நான் இந்தப்பதிவு போட்ட பின்னர் பலர் பேட்டியை வலையில் ஏற்றுமாறு கேட்டு கொண்டனர். நண்பர் லக்கிலுக் தயவால் முழு பேட்டியின் சிடி கிடைத்தது. இப்போதுதான் எனது தேடல் ஆரம்பமாயிற்று. முதலில் சிடியை கணினியில் பொருத்தி போடுவதில் கூட தகராறுதான். ஏனெனில் நான் சிடி விஷயங்களில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. லக்கிலுக்தான் எந்த கோப்பை திறந்து எந்த ஒளிபரப்பு சாதனம் உபயோகிக்க வேண்டும் என்பதையும் கூறிவிட்டு சென்றார். அவருக்கு எனது முதற்கண் நன்றி.
ஆனால் முழு பேட்டியையும் அப்படியே வலையில் ஏற்றுவது என்பது ஒரு கடினமான பிரச்சினை. 33 நிமிடத்தற்கும் மேலாக டேப் ஓடுவதால் ஒரேயடியாக ஏற்ற இயலாது. மேலும் .dat-லிருந்து Mpeg ஃபார்மேட்டிற்கு வேறு மாற்ற வேண்டியிருந்தது. டேப்பை வேறு ஒவ்வொரு பாகமும் சுமார் 9 நிமிடங்களுக்கு மிகாமல் நான்கு பாகமாக மாற்ற வேண்டியிருந்தது. நிறைய பேரை கேட்டு பார்த்தேன். நான் கேட்டவர்களில் யாருக்கும் இதில் அனுபவம் இல்லை. ஆகவே கூகளாண்டவரே துணை என தஞ்சமடைந்தேன்.
dat-லிருந்து எம்பெக் வடிவுக்கு மாற்ற நான் கண்டறிந்த நிரல்தான் எக்ஸ் வீடியோ கன்வர்டர் (X video converter). அதை தரவிறக்கி கணினியில் நிறுவ முடிந்தது. அதை வைத்து முதலில் கோப்பின் வடிவமைப்பை மாற்றினேன். பிறகு எழுந்த வேலைதான் வீடியோவை பிரிப்பது. இதற்காக கூகளில் தேடி கண்டு பிடித்தது Videosplitter. அதை நிறுவ முயலும்போது வைரஸ் இருப்பதை ஏவிஜி வைரஸ் பாதுகாப்பு காட்டி கொடுத்தது. சரியென்று அந்த நிரலை குப்பைக் கூடையில் போட்டேன். பிறகு என் கணினி குரு முகுந்தன் தந்த ஆலோசனையின்படி Videocutter என்ற நிரலை தரவிறக்கி நிறுவினேன். அதை வைத்துத்தான் வீடியோவை நான்காகப் பிரித்தேன். இப்போது அவற்றை பார்க்க இங்கே சுட்டவும்.
இன்று (30.01.2008) காலை முதல் இதே வேலையாகத்தான் இருக்க வேண்டியிருந்தது. இவ்வரிகளை எழுதும் இக்கணம் கூட வேலை இன்னும் முடியவடையவில்லை. இப்போதைக்கு மூன்று பாகங்கள் ஏற்றப்பட்டு விட்டன. நான்காவது பாகம் 48% அளவில் ஏறி விட்டது. இன்னும் 52% ஏறவேண்டியிருக்கிறது. (மாலை 04.51 மணி நிலவரம்).
இந்த வீடியோக்களை பார்க்கும்போது முதலில் விட்டு விட்டு வரும். கணினிக்கு கோப்பு இறங்கி அது பிராட்காஸ்ட் செய்யப்படுகிறது. இது ஒரே நேரத்தில் அரக்க பரக்க நடப்பதால் இந்த சிக்கல். ஆகவே ஒன்று செய்யுங்கள். எனது சுட்டியை ஒரு தனி ஜன்னலில் திறக்குமாறு செய்யவும் (right click + open in new window or shift+left click simultaneously). ப்ளே போட்டு ஒரு வினாடி கழித்து pause பட்டனை க்ளிக்கவும். பிறகு சற்று நேரத்துக்கு ஜன்னலை மினிமைஸ் செய்து விட்டு வேறு பக்கங்களைப் பார்க்கவும். சில நிமிடங்கள் கழித்து இந்த ஜன்னலுக்கு திரும்ப வந்தால். கணிசமான அளவு டௌன்லோட் ஆகியிருக்கும். அப்போது ப்ளே பட்டனை அழுத்தினால் விடாது பார்க்கலாம்/கேட்கலாம். அதே போல நான்கு பாகங்களுக்கும் செய்யவும்.
இதற்காக நான் செய்த முயற்சிகள் பல விஷயங்களை எனக்கு கற்று தந்தன. ஜாண் ஏறினால் முழம் சறுக்கியது. வீடியோ ஸ்ப்ளிட்டரை தரவிறக்கி விட்டு பிறகு குப்பைக் கூடையில் போட வேண்டியதாயிற்று. பல MB-க்கள் அளவில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும் எனது முயற்சிகளை விடவில்லை. இவ்வாறு உழைப்பது மனதுக்கு உற்சாகத்தையே தருகிறது.
வாழ்க்கை அற்புதமயமானது.
நான்கு பகுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாய் கீழே.
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
16 hours ago
55 comments:
மிக்க நன்றி!
பார்த்துவிட்டு பின்னூட்டம் மீண்டும்
வால்பையன்
//இருப்பினும் எனது முயற்சிகளை விடவில்லை. இவ்வாறு உழைப்பது மனதுக்கு உற்சாகத்தையே தருகிறது.
வாழ்க்கை அற்புதமயமானது.//
அது, அது, அதுதான் டோண்டு! பதிவுலக இளைஞர்களே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? துக்ளக் ஆண்டுவிழா விடியோவே இன்னும் அப்லோட் ஆகவில்லை! இந்த வேகம் வியக்க வைக்கிறது.
சொல்வதும் அதிகம், செய்வதும் அதிகம். செயல்புயல் டோண்டு வாழ்க! :-)))))
நான்காவது அப்லோடிங் இப்போதுதான் முடிந்தது. சிறிது நேரத்தில் வந்து விடும் என நம்பப்படுகிறது.
//துக்ளக் ஆண்டுவிழா விடியோவே இன்னும் அப்லோட் ஆகவில்லை!//
இது த்ரீ மச். துக்ளக் ஆண்டுவிழா வீடியோ எப்போதோ வந்து விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு ராகவன் சார், அப்படியே , நீங்கள் உபயோகித்த மென்பொருள், நிரலியின் விவரம் கொடுத்து ஒரு பதிவு போட்டால், உங்களுக்கு ஒரு பதிவும் ஆச்சு, மற்றவர்களுக்கு பயன்பட்டார் போல் ஆச்சு..
உங்களின் வீடியோ பார்த்துவிட்டு, அது பற்றி கருத்து தனியாக போடுகிறேன்
முரளி
//இது த்ரீ மச். துக்ளக் ஆண்டுவிழா வீடியோ எப்போதோ வந்து விட்டது//
இப்போது கூடப் பார்த்தேன். துக்ளக் வலைத்தளத்தில் விடியோ (38வது ஆண்டு விழா) இன்னும் அப்லோட் ஆகவில்லை. வேறு தளத்தில் இருந்தால் சுட்டி தரவும். இன்றைக்கே பார்க்க வேண்டும்!
துக்ளக் ஆண்டுவிழா வீடியோ துக்ளக் தளத்தில் வந்து விட்டதாகக் கூறினார்களே. அது கட்டணத் தளம், ஆகவே அதை பார்க்க நான் ஆவல் காட்டவில்லை.
அப்ப அது இன்னும் வரவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆர்வமாக இருக்கின்றேன். பொறுமையாக போதிய அவகாசம் எடுத்து வெளியிடுங்கள்.
வாழ்த்துகள்
புள்ளிராஜா
//துக்ளக் ஆண்டுவிழா வீடியோ துக்ளக் தளத்தில் வந்து விட்டதாகக் கூறினார்களே. அது கட்டணத் தளம், ஆகவே அதை பார்க்க நான் ஆவல் காட்டவில்லை.
அப்ப அது இன்னும் வரவில்லையா?//
இன்னும் இல்லை. (35, 36, 37 வது ஆண்டு வீடியோக்கள் துக்ளக் கட்டணத் தளத்தில் இருக்கின்றன). அதெல்லாம் இருக்க்கட்டும், இன்றைக்கு ஜெயா டிவி டோண்டு ஸாரின் அப்லோட் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை!
நீங்கள் செய்திருக்க வேண்டியதெல்லாம்
virutalDubஐ தரவிரக்கி சுலபமாக செய்திருக்கலாம்.
எப்படி? என்று பதிவு போட்டிருந்தால் சொல்லியிருப்பேன்.
//35, 36, 37 வது ஆண்டு வீடியோக்கள் துக்ளக் கட்டணத் தளத்தில் இருக்கின்றன).//
மீண்டும் சரியாகப் பாருங்கள். 38 என்று நான் அழைப்பதை 37 என்று அவர்கள் குறிக்கலாம் அல்லவா? ஒரு முறை திறந்துதான் பாருங்களேன். ஓப்பனிங்கில் மோடி வந்தால் நல்லது. அத்வானி வந்தால் அது போன ஆண்டினதுதான். ரொம்ப சிம்பிள். :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மீண்டும் சரியாகப் பாருங்கள். 38 என்று நான் அழைப்பதை 37 என்று அவர்கள் குறிக்கலாம் அல்லவா? ஒரு முறை திறந்துதான் பாருங்களேன். ஓப்பனிங்கில் மோடி வந்தால் நல்லது. அத்வானி வந்தால் அது போன ஆண்டினதுதான்.//
அந்த வீடியோக்களை அடிக்கடி பார்ப்பதனால் இன்னும் 38வது ஆண்டு விழா வலையேரவில்லை என்று கண்டிப்பாகத் தெரியும்.
அது நிற்க. அத்வானி வந்தால் அது போன ஆண்டினதுதான். ஆனால் அத்வானி பிரதமராக வந்தால் அது அடுத்த ஆண்டின் வீடியோவாக இருக்கும் :-)))))
டோண்டு,
ஒருநாளைக்கு 16 மணி நேரம் பணியா?என்ன போலிப் பின்னூட்டமா?முரளி மனோஹர் ஜோஷி என்ன ஆனார்?
பேட்டியில் வெள்ளிடை மலை, சமீபத்தில் 1942 இதெல்லாம் கானோமே?
மூனு பாடத்தில பெயிலா நீயி? சொல்லவே இல்லை?
பி-இல பெயிலா நீயி? சொல்லவே இல்ல?
நான் அறிந்த ஆறு மொழிகளுள் தமிழ்மொழிபோல் இனிதானது வேறு எதுவும் இல்லை என்று சொல்றீங்க. ஆனா சமஸ்கிருத மொழியினை ஏன் பிடித்துக் கொண்டு பாப்பார பயல்கள் தொங்க வேண்டும்?
பேட்டிக்கு முன்னோடியாக ஆஃப் தெ ரிகார்ட் பேசிக் கொண்டிருக்கையில் யதார்த்தமாக "நான் சமீபத்தில் 1969-ல் கடைசி ஆண்டு மூணு சப்ஜக்டில் ஃபெயில்" என்றவுடன் ஆடிப்போய்விட்டனர். பிறகு அவர்களுக்கு விஷயத்தை விளக்கிக் கூற சமாதானமடைந்தனர். அதை பேட்டியிலும் கூறி பார்வையாளர்களை குழப்ப வேண்டாமே என்ற நல்லெண்ணத்தைல் அதைத் தவிர்த்தேன்.
//பி-இல பெயிலா நீயி? சொல்லவே இல்ல?//
இல்லியே சொல்லியிருக்கேனே, பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_22.html
அதன் பின்னூட்டத்தில் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உருதுவை சித்தி மொழி என்று சொல்லிவிட்டு துலுக்க பசங்களை எதிர்த்து ஏன் ஆபாசமா பதிவுகளும் பின்னூட்டங்களும் போட வேண்டும்?
பார்த்தேள்னாக்கா... போனேள், வந்தேள், எழுதினே... அவாள், இவாள் இதெல்லாம் என்ன வந்தேறு மொழிகளா?
//துக்ளக் ஆண்டுவிழா வீடியோ துக்ளக் தளத்தில் வந்து விட்டதாகக் கூறினார்களே. அது கட்டணத் தளம், ஆகவே அதை பார்க்க நான் ஆவல் காட்டவில்லை.
//
டோண்டு,
துக்ளக்கினை பாப்பான்கூட காசு கொடுத்து பார்ப்பதில்லையா? என்ன கொடுமை சார் இது? வேற யார் காசு கொடுத்து பார்ப்பது?
//அது நிற்க. அத்வானி வந்தால் அது போன ஆண்டினதுதான். ஆனால் அத்வானி பிரதமராக வந்தால் அது அடுத்த ஆண்டின் வீடியோவாக இருக்கும் :-)))))//
அப்படியே ஆகக்கடவது. ஆமென்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உருதுவை சித்தி மொழி என்று சொல்லிவிட்டு துலுக்க பசங்களை எதிர்த்து ஏன் ஆபாசமா பதிவுகளும் பின்னூட்டங்களும் போட வேண்டும்?//
இது சூப்பர் கேள்வி, சூப்பர் கேள்வி. இதுக்கு பதில் சொல்லு டோண்டு ராகவா?
//உருதுவை சித்தி மொழி என்று சொல்லிவிட்டு துலுக்க பசங்களை எதிர்த்து ஏன் ஆபாசமா பதிவுகளும் பின்னூட்டங்களும் போட வேண்டும்?//
இது உண்மையா என்பதை எனது இசுலாமிய நண்பர்கள் சுவனப்பிரியன், நல்லடியார், ஷாஜஹான் ஆகியோர் கூறட்டும். புதுக்கல்லூரி மாணவன் டோண்டு ராகவனை பார்த்து கேட்கக் கூடிய கேள்வியே இல்லை இது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//துக்ளக்கினை பாப்பான்கூட காசு கொடுத்து பார்ப்பதில்லையா? என்ன கொடுமை சார் இது? வேற யார் காசு கொடுத்து பார்ப்பது?//
நான் நேரடியாகவே துக்ளக் வாங்குகிறேன், மீட்டிங்கையும் லைவாக கவர் செய்தேன். அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் வசித்தால் கண்டிப்பாக கட்டண தள்த்தின் வாசகனாக இருந்திருப்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இது உண்மையா என்பதை எனது இசுலாமிய நண்பர்கள் சுவனப்பிரியன், நல்லடியார், ஷாஜஹான் ஆகியோர் கூறட்டும். புதுக்கல்லூரி மாணவன் டோண்டு ராகவனை பார்த்து கேட்கக் கூடிய கேள்வியே இல்லை இது.
//
துலுக்கனை தூக்கிப் போட்டு மிதிப்போர் சங்கம் என்ற பெயரில் உன் பதிவிற்கு நீயே பின்னூட்டம் போட்டுக் கொண்டாயே, அதெல்லாம்?
//இது உண்மையா என்பதை எனது இசுலாமிய நண்பர்கள் சுவனப்பிரியன், நல்லடியார், ஷாஜஹான் ஆகியோர் கூறட்டும். புதுக்கல்லூரி மாணவன் டோண்டு ராகவனை பார்த்து கேட்கக் கூடிய கேள்வியே இல்லை இது.
//
சுவனப்பிரியன், நண்பன் ஷாஜி, நல்லடியார்,. முத்துக்குமரன் போன்றவர்கள் எல்லாம் பார்ப்பன அடிவருடிகள். அவர்களை நான் ஏன் கேட்க வேண்டும்?
இதுவரை நீ எழுதிய இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் மற்றும் உனக்கு நீயே பின்னூட்டிக் கொண்ட இஸ்லாமிய எதிர்ப்பு ஆபாச பின்னூட்டங்களின் சுட்டிகள் வேண்டுமா சொல்? நானே தேடித்தருகிறேன்.
உன்னை எல்லாம் ஒரு மனிதன் என்று நினைத்து பேட்டி கண்டானே அந்த ஜெயா டிவிக்காரனை பிடித்து செருப்பால் நைய புடைக்க வேண்டும்.
ஜெயா டிவிக்கு நீதான் தினமும் போன், ஈமெயில், லெட்டர் போட்டு என்னை பேட்டி எடு, என்னை பேட்டி எடுன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினியாமே?
சன் டிவியோ அல்லது கலைஞர் டிவியோ பேட்டிக்கு கூப்பிட்டு இருந்தால் பார்ப்பனர்கள் செல்வார்களா? டோண்டு ராகவன் சென்று இருப்பானா? அவனது பார்ப்பன ரத்தம் அதற்கு ஒப்புக் கொண்டிருக்குமா?
கையில காலில விழுந்து வாய்ப்பு கேட்டு கெஞ்சி பெற்று டிவில தோன்றுவது அசிங்கம் இல்லையா? கேவலம். என்ன ஒரு ஈனத்தனமாக பொழப்பு இது?
காலை 8.15-லிருந்து 8.24-வரை மூச்சுவிடாமல் ஒரே ஆள் பின்னூட்டம் வெவ்வேறு பெயர்களில்!
பைதிவே, மலேஷியா நேரம் அப்போது என்ன இருக்கும்? சென்னையிலிருந்து சுமார் 2 மணி நேரம் முன்னால் இருக்குமா?
டோண்டு ராகவன்
congrats!
kalakkitteenga. video paathukkittu irukken.
romba iyalba tension aagama pesaradhu arumai.
ungal pettiyal naattukku enna nanmai?
komanakrishnan
உங்கள் பேட்டி பார்த்தேன். மொழிகள் பற்றிய சில தகவல்களும் தங்களைப்பற்றிய பல தகவல்களும் இருந்தன.
தாய்மொழி என்பதால் தமிழ் சிறந்தது என்ற அடிப்படையில் தான் உங்கள் கருத்து இருப்பதை உணர்ந்தேன் (திருக்குறள் சொற்றொடர் தவிர). பல மொழிகள் கற்றவராதலால் தமிழின் நுட்பமான சில சிறப்புகளை குறிப்பிட்டிருக்கலாம். அப்படி எதுவும் இல்லையோ? வேறு மொழிகளின் சில நுட்பமான சிறப்புகளையும், இருந்தால், சுட்டியிருக்கலாம்.
Very general.
நேரமின்மையே முக்கிய காரணம். அதே நேரம் ஒத்திகையெல்லாம் இல்லை நேராகவே டேக் எடுத்தார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//காலை 8.15-லிருந்து 8.24-வரை மூச்சுவிடாமல் ஒரே ஆள் பின்னூட்டம் வெவ்வேறு பெயர்களில்! பைதிவே, மலேஷியா நேரம் அப்போது என்ன இருக்கும்? சென்னையிலிருந்து சுமார் 2 மணி நேரம் முன்னால் இருக்குமா?//
எச்சூஸ்மி, இதில உள்குத்து ஏதாவது இருக்கா? ;-)
லேட்டாக புரிந்துகொள்வோர் சங்கம்
வீடியோக்களை youtube ல் ஏற்ற வசதியான கோப்புகளாக மாற்ற பல இலவச மென்பொருட்கள் அதுவும் விண்டோஸ் OS க்கு அதிகம் இருக்கும் போது propriety மென்பொருள் பயன் படுத்தி unregistered என்று நட்ட நடுவில் வர வைத்துள்ளீர்கள். அது ஏனோ ?
//ungal pettiyal naattukku enna nanmai?
komanakrishnan//
எல்லாருக்கும் டோண்டு ஐயாவை ஜெயா டி.வியில் பாத்த சந்தோஷம், அது ஒரு நன்மை.
உன்னை போல சிலருக்கு வயித்தேரிச்சல், அது ஜெலுசில் விற்பவனுக்கு நன்மை.
இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?
உங்கள் பேட்டியை பார்த்தேன்! அற்புதம்! ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் பக்கத்து வீட்டு மாமாவுடன் அளவளாவியதுபோல இருந்தது! இருந்தாலும் "அவா, இவா" போன்ற சொல் பிரயோகங்களை தவிர்த்திருக்கலாம்! ரொம்ப குழந்தைத்தனமாகவும் over accentuate பண்ணின மாதிரியும் இருந்தது!
இந்த மாதிரி பேட்டியெடுப்பவர்களுக்கு subject matter-ஐ தயார் செய்துகொள்வதற்கு என்ன வந்தது கேடு? அது அவர்கள் தவறா இல்லை சேனல் தவறா தெரியவில்லை! எது இருந்தாலும் "பா"வென்று வாயைத்திறந்துகொண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் பேசும்போது! They may be trained interviewers but need to do more research on the interviewee & the subject they are going to discuss! இல்லையா Larry King போன்ற ஆசாமிகளைப்போல கேள்விகளை மட்டும் கேட்கவேண்டும்! சும்மா involve ஆகிறேன் என்று obvious-ஆன கேள்விகளை மட்டுமே கேட்கக்கூடாது!
//இருந்தாலும் "அவா, இவா" போன்ற சொல் பிரயோகங்களை தவிர்த்திருக்கலாம்! ரொம்ப குழந்தைத்தனமாகவும் over accentuate பண்ணின மாதிரியும் இருந்தது!//
சமீபத்தில் 1950-லிருந்து இவ்வாறுதான் பேசி வருகிறேன். நீங்களே என்னுடன் டெலிஃபோனில் பேசினால் ஆத்தில் எல்லோரும் சௌக்கியமா, ஆத்துக்காரி சௌக்கியமா, என்ன சொல்றேள் என்றுதான் கேட்பேன். அதுதான் எனக்கு பாந்தமாக இருக்கிறது.
மற்றப்படி கொடுக்கப்பட்ட 40 நிமிடங்களில் இதற்கு மேல் விளக்கமாக வினாக்கள் எழுப்ப பேட்டி கண்டவர்களுக்கு நேரம் எங்கே இருந்தது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார்,
பேட்டி முழுவதையும் இரண்டு முறை பார்த்துவிட்டேன். உண்மையிலேயே அசத்தல்தான்!
அ) கொஞ்சம் கூட முன் அறிவிப்பு இல்லாமல், எந்தவித தயார்படுத்துதலும் இல்லாமல் இருந்த்தால் மிக மிக இயற்கையான உரையாடலாக இருந்தது.
ஆ) கேள்வி கேட்ட மாத்திரத்தில் (சில நேரங்களில் கோள்வி கேட்பதற்கு முன்னாலேயும்!) பெய்யெனப் பெய்யும் மழையாக வார்த்தைகள் வந்து விழுந்தது வெகு அழகு.
இ) தமிழ்தான் சிறந்த மொழி என்று அடித்துச் சொன்னபோதும், இறுதி நிமிடம் வரை கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொன்ன போதும் கண்களில் பளிச்சிட்ட ஒளி, இந்த வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வந்ததை தெளிவுபடுத்தியது.
ஈ) நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை இழையோடிய இயல்பான நகைச்சுவை அற்புதம். (பல சமயங்களில் பேட்டியாளர்களே அடக்கமாட்டாமல் சிரித்தார்கள்!)
உ) நிகழ்ச்சிக்காக அரங்கமும், பேட்டியாளர்களும் அற்புதமான ஒப்பனையோடு இருக்க டோண்டு மட்டும் வழக்கம்போல் "போடா ஜாட்டான்" என்று மிக இயல்பான உடையில் இருந்தது truth needs no makeup என்பதை வலிமையாக உணர்த்தியது.
ஊ) பேட்டியைப் பார்த்த இளைஞர்களுக்கு 'அட இப்படி கூட இருக்கமுடியுமா' என்று ஒரு ஆர்வத்தை கண்டிப்பாக ஏற்படுத்தியது. அதுவும் அரபிக், ஹீப்ரு உட்பட பல மொழிகளைக் இன்னும் கற்கவேண்டும் என்று கண்களில் வெளிச்சத்தோடு சொன்னபோது ஏற்பட்ட ஒரு awe மனதில் இன்னும் மிச்சமிருக்கிறது.
எ) எல்லாவற்றிற்கும் மேலாக ஆரம்பத்திலிருந்து கடைசிவரை வார்த்தைகளில் தொனித்த ஆடம்பரமில்லாத நேர்மை மிக, மிக அற்புதம்.
இதோ, வாங்கிக் கொள்ளுங்கள் வலைப்பதிவு வாசகர்கள் சார்பாக ஒரு பொக்கே! Very, very well done!
உங்களை பேட்டி காண்கையில் "நிச்சயமா" என்று அந்த அழகான பெண் நான்கு முறை சொன்னார்
ஹி ஹி ஹி
வாலுன்ன வேலைய காட்டனுமுல்ல!!
வால்பையன்
I saw the interview. It was very good. The words flew very mellifluously. Your voice was very sweet. I think you should be a good singer too.
I felt that the use of brahminical language was not spontaeneous but little deliberate may be i am wrong and even if deliberate i dont find any thing wrong with that too.
Another thing is the reason(s) you were trying to put forth for Tamil being a better language than others was not really outstanding it was just ordinary.
The interview really brought forth outstanding qualities in you. I think you should be one of the few who would be a eternal cheer leader with effervescent bubbling energy and anyone who spents some time with you would get a energy/enthu shot.
Your last sentence that you dont like to retire but would keep working is a real morale booster for many of my age.
keep going!!
கிருஷ்ணகுமார் அவர்களே,
பிறாம்மண பாஷைதான் எனக்கு தமிழில் பாந்தமாக என்னையறியாமலேயே வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவா, இவா" போன்ற சொல் பிரயோகங்களை தவிர்த்திருக்கலாம்! ரொம்ப குழந்தைத்தனமாகவும் over accentuate பண்ணின மாதிரியும் இருந்தது!//- //I felt that the use of brahminical language was not spontaeneous but little deliberate may be i am wrong and even if deliberate i dont find any thing wrong with that too.//
I think it is very odd that people complain about slangs. I wonder whether they would complain if one had talked in Mudaliar bashai, Naadaar bashai or in Tirunelveli or Madurai slang.
Moment they notice something related to brahmins they start whining. Idiots.
அவரவர் ஸ்லாங் அவரவருக்கு. இதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பிறாம்மண பாஷைதான் எனக்கு தமிழில் பாந்தமாக என்னையறியாமலேயே வரும்//
ippadi solla enna thariyam? ethirthu ketka periyar illaye enra thariyamthane? viramani ayya irukkirar. kalainar irukkirar. ungalukku aappu undu.
etho nir thiyagi pola, mahatma gandhi ranjukku ellarum pesukirargale? appadiyenna nir naattukku nanmai seythuvittir? oru arai mani neram tv-yil (athuvum kenji koothadi chance vaangiyathu) vanthaal ivvalavu panthava? ungal pettiyaal thamiz naatil paalum thenum aaraaga odukirathaa? pagutharivu athigamagiyatha?
ithil thamizthan enakku pidikkum ena poy veru.
komanakrishnan (adv. agency, madippakkam)
//appadiyenna nir naattukku nanmai
seythuvittir?//
வாங்கோ வாங்கோ வாங்கிக்க வாங்கோ has answered that question.
//ungal pettiyaal thamiz naatil paalum thenum aaraaga odukirathaa? pagutharivu athigamagiyatha?//
For these to happen I recommend Jaya Tv to conduct daily programmes with Dondu Sir.
Dondu sir being a student of Logic, there can be no better teacher for 'pagutharivu' other than him.
//paalum thenum aaraaga odukirathaa?//
For this we have to get rid of nasty politicians you just mentioned.
If Brhamin style of speech is something wrong, why dont crticise other tamil style also?
chennai tamil
lankan tamil
madurai tamil
nellai tamil
kovai tamil
etc......
உள்ளடக்கம் டோண்டுவால் சற்றே வசைகளை மாற்றி எழுதப்பட்டது
அவா, இவா என்று பேசுவதெல்லாம் fascists பாஷை, அது தமிழே அல்ல என்று கூட சொல்வார்கள்.
அவரவருக்கு எது சுலபமாக வருதோ அதைப் பேசிவிட்டுப் போகிறார்கள். இதில் யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
தமிழை, தமிழ் என்று ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் டி.விக்களில் வந்து காம்பியர் செய்யும் போது இவர்களுக்கு உறுத்தாதா..? அது சரி, அவிங்க பேசுற பேச்சைக் கேட்கவா இவர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள்....? அவர்கள் போட்டு வந்திருக்கும் டிரஸ் எப்ப சிலிப்பாகி இடையழகு தெரியும் என்று ஜொள்ளு விடத்தானே இந்த வெண்ணை வெட்டிகள் அந்த காம்பியரிங் பொம்பளைங்களை பார்க்குதுகள். ?
brahmin bashai is bad worst. athikka sakthiyin bashai.
komanakrishnan
இப்போதுதான் வீடியோ காட்சியை பார்த்தேன். பார்ப்பனருக்கே உள்ள ஆதிக்க மமதை தெரிந்தது. எல்லாம் தன்னைப்பற்றிய பெருமை பீற்றலைத் தவிர தமிழருக்கு உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை. இப்பேட்டியினால் என்ன பயன்? உங்களுக்கு விளம்பரம் தவிர வேறு என்ன பலன்? ஏன் அண்ணா பெரியார், கலைஞர் போன்ற தலைவர்கள் பற்றி ஏன் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை? சுத்த வேஸ்டு.
கோமணகிருஷ்ணன்
//இப்பேட்டியினால் என்ன பயன்? உங்களுக்கு விளம்பரம் தவிர வேறு என்ன பலன்?//
உன்னை போல சிலருக்கு வயித்தேரிச்சல், அது ஜெலுசில் விற்பவனுக்கு பலன்.
//ஏன் அண்ணா பெரியார், கலைஞர் போன்ற தலைவர்கள் பற்றி ஏன் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை? //
அவர்களை பற்றி இல்லை இந்த பேட்டி, இது எங்கள் தலைவர் டோண்டு ஐயாவின் சேவைகளை பற்றியது.
//நேரமின்மையே முக்கிய காரணம். அதே நேரம் ஒத்திகையெல்லாம் இல்லை நேராகவே டேக் எடுத்தார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
ஒரு பதிவாய் உங்கள் வலைத்தளத்தில் இட்டு சிறப்பிக்கலாம்?. எதிர்பார்ப்புடன்.
இதுநாள் வரையில் (அதுவும் சமீப காலமாகத்தான்) உங்கள் பதிவுகள் மூலமே உங்களை அறிந்திருந்தேன். இப்போதுதான் உங்கள் பேட்டியைக் கண்டேன். Very interesting and inspiring. Reflects your positive attitude.
Post a Comment