கம்பனைப் பற்றி வழங்கும் பல சிறு கதைகளில் இதுவும் ஒன்று. உண்மையா என்பது தெரியாது. நடந்தும் இருக்கலாம். யார் கண்டார்கள்? இதுபோல பல கதைகள் உண்டு. இட்டுக்கட்டி சொல்லப்பட்டவையே அதிகம். ஏதோ அக்பர் பீர்பால் கதைபோல நினைத்துக் கேட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
ஒரு சமயம் அரசனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், "கம்பரே இந்த நாடே எனக்கடிமை" என்று. கம்பரோ வாய்துடுக்காக "அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே" என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியதை நினைவுபடுத்த மன்னனுக்கு சுருக்கென்றது. பல நாட்கள் இது பற்றி எண்ணி எண்ணி அவன் மனம் புழுங்கினான். அதை எப்படியோ அறிந்து கொண்டனர் அரசவையில் இருந்த மற்ற ஜால்ரா புலவர்கள். அவர்களுக்கும் சோழனுடைய அரசவையில் கம்பர் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டு பொறாமைதான். நேரடியாகக் கம்பனை அவமதிக்கவோ வேறெதனையும் கெடுதலாகச் செய்யவோ முடியவில்லை. ஆகவே கம்பனுடைய பெயருக்கு இழுக்கைக் கொடுத்து, அரசனால் இன்னும் அதிகமாக வெறுத்து ஒதுக்கப்படச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர்.
கம்பனுக்கு சில பலவீனங்கள் உண்டு. அழகிய பெண்களின் அணுக்கத் தொடர்புகளும் அவற்றில் ஒன்று. அரசவையில் மிகச்சிறந்த நாட்டியக்காரி ஒருத்தி இருந்தாள். பொன்னி என்பதே அவள் பெயர். பொறாமைக்காரர்கள் அவளிடம் சென்று ஒரு சிறு திட்டத்தைக்கூறி அதற்காகக் கையூட்டும் கொடுத்தனர். அத்திட்டத்தின்படி, பொன்னி கம்பனைத் தன் வீட்டிற்கு அழைத்து, விருந்தெல்லாம் செய்வித்து மகிழ்வித்தாள். அந்த மகிழ்ச்சியின் போதையில் கம்பன் மயங்கிப்போனான். அத்தருணத்தில் பொன்னி அவனிடம் ஒரு வரம் கேட்டாள். தப்பாமல் தருவதாகக் கம்பனும் வாக்குக்கொடுத்தான்.
ஓர் ஓலை நறுக்கை எடுத்துவந்து கம்பனிடம் கொடுத்து, அதில் கம்பனுடைய கையாலேயே 'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை' என்றெழுதிக் கையெழுத்திடச் செய்தாள். அந்த ஓலை, பொறாமைக் குழுவின் கைக்குச் சென்றது.
அடுத்தநாள் அரசவையில் பலரும் கூடியிருக்கும்போது, அந்த ஓலை அரசனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசன் அதனைப் பார்த்து அதிர்ந்துபோனான். மனதில் சற்று மகிழ்ச்சியும் வந்தது.
'கம்பரே! இது உம் கையெழுத்துதானா, பாரும்?'
'ஆமாம். அதில் என்ன சந்தேகம்?'
'இப்படியெல்லாம் நீர் செய்வீர் என்று யாம் கனவிலும் நினைத்ததில்லை. உம்மை இந்த அரசவையில் வைத்திருப்பதேகூட எமக்குக்கேவலம்'.
'இருங்கள் அரசே! அதில் உண்மையைத்தானே எழுதியிருக்கிறேன்.'
'என்ன உண்மை?"
'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை என்பது உண்மை. தாயாகிய ஸ்ரீ அதாவது தாசி என்னும் பொன்னி - அதாவது பொன்மகள் - லட்சுமிக்குக்
கம்பன் அடிமை என்று எழுதியிருக்கிறேன். சாத்திரவிரோதமாய் நான் என்னத்தை இங்கு செய்தேன்?'
==================================================================================
தானும் புலவர்களைப் போல அரசனை வாழ்த்தி பாடி பரிசில் பெறவேண்டும் என்று சோழ நாட்டு தருமியாகிய ஒரு மகாமுட்டாளுக்கு ஆசை வந்ததாம். அதை பற்றி யோசித்து கொண்டே வரும்வழியில் காக்காய் கரைய, குயில் கூவுவதை ஒரு சிறுவன் "காவிறையே, கூவிறையே என குறிப்பிட்டான். மண்ணைத் தின்னும் தன் சகோதரியின் குழந்தையை அதன் மாமன் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே" என செல்லமாக கொஞ்சுவதையும் கேட்டான். பிறகு மனைவியுடன் ஆலோசிக்கையில் அவள் சலிப்புடன் "ஏதேனும் கனாபின்னா மன்னா தென்னான்னு எழுதிட்டு போங்க" எனக் கூறினாள். பக்கத்து வீட்டு கணவன் மனைவி ச்ண்டையில் அவ்வீட்டு பெண்ணின் பிறந்தகத்தை இழித்து அவள் கணவன் "உங்கள் அப்பான் கோவில் பெருச்சாளி மாதிரி எல்லாத்தையும் சுருட்டினான்" எனக் கூறி அவன் மனைவியால் அதற்காக அப்பளக் கட்டையால் அடிபடும் பாக்கியம் பெற்றான். கூடவே, "உம் அப்பனைப் போல என் அப்பன் சோழரங்க பிரும்மஹத்தி என எண்ணினீரோ" எனவும் அவளால் 'அன்புடன்' கொண்டாடப் பெற்றான். இதையும் நோட் செய்து கோண்டார் நம்மூர் தருமி. பாட்டு இவ்வாறு உருவாயிற்று.
"காவிறையே கூவிறையே மண்ணுண்னி மாப்பிள்ளையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்க பிரும்மஹத்தியே" என்று.
அவருக்கே பிறகு 'பிரும்மஹத்தியே' என்ற வார்த்தை ஓவராகப் பட்டதால் அதை 'பெருமானே' என மாற்றினார்.
ஆக, காகம் கரைதலைக் கண்டு 'காவிறைய' என்றும், குயில் கூவுவதைப் பார்த்து 'கூவிறைய' என்றும் அப்படியே............... சிறுவன் சொன்ன ஒரு வாக்கியம், குழந்தையின் மாமன் சொன்ன ஒரு வாக்கியம் என அங்குமிங்கும் ஏதேதோ எழுதி, கவிதையென்றெண்ணி, மன்னரின் அவையில் பாட, எல்லோரும் சிரிக்க, கம்பர் மட்டும் - "இது மன்னரைப் போற்றிப் புகழும் அற்புதமான பாடல்" என்று விளக்கம் தந்தாராம்.
காவிரி ஆற்றின் அழகிய கரையில், கூவும் குயிலனங்கள் நிறைந்த சோலைகளுக்கு அதிபதியும், மண்ணைத் தின்ன பெருமாள் கண்ணனின் மாப்பிள்ளை முருகனைப் போன்ற கீர்த்தியையுடையவனும், உங்கள் அப்பன் சிவபெருமானை நிகர்த்த அரசனுக்குரிய வில்லை ஏந்திய பெரிய யாளியே, கர்ணனுக்கு பின்னால் கொடையில் சிறந்த தென்னாட்டு மன்னா (கன்னா பின்னா மன்னா தென்னா), சோழநாட்டு திருவரங்கப் பெருமானுக்கு நிகரானவனே (உவமைப் புறத்து பிறந்த அன்மொழித் தொகை) என்று கூறினாராம்.
==================================================================================
தந்தை பெரியார் தமிழைக் 'காட்டுமிராண்டி மொழி' என்று சொன்னதை சுட்டிக் காட்டி, "இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?" என்று கலைஞரைக் கேட்டார்கள். கலைஞரும் "அது சரிதான்" என்றார். கேட்டவர்கள் திடுக்கிட்டார்கள். கலைஞர் தொடர்ந்து சொன்னார். "ஆதிமனிதன் நாகரிகம் இல்லாத காலத்தில் காட்டுப் பகுதிகளில் திரிந்து வந்தான். தமிழும் அந்த அளவுக்கு முன்னோடியான மொழி என்பதைச் சுட்டிக்காட்டவே அதை காட்டுமிராண்டி மொழி என்றார், பெரியார். இதில் தவறேதும் இல்லை" என்றார்.
====================================================================================
முதலிரண்டு கதைகள் சமீபத்தில் 1880-களில் வீராசாமி செட்டியார் அவர்களால் தொகுக்கப் பெற்ற விநோதரச மஞ்சரியிலிருந்து எடுக்கப்பட்டவை. மூன்றாவது நிகழ்ச்சி வாராந்தரி ராணி லேட்டஸ்ட் இதழிலிருந்து (06.07.2008 இதழ்) எடுக்கப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
15 hours ago
37 comments:
நல்ல கதைகள்தானெ இதற்கு எதற்கு மொக்கைப்பட்டம்?
தமிழ் நல்லா தெரிஞ்சா எப்படியாவது சால்ஜாப்பு செஞ்சுடலாம்னு சொல்றீங்க...
அருமையான நிகழ்வுகள். இது மொக்கையே அல்ல. எனக்கு ஒரு சந்தேகம். 'டோண்டு' என்றால் என்ன?
//கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப்//
டோண்டு,ஏதோ இது ஒன்றுதான் மொக்கைப் பதிவு போல சொல்கிறீர்;நீர் எழுதுவதில் பாதிக்கு மேல் மொக்கைதானே ஐயா??????????
ரசித்து படித்தேன். அதிலும் "கன்னா பின்னா தென்னா மன்னா" அருமையோ அருமை..
நல்ல விஷயத்துக்கு ஏன் மொக்கை என்று தலைப்பு ? நீங்க என்ன "டோண்டு" ராகவனா இல்லை "நோண்டு" ராகவனா ?? :))))
சும்மாவா சொன்னார்கள் சான்றோர்கள்
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்று. அருமையான கவிநயம்மிகு கதைகளை ஏன் மொக்கை பதிவு என சொல்லியுள்ளீர்கள்,ஐயா!
//கோமணகிருஷ்ணன் said...
//கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப்//
டோண்டு,ஏதோ இது ஒன்றுதான் மொக்கைப் பதிவு போல சொல்கிறீர்;நீர் எழுதுவதில் பாதிக்கு மேல் மொக்கைதானே ஐயா??????????
respected dondu ragavanji,
please check sri.komanakrishnan link. when I clik it it goes to your dondu.blogspot.com .please verify and do the needful.
well wisher.
//please verify and do the needful.//
இதற்கெதற்கு வெரிஃபிகேஷன் எல்லாம்? இது அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டம். எதை வேண்டுமானாலும் லிங்காக வைக்கலாம்.
மேலும் கோமணகிருஷ்ணன் என்பது யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன். கவலை கொள்ளற்க (வியங்கோள் வினைமுற்று). பின்னூட்டத்தின் மொக்கைத் தன்மைக்காகவே அதை அனுமதித்தேன். உங்கள் பரிவிற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
'Sathiya said...
அருமையான நிகழ்வுகள். இது மொக்கையே அல்ல. எனக்கு ஒரு சந்தேகம். 'டோண்டு' என்றால் என்ன?'
Ist midterm test Part "A" mark 2X2= 2
---------------
டோண்டு' என்றால் என்ன?
சமஸ்கிருத்த்தில் 'டோண்டு' என்றால் நரி முகத்தில் முழித்தவர் என்று பொருள்.
புதுவை சிவா
1. டோண்டு என்றால் என்ன அர்த்தம்?
இக்கேள்விக்கு நான் எனது முதல் கேள்வி பதில்கள் பதிவிலேயே விடை கூறியுள்ளேன். அது பின்வருமாறு:
"என் அன்னைக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு என்று ஏதாவது ஒன்றிருந்தால், அது இக்கேள்விக்கான பதிலில்தான் இருக்கும். என் தந்தை அது ஒரு மராட்டிப் பெயர் என்றும். நான் பிறந்த செய்தி அவர் பம்பாய் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு வந்தது என்றும் கூறிக்கொள்வார். எனது அன்னையோ டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது".
அன்புடன்,
டோண்டு ராகவன்
// மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது".//
பெயரை விட அதற்கான காரணமும், வரலாறும் வியக்க வைக்கிறது. ஏனென்றால் இந்த பெயரை நீங்கள் இணையத்தில் எழுத புனைப்பெயராக வைத்திருக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன்.
//திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல//
சரியாத்தான் சொல்லியிருக்காங்க :))))
"குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம்"
:-)))))))))
puduvai siva
1.வீதிகளில் கார்களில் தனியாகச் செல்பவர்களால் தான் பெட்ரோல்/டீசல்
செலவு கட்டுபடுத்த முடியாமல் இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
2.இது மாதிரி பொருளாதர சுனாமிகள் வரும் போது நம்மவர்களும் கொஞ்சமாவது தியாகம் செய்ய முயலுவது மாதிரி தெரியவில்லையே?
3.அரசும் நியாம் இல்லாமல் அதீதமான வரியை குறைக்க மறுப்பது தர்மமாகுமா?( ஒரு லிட்டருக்கு வரி இவ்வள்வு என்று fixed ஆக வக்கலாமே?
4.அடித்தவரை லாபம் என்று அரசே நியாமில்லாமல் நடக்கும் போது இரும்பு.சிமிண்ட் வணிகர்களை கட்டுபடுத்த முயற்சி செய்வது " ஊருக்குதான் உபதேசம்" இல்லையா?
5.இவர்களை தண்டிக்க யார் வருவாரோ?
//dondu(#11168674346665545885) said...
//please verify and do the needful.//
இதற்கெதற்கு வெரிஃபிகேஷன் எல்லாம்? இது அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டம். எதை வேண்டுமானாலும் லிங்காக வைக்கலாம்.
மேலும் கோமணகிருஷ்ணன் என்பது யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன். கவலை கொள்ளற்க (வியங்கோள் வினைமுற்று). பின்னூட்டத்தின் மொக்கைத் தன்மைக்காகவே அதை அனுமதித்தேன். உங்கள் பரிவிற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
o.k sir thank you .
நல்ல பதிவப் போட்டுட்டு மொக்கைன்னு சொன்னதுதாம் பெரிய மொக்கை.
சிறப்பாக இருந்தது... உங்கள் பதிவில் இது எனது முதல் பின்னூட்டம்...
கம்பனுக்கும் மற்ற புலவர்களுக்கும் ஏற்படும் இராத்திரிக்கு என்ன சாப்பாடு என்ற சிலேடைக் கதையைப் முன்பு படித்திருக்கிறேன்... இந்த பதிவு அதை ஞாபகப் படுத்தியது.
1.What will happen to the world if the crude oil price goes above 200 dollar?.
2.Is it true, due to on line trading ,the present condition( shortage) for crude oil price, as said by our mof?
3.when the govt will pull the culprits?
4.onion for BJP fall and now petrol for congress?
5.it is feared that the inflation will not come down to single digit,in the near future for the following reasons
1.6 th pay commission to central staff from 1.1.2006
2.equal pay to all state govts from 1.1.2006
3.pay revision to all psus from 1.1.2007
4.free schemes by state govts to remain in office?
5.farmres not ready to do farming due to their heavy losses?
6. free on line trading in all posssible ways
your kind reply please.
எம்.கண்ணன்:
1. ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (CBSE) என இரண்டு கல்வித்திட்டங்கள் இருந்தால் போதுமே. தமிழ்நாட்டில் இன்னும் எதற்கு ஆங்கிலோ இண்டியன், மெட்ரிகுலேஷன் என விதவிதமாக கல்வித் திட்டங்கள் ? இவற்றில் என்ன வேறுபாடு ? எதற்கு இவை தொடரவேண்டும் ?
2. உங்களுக்கு நீச்சல் தெரியுமா ? ஆற்று நீரில் நீந்தியதுண்டா ?
3. நங்கநல்லூர் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் பொட்டி பொட்டியாக உள்ளனவே ? ஏன் அப்படி ? உங்கள் வீட்டில் காற்றோட்டம், வெளிச்சம் நன்றாக வருவதுண்டா ?
4. சோ எழுதிய 'கூவம் நதிக்கரையினிலே' எம்.ஜி.ஆர்- கருணாநிதி காலத்திய அரசியலை வைத்து எழுதப்பட்டது. இன்றைய சூழ்நிலைக்கு ஜக்குவின் யோசனகள் பொருந்தி வருமா ? 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' மாதிரி - கூவம் நதிக்கரையினிலே விலிருந்து சிறப்புப் பகுதிகளை அவ்வப்போது பகிரமுடியுமா ? இன்றைய பெரும்பாலான தமிழ்மண இளைஞர்களுக்கு அது ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்
5. 'வியங்கோள் வினைமுற்று' பற்றி சொன்னீர்கள். தமிழ் இலக்கண விதிகளை சிம்பிளாக உதாரணங்களுடன் அவ்வப்போது பதிவுகளாக கொடுக்க முடியுமா ? உங்கள் உதாரணங்களில் மக்கள் மனதில் பச்சக் என்று பதியும்.
6. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலங்களில் அவருக்கு ஆட்சியை நடத்திச் செல்ல உதவிய முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார் ? (உதா: பண்ருட்டி டெல்லி விஷயங்களை கவனித்துக்கொண்ட மாதிரி). எப்படி எம்.ஜி.ஆரால் அதிகாரிகளை நம்பி ஆட்சியை ஒப்படைத்து வெற்றியும் காண முடிந்தது ?
7. இந்திரா காந்தி இப்போது இருந்திருந்தால் இந்த நியூக்ளியர் டீல் மற்றும் இடது சாரிகளை எப்படி கையாண்டிருப்பார் ? (கூட்டணி ஆட்சி நிலையில்)
8. சென்னையில் அதிமுக வளர்ந்ததற்கு (அதிக எம்.எல்.ஏக்கள்) காரணம் - திமுகவின் அராஜகத்தின் மீது மக்கள் வெறுப்பா இல்லை ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு, வீராணம் நீர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கையாண்டதா ? தற்போது சென்னை மக்களுக்கு திமுகவின் மீது அபிமானம் எப்படி உள்ளது ? (வேலை வாய்ப்பு பெருக்கியுள்ள நிலையில்)
9. தமிழ் வலையுலகில் காமம் பற்றி துவங்கிவைத்தது (சமீபத்தில்) ஜெயமோகனின் 'கம்பனும் காமமும்' பதிவுகள் தானே ? யாருடைய காமம் பற்றிய பதிவுகள் சுவையாக இருக்கின்றன ?
10. வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவிற்கு உங்கள் ஓட்டு விழுமா ? ஆம் என்றால் ஏன் ? இல்லை என்றால் ஏன் ?
//நல்ல கதைகள்தானெ இதற்கு எதற்கு மொக்கைப்பட்டம்?//
//அருமையான கவிநயம்மிகு கதைகளை ஏன் மொக்கை பதிவு என சொல்லியுள்ளீர்கள்,ஐயா!//
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா
தனியார்மயம் தாரளமயம் உலகமயம் எங்கும் இதே பேச்சு.இத்ன் பாதிப்பில் இந்தியர் கதை அதோ கதி எனும் இடதுகளின் வாதம் உண்மையாய் விடும் போலுள்ளதே.
1.வீட்டு வாடகை ஏற்றம்
2.பணவீக்கவிகிதம் 25 % மேலே மேலே
3.கச்சா எண்ணெய் விலை 140 டாலருக்கும் மேலே
4.பங்கு வர்த்தகம் பாதளம் நோக்கி
5.விவசாயிகளின் கையறு நிலை
6.பட்டினிச் சாவு வருமோ என பதறும் பத்திரிக்கைகள்
தங்களின் விரிவான பதில் இன்றய சூழ்நிலை அடிப்படையில் ,நடு நிலையுடன்
பாண்டிய நக்கீரன்
I am a regular reader of your blog and I dont think you are pro-ADMK. I was surprised to see your name in this pro-admk blog as " அம்மாவின் புகழை நமக்கு முன்னே பரப்பிவரும் முன்னோடிகள்"
Please refer the link - http://aiadmk9.blogspot.com/2008/07/blog-post_7556.html
I just wanted to make sure if this was done with your knowledge.
நன்றி பாபு அவர்களே. நான் ஜெயலலிதாவின் மழை நீர் சேமிப்பு திட்டம், புலிகள் எதிர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்காக அவரை பாராட்டி எழுதியுள்ளதை வைத்து அவ்வாறு அவர்கள் போட்டிருப்பார்கள். அதே சமயம் கலைஞரையும் புகழ்ந்து பதிவுகள் போட்டுள்ளேன், அதற்காக கலைஞர் ஆதரவு பதிவிலும் என் பெயரை போட்டாலும் போடுவார்கள். நான் என்ன செய்ய முடியும். சிரித்துவிட்டு போக வேண்டியதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மேலும் கோமணகிருஷ்ணன் என்பது யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன்//
டோண்டு அவர்களே, கோமணகிருஷ்ணன் என்று பிளாக்கர் அக்கவுன்டு வைத்து பதிவு போட்டிருப்பது வேறு யாரோ. வழக்கமாக பதிவு போடும் நானல்ல. நான் அனானியாக மட்டுமே பதிவு போட்டு வருகிறேன்.
கோமணகிருஷ்ணன்
//
குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம்
//
இப்போது எப்படி முழிக்கிறீர்கள்?
ஆப்ஷன்ஸ்.
1. டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
2. சர சர......
3. விரு விரு.....
4. டிஷூம் டிஷூம்....
//Anonymous said...
//மேலும் கோமணகிருஷ்ணன் என்பது யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன்//
டோண்டு அவர்களே, கோமணகிருஷ்ணன் என்று பிளாக்கர் அக்கவுன்டு வைத்து பதிவு போட்டிருப்பது வேறு யாரோ. வழக்கமாக பதிவு போடும் நானல்ல. நான் அனானியாக மட்டுமே பதிவு போட்டு வருகிறேன்.
கோமணகிருஷ்ணன்
//
ஆமாம்,டோண்டு அவர்களே,
அது நானும் அல்ல,நானும் அனானியாக வந்துதான் பதிவு போடுவேன்.
அது வேறு யாரோ...
கோமணகிருஷ்ணன்
//இப்போது எப்படி முழிக்கிறீர்கள்?//
அக்குழந்தை முழித்ததை பார்த்து மகிழ்ந்த அந்த இருவரும் முறையே திசம்பர் 29, 1960-லும் செப்டம்பர் 9, 1979-லும் மறைந்தனர். கூடவே பெரியவனானதால் அக்குழந்தையும் இல்லாமல் போயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. நீங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக உணர்ந்தது எப்போது?
2. உங்களுக்கு பல மொழிகள் தெரிந்ததால் Translator வேலை செய்கிறீர்களா? இல்லை Translator ஆவதற்காக பல மொழிகள் கற்றீர்களா? (ஏற்கனவே மற்ற பதிவுகளில் இதைப் பற்றி எழுதியிருந்தால் தவறாக நினைக்க வேண்டாம். சுட்டி மட்டும் கொடுக்கவும்)
3. இந்தியா உண்மையாகவே ஜனநாயக நாடு என்பது சரியா? ஏனெனில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முறையில், ஒவ்வொரு படிக்கட்டும் ஜனநாயக ரீதியாகவே ஏறப்படுகிறது (Primary elections for candidate selection by each party, then general election etc.) இங்கு அது கண்டிப்பாக சாத்தியமில்லை, மாநிலத்திலும், மத்தியிலும்.
"//இப்போது எப்படி முழிக்கிறீர்கள்?//
அக்குழந்தை முழித்ததை பார்த்து மகிழ்ந்த அந்த இருவரும் முறையே திசம்பர் 29, 1960-லும் செப்டம்பர் 9, 1979-லும் மறைந்தனர்."
:-(((((
Don't worry Doondu sir
we are with you in all the time!!
Puduvai siva
//Anonymous said...
//கோமணகிருஷ்ணன் said...
//கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப்//
டோண்டு,ஏதோ இது ஒன்றுதான் மொக்கைப் பதிவு போல சொல்கிறீர்;நீர் எழுதுவதில் பாதிக்கு மேல் மொக்கைதானே ஐயா??????????
respected dondu ragavanji,
please check sri.komanakrishnan link. when I clik it it goes to your dondu.blogspot.com .please verify and do the needful.
well wisher.//
//Anonymous said...
//dondu(#11168674346665545885) said...
//please verify and do the needful.//
இதற்கெதற்கு வெரிஃபிகேஷன் எல்லாம்? இது அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டம். எதை வேண்டுமானாலும் லிங்காக வைக்கலாம்.
மேலும் கோமணகிருஷ்ணன் என்பது யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன். கவலை கொள்ளற்க (வியங்கோள் வினைமுற்று). பின்னூட்டத்தின் மொக்கைத் தன்மைக்காகவே அதை அனுமதித்தேன். உங்கள் பரிவிற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
o.k sir thank you .
//
//Anonymous said...
//மேலும் கோமணகிருஷ்ணன் என்பது யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன்//
டோண்டு அவர்களே, கோமணகிருஷ்ணன் என்று பிளாக்கர் அக்கவுன்டு வைத்து பதிவு போட்டிருப்பது வேறு யாரோ. வழக்கமாக பதிவு போடும் நானல்ல. நான் அனானியாக மட்டுமே பதிவு போட்டு வருகிறேன்.
கோமணகிருஷ்ணன்
July 02, 2008 6:06 PM//
//Anonymous said...
//Anonymous said...
//மேலும் கோமணகிருஷ்ணன் என்பது யார் என்பதை நான் நன்றாகவே அறிவேன்//
டோண்டு அவர்களே, கோமணகிருஷ்ணன் என்று பிளாக்கர் அக்கவுன்டு வைத்து பதிவு போட்டிருப்பது வேறு யாரோ. வழக்கமாக பதிவு போடும் நானல்ல. நான் அனானியாக மட்டுமே பதிவு போட்டு வருகிறேன்.
கோமணகிருஷ்ணன்
//
ஆமாம்,டோண்டு அவர்களே,
அது நானும் அல்ல,நானும் அனானியாக வந்துதான் பதிவு போடுவேன்.
அது வேறு யாரோ...
கோமணகிருஷ்ணன்
July 02, 2008 6:28 PM
கினறு வெட்ட பூதங்களா!
கோமணகிருஷ்ணன் 1
கோமணகிருஷ்ணன் 2
கோமணகிருஷ்ணன் 3
oh..!
பல தான தருமங்கள் ,கடவுள் கைங்காரியங்கள் ஆலயத் திருப்பணி கள்,ஆன்மீக அமைப்புகளுக்கு தாராள பொருளதவி,யோக அமைப்புகளுக்கு
எல்ல உதாவிகளும் அவ்ர்களது வளர்ச்சிக்கு செய்து பெரும் பேர் பெரும் ஆலை அதிபர்கள்,பெரும் வணிக பிரமுகர்கள்,தொழிற்சாலை முதலாளிகள் பல்ர் தங்களது பணியளார்களை அடிமைபோல் நடத்தியும் மிகச் சொற்ப சம்பளம்(தினக் கூலி 100 க்கு கீழ்)கொடுத்தும் பெரும் பணம் ஈட்டுகின்றனரே, இவர்கள் செய்யும் மேலே சொன்ன அந்த புண்ணியங்கள் இவர்கள் போகும் வழிக்கும் உதவிடுமா?
கடவுளை,சமுதாயத்தை ஏமற்ற முயலும் இந்த கபட சன்னியாசிகளை பற்றி தங்களின் கருத்து?
1.இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தங்களை கவர்ந்தவர் யார்?
2.முக்கியமான காரணம்?
3.அவர் செய்த பெரிய நன்மை?
4.அவரை மீறி நடந்த பெரிய தவறு?
5.அவரது நினைவாக எதைக் கருதுகிறீர்கள்?
6.மன்னராட்சிக்கும் ,இன்றய போலி மக்கள் ஆட்சிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு?
7.இன்னும் முடியாட்சி மீது ராஜ விசுவாசம் உள்ளவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
8.தங்கள் நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணியாற்றியோர் யாராவது இந்த உணர்வோடு உள்ளனரா?
9.அவர்கள் பற்றிய தங்கள் கருத்து?
10.இதே மாதிரி தற்சமயம் உலகில் எங்கெல்லாம் மன்னாராட்சி தொடர்கிறது?
11.சுதந்திர இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் "super star" யார்?
12.தாங்கள் சொல்லும் காரணம்?
13.அவரோடு அலுவலக விசயமாக(மொழிபெயர்ப்பு)தொடர்பு இருந்த துண்டா?( அல்லது அவரது காரியதரிசி யுடன்)
14.அதில் ஏதாவது புதிய மகிழ்வான அனுபவம் உண்டா?
15.கசப்பான அனுபவம் ஏதாவது?
16.அதை( அந்த நெருக்கத்தை)
நண்பர்கள் முன்னேற்றதிற்ககாக சிபாரிசுகள் செய்ய முயன்றதுண்டா?
17.பழமா? காயா?
18.அவரையும் இப்போதைய பிரதமரை
ஒப்பிட்டு கருத்து சொல்லவும்.
19.அவர் இப்போது இருந்தால்
இருந்தால் என்ன சொல்லுவார்?
20.அது உங்க
ளுக்கு ஏற்புடையதா?
பாண்டிய நக்கீரன்
//அம்மாவின் வலைஞர் பாசறை
View my complete profile
அம்மாவின் புகழை நமக்கு முன்னே பரப்பிவரும் முன்னோடிகள்
இட்லிவடை
திரு.டோண்டு ராகவன்
மாயவரத்தார்
வீ தி பீப்பிள்
ஜெயராமன்
ஜீனோ
ஹரிஹரனின் உலகங்கள்
ஜடாயு //
you too sri dondu ragavanji.
please be carefull otherwise ,a order against your dondu.blogspot.com is likely to be issued shortly .
already you have been writing against "tamil makkaLin kaavalarai', kannith thamizai, uzaippin ussaththai,thUngkaach suriyanai,varungkaala,nikazkaala,kadathakaala thalavarai.............
ulakath thamizhar pEravai
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
(please do smile)
ஆக கம்பனையும் மொக்கைல சேத்துட்டிங்க...:)
அப்ப கலைஞரை யாருக்காவது ஒப்பிடுகிறீர்களா...!
//அப்ப கலைஞரை யாருக்காவது ஒப்பிடுகிறீர்களா...!//
பரவாயில்லை இத்தனை பின்னூட்டம் இட்டவர்களில் நீங்கள் ஒருவர்தான் நான் சொல்ல வந்ததற்கு கொஞ்சம் கிட்ட வந்துள்ளீர்கள். இப்பதிவில்ல் இரண்டாவதாக சொன்ன நிகழ்ச்சிக்கும் மூன்றாவதற்கும்தான் முக்கிய தொடர்பு. முட்டாள்தனமாக உள்ளூர் தருமி கூறியதை சப்பை கட்டு கட்ட கம்பர் வர வேண்டியிருந்தது.
கம்பருடன் தற்கால மனிதர் ஒருவரை ஒப்பிட்டதை கண்டுபிடித்து விட்டீர்கள். அப்போ தருமி யார்?
முதல் மொக்கையற்ற உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கலைஞர் பற்றிய இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kalaignarkarunanidhi.blogspot.com/2008/09/blog-post_08.html
மதுரை தினகரன் பத்திரிகை எரிப்பு விஷயத்தில் அழகிரி பற்றி கேள்விகேட்ட பத்திரிகையாளரை “நீதாண்டா கொலைகாரன்” என்று பதிலளித்த பண்பு என்ன, யாராவது தன்னை எதிர்த்து பேசிவிட்டால், “நான் சூத்திரன், அதனால் அவர்கள் பேசுகிறார்கள்” என்று ஒப்பாரி வைக்கும் பண்பு என்ன, இத்தனை நாள் தானும் கம்யூனிஸ்டு என்று ஈஷிக்கொண்டு உறவாடிவிட்டு, திடீரென கம்யூனிஸ்டு தலைவர் பாப்பான் என்று நினைவுக்கு வந்து வயிற்றெரிச்சல் கவிதை இட்டதென்ன, அடேங்கப்பா எல்லாம் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சிதான். வீட்டில் சுற்றிப்போடச் சொல்லுங்கள்.
இதை நீங்கள் மட்டுறுத்தி வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை இல்லாததால் அதை எனது ”கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப் பதிவு டோண்டு ராகவனிடமிருந்து” என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். அப்பதிவில் தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் உளறியதை கலைஞர் சாமர்த்தியமாக பகுத்தறிவு முறைப்படி சப்பைகட்டு கட்டியதை குறித்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவ்ன்
Post a Comment