10/09/2007

மதன் சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?

எனது இப்பதிவில் மதனைப் பற்றி ஒரே ஒரு ரெஃப்ரன்ஸ்தான் செய்தேன். அப்பதிவு ஞானிக்காக போட்டது. இப்பதிவில் மதன் கூறியதை பற்றி இன்னும் விரிவாகக் கூறுகிறேன்.

மதனுக்கு வந்த கேள்வி பதில் ஒன்றில் பண்டைத் தமிழக வரலாற்றை எழுதத் தேவையான நூல்கள் இல்லை எனக் கூறினார். உதாரணத்துக்கு தில்லி சுல்தான்கள் பற்றி அவர் எழுதிய தொடர் பல புத்தகங்களைப் படித்து போடப்பட்டது. அதே போல தமிழில் இல்லை எனக் கூறுகிறார். உடனே அவர் பார்ப்பனர் என்பது ஞாபகத்துக்கு வந்து எல்லோரும் சாமியாடுகிறார்கள்.

இப்போது எனது சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன். நான் அப்போது தில்லியில் இருந்தேன். சாலமன் பாப்பையாவும் அவர் குழுவினரும் ஒரு பட்டி மன்றத்துக்காக வந்திருந்தனர். என் மனைவியின் அத்தையன்பருக்கு சாலமன் பாப்பையாவை நன்கு தெரியும். என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கு சற்று முன்புதான் சென்னை தொலைகாட்சியில் புகழேந்திப் புலவர் சீரியல் முடிந்திருந்தது. அதில் புகழேந்திப் புலவர் இளைஞனாக வருகிறார். ஒட்டக்கூத்தர் இருக்கிறார். ஆனால் கம்பர் இல்லை. அவர் இவர் காலத்துக்கு முந்தியவர். கதை நடக்கும்போது உயிருடன் இல்லை. ஆனால் சிவாஜி மற்றும் பானுமதி நடித்த அம்பிகாபதி படத்தில் புகழேந்திப் புலவர் மிக வயதானவர். கம்பருக்கு ஈடு. அவர் மகள் கம்பரின் தத்து புத்திரியாக வளர்கிற்தாள். சாலமன் பாப்பையாவிடம் நான் கேட்டது இதுதான். இதில் எந்த வெர்ஷன் உண்மையானது. சாலமன் பாப்பையாவோ தனக்கும் அது தெரியாது என்றே கூறிவிட்டார். மேலும் இதெல்லாம் யாரும் சரியாகக் குறிக்கவில்லை என்றும், தானும் மற்றவரும் செவிவழிச்செய்திகளை வைத்து கொண்டே ஒப்பேற்றுவதாகவும் கூறி விட்டார்.

பொதுவாகவே புலவர்கள் பரிசிலுக்காக அரசர்களை இந்திரன் சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து பாடுவதுதான் நடந்திருக்கிறது. யாருக்குமே தினசரி நிகழ்ச்சிகளை குறித்து வைத்து கொள்ளும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

இதுவே அக்பர் காலத்து விஷயங்கள் பல ஆவணங்களை சரியாக வைத்ததாலேயே வெளியில் வந்துள்ளன. உதாரணத்துக்கு ரா.கி. ரங்கராஜனின் "வாளின் முத்தம்" என்ற நாவலில் அக்பர் அளித்த விருந்தில் என்னென்ன பரிமாறினார்கள் என்பது முதற்கொண்டு எழுதப்பட்டிருந்தது.

ஆனால் நம் தமிழகத்தில் இம்மாதிரி ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவ்வளவு ஏன், 1949-ல் ஈவேரா அவர்கள் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டது பற்றி போட்ட பதிவுக்காக அந்த ஆண்டு ஹிந்து பத்திரிகைகளை பார்க்க போன போது ரொம்பவும்தான் அலைகழித்தார்கள். அதுவும் தேதி எல்லாம் நான் சொன்னால்தான் சம்பந்தப்பட்ட பேப்பரை பார்க்க இயலும் என்றும் கூறினார்கள். அதுவே நியூ யார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் தனியாக இண்டக்ஸே உண்டு. வெறுமனே பெரியார் என்ற பெயரில் தேடினாலே சம்பந்தப்பட்ட ஆண்டில் அவரைக் குறித்த அத்தனை செய்திகளை பற்றியும் குறிக்கும் களஞ்சியம் கிடைக்கும். ஹிந்துவிலும் இருந்திருக்குமாயிருக்கும் ஆனால் அதை எனக்கு தர அழும்பு செய்தனர். நான் கூற வருவது என்னவென்றால், இங்கு விஷயங்களை குறித்து வைத்து கொள்ளும் கல்சரே கிடையாது.

விதிவிலக்காக புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களது நாட்குறிப்புகளை கூறலாம். அது 18 ஆம் நூற்றாண்டின் புதுவையின் நிலையை அழகாக படம் பிடித்து காட்டியது.மற்றப்படி விஷயங்களை குறித்து கொள்வதில் நமக்கு சமத்து போதாது என்றுதான் கூறவேண்டும்.

சேர சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்களை பற்றி நம்பத் தகுந்த ஆதாரங்கள் மிக அரிதாக உள்ளன. எந்த ராஜா முதலில் வருகிறான், எவன் பின்னால் வருகிறான் என்பதெல்லாம் புரிய முடியாமல் தலை பிய்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.

புகழேந்திப் புலவர் விஷயத்திலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

55 comments:

சதுக்க பூதம் said...

//சேர சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்களை பற்றி நம்பத் தகுந்த ஆதாரங்கள் மிக அரிதாக உள்ளன. எந்த ராஜா முதலில் வருகிறான், எவன் பின்னால் வருகிறான் என்பதெல்லாம் புரிய முடியாமல் தலை பிய்த்து கொள்ள வேண்டியிருக்கிறது. //

How much effort did you take to find out the above fact?How many "Kalvettu" did you analyse?How many archeological site did u visit?

Anonymous said...

Dear Dondu Sir,

There are people who always look for poonool in each and everything. I don't want to mention anyone in particular. It is very sad that they are continuousely doing it. I agree with you that thamizh people and our forefathers failed to document most of the treasures which would have given new insight in many fields.

dondu(#11168674346665545885) said...

ஐயா சதுக்க பூதம் அவர்களே,

கல்வெட்டுக்களை பார்த்து ஆராய்வது எழுத்தாளர்கள் வேலை இல்லை. மேலும் நம்மவருக்கு நாட் குறிப்புகள் வைத்து கொள்ளும் பழக்கமுமில்லை.

உதாரணத்துக்கு அரசன் ஆர்தர் காலத்தில் தினசரி வாழ்க்கை, நெப்போலியன் காலத்தில் தினசரி வாழ்க்கை ஆகியவற்றுக்கெல்லாம் புத்தகம் எழுதி வைத்துள்ளனர். நோட்ரடாம் தேவாலயத்தை கட்ட எந்த காட்டிலிருந்து எந்த மரங்களை வெட்டினர், கட்டிடம் கட்டும்போது நடந்த நிகழ்ச்சிகள் என்ன என்றெல்லாவற்றுக்கும் அசைக்க முடியாத எழுத்து ஆவணங்கள் உள்ளன. தமிழில் இல்லை. அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்த திராவிட குஞ்சுகள் தமிழக வரலாற்றை திரித்து கெடுக்காமல் இருந்தால் அதுவே கோடி புண்ணீயம்.ராவணன் தமிழ் மன்னன் என எந்த வரலாற்று ஆசிரியரும் சொல்வதில்லை.இவர்கள் தான் உளறித் திரிகின்றனர்.

சூர்ப்பநகை என்று எந்த தமிழ் பெண்ணாவது பெயர் வைத்து கொள்வாளா?

இல்லை கும்பகருணன் என்று எந்த தமிழனாவது பெயர் வைத்து கொள்வானா?எந்த தமிழ் இலக்கியத்திலாவது சூர்ப்பநகை,கும்பகருணன்,ராவணன்,இரணியகசிபு என்று பொதுமக்கள் பெயர் வைத்துகொண்டதாக செய்தி உண்டா?பிறகு எப்படி இதெல்லாம் தமிழ்பெயர் ஆகும்?இவர்கள் தமிழர்கள் ஆவார்கள்?

தமிழக வரலாற்றை நாசம் செய்யும் கழக குஞ்சுகள் மதனை குறைகூற யோக்கியதை அற்றவர்கள்

Anonymous said...

தமிழ்தான் சமஸ்கிருதம் ம்ற்றும் எல்லா உலக மொழிகளுக்கும் மூலம், மற்றும் தமிழர்கள் கடலில் முழுகிப்போன லெமூரியாவில் வாழ்ந்தனர் என புருடா விட்ட தேவநேயனை தோள்மேல் தூக்கிவைத்து, ஸ்டாம்ப் வெளியிட்ட "பகுத்தறிவு" புலிகளிடம் , ஒரு வித சிந்தனைத் திரமையையோ, மன நேர்மையையோ எதிர்ப்பார்க்காதீர்கள்.

dondu(#11168674346665545885) said...

ஒரு சாதாரண உதாரணம் தருகிறேன். கையெழுத்திடும்போது தேதியிடுவது அவசியம். உதாரணத்துக்கு இன்று 09.10.2007-ல் கையெழுத்திடும்போது கையெழுத்துக்கு கீழ் வெறுமனே 09/10 என்று குறிப்பிட்டு விட்டு ஆண்டு குறிக்க மாட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து அக்கையெழுத்து எப்போது போடப்பட்டது என்பதற்கு மண்டை உடையும்.

இங்கேயே பலர் பதிவுகளில் பின்னூட்டங்களை பாருங்கள். வெறுமனே நேரம் குறிக்கப் பட்டிருக்கும். நான் தேதியுடன் குறிப்பவன். பலருக்கு அதை தேதியுடன் கூட இருப்பதாக மாற்றலாம் என்று கூட தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் said...

தமிழர்களிடம் நாட்குறிப்பு பழக்கம் அதிக அளவில் இல்லாதது ஒரு வருத்தம் தரும் செய்திதான்.

அதுமில்லாமல் ஏராளமான தரவுகள் தனி நபர்களிடம் சிக்கி சிதைந்துபோனது.

அதற்காக 40 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து தமிழே உலகின் முதன் மொழி என்று அறிவித்த மொழிஞாயிறு தேவநேய பாவணர் அவர்களை கிண்டல் செய்யும் "அனானி"களை எதால அடிக்கறது..

அன்புடன்
அரவிந்தன்

சதுக்க பூதம் said...

But facts are written in "Kalvettu".We do have clear history except for kalapirar age.

ரவி said...

///சேர சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்களை பற்றி நம்பத் தகுந்த ஆதாரங்கள் மிக அரிதாக உள்ளன. எந்த ராஜா முதலில் வருகிறான், எவன் பின்னால் வருகிறான் என்பதெல்லாம் புரிய முடியாமல் தலை பிய்த்து கொள்ள வேண்டியிருக்கிறது////

இது அநியாயம்....கல்வெட்டுகளை படித்து புரிந்துகொள்ள என்னால் முடியும்...எங்கள் ஊர் திருக்கோவிலூர் வாங்க...உலகளந்த பெருமாள் கோவில் சுவற்றில் இருக்கும் கல்வெட்டுக்களே சங்ககாலத்தை சேர்ந்தவை...முடிஞ்சா மதனையும் அழைச்சுக்கிட்டு வாங்க...உட்கார வெச்சு படிச்சுக்காட்டுறேன்...

ஏட்டுச்சுரைக்காய் மதனுக்கு தமிழர் வரலாற்றை வரவணையானிடம் கேட்டு தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் செய்கிறேன்....அட்லீஸ்ட் தஞ்சாவூர் எங்கே இருக்கென்றாவது தெரிஞ்சுகொள்ளட்டடும் மதன்...

Anonymous said...

எங்கள் ஊரின் கோவிலுக்கு சடாவர்மன் சுந்தரபாண்டியன் நிலம் கொடுத்ததாக கல்வெட்டு கூறுகிறது.. ஆற்றங்கயிலிருந்து "17 சுந்தரபாண்டியன் கோல்" அளவு நிலம் கொடுத்துள்ளார். "சுந்தரபாண்டியன் கோல்" என்றால் எவ்வளவு அடி என்று ஒரு குறிப்பும் இல்லை.


இன்னொரு கொடுமை கோயில் கல்வெட்டுக்களில் மன்னர்கள் அந்தந்த கோயில்களுக்கு கொடுத்த கொடையைப் பற்றி வரும் செய்திகளில் வருடத்தை குறிப்பிடாமல், (தமிழ் வருடப் பெயர், கலியுகாதி வருடம் ) மன்னரின் பெயரைப் போட்டு அவனுடைய ஆட்சியின் 13வது ஆண்டில் என்று போட்டிருக்கும்..


இப்பேர்ப்பட்ட குறிப்புகளை வைத்துக்கொண்டு என்ன ஆராய்ச்சி செய்ய முடியம்?

Anonymous said...

அய்யா,

எதற்கெடுத்தாலும் பூணூல் பிரச்சனை ஆக்குவது பூணூல் இல்லாதவரின் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான். என்னதான் பார்ப்பான், பூணூல் என்று சலம்பினாலும் அது இல்லையே என்ற குறை மனதை வாட்டிக்கொண்டிருக்கும். பெண்கள் ஆண்கள் மேல் காண்டு அடிப்பது கூட penis envy என்று ஒரு உளவியல் வல்லுனர் கூரியது போல :0)

dondu(#11168674346665545885) said...

ஏதோ பதிவு போட்டுவிட்டேனே தவிர என் மனதையும் அரித்த விஷயம்தான் இது. செந்தழல் ரவி அவர்களது பின்னூட்டம் பார்த்த பிறகே வந்தது நிம்மதி.

எதற்கு சுண்டைக்காய் பார்பன மதன் எல்லாம்? அவர்பாட்டுக்கு ஆவணங்கள் இருக்கும் விஷயங்களை எழுதிக் கிடக்கட்டும்.

கல்வெட்டுகளை பார்த்து சரித்திரம் எழுத செந்தழல் ரவி மற்றும் வரவணையான் குழு ஒன்று போதாதா? அவர்களே சரித்திரம் எழுதி விடலாமே. அப்பாடா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஆற்றங்கயிலிருந்து "17 சுந்தரபாண்டியன் கோல்" அளவு நிலம் கொடுத்துள்ளார். "சுந்தரபாண்டியன் கோல்" என்றால் எவ்வளவு அடி என்று ஒரு குறிப்பும் இல்லை.//
ஏன் கவலை? செந்தழல் ரவியும் வரவனையானும் கூறுவார்கள் என நம்புவோமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

டோண்டு சார்...

மதன் ஒரு ஏட்டுச்சுரைக்காய் என்றேனே தவிர அவர் பார்ப்பணர் என்று நான் சொல்லவில்லையே...

அவர் கோனாரா இருந்தா என்ன நாடாரா இருந்தா என்ன, தமிழர்களுக்கு வரலாறே கிடையாது என்று உளறி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அவருடைய ஆனந்தவிகடன் நாலேஜை பார்த்து அடிக்கடி பூரித்துப்போயிருக்கிறேன்...

அதிலும் மாமிகளுக்கு அவர் அளிக்கும் பதிலும், அவருக்கு வரும் லெட்டர்களின் எண்ணிக்கையும் அடடா...பட்டையை கிளப்பும்...

Anonymous said...

Nice to see civilised discussion even though we are touching sensitive topics. Way to go! Tamil Bloggers. Keep it up.

dondu(#11168674346665545885) said...

//மதன் ஒரு ஏட்டுச்சுரைக்காய் என்றேனே தவிர அவர் பார்ப்பணர் என்று நான் சொல்லவில்லையே...//

ஆம். நீங்கள் சொல்லவில்லைதான். ஆனால் அவருக்கு வந்த திட்டுகளுக்கு மூல காரணமே அவர் பார்ப்பனர் என்பதால்தான். அதை விடுங்கள். நீங்களும் வரவனையானும் எழுதப் போகும் தமிழக சரித்திரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ப்ரியன் said...

சேர , சோழ , பாண்டியருக்கு குறிப்புகள் இல்லை என்பது சரியான வாதமாகாது சென்னை பல்கலை கழகமே பல ஆய்வு நூல்களை வெளியிட்டு உள்ளது.(நூலகங்களில் கிடைக்கும் - தரமணி பல்கலைக்கழக அலுவலகத்தில் விலைக்கும் வாங்கலாம்).

''கி.மு கி.பி'' எழுத்தே இல்லாத காலத்து வரலாறெல்லாம் எழுதும் மதனுக்கு தமிழரின் வரலாறு எழுத மெனக்கெட விருப்பம் இல்லை என்பதே உண்மை.

சரி, நேற்று நம்மோடு வாழ்ந்த பாரதிக்கு காதலி இருந்தது பற்றி வரலாறு கரைத்து குடித்த மதனுக்கு தெரிவிக்க ஒரு குறிப்புகூடவா இல்லாமல் போயிற்று?!(பாரதியின் சுயசரிதையில் அவரே தன் காதலியைப் பற்றி சொல்லி இருக்கிறார்!)

ரவி said...

ஏற்கனவே பல அறிஞர்கள் அடிச்சு தூள் கிளப்பியுள்ளார்கள்.....

நான் வெறும் துரும்பு...

வேண்டுமானால் அவர்களின் புத்தங்கள் சிலவற்றை உங்கள் முகவரிக்கு கொரியர் செய்துவைக்கிறேன்...

dondu(#11168674346665545885) said...

//வேண்டுமானால் அவர்களின் புத்தங்கள் சிலவற்றை உங்கள் முகவரிக்கு கொரியர் செய்துவைக்கிறேன்...//
எனக்கு வேண்டாம். மதனுக்கு அனுப்புங்கள். நல்ல சுவையான சரித்திரத் தொடர் கிடைக்கலாம்.

அது சரி புகழேந்தி புலவரது சரியான காலம் என்ன? சாலமன் பாப்பையாவும் மகிழ்ச்சி அடைவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தகடூர் கோபி(Gopi) said...

தேவநேயப் பாவாணர் பற்றிய எழுதிய அனானியின் "பகுத்தறிவு", "சிந்தனைத் தி'ர'மை", "மன நேர்மை" எல்லாமே விளங்குகிறது.

தமிழில் போதிய வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று சொல்வதை மதனின் சோம்பேறித்தனம் என்று தான் நான் சொல்வேன். அவர் சொல்றது இருட்டுல தொலைச்சிட்டு வேற எங்கயோ போய் வெளிச்சம் இருக்குன்னு தேடி கிடைக்கலைன்னு சொல்ற மாதிரி.

//"சுந்தரபாண்டியன் கோல்" என்றால் எவ்வளவு அடி என்று ஒரு குறிப்பும் இல்லை.// ஏன் கவலை? செந்தழல் ரவியும் வரவனையானும் கூறுவார்கள் என நம்புவோமாக.//

அவங்க மட்டுமில்லைங்க அதனால, ஆர்வமும் உழைப்பும் முயற்சியும் இருந்தா யார் வேனா தேவையானதை தேடி கண்டுபிடிக்க முடியும்.

உதாரணமா "அதியன் பெருவழி நாவற்றாவளத்துக்கு 24 காதம்" அப்படின்னு ஒரு கல்வெட்டு தர்மபுரி மூதூரில் கிடைச்சது. "அதியன் பெருவழி நாவற்றாவளத்துக்கு 22 காதம்" அப்படின்னு இன்னோரு கல்வெட்டு திருப்பத்தூர் போற வழியில கிடைச்சது.

இந்த இரண்டாவது கல்வெட்டை கண்டுபிடிச்சதால நாவற்றாவளம் அப்படிங்கற தர்மபுரிக்கு கிழக்குல இருக்குன்னு சின்ன குழந்தை கூட சொல்லும் (வரலாற்று ஆசிரியர்கள் அது தர்மபுரிக்கு மேற்கே சேலம் மாவட்டதிலோ நாமக்கல்லிலோ இருக்கலாம் என அதுவரை நம்பியிருந்தனர்)

அது மட்டுமல்ல. இதை வச்சி காதம்னா எவ்வளவு தூரம் அப்படின்னு வரலாறு ஆசிரியர்கள் அதுவரை சொன்ன ஊகம் தப்புன்னு நிரூபிக்கப்பட்டது.

இந்த இரண்டாவது கல்வெட்டை கண்டுபிடிச்சது எந்த வரலாற்று ஆசிரியரோ அல்லது தொல்பொருள் துறையினரோ அல்ல (வேற துறை) இரண்டு தமிழாசிரியர்கள்.

dondu(#11168674346665545885) said...

அதெல்லாம் இருக்கட்டும். இணையத் தமிழ் முன்னோடிகள் யார் என்பதில் இரு மூத்த பதிவர்கள் காரசாரமான விவாதம் செய்தனரே. இத்தனைக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சிதான் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//உதாரணமா "அதியன் பெருவழி நாவற்றாவளத்துக்கு 24 காதம்" அப்படின்னு ஒரு கல்வெட்டு தர்மபுரி மூதூரில் கிடைச்சது. "அதியன் பெருவழி நாவற்றாவளத்துக்கு 22 காதம்" அப்படின்னு இன்னோரு கல்வெட்டு திருப்பத்தூர் போற வழியில கிடைச்சது.
இந்த இரண்டாவது கல்வெட்டை கண்டுபிடிச்சதால நாவற்றாவளம் அப்படிங்கற தர்மபுரிக்கு கிழக்குல இருக்குன்னு சின்ன குழந்தை கூட சொல்லும் (வரலாற்று ஆசிரியர்கள் அது தர்மபுரிக்கு மேற்கே சேலம் மாவட்டதிலோ நாமக்கல்லிலோ இருக்கலாம் என அதுவரை நம்பியிருந்தனர்)//

அதாவது தர்மபுரி, திருப்பத்தூர் நாவற்றாவளம்னு மேற்கிலிருந்து கிழக்கா கிட்டத்தட்ட நேர்க்கோட்டிலே வரதா சொல்லறீங்க. அப்படீன்னு கட்டாயம் இல்லை. இந்த மூன்று ஊர்களும் ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகளில் கூட இருக்கலாம். நாவற்றாவளம்னு ஊர் இப்ப அதே பேர்ல இருக்கா என்பதையும் கூறுங்கள்.

நீங்கள் சொல்வது போல மெனக்க்க்ட்டு ஆராய்ச்சி செய்யலாம். அந்த தமிழாசிசிரியர்களும் செஞ்சிருக்காங்க. பாராட்டுகள். ஆனால் இதையெல்லாம் எப்ப செஞ்சு எப்ப புத்தகம் போடறதுன்னு சொல்லுவீங்களா? விகடன் ஆசிரியர் மதனை ஸ்பான்சர் செய்து, முழு சம்பளமும் செலவுத் தொகையும் அளிப்பதாக இருந்தால் தாராளமக்கச் செய்யலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை போலிருக்கே.

இத்துடன் முகலாய வரலாறை எழுதக் கிடைத்த ஆதார நூல்களை பாருங்கள். அவ்வாறு தமிழ் வரலாற்றுக்கு உண்டா என்பதை நெஞ்சைத் தொட்டு செல்லுங்கள். அதை விடுத்து அதைச் செய்யலாமே, இதைச் செய்யலாமே என்றால் சொல்வது சுலபம். செய்து விட்டு பேசவும்.

நான் சொன்ன பாயிண்ட் இதுதான். நம்மவருக்கு நாட் குறிப்புகள் எழுதி வைத்து கொள்ளும் பழக்கம் கிடையாது. அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தகடூர் கோபி(Gopi) said...

//அதாவது தர்மபுரி, திருப்பத்தூர் நாவற்றாவளம்னு மேற்கிலிருந்து கிழக்கா கிட்டத்தட்ட நேர்க்கோட்டிலே வரதா சொல்லறீங்க. அப்படீன்னு கட்டாயம் இல்லை. இந்த மூன்று ஊர்களும் ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகளில் கூட இருக்கலாம்.//

அப்படீங்களா? நேர்க்கோட்டில் இருக்க வேண்டியதில்லை. வழியில் பெரிய மலைகள் இல்லாத பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட (கிழக்கு) திசையில் இருக்கும் ஊருக்கு செல்ல அதன் நேரெதிர் (மேற்கு)திசையில் பாதை செல்லாது.

//நாவற்றாவளம்னு ஊர் இப்ப அதே பேர்ல இருக்கா என்பதையும் கூறுங்கள்.//

நாவல், தாவளம் என்ற இரட்டை ஊரும் அங்கே அதியன் நெடுமான் அஞ்சி குறித்த கல்வெட்டுக்களும் இன்னும் கூட ஆற்காட்டுக்கு அருகில் உள்ளது. அது குறித்தும் அந்த தமிழ் ஆசிரியர்கள் ஆதாரத்தோட "அதியமான்களின் வரலாறு" புத்தகத்திலும், இன்னும் சில தமிழ்நாடு தொல்பொருள்துறை சார்பில் வெளியிட்ட ஆய்வரிக்கைகளிலும் எழுதியிருக்காங்க.

//விகடன் ஆசிரியர் மதனை ஸ்பான்சர் செய்து, முழு சம்பளமும் செலவுத் தொகையும் அளிப்பதாக இருந்தால் தாராளமக்கச் செய்யலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை போலிருக்கே.//

அப்படின்னா மதன் "விகடன் கொடுத்த தொகை/நேரத்தில் விரிவாக தமிழில் ஆய்வு செய்வது கடினம்" அப்படின்னு சொல்லியிருக்கனுமே தவிர "போதிய ஆதாரங்கள் இல்லை" அப்படின்னு முடிவா சொல்லியிருக்கக் கூடாது.

//இத்துடன் முகலாய வரலாறை எழுதக் கிடைத்த ஆதார நூல்களை பாருங்கள். அவ்வாறு தமிழ் வரலாற்றுக்கு உண்டா என்பதை நெஞ்சைத் தொட்டு செல்லுங்கள்.//

உண்டு. புறநானூற்றில் அதியன்கள், சேர சோழர்கள் உட்பட பல அரசர்களின் வாழ்ந்த காலம், நிகழ்ந்த போர்கள் என எல்லாமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புறநானூற்றுப் பாடல் ஒன்றிலே அதியன் நெடுமான் அஞ்சி ஔவையோடு அமர்ந்து என்ன உணவு உண்டான் என்பது வரை ஆதாரம் உண்டு.

புறநானூறு மட்டுமில்லாமல் இன்னும் பல நூல்களில் இத்தகைய ஆதாரங்கள் உண்டு.

என்னைப் பொறுத்தவரை "தமிழில் போதிய ஆதாரங்கள் இல்லை" என மறுப்பவர்கள் அத்தகைய ஆதாரங்களை இதுவரை படித்ததில்லை அல்லது ஆதாரங்களைத் தேடும் ஆர்வம் இல்லாத சோம்பேறிகள்.

எனது கருத்தை தெளிவாக்கிவிட்டேன் என நினைக்கிறேன். மேற்கொண்டு விவாதிக்க விருப்பமில்லை.

நன்றி வணக்கம்.

dondu(#11168674346665545885) said...

கோபி அவர்களே. இந்த ஊரிலிருந்து இந்த ஊர் இவ்வளவு காதம் என்று எழுதிய நீங்கள் திசைகளை குறிப்பிடவில்லை. கடைசியில் மட்டும் கிழக்கு திசை என்று மொட்டையாகக் கூறினீர்கள். நேர்க்கோட்டில் அவை மூன்றும் இருந்ததாக எங்கும் தகவல் நீங்கள் முதலில் சொன்ன வாக்கியத்தில் இல்லை. சொல்ல நினைத்திருக்கலாம். அவை நேர்க் கோட்டிலும் இருக்கலாம். ஆனால் அதை தெளிவாகச் சொல்லவில்லை என்பதே நிஜம்.

மதன் என்பவர் ரொம்ப பிசியான எழுத்தாளர். ஆவணங்கள் வாகாகக் கிடைத்தால் எழுதப் போகிறவர். விகடன் கொடுக்கும் தொகை போதாது என்று கூறி விகடன் ஆசிரியரை விரோதித்து கொள்ள வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் கூறுவது சரியாகவே இருக்கட்டும். அதாவது ஆவணங்கள் இருக்கிறது என்றே வைத்து கொள்வோம். கிடைத்தால் எழுதி விட்டு போகிறார்.

நான் இப்பதிவை ஓட்டதன் காரணமே அவரை பார்ப்பனர் என அடையாளம் கொண்டு இந்த நிகழ்ச்சியை சாக்காக வைத்து தாக்கியதற்குத்தான். நீங்கள் தாக்கவில்லைதான். ஆனால் பலர் தாக்கினார்கள். அதற்கெதிர் வினைதான் இப்பதிவு.

இப்போதுதான் பெங்களூரிலிருந்து மகேஸ் தொலைபேசினார். மேக்ரோ அளவில் எழுது அளவுக்கு ஆதாரங்கள் உண்டு என கூறினார். அவரை மின்னஞ்சல் செய்ய கூறியுள்ளேன். வந்தவுடன் அதை என்னுடைய பெயரில் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

///அதெல்லாம் இருக்கட்டும். இணையத் தமிழ் முன்னோடிகள் யார் என்பதில் இரு மூத்த பதிவர்கள் காரசாரமான விவாதம் செய்தனரே. இத்தனைக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சிதான் அது.////

அப்படியே நைசா இன்னோரு பிரச்சினைக்கு அடி போடுறீங்க பத்தியா ?

Anonymous said...

இந்த பதிவர் சொன்னது தவறே இல்லை

http://ini2006.blogspot.com/2007/09/blog-post.html

dondu(#11168674346665545885) said...

//இந்த பதிவர் சொன்னது தவறே இல்லை//
அதை தைரியமாக சொந்தப் பெயரிலேயே சொல்வதுதானே அனானி. முக்காடு எதற்கு?

உங்கள் தயவில் நான் இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்.

டோண்டு ராகவன்

Anonymous said...

முக்காடு போட்டு உங்களை அனானியாக திட்டுவது யாரென்று நீங்கள் கண்டறிந்ததாக தெரிக்றது. அது யாரென்று பட்டென்று போட்டு உடைக்கவும்.

சக்திவேல்

dondu(#11168674346665545885) said...

//முக்காடு போட்டு உங்களை அனானியாக திட்டுவது யாரென்று நீங்கள் கண்டறிந்ததாக தெரிக்றது. அது யாரென்று பட்டென்று போட்டு உடைக்கவும்.//
யாரென்று குறிப்பாகத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆசையில்லை. ஏனெனில் கோழைகளை பற்றி நான் கவலை கொள்வதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்த பதிவிலேயே நிஜ பெயரில் பின்னூட்டம் போட்டவர் எவராவது இருக்குமோ?

சக்திவேல்

Anonymous said...

டோண்டுசார்!

கூடாதநட்பு துன்பம் தரும் என்று நீங்கள் பதிவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தகுதிக்கு மீறி சிலருடன் குடித்தது இப்போது எந்த நிலையில் கொண்டு விட்டிருக்கிறது பாருங்கள். உங்களை தரக்குறைவாக தலைப்பிட்டு சில ஜென்மங்கள் பதிவு போடுகின்றன. அதற்கு போலியின் அல்லகைகளும், கைதடிகளும் பின்னூட்டங்களாக போடுகின்றன. இனியாவது நல்ல நட்பாக தேர்ந்தெடுக்கவும்.

dondu(#11168674346665545885) said...

//இந்த பதிவிலேயே நிஜ பெயரில் பின்னூட்டம் போட்டவர் எவராவது இருக்குமோ?//
அரவிந்தன், செந்தழல் ரவி, பிரியன், கோபி மற்றும் டோண்டு ராகவன்.:)

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு அய்யா, எதிரிகளை கூட நம்பிவிடலாம். கூடவே இழுந்து கழுத்தறுக்கும் புல்லருவிகளை நம்பிவிடகூடாது. சில புல்லருவிகள் உங்களிடம் நல்ல பெயர் வாங்கி வேறிடம் உங்களை பற்றி புறம் சொல்லுகிறார்கள் என்று கேள்விபடுகிறேன். ஜாக்கிரதையாக இருங்கள் அய்யா.

Anonymous said...

பிரியன், கோபி, டோண்டு ராகவன் மூன்று பேரும் அநாகரிகமானவர்கள் கிடையாது. அரவிந்தனும் கோபக்காரர் தான். ஆனால் மூடர் அல்ல.

சக்திவேல்

Anonymous said...

திராவிட குஞ்சுகளுக்கு தெரிந்த வரலாறெல்லாம் பாவாடையை தூக்கிபார், தமிழ்நாடு தெரியும் மாதிரி வரலாறு தான். திராவிட குஞ்சுகளுக்கு திராவிட ஆபாச வரலாறு தவிர வேறென்ன தெரியும்?

மூக்கையா தேவர்

Anonymous said...

Mr.Dondu did you read this article?

http://www.varalaaru.com/Default.asp?articleid=520

Saravanan, Infosys

Anonymous said...

சக்திவேல் பட்டுன்னு பட்டாசு மாதிரி மேட்டரை ஒடைச்சிட்டீங்களே? :-))))))))

Anonymous said...

திராவிடனுக்கு தான் கும்மி அடிக்க தெரியுமா? ஆரியனும் அடிக்கிறோம்டா கும்மி.

dondu(#11168674346665545885) said...

//உங்கள் தகுதிக்கு மீறி சிலருடன் குடித்தது இப்போது எந்த நிலையில் கொண்டு விட்டிருக்கிறது பாருங்கள். உங்களை தரக்குறைவாக தலைப்பிட்டு சில ஜென்மங்கள் பதிவு போடுகின்றன.//
குடிக்காவிட்டாலும் அவ்வாறுதான் செய்திருப்பார்கள். அவர்கள் தரம் அவ்வளவே. விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//Mr.Dondu did you read this article?
http://www.varalaaru.com/Default.asp?articleid=520//
இப்போதுதான் பார்த்தேன். சுட்டிக்கு நன்றி.

விகடன் ஆசிரியருக்கு அனுப்புங்கள். மதனை கமிஷன் செய்தாலும் செய்வார். அல்லது வேறு யாரையாவது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

என்னிக்குமே பார்ப்பான் பார்ப்பான் தான் என்பது தி. குஞ்சுகளின் வெறுப்பியல் கொள்கையின் அடிப்படை நம்பிக்கை.


அதைத் தெரிந்தும் willful denial ல் இருப்பவர்கள் மதன், ஞானி போன்றவர்கள் (அப்படி இருப்பதனால் அறிவாளிப்பட்டம் கிடைக்கிறதே!!). அவ்வப்போது அவர்கள் சாதியை குத்திக் கேவலப்படுத்துவதனால் திராவிட குஞ்சுகளின் ஈகோ satisfaction அடைகிறது.


இது ஒரு vicious circle, இவர்களை அவர்கள் கேவலப்படுத்துவது, எவ்வளவு கேவலப்பட்டாலும் அறிவாளிப்பட்டம் கிடைப்பதால் அவர்கள் இவர்களை ஆதரிப்பதும், என்றுமே தொடரும்.


டோண்டுவும், தமிழ்மணமும் போல....

dondu(#11168674346665545885) said...

//டோண்டுவும், தமிழ்மணமும் போல....//
இது என்ன ஒப்பிடல் என்று புரியவில்லை. தமிழ்மணத்தைப் பற்றிய எனது கருத்துக்களில் எவ்வித மாற்றமுமில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஓகை said...

இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மதன் கூறியது தவறுதான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

முகலாய வரலாறு எழுதுவதைப் போல் தமிழரின் வரலாறு எழுதுவது ஒப்பீட்டளவில் சற்று கடினம் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் அதை மதன் சொல்லியமுறை நிச்சயம் தவறானது. தமிழ் புலவர்களின் பாடல்களை ஒட்டு மொத்தமாக பிச்சைக்கும் மதுவுக்குமாகவே பாடப்பட்டது என்கிற தொனியில் அவர் பேசியது எவ்விதத்தில் சரி? நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? தமிழ்ப்பாடல்களில் எத்தனை விழுக்காட்டை அவர் சொன்ன விதத்தில் பகுத்துவிட முடியும்?

Anonymous said...

Even in wikipedia , we have the full lineage of the cholas. Only the kalapiravars history has been purged by the hindu fanatic cholas because kalapravars were buddhist. Even hitler spared the art mueseums and other art artifacts when he bombed london but the barbaric hindu cholas destroyed all evidence of buddhist kalapiravars art and artifacts such is the fanatism manisfested by the uncouth cholas.

dondu(#11168674346665545885) said...

வணக்கம் ஓகை அவர்களே,

தமிழக வரலாறு அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாததற்கு ஒரு முக்கியக் காரணமே ஆண்டுகளை கணக்கிடும் முறைதான். இப்போது நாம் பாவிக்கும் கி.மு. /கி.பி. முறை தமிழகத்தில் பழங்காலத்தில் இல்லை. வெறுமனே 60 ஆண்டுகள் சுழற்சியில் செய்தோம். ஆகவே குழப்பம் வருவது இயல்பே.

இசுலாமிய சரித்திரத்தில் ஹிஜிரா என்ற ஆண்டுமுறை இருப்பதால் அவற்றை எடுத்து எழுதுவதில் பிரச்சினை மிகக் குறைவே.

இரண்டாவதான காரணம் நாம் ஏற்கனவே செய்தது போல முறையான வகையில் நாட்குறிப்புகள் வைக்காதததே. ஆனந்தரங்கம் பிள்ளையின் ஒருவரது நாட்குறிப்புகள் அக்காலத்தில் இப்போது எவ்வளவு உபயோகமாக உள்ளன என்பதையும் பார்க்கிறோமே. பிரபஞ்சன் புத்தகங்களில் விஷயங்கள் அதிக துல்யத்துடன் எழுதப்பட்டுள்ளன.

சுஜாதா அவர்களின் "ரத்தம் ஒரே நிறம்", ரா.கி. ரங்கராஜனின் "அடிமையின் காதல்" ஆகிய சற்றே சமீபத்திய சரித்திர காலக் கதைகளிலும் அதிக துல்யத்தைப் பார்க்கலாம். ஏனெனில் அக்கால நிகழ்ச்சிகளுக்கு கணிசமான அளவில் ஆவணங்கள் உண்டு. கிழவன் சேதுபதி இறந்த போது அவனது 48 மனைவியர் உடன்கட்டை ஏறினர்/ஏற்றப்பட்டனர். அது துல்லியமாக விவரிக்கப்பட்டதற்கும் மேலே சொன்ன விஷயம்தான் காரணம்.

இப்போது புலவர் விஷயத்துக்கு வருகிறேன். விழுக்காடு கூற இயலாது, ஆனால் பாதிக்கும் மேலான புலவர்கள் பாடியது பரிசிலுக்காக சம்பந்தப்பட்ட அரசனை இந்திரன், சந்திரன் என்ற ரேஞ்சுக்கு புகழ்ந்ததாகத்தான் படுகிறது. இதற்கு அவர்களை குறை சொல்ல இயலாது. அக்கால பொருளாதார ஏற்பாடுகள் அத்தகையவை. புலமையும் வறுமையும் பிரிக்க முடியாதவை என்ற அளவிலேயே இருந்தன.

தற்கால எழுத்தாளர்களில் பலர் சுஜாதா போல பகுதி நேர எழுத்தாளர்களாக இருந்ததால் பிழைத்தனர் என்று தோன்றுகிறது. நான் முதலில் பகுதி நேர மொழிபெயர்ப்பாளனாக வந்ததைப் போல, பார்க்க: http://dondu.blogspot.com/2007/08/blog-post.html

இப்போது முழுநேர மொழிபெயர்ப்பாளன் என்பது நன்றாக நிலை கொண்ட பிறகு செய்த மாற்றம்.

மதன் அவர்களும் புலவர்கள் அவ்வாறு செய்ததால் சரித்திர சான்றுகளாகக் கொள்ள இயலாது என்ற காண்டக்ஸ்டில்தான் அதை குறிப்பிட்டுள்ளார் என தோன்றுகிறது.

இப்போது பெரியார் அவர்களை இங்கு குறிப்பிடுவது அவசியமே. புலவர்கள் எல்லோரும் பிச்சைக்காரர்களே என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அதை பலமுறை எழுதவும் பேசவும் செய்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களை வெளியில் கொணர்ந்த உவேசா அவர்களையே அவர் பிச்சைக்காரர்கள் லிஸ்டில்தான் சேர்த்தார். கதிர்வேற் பிள்ளை என்னும் புலவர் அவரைப் பார்க்க வந்தபோது அவர் அருந்துவதற்கு பால் தந்து விட்டு, இதையே அவரிடமும் கூற அவர் அங்கு வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொண்டு, வாயில் விரலை விட்டு பாலை வாந்தியெடுத்து விட்டு அகன்றார். அதை பற்றி பெரியார் அவர்கள் கூறும்போது கதிர்வேற்பிள்ளை என்னும் வாயாடிப் புலவர் என்றுதான் குறிப்பிடுகிறார். அப்படியெல்லாம் மோசமாகவா கூறினார் மதன்? இருப்பினும் அதற்கான எதிர்வினைகள் ஏன் மாறுபட வேண்டும். மதன் பார்ப்பனர் என்ற காரணம்தானே (உங்களைச் சொல்லவில்லை ஓகை அவர்களே).

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

லும்பினி அவர்களே,

விக்கிபீடியாவில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால் சரித்திர விஷயங்களில் மிக ஜாக்கிரதையாகவே அவற்றை கையாள வேண்டியிருக்கிறது.

ஹிட்லரை பற்றி பேசவேண்டுமானால், அவன் பல மியூசியங்களை கொள்ளையடித்து ஜெர்மனிக்கு எடுத்து சென்றான். அவன் இங்கே எதற்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

Madan wrote about recent history of Mughals, etc where there is enough doucmentation and continuation of history.

unfortunately for Tamils, after later Cholas (11the cent), there is no such solid dynasty or continious regimes. all the ancient forts, palaces were destroyed in due course of time.
lack of continuity and lack of proper records inhibits research.

there is still dispute over the exact period of Thirukural, Sanga kaalam, Tholkaapiyar's period, etc.

dondu(#11168674346665545885) said...

நல்ல பின்னூட்டத்துக்கு நன்றி அதியமான் அவர்களே. எனது பதிவின் சாரத்தை அது தனக்குள் வைத்திருக்கிறது.

அன்பிடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தமிழின் மீதுள்ள பற்றினால்தானே பலரும் மதனை விமர்சிக்கின்றனர் (மதன் செய்தது சரியா தவறா என்பது வேறு விஷயம்)?. பார்ப்பனர் என்பதால் மட்டுமே விமர்சிக்கபடுகிறார் என்று நீங்களும் பதில் (சாதி ரீதியாக) சொல்வது சரியா டோண்டு சார்?

சிங்கமுத்து

dondu(#11168674346665545885) said...

சிங்கமுத்து அவர்களே,

மதனும் சரி ஞாநியும் சரி, திட்டப்படும்போது பார்ப்பனர் என்ற அம்சமும் சேர்ந்து கொண்டது. அதைத்தான் நானும் எதிர்த்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இப்போது பெரியார் அவர்களை இங்கு குறிப்பிடுவது அவசியமே. புலவர்கள் எல்லோரும் பிச்சைக்காரர்களே என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அதை பலமுறை எழுதவும் பேசவும் செய்தார்.

பழந்தமிழ் இலக்கியங்களை வெளியில் கொணர்ந்த உவேசா அவர்களையே அவர் பிச்சைக்காரர்கள் லிஸ்டில்தான் சேர்த்தார். கதிர்வேற் பிள்ளை என்னும் புலவர் அவரைப் பார்க்க வந்தபோது அவர் அருந்துவதற்கு பால் தந்து விட்டு, இதையே அவரிடமும் கூற அவர் அங்கு வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொண்டு, வாயில் விரலை விட்டு பாலை வாந்தியெடுத்து விட்டு அகன்றார். அதை பற்றி பெரியார் அவர்கள் கூறும்போது கதிர்வேற்பிள்ளை என்னும் வாயாடிப் புலவர் என்றுதான் குறிப்பிடுகிறார். அப்படியெல்லாம் மோசமாகவா கூறினார் மதன்? இருப்பினும் அதற்கான எதிர்வினைகள் ஏன் மாறுபட வேண்டும். மதன் பார்ப்பனர் என்ற காரணம்தானே //

Madan can also use Hon.Periyar's name and say 'Poets are beggars' as said by Periyar. Wonder what the dravidians will do then, they have eat their own crow.

There are lot of beggars in Tamil blogs, Oh wait..

dondu(#11168674346665545885) said...

//Madan can also use Hon.Periyar's name and say 'Poets are beggars' as said by Periyar. Wonder what the dravidians will do then, they have eat their own crow.//
அப்படியெல்லாம் காக்காய் பிரியாணி சாப்பிட்டு விவேக் மாதிரி காக்காய் குரல் பெறமாட்டார்கள்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி, திருவள்ளுவர், தொல்காப்பியர், இளங்கோவடிகள் ஆகியோர் அயோக்கியர்கள், தமிழர்களுக்கு தலைமை தாங்கும் பண்பு கிடையாது என்று கூடத்தான் பெரியார் கூறினார். அதையெல்லாம் யாரேனும் இப்போது எடுத்து கூறினார்கள் என்றால் அவர் எந்த காண்டக்ஸ்டில் கூறினார் என்பதையெல்லாம் அவரது பக்தகோடிகள் பார்ப்பார்கள். பார்க்கவும் செய்தார்கள்.

அதே ஆண் பெண் கற்புநிலை பற்றி இந்த டோண்டு ராகவன் கூறியதை விட பலமடங்கு அதிக கடுமையாகவே பெரியார் கூறியிருக்கிறார். அப்போதும் காண்டக்ஸ்டெல்லாம் பார்த்து பெரியாரை எப்படியாவது காப்பாற்றுவார்கள் இவர்கள்.

மதன் புலவர்களை பற்றி கூறியது, "ஆகவே தமிழ் சரித்திரம் அவ்வளவாக ஆவணப்படுத்தப்படவில்லை" என்பதாலேயே. ஆனால் இங்கு மட்டும் காண்டக்ஸ்ட் எல்லாம் பார்க்க மாட்டார்கள். விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

இந்த பதிவை தாங்கள் படித்து மதன் டவுஸர் எப்படி கிழிந்தது என்று எடுத்தியம்பவேண்டும்...

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் செந்தழல் ரவி. அந்த வரலாறு.காம் சுட்டியை பார்த்து நான் ஏற்கனவே இப்பதிவில் பின்னூட்டமிட்டு விட்டேன். அதன்படி அதை விகடன் ஆசிரியருக்கு அனுப்பினால் மதனை கமிஷன் செய்தாலும் செய்வார். நல்ல புத்தகம் கிடைத்து விட்டு போகிறது. அது நல்லதுதானே. மதனுக்கு அது முதலில் தெரிந்திருக்காது. ஆகவே கூறியிருப்பார் போல.

அது இருக்கட்டும், முதலில் உங்களது அப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

//கழுகிடமே வந்து கழுகை பற்றி திட்டுதல் முறையன்று நன்பரே...:))//
ஆ, அப்போது நீங்கள்தான் இரவுக்கழுகாரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அய்யா, நீங்கள் மதன் என்ன தவறு செய்தார் என்பீர்கள், யாராவது என்ன தவறு என்று நிரூபித்தால் உடனே அவரிடமே சொல்லுங்கள் என்று escape ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் எல்லாருமே இப்படித்தானா அல்லது நீங்கள் மட்டுமா.?.)))

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது