தமிழ் இணையத்தில் மேலே தலைப்பில் உள்ளதை குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டு வருகிறது. என்னமோ ஜாக்கிசான் வந்தாராம், பந்தா காண்பித்தாராம் என்று அவரவர் எழுத ஆரம்பித்து விட்டனர்.
இதில் என்ன பிரச்சினை என்று புரியவில்லை. ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கி சான் படங்களுக்கு இந்தியாவில் விநியோகஸ்தர். ஆகவே ஜாக்கி சானின் பார்வை கோணத்தில் ரவிச்சந்திரன் முக்கியமானவர். அவர் அழைக்கப்பட்டார், வந்தார், சென்றார். அவ்வளவே. இதில் சம்பந்தப்பட்ட எல்லொருக்குமே - ஜாக்கிசான் உட்பட - லாபம். இதில் என்ன பிரச்சினை? தசாவதாரம் படத்துக்கு நல்ல விளம்பரம். ஆஸ்கார் ரவிச்சந்திரன், கமல் ஆகியோர் மகிழ்ச்சி எய்தினர். ஜாக்கிசான் நேருக்கு நேராக இந்தியாவில் தனக்கு எவ்வகை தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்பதை கண்டு மகிழ்ந்தார். ஒரு கலைஞனுக்கு இம்மாதிரி புகழ் டோஸ்கள் தேவைதான். தமிழகத்தின் பத்திரிகைகளும் இது பற்றி எழுதி சர்குலேஷனை பெருக்கி மகிழ்ந்தனர்.
கேள்வி என்னவோ எழும்பி விட்டது. அதையும் பார்த்து விடுவோமே. சென்னைத் தண்ணீரை குடிக்கவில்லையாம், தான் கொண்டு வந்த மினரல் வாட்டரைத்தான் குடித்தாராம். இதில் என்ன தவறு? அவருக்கு அவரது ஆரோக்கியம் முக்கியம். இங்கு வந்து தண்ணீர் பந்தல் ஹோட்டல் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? இருந்த நேரமோ குறைவு. அந்த நேரத்துக்கு தேவையான தண்ணீரை தன் வசம் சேமித்து வைக்க இயலாதாமா?
தான் வந்தது குறித்து எழுந்த விவாதங்களை குறித்து கேள்விப்பட்டு அவரே தனது ஜாக்கி சான் வலைப்பூவில் அது பற்றி எழுதி பந்தா எல்லாம் காண்பிக்கவில்லை என காட்ட முயன்றுள்ளார்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவரது நிலையில் இருப்பவர்கள் சிறிதளவாவது பந்தா காண்பித்தால்தான் எல்லோருமே மதிப்பார்கள். கசப்பான விஷயம்தான், ஆனால் அதில் நிறைய உண்மை உண்டு.
அவரது வலைப்பூவில் ஜாக்கி சான் எழுதுகிறார், "The premiere event was incredible. I saw so many friendly people, and so many famous faces! Many stars of Indian cinema were there and I recognized their faces, but I didn’t know how to pronounce their names (you know I’m much better with faces than with names)". இதில் என்ன வேடிக்கை என்றால் அவருக்கு ரமேஷ் பாபு, மல்லிகா ஷராவத், விக்ரம் லாம்பா என்ற பெயர்கள், தசாவதாரம் என்ற படத்தின் பெயர் எல்லாம் தெரிந்திருக்கிறது, ஆனால் கதாநாயகன் கமலஹாசன் என்ற பெயர் தெரியவில்லை. உச்சரிக்க வராவிட்டால் என்ன, மேலே பெயர்களை எழுத்தில் குறிப்பிட்டது போல கமலின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே. அவரது மக்கள் தொடர்புக்கு பொறுப்பேற்றவர்கள் விட்ட கோட்டை அது. இதைக்கூட நான் இங்கு சொல்வதற்கு காரணம் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பார்க்க வேண்டும் என்பதாலேயே.
பந்தா விஷயத்துக்கு வருவோம். யார்தான் பந்தா காண்பிக்கவில்லை? அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களில் விருந்தினராக அழைக்கப்பட்ட விவேக், எஸ்.வி.சேகர் ஆகியோர் காட்டாத பந்தாக்களா? Please grow up!
இவை எல்லாமே திட்டமிட்டு செய்யப்பட்ட பி.ஆர். செயல்பாடுகள் என நினைக்கிறேன். நான் ஏற்கனவே கூறியது போல, சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே ஒரு லாபம்.
மேலும் ஒன்று கூறுவேன். டோண்டு ராகவன் போன்ற பதிவர்களும் இம்மாதிரி பதிவுகள் போட்டு மகிழ முடிவது அவர்கட்கு கிடைத்த லாபம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தொழிலெனும் தியானம்
-
25 ஆகஸ்ட் 2024 அன்று சென்னிமலையில் நூற்பு நெசவுப் பயிற்சிப்பள்ளி திறப்பு
விழாவில் நான் ஆற்றிய சிறிய உரை. சிவகுருநாதனின் நூற்பு பள்ளி நூற்பு பயிற்சி
வகுப்பு...
6 hours ago
17 comments:
If you have seen in that live programme after he received the audio CD even he collect the cover and ribbon from the floor and given to someone.This attidude itself explain how he is.No our actor will do the same.
@@@தான் வந்தது குறித்து எழுந்த விவாதங்களை குறித்து கேள்விப்பட்டு அவரே தனது ஜாக்கி சான் வலைப்பூவில் அது பற்றி எழுதி பந்தா எல்லாம் காண்பிக்கவில்லை என காட்ட முயன்றுள்ளார்.
@@@
The style of writing in his blog is look like indian style. Make sure this is Jackey Shan's own commend.
Thanks,
Anonymous.
//No our actor will do the same.//
None of our actors will do the same என்று சொல்ல வந்தீர்கள் என நினைக்கிறேன். சரிதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சென்னைத் தண்ணீரை குடிக்கவில்லையாம், தான் கொண்டு வந்த மினரல் வாட்டரைத்தான் குடித்தாராம்.//
இதில் தவறிருப்பதாக தெரியவில்லை,
நான் ஈரோட்டிலிருந்து வெளியூர் செல்லும் போது மினரல் வாட்டர் அல்லது சுடு தண்ணீர் தான் குடிக்கிறேன், என் ஆரோக்கியம் எனக்கு முக்கியம்.
//None of our actors will do the same என்று சொல்ல வந்தீர்கள் என நினைக்கிறேன்.//
சரிதான் என்று நானும் நினைக்கிறேன்,
ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதர்க்கே பணம் வாங்கும் நமது நடிகர்களுக்கு மத்தியில் ஜாக்கி எவ்வளவோ பரவாயில்லை (வியாபார நிமித்தம் வந்திருந்தாலும்)
வால்பையன்
//இதில் என்ன வேடிக்கை என்றால் அவருக்கு ரமேஷ் பாபு, மல்லிகா ஷராவத், விக்ரம் லாம்பா என்ற பெயர்கள், தசாவதாரம் என்ற படத்தின் பெயர் எல்லாம் தெரிந்திருக்கிறது, ஆனால் கதாநாயகன் கமலஹாசன் என்ற பெயர் தெரியவில்லை. உச்சரிக்க வராவிட்டால் என்ன, மேலே பெயர்களை எழுத்தில் குறிப்பிட்டது போல கமலின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே//
Mr Ragavan, what are you trying to say here?? he mentioned mallika , ramesh and lamba when he was talking about who came to give him the personal invitation to the function. names are mentioned with a context to the subject. how come you are expecting or raising something like why he didnt mention kamal name and stuff like that?? so u mean to say he didnt mention kamal name, kalaingar name, mammoty name, amithab bachan name , vijay name and all others who attended the function or names of those who were in the dias?
what is the difference between someone writing "JC didnt drink indian bottle water" and your comment about not mentioning kamal's name??
entire article is good except for this insertion about not writing kamals name/
//அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களில் விருந்தினராக அழைக்கப்பட்ட விவேக், எஸ்.வி.சேகர் ஆகியோர் காட்டாத பந்தாக்களா? //
ithu!!!!!
//names are mentioned with a context to the subject. how come you are expecting or raising something like why he didnt mention kamal name and stuff like that?? so u mean to say he didnt mention kamal name, kalaingar name, mammoty name, amithab bachan name , vijay name and all others who attended the function or names of those who were in the dias?//
கமல் ஒரு பக்கம் மற்ற விருந்தினர்கள் ஒரு பக்கம். தசாவதாரம் என்பது முழுக்க முழுக்க கமலின் ஷோ. கமல் இல்லாமல் தசாவதாரம் இல்லை. ஆகவே அவர் பெயரை கண்டிப்பாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனாலும் இதொன்றும் ஒரு பெரிய குற்றமல்ல. இதற்கு முழு பொறுப்பு ஜாக்கி சானினுடைய மக்கள் தொடர்பு குழுதான் காரணம். இதைக்கூட நான் இங்கு சொல்வதற்கு காரணம் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பார்க்க வேண்டும் என்பதாலேயே என்று எழுதியுள்ளேனே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//what is the difference between someone writing "JC didnt drink indian bottle water" and your comment about not mentioning kamal's name??
//
JC didnt come to India to drink Water. That is his personal. His business was to attend the function of "Dasavatharam". He should have mentioned atleast the important names of main attractions though not everybody.
premji, same way JC wrote something in his personal website.. it is his personal wish to mention names and to note : he dindt come to attend kamal's birthday .. he came to attend the Oscar films movie.. kamal is an actor in that movie..
JC mentioned OSCAR name who organized the whole function and invited JC and all others who attended the function.
hope you understood the difference..
if he mention kamal name as kamal is a key icon in the function.. then he should also have mentioned about amitab and kalainger.. who are all icons in the function..
முழு நிகழ்ச்சியையும் பார்க்க இயலவில்லை.ஆனாலும் காகிதத்தை ஜாக்கி செய்ததும் கமல் தடுத்து இருக்கைக்கு அனுப்பியதும் இயல்பாகவே இருந்தது.ஜாக்சன் கையுறை போட்டு கை குழுக்கிய காலங்களை விட ஜாக்கி பாட்டில் தண்ணீர் குடிப்பது பரவாயில்லை எனத்தான் தோன்றுகிறது.
//அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களில் விருந்தினராக அழைக்கப்பட்ட விவேக், எஸ்.வி.சேகர் ஆகியோர் காட்டாத பந்தாக்களா? //
எஸ் வீ சேகர் பந்தா மட்டும் காட்டவில்லை. தன்னுடைய இன்னொரு முகத்தையும் காண்பிக்க முயற்சி செய்த விஷயமும் உண்டு!
'எஸ் வீ சேகர் பந்தா மட்டும் காட்டவில்லை. தன்னுடைய இன்னொரு முகத்தையும் காண்பிக்க முயற்சி செய்த விஷயமும் உண்டு!'
Yes you are correct to say
the waste Se.v. Segar shown his white threate in the air port they are shoking why the funny person put on the threate in his boady??? He make any comedy show the air port........
They say the Half mind people are not do like this funny things their body.
Leave Jackie Chan for the time being. What water our 'Tamil Ina Leader' CM drinks? Is it from the tap?
Vikram
//மேலும் ஒன்று கூறுவேன். டோண்டு ராகவன் போன்ற பதிவர்களும் இம்மாதிரி பதிவுகள் போட்டு மகிழ முடிவது அவர்கட்கு கிடைத்த லாபம்.//
ஹா..ஹா..:))))
இங்கிருந்து அமெரிக்கா சென்று 20 வருடங்களுக்கு மேல் அங்கேயே settle ஆன என் உறவினர்கள் கூட இந்தியா வந்தால் Mineral water வாங்கிதான் குடிக்கிறார்கள். அங்கிருந்தே baby foods கொண்டு வருபவர்களையும் தெரியும் . What is wrong if Jackie Chan had brought his own water bottle?
//கேள்வி என்னவோ எழும்பி விட்டது. அதையும் பார்த்து விடுவோமே. சென்னைத் தண்ணீரை குடிக்கவில்லையாம், தான் கொண்டு வந்த மினரல் வாட்டரைத்தான் குடித்தாராம். இதில் என்ன தவறு? அவருக்கு அவரது ஆரோக்கியம் முக்கியம். இங்கு வந்து தண்ணீர் பந்தல் ஹோட்டல் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? இருந்த நேரமோ குறைவு. அந்த நேரத்துக்கு தேவையான தண்ணீரை தன் வசம் சேமித்து வைக்க இயலாதாமா?
//
இதில் ஆத்திரப்பட என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. சொல்லப்போனால் அது சென்னை மாநகராட்சியின் குடிநீர் சுகாதார ஏற்பாடுகள் பற்றி நாம் கொள்ள வேண்டிய அவமானத்தையே சுட்டிக்காட்டுகிறது. சென்னையில் குழாய்த் தண்ணீரை பிடித்துக் குடிக்கலாம் என்ற நிலை இருந்தால ஜாக்கி சான் ஏன் ஹாங்காங்கிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும்? ஆறு வருஷம் H1B ல அமெரிக்காவில இருந்த எனக்கே விடுமுறையில ஊருக்கு வந்தபோது தெரியாத்தனமா ஹோட்டல் தண்னிய குடிச்சு வயித்தால போச்சுன்னா வெளிநாட்டுக்காரர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். மேட்டர் என்னன்னா, வெளிநாட்டில் இருக்கும்போது நமது உடல் சுற்றுப்புற சூழல் காரணமாக நோயெதிர்புச் சக்தியைக் குறைத்துக்கொண்டு விடுகிறது. இங்கு வந்த உடனே கண்டதையும் உண்டால் வாந்தி பேதி வந்துவிடும். ஆனால் இந்தியாவில் சில காலம் இருந்துவிட்டால் உடம்பு நோயெதிர்புச் சக்தியை வளர்த்துவிடும். இதற்கு காட்டுகள் இந்தியா திரும்பிய பிறகு கையேந்திபவன்களிலும் ஃபுல் கட்டு கட்டும் நானும், எங்களுக்கு சமீபத்தில் பயிற்சி கொடுத்த பெங்களூரில் இரு ஆண்டுகளாக வசிக்கும் அயர்லாந்தைச் சேர்ந்த, இந்திய உணவை எங்கள் கேஃப்டேரியாவில் தாக்கும் ஒருவரும்தான். எளிதில் உணர்ச்சி வசப்படும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இதனை உரக்க, ஓலமிட்டுக் கூறுகிறேன்.
வாருங்கள் பெத்த ராயுடு. இன்றுதான் உங்கள் பண்ருட்டி நகராட்சி பற்றிய பதிவை பார்த்து பின்னூட்டமிட்டேன். நன்றி. பார்க்க: http://pedharayudu.blogspot.com/2006/01/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment