பாண்டிய நக்கீரன்:
1. திடீரென்று எப்படி தங்கபாலு தமிழக காங்கிரஸ் தலைவரானர்?
பதில்: த.மா.கா. வை சேராதவர்கள் முறை போலிருக்கிறது. மேலும் இவருக்கென சொந்தபலமும் இல்லை என்கிறார்கள். இவர் மேல் விரோதமும் அவ்வளவாக இல்லை எனவும் கேள்வி. ஆனால் சிலமாதங்களிலேயே அது வேண அளவுக்கு வளரும் என்பதும் தமிழக காங்கிரசின் எழுதப்படாத விதி.
2. அவர் அம்மையார் விசுவாசியே?
பதில்: இப்போதைக்கு அதனால் என்ன பலன்? சோனியாவுக்கும் ஜெக்கும் முட்டுகிறதே.
3. கலைஞர் எப்படி ஒத்துக்கொண்டார்?
பதில்: அவர் சோகம் அவருக்கு. தில்லி கலாட்டாவிலே காங்கிரசால் பாமகாவை கைகழுவ முடியாமல் போயுள்ளதே என்று அவர் புலம்புவதாக துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன் வந்துள்ளது பொருத்தமே.
4. பா.ம.க. தலைவரும் அவர் சம்பந்தியும் (கி.சாமி) இப்போ ஒரே நிலையிலா?
பதில்: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என்பது சமீபத்தில் 1970-களிலேயே டம்மியாக்கப்பட்டுவிட்டது. கிருஷ்ணசாமியோ, ராமசாமியோ, கோவிந்தசாமியோ யாராக இருந்தாலும் சில நாள் விருந்தாளிகள் அவ்வளவே.
5. வாலிழந்த நரிகள் என்ன செய்யும்?
பதில்: ஒப்பாரி வைக்கும்.
6. திடீரென்று விஜயகாந்த் பாசம் தி.மு.காவில், பார்த்தீர்களா?
பதில்: அப்படி என்றா சொல்கிறீர்கள்? அடுத்த கேள்விக்கு வரவும்.
7. அவரும் அடக்கி வாசிக்கிறாரே?
பதில்: எங்கு வாசிக்கிறார்? ஆளும் திமுகவினரை சுட்டுக் கொல்லுங்கள் என்று பேசுவது அடக்கி வாசிப்பது என்றால், அடக்காமல் வாசித்தால் என்ன ஆகும்?
8. திரை மறைவில் நடப்பது என்ன?
பதில்: பிற்கால பேரங்களுக்கு தயார் ஆதல்.
9. அ.தி.மு.க தலைவி தேர்தலுக்கு ரெடியாமே?
பதில்: அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம், தன்னை முக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும். கருணாநிதி அவர்கள் மேலும் அசட்டு காரியங்கள் செய்ய வேண்டும். ஆனால் போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா அசட்டுத்தனம் செய்து கருணாநிதியை ஜெயிக்க வைத்து விடுவார் போலிருக்கிறது. அதில் இருவருக்கும் சரியான போட்டியே நிலவுகிறது.
10. ராமதாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது என மதுபான அரசரின் நெருக்கடியாமே?
பதில்: அடிமடியில் கைவத்ததால் வரும் கோபம்.
11. சிங் அரசு தப்புமா?
பதில்: அணு ஆயுத ஒப்பந்தம் வரைக்குமாவது இருப்பது நல்லது என சோ அவர்கள் கூறுவதை நானும் ஏற்கிறேன்.
12. ஒருவேளை தேர்தல் வந்தால் இடதுகள் என்ன செய்யும்?
பதில்: தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறதே. அவற்றுக்கே தெரியாது தாம் என்ன செய்யப் போகிறோம் என்று. எனக்கு மட்டும் தெரிந்து விடுமா என்ன?
13. ஆந்திர நாயுடுவுக்கு சிரஞ்சீவி கை கொடுக்கிறார் என்பது உண்மையா?
பதில்: தெரியவில்லையே. ஆந்திரா விஷயங்களை பற்றி நான் தற்சமயம் ஏதும் படிக்கவில்லை.
14. 3-வது அணி கோவிந்தோ! கோவிந்தோ!கோவிந்தோ!
பதில்: நானும் என் தரப்புக்கு ஒரே ஒரு கோவிந்தா போட்டுவிடுகிறேனே.
15. கடைசியில் கறுப்புபணத்துக்குத்தான் இறுதி வெற்றியா?
பதில்: எப்போதுமே. அது இல்லாமல் தேர்தல் ஏது?
16. இவர்கள் எல்லாம் துக்ளக் வாரிசுகள் போல் செயல்படுகிறார்களே?
பதில்: அது துக்ளக்குக்கு தெரியுமா?
17. இனி துக்ளக் சோவுக்கு நல்ல எழுத்து வேட்டை? இல்லையா?
பதில்: அவருக்கு எழுத விஷயத்துக்கு என்ன பஞ்சம்?
18. அம்பானிகளில் முந்துவது தம்பி போலுள்ளதே?
பதில்: ரொம்ப பணம் அளவுக்கதிகமாக சேர்வதும் நல்லதற்கல்லதான் போலிருக்கிறது.
19. அப்பாடி மீண்டும் அமிதாப்பச்சன் ராஜிவ் குடும்ப வளையத்துக்குள்?
பதில்: போன முறை போல இம்முறையாவது கசப்பான அனுபவம் கிட்டாதிருக்கட்டும்.
20. இந்தியா டுடேயின் மு.கருணாநிதியின் காவியப் பயணம் (june 2008-சிறப்பிதழ்) பற்றிய உங்கள் விரிவான, விளக்கமான விமரிசனம்?
பதில்: நான் அக்கட்டுரையை படிக்கவில்லை, இந்தியா டுடே வாங்குவதில்லை.
எழில் அரசு:
டோண்டு சார் இந்த( 11 to 20) பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)
11. கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதும்பானாம்!
பதில்: அவன் கிடக்கிறான் வெண்ணெய்.
12. வீடு பத்தி எரியும்போது சுருட்டு புடிக்க நெருப்பு கேட்டானாம்!
பதில்: அப்படி கேட்டு உதைவாங்கிய பிறகு, இல்லை என்பதை கோபமில்லாமல் சொல்வதுதானே என வருத்தம் வேறு பட்டானாம்.
13. வச்சா குடுமி செரச்சா மொட்டை!
பதில்: பெண்ணுக்கு கல்யாணம் செய்யணும்னு வரச்சே வரதட்சிணைக்கு எதிர்ப்பு, அதுவே பிள்ளைக்கு கல்யாணம்னு வரச்சே வரதட்சணைக்கு ஆதரவு.
14. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை வெரட்டிச்சாம்!
பதில்: அழகிரி மற்றும் ஸ்டாலினை வைத்து காமெடி எதுவும் செய்யவில்லையே?
15. பெண்ணென்றால் பேயும் இறங்கும்!
பதில்: அதற்கு பேய் பூர்வாசிரமித்தில் ஆணாக இருந்திருக்க வேண்டும்.
16. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்!
பதில்: அப்போ ஐந்து பிள்ளைகள் பெற்றால் அங்கிள் ஆவானா?
17. அரசனை நம்பி புருஷனை கைவிடாதே!
பதில்: இதற்கு நேர்மறையான பதில். அரச மரத்தை மட்டும் சுற்றினால் போதாது. பிள்ளை பெற புருஷன் தயவும் வேண்டும். அதுதான் ஒரிஜினல் அர்த்தம்.
18. மருந்தும் விருந்தும் மூணுநாளைக்குத்தான்.
பதில்: ஏனெனில் நாலாவது நாளைக்கு முறையே நோய் குணமாகும் மற்றும் உண்டாகும்.
19. ஜாதியறிஞ்ச புத்தி, குலமறிஞ்ச ஆசாரம்
பதில்: டோண்டு ராகவனுக்கு தர்ம அடி வாங்கித் தராமல் விடமாட்டீங்க போலிருக்கு.
20. ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும்.
பதில்: அதுக்காக பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடினால் ஏதாவது பிரேக் ஆகிடும்.
குசேலன்:
1. Recently Tamil Nadu govt. gave Rs.7 lakhs subsidy for 70 films. The total amount of this wasteful subsidy comes near 5 crores. I think this is enormous waste of poor peoples' tax money. Do you think such blatant and wasteful spending in govt. can be controlled by any means?
பதில்: ஓட்டு சீட்டு எதற்காக தருகிறார்களாம்?
கேள்வி கந்தசாமி:
1. புஷ்பவனம் குப்புசாமி-அனிதா மற்றும் அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதிகளின் ஊடல்களுக்கு என்ன காரணம்? மீடியாவால் பெரிதுபடுத்தும் நடவடிக்கையா இல்லை நெசமாலுமே புகைச்சல்தானா?
பதில்: பொதுவாழ்க்கையில் வருபவரானாலும் அவர்தம் தனிவாழ்க்கையை பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இந்த விஷயத்தில் எனது ரோல்மாடல் சோ அவர்கள்.
2. களத்தூர் கண்ணம்மாவைவிட ஆனந்த ஜோதியில் கமல் ரெட்டைவேடத்தில் கலக்கலான நடிப்பு இல்லையா? அதெப்படி அந்த வயதிலேயே இவ்வளவு சூப்பர் நடிப்பு?
பதில்: ஆனந்த ஜோதியில் எங்கே இரட்டை வேடம்? இல்லையே. எனக்குத் தெரிந்து "பார்த்தால் பசி தீரும்" படத்தில்தான் இரட்டை வேடம்.
3. அதெப்படி இந்து என்.ராம் திடுமென அடுத்த பிரதமர் அத்வானிதான் என முதல் பக்கத்திலேயே பேட்டியுடன் வெளியிடுகிறார் (11-ஜூலை ஹிண்டு). கம்யூனிஸ்ட் தோழர்கள் கரத்தைவிட யெச்சூரி தான் பழக்கமா? யெச்சூரிக்கு வாபஸ் வாங்கியதில் உடன்பாடு இல்லாததால் இடதுசாரி மீட்டிங்குகளில் பங்கு கொள்ளவில்லையே? லண்டன் சென்று விட்டாராமே?
பதில்: ராமா அப்படி? அட ராமா?
4. கம்யூனிஸ்டுகளின் நட்பால் (நானே ஒரு கம்யூனிஸ்ட் என அடிக்கடி சொல்லும்) கருணாநிதி அரசுக்கு எதிராக வாக்களிக்க தங்கள் எம்.பிக்களை கட்டளையிடுவாரா? எப்படியும் அடுத்த பிரதமர் அத்வானிதான் என ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில் - ஒருக்கால் பாஜக பக்கம் சாய நினைத்தால்? இந்த மாதிரி சமயங்களில் முரசொலி மாறன் கருணாநிதிக்கு நல்ல பக்கபலமாய் இருந்திருப்பார். தற்போது யாரிடம் யோசனை கேட்பார் கருணாநிதி?
பதில்: தன் நலனுக்கு ஏற்ப செயல்படுவார், எல்லோரையும் போல.
5. குசேலன் ரஜினி போல நீங்களும் இளமையாய் காட்சியளிக்க வெள்ளை உணவுப் பண்டங்களை நிறுத்திப் பார்க்கும் எண்ணம் உண்டா?
பதில்: நான் இளமையாக உணர்வதையே முக்கியமாக நினைக்கிறேன். அவ்வாறே உணர்கிறேன். அது போதும்.
6. உங்களுக்குப் பேரப்பிள்ளைகள் உண்டா? அவர்களிடமிருந்து சமீபத்தில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
பதில்: இல்லை.
7. 'அண்ணலும் நோக்கினான்' பதத்தில் 'அண்ணல்' என்பதற்கு என்ன பொருள்?
பதில்: தலைவன், இங்கு ஏகபத்தினிவிரதன் ராமன்.
8. துக்ளக் தவிர என்னென்ன தினசரி, வார, மாத இதழ்கள் காசு கொடுத்து வாங்கி படிக்கிறீர்கள்?
பதில்: விகடன், ஜூ.வி., குமுதம், குமுதம் ரிப்போர்டர், கல்கி, விகடன், பெண்மணி, கண்மணி ஆகியவை.
9. ஐயங்கார் வீட்டுப் பெண்கள் அழகா? ஐயர் வீட்டுப் பெண்கள் அழகா? ஏன்?
பதில்: பெண்கள் அழகு. ஆணுக்கும் பெண்ணுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன, வாழ்க அந்த வேறுபாடுகள்.
10. ஹரிஹரன் என்றொரு மெலடி பாடகர் சுமார் 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் சிறந்த பாடல்களைப் பாடினாரே - அவர் பாடிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த மெலடி எது?
பதில்: டி.எம்.எஸ்., எஸ்.பி.பி. பி.பி.எஸ். ஆகிய சிலரது பாடல்களைத்தான் பாடியவர் பெயருடன் கேட்டு அனுபவித்துள்ளேன். மற்றப் பாடல்கள் அவை நன்றாக இருந்தால் போதும். பாடியவர் யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆகவே ஹரிஹரனை கேள்விப்பட்டிருந்தாலும், குறிப்பாக அவர் பாடியது என பார்த்து ரசிக்கவில்லை.
தென்காசி:
1. உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் முன்பைவிட பரவலாய் தெரிவதன் காரணம்?
பதில்: எல்லாம் உடனுக்குடன் வெளியாகி தகவல் தொடர்பு வசதிகளும் பெருகியதால் அப்படி ஒரு தோற்றம். மற்றப்படி எல்லாமே அப்படியேதான் உள்ளன.
2. சமுக, பொருளாதார மாற்றங்கள் சுதந்திரத்தை கொடுத்த வேளையில் குடும்பங்களில் இணக்கமில்லாச் சூழ்நிலை நெருடலை தருகிறதே?
பதில்: பொருளாதார மாற்றங்களால் போன தலைமுறையில் கூட்டு குடும்பங்கள் அவற்றின் தேவை இல்லாமல் போனதால் அழிந்தன. இப்போது அவை மேலும் சின்னதாகின்றன. தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமி என்ற உறவுமுறைகளின் அர்த்தமே மறந்து போய்விடும் போலிருக்கிறது.
3. மனிதர்களில் சுயநலப் போக்கு கூடிக் கொண்டே போகிறதே?
பதில்: இதில் புதிதாக ஒன்றும் இல்லை. கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என மகாபாரதம் முடியும் தருவாயிலேயே தருமபுத்திரர் கூறிவிடுகிறார்.
4. மனிதர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் தேவையற்ற பொருட்களுக்காக கடன் வாங்கி அல்லலுறுகின்றனரே? உதாரணமாக கார் வாங்கப் பணமில்லா விட்டாலும் கார் கடன் வாங்கி தவணை கட்ட முடியாமல் உள்ளவர்கள் பற்றி?
பதில்: கார் வாங்கத் தேவையேயில்லை என்று நான் ஏற்கனவே கூறியதை இங்கு மறுபடியும் கூறுவேன். அதை வாங்கிக் கொள், இதை வாங்கிக் கொள் என தொல்லை செய்யும் டெலிமார்க்கெட்டிங் என்னும் கூத்தை எப்படி சமாளிப்பது என்றும் எழுதியுள்ளேன்.
5. பரபரப்பு உலகில் வேலைக்குப் போகும் பெண்களின் மன அழுத்தம் பற்றி?
பதில்: அலுவலகத்தின் வேலைகளுடன் கூடவே வீட்டு வேலைகளும் அவர்தம் தலையில்தான் பாவம்.
ராமகிருஷ்ணஹரி:
1. ராகுகாலம் சும்மா o.k அப்போ எமகண்டம்? (ராகு கேது சம்பந்தபட்ட விசயம்)?
பதில்: அவை ஒன்றிலுமே நம்பிக்கை இல்லை.
2. பகுத்தறிவு பேசுகிறவர்களில் எத்தனை பேர் ராகுகாலத்தில்.எமகண்டத்தில் தனது, தனது வீட்டு நற்காரியங்களை செய்துள்ளார்கள், பட்டியல் தரவும்?
பதில்: சீர்திருத்தத் திருமணங்கள் ராகு காலத்தில்தான் சாதாரணமாக நடத்தப்படுவதாகக் கேள்வி. அப்போது நடத்தவேண்டும் என்னும் வற்புறுத்தலால் அவர்களை அறியாமலே அதற்கு முக்கியத்துவம் தருவதுதான் நிஜம்.
3. தேர்தல் சமயத்தில் அத்துனை கட்சிகளும் ஜோதிடர் வாசலில் தவம் இருப்பது உங்களுக்கு தெரியாத ஒன்றா? (நாத்திக கட்சிகள் உட்பட-திரை மறைவில்)
பதில்: தெரியும்.
4. கட்சிகளின் தேர்தல் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள யாகங்களை நடத்துவதில்(மறைமுகமாக- முற்போக்கு வாதிகள்) உள்ள உண்மையை மறுக்கமுடியுமா?
பதில்: யாகங்கள் நடத்துகிறார்கள் என்ற உண்மையை மறுக்க இயலாது.
5. அறிவியல் சம்பந்தத்துடன் நமது யோகிகளும்,ரிஷிகளும்,முனிவர்களும்,அவதார புருஷர்களாய் தனது ஞானத்தால் வானையும் வானில் உலாவும் கோள்களின் இயக்கத்தையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு உள்ளதை எப்படி மறுக்கிறீர்கள்?
பதில்: வானியலையும் ஜோசியத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
6. இதில் திருவாளர் முரளி மனோகருக்கு உடன்பாடா?அவர் கருத்து?
பதில்: அவனுக்கென்ன, நான் மறுக்கச் சொன்னால் மறுப்பான் இல்லையென்றால் பேசாமல் இருப்பான். அவன் வேறு நான் வேறல்ல.
7. கல்கியும் உங்கள் கட்சி போல் உள்ளதே?
பதில்: ஆமாம். அவர் என் கட்சி என்று கூறுவதை விட நான் அவர் கட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
8. இதேபோல் இறை நம்பிக்கை, பூஜை, புனஸ்காரம், மறுபிறப்பு, வேத உபநிஷத்துக்கள், மனு சாஸ்திரம் நம்பிக்கை உள்ளவர்களில் உங்கள் ஆணியில் இன்னும் யார் யார் உள்ளனர்? தெரிவிக்கவும்.
பதில்: இறை நம்பிக்கை மற்றும் மறுபிறப்பில் எனக்கும் நம்பிக்கை உண்டு. மீதி விஷயங்கள் பற்றி கருத்து ஏதும் லேது.
9. கோயில்களில் கூட்டம் குவிவதைப் போல் ஜோதிடப் புத்தகங்கள்,ஜோதிட வார,மாத இதழ்கள், செல்பேசிகள் கூட தினப் பலன் இப்படி களை கட்டும்போது தாங்கள் மட்டும்?
பதில்: என் வழி தனி வழி.
10. காக்கும் பெருமாள் மேல் மிகுந்த பக்தி உடையவரிடமிருந்து இப்படியா எனக் கேட்பவர்க்கு உங்கள் பதில்? (பக்தி வேறு, ஜோதிடம் வேறு எனும் பதில் தவிர்த்து - சான்றுகளுடன் தங்களின் பதில்) (துணை கேள்விகள் தங்களின் சான்று பூர்மான பதில்களை பார்த்த பிறகு)
பதில்: இதென்ன போங்கு? நீங்கள் விடும் எல்லா ஸ்டேட்மெண்டுகளையும் ஏற்று கொள்ள வேண்டுமா என்ன. பக்திக்கும் ஜோசியத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றுதான் நான் அடித்து கூறுவேன்.
அவனும் அவளும்:
1. டோண்டு சார் ஆதரிக்கும் republican அரசாங்கம் மோடி அவர்களுக்கு விசா அளிக்க மறுக்கிறதே ? இதனால் தங்களுது ஆதரவின்றி US அரசாங்கம் கவிழும் அபாயம் உள்ளதா? இல்லை வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க கூடுமா?
பதில்: :))))))
2) இந்தியாவில் இருந்து படிக்க செல்லும் மாணவனை போல் மோடி அவர்கள் மறுபடியும்/மறுபடியும் விசா அப்ளை செய்வதன் நோக்கம் என்ன? இதைதான் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்று கூறுகிறோமா?
பதில்: மோடி அவர்கள் உண்மையிலேயே அவ்வாறு செய்திருந்தால் தவறுதான். மதிக்காதவர் இடத்துக்கு செல்லக் கூடாது என்பதை உணர்தல் நலம்.
3) தாங்கள் சமீபத்தில் குஜராத் சென்றது உண்டா?
பதில்: இல்லை.
4) சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த நெல்சன் மண்டேலாவுக்கான open air concert தொலைகாட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததா? Amy Whitehouse performance எப்படி இருந்தது?
பதில்: அடேடே தெரியாமல் போய் விட்டதே, எப்போது நடந்தது அது?
5) தாங்கள் தவறாக Translate செய்தமையால், என்றாவது contract இழந்தது உண்டா?
பதில்: கடவுள் புண்ணியத்தில் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை. அம்மாதிரி இனியும் நடக்காதிருக்கும் அளவுக்கு எனக்கு துல்லியத்தை என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் தருவான் என நம்புகிறேன்
6) Blog எழுத ஆரம்பித்த பிறகு தங்களின் கொள்கையை/நம்பிக்கையை பிறரின் பின்னூட்டத்தை பார்த்து என்றாவது மாற்றி கொண்டது உண்டா? இருந்தால் ஒரு எடுத்துக்காட்டு கூறுங்களேன்.
எனது ஆரவாரப் பேய்களெல்லாம் என்னும் பதிவே அதற்கு எடுத்து காட்டுதான். இன்னும் இரு பதிவுகளின் சுட்டிகளும் தருகிறேன், அதாவது யோம்கிப்பூர்-1 மற்றும் யோம்கிப்பூர்-2.
6௭) ஏன் எனக்கு உங்கள் எழுத்துக்களை படித்தால் generation gap எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது?
பதில்: ஏன் என்னைவிட அவ்வளவு வயதாகி விட்டதா உங்களுக்கு?
பாண்டிய நக்கீரன்:
1. நோஸ்ட்ரடாமஸ் பற்றி?
பதில்: நோஸ்ட்ரடாமஸ் பற்றி பல கதைகள் உள்ளன. அவற்றில் பல அப்பட்டமான கட்டுக்கதைகள். உலகத்தில் நிகழப்போகும் உற்பாதங்களை பற்றி அவர் பல நாலடி செய்யுள்களாக எழுதினாராம். உதாரணத்துக்கு ஒரு தீபகற்ப பகுதி பெரிய சக்தி பெற்ற நாடாகும் என்று எழுதினாலும் எழுதினார், அது இந்தியாதான் என கூறுபவர்கள் உண்டு. அட்லாஸில் பார்த்தால் பல தீபகற்ப நாடுகள் உள்ளன. எல்லாம் வியாக்கியானம் கொடுப்பவரின் திறமை, அவர் நம்ப விழைவது ஆகியவை. கன்னா பின்னா தென்னா மன்னா பாடலுக்கு கம்பர் வியாக்கியானம் கொடுத்த மாதிரிதான்.
2. அவர் சொன்னதில் நடந்ததில் எது பெரிது?
பதில்: என்னைப் பொருத்தவரை இதற்காக சுலபமான பதில் தர இயலாது. பல அர்த்தமாக்கல்கள் சுற்றிவளைத்து செய்யப்படுகின்றன. அவர் எழுதியவை பிரெஞ்சில் இருந்தாலும் எனக்கென்னவோ அவற்றைப் படிப்பதில் ஆர்வமே இல்லை. எனக்கு ஜோசியத்தின் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லை என நினைக்கிறேன். :)))
3. சொல்லி நடக்காதது?
பதில்: மேலே உள்ள கேள்வியிலேயே இதற்கும் பதில் உள்ளது.
4. இனி நடக்கப் போவது என்று உலகம் எதை எதிர்பார்க்கிறது?
பதில்: அதையெல்லாம் பார்க்க யாருக்கு நேரம் இருக்கிறதாம்?
5. "ஆண்டி கிரைஸ்ட்" என்றார்களே?
பதில்: Matter-anti matter, electron-positron என்றெல்லாம் ஜோடிகள் கிளம்புவது போல இதுவும் ஒன்றுதான்.
6. மிஸ்மர் பற்றி?
பதில்: மெஸ்மரிசம் என்னும் கோட்பாட்டின் தந்தை.
7. மெச்மரிசம் நம்புகிறிர்களா?
பதில்: தெரியவில்லை. இதில் பல போலிகள் உலாவும் ஆபத்து உண்டு. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நமது கடமை. பல மனோதத்துவ நிபுணர்கள் இதை உபயோகித்து பல நோயாளிகளை குணப்படுத்தியுள்ளனர்.
8. யூரிகெல்லரின் ஹிப்னாடிசம் பற்றி?
பதில்: அவர் ஏமாற்றுகிறார் என்று பலர் கூறுகிறார்கள். இந்த வீடியோவைப் பாருங்களேன். என்னைப் பொருத்தவரை இம்மாதிரி ஆசாமிகளை பற்றி எனது கருத்து மிகவும் எதிர்மறையானது. நான் கன்வின்ஸ் ஆக இன்னும் நிறைய பார்க்க வேண்டும். அதாவது they are guilty unless proven innocent.
9. நமது ஆரியப்பட்டரின் கருத்துகள் பற்றி?
பதில்: அவரைப் பற்றி இக்கேள்விக்காக நான் கூகளிட்டு கண்டது: "நூறுடன் நான்கை சேர்த்து, பிறகு அதை எட்டால் பெருக்கி, அத்துடன் 62000 சேர்த்து பிறகு 20000-ஆல் வகுத்தால் வரும் விடை ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் உள்ள விகிதமாம். சந்தோஷம். அதாவது 3.1416. இதைத்தான் ஆங்கிலத்தில் pi எனக் கூறுகிறோம். அதன் மதிப்பு தற்போதைய புரிதல்படி 3.14159. ஆனால் அவர் கண்டு பிடித்ததில் முக்கியமானது பூஜ்யம் என்பார்கள்.
10. நமது வராஹமிகிரர் பற்றி?
பதில்: ஆர்யபட்டரின் சீடர். அவரைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
11. கைரேகை அறிவியல் சார்ந்ததா?
பதில்: அப்படித்தான் அதை ஆதரிக்கிறவர்கள் கூறுகிறார்கள்.
12. விதியை மதியால் வெல்லலாம் -இது ஜோதிட சாஸ்திரத்தோடு ஒப்பிட்டு கருத்து சொல்லவும்?
பதில்: சத்தியவான் சாவித்திரி கதையை விடவா? சாவித்திரி எமதர்மராஜன் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டினாளே. சத்தியவான் உயிரைத் தவிர வேறு இரு வரம் கேட்கலாம் என அனுமதி தர அவள் முதல் வரமாக தனது மாமனார் அவர் இழந்த ராஜ்ஜியத்தை பெற வேண்டுமென கேட்டு பெற்றாள். அடுத்த வரமாக தனக்கு ஒரு நல்ல புத்திரன் வேண்டும் எனக் கேட்க அதற்கும் அப்படியே ஆகட்டும் என எமன் யோசியாது கூறிவிட, பிறகுதான் நாக்கைக் கடித்து கொண்டானாம். கணவன் இன்றி குழந்தை ஏது? அப்போது நாரதர் தோன்றி, சாவித்திரி தன் செய்த நோன்புகளால் ஏற்கனவேயே தன் கணவன் உயிரைக் காப்பாற்றிவிட்டதாகவும், ஆகவே எமனுக்கு அதைத் திருப்பித் தருவதை விட வேறு வழியே இல்லை என்றும் எடுத்து கூறுகிறார்.
நாரதமுனி:
1. உங்களுக்கு எழுத்தாளர் அழகாபுரி அழகப்பன் பற்றி தெரியுமா?
பழைய மாலைமதிகளிலே அவர் கதைகள் வாசித்ததுண்டு. நல்ல விறுவிறுப்பாக இருக்கும். அவரை பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமெனில் போஸ்ட் பண்ணுங்க.
பதில்: அமரர் அழகாபுரி அழகப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். எழுத்தாளர் சுஜாதாவுக்கு உதவி செய்திருக்கிறார். அவரது நாவல் ஒன்று சக்களத்தி என்னும் பெயரில் சமீபத்தில் 1978-79 வாக்கில் படமாக வந்தது. சுதாகர், ஷோபா, அம்பிகா, ஒய். விஜயா, விஜயன் மற்றும் அழகாபுரி அழகப்பனே நடித்திருந்தனர்.
அழகப்பன் ஒரு சபல டாக்டராக வருவார். கணவனை பிரிந்து வாழும் ஒய். விஜயாவுக்கு பிராக்கெட் போடுபவராக வருவார். இடைவேளை நேரத்தில் சில இளைஞர்களுடன் பேசிய போது அவர் அவர்களது பள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார் என அறிந்து கொண்டேன். என்ன பள்ளி என்பதை கேட்டுவைக்க மறந்துவிட்டேன். மாலைமதியில் அவரது பல நாவல்கள் படித்துள்ளேன். அடுத்த முறை நூலகம் செல்லும்போது பார்க்கிறேன். எனக்கு தெரிந்து ஆசிரிய பெருந்தகைகள் திரைப்படங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றி பிறகு எப்போதாவது எழுதுகிறேன்.
ரவிஷா:
1. கோமணகிருஷ்ணன் போன்றவர்கள் தாத்தாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்! ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரை. இப்படித்தான் பலர் கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள்! அப்போதெல்லாம் அதை கோமணகிருஷ்ணன் போன்றவர்கள் எதிர்த்தார்கள்! ஆனால் இப்போது தாத்தாவுக்கு ஜால்ரா காதை மட்டும் இல்லை டவுசரையும் சேர்த்து கிழிக்கிறது! Hypothetically, தாத்தா போன பிறகு இவர்களெல்லாம் யாரை ஆதரிப்பார்கள்!
பதில்: கோமணகிருஷ்ணன் என்று கேட்பதால் பதில் கூற முயற்சிக்கிறேன். தாத்தா போன பிறகு டோண்டு ராகவன் யாரை ஆதரிக்கிறானோ, அவரை எதிர்ப்பவரை மட்டும்தான் ஆதரிப்பார்கள்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுயவிமர்சனம், கடிதம்
-
நமது கிராமங்களும் மோசடிகளும், கடிதம் ஆசிரியருக்கு, குறைந்தபட்ச சுய
விமர்சனத்தின் அளவைக் கொண்டுதான் ஒரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின்
தரத்தை அறிக...
46 minutes ago
21 comments:
/////14. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை வெரட்டிச்சாம்!
பதில்: அழகிரி மற்றும் ஸ்டாலினை வைத்து காமெடி எதுவும் செய்யவில்லையே?////
கலக்கலான பதில்!
காலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு. காலை நடைப் பயிற்சி முடித்து வந்து தங்கள் பதிலகள் பார்த்தால் இந்த வாரமும் பிரமாதம்.
இந்த வாரமும் கேள்விகளை தொடர்கிறேன். பதில்கள் பல சுட்டியை காட்டி பல வித விளக்கங்கள். அது தானே இன்றக்கு தேவை.
1.தமிழ்க மின்வெட்டு அதிகாமாய்க் கொண்டே இருக்கிறதே( தினம் 4-5 மணி நேரம்?)
2.சென்னையில் எப்படி?
3. பருவ மழை போக்கு காட்டுகிறதே?
4.மின்வெட்டு போய் மின் சப்ளை 4 மணிநேரம்தான் ஆகும் போல் உள்ளதே?
5.யார் காரணம்?dmk or admk?
6. இந்த நிலைக்கு தள்ளியது அரசா?பயனீட்டாளர்களா?( பங்கு என்ன) ?
7.பாகலில் எரியும் தெருவிளக்கை அணைத்தாலே?
8.பணியாளர்கள் பணி நேரம் தாண்டியும் அவர்கள் போன பிறகும் அலுவலக அறைகளில் பயன்படும் மின் சாதனங்கலை நிறுத்தினாலே?
9.அணுஒப்பந்தம் கூட( to increase the power supply only 10 %) இதில் பெரும் பங்கினை அளிக்க முடியாதாமே?
10. மின் பற்றாக் குறை நமது முன்னேற்றத் தடையாய் மாறுவது பற்றி?
11.மின்பகிர்மானத்தில் உள்ள குழறுபடி பற்றி?
12.இலவச மின்சாரம்9(குடிசை,விவசாயம்) தவறாய் பயன்படுத்துவது பற்றி(ஒரு பகுதியினரல்)
13.தேவை இல்லா இடத்தில் ஒளி உமிழும் விளம்பர விளக்குகள் பற்றி?
14.அரசியல் கட்சிகளின்(தலைவர்களின் வருகை ,பி.விழாக்கள்,மாநாடுகள்) கண்சிமிட்டும் விளக்கு விளம்பரங்கள்?
15.இதற்குப்பிறகும் தமிழ்கத்தில் மின்வெட்டே இல்லை என அறிக்கை விடுவது பற்றி/?
16 பிற மாநிலங்களில்(வட) நிலை யென்ன?
17. காற்றாலைகள் கண்ணில் நிறைய தெரிகின்றனவே?
18. தனியார் மயம் பகிர்மானத்தில் என்றார்களே?
19.பம்பயில் இந்தக் குறை பாடில்லை என்கிறார்களே ( அணுவின் /அம்பானியின் பூண்ணியமா)
20.மோடியின் குஜாரத்தில் எப்படி மின் தடை) (as on 18-07-2008)
//கணவன் இன்றி குழந்தை ஏது?//
இதை படிச்சதும் திருடா திருடி படத்திலிருந்து ஒரு டயலாக் தான் நியாபகத்துக்கு வந்தது.
//ஏன் எனக்கு உங்கள் எழுத்துக்களை படித்தால் generation gap எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது?
பதில்: ஏன் என்னைவிட அவ்வளவு வயதாகி விட்டதா உங்களுக்கு?
//
ராகவன்,இதற்கு சரியான பதில் உங்களிடமிருந்தே வருகிறதே,பார்க்கவில்லையா?
ஃஃ
ஹரிஹரன் என்றொரு மெலடி பாடகர் சுமார் 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் சிறந்த பாடல்களைப் பாடினாரே - அவர் பாடிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த மெலடி எது?
பதில்: டி.எம்.எஸ்., எஸ்.பி.பி. பி.பி.எஸ். ஆகிய சிலரது பாடல்களைத்தான் பாடியவர் பெயருடன் கேட்டு அனுபவித்துள்ளேன். மற்றப் பாடல்கள் அவை நன்றாக இருந்தால் போதும். பாடியவர் யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆகவே ஹரிஹரனை கேள்விப்பட்டிருந்தாலும், குறிப்பாக அவர் பாடியது என பார்த்து ரசிக்கவில்லை.
ஃஃ
:)
டோண்டு சார் இந்த( 21 to 30) பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)
21.மாமியார் ஒடைச்சா மண் கொடம் , மருமக ஒடைச்சா பொன்கொடமாம்!
22.மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
23.அழுகிற பிள்ளை தான் பால் குடிக்கும்
24.உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்
25.மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறாம்.
26.வழுக்கி விழுந்தவனுக்கு அரிவாள்மனை கூரை முட்டு கொடுத்த மாதிரி
27.கழுதைக்கு வாக்கப்பட்டு கத்தாமல் இருக்க முடியுமா
28.இடிச்சவன் பொடைச்சவன் இருக்க எட்டி பாத்தவன் கொட்டிகிட்டு போனானாம்.
29.ரெண்டு வீட்டு விருந்தாடி கெண்டையேறி செத்தானாம்.
30.ஈ கடிச்ச புண்ணுக்கு எழவு கொண்டாடினானாம்.
ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
-- இந்தப் பாட்டைக்கூட கேட்ட ஞாபகம் இல்லையா பெரியவரே?
//ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
-- இந்தப் பாட்டைக்கூட கேட்ட ஞாபகம் இல்லையா பெரியவரே?
//
ரிப்ப்பீபீட்டுடுடுடு...
ஸ்டார்ட்-மீஜிக்..
டோண்டு சார்,
எனது கேள்விகளுக்கு விடை அளித்து ஞானத்தின்பால் கொண்டு சென்றமைக்கு மிக்க நன்றி.
நான் பாட்டை மட்டும் ரசிப்பேன், யார் பாடியது என்று ரொம்ப கவனிபதில்லை எனக் கூறினேன். அவ்வளவே.
இப்போது பாருங்கள், ஹரிஹரன் சமீபத்தில் அறுபதுகளில் சிவாஜி நடித்த "படித்தால் மட்டும் போதுமா" படப்பாட்டை "பொன் ஒன்று கண்டேன்". பார்க்க: http://youtube.com/watch?v=s3gzblz2hJ0
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sir my questions are these.
1) Persons like komanakrishnan, luckylook etc., why without any logic, blindly support DMK, despite knowing that their leader is selfish, corrupt and take care of only his family and not 'thondars'?
2) on what basis they spew venom on brahmins?
3) any plan of starting counseling center for youths?
4)why cant you use your blogging popularity by contesting in election?
5)with the same reason, any plan of entering cini field?
6)when will our country be free of communists?
7) how will u compare the commerically popular restaurents with the old type (such as Iyer mess, mami mess etc) messes which serve tasty food? which one will u prefer?
Vikram
please give your answers in " dondu's style.( as on 19-07-2008)
1.A person who does not get what he wants or needs is a frustrated person and will be easily provoked to rage.
2.To choose between two equally bad alternatives in a serious dilemma
3.When a person really wants to do something, he will find a way of doing it.
4. A bad experience or a horrifying incident may scar one's attitude or thinking for a lifetime
5. The first in line will be attended to first.
6. A friend who helps when one is in trouble is a real friend
7.If you say discretion is the better part of valor, you mean that avoiding a dangerous or unpleasant situation is sometimes the most sensible thing to do
8. A person's age is immaterial - it is only when he thinks and feels that he is ageing that he actually becomes old
9.Those people who talk a lot and are always teaching others usually do not do much work.
10. One who has nothing to do will be tempted to do many mischievous acts
ramakrishanahari
Dondu sir,
Why you have not answered my qtn no.1?
and why you not publish my second qtn.?
fear? or Embrssment ?! or Typical 'Braminisam'?
Anyway ,your 'டோண்டு பதில்கள்'better than any ..
Your friend,
Sathappan
சாத்தப்பன் அவர்களே,
ஒரு செட் கேள்விகளை எங்கோ கோட்டை விட்டுள்ளேன். மருத்துவக்கல்லூரி பரீட்சையில் வந்த ரிசல்டுகள் பற்றிய கேள்விகள் என நினைக்கிறேன்.
தயவு செய்து திரும்பவும் அக்கேள்விகளை கூறவும். எனக்கு அவை கிடைக்க மாட்டேன் என்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
10. காக்கும் பெருமாள் மேல் மிகுந்த பக்தி உடையவரிடமிருந்து இப்படியா எனக் கேட்பவர்க்கு உங்கள் பதில்? (பக்தி வேறு, ஜோதிடம் வேறு எனும் பதில் தவிர்த்து - சான்றுகளுடன் தங்களின் பதில்) (துணை கேள்விகள் தங்களின் சான்று பூர்மான பதில்களை பார்த்த பிறகு)
பதில்: இதென்ன போங்கு? நீங்கள் விடும் எல்லா ஸ்டேட்மெண்டுகளையும் ஏற்று கொள்ள வேண்டுமா என்ன. பக்திக்கும் ஜோசியத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றுதான் நான் அடித்து கூறுவேன்.
//
இந்தக் கேள்வியைக் கேட்டவர் ஜோதிடம் என்பது இந்து வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்புகிறார். பல இஸ்லாமியர்கள், கிருத்தவர்களும் ஜோதிடரை அழைத்து நாள் நட்சத்திரம் பார்த்து திருமணம் முடிக்கின்றனர். பல கிருத்தவர்கள் ஜாதகப்பொருத்தம் கூடப்பார்க்கின்றனர். பெருமாள் பக்திக்கும் ஜோதிடத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று டோண்டு கூறுவதில் என்ன தவறு ?
கடவுள் இல்லை என்ற ஒரு நம்பிக்கையைப்போல் ஜோதிடத்திலும் பலருக்கு நம்பிக்கை உள்ளது.
//Vajra said...
//
10. காக்கும் பெருமாள் மேல் மிகுந்த பக்தி உடையவரிடமிருந்து இப்படியா எனக் கேட்பவர்க்கு உங்கள் பதில்? (பக்தி வேறு, ஜோதிடம் வேறு எனும் பதில் தவிர்த்து - சான்றுகளுடன் தங்களின் பதில்) (துணை கேள்விகள் தங்களின் சான்று பூர்மான பதில்களை பார்த்த பிறகு)
பதில்: இதென்ன போங்கு? நீங்கள் விடும் எல்லா ஸ்டேட்மெண்டுகளையும் ஏற்று கொள்ள வேண்டுமா என்ன. பக்திக்கும் ஜோசியத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றுதான் நான் அடித்து கூறுவேன்.
//
இந்தக் கேள்வியைக் கேட்டவர் ஜோதிடம் என்பது இந்து வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்புகிறார். பல இஸ்லாமியர்கள், கிருத்தவர்களும் ஜோதிடரை அழைத்து நாள் நட்சத்திரம் பார்த்து திருமணம் முடிக்கின்றனர். பல கிருத்தவர்கள் ஜாதகப்பொருத்தம் கூடப்பார்க்கின்றனர். பெருமாள் பக்திக்கும் ஜோதிடத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று டோண்டு கூறுவதில் என்ன தவறு ?
கடவுள் இல்லை என்ற ஒரு நம்பிக்கையைப்போல் ஜோதிடத்திலும் பலருக்கு நம்பிக்கை உள்ளது.//
Vajra அவ்ர்களின் கருத்து இங்கு கவணிக்கப்படவேண்டிய ஒன்று.
பொதுவாக இந்துக் கோவில்களில்(ஆகம் விதிகள் படி அந்தக் கால அரசர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களிலும்,இப்போது நகர்களில் குடியிருப்போரால் கட்டப் படும் கோவில்களிலும் நவக்கிரக வழிபாடு பிரசித்தம்.)
இந்து சமய்த்தில் கும்பகோணத்தை சுற்றி நவகிரகங்களுக்கு கோவில்கள் பிரசித்தம்.
கோவிலுக்கு சாமி கும்பிடப் போகிறவர்கள் நவகிரகத்தை சுத்தாமல் வருவது கிடையாது.
இஸ்லாமிய பெருமக்களும்,கிருத்துவப் பெருமக்களும் அந்த ஜோதிடத்தை நம்பும் போது. எல்லாம் பெருமள் எனும் " டோண்டு ஐயா" எப்படி .
கடவுள் நம்பிக்கையும்,இறை பக்தியும்,ஜோதிட நம்பிக்கையும் ஒன்றை ஒன்று சார்ந்து போல் உள்ளது.
ஜாதங்களை பார்க்கவும் அதன் ஆரம்பமே கடவூளை யெல்லம் வணங்கி தான் எழுத தொடங்குகிறார்கள்.
இதை பற்றி யாரவது ஆன்மீகமும்,பக்தியும்,ஜோதிடமும் அறிந்த பெரியவர்கள் விளக்கம் தந்தால் நல்லது.
பொதுவா இப்ப பிரபலமடைந்துள்ள பக்தி மற்றும் ஜோதிடம் சம்பந்தபட்ட புத்தகங்களே சாட்சி.சக்திவிகடன்,குமுதம் ஜோதிடம், குருபெயர்ச்ஸ்ரீ,சனிபெயர்ச்சி,ராகுகெது பெயர்ச்சி புத்தகங்கள் இரு தரப்பு செய்திகள் கலந்தே கொடுக்கப்படுகின்றன
இந்த 2008 ல்
ஜோதிடத்தை
பாமரனும்,படித்தவனும்,பக்திமானும்,பகுதறிவுவாதியும்
பண்ணாட்டு மக்களும் ஜோதிடத்த நம்புகிறார்கள்தான் போலுள்ளது.
ஸ்ரீராம்பிரான்,மற்றும் ஸ்ரீஅஞ்சனேய சுவாமிகளின் ஜாதகக் குறிப்பை(நாள் முழுவதும்) சட்டைப்பையில் வைத்துக் கொள்ளும் அள்வுக்கு பக்திமான்கள் இன்றும் உள்ளனர்
//
2) இந்தியாவில் இருந்து படிக்க செல்லும் மாணவனை போல் மோடி அவர்கள் மறுபடியும்/மறுபடியும் விசா அப்ளை செய்வதன் நோக்கம் என்ன? இதைதான் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்று கூறுகிறோமா?
பதில்: மோடி அவர்கள் உண்மையிலேயே அவ்வாறு செய்திருந்தால் தவறுதான். மதிக்காதவர் இடத்துக்கு செல்லக் கூடாது என்பதை உணர்தல் நலம்.
//
மோடி ஒன்றும் மறுபடியும் மறுபடியும் விசாவுக்கு அப்ளிகேஷன் போடவில்லை. குஜராத்தி NRI க்கள் மோடியை மறுபடியும் அழைத்தனர். அதற்கான ஒரு press conference ல் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமேரிக்க தூதரகம் தன் official நிலையை reiterate செய்தது. அதை வழக்கம் போல் நம்மூர் பத்திரிக்கைகள் மோடியை அடிக்க உதவும் தடியாகப் பயன்படுத்திக் கொண்டனர். வெட்கம் கெட்டவர்கள்.
கல்பாக்கம் அனுமின் நிலையம் இல்லையென்றால் மெட்ராஸில் எலக்டிரிக் டிரைன்கள் ஓடுமா ?
இந்தக் கேள்விக்கு டோண்டு பதில் தரவேண்டும். கூடவே இந்தக் கேள்விக்கு அனு ஒப்பந்தத்தை எதிர்க்கும் சீனக் கைக்கூலிகளும், அவர்கள் தொண்டரடிப் பொடிகளும் பதில் சொல்லவேண்டும்.
// sathappan said...
Dondu sir,
Why you have not answered my qtn no.1?
and why you not publish my second qtn.?
fear? or Embrssment ?! or Typical 'Braminisam'?
Anyway ,your 'டோண்டு பதில்கள்'better than any ..
Your friend,
Sathappan
July 19, 2008 11:55 AM
dondu(#11168674346665545885) said...
சாத்தப்பன் அவர்களே,
ஒரு செட் கேள்விகளை எங்கோ கோட்டை விட்டுள்ளேன். மருத்துவக்கல்லூரி பரீட்சையில் வந்த ரிசல்டுகள் பற்றிய கேள்விகள் என நினைக்கிறேன்.
தயவு செய்து திரும்பவும் அக்கேள்விகளை கூறவும். எனக்கு அவை கிடைக்க மாட்டேன் என்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
சாத்தப்பன் அவர்கள் கேட்ட கேள்வி உங்கள் பதிவில் இருந்தது.
என் நினைவிலிருந்து ச்சொல்கிறேன்.
டோண்டு சார்.
நடந்து முடிந்த மருதுவ கல்லுரி மானவ்ர் தேர்வில் பெருவாரியான ஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்த மானவர்கள்( b.c,m.b.c.,s.c,s,t)
மதிப் பெண்கள் அடிபடையிலே(baseed on merit) தேர்ந்தெடுந்க்கப் பட்டுள்ளதை புள்ளி விபரங்களுடன் கொடுத்திருந்தார் .
இது இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் முதல் தலைமுறையினர் பெற்ற வெற்றியல்லவா?
( சாத்தப்பன் சார் சரியா, இல்லையென்றால் மறுபடியும் சொல்லவும்)
1.ஒரு ஓட்டுக்கு 25 கோடியாமே?
2.பணநாயகம்ம,ஜனநாயகமா ?
3.லஞ்சத்தை இவர்களா ஒழிப்பார்கள்?
4.அதவானிதான் அடுத்த பிரதம்ரா?
5.மதவெறிஎன்பது இருக்கா?(பா.ஜா.விடம்-இன்னும்)
6.இடதுசார்களும் பாஜாவும் ஒரே அணியில்?எப்படி
7.தவளயும்,எலியும் கதையின் முடிவு இதில் மாறுமா?
8.சோமனாத் சட்டர்ஜி செய்வது சரியா?
9.அரசு கவிழ்ந்தால்?
10.அணுஒப்பந்தம் வெற்றிபெறவிட்டால்?
அன்பு ராகவன் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் பொது அறிவும், எழுத்தாற்றலும், மன உறுதியும், செயலாற்றலும் அபாரமானவை. நீங்கள் ஏன் ட்ராபிக். ராமசாமி அவர்களைப் போல் ‘தகவல் அறியும் உரிமை’ சட்டத்தின் துணைகொண்டு களப்பணியில் இறங்கக் கூடாது?
உங்கள் ஆலோசனைகளும், அனுபவமும் பலருக்கும் பயன்படும் விதத்தில் அமையும்.
தேவ்
Post a Comment