இன்று காலை நண்பர் அருண்குமாரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் ஆர்க்குட் சுட்டி ஒன்றைத் தந்தார். ஞாநி பற்றி தான் ஒரு மன்றப் பதிவுபோட்டதாகக் கூறி, அதை பார்த்து எனது பிளாக்கில் அது பற்றி கருத்து கூறுமாறு கூறியிருந்தார். எனக்கு ஆர்க்குட்டில் கணக்கு இல்லை. ஆகவே அருண்குமாருக்கு ஃபோன் செய்து கட் அண்ட் பேஸ்ட் செய்து தனது அந்த இடுகையை எனக்கு அனுப்புமாறு கேட்டேன். அவர் அதற்கு தான் அப்படி ஒரு மின்னஞ்சலும் அனுப்பவில்லை எனக் கூறி விட்டார்.
பிறகு என்னார் அவர்கள் சேட்டில் வந்தார். அவருக்கும் அதே மின்னஞ்சல் வந்திருந்தது. ஆனால் எனது மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறி நான் அதை அனுப்பினேனா எனக் கேட்டார். மெயிலும் எனது socalled மெயிலை ரிப்ளை செய்வது போல அனுப்பி கேட்டார். அவரிடம் உடனே தொலை பேசினேன். இது ஒரு கடவுச்சொல் திருடும் முயற்சி என்பதை தெளிவுபடுத்தினேன். அவரும் சுதாரித்து கொண்டார். என்றென்றும் அன்புடன் பாலாவுடன் பேசியபோது அவருக்கும் இதை தெரிவித்து அவரை எச்சரிக்கை செய்தேன். ஐந்தே நிமிடத்தில் அவருக்கும் இதே மெயில் வந்தது. அருண்குமாரின் மின்னஞ்சலிலிருந்து.
இப்போது இட்லி வடைக்கும் அது நடந்துள்ளது. அவரது பிளாக்கர் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறுகிறார். அவர் இது சம்பந்தமாக இட்ட பதிவுகள்:
1. "I have one login session and I am using that to post it here, I dont have access to my gmail account. If you receive any mails from my account then it fake. Be cautious.
இனிமேல் அப்டேட் செய்ய முடியாமல் போகலாம்.
அதே போல் என்னிடம் gtalk உள்ள அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.
நன்றி.
இட்லிவடை"
2. "என்னுடைய idlyvadai account பாஸ்வோர்ட் ஹாட் செய்யபட்டது :-(
உஷார் என் பாஸ்வேர்ட் திருட்டு நடந்துவிட்டது., என் பெயரில் மெயில் வந்தால் உஷார்... இந்த சைட்டினுள் நுழையாதீர்கள் Orkut Fake site http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html
வந்தால் உள்ளே போகாதீங்க
Posted by IdlyVadai at 10/26/2007 03:10:00 PM"
3. "பாஸ்வோர்ட் ஹாக் செய்யபட்டது
என்னுடைய idlyvadai account பாஸ்வோர்ட் ஹாட் செய்யபட்டது :-(
உஷார் என் பாஸ்வேர்ட் திருட்டு நடந்து விட்டது, என் பெயரில் மெயில் வந்தால் உஷார்... இந்த சைட்டினுள் நுழையாதீர்கள் Orkut Fake site http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html
வந்தால் உள்ளே போகாதீங்க
Posted by IdlyVadai at 10/26/2007 02:19:00 PM
Labels: அறிவிப்பு
2 Comments:
We The People said...
என்ன கொடும சரவணா இது!!"
October 26, 2007 2:48 PM
Anonymous said...
Fake site for you?, you are either so popular or
notorious (for some) :)
இப்போது வாத்தியார் சுப்பையா அவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி சுட்டிக்கு நன்றி வேறு தெரிவிக்கிறார். போய் பார்க்கப் போவதாக வேறு கூறியுள்ளார். உடனே பதில் போட்டு அவரை எச்சரிக்கை செய்துள்ளேன். மறுபடியும் செய்கிறேன். சுப்பையா அண்ணாச்சி ஜாக்கிரதை.
மற்ற சகபதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து என் பெயரில் யாருக்கேனும் இம்மாதிரி மின்னஞ்சல் வந்தால் நம்பாதீர்கள்.
இன்னொருவர் அனுப்புவது போல மின்னஞ்சல் அனுப்ப பிராக்ஸி தளங்கள் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அல்வாசிடி விஜய் அனுப்புவது போல திருமலை அவர்களுக்கு போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதை அவர் ஒரு பதிவில் கூறியுள்ளார். அப்போது அதை அனுப்பியது போலி டோண்டு மூர்த்தி. இப்போதும் அவனுடைய அல்லது அவனது அள்ளக்கைகளின் கைங்கர்யம்தான் இது என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜாக்கிரதை, ஜாக்கிரதை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இந்த நேரம் பார்த்து தமிழ்மணத் திரட்டியில் தொழில்நுட்பப் பிரச்சினை. திரட்டாமல் எர்ரர் மெசேஜ் வருகிறது. தேன்கூடு ஏற்று கொண்டு விட்டது.
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
17 comments:
this is the mail i received from moorthi..
Please read this (About Gnani) Inbox
Reply
Reply to all Reply to allForward Forward Reply by chat to Narasimhan Print Add Narasimhan to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?
from Narasimhan Raghavan raghtransint@gmail.com hide details 12:29 pm (8 hours ago)
to Arun Kumar sendarun@gmail.com
date Oct 26, 2007 12:29 PM
subject Please read this (About Gnani)
Arun kumar,
I start a topic about Gnani in Orkut community. There alot of our friends
share their opinions without any caste feelings. So please read and write
a post then add their main points to your post.
Please login and read. Orkut also gmail web same as like blogger. We can
login through our gmail account.
http://www.orkut.00bp.com/Community.aspx.cmm=2160605.html
Anbudan,
Dondu
Reply Forward
இந்த பிஷ்ஷிங் மெயில் எனக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு முதல்லயே வந்தது... இப்பவுமா அது சுத்தல்ல இருக்கு...
Exactly the same mail I got from that fellow, but the sender's name was shown as being from you.
Regards,
Dondu N.Raghavan
செகண்டரி இமெயில் என்று ஒன்று இருக்குமே அதை வைத்து கடவுச்சொல்லை திரும்பப்பெற முடியாதா?
தமிழும் கணிமையும், தமிழ் இணையத்தால் தமிழர்களும் எவ்வளவோ முன்னேறி இருக்க வேண்டியது. துரதிர்ஷ்ட வசமாக நாம் எதிலெல்லாமோ நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம், யார் பெரியவங்க, எது சரின்னு சண்டை போட்டுக்கொண்டு. எல்லாம் எங்கப்போய் முடியப்போகிறதோ தெரியலை.
என் டொமைன் குறித்த இந்த பதிவையும் பாருங்க...
http://ppattian.blogspot.com/2007/10/blog-post_26.html
கேனையாய் உள்ளே போயிட்டென் அந்த லின்க்ல். உடனே என்ன செய்யணும்? பாஸ்வேர்ட் மாத்திவிட்டென் இப்போ. எனி உதவி
டோண்டு சார்
இந்த பாஸ்வேர்ட் திருட்டில் லக்கிலுக்கும் கண்டிப்பாக பங்குஇருக்கும். இவர் தான் தொண்டன் என்ற பெயரில் உங்களை தரக்குறைவாக எழுதி வருபவர். மேலும் இலைகாரன் என்ற பெயரிலும் எழுதியவர். இவரின் தகாத செய்லகளால் தம்ழ்நாடுடாக் தளத்தில் இவரை ஏற்கனவே தடை செய்தார்கள். ஏற்கனவே சில தகாத செயல்கள் காரணமாக இவரை திராவிட தமிழர்கள் தள்த்தில் நீக்கினார்கள். இவர் + மூர்த்தியின் கூட்டணியால் நான் பல முறை பாதிக்கபட்டு இருக்கிறேன். இவர் மீது புகார் கொடுக்க பல வலுவான ஆதாரங்கள் வைத்து இருக்கிறேன். இவரின் குடும்ப நிலையை நினைத்து இவர் மேல் எந்த வித நடவடிககையும் எடுக்க வேண்டாம் என்று தள்ளி போட்டு கொண்டு வருகிறேன்.
இவரை பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும்
//கேனையாய் உள்ளே போயிட்டென் அந்த லின்க்ல். உடனே என்ன செய்யணும்? பாஸ்வேர்ட் மாத்திவிட்டென் இப்போ. எனி உதவி//
பாஸ்வேர்ட் மாத்த முடிந்ததல்லவா. அப்ப பிரச்சினை மேலே இருக்கக் கூடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தமிழும் கணிமையும், தமிழ் இணையத்தால் தமிழர்களும் எவ்வளவோ முன்னேறி இருக்க வேண்டியது. துரதிர்ஷ்ட வசமாக நாம் எதிலெல்லாமோ நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்//
என்னங்க பன்னுறது. சகிச்சிகிட்டு தான் இருக்கனும். "Technology has been Improved a lot, so as Fishing..."
எனக்கு நேற்றே உங்களிடம் (?!) இருந்து மேற்கண்ட மின்னஞ்சல் வந்தது... ஞாநி லெட்டர் மாதிரி ஒரு சப்பை மேட்டருக்கு வலைப்பதிவுல/திராவிட எளுத்தாருங்க சர்க்கிள்ல ஒரு அஜெண்டா இருக்கு.. பொழுது போகாம இல்ல காக்கா பிடிக்க புடிச்சி தொங்கிகிட்டு இருக்காங்க... ஏற்கனவே பத்தாத நேரத்துல இதுக்கு போயி ஆர்குட் விவாதம் எல்லாம் தேவையா அப்படீன்னு அதுக்கு போகல..
(ஒரு சுயகுறிப்பு : பொதுவாவே என்னோட வலைப்பதிவு அஞ்சல் முகவரிக்கு பின்னூட்டம் தவிர்த்த ஏனைய மெயில்கள்னா சும்மா நோட்டம் விடுவதோடு சரி.. அட்டாச்மெண்ட் இருந்தா திறப்பதே இல்லை)
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
I dont know what happened in Idlyvadai's case but it does not require your password to be hacked to send email from another name. It is very easy.
We can also GUESS whether it is from the real person. you can look at the email headers and find the IP it came from. From that you can find atleast the city or place where the email originated even if we cannot trace the real person atleast we can make an educated guess .
//it does not require your password to be hacked to send email from another name. It is very easy.//
உண்மைதான். அதைத்தான் நானும் இப்பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். அம்மாதிரி ஏற்கனவே போலி டோண்டு மூர்த்தி ஹல்வாசிடி விஜய் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் செய்ததற்கான சுட்டியும் இப்பதிவிலேயே தரப்பட்டுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
How Can You Be Sure That Moorthy Is The Sender Who Sent All These Mails? Do You Have Any Proof That Will Stand For Your Arguement?
//How Can You Be Sure That Moorthy Is The Sender Who Sent All These Mails?//
Past experience. And more which will be revealed to CyberPolice at the right time.
Regards,
Dondu N.Raghavan
சீனு,
ஃபிஷ்ஷிங் செய்யப்பட்ட பதிவுகளையோ, அதைப் பயன்படுத்தியவர்களையோ சொல்லவில்லை. ஏதோ ஒரு விதத்தில் சிலருக்கு சிலரின் மேல் பகை வளரும் அளவுக்கு நடந்து கொள்கிறோமே/கொண்டிருக்கிறோமே, அதைச் சொல்கிறேன். சக மனிதனின் மேல் vengeance வரும் அளவுக்கு இன்னொரு சக மனிதன் நடந்து கொண்டிருக்கிறானே... அறியாமையின் காரணமாக நடந்த தவறாக இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும் (phishing அல்ல, phishingஐத் தூண்டுமளவுக்கு செய்யப்பட்ட செயல்கள்).
Post a Comment