இன்று எனக்கு பிறந்த நாள். இன்றுடன் 62 வயது நிரம்புகிறது. மனது என்னவோ 25 வயதை விட்டு வரமாட்டேன் என்கிறது. இப்போது கேள்விகளுக்கு செல்வோமா?
Radha Sriram
1)பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கை உண்டா? அதாவது rituals?தினப்படி செய்யும் வழக்கம் உண்டா?
பதில்: இல்லவே இல்லை. அதில் இதுவரை மனம் ஒன்றவே இல்லை. பூஜைக்கு செலவழிக்கும் நேரத்தில் ஏதேனும் மொழிபெயர்ப்பு செய்யலாமே என்ற எண்ணம்தான் வருகிறது. என்னதான் இருந்தாலும் செய்யும் தொழில்தானே தெய்வம்?
2)Art Of Living பற்றி உங்கள் கருத்து?
பதில்: மனிதராகப் பிறந்த எல்லோருமே சிந்திக்க இயலும். ஆனால் அந்த சிந்தனைகளை ஒழுங்கு படைத்து சரியான பாதையில் தவறுகள் இன்றி கொண்டு செல்வதே தர்க்க சாஸ்திரத்தின் வேலை. அதைத்தான் இந்த Art Of Living-லும் பார்க்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை எப்படி எதிர்க்கொண்டு வெற்றிகரமாக வாழ்வது என்பதை பல வழிகளில் கற்று தருகின்றனர். மற்றப்படி அந்த இயக்கத்துடன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.
வேல்பாண்டி
1. கலைஞரிடம் பிடித்தது என்ன? (ஜெ மாதிரி குடும்ப பாசம் என்று சொல்ல வேண்டாம்.)
பதில்: அவரது சொல் சாதுர்யம், அயராத உழைப்பு. 10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரால் ஓரம் கட்டப்பட்டு இருந்தாலும் கட்சி உடையாமல் பார்த்து கொண்டவர் என்ற முறையில் நான் அவரை வியந்து பாராட்டுகிறேன்.
அனானி (28.03.2008 பகல் 1 மணிக்கு கேள்வி கேட்டவர்)
1. மிக அருமையான எழுத்துத் திறமை இருந்தும், வலைப்பதிவுகளில் இருந்து முற்றிலும் விலகி, எழுதுவதையே நிறுத்திவிட்டவர்களில் ஒருவரை மீண்டும் எழுதவேண்டும் என்று நீங்கள் அழைப்பீர்களேயானால் அவர் யாராக இருக்கும்?
பதில்: மா.சிவகுமார், நேசமுடன் வெங்கடேஷ்
நடராஜன்:
1. என்னை மாதிரி வேலையத்துப் போயி உங்க கேள்வி பதிலை/blog படிக்கும் - comment ஏதும் போடாதவர்களை பற்றி?
பதில்: Silent majority என்ற கான்சப்டை சமீபத்தில் 1969-70-களில் அமெரிக்க குடியரசு தலைவர் நிக்ஸன் பயன்படுத்தினார். அதாவது கருத்து ஏதும் வெளியில் சொல்லாது இருப்பவர்கள்தான் அதிகமாம். கருத்து இல்லாமல் இல்லை, ஆனால் வெளியில் சட்டென்று தெரிவித்து விட மாட்டார்கள் என்பதே அதன் பொருள். அவர்களில் ஒருவராக உங்களைப் பார்க்கிறேன்.
அனானி (28.03.2008 மாலை 6 மணிக்கு கேட்டவர்)
1. "Microsoft Encarta" தமிழர்கள் கீழ்சாதி மக்கள் என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: எல்லோருமேவா கீழ்ச்சாதி மக்கள் என்று கூறப்பட்டுள்ளது? நான் தேடியவரை அவ்வாறு கிடைக்கவில்லையே. நீங்கள் சொன்ன மாதிரி சுட்டிகளுக்கு போனேன், இருப்பினும் எனக்கு அது கிடைக்கவில்லை. நிற்க. அவ்வாறு நீங்கள் சொன்ன மாதிரி கூறப்பட்டிருந்தால் அதை நான் தெளிவாக மறுக்கிறேன். நான்கு வர்ணத்தவர்களும் இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து வந்திருக்கின்றனர். இதில் தமிழர்களுக்கான நிலை மாறுபட்டிருக்கவும் என நினைக்க இயலவில்லை. முடிந்தால் சிரமம் பார்க்காது சம்பந்தப்பட்ட வரிகளை இங்கு கூறவும். நீங்கள் புரிந்து கொண்டது சரியா என்பதைப் பார்க்கலாம்.
2. "Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: பக்கா உளறல் என்றுதான் கூற வேண்டும். மஹாபாரததில் வியாசரும் ஒரு பாத்திரமே. அவர் முக்காலமும் அறிந்த முனிவர். மஹாபாரதத்தை தான் சொல்லச்சொல்ல யாராவது எழுத வேண்டும் என்பதற்காக அவர் பிரும்மாவை பிரார்த்திக்க, விநாயகர் வந்து சேருகிறார். அவர் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். அதாவது வியாசர் சொல்வதை நிறுத்தக் கூடாது என்பதே. வியாசர் எதிர் நிபந்தனை போடுகிறார். அதன்படி விநாயகர் சொல்லப்பட்ட சுலோகங்களின் பொருளை முழுமையாக உணர்ந்த நிலையில்தான் எழுதவே வேண்டும். அதற்கு விநாயகரும் ஒப்புகிறார். நிலைமை இப்படி இருக்க சில வெளிநாட்டு அரைகுறைகள் எழுதினால் அதையெல்லாம் எப்படி ஒத்து கொள்வதாம்?
3. "Microsoft Encarta" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: எனக்கு தெரிந்து பிரும்மாதான் விஷ்ணுவின் பிள்ளை. இங்கே வரும் புதுக்கதையைப் பற்றி என்ன கூறுவது, அது பேத்தல் என்பதைத் தவிர?
காலை 10.43 மணிக்கு மேலே சேர்த்தது:
எந்த வேளையில் பேத்தல் என்று சொன்னேனோ நான் இந்த கேள்வி விஷயத்தில் சொன்னதுதான் பேத்தல் என்று நிரூபணம் ஆகிவிட்டது. பத்ரிக்கு நன்றி. அவர் கூறியதை கீழே தருகிறேன். மேலே இருக்கும் எனது தவறான விடையை அப்படியே வைத்திருப்பதன் காரணம் எனக்கு எதிர்க்காலத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தட்டுமே.
//ஸ்ரீமத் பாகவதம், பிரம்மாவின் மூச்சுக்காற்றிலிருந்து சிவன் உருவானார் என்கிறது. திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி இப்படித் தொடங்குகிறது:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து//
ஜீரோ:
1) 2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?
பதில்: மோடி மாதிரி ஒரு பிரதம மந்திரியும், மாநில முதன் மந்திரிகளும் வந்தால் அவ்வாறு வல்லரசு ஆகும் வாய்ப்பு உண்டு. மற்றப்படி நேரு குடும்பத்தை வைத்து பஜனை செய்து கொண்டிருந்தால் காரியத்துக்கு ஆகாது.
2) இல்லையென்றால் நாம் எது எதில் பின் தங்கியிருக்கிறோம்?
பதில்: நமக்கு தன்னம்பிக்கை முதலில் வேண்டும். நாட்டு மக்கள் உழைப்புக்கு அஞ்சக்கூடாது. எந்தக் கொம்பனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கும் மனோ தைரியம் வேண்டும். இதிலெல்லாம் நாம் பின் தங்கியுள்ளோம்.
அருண்மொழி
1. கர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்?
பதில்: ரிகார்ட் செய்தவன் என்ன கூறியிருந்தால் சம்பந்தப்பட்டவன் அவ்வாறு வாக்குமூலம் தந்திருக்க வேண்டும்? தானும் பலரை கொன்றதாகத்தான் கூறியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் டேப் செய்து போலீசிடம் கொடுத்தால் இவனும் கம்பி எண்ண வேண்டியிருக்கும். ஆகவே போலீசிடம் கொடுக்காது வெறுமனே தான் பேசியதையெல்லாம் எடிட் செய்து அழித்து விட்டு சம்பந்தப்பட்டவன் பேசியதை மட்டும் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல சந்தர்ப்பங்களில் தனித்தனியாகப் பேசியதை ஒன்றாக்கி புதிய டேப் உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவேதான் போலீசிடம் கொடுக்க வக்கின்றி இவ்வாறு செய்துள்ளனர் என நினைக்கிறேன்.
அது சரி, இது பற்றி காங்கிரசோ, திமுகவோ ஒன்றும் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லையே. ஏன் 1984 சீக்கிய படுகொலைகளோ, மதுரை சன் டீவி கலவரங்கள் பற்றியோ கேள்விகள் வரும் என்பதாலா? மற்றப்படி, இதெல்லாம் குஜராத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே அஜெண்டாவில் செய்யப்பட்டது. அது காரியத்துக்கு ஆகவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், பல ஹிந்து ஓட்டுகள் இந்த டேப்புகளினாலேயே மோடிக்கு அதிகம் கிடைத்தன என சில கோஷ்டிகள் சொல்லித் திரிகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது சோனியா காந்தி மோதியை மரணத்தின் வியாபாரி எனக்கூற மோதி அவருக்கு பதிலடி கொடுத்தார். முதலில் மோதிக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தது தேர்தல் கமிஷன். பிறகு சோனியாவின் பேச்சை குறிப்பிட்டு கேட்டதும் வேண்டாவெறுப்பாக அவருக்கும் நோட்டீஸ் தந்தது. பிறகு வந்த ரிப்போர்ட்டின்படி இருவருமே நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் என்று கூற வேண்டியதாயிற்று. அதிலும் மோதிக்கு சற்றே அதிகக் கண்டனம். இவ்வளவு பாரபட்சமாக தேர்தல் கமிஷன் நடந்து கொண்டால் நாடு எப்படி உருப்படும் என்று நினைக்கிறீர்கள்?
இன்னொன்றும் கூறுவேன். 2002-பிப்ரவரியில் நடந்ததை வைத்து அந்த ஆண்டு தேர்தலில் வேணமட்டும் பிரசாரம் செய்து விட்டனர். தலைமை தேர்தல் கமிஷனரும் தன்னால் முடிந்த அளவு மோடிக்கு விரோதமாக செயல்பாடு செய்து பார்த்து விட்டார். இருப்பினும் மோடி அப்போதே ஜெயித்தார். பிறகு 5 ஆண்டுகள் குஜராத்தில் ஒரு கலவரம் கிடையாது, ஒரு தீவிரவாதிகள் தாக்குதல் கிடையாது, அரசு யந்திரம் மிகத் திறமையாகவே செயல்பட்டு குஜராத் முன்னேற்றப் பாதையில் எல்லோரையும் மிஞ்சி சென்று விட்டது. அப்புறமும் பழைய கதைகளை பேசுபவர்கள் 1984 சீக்கியக் கலவரத்தையும் பற்றி பேசத் தயாராக வேண்டும்.
செந்தழல் ரவி:
1. சிங்கப்பூருக்கு இரண்டு டிக்கெட் இலவசமாக கிடைத்தால் பாஸ்போர்ட் எடுப்பீர்களா?
பதில்: சிங்கப்பூரோ அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டுக்கோ போகும் ஆசை அறவே கிடையாது. ஆக நான் போகாததற்கு காரணம் பணப் பற்றாக்குறையில்லை. என்னிடம் தேவையான பணம் உள்ளது. தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனுக்கு நன்றி.
வஜ்ரா:
1. நீங்கள் ஏன் ஒரு முறை கூட வெளி நாடு செல்ல முயற்சிக்கவில்லை?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
2. ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகள் கற்ற நீங்கள், அவர்கள் நாகரீகங்களைக் கற்காமல் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது என்பதை அறிவீர்கள். அவர்கள் நாகரீகங்களை நன்கு அறிய ஒரு முறையாவது ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்ல விருப்பம் ஏற்பவில்லையா?
பதில்: யார் சொன்னது அப்படி? நான் செய்யும் மொழிபெயர்ப்புகள் தொழில்நுட்ப விஷயங்கள். அதற்கு இஞ்சினியரிங் அறிவும் மொழி அறிவுமே எதேஷ்டம். மற்றப்படி ஃபிரெஞ்சு ஜெர்மன் நாகரிகங்களைப் பற்றி அம்மொழியில் வெளியாகும் புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்கிறேன். ஜெர்மனியும் ஃபிரான்ஸும் என் வீட்டுக்கே வரும்போது நான் ஏன் வெட்டியாக காசு செலவழித்து அங்கு செல்ல வேண்டும்? ஒரு சுவிஸ் நாட்டுக்காரருக்கு நான் ஜெர்மன் துபாஷியாக சென்றேன். அவர் நான் பேசும் ஜெர்மன் சுவிஸ் ஜெர்மன் என்று துண்டு போட்டு தாண்டினார். இந்தியாவை விட்டு எங்குமே போகவில்லை என்பதைக் கேட்டு நம்ப மறுத்து விட்டார்.
அனானி (29.03.2008 பிற்பகல் 3.42-க்கு கேட்டவர்)
1. தமிழ் மொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்?
பதில்: சோ எப்போது அவ்வாறு சொன்னார்? தமிழில் அவருக்கு இருக்கும் ஆளுமை அசாத்தியமானது. சும்மா ஏதாவது கேட்பதற்காகவெல்லாம் இவ்வாறு கேட்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை நானறிந்த ஆறு மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவதெங்கும் காணோம்.
அனானி (சென்னைக்கு வந்தால் என்னைச் சந்திக்கலாமா எனக் கேட்டவர்)
1. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு, அதுனால எல்லாரும் மூணு அங்குலத்துல கத்தி வச்சிருக்கணும், அத எப்படி யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும்னு தா. பாண்டியனும், நல்ல கண்ணுவும் சொல்லீருக்காங்களே? ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ-ல் தற்காப்புக்காக சொல்லித் தருகிற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே? இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா? இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆயுதம் எடுப்பவன் ஆயுதத்தாலேயே சாவான், கத்தியைத் தீட்டாதே தம்பி புத்தியைத் தீட்டு என்றெல்லாம் இவர்கள் கேள்விப்பட்டதில்லை என நினைக்கிறேன்.
ராஜகோபால் சடகோபன்:
1. Why Srivaishnavites (hardcore Iyengars) do not go to Shiva temples? (When you remove the Ego (basic thing) then only you can have Moksham. The moment Srivaishnavites say Lord Narayana is supreme, the Ego comes).
(If only Lord Narayana can give Moksham only Iyengars will be in Vaiguntam. This seems to be not alright).
Would you share your thoughts if you have any?
பதில்: நீங்கள் கூறுவது வீரவைஷ்ணவர்கள் எனக் கூறப்படுபவர்கள் விஷயத்தில் உண்மையே. ஐயங்கார்களில் சமாசனம் என்று ஒரு சடங்கு உண்டு. இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைகள் நெர்ப்பால் பொறித்து கொள்வதாகும் அது. அதே போல அடுத்த கட்டமாக பரண்யாசம் என்ற சடங்கும் உண்டு. அதை செய்து கொண்டால் பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் சிவன் கோவிலுக்கு போகக் கூடாது என்பது. எனக்கு இக்கட்டுப்பாட்டில் ஒப்புதல் இல்லை. ஆனால் இன்னொரு விஷயம். வீர சைவர்கள் என்றும் இருக்கின்றனர். அவர்கள் பெருமாள் கோவிலுக்கு வரமாட்டார்கள். எல்லாமே தமாஷ்தான். சைவ வைஷ்ணவ சண்டைகள் அநபாய சோழன் காலத்தில் பிரசித்தம். ராமானுஜரை கொலை செய்யும் முயற்சி வரை போயிற்று.
07.04.2008 அன்று சேர்க்கப்பட்டது:
நான் மேலே சொன்ன சில விஷயங்களில் மாறுதல்கள் தேவையாகின்றன. சுட்டிக் காட்டிய என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு நன்றி:
நான் சமாசனம் என்று குறிப்பிட்டது "சமாஷ்ரயணம்" என்றிருக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனின் மேல் பக்தி கொண்டவர்கள் (அவனையே கதி என்று நம்பி வந்தவர்கள்) அனைவருமே ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகிறார்கள், அவர்கள் அனைவருமே சாதி பேதமின்றி 'சமாஷ்ரயணம்' பெறுவதற்கு உகந்தவர்கள் ஆகிறார்கள் என்று வைணவ சாத்திரம் கூறுகிறது. பிரம்மோபதேசமும் அப்படியே !
"பரண்யாசம்" அல்லது 'பிரபத்தி' என்பது பூரண சரணாகதித்துவத்திற்கான வழிவகையைக் (means) குறிக்கிறது.
பரண்யாசம் = பரம் + ந்யாசம்
'nyAsam' means saraNAgathy
'Bhara' is Bhaaram - the burden.
BharanyAsam is to surrender one's self and one's bhaaram to Sriman Narayana.
One can be initiated to 'BharanyAsam' by a Guru. பரண்யாசம் எப்போது ஒரு சடங்கானது என்று தெரியவில்லை. அது போலவே, பரண்யாசத்திற்கும், சிவன் கோயில் செல்வதற்கும் சம்பந்தம் கிடையாது!!! நன்றி பாலா அவர்களே.
வால்பையன்:
அரசியல் கேள்விகள்
1. தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?
பதில்: ஸ்டாலினை விட அழகிரிக்கு செயல் திறன் அதிகம். ஆனால் ஒன்று கலைஞர் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே கட்சியில் முன்னேறாதபடிக்கு அக்குடும்பம் கட்சியை குடும்பக் கம்பெனியாக்கியது விசனிக்கத் தக்கதே.
2. கட்சி மாறும் கோமாளிகளை பார்த்து நீங்கள் நினைப்பது என்ன?
பதில்: கட்சித் தலைவர்கள் தொண்டர்களை கோமாளிகளாக நினைக்கின்றனர். கட்சி மாறுபவர்கள் தலைவர்களை கோமாளிகளாக நினைக்கின்றனர். எல்லோரும் தத்தம் நலனைப் பாதுகாக்கின்றனர். தொண்டனும் அவ்வாறே செய்தால் பிழைப்பான். இல்லாவிடில் பலியாடாக தீக்குளிக்க வைக்கப்படுவான்.
3. சமீபத்திய பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து?
பதில்: தேர்தலை குறிவைத்து போடப்பட்ட பட்ஜெட். எல்லா ஸ்டண்டுகளையும் அடித்துள்ளனர். தாராளமாக பொதுப் பணத்தை தங்கள் அப்பன் வீட்டுப் பணம் போல வாரிவிட்டுள்ளனர். மொத்தத்தில் கோமாளித்தனமான பட்ஜெட்.
மொக்கை கேள்விகள்
4. மூன்று தலைமுறை வாழ்க்கையை மூன்று மணி நேர படமாக(படையப்பா) தரும் போது
சீரியலில் உங்கள் ஆர்வம் ஏன் அதிகமாக இருக்கிறது?
பதில்: மெகா சீரியல்களையும் கச்சிதமாக எடுக்க இயலும். என்ன, அதற்கு நிரம்பவே மெனக்கெட வேண்டும். கோலங்கள் சீரியலின் டைரக்டர் திருச்செல்வம் தனது சீரியலின் கடைசி எபிசோட் வரை தன் எண்ணத்தில் முழுமையாக உள்ளது என்று இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது கூறினார். அது உண்மையாக இருக்கும் என நம்புவோம். மற்றப்படி திரைப்படங்களோ, சீரியல்களோ அவற்றுக்கென்று தனி இடங்கள் உண்டு.
5. உங்கள் பழைய கணினியை எப்போது மாற்றுவீர்கள்? எதாவது சென்டிமென்ட்டா?
பதில்: இப்போதுதானே 2002-ல் முதல் முதலாக கணினியே வாங்கினேன். அதற்குள் பழசாகி விடுமா என்ன. திரை மட்டும் தட்டைத்திரை வாங்கி, பழைய திரையை மாற்றியுள்ளேன். அவ்வளவே.
6. ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?
பதில்: சுத்தமாக இல்லவே இல்லை.
7. பயங்கர மொக்கை கேள்விகள்
ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?
பதில்: எல்லாம் பிராக்டிகல்் விஷயங்கள். லொங்கு லொங்கென்று வேட்டையில் மிருகங்களைத் துரத்தி ஓடுபோது தனி சேனல்களில் ஆடுவதை எல்லாம் கண்ட்ரோல் செய்யவில்லையேன்றால் பிற்காலத்தில் பாவ மூட்டை சுமக்க நேரிடும் என்று அக்காலத்திலேயே ஒரு மகரிஷி கூறியுள்ளார். ஆகவே வந்தன கோமணங்கள். அவற்றை பொருத்தும் முறைகள் ஆரம்பத்திலேயே வந்து விட்டன. இதற்கெல்லாம் ஆண்டு கணக்கெல்லாம் கூற முடியாது. சமீபத்தில் 330 B.C.? கோமணங்களே ஜட்டிகளாயின. அவ்வளவே.
8. மண்ணுக்கு மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு பிறகு ஏன் அதை வைத்து டீ போட முடியாது?(பார்க்க த்ரீ ரோசஸ் டீ விளம்பரம்)
பதில்: மணம் நிறம் மற்றும் குணம் ஆகியவை தேவையான ஷரத்துகள். ஆனால் முழுமையானவை அல்ல. போதுமானவையும் அல்ல. ஆகவேதான் மொழியில் மண்வாசனை பற்றி பேசினாலும் உண்மையில் அதற்கு மேலும் யோசிக்கிறோம். இதெல்லாம் ஒரு சொலவடைதான்.
அனானி (31.03.2008, பிற்பகல் 2:37-க்கு கேட்டவர்)
1. தமிழ் வலைப் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் இடம் பெறுமா? தமிழ் மணம் என்பது என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. வலைப்பதிவுலகத்தைப் பற்றிய அறிவில் ஒரு நிரட்சர குட்சி என்றே வைத்துக் கொண்டு பதில் கூறவும். (மற்றதில் மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)
பதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. என்ன புத்திசாலித்தனமாக திரட்டுகிறது. நமக்கெல்லாம் பயனளிக்கிறது என்பதையெல்லாம் ஏற்கனவே பலரும் கூறிவிட்டனர். நானும் கூறியுள்ளேன். ஆக, திரட்டி என்பதையும் மீறி இப்போதெல்லாம் எதை திரட்ட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் குப்பை அதிகம் சேரும் அபாயம் உண்டு.
அன்புடன் அனானி (இனிமேல் இப்படியே குறிப்பிடுவதாக கூறியுள்ளார்)
1. இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?
பதில்: அப்படியெல்லாம் பார்க்கவில்லை. பின்னூட்டங்கள் என்பவை வரும்போது அதற்கான எதிர்வினைகளைப் பெறுகின்றன. பிறகு ஒரு வலைப்பூவின் ஆவணங்களாக மாறுகின்றன.
அடுத்த கேள்வி பதிவு பதிவில் பார்ப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
9 hours ago
44 comments:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நான்கு வர்ணத்தவர்களும் இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து வந்திருக்கின்றனர்.
இந்தியாவில் அனைவரும் ஒரே வர்ணத்தவர்தான். நாம் எல்லாரும் இந்தியர்கள் நன்றி
////இன்று எனக்கு பிறந்த நாள். இன்றுடன் 62 வயது நிரம்புகிறது. மனது என்னவோ 25 வயதை விட்டு வரமாட்டேன் என்கிறது.///
மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டேய் மிஸ்டர் டோண்டூஜி!
///////8. மண்ணுக்கு மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு பிறகு ஏன் அதை வைத்து டீ போட முடியாது?(பார்க்க த்ரீ ரோசஸ் டீ விளம்பரம்)
பதில்: மணம் நிறம் மற்றும் குணம் ஆகியவை தேவையான ஷரத்துகள். ஆனால் முழுமையானவை அல்ல. போதுமானவையும் அல்ல. ஆகவேதான் மொழியில் மண்வாசனை பற்றி பேசினாலும் உண்மையில் அதற்கு மேலும் யோசிக்கிறோம். இதெல்லாம் ஒரு சொலவடைதான்./////
எதிர் விளம்பரம்
த்ரீ ரோசஸ் டீத்தூளில் மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு;
ஆனால் அதில் பயிர் விளையுமா? அட்ல்லீஸ்ட் ஒரு புல்' லாவது முளைக்குமா?
-மண் கேட்கிறது
many happy returns of the day
//இந்தியாவில் அனைவரும் ஒரே வர்ணத்தவர்தான். நாம் எல்லாரும் இந்தியர்கள் நன்றி//
நீங்கள் கூறுவது மிகவும் உயர்ந்த எண்ணம். அது ஐடியல் நிலைமை.
ஆனால் நான் கூறியது சரித்த்திர உண்மை. சரித்திரத்தை மாற்ற இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் அதில் பயிர் விளையுமா? அட்ல்லீஸ்ட் ஒரு புல்' லாவது முளைக்குமா?//
இங்கு ஒரு வேடிக்கையான உண்மையை கூற வேண்டியுள்ளது. தேயிலைத் தூள்கள் நல்ல உரமாகும். என் தந்தையார் தென்னைமரத்துக்கு வடிக்கட்டப்பட்ட டீத்தூளை போடுவார். ரோஜாவுக்கும் அதை விசேஷ உரமாகப் போடலாம். ஆக, இளநீர் மற்றும் ரோஜா ரூபத்தில் குணம், மணம் மற்றும் நிறம் மட்டுமின்றி விளைச்சலும் கிடைக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதலில் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
(கேள்வி பதில், நன்றாக உள்ளது)
கேள்வி : காந்தியின் அஹிம்சா கொள்கைகள் நடப்பு உலகிற்கு சாத்தியமா?
//லொங்கு லொங்கென்று வேட்டையில் மிருகங்களைத் துரத்தி ஓடுபோது தனி சேனல்களில் ஆடுவதை எல்லாம் கண்ட்ரோல் செய்யவில்லையேன்றால் பிற்காலத்தில் பாவ மூட்டை சுமக்க நேரிடும் என்று அக்காலத்திலேயே ஒரு மகரிஷி கூறியுள்ளார்.//
எப்படிங்க இப்படி சரளமா பிட்டைப்
போடுறீங்க.எழுத்து நடை சும்மா வழுக்கி கிட்டு போகுது.
பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த பவன் அப்பா இம்சை, கவியரசு அத்தாரிட்டி சுப்பையா, நாடக வித்தகர் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வருமான வரி ஆலோசகர் கோவர்த்தனன் ஆகியோருக்கு நன்றி.
கோவர்த்தனன் அவர்களே, உங்கள் கேள்விதான் அடுத்த கேள்வி பதில் பதிவுக்கான முதல் கேள்வி. அது வரைவுக்குள் சென்று விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
//3. "Microsoft Encarta" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: எனக்கு தெரிந்து பிரும்மாதான் விஷ்ணுவின் பிள்ளை. இங்கே வரும் புதுக்கதையைப் பற்றி என்ன கூறுவது, அது பேத்தல் என்பதைத் தவிர?//
ஸ்ரீமத் பாகவதம், பிரம்மாவின் மூச்சுக்காற்றிலிருந்து சிவன் உருவானார் என்கிறது. திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி இப்படித் தொடங்குகிறது:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து
மைக்ரோசாஃப்ட் என்கார்ட்டாவில் இந்தத் தகவலைப் பொருத்தவரை தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
Many more happy returns of the day
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீடூழி வாழ்க!!
(Pl. translate into Tamil & publish
Dear Dondu
Wishing u many more happy returns.
Pl. compate Mr. Gurumurthy(thugluk) and Athiyaman (ur freind) articles on Globalisation.
Natrajan
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னும் கொஞ்சம் ஆண்டுகளுக்கு (அதாவது நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு) நீங்கள் வலைப்பதிய வேண்டுமென்று எல்லாம் வல்ல தென் திருப்பேர மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
62 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடலுக்கு!
25 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனதுக்கு!
சினிமா கேள்விகள்
1.தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் பழக்கம் உண்டா?
2.சிரிப்பு நடிகர்களில் உங்களுக்கு பிடித்தவர் அன்று, இன்று ?
3.சினிமாவில் பாடல்கள் தேவையா? உங்கள் கருத்து!
பொது கேள்விகள்
1.சமீபத்தில் நடந்த திரைப்பட துறையினரின் உண்ணாவிரதம்
நீர் பங்க்கீட்டிர்க்காக நடந்ததா அல்லது தமிழ் படங்களை ஓட விட மறுக்கிறார்கள் என்பதற்காக நடந்ததா?
2.முதன் முதலில் கைபேசி வாங்கிய பொழுது அதை கையாள சிரமம் இருந்ததா ?
3.மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அனுபவம் உண்டா?
(எனக்குண்டு அதனால் கேட்கிறேன்)
வால்பையன்
மிக்க நன்றி பத்ரி. நீங்கள் கூறியதை பதிவிலும் சேர்த்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி லக்கிலுக். நீங்கள் கூறியது போல நடந்து அப்போதும் நான் சமீபத்தில் 2008-ல் என்று எழுத உங்கள் பேரன் “தாத்தா, நீங்கள் சொன்னது சரிதான். இந்த மனிதர் அக்காலத்திலேயே இப்படித்தான் எல்லோரையும் டென்ஷன் செய்திருக்கிறார்” என்று கூறும்போது தமாஷாகத்தான் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எம்.கண்ணன், பாங்காக்.
இனி இந்த வார கேள்விகள்.
1. வெளிநாடுகளுக்குச் செல்ல விருப்பம் இல்லாதது ஏன் ? (பணம் காரணம் இல்லையென்று நீங்கள் சொன்னாலும் அதை ஏற்க இயலவில்லை). மும்பயிலும் டெல்லியிலும் வசித்ததால்தானே உங்களுக்கு அங்குள்ள நல்ல விஷயங்கள் தெரிய வந்தது. அதுபோல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தால் அங்கு உள்ள நல்ல விஷயங்களும் தெரிய வருமே ? எல்லாமே இணையம் வழி படித்து அனுபவிக்க முடியாது.
2. உங்களுக்கு மகன் உண்டா என தெரியாது. அப்படி இல்லையெனில் அதற்கான
வருத்தம் உண்டா ? இது பற்றி (ஆண் வாரிசு இல்லாததைப் பற்றி) உங்கள் எண்ணங்கள் என்ன ?
3. பதிவுகள் எழுதுவது, உங்கள் பழைய, தற்போதைய காண்டாக்ட்ஸ் தவிர உங்கள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு எப்படி விளம்பரம் செய்கிறீர்கள் ? புது கஸ்டமர்களை எப்படி பிடிக்கிறீர்கள் ? இது மாதிரி வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் உண்டு (தற்போதைய இந்திய நிலையில்).
4. எல்லா உணவுப் பொருட்களின் விலையும் ஏறி வருகிறதே ? இதற்குக் காரணம் அமெரிக்க பொருளாதார நிலை மட்டுமா ? இல்லை க்ளோபல் வார்மிங் எனப்படும் நிகழ்வால் வரும் நிலையா (பார்க்க: கோவி.கண்ணனின் சமீபத்திய சிங்கப்பூர் அரிசி தட்டுப்பாடு கட்டுரை)
5. உங்களுக்கு மிகவும் அதிக கோபம் வந்தது எப்போது ? யார் மீது ? ஏன் ? இது மாதிரி கோபம் வரும் சமயங்களில் எப்படி உங்களை பழைய சகஜ நிலைக்கு கொண்டு வருவீர்கள்.
many many happy returns of the day
(while ur 60th marriage- my first wishes latter am get best wishes through comments to my blog am some bloggers :-))
//ரோஜாவுக்கும் அதை விசேஷ உரமாகப் போடலாம். //silar manitha uram pOduvathu paRRi enna ninaikkiReergaL?
//ரோஜாவுக்கும் அதை விசேஷ உரமாகப் போடலாம். //silar manitha uram pOduvathu paRRi enna ninaikkiReergaL?//
பதில் அடுத்த வாரம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நாகை சங்கர்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்னுடைய கேள்விகளுக்கான பதிலுக்கு நன்றி.:)மேலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்:)
வணக்கம் டோண்டு அய்யா !
உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து
பல பயனுள்ள பதிவுகளை இட வேண்டுமாய்
வாழ்த்துகிறேன் !!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் டோண்டு அய்யா
ovvoru kelvikku keelum pathil endru thaniya pottu pathil adikka vendam. asattuthanamaga irukkirathu
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-நீண்ட நாள் பதிவுலக வாசகன்
Sir,
i just read this article exposing 'Sotha Subu' in some blogs .. Can you comment on this ?
சின்னக்குத்தூசி கட்டுரை
"ஆச்சார்ய ஸ்வாமிகள் - உங்களைப் பார்க்க விரும்புகிறார்" என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன்.
நமக்கு அதிசயமாக இருந்தது.
கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார்.
அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின் அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் - வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள்.
வசந்த மண்டபத்தின் வாயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.
கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார்.
உடனடியாக நாங்கள் சுவாமிகள் தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ - சமுக்காளமோ விரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.
இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார்.
நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம்.
ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்து அமர்ந்தார். ஒரு ஊழியர் - கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும் - ஸ்வாமிகளும் மட்டுமே இருந்தோம்.
"என்ன இதெல்லாம்" என்றார்.
"இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் - பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன" என்றோம்.
"இதெல்லாம் எதற்காக?" என்றார் ஸ்வாமிகள்.
"சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறான மனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்" என்றோம்.
ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.
பின்னர்,
"நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் 'விடுதலை' பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு,
"என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே..." என்றார்.
சின்னக்குத்தூசி: "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல"
ஸ்வாமிகள்: "ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடி காட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்."
சி.கு.: "தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் - வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் - தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர, தனிப்பட்ட முறையில் இருக்காது."
ஸ்வாமிகள்: "திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப் பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்."
சி.கு.: "தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் வைத்துக்கொண்டு, "எல்லாமும் வன்முறைதான்" என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லா இயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன. சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறை இயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா?"
நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச் சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒரு பிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது. தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.
அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் - பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.
ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி - இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகு எத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு, புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.
இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் - கலவரங்கள் - மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும் நடந்ததில்லை.."
- பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,
"பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே" என்று கேட்டார்.
நண்பர் ஞாநி சொன்னார்:
"எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறோம்.
'வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்' என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்."
ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.
சி.கு.: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."
ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.
'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்."
சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.
மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.
எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.
கிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."
ஸ்வாமிகள்: "யார் சொன்னது நாங்கள் தீண்டாமை அனுஷ்டிக்கிறோம் என்று; என்னோடு வந்து பாருங்கள் நான் ஒவ்வொரு ஊரிலும் சேரிகளுக்குச் செல்வதையும் சேரி ஜனங்களுக்கு நன்மை செய்வதையுமே பெரிய பணியாக ஏற்று நடத்தி வருகிறேன்."
சி.கு.: "அய்யா சொல்வதைக் கேட்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், ஸ்வாமிகள் சேரிக்கு போவதாலும், சேரி ஜனங்களுக்கு சில நன்மைகள் செய்வதாலும் என்ன பெரிய மாறுதல் வந்துவிட முடியும்?
காந்தியடிகள் நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை விடவா? ஆலயப் பிரவேசம் என்றூ ஊரூருக்கும் நடத்தினார்களே; அதனால் அரிஜனங்களின் நிலை சமூகத்தில் உயர்ந்துவிட்டதா? இப்போதும் மாலை நேரங்களில் எல்லாக் கோயில்களிலும் போய்ப் பார்க்கலாம். எத்தனை அரிஜனங்களை தங்களோடு மற்ற மக்கள் சமமாக நடத்துகிறார்கள். மேல்சாதி அமைப்புகள் - உயர்சாதி மனோபாவம் ஆகியவைகளை அப்படியே போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொண்டு சேரி ஜனங்களுக்கு நன்மை செய்கிறேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
ஏன் தங்களையே எடுத்துக் கொள்வோம்; அரிஜனங்களுக்கு நன்மை செய்வதாக சொல்கிறீர்கள். ஆனால் அதே அரிஜனங்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் குறுக்கே நிற்கிறீர்கள்."
ஸ்வாமிகள்: "நான் எங்கே குறுக்கே நிற்கிறேன்; யாரோ வழக்குப் போட்டால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பு?"
ஞாநி: "வழக்குப் போட்டவர்கள் யார்? உங்களைப் பின்பற்றுபவர்கள்தானே; நீங்கள் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே!"
ஸ்வாமிகள்: "ஏன் சொல்ல வேண்டும்? அது அவர்கள் இஷ்டம். ஆகமங்களுக்கு விரோதமானது என்பதால் அவர்கள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பு அப்படி வந்தால் - அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"
சி.கு.: "இந்து லா என்பதுதானே பெரும்பான்மை மக்களின் உரிமைக்கும் விருப்பங்களுக்கும் எதிராக இங்கே இப்படி எல்லாம் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் வேதம், ஆகமம், சாஸ்திரம் என்ற பேரால் நடத்தப்படும் இப்படிப்பட்ட அக்கிரமங்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது."
ஸ்வாமிகள்: "நாம் என்னதான் அரிஜனங்களுக்காக பாடுபட்டாலும் சில இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளூம் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. நான் தமிழ்நாட்டை சொல்லவில்லை. வடக்கே பம்பாய் போன்ற இடங்களில் தலித்பந்தர் போன்ற இயக்கங்கள் பயங்கர வன்முறையில் ஈடுபடுகின்றன. அது தேவை அற்றது."
சி.கு.: ஸ்வாமிகள் இப்போது நாம் ஆரம்பத்தில் சொன்ன ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். வடக்கே பெரியார் தோன்றாததாலும் - ஜாதி ஒழிப்பு இயக்கங்கள் இல்லாததாலும் - இன்னமும் அங்கு சாதிவெறி கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. ஆகவே அங்கு வன்முறையும் இருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சமூக மாறுதல் இவ்வளவு அமைதியாக நடந்து வருகிறதே; அதற்குக் காரணம் யார்? பெரியார்தான். பெரியாரின் அய்ம்பது ஆண்டு காலத்திற்கும் மேலான சாதி ஒழிப்புப் பணிகளால்தான் தமிழகத்தில் இவ்வளவு பெரிய மாறுதல், வன்முறை துளியும் இன்றி ஏற்பட்டிருக்கிறது."
ஸ்வாமிகள்: "அது வாஸ்தவம்தான். பெரியாரைப் பற்றி எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவர் யாரிடமும் துவேஷம் பாராட்டினதில்லை. ரொம்ப நாகரீகத்தோடு நடந்து கொண்டார். ஆனால், இப்போது அவரைப் பின்பற்றுபவர்கள் அப்படி இல்லை.
கருணாநிதியை எடுத்துக் கொள்ளூங்கள். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும். எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலேதான் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!"
சி.கு.: கருணாநிதி தங்களையோ - தாங்கள் சார்ந்துள்ள காமகோடி பீடத்தையோ தனிப்பட்ட முறையில் எதுவும் தாக்கிப் பேசவே இல்லை.
தாங்கள் தவறாகச் சொன்ன ஒரு கருத்துக்கு பதிலளித்துத்தான் அவர் பேசினார். தாங்கள் சொன்னீர்கள் 'தமிழர்களுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் போன்றவை. தமிழ் தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி' என்று.
இது எப்படி சரியாகும்? வழக்கு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் - யதார்த்தத்திலும் தாங்கள் சொன்னது பொருந்தவே பொருந்தாத ஒன்று. தாய்மொழி என்றுதான் இருக்க முடியுமே தவிர தந்தை மொழி என்று ஒன்று ஏது?
அப்படியே தாங்கள் சொல்வது போல தமிழர்களுக்கு சமஸ்கிருதம் தந்தை மொழி என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டே பேசுவோம்!
தமிழர்கள் எல்லோருக்கும் சமஸ்கிருதம் தந்தை மொழி என்றால் 97% பேரான மக்கள் அந்த மொழியைப் பயின்று பாண்டித்யம் பெற்றால்கூட கோயில்களில் அர்ச்சகராக முடியாது என்கிறீர்களே!
தமிழன் தனது தாய்மொழியான, தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது; புரியாது என்கிறீர்களே!
அப்புறம் எப்படி தமிழர்களுக்கு தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்பானேன்? எந்தத் தகப்பன் 'எனது மூன்று குழந்தைகள் மட்டுமே உயர்வானவர்கள். பாக்கி 97 பேர் மட்டம்' என்பான்?
ஸ்வாமிகள்: "நீங்கள் சொல்வது சரி அல்ல. இப்போதே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள்தான் பூஜை செய்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழில்தான் பூஜை நடத்துகிறார்கள்; அவர்களில் ரொம்பப் பேருக்கு தமிழ்கூட சரியாகத் தெரியாது..."
சி.கு.: "தமிழே தெரியாதவர்கள் - ஆயிரக்கணக்கான கோயில்களில் பூஜை நடத்துகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழை நன்றாகத் தெரிந்தவர் மீதமிருக்கிற கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்தால் என்ன தவறு?"
ஸ்வாமிகள்: "இன்னும் பத்துப் பதினைந்து வருடம் போனால் நிலைமை அப்படித்தான் ஆகப் போகிறது. இப்போதே பல கோயில்களில் உள்ள படாச்சாரியார் - சிவாச்சாரியார்கள் எல்லாம் தங்கள் வீட்டுக் குழந்தைகளை படிக்க வைத்து - வேலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இந்த வேலைக்கு யார் வரப் போகிறார்கள்?"
சி.கு.: பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புகிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள்! அப்படியானால் பிராமணன் என்று நீங்கள் குறீப்பிடுகிற ஜாதியினருக்கும் பிராமணரல்லாதார் என்று சொல்லப்படுகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
பிராமணன் பிரம்மத்தை அறிந்தவன்; காசு பணம் சம்பாதிக்க ஆசைப்படாதவன்; சமூகத்திற்கே வழிகாட்டியாக - உயர்ந்த ஒழுக்க சீலங்களை தனது சொந்த வாழ்க்கையில் அனுஷ்டித்து சமூகத்திற்கே உதாரணமாக இருப்பவன் என்று பெரியவாளின் 'தெய்வத்தின் குரல்' புத்தகம் கூறுகிறது.
ஸ்வாமிகள் சிரிக்கிறார்! "பெரியவாள் புஸ்தகங்களை எல்லாம் நன்றாக படித்திருக்கிறார்" என்று சீனிவாசனிடம் கூறுகிறார்.
நாம் தொடர்ந்து சொல்கிறோம் -
"இன்றைக்கு பிராமணர்கள் எல்லாம் பெரியவாள் தொகுத்துக் காட்டியிருக்கிற இலக்கணப்படிதான் இருக்கிறார்களா? நீங்களே சொல்லுகிறீர்கள்; பிராமணர்கள் வேறு வேலைக்குத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள் என்று!
அப்படியானால் 'பிராமணன்' என்று ஏன் அவர்கள் தங்களை இன்னமும் அழைத்துக் கொள்ள வேண்டும்? அவர்களுக்கு எதற்காக பிராமணர் சங்கம் என்று ஒன்று?"
ஸ்வாமிகள்: "நாடார் சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம் எல்லாம் இல்லையா? அதுபோல பிராமணர்களும் தங்களுக்கு என்று சங்கம் வைத்துக் கொள்வதில் என்ன தவறு?
சி.கு.: "தவறு என்று நான் சொல்லவில்லை. நாடார் குலப் பெருமக்கள் சங்கம் வைத்து என்ன கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் தமிழகத்தின் மொத்த ஜனத்தொகையில் இத்தனை சதவீதம் பேர் இருக்கிறோம். அவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இத்தனை சதவீத இடங்களை கல்வித்துறையிலும் உத்தியோகத் துறையிலும் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். வன்னியர்கள் ஆனாலும், நாயுடுகள் ஆனாலும், எல்லோருமே மக்கள் தொகை அடிப்படையில் - எங்கள் விகிதாச்சாரத்துக்கு ஒதுக்கீடு கொடு என்றுதான் கேட்கிறார்கள்.
ஆனால் ஜனத்தொகையில் 3 சதவீதத்தினர் பிராமணர்கள் சங்கம் வைத்து என்ன கேட்கிறார்கள். ஒதுக்கீடு என்பதே கூடாது; எல்லா இடங்களையும் திறந்து விடுங்கள். தகுதி - திறமை பேரால் நாங்களே வந்துவிடுகிறோம் என்கிறார்கள் இது எப்படி நியாயம் ஆகும்?
கருணாநிதியும் வீரமணியும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள பொதுஇடத்தில் ஒரு பத்து சதவீத இடத்தை முற்பட்டோருக்கு என்று ஒதுக்கீடு செய்யலாம் என்ற அளவிற்குக் கூறுகிறார்களே. அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மறுத்து "ஒதுக்கீடே கூடாது, தகுதி, திறமைதான் அடிப்படை" என்றூ பேசுகின்றவர்கள், "மற்ற சாதியினர் சங்கம் அமைக்கவில்லையா?" என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறதா? மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார ஒதுக்கீடு கேட்ட்கும் மற்ற சாதி சங்கங்களும், "ஒதுக்கீடே கூடாது; எல்லாம் எங்களுக்கே" என்று கூறும் பிராமணர் சங்கமும், அடிப்படையிலேயே வேறுபட்டவை ஆயிற்றே!
ஸ்வாமிகள்: "நீங்கள் என்னதான் சொன்னாலும் வெறும் பிராமணர் எதிர்ப்பு - பிராமணர்களைத் தாக்குதல்தான் திராவிடர் கழகத்தின் வேலையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது."
ஞாநி: "ஸ்வாமிகள் அப்படி நினைப்பது தவறு. வீரமணி, கருணாநிதி போன்றவர்களையே அழைத்து ஸ்வாமிகள் பேசலாம். ஸ்வாமிகள் சொல்கிற சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற காரியங்களில் அவர்கள் கண்டிப்பாக ஒத்துழைப்புத் தருவார்கள்."
ஞாநியின் இந்த யோசனைக்கு ஸ்வாமிகளிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.
சி.கு.: "சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவைகளில் கூட ஸ்வாமிகள் கருத்துக்கும் சீனியர் ஸ்வாமிகள் பெரியவாள் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.
பெரியவாள் "சாதிகள் ஒழியவேண்டியதில்லை". வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில், வகுக்கப்பட்ட சாதிகள் அப்படியே நீடிப்பதுதான் நல்லது என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள். ஆனால், தாங்களோ - சமீப காலமாக சாதி ஒழிப்புப் பணிகள் பற்றியும் பேசி வருகிறீர்கள்"
உரையாடல் நீண்டுகொண்டே போனது. ஒண்ணே கால் மணிநேரம் போனதே தெரியவில்லை.
வெளியே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. நிறைய பேர் கதவருகே நின்று உரையாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்கு மேலும் ஸ்வாமிகளின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஆகவே, -
"அய்யா! தங்களை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம்; இன்னொரு சமயம் மறுபடியும் வந்து சந்திக்கிறோம்" என்று சொல்லி எழுந்தோம்.
ஸ்வாமிகள் ஒரு ஊழியரை பெயர் சொல்லி அழைத்தார். அவரிடமிருந்து 'கல்கண்டு' வாங்கி எங்களுக்கெல்லாம் புரசை இலையில் வைத்து பிரசாதமாக வழங்கினார். பெற்றுக் கொண்டு விடைபெற்றோம்.
காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய தலைவரான ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்திக்க நண்பர் சின்னக்குத்தூசி சென்றபோது நானும் தற்செயலாக உடன்செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.
தன்னை, தன் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர்களை ஒருவர் சந்திப்பதோ, அளவளாவுவதோ தவறானதல்ல. எனினும், தன்னைப் பற்றி விமர்சித்து எழுத வேண்டாம் என்று மடாதிபதி - ஒரு துறவி சொல்லியனுப்புவதும், அதற்குப் பயன் இல்லாது போன நிலையில் குறைந்தபட்சம் சந்திக்கவாவது வரச் சொல்லுங்கள் எனத் தூதனுப்பியதும் - இன்றைய கலாச்சார, அரசியல், சமூக சூழ்நிலையில் எனக்கு சாதாரண விஷயங்களாகத் தோன்றவில்லை.
வாளால் அறுப்பினும், தாளில் பணியினும் ஒரே நிலையோடு இருக்க வேண்டிய பற்றற்ற சுவாமிகள், விமர்சனங்களுக்காக மனம் பதைப்பதும் விமர்சகரின் மனம்மாற்ற (கொள்கை ரீதியாக அல்ல) வழிகள் தேடுவதும் மதமும் அரசியலும் இணைய ஆரம்பித்திருக்கிற காலத்தின் கோலம்தான்.
சுவாமிகளைக் காணச் சென்றபோது அவரையும் தற்போது மடத்தின் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்று ஒதுங்கிப் போய்விட்ட முந்தைய மடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் ஒப்பிட்டு உலாவி வரும் கருத்துக்கள் என் மனதில் உலா வந்தன.
"பெரியவர் விளம்பரம் தேடாதவர். சின்னவர் பப்ளிசிடிக்கு அலைகிறார். பெரியவரோட ஞானம் சின்னவருக்கு வராது. பெரியவர் எங்கு போனாலும் நடந்து போவார். இவர் கார்ல போறார். பெரியவர் அனாசாரமா சேரிக்கெல்லாம் போகமாட்டார். சின்னவர் ஆகம விரோதமா சேரிக்கெல்லாம் போறார். பெரியவர் காலத்துல அவரோட ஒரு உறவினரைக்கூட மடத்துப் பக்கம் அண்டவிட்டதில்லை. இவர் நேர்மாறு. பெரியவர் இளைஞர்களை அட்ராக்ட் பண்ண முடியல. சின்னவர் இளைஞர் படையையே திரட்டியிருக்கார்."
இப்படி எத்தனை எத்தனையோ கருத்துக்கள். இச்சூழ்நிலையில் ஜயேந்திர சரஸ்வதிகளை சந்தித்து உரையாடச் செல்வதில் ஒரு பெரிய ஆவல் எனக்கு இருந்ததில் வியப்பில்லை.
மடாதிபதிகள் பொதுவிவாகாரங்களில் வெளிப்படையாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்த காலம் மாறிவிட்ட நிலையில் - இதில் முன்னணியில் இருக்கிற இந்த சங்கராச்சாரி - எப்படிப்பட்ட மனிதர், ஜாதியும் மதமும் எதற்காக இன்னமும் தேவை என்று கருதுகிறார் என்றெல்லாம் அறிய விரும்பினேன்.
நேரில் சந்தித்து உரையாடியபோது, அவருடைய பல கருத்துக்கள், அவரும், அவருடைய மடமும் காலங்காலமாக சார்ந்து நிற்கும் கருத்துக்களின் வெளிப்பாடாகவே அமைந்தன. அவை எனக்கு எந்த விதத்திலும் வியப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனாலும், அவருடன் சின்னக் குத்தூசியும் (ஓரளவு) நானும் நடத்திய விவாதத்தில் நான் உணர நேர்ந்த ஒரு சில விஷயங்கள் மட்டுமே இன்னும் என்னை நெருடிக் கொண்டிருக்கின்றன.
கலைஞர் கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவன், இவன் என்றெல்லாம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதைக் கூட முக்கியமானதல்ல என்று ஒதுக்கிவிடலாம்.
குன்றக்குடி அடிகளார் மார்க்சியம் பேசுவதற்கு ஜயேந்திர சுவாமிகள் கண்டனம் தெரிவித்ததைக் கூட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி சுவாமிகளுக்கு அக்கறையில்லை என்பதாக விட்டுவிடலாம். மார்க்சியத்தின் அடிப்படையே மனித நேயம்தான் என்று நான் சுட்டிக்காட்டியபோதும் சுவாமிகள் அதை ஏற்கவில்லை.
கலைஞர் கருணாநிதி காமகோடி பீடத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும், அதனால் தான் கோபமுற்றதாகவும் கூறிய சுவாமிகள் "என் பக்தி சுத்தமானதாக இருந்தால் (கருணாநிதிக்கு) ஏதாவது உடம்புக்கு வரணும்னு பிரார்த்தனை செஞ்சேன். அதேமாதிரி (கருணாநிதியை) படுக்கப் போட்டுடுத்து" என்று சொன்ன போது நானும் சின்னக் குத்தூசியும் ஒருகணம் அதிர்ந்து போனோம். ஒரு துறவி செய்கிற பிரார்த்தனையாக இது இல்லையே என்று அதிர்ச்சியடைந்தபோதும், விவாதத்தை ஆரோக்கியமாக நடத்த வேண்டும் என்ற அக்கறையோடு சின்னக்குத்தூசி தன் கருத்து ரீதியான கேள்விகளைத் தொடர்ந்தார். சுவாமிகளின் அருவருக்கத்தக்க பிரார்த்தனை அவரது மனித பலவீனத்துக்கு அடையாளமாய் நிற்பதைக் கூட ஒதுக்கிவிட்டு மேலே போவோம்.
எங்களிடம் பேசும்போது மணியனின் முரண்பாடுகளை பற்றி ஒப்புக்கொண்ட சுவாமிகள், மணியன் மதத்தையும் ஆன்மிகத்தையும் வியாபாரமாகவே நடத்துவதாகக் கருத்து தெரிவித்த சுவாமிகளிடம் - இதை நீங்கள் பொதுமேடையில் பகிரங்கமாகச் சொல்ல வேண்டாமா? அவர் செய்வதற்கெல்லாம் உங்கள் ஆசிர்வாதம் இருப்பதாக வெளியில் நிலவும் கருத்தை நீங்கள் தவறென்று கருதினால், அதை வெளியே சொல்ல வேண்டாமா? என்று நான் கேட்டபோது,
பதில் சொல்லாமல் சிரித்தார். "இதை வெளியில் சொல்ல நீங்கள் மறுத்தால், மணியன் செய்யும் காரியங்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்" என்று மீண்டும் நான் சொன்ன போது,
அப்போதும் சிரிப்பையே பதிலாக்கினார் சுவாமிகள்.
இதே போல் தமிழ் அர்ச்சனை பற்றியும் அரிஜனங்கள் அர்ச்சகராவது பற்றியும் பேசியபோது என் நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்வது சிக்கலாகிவிட்ட போது சிரிப்பையே உதிர்த்தார். அந்தச் சிரிப்பை தெய்வீகச் சிரிப்பு என்று மெய்சிலிர்த்து ஒருபோதும் எழுதிவிட முடியாது. அதில் தெய்வீகம் இல்லை. விஷமத்தனம் தான் இருந்தது.
எங்களைத் திருப்திப்படுத்த சில பதில்களைத் தருவதும் அதே நேரத்தில் அவற்றைப் பகிரங்கமாகப் பேசமறுப்பது என்ற போக்கும் விருப்பு வெறுப்பற்ற துறவிகளுக்கு சரியானதல்ல... சில குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக அப்படியெல்லாம் நடந்துகொள்வது, சில பல அரசியல்வாதிகளுக்கே உரிய குண இயல்பு.
ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் எனக்கு நெருடலாக நின்ற மற்றொரு விஷயத்துக்கு வருவோம்.
தன்னை பிராமணர்களின் தலைவர் என்று கூறுவதை வன்மையாக ஆட்சேபித்த சுவாமிகள், அந்தக் குறுகிய வட்டத்தில், தன்னை அடைப்பதை விரும்பவில்லை. அதைவிடப் பெரிய இன்னொரு வட்டமான இந்து வட்டத்துக்குள்ளே தன்னை குறுக்கிக் கொள்வதையே விரும்பினார்.
இந்துமதத் தலைவர்களில் ஒருவராகத் தன்னை எல்லோரும் அடையாளம் காண்பதையே சுவாமிகள் அவாவுவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. மதங்கள், சாதிகள், கடவுள் முதலியவற்றின் மீதான பற்றுக்கள் முற்றாக நீங்கும் காலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியின் விளைவாக வரும்வரையில், - மதத்தலைவர்கள் நம் சமூகத்தில் இருந்தே தீருவார்கள் என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது.
ஆனால், ஒரு மதத்தின் தலைவர்கள் இன்னொரு மதத்தின் மீது துவேஷம் பாராட்டுவதையோ, அதன் விளைவாக மக்களிடையே பிளவுகளூம் மோதல்களும் ஏற்படுவதையோ ஒருபோதும் சகிக்கலாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவராயினும் சரி, அற்றவராயினும் சரி, மதம் ஜாதி முதலியவற்றின் பெயரால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது.
ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சின்னக்குத்தூசியை சந்திக்க விரும்பியதன் இரண்டு அடிப்படை நோக்கங்களை எனக்கு அந்த விவாதத்தில் உணர முடிந்தது.
தன்மீதான விமர்சனங்களை நிறுத்தக் கோருவது ஒன்றாகும்; அதை தனிப்பட்ட பலவீனமாக விட்டுவிடலாம். இன்னொரு நோக்கமே முக்கியமானதாகிறது.
"இந்து மதத்தின் குறைகளை திராவிடர் கழகம் விமர்சிப்பது பரவாயில்லை. ஆனால், அதனால் முஸ்லீம்களுக்கு பலம் வந்துவிடுகிறது. எனவே, திராவிடர் கழகம் இந்து மதத்தையோ, சங்கராச்சாரியையோ விமர்சிப்பதற்கு பதிலாக, சேரிகளில் சங்கர மடம் செய்யும் நிவாரணப் பணிகளில், கைகொடுக்கட்டும்.
எது எப்படியானாலும் முஸ்லீம்களை வளரவிடும் விதத்தில் திராவிடர் கழகம் செயல்படக் கூடாது."
- என்பதுதான் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து வலியுறுத்திய விஷயம்.
அப்போது நான் குறுக்கிட்டு, "எல்லா மனிதரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே மதங்களின் நோக்கம்! இந்துவானால் என்ன முஸ்லீமானால் என்ன" என்று கேட்டேன்.
"அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு இந்துக்களை பற்றித்தான் கவலை. எல்லா மனுஷங்களைப் பத்தியும் கவலையில்லை" என்று ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடித்து சொன்னார்.
"அதெப்படி சொல்லலாம்? இது சரியாக இல்லையே என்று நான் மீண்டும் சொன்னேன்.
"முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் ஹிண்டுஸ் பத்திதான் அக்கறை எடுத்துக்க முடியும்" என்று மீண்டும் சுவாமிகள் சொல்லி விட்டார்.
இந்த இரண்டு விஷயங்களும்தான் என்னை நெருடின. அன்பு, சமரசம், மனிதநேயம் இவற்றையே மதம் போதிப்பதாக கூறுவதும், இப்படி போதிக்கிற மதத்தின் தலைவர்களாக உள்ளவர்கள் வெளியில் ஒன்றும் உள்ளே வேறொன்றுமாகப் பேசும் நிலை இருக்குமானால் -
மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். மத நம்பிக்கை என்பதும் ஜாதி நம்பிக்கை என்பதும் சமூக விஷயங்கள். எனவே, நம்மிடையே மோதல்களை உருவாக்க மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்துவதை எதிர்க்க கடவுள் நம்பிக்கையுள்ளவராயினும் அற்றவராயினும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.
அமைதியான தமிழகத்தில் மதக் கலவரங்களை அரசியல் ரீதியில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அண்மைக் காலத்தில் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவற்றின் விளைவாக 1983 மீண்டும் 1948 ஆக மாற்றப்பட்டு மனிதர்கள் ரத்த ஆறு ஓடுமானால் - அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பானவர்களின் பட்டியலில் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இருப்பார் என்றே என்னால் இப்போதைக்கு என்னால் அனுமானிக்க முடிகிறது.
ஏனென்றால் துறவியைச் சந்திக்கப்போன நான் தரிசித்தது காவியுடையில் இருந்த ஒரு "பூர்ஷ்வா" அரசியல்வாதியைத்தான்.
இது குறித்து நாம் எல்லோரும் வருத்தப்படவும், சிந்திக்கவும் கடமைப்பட்டவர்களாவோம்.
"சோ" மறுப்பு:
(15.4.83 'துக்ளக்' இதழில் சோ வெளியிட்ட மறுப்பு அறிக்கை இது)
அன்புடையீர், வணக்கம்.
தாங்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியுடன் நடத்திய கலந்துரையாடல் - அறிவார்ந்த கருத்துச் செறிந்த, இரண்டு வழக்குரைஞர்களின் போராகவே இருந்தது.
ஆனால், 3.4.83 'எதிரொலி' நாளிதழில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சின்னக்குத்தூசி கண்டெழுதியுள்ள கலந்துரையாடலில் சங்கராச்சாரியார், 'நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்" என்று கூறியுள்ளார்.
இது எவ்வளவு அபத்தம் என்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். 'லாஜிக்' என்பார்களே, 'தர்க்கவாதத்' துறைக்கு தாங்கள் முடிசூடா மன்னர் போன்றவர் என்பதை, தர்க்கவியலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவர் உணர்வர். இது தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று எழுதப்படவில்லை. ஏனென்றால், 'துக்ளக்' படிப்பவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பதைத் தாங்கள் பன்முறை கூறியுள்ளீர்கள்.
எனவே, என் போன்ற பலர் இதுபோல் சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு வருந்துகிறோம். வீரமணி சொல்லியிருக்கிற பதில்களையெல்லாம் இவர் உணர்ந்து அதற்கு மறுவினாவையும் தங்களிடம் அனுப்பியதுபோல், சங்கராச்சாரியார் கூறியுள்ளமை குறித்து தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அறிய என் போன்றவர்கள் ஆவலாயுள்ளோம்.
காஞ்சி சங்கராச்சாரியின் பேச்சைத் தாங்கள் தெளிவுறுத்தி, 'தன்னிலை விளக்கம்' அளிப்பின் என் போன்றோர் தெளிவுற ஏதுவாகும்.
- அ.மகிமை, வேலூர் - 63
(ஆசிரியர் குறிப்பு: இந்த வாசகர் குறிப்பிட்டிருப்பது போல், இந்த விஷயம்பற்றி நான் விளக்கமளிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.)
டியர் மிஸ்டர் வாசகரே!
ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளதாக 'எதிரொலி'யில் வெளியாகியுள்ளதை நானும் படித்தேன்.
ஆசார்ய சுவாமிகளிடமே நேரில் சென்று, இது பற்றி அவருடைய கருத்தைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.
பிரசுரத்திற்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார். ஆனால் தான் சொல்லாதவற்றை ஆங்காங்கே சேர்த்தும், சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டும், சம்பாஷணையின் சில பகுதிகளை முற்றிலுமாக விட்டும் 'எதிரொலி' கட்டுரை வெளியிட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
துக்ளக்கில் வெளியான வீரமணி பேட்டியைப் பற்றி பேசுகையில், 'ஹிந்து மத நம்பிக்கைகளைப் பற்றித்தான் எல்லோரும் தாக்குவீர்கள். மற்ற மதங்களைப் பற்றிக் கேட்டால், பதில் கூறாமல் நழுவி விடுவீர்கள். வீரமணியை சோ பேட்டி கண்ட போது இப்படித்தான் நடந்திருக்கிறது. சரியாகவே பதில் சொல்லவில்லை' என்று சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார் அவ்வளவுதான்.
நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூற வேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம்.
ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயம் இல்லை. இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சென்னையில் ஆசார்ய சுவாமிகள் முன்னின்று வெற்றிகரமாக நடத்திய கலாச்சார விழா, ஊர்வலம் போன்றவைகளுக்கு பிறகு எதிரொலி இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆசார்ய சுவாமிகளைச் சந்தித்த போதே அதுபற்றி வெளியிடாமல் திடீரென்று அந்த விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன்?
வீணாக அவருடைய பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்.
- சோ.
சின்னக்குத்தூசி எழுதிய பதில்
காஞ்சி காமகோடிபீடம் ஜீனியர் சங்கராச்சாரியாரை அவரது விருப்பத்திற்கிணங்கவே நாம் சந்திக்க நேர்ந்தது.
ஏழெட்டு தடவைகள் அவர் சொல்லி அனுப்பிய பின்னரே, நாம் அவரை சந்திக்க ஒப்புக் கொண்டோம்.
சங்கராச்சாரியார் போன்ற துறவிகள் குறைந்தபட்சம் பொய் சொல்லாத - நேர்மையானவர்களாகவாவது இருப்பார்கள் என்று நாம் நம்பினோம்.
ஜீனியர் சங்கராச்சாரியார் நமது நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்துத் தூள்தூளாக்கி விட்டார்.
- பொய்யர்
கடைந்தெடுத்த பொய்யர்
என்பவருக்கு ஒரு உதாரணம் வேண்டும் என்றால் காஞ்சி ஜீனியர் சங்கராச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டு உதாரணம் காட்டி விடலாம்.
அந்த அளவுக்கு - அவர் தம்மை வடிகட்டிய பொய்யர் என்று - துக்ளக் சோ மூலம் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
காஞ்சி சங்கராச்சாரியார் நம்முடன் பேசியது என்ன என்பதற்கு இரண்டு பேர் சாட்சியம் உண்டு. ஒருவர் - பரீக்ஷா நாடக அமைப்பின் தலைவர் ஞாநி.
- மற்றொருவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் அத்யந்த சீடரும் கார்ப்பரேஷன் பாங்கின் கெல்லீஸ் கிளை நிர்வாகியுமான சீனிவாசன்.
காஞ்சி ஜீனியர் - நம்மிடம் உரையாடியபோது - "நான் தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்"
என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!
ஆனால் இப்போது அவர் சோவிடம் அப்படிச் சொல்லவில்லை என்றூ மறுப்புத் தெரிவித்து விட்டார்.
சங்கராச்சாரியார் அப்படி மறுப்புச் சொல்லியிருந்தால் -
அவரைப்போல - ஒரு கடைகெட்ட பொய்யரை - துறவி என்று நம்பி - சந்திக்கச் சென்றதற்காக - வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரிடும்.
நம்மிடம் பேசியபோது மணியன் உள்ளிட்ட பலரையும் அவன், இவன் என்றே அவர் தரக்குறைவாகப் பேசினார்.
"மணியனுக்கும் எனக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. மணியன் பிசினஸ் பேர்வழி. இப்போது இந்து மதத்தை ஆதரிப்பதால் பிசினஸ் நடக்கிறது. நாளைக்கு கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மணியன் கருணாநிதியின் பின்னால் போய்விடுவான்"
என்று ஜீனியர் கூறியதை எல்லாம் - நாம் நாகரீகம் கருதி நமது பேட்டிக் கட்டுரையில் குறிப்பிடாமலே விட்டுவிட்டோம்.
அது மட்டுமல்ல;
பெரியார் கொள்ளையடித்துப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் ஜீனியர் சொன்னார்.
அப்போது நாம் ஜீனியரிடம்,
"அப்படிச் சொல்லாதீர்கள். அகில இந்தியாவில் பெரியார் ஒருவர்தான் பொதுமக்கள் தாங்களாக விரும்பி தமக்கு அளித்த சொத்தை எல்லாம் தன் வாழ்க்கைக்கு என்று பைசாகூட எடுத்துக் கொள்ளாமல் கோடிக்கணக்கில் சேர்த்து, அதைப் பொதுமக்கள் நன்மைக்காகவே டிரஸ்ட் எழுதிவிட்டுப் போன தலைவர்.
பெரியாரின் சிக்கனம் பிரசித்தி பெற்ற ஒன்று; கஞ்சன் கருமி என்றெல்லாம் சொல்லும்படியாக - ஒவ்வொரு பைசாவையும் செலவழிப்பதற்கு முன் பலமுறை யோசித்து செலவு செய்து, சிக்கனத்திற்கே ஓர் இலக்கணமாக திகழ்ந்தவர் பெரியார்.
பெரியர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் - அப்படிப்பட்ட பெரியார் - மக்கள் தமக்கு தந்த பொருள் எதையும் - தமது குடும்பத்தாருக்கு உயில் எழுதி வைத்து விடாது, பொது நன்மைக்கே ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்.
ஆனால் பெரியாரின் சமகாலத்தில் - திருவண்ணாமலை குகையில் ஒரு அரை நிஜாருடன் ஒரு சிறுவன் உட்கார்ந்தான். அந்த அரைநிஜார் சிறுவனே பின்னர் ரமண மகரிஷி என்றும் பகவான் ரமணர் என்றும் அழைக்கப்பட்டவர்.
அரை நிஜாருடன் குகையில் வந்து அமர்ந்த ரமணருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் காணிக்கை என்ற பேரில் ஏராளமாய் சொத்தை சேர்த்துத் தந்தார்கள்.
அந்த பகவான் ரமணரிஷி இறந்து போவதற்குள் என்ன செய்தார் தெரியுமா?
தனது தம்பியின் பெயருக்கு - உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார்.
ஆகவே, பெரியார் பற்றி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்" என்று ஒரு நீண்ட பிரசங்கம் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு விளக்கம் தந்தோம்.
ஜீனியர் சங்கராச்சாரி உடனே -
"கொள்ளையடித்த பணம் என்று நான் சொல்லவில்லை. கொள்ளைப் பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் சொன்னேன். கொள்ளை அழகு என்று சொல்வதில்லையா அதுபோல்; நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்"
- என்று தம்மைத் திருத்திக் கொண்டார்.
நாம் 'எதிரொலி'யில் எழுதிய பேட்டிக் கட்டுரையில் இந்தப் பகுதியையும் விட்டுவிட்டோம். காரணம், அவரே வருத்தம் சொல்லிவிட்ட பிறகு - அதை ஏன் எழுத வேண்டும் என்ற நாகரீகம் கருதி - பிரசுரிக்காமல் விட்டோம்.
அது போலவே,
"குன்றக்குடி அடிகளார் என்ன பேசுகிறார் என்றே அவருக்குப் புரியவில்லை! சமயத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். திடீர் என்று மார்க்ஸ் லெனின் என்றூ போய்விடுவார்" என்று ஜீனியர் கூறியதையும் நாம் அன்று பிரசுரிக்கவில்லை.
இப்படி நாம் பிரசுரிக்காமல் விட்ட பகுதிகள் அனைத்துமே காஞ்சி ஜீனியரின் உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டக் கூடிய பகுதிகள்தாம்.
எனினும் நாகரிகம் கருதி - நாம் அதனை எல்லாம் பிரசுரிக்காமல் விடுத்தனம்.
ஆனால் - சோவுக்கு ஜீனியர் சங்கராச்சாரி தெரிவித்துள்ள மறுப்பை படித்தபிறகு
- இந்த மாதிரி பொய்யர்களிடம்
- நாகரீகமாவது - புடலங்காயாவது என்ற வருத்தமே மேலோங்கி நிற்கிறது.
"நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக்கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்"
- என்று சொல்லவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சங்கராச்சாரி.
சங்கராச்சாரி எவ்வளவு பொய்யரோ - அந்த அளவுக்கு -
சோ - ஒரு நாணயங்கெட்ட - யோக்கிய தன்மை இல்லாத நபர்
என்பதும் சோ துக்ளக்கில் எழுதியுள்ள விளக்கத்திலிருந்து புலனாகிறது.
" 'சங்கராச்சாரியாரை நேரில் கேட்டேன்; அவர் அப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பு தெரிவித்து விட்டார்"
- என்று எழுதியிருந்தால் சோவை நம்மால் மதிக்க முடியும்!
'எதிரொலி'யில் சங்கராச்சாரியார் பேட்டி வந்த மறுநாளோ - அதற்கு மறுநாளோ, சோ - 'எதிரொலி'க்கு போன் செய்து
- ஞாநியிடமும்
- நம்மிடமும்
"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா? அதைப் படித்ததிலிருந்து ரொம்ப வேதனையா இருக்கின்றது"
- என்றெல்லாம் பிரலாபித்தார் சோ!
அதுமட்டுமல்ல;
"சங்கராச்சாரியார் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று வேறு திரும்பத் திரும்பக் கேட்டார். அப்படிப்பட்ட 'சோ' இப்போது என்ன எழுதுகிறார்?
- நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை"
என்று எழுதி இருக்கிறார் சோ.
எதிரொலி பற்றிய, அவநம்பிக்கையையும், சங்கராச்சாரியார் மீது தமக்குள்ள நம்பிக்கையையும் இந்த இரண்டு வாக்கியங்கள் மூலம் கோடிட்டு காட்டி இருக்கிறார் சோ.
இந்த இரு வாக்கியங்களும் சோ எவ்வளவு நாணயங்கெட்ட மனிதர் - யோக்கியத்தன்மை இல்லாதவர் என்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
(தொடரும்)
நன்றி: தீம்தரிகிட - ஏப்ரல் 2003
Advance Thanks
sathappan
ஜெயேந்திரர் பர்றி நான் டோண்டு பதில்கள் - 28.03.2008 பதிவில் எழுதியதையே இங்கு தருகிறேன்.
//காஞ்சி ஜெயேந்திரர் பற்றி சில வார்த்தைகள்...
பதில்: நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருக்கும் தோற்றமும் அளிக்க வேண்டும் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி கூறுவார்கள். அக்கருத்தின்படி பார்த்தால் ஜெயேந்திரர் தேறவில்லை என்றுதான் கூறவேண்டும். சந்தேகம் அவர்பேரில் அழுத்தமாகவே விழுந்துள்ளது. கேஸ் நடந்து முடிந்தால்தான் தெளிவு பிறக்கும். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெளிவு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே.//
ஆக எனக்கு ஜெயேந்திரர் பற்றி நல்ல அபிப்பிராயம் ரொம்ப இருந்ததில்லைதான்.
இப்போது நீங்கள் குறிப்பிட்ட சோ விஷயத்துக்கு வருகிறேன். ஏதோ நடந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். விடுதலை உண்மை உரைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இருப்பினும் வாதத்துக்காக நீங்கள் கூறுவதற்கு பதிலளிக்கிறேன். சோ அவர்கள் காஞ்சி மடத்து பக்தர். தனது மடாதிபதியை உங்கள் விருப்பத்துக்காக ஏன் எதிர்க்க வேண்டும்? அதே சமயம் ஜெயேந்திரர் கைதானதற்கப்புறம் நடந்த துக்ளக் மீட்டிங்கில் அரசுக்கு அவரை கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் கூறினார். அதே நேரத்தில் அரசு தேவையில்லாமல் செய்த குழப்பங்களையும் சாடினார் அவர். இன்றும் கூட குழப்பங்கள் நீடிக்கின்றன என்பது வேறு விஷயம். நான் இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகின்றேன் என்றால், சோ அவர்கள் இங்கு பின்னூட்டத்தில் காட்டப்பட்ட கட்டுரையில் பேசியதை அக்கால சூழ்நிலையுடன் பார்க்க வேண்டும். விடுதலை கும்பலுக்கு சோ ஒத்துழைப்பு தருவார் என ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும்? ஆக இன்று அக்கேள்வியை எழுப்புவதில் அர்த்தம் இல்லை.
இதே ஞாநியை இப்போது தி.க. காரர்கள் அவர் பார்ப்பனர் என்பதற்காக திட்டுவதிலிருந்தே விடுதலையின் பார்ப்பன எதிர்ப்பு தெரிகிறதே. அந்த விஷயத்தில் ஜெயேந்திரர் சொன்னது சரியே.
ஜாதியில்லை எனக் கூறிக் கொண்டே ஜாதி வெறியில் ஈடுபடுவது தி.க. காரர்களே. ராமசாமி என்ற ஊழல் நீதிபதியை இம்பீச் செய்ய பார்லிமெண்டில் முயற்சிகள் நடந்த போது அவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பதற்காகவே ஆதரித்தது தி.க. அதே தி.க. வீரவாஞ்சியின் விதவைக்கு அவர் பார்ப்பனர் என்பதற்காகவே பென்ஷன் தரக்கூடாது என்று சிறிதும் மனிதாபமில்லாது நடந்து கொண்டது. கீழ்வெண்மணியில் தலித்துகளை கொளுத்தியது நாயுடு சாதியை சேர்ந்தவன் என்பதற்காகவே பெரியார் அடக்கி வாசித்தார்.
இப்போது பெரியாரை என்னவென்று அழைக்கலாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்போது பெரியாரை என்னவென்று அழைக்கலாம்//
டோண்டு அய்யா,
பெரிய பொறிக்கியார் என்று அழைக்கலாம்.பொருத்தமாக இருக்கும்.
பாலா
இல்லை பாலா அவர்களே,
என்னதான் பெரியார் மேல் எனக்கு விமரிசனங்கள் இருந்தாலும், அவரை அம்மாதிரி அழைக்க எனக்கு மனம் வராது. 93 ஆண்டுகள் வாழ்ந்த அவரது நெடிய வாழ்க்கையில் பல திருப்பங்கள் வந்துள்ளன. நிலைமைக்கு ஏற்ப அவரும் எதிர்வினை புரிந்து வந்துள்ளார். ஆகவே சில முரண்பாடுகள் வருவது இயல்பானதே.
பெரியார் பற்றி நான் போட்ட இப்பதிவில் நான் மனப்பூர்வமாகவே அவரைப் பற்றி கூறியதை மீண்டும் இங்கே தருகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html
”தனது ஆருயிர் மனைவி நாகம்மாள் மறைந்த சமயத்தில் பெரியார் அவர்கள் மனம் விட்டு எழுதியதை இங்கே கீழே அப்படியே தருகிறேன்.
உண்மையிலேயே கூறுகிறேன் தனது இப்பேச்சால் பெரியார் அவர்கள் என் மதிப்பில் மிகவும் உயர்ந்தார். அவர் பொதுக்கூட்டங்களிலோ, தனது கட்டுரைகளிலோ என்னதான் கடுமையான சொற்களை உபயோகித்தாலும் நேரில் பழக இனிமையானவர் என்றும் தனக்கு மிகவும் இளையவர்களையும் வாங்க என்று மரியாதையாக விளிப்பார் என்றும் படித்துள்ளேன். ஹிந்து நிருபராக பணி புரிந்த எனது தந்தையார் நரசிம்மன் அவர்களே என்னிடம் கூறியிருக்கிறார் என்பதை நான் பெரியார் அவர்களது திருமணம் பற்றிய பதிவில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
இப்போது வி.க.தனது பதிவில் இட்ட பெரியார் அவர்களது பேச்சை அப்படியே கீழே போடுகிறேன். நன்றி விடாது கருப்பு மற்றும் குடிஅரசு இதழ் 14.5.1933. தடித்த சாய்வெழுத்துகளில் சில வரிகளை குறித்திருப்பது நான். என்னைக் கவர்ந்த வரிகள் அவை.
"நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக!
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
எப்படியிருந்தாலும், நாகம்மாளை ‘மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.
நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.
பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.
ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.
2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு.
ஆனால், அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!
'குடிஅரசு' 14.5.1933"
இப்போது மறுபடியும் டோண்டு ராகவன்.
மகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம்.
மறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான். அவர் ஏற்கனவே சிலப்பதிகாரத்தை பற்றி கூறியதுடன் நான் ஒத்துப் போனதை எழுதியுள்ளேன்”.
சாய்வெழுத்துகளில் நான் பதிவில் குறித்தது இங்கு அவ்வாறு வந்திருக்காது என நினைக்கிறேன். ஆகவே அவற்றைப் பார்க்க நீங்கள் நான் மேலே குறிப்பிட்ட பதிவுக்குத்தான் செல்ல வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான்.//
டோண்டு அய்யா,
நீங்கள் சொல்வது ஏற்க முடியாதவை.
1)இளங்கோ,கம்பன்,திருவள்ளுவர் போன்ற மாபெரும் இலக்கியப் படைப்பாளிகளை விடுங்கள்.ஒரு பட்டுக் கோட்டை பிரபாகர், ( ஏன் ஒரு குழந்தை லக்கி லுக்) அளவுக்கு கூட இலக்கியம் படைக்காத, அல்லது படைப்பதற்கான சரக்கு இல்லாத ஆள் ,உலகப் புகழ் பெற்ற இலக்கியவாதிகளை கேவலமாக சாடியது அவரை "பெரியார்" என்று போற்ற வைக்கத் தக்கதா?
2)ஆக்கபூர்வமாக எதையும் சொல்லாமல்,செய்யாமல்,24x7 ,யாரையாவது,எதையாவது திட்டுவதற்கு மட்டுமே பயன் பட்ட வாயை உடைய ஆசாமியை பெரியார் என்று சொல்வது பொருத்தமா அல்லது பொறிக்கியார் என்று சொல்வது பொருத்தமா?
3)நாட்டுக்கு சுதந்திரம் கொடுக்காதீர்கள் என்று ஆங்கிலேயன் காலில் விழுந்து கெஞ்சிய ஒரு பதரை பெரியார் என்று புகழ்வதா அல்லது பொறிக்கியார் என்று வர்ணிப்பது பொருத்தமானதா?
4)ஆரியம்,திராவிடம்,தென் நாட்டான்,வட நாட்டான் என்று பிரிவினை பேசியே மக்களை உசுப்பி விட்டு பணம் சேர்த்த(அத்தனை சொத்தையும் அந்த முண்டம் மானமிகுவிற்கு விட்டுச் சென்ற) ஒரு ஆசாமியை பெரியார் என்று சொல்வது பொருத்தமானதாஅல்லது பொறிக்கியார் என்பது பொருத்தமானதா?
5)தி மு க,தி க,பெ தி க,ம க இ க போன்ற கேவலமான கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி,கொள்ளை அடித்து ,அரசியல் பிசினஸ் செய்ய காரணமாக இருந்தவரை பெரியார் என்று சொல்லலாமா?இது தகுமா?
6)ஏதோ ஒரு சில சமயம் சில உண்மைகளை இவர் பேசினார் என்பதற்காக இவரை பெரியார் என்று சொல்வது ஓவர்.அதற்காக இவருக்கு நோபல் பரிசே கொடுக்க வேண்டும் என்று சொல்வது போல் இது இருக்கிறது.எப்படி, மஞ்ச துண்டை 'இனமானத் தலைவர்',வீரமணியை 'மானமிகு',அன்பழகனை 'பேராசிரியர்' என்று போற்றுவது எவ்வளவு கேவலமோ,எவ்வளவு பொருத்தமற்றதோ அது போல் ஒரு தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றுவதும் கேவலமான திராவிட கலாசாரத்தின் வெளிப்பாடே தவிர, வேறு என்ன என்று கேட்கிறேன்?இதை விட ஒசாமா பின்லேடனையே பெரியார் என்று சொல்லி தாடிக்கார தீவிரவாத கும்பல், போற்றுவதை ஏற்றுக் கொள்ளலாம்.
7)திராவிட தமிழ் தந்தையின் பாஷையிலேயே சொல்லவேண்டும் என்றால்:
அ)தாடிக்காரன் நல்லவன் இல்லை,இல்லவே இல்லை.
ஆ)தாடிக்கரனை நம்புபவன் முட்டாள்.
இ)தாடிக்காரனை பரப்புபவன் அயோக்யன்.
ஈ)தாடிக்கரனுக்கு சிலை வைப்பவன்,வணங்குகிறவன் காட்டுமிராண்டி.
பாலா
PS:
An "approver" can get a pardon and acquittal;but under no circumsatances shall he deserve to be garlanded,venerated and put on a pedestal as a noble soul.In EVRs case he was not even an Approver;He remained a criminal till the very last.Shall he desrve to be called a noble soul?Only Dravidian Tamils are capable of doing such an outrageous and patently stupid thing.
//93 ஆண்டுகள் வாழ்ந்த அவரது நெடிய வாழ்க்கையில் பல திருப்பங்கள் வந்துள்ளன. நிலைமைக்கு ஏற்ப அவரும் எதிர்வினை புரிந்து வந்துள்ளார். ஆகவே சில முரண்பாடுகள் வருவது இயல்பானதே.
//
வாழ்வில் பல திருப்பங்கள் வரும். ஒவ்வொரு திருப்பமும் ஒரு சந்தர்ப்பம். நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் தான் அந்தத் திருப்பங்கள். அப்படி நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம் பாதையைத் தீர்மானிக்கின்றன.
93 ஆண்டு கால வாழ்க்கையில் ஒரு திருப்பத்திலும் சரியான முடிவை எடுக்கத் தவறிய ஒரு மாபெரும் மூடனை 6 கோடி பேர் தலைவன் என்று சொல்வது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் என்று 2020 ல் கூட உணர மாட்டார்கள் போலிருக்கிறதே?
நீங்கள் சொல்வதுடன் ஒத்து போக இயலவில்லை பாலா அவர்களே. பரவாயில்லை, அது உங்கள் கருத்து.
அனானி அவர்களே, நீங்கள் வைத்து கொண்ட பெயரை மட்டும் சென்சார் செய்தேன், மற்றப்படி பின்னூட்டம் அப்படியே போடப்பட்டுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யா,
ஒரு கேள்வி:
அசுரன்,பனியன் தியாகு,ஜமாலன்,ஸ்டாலின்,ஸ்பார்டகஸ்,வலையுலக ஓ என் ஜி சி பெரியார் அய்யா,கொளத்தூர் மணி,தமிழ் குரல், போன்ற ம.க.இ.க/பெ தி க பொலிட் பீரோ ஆசாமிகள் வசதியாக வாழ்ந்து கொண்டே நக்சல் தீவிரவாதிகளாக இருப்பதற்கு காரணம் என்ன?
1) சந்தா வசூல் செய்து ஓசியில் சிலி பீஃப்,விஸ்கி,கோல்ட் ஃப்ளேக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாலா?
அல்லது,
2)நக்சல் தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவார்கள் வாழ்விழந்தும்,வன்முறையிலும் துடி துடித்து மாளும் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் என்ற குரூர எண்ணத்தாலா?
விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.
பாலா
ராகவன் சார்,
தங்களுக்கே உரிய பாணியில் சுவையாக, வெளிப்படையாக பதில் கூறியுள்ளீர்கள்...
//நீங்கள் கூறுவது வீரவைஷ்ணவர்கள் எனக் கூறப்படுபவர்கள் விஷயத்தில் உண்மையே. ஐயங்கார்களில் சமாசனம் என்று ஒரு சடங்கு உண்டு. இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைகள் நெர்ப்பால் பொறித்து கொள்வதாகும் அது. அதே போல அடுத்த கட்டமாக பரண்யாசம் என்ற சடங்கும் உண்டு. அதை செய்து கொண்டால் பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் சிவன் கோவிலுக்கு போகக் கூடாது என்பது.
//
ராஜகோபால் சடகோபனுக்கு நீங்கள் கூறிய பதிலில், "சமாஷ்ரயணம்" என்றழைக்கப்படும் வைணவச் சடங்கை, 'சமாசனம்' என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் ! ஸ்ரீமன் நாராயணனின் மேல் பக்தி கொண்டவர்கள் (அவனையே கதி என்று நம்பி வந்தவர்கள்) அனைவருமே ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகிறார்கள், அவர்கள் அனைவருமே சாதி பேதமின்றி 'சமாஷ்ரயணம்' பெறுவதற்கு உகந்தவர்கள் ஆகிறார்கள் என்று வைணவ சாத்திரம் கூறுகிறது. பிரம்மோபதேசமும் அப்படியே !
"பரண்யாசம்" அல்லது 'பிரபத்தி' என்பது பூரண சரணாகதித்துவத்திற்கான வழிவகையைக் (means) குறிக்கிறது.
பரண்யாசம் = பரம் + ந்யாசம்
'nyAsam' means saraNAgathy
'Bhara' is Bhaaram - the burden.
BharanyAsam is to surrender one's self and one's bhaaram to Sriman Narayana.
One can be initiated to 'BharanyAsam' by a Guru. பரண்யாசம் எப்போது ஒரு சடங்கானது என்று தெரியவில்லை. அது போலவே, பரண்யாசத்திற்கும், சிவன் கோயில் செல்வதற்கும் சம்பந்தம் கிடையாது !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
வைணவப் பாரம்பரியத்தில் வாழ்த்த வயது ஒரு பொருட்டு இல்லை என்பதால்,
"இன்னுமோர் நூற்றாண்டு இரும்!" என்று வாழ்த்துகிறேன்.
மேலும், உங்களை 'இளைஞர்' என்று கூறிக் கொண்டு தாங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பதால், உங்களை வாழ்த்தும் தகுதி பெற்றவனாகிறேன் ;-)
எ.அ.பாலா
நன்றி பாலா அவர்களே. நீங்கள் அளித்த திருத்தத்தை நன்றியுடன் ஏற்று பதிவில் சேர்த்து விட்டேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சமீபத்தில் 1960களில் பார்த்த நங்கநல்லூர் - தற்போதைய நங்கநல்லூர் ஒப்பிடுக. Infrastructure மட்டுமன்றி மக்கள் பெருக்கம், கலாச்சார மாற்றம் போன்றவற்றை பற்றியும் எழுதவும்.
இதை கேள்வி பதில் பகுதியில் சொன்னால் ரொம்ப சின்னதாக போய்விடும் என்றால் தனிப்பதிவாகவே இடவும்.
அப்படியே ஆகுக, லக்கிலுக்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய நகரங்கள் அனைத்துமே அழுக்கும் தூசுமாகவும், மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் இருக்கின்றன. சுத்தமாக இருப்பதே இல்லை. இதற்கு என்ன காரணம் ? அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது என்பது மட்டும் உறுதி.
ராஜஸ்தான் மாநிலத்தில் கோவர்த்தன மலையை நம் பி.ஜே.பி அரசு தகர்ப்பது உண்மையா?
Post a Comment