10/26/2007

ஞாநிக்கும் அப்பால்

தனது பார்ப்பன வேர்களை மறுத்து இயங்கிவரும் ஞாநியைக் கூட விட்டுவைக்காமல் அவர் தங்களது புனித பிம்பத்தை குலைத்தார் என நினைத்த சில அரைகுறை கேசுகள் ஞாநியின் பாப்பார புத்தி, பனியனுக்குள் நெளியும் பூணூல் என்றெல்லாம் பழித்து பதிவிட்ட பல பதிவுகள் பல registered பார்ப்பன விரோதிகளையே நெளியச் செய்து விட்டதைத்தான் பார்க்கிறோம்.

ஆனால் இது பனிக்கட்டியின் (iceberg) வெளியில் தெரியும் பத்தில் ஒரு பாகமே. ஞாநி சொன்னதை நானும் ஒத்துக் கொள்ளவில்லைதான். அதை எனது இப்பதிவிலேயே வெளிப்படையாக எழுதியவன். இது வரை ஞாநி தங்களுக்கு விருப்பமான கருத்தை கூறியபோதெல்லாம் அவர் பார்ப்பனர் என்பதை சௌகரியமாக மறந்து, இப்போது மட்டும் அதை வெளிக்காட்டும் அவலத்தை அதில் குறித்திருந்தேன்.

இந்த அழகில் அவரை கண்ணியமாக கண்டித்த மீட்டிங் என்று ஒரு பதிவு. எது அம்மா கண்ணியம்? ஞாநியின் ஜாதியை இங்கு இழுத்ததுதானா, அல்லது இந்தமட்டில் ஞாநியின் பெண் உறவினர்களை திட்டாமல் விட்டார்களே என்ற உணர்ச்சியா? அதாவது ஒரு தகப்பனிடம் உன் நான்கு பிள்ளைகளில் எவன் நல்ல பிள்ளை எனக்கேட்க அதற்கு அவன் கூரைமேல் நின்று கொண்டு வீட்டுக்கு நெருப்பு வைக்க நினைக்கும் அப்பிள்ளைதான் இருப்பவர்களிலேயே உத்தமமானவன் எனக் கூறுவது போலத்தான் இருக்கிறது இந்த உணர்ச்சி.

இந்த ஞாநி விஷயத்தில் இந்த ஆஸ்பெக்டை இப்பதிவு நன்றாகக் கையாளுகிறது.

ஆனால் இப்போது கூற நினைப்பதே வேறு. தமிழ் இணையத்தில் ஆ ஊ என்றால் திட்டு பார்ப்பனனை என்ற எண்ணப்போக்கு ஒரு வயிற்றுப்போக்கு போல அமைந்து விட்டது விசனிக்கத்தக்கது. தலித்துகள் இரட்டை தம்ளர் முறையா, திட்டு பார்ப்பனர்களை. சம்பந்தப்பட்ட டீக்கடைக்காரர்கள் பார்ப்பனர்கள் இல்லையே என்று தோன்றினால் இருக்கவே இருக்கிறது பார்ப்பனீயம் என்னும் ஜல்லி. கவுண்டனீயம், தேவரீயம், முதலியாரீயம், நாயுடுயிசம் (கீழ்வெண்மணி) என்றெல்லாம் கூறினால் செருப்பால் அடிக்கப்படுவோம் என பயந்து பார்ப்பனீயம் என்று இவர்களாகவே ஒரு டெஃபினிஷன் செய்து விடுவது. பிறகு டிஸ்கி வேறு. உயர்சாதீயம் என்று அதை புரிந்து கொள்ளவேண்டுமாம். அது பார்ப்பனருக்கு எதிரானதாக இல்லையாம். ஏன் ஐயா, உயர்சாதீயம் என்றே போட்டு தொலைப்பதுதானே என்றால், கோசாம்பி என்ற விளங்காத ஒருவர் கொடுத்த டெஃபினஷன் என்ற சுய புத்தியேயில்லாத சமாதானம் வேறு.

இதில் சில socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களே ஈடுபடுவதுதான் சோகம். மற்றவர்களுக்கு முன்னால் தாமே சகபார்ப்பனரை திட்டிவிட்டால் தாங்கள் தப்பிக்கலாம் என எண்ணுபவர்கள். பாவம், செருப்படி இவர்களுக்கும் அவர்கள் எதிர்ப்பார்க்காத தருணங்களில் கிடைக்கும் என நம்பாதவர்கள். அப்படியே கிடைத்தாலும் அதை துடைத்துப்போட்டு தங்கள் சுய கௌரவத்தை குலைத்து கொண்டவர்களாகத்தான் அவர்களை நான் பார்த்து பரிதாபப்படுகிறேன். அதனால்தான் ஞாநிக்கு இது தேவையா என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன்.

ஹிட்லர் காலத்தில் சில யூதர்கள் தங்கள் இனத்தினருக்கு எதிராகவே பேசினர். என்ன, அவர்கள் கடைசியாக உயிர்க்கொல்லும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், அவ்வளவே. யூதர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேல் அவ்வாறு நடுநிலையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அறிவு முத்துக்களை தமது இனத்தவருக்கு எதிர்ப்பாகவே உதிர்த்த யூதர்கள் பலரை சரித்திரம் பார்த்துள்ளது. Dobi ka kuththaa, naa ghar kaa, naa gaat kaa (வண்ணனின் நாயை வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள், வண்ணான் துறையிலும் சேர்க்க மாட்டார்கள் என்பதைக் கூறும் ஹிந்தி சொலவடை இது). நல்ல வேளையாக இஸ்ரேல் உருவாகி இம்மாதிரி அபத்த காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்று எனக்கு ஒரு ஆறுதல்.

ஜோசியத்தில் நம்பிக்கையில்லாத ஒரு பதிவர் தனது தந்தை தனக்காகப் பெண்பார்க்க ஜோசியரை நாட அவர் எங்கோ சொறிந்து கொண்டே இவரது ஜாதகத்துடன் ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி வருவதாகக் கூற, அதற்கு ஜோசியனை எத்தாலோ அடிக்க வேண்டும் என்று இவர் பதிவுபோட, எய்தவனிருக்க அம்பை நோகலாமோ என்று பொருள் வருமாறு நான் பின்னூட்டமிட, "ஆகா என் தந்தையை அத்தால் அடிக்கச் சொல்லும் உன்னை எத்தால் அடிப்பது" என குற்ற உணர்ச்சியுடன் என்னை ஒருமையில் திட்டினார் அப்பதிவர். இந்த மட்டில் தன் தந்தைக்காக அவரைப் பரிந்து பேசவைத்த எனது நோக்கம் நிறைவேறிய திருப்தியில் நான் வேறுவேலை பார்க்கப் போனேன். இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் நம்மவரை நாமே விட்டுக் கொடுப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை வலியுறுத்தத்தான். அவ்வாறெல்லாம் செய்தால் இப்பதிவு மாதிரி பல பதிவுகளை பார்க்க நேரிடும்.

All lawyers are dishonest, because all the lawyers I have seen are charlatans. இந்த வாக்கியம் தர்க்க சாத்திரப்படி Fallacy of hasty generalization என்ற பிரிவில் வரும் தவறான வாதமாகும். அதைத்தான் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் செய்து வருகின்றனர். அதற்கு இந்த socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களும் துணை போவதுதான் பெரிய நகைமுரண். அதை எடுத்து சொன்னால், "என்ன செய்ய வேண்டும்? பிராமண சங்கத்தில் உறுப்பினர் அட்டை வாங்கி இதுவரை செய்ததெல்லாம் தவறு என்று இம்போஸிஷன் எழுத வேண்டுமா"? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நான் கூறுவது இதுதான். நீங்கள் நுனிமரத்திலிருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகிறீர்கள். சொன்னால் புரிந்து கொள்ளாது போனால் நீங்களே விழும்போது புரிந்து கொள்வீர்கள். ஆனால், அப்போதும் திருடனுக்கு தேள் கொட்டியதுபோலத்தான் இருக்க முயலுவீர்கள் என அஞ்சுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

Anonymous said...

//Dobi ka kuththaa, naa ghar kaa, naa gaat kaa (வண்ணனின் நாயை வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள், வண்ணான் துறையிலும் சேர்க்க மாட்டார்கள் என்பதைக் கூறும் ஹிந்தி சொலவடை இது//

ஆகா, வண்ணான்னு ஜாதி பேசராரு டோண்டு , ஜாதிவெறி பிடித்த டோண்டு ஒழிக

Anonymous said...

சென்ற வாரம் காமத்துப்'பால்', இந்த வாரம் ஞாநிக்கு அப்'பால்' - இது என்ன பால் சீசனா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பார்பனீயம் தவறென்று தெளிவாகத் தெரிகிறது; அதனாலேயே பார்ப்பானாகப் பிறந்தாலும் எதிர்க்கிறார்கள். அவர்களும் சில சமயம் தாக்கப்படலாம்; அது தவிர்க்க முடியாதது (என் தாத்தாவின் சொத்து வேண்டும்; அவர் வைத்த கடன் வேண்டாமா).

dondu(#11168674346665545885) said...

//பார்பனீயம் தவறென்று தெளிவாகத் தெரிகிறது; அதனாலேயே பார்ப்பானாகப் பிறந்தாலும் எதிர்க்கிறார்கள். அவர்களும் சில சமயம் தாக்கப்படலாம்; அது தவிர்க்க முடியாதது (என் தாத்தாவின் சொத்து வேண்டும்; அவர் வைத்த கடன் வேண்டாமா).//
என்னய்யா புடலங்காய் தவறு கண்டீர்கள்? மற்ற தலித் இல்லாத சாதியினர் செய்வதுபோல பார்ப்பனர்கள் வன்கொடுமைகளா செய்கிறார்கள்? அவ்வாறு செய்யும் பல சாதியினர் வெட்கமேயில்லாமல் இட ஒதுக்கீடும் பெறுகிறார்களே? அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

தேவையில்லாமல் பாப்பான் என்று இழுத்தால் இந்தப் பாப்பான் வந்து கேள்வி கேட்பேன்.

டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பார்ப்பான் என்ன தவறு செய்தான்... அய்யா இப்படிக் கேட்டால் எப்படி.? முழு வரலாற்றையுமா என்னால் சொல்ல முடியும். சர்வ நிச்சயமாய் தெரிந்த ஒன்றை மறைப்பதும் (தன் ஜாதி நலனுக்காக) பார்ப்பனீயம் தான்.

இட ஒதுக்கீடு அது இதென்று திசை திருப்பாதீர்கள்.

பார்ப்பனீய மறுப்பாளர்களைப் பார்ப்பான் என்று திட்டினால் நானும் தான் எதிர்ப்பேன். ஆனால் உங்களைப் போன்றவர்களை வேறு எப்படிச் சொல்வது.?

dondu(#11168674346665545885) said...

//பார்ப்பனீய மறுப்பாளர்களைப் பார்ப்பான் என்று திட்டினால் நானும் தான் எதிர்ப்பேன். ஆனால் உங்களைப் போன்றவர்களை வேறு எப்படிச் சொல்வது.?//
என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். உம்மை மாதிரி ப்ரொஃபைலைக் காண்பிக்கும் தைரியம் இல்லாத கோழைகளை பற்றி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//பார்ப்பனீய மறுப்பாளர்களைப் பார்ப்பான் என்று திட்டினால் நானும் தான் எதிர்ப்பேன். ஆனால் உங்களைப் போன்றவர்களை வேறு எப்படிச் சொல்வது.?//

அவ்வாறு திட்டி எவ்வளவோ பதிவுகள் உள்ளதே, அதற்கெல்லாம் என்ன எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள், சுட்டி தர முடியுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/உம்மை மாதிரி ப்ரொஃபைலைக் காண்பிக்கும் தைரியம் இல்லாத கோழைகளை பற்றி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்?/

என‌க்கு gmail account ம‌ட்டுமே உள்ள‌து. ப்ரொஃபைல் எல்லாம் என‌க்குத் தெரியாத விஷயம்.

இதில் என்ன‌ கோழைத்த‌ன‌ம் இருக்கிற‌து. என் அலைபேசி எண் 98845 71371 வசிப்பது சென்னை அம்ப‌த்தூரில், அலுவ‌ல‌க‌ம் பாரிமுனையில். வேறு ஏதாவ‌து த‌க‌வ‌ல் வேண்டுமானாலும் சொல்கிறேன்.

ஏன் தேவையில்லாமல் கோப‌ப் ப‌டுகிறீர்க‌ள்; ரொம்ப‌ தொந்த‌ர‌வு செய்கிறேனோ.?

dondu(#11168674346665545885) said...

//ஏன் தேவையில்லாமல் கோப‌ப் ப‌டுகிறீர்க‌ள்; ரொம்ப‌ தொந்த‌ர‌வு செய்கிறேனோ.?//
ரொம்பத் தேவையுடனேயே கோபப்படுகிறேன், அபத்தமான பார்ப்பன எதிர்ப்புகளைப் பார்த்து.

மற்றப்படி முகம் தெரியா உங்களிடம் எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்?

//ப்ரொஃபைல் எல்லாம் என‌க்குத் தெரியாத விஷயம்.//
நம்பி விட்டோம்.

டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/அவ்வாறு திட்டி எவ்வளவோ பதிவுகள் உள்ளதே, அதற்கெல்லாம் என்ன எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள், சுட்டி தர முடியுமா?/

இந்த ஞாநி விஷயத்தில் அவரை பார்ப்பன சார்ப்பாளர் எனச் சொல்ல முடியாது என்று வா மணிகண்டன், கோவி கண்ணன், செல்வநாயகி பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். சுட்டி தரத் தெரியவில்லை.

///ப்ரொஃபைல் எல்லாம் என‌க்குத் தெரியாத விஷயம்.//
நம்பி விட்டோம்./

இது ஏதுடா வ‌ம்பா போச்சு. வ‌லையில் ப‌டிப்ப‌தே இப்போது இர‌ண்டு மூன்று மாத‌மாக‌த் தான். நான் க‌ணினி வ‌ல்லுன‌ரும் இல்லை. ப்ரொஃபைல் க்ரியேட் செய்தே ஆக‌ வேண்டுமென்றால் சொல்லிக் கொடுங்க‌ள், செய்து விடுகிறேன்.

Anonymous said...

உம்ம பெரிய காஞ்சி குரு தமிழை நீச பாசை என்றும் சமச்கிருதம்தான் தேவபாசை என்றும் சொன்னது பெரிய பார்ப்பன தவறுதானே? மழுப்பாமல் நேரிடையாக இதற்கு பதில் சொல்லவும்

முங்கசித்து

dondu(#11168674346665545885) said...

//ப்ரொஃபைல் க்ரியேட் செய்தே ஆக‌ வேண்டுமென்றால் சொல்லிக் கொடுங்க‌ள், செய்து விடுகிறேன்.//

Log in > Dashboard > Edit your profile > Privacy > Check boxes for share my profile and show my real name > Save changes.

மறுபடியும் கூறுவேன். நீங்கள் பார்ப்பனரை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளவும். அதற்காக சம்பந்தமில்லாத இடங்களில் உங்களால் தவறிழைத்தவர் என்று நினைப்பவர் பார்ப்பனராக இருந்தால் மட்டுமே அவர்தம் ஜாதியை சொல்லி ஏன் திட்ட வேண்டும் என்பதுதான் கேள்வி. நீங்கள் அப்படியில்லை என நீங்களே சொன்னதில் மகிழ்ச்சி.

மற்றப்படி இப்பதிவு எனது சில சகபார்ப்பனர்களையே குறிவைக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//உம்ம பெரிய காஞ்சி குரு தமிழை நீச பாசை என்றும் சமச்கிருதம்தான் தேவபாசை என்றும் சொன்னது பெரிய பார்ப்பன தவறுதானே? மழுப்பாமல் நேரிடையாக இதற்கு பதில் சொல்லவும்//
கண்டிப்பாக தவறுதான். ஆனால் பார்ப்பனத் தவறு என்று எப்படி கூறப்போயிற்று? இந்த கண்ணோட்டத்தைத்தான் கண்டிக்கிறேன். அது காஞ்சி முனிவரது தவறு அவ்வளவே.

பெரியார் அவர்கள் கூடத்தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் புலவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் என்றெல்லாம் கூறினார். அது நாயக்க மேல் ஜாதித் திமிர் என்று கூறத் துணிவீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. இருந்தாலும் நீங்கள் மழுப்புகிறீர்கள். காஞ்சி பெரிய முனிவர் சாதாரண தனி மனிதரில்லையே?. பார்ப்பனர்களின் பிரதிநிதிதானே?. ஆகவே அவர் அம்மாதிரி பேசியது பார்ப்பன தவறுதானே? அதை அவரின் தனி தவறு என்று மூடி மறைக்க பார்க்கிறீர். மேலும் பெரியார் காட்டுமிராண்டி பாசை என்று சொன்னது 'தமிழ் கற்காலத்தில் தோன்றிய தொன்மையான மொழி' என்ற அர்த்தத்தில். தமிழ் புலவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் என்று சொன்னது தமிழர்கள் சுயமரியாதையை இழந்துவிடகூடாது என்ற ஆதங்கத்தில்.

முங்கசித்து

dondu(#11168674346665545885) said...

//இருந்தாலும் நீங்கள் மழுப்புகிறீர்கள். காஞ்சி பெரிய முனிவர் சாதாரண தனி மனிதரில்லையே?. பார்ப்பனர்களின் பிரதிநிதிதானே?. ஆகவே அவர் அம்மாதிரி பேசியது பார்ப்பன தவறுதானே? அதை அவரின் தனி தவறு என்று மூடி மறைக்க பார்க்கிறீர்//.
சங்கராச்சாரியார் ஒரு மடாதிபதி அவ்வளவே. அவர் பார்ப்பனர்களின் பிரதிநிதி அல்ல. பார்ப்பனர்களின் உட்பிரிவுகளை பற்றிய தெளிவு இல்லாதவர் சொல்லும் கூற்று அது.

//மேலும் பெரியார் காட்டுமிராண்டி பாசை என்று சொன்னது 'தமிழ் கற்காலத்தில் தோன்றிய தொன்மையான மொழி' என்ற அர்த்தத்தில். தமிழ் புலவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் என்று சொன்னது தமிழர்கள் சுயமரியாதையை இழந்துவிடகூடாது என்ற ஆதங்கத்தில்.//
இதுதான் பக்கா மழுப்பல். தன்னை பார்க்க வந்த கதிர்வேற்பிள்ளை என்னும் புலவரிடம் பால் அருந்த கொடுத்து விட்டு இதை அவரிடம் கூற, அவர் உம்மைப்போன்ற இழிவான எண்ணம் கொண்டவரிடம் வந்தேனே என நொந்து கொண்டு வாயில் விரலை விட்டு அத்தனை பாலையும் வாந்தி எடுத்துவிட்டு அப்பாற் சென்றார். இந்த நிகழ்ச்சியை பற்றி கூறும்போது கதிர்வேற்பிள்ளை என்ற வாயாடிப் புலவர் என்று அவரைப் பற்றி குறிப்பிட்ட பெருந்தகைதான் உங்கள் பெரியார். அவருக்காவது ஆதங்கமாவது அப்படியெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது.

மேலும் தமிழ் பற்றி ஓரிடத்திலும் நல்லபடியாகக் கூறியது கிடையாது. ஆங்கிலம்தான் தமிழை விட உயர்த்தி என பேசியவர் அந்தப் பகுத்தறிவுப் பகலவன்.

மேலும் இன்னொன்றும் கூறுவேன். மணியம்மையாரை திருமணம் செய்து கொள்வதற்கு பதில் பேசாமல் அவரை வைத்துக் கொள்ளலாம் என அண்ணா அவர்கள் கூறியபோது, அவர் தன் ஜாதி புத்தியைக் காட்டியவர் என பெரியார் கூறியதையும் படித்துள்ளேன்.

டோண்டு ராகவன்

Aani Pidunganum said...

Dondu saar

silsamayam naameh nondhukavendiyadhuthaan... silar thaan thappika appadi seivathundu, as you said, the same came back as boomerang to them...they dont realise....Your lastline "ஆனால், அப்போதும் திருடனுக்கு தேள் கொட்டியதுபோலத்தான் இருக்க முயலுவீர்கள் என அஞ்சுகிறேன்" Nethiadi

Anonymous said...

Kanchi munivar eppo appidi sonnaar? yaaravadhu sutti kodukka mudiyumaa? I am reading this for a long time but nobody is giving any proof.

Anonymous said...

முஸ்லிம் பெயர் கொண்ட ஒருவனோ அல்லது சிலரோ சட்ட ஒழுங்கை மீறும் போது மட்டும் பார்பனர்கள் (சங்பரிவார சாக்கடைகள்)இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூச்சலிடும் போது, அது இஸ்லாமிய தீவிரவாதம் அல்ல தனிபட்ட சில மனித விரோதிகளின் செயல்பாடு என்று கூற சகோதரர் டோண்ட் முன் வருவதில்லையே?

சாதியை முன்னெடுக்காமல் சகோதர சமுதாய அமைப்பை உருவாக்க முடியாதா? சமுதாய வாழ்க்கை அமைப்புக்கு சாதியின் அவசியம் என்ன? நான் ஐயர், அய்யங்கார், வன்னியர், தேவர், நாடார்...... என்று பறைசாற்றி மக்களை கூறுபோடுவதன் நோக்கம் என்ன? விளக்கம் தாருங்கள் சகோதரர் டோண்ட்.

மனித நல்லிணக்கம் தழைத்தோங்கிட சாதியில்லா சமுதாயம் மலர வேண்டும்

மனிதன்

dondu(#11168674346665545885) said...

//முஸ்லிம் பெயர் கொண்ட ஒருவனோ அல்லது சிலரோ சட்ட ஒழுங்கை மீறும் போது மட்டும் பார்பனர்கள் (சங்பரிவார சாக்கடைகள்)இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூச்சலிடும் போது, அது இஸ்லாமிய தீவிரவாதம் அல்ல தனிபட்ட சில மனித விரோதிகளின் செயல்பாடு என்று கூற சகோதரர் டோண்ட் முன் வருவதில்லையே?//
வெளி ஆட்கள் வந்து சொல்ல வேண்டிய அவசியமேயில்லாமல் தீவிரவாதிகள் தங்களை ஜிஹாதிகளாகத்தானே கூறிக் கொள்கிறார்கள். வீடியோக்களில் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகள் கழுத்தை அறுப்பதையெல்லாமே வீடியோவில் காட்டுகிறார்களே. அதற்கு என்ன சொல்லுவிர்கள்?

//நான் ஐயர், அய்யங்கார், வன்னியர், தேவர், நாடார்...... என்று பறைசாற்றி மக்களை கூறுபோடுவதன் நோக்கம் என்ன? விளக்கம் தாருங்கள் சகோதரர் டோண்ட்.//
எல்லாவற்றையும் பார்ப்பனீயம் எனக் கூறி ஜல்லியடிக்கும்போது இல்லை, திண்ணியத்தில் பன்னியரீயம், கீழ்வெண்மணியில் நாயுடுவிசம், பாப்பாப்பட்டியில் தேவரீயம் என்றெல்லாம் எடுத்து கூற நேருகிறது.

டோண்டு ராகவன்

Anonymous said...

"""Anonymous said...
முஸ்லிம் பெயர் கொண்ட ஒருவனோ அல்லது சிலரோ சட்ட ஒழுங்கை மீறும் போது மட்டும் பார்பனர்கள் (சங்பரிவார சாக்கடைகள்)"""

இந்த மாதிரி புடிக்காதவனையெல்லாப் பார்ப்பனர் என்று ஜல்லியடிப்பதை குறித்துதான் இந்தப் பதிவே :)

வஜ்ரா said...

தான் கூறும் சட்டங்களை மதிக்காதவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னார் மனு!


தாங்களை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களின் காதுகளில் பார்பான ஈயம் என்ற ஒன்றை காய்ச்சு ஊற்றுகிறார்கள் இந்த நவ யுக மனுவாதிகள் மன்னிக்கவும் மார்க்ஸ்வாதிகள்.

Anonymous said...

பேரறிஞர் டோண்ட் ஐயா!
//தீவிரவாதிகள் தங்களை ஜிஹாதிகளாகத்தானே கூறிக் கொள்கிறார்கள்.//
இஸ்லாம் பெயர் கொண்ட எத்தனையோ பேர் வட்டி கொடுக்கல் வாங்களில் ஈடுபடுகிறார்கள், மது போதை உட்கொள்கிறார்கள், விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். பிச்சை எடுப்பதை விடவும் கீழ்தரமான வரதட்சணை வாங்குகிறார்கள். இதனால் இஸ்லாம் வட்டியை, மது போதை உட்கொள்ளுதலை, விபச்சாரத்தை, வரதட்சணையை ஆதரிக்கிறது என்று சொல்வது எப்படி அபத்தமோ அதே அபத்தம் தான் இஸ்லாத்தை முற்படுத்தி குழப்பத்தை சமூகத்தில் விளைவிப்பது, பதட்டத்தை உண்டாக்குவது, அநியாயமாக உயிர்களை கொலை செய்வது, இரத்தத்தை ஓட்டுவது, அநீதியிழைப்பது ............. இப்படி இஸ்லாத்தின் பெயரை உச்சரிப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது திருக்குர்ஆனின் தமிழாக்கத்தையும் நபி மொழி தொகுப்புகளின் தமிழாக்த்தையும் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

Anonymous said...

If someone worries the word about 'islamic terrorism'.....
First they, their leaders and their islamic peoples start to condemn openly as well not to support (means verbal, money, physical) the irradical groups......
Irradical groups only called that they are islamic jigadis
So, it can not be avoided to call 'islamic terrorism'.
Why the whole world is worrying about islam?. Because its excluding nature of other thoughts.
In india, there is only two groups. One is there is a Hindu and another there was a Hindu.
can anyone refute this?

Krishnakumar said...

I am becoming more pessimistic why do brahmins still need to live in TN?

dondu(#11168674346665545885) said...

//I am becoming more pessimistic why do brahmins still need to live in TN?//
தமிழ் நாட்டில் பார்ப்பனர் இருப்பதோ இல்லாததோ அவர்களது சுய முடிவாகவே இருக்க வேண்டும். மற்றவர்கள் அதில் மூக்கை நுழைக்க நாம் விடலாகாது.

இப்போதைக்கு எனக்கு தமிழ் நாடே போதும். இங்கேயே நல்லபடியாக காலட்சேபம் நடக்கிறது.

இதில் பெஸ்ஸினிஸ்டாக ஏன் இருக்க வேண்டும்?

சந்தோஷமாக இருங்கள் சந்தோஷமாக வாழுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சந்தோஷமாக இருங்கள் சந்தோஷமாக வாழுங்கள்.//

எப்படி இருக்க விடுவார்கள்?. ஏதாவது பிரச்சினையை கிளப்பிவிட்டுக்கொண்டே இருந்தால்தானே தி.க. போன்ற உழைக்க விருப்பமில்லாத வெட்டி கும்பல்களின் பிழைப்பு ஓடும்? இதில் மானமிகு தமிழர் தலைவர் என்றெல்லாம் பட்டம் வேறு தி.க.வீரமணிக்கு!! என்னவோ தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து அவர் காலில் விழுந்து 'அய்யா நீங்கள்தான் எங்களுக்கு தலைவராக இருக்க வேண்டும்' என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறமாதிரி தனக்குத்தானே பட்டம்!!! (அது சரி மானமிகு என்றால் என்ன? பார்ப்பன ஜெ காலில் போய் ஒருகாலத்தில் மானத்தோடு விழுந்துகிடந்தாரே, அதனாலா??!!)

சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

//(அது சரி மானமிகு என்றால் என்ன? பார்ப்பன ஜெ காலில் போய் ஒருகாலத்தில் மானத்தோடு விழுந்துகிடந்தாரே, அதனாலா??!!)//
நல்ல கதையா இருக்கே. அப்படி செய்யலைன்னாக்க தன்னோட கல்வி நிலையங்களை தொடர்ந்து நடத்தி வசூல் கொள்ளை அடிக்க முடியுமா என்ன? அவர் கவலை அவருக்கு. மானமாவது மண்ணாங்கட்டியாவது. சமீபத்தில் 1967-ல் பகுத்தறிவுப் பகலவனாம் பெரியாரே அவ்வாறு செய்துதானே சுயமரியாதைக்கு புது விளக்கம் கொடுத்தார். வீரமணி ஐயா தன் தலைவன் வழிப்படி நடப்பவராக்கும்.

ஒரு படத்தில் விவேக் அடியாட்களை வைத்துக் கொள்வதால் தனக்கு ஏற்படும் நிர்வாகச் செலவுகளை பட்டியல் போட்டு காட்டி, ஆகவே மாமூல் வாங்க வேண்டியிருப்பதாக நியாயப்படுத்துவார்.

யாராவது அப்படத்தின் பெயரை சொன்னால் தன்யனாவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

யாராவது அப்படத்தின் பெயரை சொன்னால் தன்யனாவேன்
Kireetam

Anonymous said...

"dondu(#11168674346665545885) said...
//முஸ்லிம் பெயர் கொண்ட ஒருவனோ அல்லது சிலரோ சட்ட ஒழுங்கை மீறும் போது மட்டும் பார்பனர்கள் (சங்பரிவார சாக்கடைகள்)இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூச்சலிடும் போது, அது இஸ்லாமிய தீவிரவாதம் அல்ல தனிபட்ட சில மனித விரோதிகளின் செயல்பாடு என்று கூற சகோதரர் டோண்ட் முன் வருவதில்லையே?//
வெளி ஆட்கள் வந்து சொல்ல வேண்டிய அவசியமேயில்லாமல் தீவிரவாதிகள் தங்களை ஜிஹாதிகளாகத்தானே கூறிக் கொள்கிறார்கள். வீடியோக்களில் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகள் கழுத்தை அறுப்பதையெல்லாமே வீடியோவில் காட்டுகிறார்களே. அதற்கு என்ன சொல்லுவிர்கள்?"


ந‌ல்ல‌ ப‌தில் பாராட்டுக்க‌ள். இந்துக்க‌ளில் ஏற்ப‌டும் முர‌ன்பாட்டில் இஸ்லாமிய‌ர்க‌ள் குளிர்காய்வ‌தை அனும‌திக்க‌முடியாது.

புள்ளிராஜா

Madhu Ramanujam said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஏதாவது நல்ல உணக்கையா படிக்கணும்னு நினைச்சேன். கிடைச்சது நல்ல ஒரு சரக்கு. நல்ல அலசல் ராகவன். தொடருங்கள். :).

பிகு: உங்க திருக்குறள் பதிவுல பின்னூட்டம் போட முடியலை. சிகாகோலேர்ந்து ஹைதராபாத் வந்த என்னை மூணாவது நாளே நியூயார்க் போக சொல்லி துரத்திட்டாங்க. ரொம்ப சுத்திகிட்டே இருந்ததால உங்களோட அந்தப் பதிவுல பின்னூட்ட முடியலை.

Anonymous said...

//சிகாகோலேர்ந்து ஹைதராபாத் வந்த என்னை மூணாவது நாளே நியூயார்க் போக சொல்லி துரத்திட்டாங்க//

சந்தடிசாக்கில் இப்படி US, UK என்றெல்லாம் பெருமை பீற்றிக்கொள்வது பார்ப்பனர்க்கு வாடிக்கையாக போய்விட்டது. மதுசூதனரே எங்களுக்கும் US, UK japan போன்றவை தெரியும்.

முங்கசித்து

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது