்...
அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தால் அவர்களை ஒரே செல்லில் பூட்டி வைக்க அவன் என்ன அவ்வளவு மாங்கா மடையனா ?
கிருஷ்ணன் பிறந்தபோது ஏதும் ஆதாரம் இல்லை...கிருஷ்னன் பிருந்தாவனத்துக்கு 'கொண்டு வரப்பட்ட' ஒரு குழந்தை...
கிருஷ்னன் நீக்ரோ என்பதால் இயல்பாக இருந்த 'பெரிய' விடயம் காரணமாக பெண்கள் சுற்றி சுற்றி வந்தனர் என்கிறது ஒரு ரகசிய செப்பேடு.
டோண்டு சார் இதற்கு என்ன சொல்கிறார்?
இதற்கு நான் அளித்த பதில்:
"//பகுத்தறிவோடு சிந்தித்தால் மேலும் விளங்கும்...
அரசன் கம்சன் கனவன் மணைவி இருவரையும் அடைத்து வைத்ததாக சொல்கிறார்கள்...
அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தால் அவர்களை ஒரே செல்லில் பூட்டி வைக்க அவன் என்ன அவ்வளவு மாங்கா மடையனா?//
வாருங்கள் ரவி. உங்கள் கேள்விக்கு எனது விடை இப்பதிவில் ஏற்கனவே போடப்பட்டு விட்டது.
பெரிய விஷயம் பற்றி ஒரு சுவாரசிய தகவல். பிறகு கூறுகிறேன்".
இப்போது பெரிய விஷயம் பற்றி கூறி விடுகிறேன்.
பாரத யுத்தம் முடியும் தருவாயில் அசுவத்தாமன் பாண்டவ வம்சத்தையே அழிக்க விட்ட பிரும்மாஸ்திரம் அபிமன்யுவின் மனைவி உத்திரையின் கருவை அடைகிறது. குழந்தை பிண்டமாக வெளியில் வந்து பேச்சு மூச்சற்று கிடக்கிறது. அதன் உயிரைக் காக்க வேண்டுமானால் ஒரு பிரும்மச்சாரி வந்து தான் கால் கட்டை விரலால் அப்பிண்டத்தைத் தொட வேண்டும் என கண்ணன் கூற, குந்தி தேவியும் பல பிரும்மச்சாரிகளை வரவழைக்கிறார். ஒரு பிரயோசனமும் இல்லை. என்ன செய்வது என்று எல்லோரும் திகைக்கும்போது கண்ணனே தான் குழந்தையை தொடுவதாகச் சொல்லி முன்னுக்கு வர, குந்தி தேவியே அவரிடம் இது சற்று ஓவர் இல்லையா எனக் கேட்கிறார். இருப்பினும் கண்ணன் கால் பட்ட குழந்தை உடனே உயிர் பிழைக்கிறது.
இப்போது கண்ணன் விளக்குகிறார், தான் நிஜமாகவே பிரும்மச்சாரி என்று. தன்னுடன் உறவு கொண்ட பெண்கள் எல்லாமே சுகம் பெற்றனர். தான் மட்டும் ஒரு உணர்ச்சியும் இன்றி எல்லாவற்றையும் கடமையாகவே எண்ணியதாகக் கூறுகிறார். ஒரு தூணின் மேல் மாடு உரசினால் மாட்டுக்குத்தான் சுகம், தூணுக்கு ஒன்றும் இல்லை என்ற ஒப்பீட்டை இங்கு வியாசர் தருகிறார். ஆகவே ரவிக்கு நான் கூறுவேன், இது பெரிய விஷயமே அல்ல.
இப்போது கோபப்பட்ட அனானி வாசகரிடம் வருவோம். அவரது முதல் பின்னூட்டம் ஏசுபிரானை தாக்கி வந்தது. நான் மிகவும் மதிப்பவர் ஏசுபிரான். ஆகவே அப்பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. அது சம்பந்தமாக எங்கள் பின்னூட்டப் பரிமாறல்கள்:
"Mr. மதுமேகம் said...
டோண்டு,
நீங்கள் இதற்கு முன் இடப்பட்ட என்னுடைய பின்னூட்டத்தை இது வரை பார்க்கவில்லையா?
ஒருவேளை நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள பின்னூட்டங்களைவிட அருவருப்பாக ஏதேனும் அதில் இருக்கிறதா?
கீழான ஜந்துக்களோடு தைரியமாக மோதிய நீங்கள் இப்போது யாருக்காக அல்லது எதற்காக அஞ்சுகிறீர்கள்?
ஒருவருடைய பலகீனத்தை வைத்து நடக்கும் ப்ளாக் மெயில்கள் போல வேறு ஏதேனும் ப்ளாக்மெயில்களில் சிக்கியுள்ளீரா?
October 14, 2007 8:24 AM
dondu(#11168674346665545885) said...
//நீங்கள் இதற்கு முன் இடப்பட்ட என்னுடைய பின்னூட்டத்தை இது வரை பார்க்கவில்லையா?
ஒருவேளை நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள பின்னூட்டங்களைவிட அருவருப்பாக ஏதேனும் அதில் இருக்கிறதா?//
உங்கள் பின்னூட்டத்தை நான் கீழ்க்கண்ட காரணங்களுக்காக பிரசுரம் செய்யவில்லை.
1. பதிவுக்கு சம்பந்தமேயில்லாத பின்னூட்டம். அதைக் கூட பொறுத்து கொள்ளலாம், தமாஷ் கும்மியாக இருக்கும் பட்சத்தில், ஆனால்
2. நான் மிகவும் மதிக்கும் ஏசுபிரானை பற்றி மிக அவதூறுகள் அப்பின்னூட்டத்தில் உள்ளன. ஆகவே அதை நான் அனுமதிக்கவில்லை.
மற்றப்படி டோண்டு ராகவனை பிளாக்மெயில் செய்ய ஒருவர் இனிமேல் பிறந்துதான் வர வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
October 14, 2007 8:34 AM
Mr. மதுமேகம் said...
டோண்டு,
தங்களுடைய ஜல்லி பதிலுக்கு நன்றிகள்.
>>>> 1. பதிவுக்கு சம்பந்தமேயில்லாத பின்னூட்டம். <<<<
அப்படியா? அப்படியானால் கிருட்டிணன் பின்னால் பெண்கள் சுற்றினார்கள் என்பது தங்களுடைய "என் நாடக மற்றும் சாரண இயக்க அனுபவங்களோடு" எங்கனம் தொடர்புடையது என்பதை விளக்க முடியுமா?
>>>> ஆனால்
2. நான் மிகவும் மதிக்கும் ஏசுபிரானை பற்றி மிக அவதூறுகள் அப்பின்னூட்டத்தில் உள்ளன. ஆகவே அதை நான் அனுமதிக்கவில்லை. <<<<
அவை கிருட்டிணனுக்கு 'பெரிய' விடயம் இருந்தது என்பதைவிட மோசமான அவதூறாக எங்கனம் ஆகிவிட்டது?
கவனித்துப் பார்த்தால் கிருட்டிணனைப் பற்றி வந்திருக்கும் அதே கருத்து மற்றும் வாக்கிய அமைப்பில்தான் இந்த ஏசு பற்றிய கருத்தும் வாக்கியங்களும் அமைக்கப்பட்டன.
மேலும் கைக்கு வந்தபடி கசுமாலம் எழுதியதுபோல இல்லாமல் ஆதாரங்களும் அளிக்கப்பட்டிருந்தன. ஆதாரங்களோடு பேசப்படுகிற ஒரு விடயத்தைவிட ஆதாரமில்லாமல் அவதூறு சொல்வது மட்டுமே காரணமாக இருக்கக்கூடிய விடயம் எங்கனம் உயர்ந்ததாகிவிட்டது?
கண்ணன் பெயரை சொல்லிக்கொள்ளுவது உங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக மட்டுமே இருக்கலாம். அவனுக்காக உருகி வாழ்க்கையை அர்ப்பணித்த உங்களுடைய முன்னோர்களைப் போல எளிமையான, நேர்மையான அந்தணனாக இருக்கவேண்டும் என்று உங்களிடம் சமூகம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், உங்களைப் பெற்ற உத்தமர்களும், அவர்களது முன்னோர்களும் தங்கள் குலத்தில் பிறந்த ஒருவர் கிருட்டிணனைப் பற்றிய இந்த கேவலமான அவதூறை மக்கள் மத்தியில் மார்க்கெட்டிங் செய்து மகிழும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ?
ஒருவேளை முன்னோர்கள் எல்லாம் இல்லை. அதெல்லாம் பொய். உடல் நீத்த முன்னோர்கள் எல்லாம் "இறுதித் தீர்ப்பு நாளுக்காகவும்" "நரகத்தில் உழல்வதற்காகவும்" காத்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் நம்பலாம்.
கண்ணனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஏசு ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதுபற்றி மட்டும் சொல்லக்கூடாது என்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.
கொஞ்சம் விளக்குவீர்களா?
இதை ஏன் நான் கேட்கிறேன் என்றால், கண்னன் என் நண்பன். காலம் கடந்தும் என் போன்ற சாதாரண மனிதர்களை வழிநடத்தும் நண்பன். அவனைப் பற்றி அவதூறினை நீங்கள் பரப்புவதால் விளக்கம் வேண்டுகிறேன்.
இது தவறு என்று தோன்றினால் நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடியது கண்ணனுக்காக வாழ்ந்த, கண்ணனின் பக்தர்கள் என்பதற்கு அடையாளமாக தங்களது திருமேனியில் சங்கு சக்கர அடையாளங்கள் நெருப்பினால் பதித்துக்கொண்ட உங்களுடைய முன்னோர்களிடம்தான் இருக்கும்.
இந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிப்பீர்களா என்பது தெரியவில்லை.
dondu(#11168674346665545885) said...
//இதை ஏன் நான் கேட்கிறேன் என்றால், கண்னன் என் நண்பன். காலம் கடந்தும் என் போன்ற சாதாரண மனிதர்களை வழிநடத்தும் நண்பன். அவனைப் பற்றி அவதூறினை நீங்கள் பரப்புவதால் விளக்கம் வேண்டுகிறேன்.//
இது சீரியசான அப்சர்வேஷனாகப் பட்டதால் எனது பதிலை தாமதித்தேன்.
1. கண்ணனை பற்றி பின்னூட்டம் இட்டது செந்தழல் ரவி, தன்னுடைய சொந்தப் பெயரில்.
2. அதில் அவர் முதலில் கம்சன் சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருந்தது. ஆகவே அதை அனுமதித்து கேள்விக்கும் பதில் சொன்னேன்.
3. மற்றப்படி அவர் நீக்ரோ சம்பந்தமாகப் பேசியது அப்பட்டமான உளறல். கண்ணன் பக்தர்கள் (நானும் அவர்களில் வருவேன்) இதை உணர்வார்கள். எதிர்வினை கொடுக்கக் கூட லாயக்கில்லாதது அது.
4. ஆனால் செந்தழல் ரவி ஏன் அதை கூறினார்? அவரே கூறியபடி இப்பதிவில் கும்மியடிக்கத்தான் வந்தார். அதில் இதை சும்மா கலாய்த்தலுக்காக போட்டிருக்கலாம். ஏனெனில் அவர் என்னுடைய சிறந்த நண்பர். நேரிலேயே பார்த்து பேசி பழகியிருக்கிறேன்.
5. ஆனால் உங்களை பற்றி என்ன கூறுவது?வெறுமனே மதுமேகம் என்ற பெயரில் அனானியாக வந்தீர்கள். உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்திருந்தால் பெரிய கலாட்டாவாகியிருக்கும். நீங்கள் யாரென்றே தெரியாத நிலையில் நான்தான் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது எனக்கு தேவையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mr. மதுமேகம் said...
//உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்திருந்தால் பெரிய கலாட்டாவாகியிருக்கும். நீங்கள் யாரென்றே தெரியாத நிலையில் நாந்தான் அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது எனக்கு தேவையா?//
கலாட்டா நடக்காது என்பதால் கிருட்டிணனை இகழும் பின்னூட்டத்தை, உளறல் என்று தெரிந்தாலும் வெளியிடுவீர்கள்.
கலாட்டா நடக்கும் என்பதால் ஏசுவிற்கும் அவரது சீடர்களுக்கும் ஓரினச் சேர்க்கை உறவு இருந்திருக்கலாம் என்கிற பின்னூட்டத்தை வெளியிட மறுத்துவிட்டீர்கள்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கலாட்டா, வன்முறை இவற்றிற்குப் பயந்து செல்லும் வாழ்க்கைதான் பெரும்பாலான மனிதர்களுடையது. நேர்மை, எது தவறு எது சரி என்பது குறித்த தெளிவு இருப்பினும் வன்முறையே சிலருடைய முடிவுகளுக்கு அடிப்படையாக அமைகிறது.
ஆனால், இந்த கிருட்டிணனோ சுயதர்மம் என்று பேசுகிறான். வெளியிலிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள், இகழ்ச்சிகள், கலாட்டாக்கள் இவற்றின் அடிப்படையில் இல்லாமல், ஒவ்வொருவரும் தன்னுடைய சுயதர்மத்தை செயல்படுத்தவேண்டும் என்கிறான்.
அப்படிப்பட்ட கிருட்டிணன் வழி நடப்பவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லுவதும், அதே சமயம் கலாட்டாவிற்கு அஞ்சுவதுமாக எதிரெதிர் செயல்பாடுகள் கொண்டிருப்பது சராசரி மனிதர்கள் செய்வது இல்லையே.
சுயதர்மம் பயிலும் சிலர் நீங்கள் வெளியிட மறுத்த பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு கிருட்டிணன் அருள் உண்டு என்பது தெரிகிறது.
தமிழ் இணையம் குறித்த ஆராய்ச்சிக்காக நான் எடுத்துக்கொண்ட பதிவுகளில் தங்களுடையதும் ஒன்று.
நடைமுறை உலகைவிட, இணையம் அதிக சுதந்திரம் தருகிறது என்பது உண்மையல்ல என நிறுவவும், இணையம் நடைமுறை உலகைவிட வன்முறையை அதிகம் வெளிப்படுத்தும் ஒரு கருவி எனவும் நிறுவுவதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
என்னுடைய தீஸிஸில் தங்களுக்கும் நன்றிகள் செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
மற்றபடி, சிங்கமுத்து என்கிற பெயரில் புத்திமட்டாய் எழுதப்பட்ட பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்த எதிர்விளைவு மற்றொரு நகைச்சுவை.
நான் எந்த சாதி பற்றியும், மதம் பற்றியும் குறிப்பிடாதபோது, சாதி மதம் பற்றி எழுதியுள்ளதாக அடித்திருப்பது அக்மார்க் கப்ஸா.
அந்த கப்ஸாவிற்கு நீங்கள் செய்யும் வக்காலத்துதான் கவலைக்குரியது.
இந்த சமுதாயம் எங்கே போகிறது?
உங்களுடையது நியாயமற்ற விளக்கம் என்பது தெரிகிறது. அதுகுறித்து என்னுடைய கருத்தோடு இந்த கேள்வி-பதில் விளையாட்டை நிறுத்திக்கொள்ளலாம். இப்பதிலை உங்களது பதிவில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுமானால், இதைப் படிப்பவர்கள் எது சரி, எது தவறு என்று அவர்களே முடிவு செய்துகொள்வர்.
இப்பதிலை வெளியிடத் தேவையான தைரியம் உங்களிடம் இன்னும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.
October 16, 2007 7:46 AM
dondu(#11168674346665545885) said...
//இப்பதிலை வெளியிடத் தேவையான தைரியம் உங்களிடம் இன்னும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.//
என்னிடம் நிச்சயமாக தைரியம் உண்டு. ஆனால் அது அசட்டு தைரியம் ஆக முடியாது. நான் ஏற்கனவே சொன்னபடி கிருஷ்ணன் நீக்ரோ என்பது அப்பட்ட உளறல். அது பதில் பெற லாயக்கில்லாதது.
அதே சமயம் ஏசு பிரான் பற்றி நீங்கள் சொன்னதை சொந்த அடையாளங்களுடன் நீங்கள் சொல்லத் தயாரில்லை என்பது உங்கள் "தைரியத்தின்" நிரூபணமாகிறது.
நீங்கள் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இப்பதிவை படிக்கும் மற்றவர் அங்கு போய் பார்த்து கொள்ள போகிறார்கள். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
October 16, 2007 8:01 AM
இவ்வளவுதான் விஷயம். மறுபடியும் கூறுவேன். கிருஷ்ண பக்திக்கு நான் யாருக்கும் குறைந்தவன் அல்ல. அதே சமயம் கிருஷ்ணர் ஒரு நல்ல நண்பர். கலாய்த்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். அவரைப் பற்றிய பின்னூட்டத்தை நான் வெளியிட்டதே செந்தழல் கேட்ட கேள்வி ஒன்றை வைத்து நான் ஏற்கனவே பதிவைப் போட்டதே காரணம். மற்றப்படி நீக்ரோ விஷயம் பிதற்றல் என்பதே நிஜம்.
கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது வேறு சில விஷயங்களையும் கூறுவேன். இப்போது நாத்திகவாதிகள் திட்டுவதெல்லாம் ஜுஜூபி என்ற அளவில் அவர் சமகாலத்தவரே திட்டியுள்ளனர். அவர்களில் உதங்கர் முக்கியமானவர். பாரத யுத்தம் முடிந்த பிறகு அவர் கிருஷ்ணரை சபிக்கவே துணிந்தார். ஆயினும் மாயக் கிருட்டினன் அவரை சாந்தப்படுத்தினார். துரியோதனன் வாய்மொழியாக வியாசரே திட்டியதாக ராஜாஜி அவர்கள் தனது "வியாசர் விருந்தில்" குறித்துள்ளார். ஆயுதமே ஏந்த மாட்டேன் என்றிருந்த கிருஷ்ணரை வேண்டுமென்றே தீவிரமாக சண்டை செய்து கிருஷ்ணரே சங்கு சக்கிரத்துடன் தன்னை கொல்ல வரும் அளவுக்கு உசுப்பி மகிழ்ந்தவர் பீஷ்மர். ஆனால் ஒன்று கிருஷ்ணரை புகழ்பவரும் சரி இகழ்பவரும் சரி ஒருவித பந்தத்தையே உணர்ந்தனர்.
ஆக டோண்டு ராகவன் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்ததால் கிருஷ்ணர் பெருமைக்கு பங்கம் வந்து விடுமா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
2 hours ago
51 comments:
ஆக டோண்டு ராகவன் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்ததால் ஏசுவின் பெருமைக்கு பங்கம் வந்து விடுமா என்ன?
//ஆக டோண்டு ராகவன் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்ததால் ஏசுவின் பெருமைக்கு பங்கம் வந்து விடுமா என்ன?//
டோண்டுவின் உடல்நலனுக்கு பங்கம் வரலாம் அல்லவா? ஏன் இந்தக் கொலை வெறி? :)))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் கும்மிக்கு அந்த பின்னூட்டம் போட்டேன் என்றாலும், அது ஒருவர் மனதை புண்படுத்திய வகையில் இருந்துவிட்ட காரணத்தால், திறந்தமனத்துடன் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்...
மற்றபடி அவர் ஏசு,தாசு,அல்லா,குல்லா,மகாவீரர்,கர்மவீரர் காமராஜர்,புத்தர்,சித்தர் என்று யாரைப்பற்றி பின்னூட்டம் போட்டாலும் அது பதிவின் சோல் ஓனரான டோண்டு ராகவனைத்தான் சாரும்...
இங்கே மீண்டும் கும்மி நடைபெறுமா ?
இல்லாத கடவுளுக்கு இத்தன பில்ட்டப்பு. பெத்த பதிவு. பெரியார் மட்டும் இன்று இருந்திருந்தால்?
முங்கசித்து
வழக்கமான கண்டிஷனுடன், அதாவது திட்டல்கள் இல்லாத, கும்மிகள் வரவேற்கப்படுகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹே! டொம்ம டக்கா டியாலோ.....டோண்டு மாமா டியாலோ
காப்பி பேஸ்ட் செய்ததில் ஏற்பட்ட தவறு கீழே சரி செய்யப்பட்டுள்ளது.
சுயதர்மம் பயிலும் சிலர் நீங்கள் வெளியிட மறுத்த பின்னூட்டத்தை https://www.blogger.com/comment.g?blogID=15533422&postID=4743976792756049226 வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு கிருட்டிணன் அருள் உண்டு என்பது தெரிகிறது.
நக்கீரரே,
முதலில் நான் அதை ஹைப்பர் லிங்காகவே பதிவு டிராஃப்ட் செய்யும் போது வைத்தேன். பிறகு பதிவில் நேரடியாகச் சுட்டி தர்க்கூடாது ரஎன தீர்மானித்து அதை வேண்டுமென்றே இடவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மேற்படி பதிவை / என் பின்னூட்டத்தை படித்த ஒருவரிடம் திட்டு வாங்கவேண்டியாதாயிற்று...
வேறு வழியில்லையே என்பதால் எந்த பதிலும் சொல்லாமல் மண்டையை மண்டையை ஆட்டினேன்...
அது யார் என்று (என்னை திட்டியது) கண்டுபிடிக்க இயலுமோ டோண்டு ராகவனால் ?
ஏய் எங்கேப்பா சுட்டி ? வெறும் வெள்ளையா தெரியுது எனக்கு
எனக்கு தெரிந்த பாப்மார்லி கஞ்சா பழகும் குட்டியை அறிமுகம் செய்யவா ? ஏஞ்சலீன் கோயிந்தசாமியென்று பெயர்.
//அது யார் என்று (என்னை திட்டியது) கண்டுபிடிக்க இயலுமோ டோண்டு ராகவனால்?//
உங்கள் தந்தை, அன்னை அல்லது பாட்டி? அல்லது! சாரி, முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும், உங்கள் வருங்கால எஜமானி? :))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
மூன்று நாட்களாக உங்களிடமிருந்து புதிய பதிவு எதும் வராத காரணத்தால் ரொம்ப கஷ்டத்துடன் இருந்தோம்.
எப்படியோ இன்று ஒரு பதிவு போட்டிங்க.
பதிவு என் கருத்து எதும் இல்லை இப்போதைக்கு
அன்புடன்
அரவிந்தன்
dondu sir
i dont have any comments abt this post
doest necessary for u to fall behind gummi or useless comments ??
i am not accepting most of your views..but now a days i see lot of unwanted comments in the name of gummi?? wat is tat gummi??
குட்டி தெரிந்தவன் said...
எனக்கு தெரிந்த பாப்மார்லி கஞ்சா பழகும் குட்டியை அறிமுகம் செய்யவா ? ஏஞ்சலீன் கோயிந்தசாமியென்று பெயர்.
wat this comment says??
anything usefull??
//i am not accepting most of your views..//
எங்கு, எதற்கு எப்படியென்றெல்லாம் அதிகமான பின்னூட்டங்கள் இதில்தானே வரும்? :)))
// wஹ்at is tat gummi?//
காதலிக்க நேரமில்லை படத்தில் படத்தின் கதையென்ன என்று கேட்ட கேள்விக்கு நாகேஷ் காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீக்கு பதில் கூறிய குரலில்:
"எது கும்மியா? அதெல்லாம் சுலபத்துல சொல்லிடுவோமா? அது என்னான்னு யோசிச்சு யோசிச்சு அவனவன் சாகணும்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
//i am not accepting most of your views..//
எங்கு, எதற்கு எப்படியென்றெல்லாம் அதிகமான பின்னூட்டங்கள் இதில்தானே வரும்? :)))
// wஹ்at is tat gummi?//
காதலிக்க நேரமில்லை படத்தில் படத்தின் கதையென்ன என்று கேட்ட கேள்விக்கு நாகேஷ் காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீக்கு பதில் கூறிய குரலில்:
"எது கும்மியா? அதெல்லாம் சுலபத்துல சொல்லிடுவோமா? அது என்னான்னு யோசிச்சு யோசிச்சு அவனவன் சாகணும்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒன்னும் புரியலை :))))))
//**
இப்போது கண்ணன் விளக்குகிறார், தான் நிஜமாகவே பிரும்மச்சாரி என்று. தன்னுடன் உறவு கொண்ட பெண்கள் எல்லாமே சுகம் பெற்றனர். தான் மட்டும் ஒரு உணர்ச்சியும் இன்றி எல்லாவற்றையும் கடமையாகவே எண்ணியதாகக் கூறுகிறார்.
**//
என்னங்க இது கன்னறாவி? கண்ணன் கடவுள்தானே? இப்படியெல்லாமா செய்தார்?
//என்னங்க இது கன்னறாவி? கண்ணன் கடவுள்தானே? இப்படியெல்லாமா செய்தார்?//
இதில் என்ன கண்ராவி? தாமரை இலை தண்ணீர் எனக் கேள்விப்பட்டதில்லையா?
மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுக்கும் முன்னால் ஆதிசேஷன் அவரிடம் வந்து இந்த அவதாரத்தில் தான் அவரது அண்ணனாக வரவேண்டும் என கேட்கிறார். அதாவது ராமாவதாரத்தில் தம்பி லட்சுமணனாக வந்த போது அவரை வனவாசம் மேற்கொள்ள விடாது தடுக்க முடியவில்லையாம். இந்த அவதாரத்தில் அவருக்கு அண்ணனாக இருந்து அவரே தன் மேல் கஷ்டம் ஏதேனும் இழுத்து விட்டுக் கொண்டாலும் தான் அண்ணனாக இருந்து தடுக்க இயலுமாம்.
விஷ்ணு வாய் நிறைய புன்னகையுடன் அதை ஒத்து கொள்கிறார். ஆனால் உண்மையில் கிருஷ்ணாவதாரத்தின்போது பலராமரை எப்படியெல்லாம் அன்புடனும் மரியாதையுடனும் கலாய்க்கிறார்? அதுதான் கிருஷ்ணர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போரடிக்கும் பதிவு.குழப்பமான லாஜிக்.
அனானி ஆப்ஷனை வைத்துக்கொண்டு "சொந்த அடையாளத்துடன் வர தைரியமில்லாதவர்" என அனானியை கிண்டல் செய்கிறீர்கள்.
நீங்கள் முரளி மனோகராக உலா வந்து பிறகு "முரளி மனோகர் என்பது அனானி மாதிரிதான்,அனானி பின்னூட்டம் போட எனக்கு எல்லா உரிமையும் உண்டு" என அலப்பறை செய்தீர்கள்.இப்போது சொந்த அடையாளத்துடன் வர தைரியமில்லாதவர் என அனானியை திட்டுகிறீர்கள.
சொந்த அடையாளத்துடன் வந்தால் மூர்த்தி ஆபாச பின்னூட்டம் அனுப்புவான் என்பதால் அனானி ஆப்ஷனை திறந்தேன் என முன்பு கூறினீர்கள.
உங்க காமடிக்கு அளவே இல்லையா?
//அனானி ஆப்ஷனை வைத்துக்கொண்டு "சொந்த அடையாளத்துடன் வர தைரியமில்லாதவர்" என அனானியை கிண்டல் செய்கிறீர்கள்.//
அனானி ஆப்ஷனை வைத்தால் என்ன? காண்ட்ரவர்ஷியலாக கருத்தைச் சொல்லும்போது சொந்தப் பெயரிலேயே செய்யலாமே? அதை செய்யத் தைரியம் இல்லாதவர் என்றுதான் கூறினேன். அதுதான் உண்மை.
//நீங்கள் முரளி மனோகராக உலா வந்து பிறகு "முரளி மனோகர் என்பது அனானி மாதிரிதான்,அனானி பின்னூட்டம் போட எனக்கு எல்லா உரிமையும் உண்டு" என அலப்பறை செய்தீர்கள்.இப்போது சொந்த அடையாளத்துடன் வர தைரியமில்லாதவர் என அனானியை திட்டுகிறீர்கள//.
முரளி மனோஹர் புனைப்பெயர், அனானி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
//சொந்த அடையாளத்துடன் வந்தால் மூர்த்தி ஆபாச பின்னூட்டம் அனுப்புவான் என்பதால் அனானி ஆப்ஷனை திறந்தேன் என முன்பு கூறினீர்கள//.
ஆம் அது சிலருக்கு தேவைப்பட்டது. ஆகவே செய்தேன்.
//உங்க காமடிக்கு அளவே இல்லையா//?
இதில் என்ன காமெடி கண்டீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அனானி ஆப்ஷனை வைத்தால் என்ன? காண்ட்ரவர்ஷியலாக கருத்தைச் சொல்லும்போது சொந்தப் பெயரிலேயே செய்யலாமே? அதை செய்யத் தைரியம் இல்லாதவர் என்றுதான் கூறினேன். அதுதான் உண்மை//
முரளி மனோகர் பெரியாரை பற்றியும் கம்யூனிஸ்டை பற்றியும் கான்ட்ரவர்ஷியலா கருத்து சொன்னதுக்கும் இது பொருந்துமா?:-)
கான்ட்ராவர்சியாக கருத்து சொல்லத்தானே முரளிமனோகர்?
அப்புறம் மதுமேகத்தை பார்த்து எதற்கு கிண்டல்?
முரளிமனோகராக வருவது உங்கள் இஷ்டம் என அலப்பறை செய்தீர்கள்.அப்புறம் மதுமேகமாக வருவதும் அவரது இஷ்டம் தானே?அதற்கு எதற்கு கிண்டல்?
//முரளி மனோஹர் புனைப்பெயர், அனானி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.//
இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசமோ?:-)
பேரே போடாமல் மொட்டை கடுதாசி போடுவதற்கும் "உங்கள் நலம் விரும்பி" என கையெழுத்து போடுவதற்கும் உள்ள வித்தியாசம் தான் இது.இதில் அவரை நீங்கள் கிண்டல் செய்ய என்ன இருக்கிறது?
முரளி மனோகர் புனை பெயர் என்றால் மதுமேகமும் புனை பெயர் தானே?(மதுமேகம் அவரது நிஜ பெயர் என காமடி செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன்)
//ஆம் அது சிலருக்கு தேவைப்பட்டது. ஆகவே செய்தேன்.//
அந்த சிலரில் மதுமேகம் ஒருவராக ஏன் இருக்க கூடாது?அதற்கு 'சொந்த அடையாளத்துடன் வர தைரியமில்லாதவர்' என கிண்டல் செய்வீர்களா?
//முரளி மனோகர் புனை பெயர் என்றால் மதுமேகமும் புனை பெயர் தானே?(மதுமேகம் அவரது நிஜ பெயர் என காமடி செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன்)//
முரளி மனோஹர் பெயரிலும் நான் பிளாக்கராகவே வந்தேன். எங்கெல்லாம் முரளி மனோஹர் பிளாக்கராக எலிக்குட்டி சோதனையில் தேறி வந்தானோ, அதெல்லாம் அவன் / நான் மட்டுமே.
ஆனால் மதுமேகம் அப்படியில்லை. இன்னொருவர் அதே பெயர் போட்டு வந்தால் யாரும் கண்டு பிடிக்க இயலாது. சிங்கமுத்து உதாரணம் ஒன்றே போதுமே.
முரளி மனோஹர் பெயரில் கருத்து சொன்னதுக்கு முக்கியக் காரணமே அக்கருத்தை டோண்டு ராகவனுடையது என்ற முத்திரையுடன் பார்க்காமல் கருத்தாக மட்டும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆக முரளி மனோஹர் மற்றும் மதுமேகம் ஒரே மாதிரி உதாரணங்கள் அல்ல. வித்தியாசங்கள் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுடாங்க!
சேதுக்கால்வாயை தோண்டும் பணியில் இருந்த புல்டோஸர் உடைந்து சுனாமி உருவாகிறது...சென்னை அம்பத்தூர் வரை அழியப்போகிறது...
அதானால் எல்லோரும் கிளம்பி சென்று திருவாண்மியூர், பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தஞ்சமடையவும்...
பதற்றத்துடன்,
புரளிமனோஹர்...
சே...அதனை அனானி ஆப்ஷன்ல போடலாம்னு நெனைச்சேன்...
//அதானால் எல்லோரும் கிளம்பி சென்று திருவாண்மியூர், பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தஞ்சமடையவும்...//
மடிப்பாக்கத்தில் ஏற்கனவே சுனாமி குடியிருப்பதால் அங்கு மட்டும் புது சுனாமி வராது என்று நம்பத்தகாத வட்டங்கள் மற்றும் மாவட்டங்கள் கூறுகின்றன.
பதிவுலக பினாமி
//சே...அதனை அனானி ஆப்ஷன்ல போடலாம்னு நெனைச்சேன்...//
புனைப்பெயரில் வந்தாலும் தரமான பின்னூட்டங்களையே போட்ட முரளி மனோஹரின் பெயரை மாற்றி எழுதினாலும் அங்கும் ஒருவித ஹானஸ்டி தன்னையறியாமலேயே வந்து விடுகிறது என்பதால் நீங்கள் அறியாமலேயே உண்மையான பெயரை இட்டீர்கள் என்று கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புரளிமனோஹர்(C) என்ற புனைப்பெயரினை நான் இந்த இடத்தில் காப்பிரைட் செய்கிறேன்....
நான் மட்டும் தான் யூஸ் பண்ணுவேன்...!!!
Dear Mr.Dondu,
You say you accept Sri Krishna and also you respect jesus. This is ridiculous. Jesus (like Hitler) says clearly that he who is not with him is aginst him. Krishna says clearly that 'follow your own path chosen by discrimination and live happily'(BG 18:63)Sri Krishna says that he who thinks of him as born of high caste is a demonic person (BG 13:15) But followers of Jesus invented false genetic trees to claim that he was high born in the line of David. Sri Krishna says He resides in the heart of all people while Jesus asked his disciple to discriminate between people on such terms as 'swine and dogs'. Sri Krishna is a spiritual universal humanist whereas Jesus is a racist anti-human myth. You cannot compromise between Jesus and Sri Krishna. Sri Krishna as revealed by Bhagavath Gita is the manifestation of Universal Godhead in human form whereas Jesus is a pathological myth created as an artifice of aggression. That is why Ayya Vaikundar has shown us all Hindus, Christian scripture as 'vain scripture' (Veen Vetham) and 'cruel scripture' (Kodum Vetham) So donot hurt the feelings of Hindus by comparing the incompatibles. 'If you compromise between food and poison death alone will win.' - Ayn Rand
இங்க மதக்கலவரம்........ஓடியாங்க அல்லாரும்......
!!!!!!
அரவிந்தன். ஏனிந்த கொலைவெறி...!!! நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன் போதுமா !!!
அரவிந்தன் அவர்களே,
கண்ணன் பக்தனாகிய நான் ஏசுபிரானையும் மதிக்கிறேன். இதில் என்ன பிரச்சினை? இருவர் செயல்பட்ட தளங்களும் வெவேறானவை. ஏசுபிரான் காலத்தில் யூதர்கள் நிலைமை ரொம்ப மோசமாகவே இருந்தது. அவர் தன்னை யூதர்களுக்கான மெஸ்ஸையாவாகத்தான் அறிமுகம் செய்து கொண்டார். தேவகுமாரன் மனிதனாக பிறந்து எல்லா கஷ்டங்களையும் அவரும் பெற்றார். இந்த விஷயத்தில் ஏசுவை ராமருடன் அதிகம் ஒப்பிடலாம் என்று நான் துணிந்து கூறுவேன். புருஷோத்தமனாம் ராமனும் அவ்வாறே மானுடப் பிறவி எடுத்து எல்லா துன்பத்தையும் அனுபவித்தார்.
மேலும் இந்த ஒப்பீடுகள் எல்லாம் மேக்ரோ அளவில்தான் உள்ளன. மைக்ரொ அளவில் இல்லை. ஆகவே அதை கருத்தில் கொண்டு வேற்றுமையை காட்டுவது வீணே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கண்ணன் பக்தனாகிய நான் ஏசுபிரானையும் மதிக்கிறேன்//
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் சில 'மதச்சார்பின்மை மாண்புமிகுக்கள்' இந்து கடவுளை மட்டும் ஏசிப்பேசி மற்ற மதத்துக்கு ஜால்ரா போடுகிறார்களே?
என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. மதச்சார்பின்மை என்பது எது? தெரிவு செய்யவும்.
1) எல்லா மதமும் சம்மதம்
2) எந்த மதமும் வேண்டாம்
3) இந்து மதம் மோசம். மற்ற மதங்கள்தான் நன்று
Can you please clear?
சிங்கமுத்து
//தேவகுமாரன் மனிதனாக பிறந்து எல்லா கஷ்டங்களையும் அவரும் பெற்றார். இந்த விஷயத்தில் ஏசுவை ராமருடன் அதிகம் ஒப்பிடலாம் என்று நான் துணிந்து கூறுவேன். புருஷோத்தமனாம் ராமனும் அவ்வாறே மானுடப் பிறவி எடுத்து எல்லா துன்பத்தையும் அனுபவித்தார்.//
கடவுள் என்பவன் மனிதனை படைத்தவன், பேராற்றலுடையவன், பேரறிவாளன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் உணர்நதவன். இது கடவுளின் பண்புகளாக இருக்க வேண்டும் என்பதை ஏற்று கொள்கிறீர்களா?
அப்படி ஏற்று கொண்டால், கடவுள் மனிதாக பிறந்து தான் மனிதனின் துன்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கடவுளின் பண்பில் குறைபாடாகி விட்டது. கடவுள் என்ன மனிதனா? பட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூற? சிந்தியுங்கள்
அடுத்து உங்கள் பதிவில் கிருஷ்ணன் பெண்களிடம் உடலுறவு கொண்ட போது, அவன் எந்த இன்பத்தையும் பெற்றிடவில்லை மாறாக அப்பெண்கள் தான் இவனிடமிருந்து சுகம் பெற்றனர் என்று கூறி விட்டு, இச்கூற்றை புரிந்து கொள்ள ஒரு பேரறிஞரின் (?) உவமானத்தையும் சுட்டி காட்டினீர்கள். மாட்டுக்குத்தான் சுகம், ஒரு தூணின் மேல் மாடு உரசினால் தூணுக்கு ஒன்றும் இல்லை. இங்கு மனித பிறவி மாட்டோடும் (உயிருள்ளது) கடவுள் தூணோடும் (உயிரற்றது) உருவகப்படுத்தபடுகிறார்கள். இதை விட கீழ் நிலையில் கடவுளை கேவலப்படுத்த முடியாது.
//ஏசுபிரான் காலத்தில் யூதர்கள் நிலைமை ரொம்ப மோசமாகவே இருந்தது.//
உங்களுக்கு, அப்போது இருந்த யூதன்கள் அயோக்கியர்கள். ஆனால், அடுத்தவன் இடத்தை களவாடி, அவனையே அகதியாக்கி, தினம் தினம் பாலஸ்தினியர்களை வதைத்துவரும் இப்போதைய யூதன் யோக்கியன். சிந்தியுங்கள். மமதையையும் கர்வத்தையும் விட்டொழியுங்கள். அடக்கத்தையும், அன்பையும் வளருங்கள்
மனிதனை மனிதனாக மக்கள் பார்க்க வேண்டும் என்ற பேராவள் உடைய
மனிதன்
அப்படியே மாரியம்மாவையும் மேரியம்மாவையும் ஒப்பிட்டு கூறவும்..
ஓமென்.
//உங்களுக்கு, அப்போது இருந்த யூதன்கள் அயோக்கியர்கள். ஆனால், அடுத்தவன் இடத்தை களவாடி, அவனையே அகதியாக்கி, தினம் தினம் பாலஸ்தினியர்களை வதைத்துவரும் இப்போதைய யூதன் யோக்கியன். சிந்தியுங்கள். மமதையையும் கர்வத்தையும் விட்டொழியுங்கள். அடக்கத்தையும், அன்பையும் வளருங்கள்//
பழைய ஏற்பாடு புத்தகத்தில் வரும் தாவூது, சாலமனுக்கு சற்றும் குறையாத அளவில் ஆற்றல் புரிந்த டேவிட் பென்குரியன் மேஷெ தயான், ஏரியல் ஷாரன், மெனாச்செம் பெகின், கோல்டா மையர் ஆகியோர் பற்றி பேசத்தான் ஆசை. ஆனால் இப்பதிவில் வேண்டாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் சில 'மதச்சார்பின்மை மாண்புமிகுக்கள்' இந்து கடவுளை மட்டும் ஏசிப்பேசி மற்ற மதத்துக்கு ஜால்ரா போடுகிறார்களே?//
நல்ல கதையா இருக்கே. மற்ற மதங்களைப் பற்றிப் பேசினால் ஃபத்வா வரும், உதை வரும், அதை நீங்களா வாங்கப் போகிறீர்கள் என்று பகுத்தறிவை உபயோகிது செயல்படுபவர்கள் ஆயிற்றே. அவர்களைப் போய் கேட்கலாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hello செந்தழல் ரவி
Unga lolluku alaveh ellaiyah, "அப்படியே மாரியம்மாவையும், மேரியம்மாவையும் ஒப்பிட்டு கூறவும்..
ஓமென்."
koncham overah teriyalaiya.....
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
உயர் திரு டோண்டு ராகவன் அவர்களுக்கு மேலப்பாளையம் எ.க. முஹம்மது கமாலுத்தீன் அய்யூப் உமரி எழுதிக் கொள்வது.
முதற்கண் உங்கள் மீது ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உண்டாகச் செய்வானாக என்ற வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் பொதுவாகவே இஸ்லாமியருக்கு எதிரானவர் என அறிகிறேன்.
துன்மார்க்கராகிய யூதர்கள்பால் பரிவும், பாசமும் கொண்டவர் என வல்ல அல்லாஹ் அருளால் அறிந்தோம்.
இருப்பினும், மார்க்கத்தினை இழிவுபடுத்தும் வகையில் சில பின்னூட்டங்களை நீங்கள் அனுமதித்திருப்பது எங்கள் மனத்தை புண்படுத்தியுள்ளது.
இங்கே செந்தழல் ரவி என்பவர் "ஏசு,தாசு,அல்லா,குல்லா" என்று இஸ்லாமியர் மதிக்கும் ஏசு என்று தவறாக உச்சரிக்கப்படும் நபிமார்களில் ஒருவரை கேவலமாக தாசு என்றும் சொல்லியுள்ளார். சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என ஒதுங்க எண்ணுகையில் "அல்லா, குல்லா" என நாங்கள் வழிபடும் இறையையும் கேலி செய்துள்ளார். இதையும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என்றே கருதுகிறோம்.
அல் குர்ஆன் அல்லாஹ்விற்கு இணையாக வேறு எதையும் வைக்க தடை செய்கிறது. அது அல்லாஹ்விற்கு இணையாகச் சொல்லப்படும் "குல்லா" என்கிற வார்த்தையாக இருந்தாலும் சரி.
அல்லாஹ்விற்கு இணையாக "குல்லா" போன்ற வார்த்தைகளைக் கேட்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி அந்நாளே எழுந்த ஒன்று:
39:64 . அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா? என்று (நபியே!) நீர் கூறுவீராக.
செந்தழல் ரவி என்பவர் தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை புத்திசாலியாகக் காட்டுவதற்காக, தனது மதத்தைத் தவிர பிற மதங்களை இகழ்வதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உரிமை உண்டு. அதை பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள் வெளியிடுவது உங்களுடைய இந்துத்துவ இனவெறியையே காட்டுகிறதேயன்றி ஏக இறைவனை அதனால் இழிவு செய்துவிடமுடியாது.
வடகலை ஐயங்கார் என்று இந்துத்துவ சாதிவெறியை பரப்பும் நீங்கள் ஜோசப், செந்தழல் ரவி போன்ற கிருத்துவர்களோடு நட்பு பாராட்டுவதற்கான காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். செந்தழல் ரவி நாத்திகன் எனச் சொல்லிக்கொண்டு மற்ற மதங்களை இழிவு செய்வது ஏன் என்றும் எங்களுக்குத் தெரியும். அவரோடு யாரெல்லாம் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். விடாதுகருப்பு என்கிற பதிவில் இருக்கும் கீழ்க்கண்ட கட்டுரைகளை எழுதியது செந்தழல் ரவிதான் என்பதும் எங்களுக்குத் தெரியும்:
"தைரியமிருந்தால் கேஸ் போடுங்கள்"
"இஸ்லாமிய விபச்சாரர்கள்"
"பாக்கருக்கு நந்தினியே போதும்!"
"ரமலான் மாதமும் தவறு செய்யும் இஸ்லாமியரும்!"
இத்தகைய கீழ்த்தரமானவர்கள் வணங்குவதால் யேசு நாதரை நாங்கள் தவறாக எண்ணுவதும் இல்லை. யேசுநாதர் இந்த உலகில் ஒரு மதத்தை உருவாக்க வரவில்லை, மாறாக படைத்த இறைவனை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அவனை மட்டும் வணங்கவும் கூறிச்சென்றார்.
இயேசுநாதர் உலகத்தை விட்டு செல்லுமுன் சீமான் பேதுருவைப் பார்த்து ”நீ என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்ற மும்முறை மொழிந்ததை வைத்தே சிலர் இத்தாலியில் கத்தோலிக்க திருச்சபை என்ற பெயரில் தொடங்கினார்கள். அதுவரை போப் வகையறாக்கள் இருந்ததாக முறையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. திரித்துவம்—- அதாவது முக்கடவுள் கொள்கை என்ற போலிசித்தாந்தம் அதாவது ஏக இறைவனை மூன்றாகப்பிரித்து ஒன்றாக கருத வேண்டும் என்பதே நோக்கம். இதில் தான் மூச்சு முட்டுமளவு முடங்கி போய் மொத்த கிறித்தவரும் உள்ளனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒருவர் தான் என்பது இவர்களின் வாதம். இதை எதிர்த்த பிஷப்புக்கள் அன்று கொல்லப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.
ஆனால் இயேசுநாதர் முஸ்லிமாக இருந்தார், விருத்தசேதனம் செய்யப்பட்டார். அவருடைய மார்க்கம் இஸ்லாமாக இருந்தது. அவர் தமக்கு முன் உள்ள வேதங்களை உண்மைப்படுத்தவே வந்தார் என்பது தான் உண்மை (மத்தேயு 5:17)
துறவறத்துக்கு வித்திட்டதும், கிறிஸ்துவ சபை உருவாக வழி வகுத்ததும் பவுல் என்ற யூதன் ஆவார். இவர் இயேசுநாதரின் சீடரோ அல்லது தீர்க்கதரிசியோ இல்லை. இயேசுநாதரின் காலத்தில் கிறித்துவ எதிரியாக வாழ்ந்தவர் கிறிஸ்துவின் கொள்கைக்கு சுய விளக்கம் கொடுத்தும், சிலுவை மரணத்தை நியாயப்படுத்தியும், ஆப்ராஹாமின் கொள்கையையும், மோசேயின் நியாயப் பிரமாணத்தையும் நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்காமலும் இவராகவே பல கடிதங்கள் பல நாட்டவருக்கு எழுதி வேதவாக்கு என நம்பிடச் செய்தார்.
கிபி 1600-க்குப் பின்புதான் வெள்ளையர்கள் மூலமாக பல சபைகள் ஊடுருவின. பாமர மக்கள் பாவிகளாக இருந்தபடியால் இரட்சிப்பு இரத்தம் சிந்துதல் மூலம் தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இயேசு நாதரை அதற்கு பலிகடாவாக்கி நம்பினார்கள்.
இவர்களில் ஒருவர்தான் இந்த செந்தழல் ரவி. செந்தழல் ரவியோடு தொடர்புடையவர்கள் நடத்திவரும் "தமிழ் கிருத்துவர்கள்" மற்றும் ஈசா குர்ஆன் போன்றவற்றின் திட்டங்களும் குள்ள நரி வேலைகளும், இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அவமதிப்பதும் எங்களுக்குத் தெரியும்.
இதுபோன்ற ஏளனங்களால் அழிந்துவிடக்கூடிய மதம் இஸ்லாம் இல்லை. அதனால், டோண்டு அவர்களே, இத்தகைய மனிதனின் பின்னூட்டத்தை இட்டதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டியதும் இல்லை.
நீங்கள் உங்களுடைய மூதாதையரின் தவறை தொடர்ந்து செய்வதால் இறுதித் தீர்ப்பு நாளில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டிவரும் என்பதை மட்டும் உங்கள் மேலுள்ள பரிவினால் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
நாளை மறுமையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் இறைவனிடம் பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் இறைவனால் தடை செய்யப்பட்ட இந்த கேவலமான செயலை செய்வோமா?
ஆனால் இந்த கேவலமான செயல்களைச் செய்பவர்கள் எதிர்ப்பே இல்லை என யாரும் தவறாக எண்ணிவிடலாகாது. அதனால்தான் இந்த கண்டன மடல்.
செந்தழல் ரவியினுடைய இந்தப் பின்னூட்டம் பல நாட்கள் தங்களுடைய பதிவில் இருந்ததால், பலர் அதைப் படித்திருப்பார்கள். அவர்களுக்கு எங்களது கண்டனமும் தெரியவேண்டும். ஆகவே, இந்தக் கண்டனத்தை நீங்கள் கட்டாயம் வெளியிடவேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
//நீங்கள் பொதுவாகவே இஸ்லாமியருக்கு எதிரானவர் என அறிகிறேன்.//
உங்கள் புரிதலில் தவறு உள்ளது. என் புதுக்கல்லூரியின் மாணவனான டோண்டு ராகவனை இவ்வாறு கூறுவது வருந்தத்தக்கது. நல்லடியார், சலாஹுத்தீன், சுவனப்பிரியன் ஆகியோரும் என் நண்பர்களே.
மற்றப்படி செந்தழல் ரவி என்பவர் கலாய்த்திருக்கிறார் என்பதுதான் எனது எண்ணம். கிருஷ்ணரை கூறியதை விடவா அவர் மற்ற மதக்கடவுள்களை கூறியுள்ளார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
*அப்படியே மாரியம்மாவையும் மேரியம்மாவையும் ஒப்பிட்டு கூறவும்..*
நான் மாரியம்மன், மேரியம்மா, மரியம் எல்லாரும் ஒன்றே என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
அய்யா முஹம்மது கமாலுத்தீன் அய்யூப் உமரி,
*இங்கே செந்தழல் ரவி என்பவர் "ஏசு,தாசு,அல்லா,குல்லா"*
*சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என ஒதுங்க எண்ணுகையில் "அல்லா, குல்லா" என*
*அது அல்லாஹ்விற்கு இணையாகச் சொல்லப்படும் "குல்லா" என்கிற*
*அல்லாஹ்விற்கு இணையாக "குல்லா" போன்ற வார்த்தைகளைக் கேட்கத்தான் வேண்டுமா*
செந்தழல் ரவியாவது ஒரு தடவை ஒரு எதுகை மோனைக்காகக் குறிப்பி்ட்டிருக்கிறார். ஆனால் நீர்?
இருப்பது ஒரு வாழ்க்கை. அதை நம்மிடம் இருக்கும் குறை குற்றங்களைக் கண்டு திருத்திக்கொண்டு சமாதானமாக வாழ நினைக்காமல் எப்போது பார்த்தாலும் மற்றவர்களை நொட்டை நொள்ளை என்று குற்றம் கண்டுபிடித்தே வாழ்க்கையை வீணாக்கும் உங்களையெல்லாம் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!
முதலில் உங்களுக்கு இறைவன் சமாதானத்தைக் கொடுத்தருளட்டும்.
குறளிமனோஹர்
2+(*
டோண்டு அவர்களே...
மேலப்பாளையத்தில் இருந்து எழுதும் இவர் உண்மையில் மேலப்பாளையத்தில் இருந்துதான் எழுதுகிறாரா ? அப்படி என்றால் அவருடைய தொலைபேசி எண்ணை இந்த பதிவில் கொடுக்கட்டும்...
அவர் குறிப்பிட்டுள்ள போலி டோண்டு விடாது கருப்பு பதிவில் உள்ள கட்டுரை கருமாந்திரம் எல்லாம் நான் எழுதவில்லை...
முஸ்லீம் பெருமக்களுக்கு எதிரானவனாக என்னை காட்டவேண்டும் என்று விளையாடும் இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா...
வேண்டுமானால் தமிழக முஸ்லிம்களின் அரசியல் மேடையில் தேர்தல் சமயத்தில் நான் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
http://tmpolitics.blogspot.com/2006/04/blog-post_29.html
இங்கே கூட க்ளிக்கலாம்
நன்றி - ரவின்னு போட்டுத்தானே அந்த கட்டுரையை போட்டிருக்காங்க...வேண்டுமானால் அவர்களிடமே கேட்டு உறுதி செய்துகொள்ளலாம்....
இந்த விஷயத்தில் இதுக்கு மேல நான் எதுவும் பேசமாட்டேன்...(நல்லா கிளப்புறாய்ங்கப்பா பீதிய )
//அவர் குறிப்பிட்டுள்ள போலி டோண்டு விடாது கருப்பு பதிவில் உள்ள கட்டுரை கருமாந்திரம் எல்லாம் நான் எழுதவில்லை...//
நானும் நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள் என்றுதான் கூறுவேன். அவ்வாறு உங்களை கூறுவது விடாது கருப்பு மட்டுமே.
மேலப்பாளயக்காரர் என் கண்ணுக்கு விடாது கருப்பாகவே தென்படுகிறார். நான் கூறுவது தவறு எனில் அவர் தனது சுயரூபத்தில் வரட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவர் குறிப்பிட்டுள்ள போலி டோண்டு விடாது கருப்பு பதிவில் உள்ள கட்டுரை கருமாந்திரம் எல்லாம் நான் எழுதவில்லை...//
ஹி ஹி ஹி ஹி ஹி ......
விடாது கருப்பு அவருடைய மெயில் பாக்ஸை படம் எடுத்து அனுப்பியிருக்காவிட்டால், விடாதுகருப்புவுக்கு நான் இதுவரை எந்த மெயிலும் அனுப்பியதில்லை என்றும் சொல்லியிருப்பேன்.
விடாது கருப்பு ஐயா அப்ப கவுத்துட்டாரே !
இப்ப கவுக்காம இருக்க ஆண்டவரை வேண்டிக்கிறேன் !
>>>> இங்கு மனித பிறவி மாட்டோடும் (உயிருள்ளது) கடவுள் தூணோடும் (உயிரற்றது) உருவகப்படுத்தபடுகிறார்கள். இதை விட கீழ் நிலையில் கடவுளை கேவலப்படுத்த முடியாது.<<<<
அடங்கொப்புறானே ! என்னா லாஜிக்கு, என்னா லாஜிக்கு !
எந்த நிலையிலும் அட்டாச் ஆகாமல் இருக்கிறது கடவுளுக்கு மட்டும்தாண்டா சாத்தியம்னு எங்க வாத்தியார் சொல்லிருக்கார்.
மத்தபடி கடவுள் அனுப்பினாருன்னு சொல்லிக்கிட்டு குளந்தைகிட்டகூட கொக்கோகம் படிச்சவய்ங்க சொல்றத நம்புறவஞ்சய்ங்களுக்கு புரியனும்னுதான் டோண்டு அய்யா இந்த உதாரணத்த சொன்னாக, புரியாம ஒளறுதே இந்த ஒலகம்.
டோண்டு அய்யா, இந்த அளவுக்குத்தான் அறிவு இருக்கிற பசங்க மட்டும்தான் ஒங்க ப்ளாக்குக்கு வர்றாஞ்ச போலிருக்கு !
halla gulla appadiinnu A.R.Rahman Pattu Ezuthi Irukkaare ?
Dear Dondu.
Parabrahmam, "paramathama(Where all the athma's of this universe came from and where all the athma's should unify)incarnated in to human being according to his destiny(bhagvad gita) and he is known as krishna,siva(entha mathramu evida ...annamaya song),allah(bhakta kabir..said RAM AND RAHIM ARE ONE),sakthi(SAKTHI PURAM SAYS VISHNU AND SAKTHI ARE SAME)ATMA IS NEUTRAL IT DON'T HAVE FORM OR SEX(i.e male for female)......infinity.
Coming to JESUS,if you trust KORAN and guru mohammed,jesus is a rabbai like him,NOT A SON OF GOD.
Recent research says" JESUS CAME TO INDIA AND GOT ENLIGHTNED" and he went back to middle east to preach. he is a "KRISHNA BAKHTHAN".He chanted "krishna,krishna" during his life time and people called him as "KRISTHU"(LOOK AT THE SIMILARITY..even on his discourse..he spoke about Lord krishna's birth that became his birth story(i come to this later).
"GURU JESUS and he is "JAGATGURU" IS A SAINT LIKE GURU RAGAVENDRA" this era is for him..WE CAN'T STOP IT...HIS POWER WILL SLOWLY VANISH LIKE"GURU BUDDAH"....
* SO ALLEYLUYEH( christian don't know the exact meaning of this term,jesus used)....in SANSKRIT LEYLUYEH means live with attachment, if you prefix "ALLE" it means LIVE WITHOUT ATTACHMENT(THIS IS A EVIDENCE FOR JESUS LIVED IN INDIA FOR SOME TIME AND HE LEARNT SANSKRIT-- A HOLY LANGUAGE).
கும்மி குணசேகரன் said...
ஹி ஹி ஹி ஹி ஹி ......
விடாது கருப்பு அவருடைய மெயில் பாக்ஸை படம் எடுத்து அனுப்பியிருக்காவிட்டால், விடாதுகருப்புவுக்கு நான் இதுவரை எந்த மெயிலும் அனுப்பியதில்லை என்றும் சொல்லியிருப்பேன்.
விடாது கருப்பு ஐயா அப்ப கவுத்துட்டாரே !
இப்ப கவுக்காம இருக்க ஆண்டவரை வேண்டிக்கிறேன் !
//
dondu sir, nannaa kuniyavassu kumururel
//dondu sir, nannaa kuniyavassu kumururel//
நான் மறுபடியும் கூறுகிறேன், இதெல்லாம் தேவையின்றி தொந்திரவை வளர்க்கவேண்டி விடாது கருப்பு மூர்த்தி செய்வது.
டோண்டு ராகவன்
//முஸ்லீம் பெருமக்களுக்கு எதிரானவனாக என்னை காட்டவேண்டும் என்று விளையாடும் இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா...//
வெடிகுண்டு மேல என்னா பயம் ,
இதே பயம் கிருஷ்ணரை பற்றி சொல்லும்போது வரவில்லையே ?இதுதான்யா திராவிட மதசார்பின்மை ?
அல்லாவுக்கு பெரிசா சிறுசா என ஒரு கேள்வி கேளும் , என்ன ஆகுதுன்னு தெரியும்
( கொரியாவுக்கு ஒரு டிக்கட் போட்டு வைத்துக்கொள்ளவும் )
//அல்லாவுக்கு பெரிசா சிறுசா என ஒரு கேள்வி கேளும் , என்ன ஆகுதுன்னு தெரியும் //
இம்மாதிரி மதவெறி வாக்கியத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உம்மாதிரி பார்ப்பன பருப்பு ஆட்களுக்குத்தான் பெரியார் வீரமணி போன்ற தமிழ் தலைவர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆப்பு.
முங்கசித்து
Post a Comment