தலைப்பை அப்புறம் நியாயப்படுத்துகிறேன்.
பஞ்சதந்திரம் படத்தில் ஜயராமின் பையனுக்கு இதயத்தில் ஓட்டை. பையனோ நல்ல தீனிப்பிரியன். ரகசியமாக இட்டலிகளாக உள்ளே தள்ளுவான். பிறகு இவன் நிரம்ப சாப்பிட்டதால் அந்த ஓட்டை தானே அடைந்து விட்டதாக பார்வையாளர்கள் காதில் பத்து முழம் பூ சுற்றுவார்கள்.
இன்னொரு படத்தில் - பெயர் மறந்து விட்டது - ராமராஜன், வினுச்சக்கரவர்த்தி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்தது. சர்க்கரை வியாதியால் இறந்து கொண்டிருக்கும் ஒரு பணக்காரரின் 20 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன ஊமைப் பேரனாக கவுண்டமணி செந்திலின் தூண்டுதலால் ஆக்ட் கொடுப்பார். கிழவருக்கு நிறைய மிட்டாய் கொடுப்பார் செந்தில், அப்படியாவது சீக்கிரம் கிழவர் உயிர் போகட்டும் என்று. ஆனால் அந்தோ அடுத்த நாளைக்கு வந்து அவரைப் பார்த்த மருத்துவர் அவருக்கு விஷமெனக் கருதப்பட்ட சர்க்கரை மிட்டாய் அவர் உடலில் ஏற்கனவே இருந்த சர்க்கரை விஷத்தை முறியடித்தது என்று கூறி பார்வையாளர்கள் காதில் இன்னும் சில முழங்கள் பூ சுற்றுவார். ஆகவே கிழவர் பூரண குணம் அடைய என்று கதை போகும். இங்கு நான் குறிப்பிட நினைப்பது கிழவர் குணமடைந்ததே. கவுண்டமணி அப்புறம் உதை வாங்குவஹ்டெல்லாம் இங்கே தேவையில்லாத விஷயம்.
இப்போது எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன். எனக்கு 26 வயதில் கிட்டப்பார்வைக்கான கண்ணாடி போட வேண்டியிருந்தது. மைனஸ் 1 என்று கூறப்பட்டது. கண்ணாடியுடன் காலம் கழித்தேன். பிறகு 42 வயதில் ஏதாவது படிக்க வேண்டுமானால் கண்ணாடியை நீக்கி படிக்க வேண்டியிருந்தது. என்னவென்று கேட்டால் வெள்ளெழுத்து என்று கூறினார்கள். அதற்கும் கண்ணாடிக்கு பரிசோதனை செய்து கொண்டு பைஃபோகல் கண்ணாடி போட்டேன். ப்ளஸ் ஒன்று. ஆனால் படிக்கும் போது அது இல்லாமலும் படிக்க முடிந்தது. இப்போது அந்த கண்ணாடி கூட தொலைந்து விட்டது. பிறகு வெறுமனே கிட்டப்பார்வைக்கு மட்டும் கண்ணாடி போட்டேன். இப்போது அதுவும் இல்லை.
இது பற்றி எனது நண்பரிடம் கேட்டேன். அவர் கண்மருத்துவர். அவர் ஒன்று கூறினார். அதாவது எனது கிட்டப்பார்வை கோளாறும் தூரப்பார்வை கோளாறும் ஒன்றையொன்று கேன்சல் செய்து விட்டன என்று. எப்பவாவது அபூர்வமாக இம்மாதிரி நடப்பது உண்டு என்றும் கூறினார் அவர். யாராவது இதை கன்ஃபர்ம் செய்ய இயலுமா?
அல்லது - 1 + 1 = 0 என்பது இங்கும் பொருந்துமா?
என்ன தலைப்பை நியாயப்படுத்தி விட்டேனா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
4 hours ago
33 comments:
//ழாராவது இதை //
ஃபுல் மப்பா இத எழுதும்போது? :)
\\- 1 + 1 = 0 என்பது இங்கும் பொருந்துமா?
என்ன தலைப்பை நியாயப்படுத்தி விட்டேனா?//
வேண்டாம், விட்டுருங்க, அளுதுருவேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஃபுல் மப்பா இத எழுதும்போது? :)//
நன்றி, பிழை திருத்தி விட்டேன்.
பிரச்சினை இதுதான். என்னுடைய கணினியின் கீபோர்ட் ஜெர்மனுக்கானது. அதாவது querty - க்கு பதில் quertz. ஆக ய அடிக்க நினைத்து சில சமயம் ழ ஆகி விடுகிறது. இதில் இன்னொரு கஷ்டம் என்னவென்றால் Alt+2 போட்டால் அப்போது மட்டும் அது querty ஆகிறது. ய மற்றும் ழ குழப்பம் அதிகரிக்கிறது.
பரவாயில்லை இதுவும் நல்லதுக்குத்தான். ஜாக்கிரதையாக இருக்க உதவி செய்கிறது. :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வேண்டாம், விட்டுருங்க, அளுதுருவேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அடேடே இதுக்கெல்லாம் ஏன் அழறீங்க? கண்ணைத் துடைச்சிட்டு என்னோட இந்த நீதிக்கதையை படியுங்க. http://dondu.blogspot.com/2006/08/blog-post_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் உங்களுக்கு இப்ப இருக்கிற வியாதிக்கு?? பெயர் ப்ரெஸ்பயோபியா.
உங்களுக்கு நிகழ்ந்தது பற்றி Presbyopia and the 'payoff' for the nearsighted. என்று விக்கிபிடியாவில் எழுதபட்டுள்ளது.
http://en.wikipedia.org/wiki/Presbyopia
40 வயதுக்கு மேல் வரும் தூர பார்வை பற்றி:
http://www.abc.net.au/rn/talks/8.30/helthrpt/stories/s398097.htm
//ப்ரெஸ்பயோபியா//
தகவலுக்கு நன்றி. எது எப்படியோ இப்போது நான் கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை அடைந்தேன். மேலும் ஓடும் பஸ்ஸில், புகைவண்டியில் மணிக்கணக்காக படிக்க முடிகிறது.
கண்மருத்துவரான எனது நண்பர் இன்னொன்றும் கூறினார். அதாவது ஒருவன் தன் வாழ்நாளில் கண்ணாடி போடாமல் தப்பிப்பது அபூர்வம் என்று. எப்படியென்றால், ஒன்று சிறுவயதில் கிட்டப்பார்வை இல்லையெனில் 40 வயதுக்கு மேல் தூரப்பார்வை.
ஆனால் நீங்கள் சொன்ன ப்ரெஸ்பயோபியா விஷயத்தில் இம்மாதிரி காபென்ஸேட் ஆனதாகக் கூறப்படவில்லை போலிருக்கிறதே. எது எப்படியானாலும் ஒன்று நிஜம், படிப்பதற்கு வெளிச்சம் தேவை. ஆகவேதான் பஸ்களில் பயணிக்கும்போது விளக்கின் நேர்கீழே இருக்கும் இருக்கைகளில் அமர முயற்சிப்பேன். இல்லாவிட்டால் அதனருகில் நிற்கவாவது முயற்சிப்பேன். உண்மை கூற வேண்டுமெனில் ஒரு கம்பத்தை சுற்றி கையால் பிடித்து கொண்டு நின்றவாறே படிப்பது மிக சௌகரியமாகவே உள்ளது.
இரவு நேரங்களில் ஒருவன் மேல்பட்டையை பிடித்து தொங்கி கொண்டே, ஒரு புத்தகத்தை படித்து கொண்டு போவதை யாரேனும் பார்த்தீர்களானால், அது முக்கால்வாசி டோண்டு ராகவனாகத்தான் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் நீங்கள் சொன்ன ப்ரெஸ்பயோபியா விஷயத்தில் இம்மாதிரி காபென்ஸேட் ஆனதாகக் கூறப்படவில்லை போலிருக்கிறதே//
டோண்டு சார்,
இந்த பக்கத்தில் தெளிவாக அதை பற்றி கூறப்பட்டுள்ளது.
Presbyopia and the 'payoff' for the nearsighted
Many people with myopia are able to read comfortably without eyeglasses even in advanced age. Myopes considering refractive surgery are advised that this may be a disadvantage after the age of 40 when the eyes become presbyopic and lose their ability to accommodate or change focus.
http://en.wikipedia.org/wiki/Myopia
//இரவு நேரங்களில் ஒருவன் மேல்பட்டையை பிடித்து தொங்கி கொண்டே, ஒரு புத்தகத்தை படித்து கொண்டு போவதை யாரேனும் பார்த்தீர்களானால், அது முக்கால்வாசி டோண்டு ராகவனாகத்தான் இருக்கும்.//
உங்களை பார்த்தாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை கற்க வேண்டும்
பாதி கண் தெரியாதபோதே இவ்வளவு தெனாவெட்டு. தமிழ் மோசம், தேவ பாசைதான் சூப்பர் என்று. பகுத்தறிவு, திரவிடத்தை பற்றி கிண்டல் வேறு. முழு கண்ணும் தெரிந்து இருந்தால்?
லக்கிலுக்
நன்றி DFC அவர்களே,
ஆக கிட்டப்பார்வைக்கு 40 வயதுக்கு மேல் மட்டுமல்ல, எப்போதுமே சர்ஜரி செய்து கொள்ள கூடாது என்று இல்லைதானே?
அதாவது இளம் வயதில் செய்து கொண்டால் ப்ரெஸ்பயோபியா வரும் அபாயம் இல்லை அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//திரவிடத்தை பற்றி கிண்டல் வேறு. முழு கண்ணும் தெரிந்து இருந்தால்?//
திட்டுவது பற்றி ஆட்சேபணை இல்லை ஆனால் நண்பர் பதிவர் லக்கிலுக் பேரில் ஏன் வருகிறீர்கள்? நீங்கள் அனானி என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
டோண்டு ராகவன்
அய்யா அவர்களே
என்பெயர் லக்கிலூக். அதனால் நான் அதனை எழுதுகிறேன். நான் பதிவுலகத்துக்கு புதுசு. உங்களுக்கு ஒரு நன்பர் இதே பெயரில் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும். அவரது வலைத்தளம் முகவரி தரவியலுமா?
லக்கிலூக்
//ஃபுல் மப்பா இத எழுதும்போது? :)//
யோவ் சர்வே, நரேந்திர மோடி வந்துருக்காரில்ல, ஐயரு அப்படித்தான் பேசுவாஹ.
//இரவு நேரங்களில் ஒருவன் மேல்பட்டையை பிடித்து தொங்கி கொண்டே, ஒரு புத்தகத்தை படித்து கொண்டு போவதை யாரேனும் பார்த்தீர்களானால், அது முக்கால்வாசி டோண்டு ராகவனாகத்தான் இருக்கும்.//
அப்போ, 'கால்வாசி டோண்டு ராகவன்' என்ன பண்ணிக்கிட்டிருப்பார்?
//ஆக கிட்டப்பார்வைக்கு 40 வயதுக்கு மேல் மட்டுமல்ல, எப்போதுமே சர்ஜரி செய்து கொள்ள கூடாது என்று இல்லைதானே?//
அதாவது இளம் வயதில் செய்து கொண்டால் ப்ரெஸ்பயோபியா வரும் அபாயம் இல்லை அல்லவா?//
இல்லை சார்,
உதாரணத்துக்கு நீங்கள் 26 வயதில் சர்ஜெரி செய்திருந்தால் கிட்டபார்வை குணமாயிருக்கும். ஆனால் 40 வயதிற்கு மேல் ப்ரெஸ்பயோபியா வருமாயின் நீங்கள் மீண்டும் கண்ணாடி போட வேண்டியிருக்கும்.
இதுதான் எனக்கு புரிந்தது.
//என்பெயர் லக்கிலூக். அதனால் நான் அதனை எழுதுகிறேன். நான் பதிவுலகத்துக்கு புதுசு. உங்களுக்கு ஒரு நன்பர் இதே பெயரில் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும்//
அடப்பாவி எப்படிடா இதெல்லாம். உன்னால ரெண்டு ஊருக்கே சண்டை வந்திருக்கும், இனிமேலாவது அடக்கிவாசி.
சரி உனக்கு (அனானி லக்கிலூக்) ஒரு உள்குத்து கேள்வி திராவிடம் பேசும் நீ ஏன் தமிழ் பெயர் பயன்படுத்துவதில்லை ?
பதிவுலகத்துக்கு புதுசு
பதிவுக்கு புதுசு, லக்கிலுக் தெரியவில்லை.. ஆனால் டோன்டு எப்படி எழுதிவருகிறார் என்பது மட்டும் தெளிவா தெரியுது.. என்னங்க இது.. எங்கயோ இடிக்குதே...
அதே போல், உங்க பெயர் லக்கிலுக்கா அல்லது லக்கிலூக்கா??
டோண்டு சார், , நீங்கள் சொல்வதை பார்த்தால், அந்த கவுண்டமனி . செந்தில் விசயமும், பஞ்சதந்திர மேட்டரும் காதில் பூ சுற்றுவது போல் தெரியவில்லையே.. :) அதுவும் நடக்கலாம் போல தெரிகிறதே
அன்பு நண்பருக்கு,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! துக்ளக் ஆண்டு விழா பற்றிய தங்களது விரிவான கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
ஸ்ரீராம்
Dear sir
please check my post and give your post in tamil
http://philanders.blogspot.com/2008/01/airtels-sad-story.html
டோண்டு சார், நீங்கள் துக்ளக் போல ஆண்டு விழா நடக்கலாம்தானே?
O.T.Mangalam P.
It is 12:00 Midnight IST and still you are sitting before system to check for comments on your blog?! sariyana loosu sir neengaL!
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
துக்ளக் ஆண்டுவிழா பதிவு எங்கே? நீங்க பாட்டுக்கு தூங்க போய்டீங்க...இங்க இத்தனைப் பேர் காத்துக் கொண்டிருகிறோம் அல்லவா?!
ஸாரி, டோண்டு ஸார். ஒரு உரிமையில் கேட்டுவிட்டோம்! காலையில் முதல் காரியமாக பதிவை இடுங்கள். வாசகர்கள் என்ன கேட்டார்கள்? சோ என்ன சொன்னார், மோடி என்ன சொன்னார்?
சீக்கிரம்..சீக்கிரம்..! :-)
பிகு: ஏகப்பட்ட கும்மிகள் வேறு பதிவைப் படிக்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். என்னதான் அவர்கள் சோவைத் திட்டினாலும், அவர் என்ன பேசினார் (மற்றும், டோண்டு என்ன சொல்கிறார்)என்று தெரிந்து கொள்ளாவிட்டால் தூக்கம் வந்துவிடுமா என்ன?
நேற்று இரவு வீட்டுக்கு வரும்போதே மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. பாதி பதிவு எழுதியபோதே மணி 12க்கு மேல். ஆகவே அடுத்த நாளைக்கு ஒத்தி போட வேண்டியிருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதாவது எனது கிட்டப்பார்வை கோளாறும் தூரப்பார்வை கோளாறும் ஒன்றையொன்று கேன்சல் செய்து விட்டன என்று.//
கிட்டப்பார்வையும் தூரப்பார்வையும் ஒன்றை ஒன்று கேன்சல் செய்ய முடியாது.....
ஒரு உதாரணம் தருகிறேன்....
Take a gate. Assume that it closes at 0 degree and opens fully at 90 degree.... If it is not closing fully, (there is some problem at the end where it has to close), it is one problem.. that is it can come only upto 10 degree and not 0 deg
The same gate may also not OPEN FULLY. there is some problem at that end... that is it can open upto 80 deg and not 90 deg
Now just because the gate cannot close fully, it does not mean that its defect at the opening end has been resolved....
ஆனால் உங்கள் தூரப்பார்வை சரியாக வாய்ப்புள்ளது.... அப்படி வந்தால் அது மிகவும் ஆபத்தானது... உங்களுக்கு nuclear cataract ஆரம்பித்து விட்டது என்று பொருள்....
----
Myopia (கிட்டப்பார்வை) and Hypermetropia (தூரப்பார்வை) can be understood by an example
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்...... உங்கள் உடல் நலன் சார்ந்த சந்தேகங்கள் குறித்து வீக்கிப்பிடியா போன்ற தளங்களை பார்ப்பதை தவிர்க்கவும்
IF there are doubts, I will explain.
The "second sight" refers to ability of a person to see better, usually upclose, as they age. The reason for this "improved" vision is that the lens power changes due to increasing cataract. So actually second sight is due to the cataract having advanced.
http://www.agingeye.net/visionbasics/visionmyths.php
மருத்துவத்தில் சில அறிகுறிகள் ஆபத்தை குறிப்பவை
1. கண்ணாடி அணிந்தவர்க்கு கண்ணாடி அணியாமலேயே பார்வை நன்றாக தெரிவது
2. LVF உள்ள நோயாளிக்கு இருமல் குறைவது
3. ஒரு புண் வலிக்காமல் போவது
4. ஹெர்னியாவில் வலி குறைவது
Dear Doctor Bruno,
Thanks for the input. I looked up nuclear cataract. I read this.
"When a nuclear cataract first develops it can bring about a temporary improvement in your near vision, called "second sight." Unfortunately, the improved vision is short-lived and will disappear as the cataract worsens".
See: http://www.allaboutvision.com/conditions/cataracts.htm
What will be termed as "short lived"? Let me explain. I used the bifocals only for a very short duration and discontinued it in 1989 itself. Then I was using only short sight glasses since then but that too has been discontinued soon after my coming to Chennai way back in 2001.
My question is simple. Can 19 years of this reading without glasses be considered as short-lived improvement?
While you are about it, kindly look at my முரட்டு வைத்தியம் - 5 post at http://dondu.blogspot.com/2008/01/5.html and give your opinion as a doctor.
Regards,
Dondu N.Raghavan
Myopia, Hypermetropia, Presbyopia, Astigmatism are different conditions.... You can have any combination of this...
There is another condition known as Accomodative Inertia (http://www.mcqsonline.net/2008/01/aipg-2005-ophthalmology-accomodative.html)
முதலில் ஒரு நல்ல கண் மருத்துவரிடம் (eg. Sankarnethralaya ) பரிசோதனை செய்வது நல்லது
டாக்டர் ப்ரூனோ அவர்களே,
தயவு செய்து எனது இப்பதிவையும் பார்த்து உங்கல் கருத்தை தெரிவிக்கவும். http://dondu.blogspot.com/2006/02/42.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Sir,
I was just telling the possibilities. (I did not diagnose nuclear cataract for you sitting 600 kilometres away)
May be you are an exception. But it is always better to be on the safer side.
I am sorry if I had frightened you too much :) :)
சில சமயம் பல விசயங்களை நன்றாகவே அலசுகிறீர்கள்!அப்புறம் ஏன் வீண் சர்ச்சைக்குள் நுழைகிறீர்கள் என்று எப்போதுமே எனக்குத் தோன்றும்.
பயப்பட்டு என்ன ஆகப்போகிறது டாக்டர் ப்ரூனோ அவர்களே? நீங்கள் மருத்துவர் என்ற ஹோதாவில் நன்றாகவே கருத்து கூறியுள்ளீர்கள். அதற்கு முதற்கண் என் நன்றி. சங்கர நேத்ராலயாவில் போய் பார்த்தால் தெரிந்து விடுகிறது. முன்ஜாக்கிரதையாக இருப்பதும் நல்லதுதானே.
எனது ஹெர்னியா பற்றிய பதிவையும் மற்ற முரட்டு வைத்தியங்கள் பற்றிய பதிவுகளையும் பார்த்து கருத்து கூறுமாறு கேட்டு கொள்கிறேன். சோ அவர்கள் மீட்டிங்கில் நம்ம மருத்துவ பதிவர் வீ.எஸ்.கே. சாரிடமும் இதே கோரிக்கையைத்தான் வைத்தேன். அவரும் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1+1=100 [இங்கே 1-முகேஷ் அம்பானி 1-அனில் அம்பானி] என்று எக்கனாமிக் டைம்ஸில் பார்த்ததும் இந்தப்பதிவு ஞாபகம்தான் வந்தது.
10.02.2008 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து தருகிறேன்.
(பக்கம் 3) ப்ரிஸ்க்ரிப்ஷன்:
கேள்வி: எனக்கு 45 வயது. டீன்ஏஜ் பருவத்திலிருந்து மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கிறேன். இப்போதெல்லாம் கண்ணாடி அணிந்து பேப்பர் படிப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் படிப்பது கொஞ்சம் வசதியாக இருக்கிறது. இது எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் இப்படி? - மதி, சென்னை
பதில் (கண்மருத்துவர் டாக்டர் அருள்மொழிவர்மன்):
இதன் பின்னணியைத் தெரிந்து கொண்டால் ஆச்சர்யம் விலகிவிடும். பல வருடங்களாக நீங்கள் அணிந்து கொண்டிருப்பது கிட்டப் பார்வைக்கான கண்ணாடியாக இருக்கும். வயது நாற்பதைத் தாண்டும்போது வெள்ளெழுத்து ஏற்படுவது சகஜம். அது வரை மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் தூரப்பார்வை என்னும் குறைபாடு கண்களில் உண்டாகும். இதற்கு ப்ளஸ் பவர் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிய வேண்டியிருக்கும்.
ஒரு வேளை நீங்கள் ஏற்கனவே அணிந்துள்ள மூக்குக் கண்ணாடி மைனஸ் 1.5 பவர் கொண்டது என்று வைத்து கொள்வோம். சமீபத்தில் ஏற்பட்டுள்ள தூரப் பார்வைக் குறைபாட்டுக்காக ப்ளஸ் 1.5 பவர் கொண்ட கண்ணாடியையும் அணிய வேண்டும். இந்த இரண்டு பவர்களும் ஒன்றையொன்று சரி செய்து கொள்வதால், உங்களுக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் படிப்பது சௌகரியமாக இருக்கலாம்.
எனினும் பிற செயல்களுக்காக நீங்கள் ப்ளஸ், மைனஸ் இரண்டு பவர்களும் கொண்ட கண்ணாடியை அணிய வேண்டியிருக்கும். தவிர, காலப்போக்கில் இவற்றைல் எந்த லென்ஸின் பவர் மாறினாலும், கண்ணாடி இல்லாமல் இயல்பான தூரத்தில் வைத்து கொண்டு படிக்கக் கூடிய தற்போதைய சௌகரியம் மாறிவிடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment