வருடம் 2001. தில்லியிலிருந்து வீடு காலி செய்து சென்னைக்கு வந்தேன். சென்ட்ரலில் இறங்கியதும் போர்ட்டர்கள் சூழ்ந்து கொண்டனர். நான் தேர்ந்தெடுத்த போர்ட்டரிடம் எங்கள் பொருட்களை கால் டாக்ஸியில் ஏற்றிவிடும்படி கூறினேன். யாரிடமும் எதுவும் பேசாமல் தன் பின்னால் வரச் சொன்னார். வெளியே வந்து பழைய மூர் மார்க்கெட் நோக்கி சென்றபோதே எங்களைப் பின்தொடர்ந்த ஆட்டோக்காரர்களில் ஒருவர் சலிப்புடன் "இவங்க கால் டாக்ஸிக்கு போறாங்கப்பா" என்று கூற எல்லா ஆட்டோக்காரர்களும் பின்தொடர்வதை நிறுத்தினர். கால் டாக்ஸி பற்றி நான் டில்லியில் இருந்தபோதே படித்திருந்ததால் எனக்கு இது சாத்தியமாயிற்று.
அன்றிலிருந்து இன்று வரை எங்கு போவது என்றாலும் முதல் தெரிவு கால் டாக்ஸிதான், அது இல்லாவிட்டால் பஸ். இல்லாவிட்டல் நடை. ஆட்டோ கடைசி பட்சம்தான். அந்த அளவுக்கு ஆட்டோக்காரர்கள் நம்மை வெறுப்படையச் செய்துள்ளனர். ஒரு சிறு உதாரணம். நங்கநல்லூரிலிருந்து அடையாறு செல்ல எத்தனை ஆகும் என்று கேட்க, 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அடையாறுக்கு 130 ரூபாய் ஆகும் என்று ஒரு ஆட்டோக்காரர் கூறினார். கால்டாக்ஸிக்கும் அத்தனைத்தான் ஆகும் என்ற நிலையில் ஆட்டோவுக்கும் ஏன் அதே தொகையை கேட்கிறீர்கள் என்று அவரைக் கேட்டதற்கு அதற்கு அவர் ரிடர்ன் காலியாக வரவேண்டியிருக்கும் எனக் கூறினார். அப்படியானால் அடையாறு சென்று ஒரு பொருளைக் கொடுக்கவேண்டும் உடனே அதே ஆட்டொவில் வருவதற்கு என்ன ஆகும் என்று கேட்டால் 240 ரூபாய் ஆகும் என்று கூசாமல் கூறினார் அவர். நம்மை என்ன காதில் பூ வைத்தவர்கள் என எண்ணிவிட்டார்களா என்ன?
கால் டாக்ஸிகளால் என்னென்ன சௌகரியம் பாருங்கள். சற்றே முன்கூட்டி திட்டமிட முடிந்தால் போன் செய்து வரவழைக்கலாம். பாஸ்ட் ட்ராக், பாரதி, சென்னை கால் டாக்ஸி ஆகியோரது கணினிகளில் ஒருமுறை உங்கள் தொலைபேசி எண் பதிவாகிவிட்டால் போதும். அடுத்த முறையிலிருந்து அந்த நம்பரைக் கூறியதுமே அவர்களே உங்கள் முகவரி மற்றும் லேண்ட்மார்க் ஆகியவற்றை உங்களிடமே ஒப்பிப்பார்கள். வீட்டிற்கு வந்து நீங்கள் எல்லோரும் வண்டியில் ஏறியதும்தான் மீட்டரையே போடுவார்கள். முக்கியமாக ஆட்டோ டிரைவர்கள் உபயோகிக்கும் சாவு கிராக்கி என்ற வாழ்த்துச் சொற்களையெல்லாம் கேட்கத் தேவையில்லை. முக்கியமாக மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் தர வேண்டியதில்லை. எது எப்படியானாலும் சார்ஜ் செய்யும் முறை வெளிப்படையாக இருப்பதால் ஏமாற்றப்படுவதற்கு சான்ஸே இல்லை.
சென்னையில் ஆயிரத்துக்கும் மேல் இப்படிப்பட்ட டாக்ஸிகள் இருக்கின்றன. நிலைமை இப்படியிருக்க எதற்கு கார் வாங்கவேண்டும்? சொந்தக் காரினால் தொல்லைகளே அதிகம். டிரைவர் தொல்லை, பார்க்கிங் தொல்லை, மராமத்து தொல்லை என்று தொல்லையோ தொல்லை.
இன்னொரு விஷயம். 30 கிலோமீட்டர்கள் மேல் பயணம் செய்ய நேர்ந்து, 5 மணி நேரத்துக்குள் வீடு திரும்புவீர்கள் என்ற நிலை இருந்தால் டூரிஸ்ட் டாக்ஸிகள் இருக்கவே இருக்கின்றன. 5 மணி +30 கிலோமீடர்களுக்கு ரூபாய் 350 மட்டுமே. கால் டாக்ஸியில் சென்று காத்திருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் இதை விட அதிகம் ஆகும்.
ஆக, எல்லா சாத்தியக்கூறுகளுக்கும் சேவைகள் இருக்கும்போது எதற்கு சொந்தக் கார் வாங்க வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
17 hours ago
17 comments:
உண்மை தான். வைக்கோல் படப்பில் நாய் என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா?. அது இந்த ஆட்டோகாரர்களுக்கு பொருந்தும். அடுத்த தெரு ஆட்டோக்காரனை தன் ஏரியாவில் பார்த்தாலே அவனை ஓட ஓட விரட்டி விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். ஒரு ரெண்டு அடி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே போய்விட்டால், ஏதோ 2 கி.மீட்டர் அதிகமாக போய்விட்டது போல் முகம் போய் விடும் (எல்லாம் கூட 10 ரூவாக்கு தான்). ரோடு நல்லா இருந்தா, ரிடர்ன் சவாரி கிடைக்காது. இல்லன்னா, ரோடு சரியில்ல. எப்படியோ புடுங்கரதுல தான் குறியா இருக்கறாங்க. நானும் எப்பவுமே கால் டாக்சி தான். சில சமயம் ஆட்டோடை விட கம்மியாக ஆகும்.
இதுல வேலையத்த சில வீணர்கள் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" அப்படின்னு ஒரு பாட்டு பாடி இவனுங்க ஏதோ சமுக சேவகர்கள் மாதிரி வேற ஒரு படம்.:-)
சரியாத்தான் சொன்னீங்க சிவபுராணம் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
சிட்டியில் மட்டும் பயன்படுத்துவோர்க்கு பொது transport பிரயோசனமாக இருக்கலாம். ஆனால், நான்கு பயணிகளை கணக்கில் கொள்வீர்களாயின், எங்கு செல்கினும் (சென்னை உட்பட)சொந்த வண்டி இருப்பின் பிரச்சனைகள் குறைவு. விலையும் செலவும் கம்மி. இப்போதுதான் கார் வாங்குவது மிகவும் எளிது ஆச்சே. சவுகர்யமும் கூட.
இல்லை ராமனாதன் அவர்களே. அதாவது தினசரி அலுவலகத்துக்குக் காரில் போகவேண்டும் என்றால் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கிலோமீட்டர்கள் நீங்கள் நிச்சயம் பயணம் செய்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் சொந்தக் கார் ஒத்து வரும்.
அதில் வேறு கார் சொந்தக்காரரே ஓட்டுவது வண்டிக்கு நல்லது என்கிறார்கள். அண்ணாசாலையில் ஓரிடத்திற்கு போகவேண்டுமென்றால் வண்டி நிறுத்த இடம் எல்லா தேடி அலைய வேண்டும். அப்போது ஓட்டுனர் ஒருவரை வைத்துக் கொள்வது நலமாக இருக்கும். ஆனால் ஓட்டுனரால் வரும் தொல்லை? மேலும் வண்டியிருந்தால் அடிக்கடி உபயோகிக்கச் சொல்லும். அதெல்லாம் தொல்லை ஸ்வாமி.
கடந்த நான்கு வருடமாக தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு ச்ழென்று வருகிறேன். டூரிஸ்ட் டாக்ஸிதான். ஒரு பிரச்சினையும் இல்லை. கார் நல்ல நிலையில் இல்லையா, வேறு கார் கேட்கலாம், இல்லாவிடில் வேறு டாக்ஸி கம்பெனிக்குச் செல்லலாம். அதுவும் நான் வசிக்கும் நங்கநல்லூரில் டூரிஸ்ட் கார் கம்பெனிகள் அனேகம்.
வெறுமனே எரிபொருள் மட்டும் செலவல்ல. நிலையான செலவுகள் என்று வேறு உள்ளன. எல்லாம் யோசித்தே எழுதுகிறேன்.
தினம் சராசரியாக மூன்று டெலிமார்கெடிங் கால்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று கார் வாங்கக் கடன் தருவதாக அன்புத் தொல்லை. கடவுள் அருளால் கடன் வாங்காமலேயே கார் வாங்க முடியும் என்றாலும், எனக்கு அது தேவையில்லை.
மொத்தத்தில் கூறப் போனால் இம்மாதிரிச் செலவுகள் செய்யும் முன்னால் செலவு/லாபம் கணக்கெல்லாம் போட்டுப் பார்க்க வேண்டும். என்னுள் இருக்கும் பொறியாளன் அதைச் செய்வதால் நான் கார் வாங்கவில்லை. அதனால் என்னும் இருக்கும் மொழிபெயர்ப்பாளன் சந்தோஷமாகவே கவலையின்றி தன் வேலையைச் செய்து வருகிறான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கால் டாக்ஸியை எல்லோரும் புகழ்றாங்களே. அதுலேயும் ஒருமுறை போய்ப் பார்க்கணுமுன்னு
இருந்தேன். ரெண்டரை வருஷம்முன்னே அந்த சந்தர்ப்பம் கிடைச்சது.
தி. நகர் ஹிந்தி ப்ரச்சார் சபாவுலே இருந்து சாலிகிராமம்( மாமா வீடு) போனோம். ஆட்டோவுலே.
நாப்பத்தஞ்சு ரூபா ஆனது. அங்கிருந்து திரும்ப வர்றப்ப மாமாவோட வீட்டு வாசலிலே நின்னுருந்த
ஒரு ஆட்டோக்காரரைக் கேட்டப்ப அவர் அம்பது சொல்லி 45க்கு வரேன்னார். மாமாவோட மகனுக்கு
எல்லா சென்னைவாசிகளையும் போல ஆட்டோக்காரர்கள் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை. நான் அப்படியும்
சொன்னேன், வர்றப்ப இவ்வளோதான் ஆச்சு. பரவாயில்லைன்னு. கேக்கணுமே. அப்பப்பார்த்து ஒரு கால்டாக்ஸி
அந்தப்பக்கம் காலியா வந்தது, ஏதோ ரிட்டர்ன் ட்ரிப் போல. ஆஹான்னு அதை நிறுத்துன பாபு( மாமாவின் மகன்)
இதுலே போங்க. தொல்லை இல்லை. கரெக்ட்டா இருக்கும்'னு சொல்லி ஏத்திவிட்டார்.
தி.நகர் ஹிந்தி ப்ரச்சார் சபாவந்து இறங்குனப்ப எவ்வளோ கொடுத்தோம் தெரியுமா? 83ரூபாயும் 75 பைசாவும்!
ஒன்று நினைவில் கொள்ளுங்கள் துளசி அவர்களே. டாக்ஸிக்கு எவ்வளவு ஆகிறதோ அதில் சரி பாதிதான் ஆட்டோவுக்கு ஆக வேண்டும், மீட்டர்படி பார்த்தால். அதாவது கிலோமீட்டர் ரேட், மினிமம் தூரத்துக்கான ரேட் எல்லாமே அவ்வாறுதான் நிர்ணயிக்கப் படுகின்றன.
அந்தக் கணக்கில் ஆட்டோவுக்கு 42.00 தான் ஆகியிருக்க வேண்டும். அதனால் என்ன, 45 கூட பரவாயில்லைதான். விதிவிலக்காக அன்று உங்களிடம் சவாரிக்கு வந்த ஆட்டோக்காரர்கள் நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். மீட்டர் போட்டிருக்க மாட்டார்களே?
கால் டாக்ஸியில் 5 பேர் வரை போகலாம். அதற்கு இரண்டு ஆட்டோக்கள் தேவைப்படும். மேலும் மீட்டர்கள் உபயோகிப்பதில்லை. எல்லா இடங்களுக்கும் பேரம்தான். நீங்கள் நடுவில் மனதை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்கு சென்றால் தகராறுதான். கால் டாக்ஸியில் அந்தத் தொல்லை இல்லை. கிலோமீட்டர் அளவும் ரூபாயும் சேர்ந்து குறிப்பிடுவதால் ஒரு வெளிப்படைத்தனம் கிடைக்கிறது.
மேலும், கார் கார்தான், ஆட்டோ ஆட்டோதான். சௌகரியம் எதில் அதிகம்? காத்திருப்புக்கானத் தொகையும் மீட்டரில் தானே ஏறிவிடுவதால் அதற்காகத் தனியாகப் பணம் தர வேண்டாம். முக்கியமாக சண்டை போட்டு மூட் அவுட் ஆக வேண்டாம்.
இன்னும் கூறிக் கொண்டே போகலாம்.
இப்படிக்கு,
டோண்டு ராகவன்
டோண்டு சார் சொல்லுறதுல ஒரு நியாயம் இருக்கு.
நன்றி ஜோ அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சென்னையில் இது விஷயமாக நானும் நிறைய பட்டிருக்கிறேன். ஆகையால் என்னுடைய பதிவையும் இடுகிறேன்.
டோண்டு சொன்னது போல கால்டாக்ஸி விலை என்பது ஆட்டோ மீட்டர் விலையை விடக் கூடதான். ஆனால் சென்னையில் எந்த ஆட்டோக்காரர் மீட்டர் போடுகிறார்? திநகரிலிருந்து கோட்டூர் புரத்திற்கு 45 ரூபாய் கேட்கிறவர்களை என்ன சொல்வது?
சென்னையில் ஆட்டோ அடாவடி நிறைய. செண்ட்ரலில் இறங்கியதும் முன்பெல்லாம் நேராக கால்டாக்சி இருக்குமிடத்திற்குச் செல்வேன். மீட்டருக்கு 100-110 வரும். அதே ஆட்டோக்காரரிடம் போனால் கோட்டூரா....150 கொடுங்க சார்.
நல்ல வேளை. இப்பவெல்லாம் பிரீ பெய்ட் ஆட்டோ செண்ட்ரலில் கிடைக்கிறது. ஆகையால் அதற்குச் சென்று விடுவேன். 70-75க்குள் முடிந்து விடும். கொஞ்சம் உள்ளே போக வேண்டும் என்றால் பத்து ரூபாய் கூடக் கேட்பார்கள். ஐந்து ரூபாய் கொடுக்கலாம்.
துளசிகோபாலிடம் 45 கேட்ட ஆட்டோக்காரரை உண்மையில் பாராட்டதான் வேண்டும். நியாயமாகக் கேட்டிருக்கிறார். ஆனால் ஆட்டோக்காரர்களிடம் பட்டுத் தெளிந்த உங்கள் உறவினர் உங்களைக் காப்பாற்றுவதற்காகவே கால்டாக்சியில் ஏற்றி விட்டிருக்கிறார்.
ஆனால், பெங்களூரில் விஷயமே தலைகீழ். இங்கே ஆட்டோக்கள் தேவலை. பெரும்பாலும் மீட்டருக்கு வருவார்கள். ஆகையால் பிரச்சனையில்லை. கால்டாக்சி பெங்களூரில் ரொம்ப காஸ்ட்லி. ரொம்பவே காஸ்ட்லி.
"இப்பவெல்லாம் பிரீ பெய்ட் ஆட்டோ செண்ட்ரலில் கிடைக்கிறது. ஆகையால் அதற்குச் சென்று விடுவேன். 70-75க்குள் முடிந்து விடும். கொஞ்சம் உள்ளே போக வேண்டும் என்றால் பத்து ரூபாய் கூடக் கேட்பார்கள். ஐந்து ரூபாய் கொடுக்கலாம்."
ஆட்கள் 4 அல்லது ஐந்து பேர், லக்கேஜ் கூட என்றால் கால் டாக்ஸியே சரி. லக்கேஜ் டிக்கியில் அடங்கினால் எக்ஸ்ட்ரா கூடக் கிடையாது.
முக்கியமாக கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை, அது கால் டாக்ஸியில்தான் கிடைக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போதைய கால் டாக்ஸி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பப்பட்ட பின் நிலவரம் பின்வருமாறு.
முதல் 3 கிலோமீட்டர்களுக்கு ரூபாய் 50, பிறகு ஒவ்வொரு 0.1 கிலோமீட்டருக்கு ரூபாய் ஒன்று. அதாவது 10.4 கிலோமீட்டர்கள் பயணம் செய்தால் ரூபாய் 104+20=124 ஆகும். 5 நிமிடம் காத்திருப்புக்கு ரூபாய் 4 மீட்டரில் ஏறும். சிக்னலுக்காக காத்திருக்கும் இடங்களில் ஸ்டாப் வாட்ச் செயல்படத் துவங்கி விடும். இது cumulative-ஆக செயல்படும். ஆகவே நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணப்பட்டால் காத்திருப்புக் கட்டணமும் மீட்டரில் கூடும்.
இரவு 11 மணி முதல் காலை 5 அல்லது 6 மணி வரை 25% கூடுதல் கட்டணம். பல மீட்டர்கள் சம்பந்தப்பட்ட நேரம் வந்ததும் தாங்களாகவே மீட்டரிங் வேகத்தை கூட்டியோ குறைக்கவோ செய்யும். இல்லையென்றால் டாக்ஸி ஓட்டுனரே அதை தெரிவித்து விடுவார். ஆக, எங்குமே பயனர் ஏமாற்றப்படுவதாக உணரத் தேவையில்லை.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி டூரிஸ்ட் டாக்ஸியில் செல்வதா அல்லது கால் டாக்ஸியில் செல்வதா என்பது பல காரணிகளை பொருத்துள்ளது. என்னைப் பொருத்தவரை 5 மணி நேர அளவில் வீட்டுக்கு திரும்ப வேண்டும் மேலும் மொத்த தூரம் 30 கிலோமீட்டருக்கு அதிகம் என்றிருந்தால், டூரிஸ்ட் டாக்ஸியே உத்தமம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு டோண்டு அய்யா.
சிங்கமுத்து
பெங்களூரில் கன்னட ஆட்டோ ட்ரைவர்கள் நியாயமாகத்தான் இருந்துவந்தார்கள்...
தமிழகத்தில் இருந்து சென்ற வைரஸ் கிருமிகள் அந்த ஆட்டோ ட்ரைவர்களையும் கெடுத்துவிட்டன...
நான்கைந்து வருடம் முன்பு ஒழுங்காக கொடுத்ததை வாங்கிக்கொண்டு போன ஆட்டோ ட்ரைவர்கள், இப்போது மீட்டருக்கு மேல் பத்து ரூபாய் வை என்று அடம் பண்ணும் அளவுக்கு ஆகிவிட்டது...
அதுவும் இல்லாமல், எங்க ஊரில் இருந்து பஸ்ஸில் பெங்களூர் வருவதற்கே 50 ரூபாய் தான்...ஆனால் அங்கே மடிவாளா வந்து இறங்கி வீட்டுக்கு போக 100 ரூபாய் கேட்பான்...இத்தனைக்கும் ஆறே கிலோமீட்டர்...
அதிகாலை நேரத்தில் ஏண்டா தொல்லை என்று கொடுத்துத்தொலைக்கவேண்டியதாயிருக்கும்...
கேரளாவில் ஆட்டோ ட்ரைவர்கள் மிக நேர்மையானவர்கள்...திருச்சூர் பஸ்டாண்ட் சென்று இறங்கி என்னுடைய ஹோட்டலுக்கு சென்றபோது, பண்ணிரண்டு ரூபாய் இருபது பைசா காட்டியது..பதினைந்து ரூபாய் கொடுத்தபோது மீதி இரண்டு எண்பது திருப்பி தந்தார்...ஆச்சர்யப்பட்டுப்போனேன்...
என்னது சொந்த காரால் பிரச்சினையா? ஒரு புரயோசனமும் இல்லையா ? சொந்த காரில் வேற என்ன என்ன பண்ணலாம் என்று சொன்னால் ரசாபாசமாகிவிடும், இருந்தாலும், எப்.எம் ரேடியோ கேட்டுக்கிட்டே ஆபீஸ் போகலாம்...ஜாலியாக இருக்கும்...மாருத்த்தீ சுஸ்ஸூகீ ட்ராபீக் பீட்ட்ட்ட்ட் என்று ட்ராபிக்கையும் தெரிஞ்சுகொண்டே போகலாம்...
//இருந்தாலும், எப்.எம் ரேடியோ கேட்டுக்கிட்டே ஆபீஸ் போகலாம்...ஜாலியாக இருக்கும்...மாருத்த்தீ சுஸ்ஸூகீ ட்ராபீக் பீட்ட்ட்ட்ட் என்று ட்ராபிக்கையும் தெரிஞ்சுகொண்டே போகலாம்...//
அதற்கு எதற்கு சொந்தக்கார்? நான் செல்லும் என்னுடைய ஆயிரத்துக்கும் மேலாலான கார்களிலும் கூட ஜாலியாக ரேடியோ/கேசட் கேட்டு கொண்டே போகலாமே.
திடீரென செல்போன் ஒலித்தால், ஸ்டைலாக ஓட்டுனருக்கு சைகை மூலம் ரேடியோவை நிறுத்த கூறி விட்டு என் பேச்சை தொடங்கலாமே. நாமே வண்டியை ஓட்டும்போது செல்போனில் பேசினால் போலீஸ் மாமாவால் நிறுத்தப்பட்டு ஆயிரம் ரூபாய் ரேஞ்சுக்கு அபராதம் கட்ட வேண்டி வருமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த முறை தீபாவளிக்கு சென்னை சென்றிருந்த போது பெரும்பாலான இடத்திற்கு கால் டாக்ஸிதான் உபயோகித்தோம்.
நெசப்பாக்கத்திலிருந்து திருமங்கலத்திற்கு வெறும் 135 ரூபாய்கள்தான் வந்தது எனக்கே ஆச்சரியமாகிப்போனது. திரும்பும் பொழுது 145 ரூபாய் ஆனது.
மியாட் மருத்துவமனையில் இருந்து 2 கி.மிக்கும் குறைவாக உள்ள நெசப்பாக்கம் வீட்டிற்கு செல்ல ஆட்டோவிற்கு 60 ரூபாய்க்கு குறைந்து யாரும் வரவில்லை :( வேறு வழியில்லாமல் இரு முறை தண்டம் அழுதோம் :(
தற்போதைய கால் டாக்ஸி கட்டணம் முதல் 5 கி.மீக்கு 100 ரூபாய். அதிகப்படியான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 10 ரூபாய்கள்.
To Dondu's Q&A section:
டோண்டு அய்யா அவர்களே,
இப்பொழுது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள "பிரி பெய்ட்" ஆட்டோகள் பற்றி, ஆட்டோக்களை கடுமையாக சாடிய
தங்களின் ஆபிப்ரயம் என்ன?
அன்புடன்
கிரிதரன்
//இதுல வேலையத்த சில வீணர்கள் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" அப்படின்னு ஒரு பாட்டு பாடி இவனுங்க ஏதோ சமுக சேவகர்கள் மாதிரி வேற ஒரு படம்.:-)//
பாட்டு பாடின எஸ்.பி.பி.யை வேலையத்த வீணர்கள்ன்னு இந்த உலக மகா வேலையுள்ளவரு சொல்லிட்டாருப்பா. இதில என்ன கூத்துன்னா அந்த எஸ்.பி.பியை பாராட்டுற பதிவில இந்த லொடுக்கும் ஒரு மெம்பராம். போங்கடாங்!
Post a Comment