3/08/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 24 & 25

பகுதி - 24 (05.03.2009):
நீலகண்டன் வீடு. வேம்பு சாஸ்திரிகள் நீலகண்டனின் மனைவி பர்வதத்திடம் வரும் தமிழ் ஆண்டுக்கான பாம்புப் பஞ்சாங்கத்தை அளிக்கிறார். (புத்தாண்டு ஏப்ரலில்தான் வருகிறது அப்படித்தானே என முரளி மனோகர் கேட்கிறான். அதிலென்ன சந்தேகம் முரளி?). பாம்பு பஞ்சாங்கத்துக்கும் மற்றப் பஞ்சாங்களுக்கும் என்ன வேறுபாடு என அருகில் இருக்கும் உமா கேட்க, இதில் பாம்பு படம் இருக்கும் மற்றதில் இருக்காது என அவள் தாயார் பதிலளிக்க, வேம்பு சாஸ்திரிகள் திகைக்கிறார்.

சீனில் வருகின்றனர் சோவும் நண்பரும். இது என்ன சார் பஞ்சாங்கம்னு என நண்பர் கடுப்படிக்க, அப்படியெல்லாம் பஞ்சாங்கத்தையெல்லாம் விட்டேத்தியாகப் பேசி ஒதுக்க முடியாது என கூறும் சோ பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் பற்றிக் கூறுகிறார். உலகம் தட்டையானது என பேசிய அந்த காலத்திலேயே உலகை அண்டமாக கூறியுள்ளனர் நம்மவர்கள். சூரியன் பூமியை சுற்றுகிறது என்று மற்றவர் கூறிய தருணத்திலேயே சமயத்திலேயே பாஸ்கராச்சாரியார், வராகமிகிரர் மற்றும் ஆர்யபட்டர் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என கண்டுபிடித்துள்ளனர் என கூறுகிறார்.

மறுபடியும் நீலகண்டனின் வீடு. தனது மகள் ஜயந்தியை சாம்பு சாஸ்திரிகள் மகன் கிருபாவுக்கு மணம் செய்துதர உத்தேசித்திருப்பதாக வேம்பு சாஸ்திரிகள் கூறிவிட்டு செல்கிறார். உமாவோ தன் தாயாரிடம் கிருபா இன்னொரு பெண்ணை லவ் பண்ணுகிறான் என்று தான் கண்டதைக் கூற, அம்மாவுக்கோ கவலை, ஒரு வேளை உமாவுக்கும் அம்மாதிரி ஏதேனும் அபிப்பிராயம் இருக்குமோ என. உமா கூறுகிறாள் தனது பெற்றோர் பார்க்கும் பையனையே தான் காதலித்து கொள்வதாகக் கூறிவிடுகிறாள். தாயாருக்கும் பெண்ணுக்குமான அந்தரங்கப் பேச்சு மனதுக்கு நிறைவாக படமாக்கப்பட்டுள்ளது.

பாகவதர் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கிறது. அதிலிருந்து அவரது பேரன் ராமசுப்பு வந்து இறங்குகிறான். அவனது அறைத்தோழன் தற்கொலை செய்து கொண்டதால் அவன் மனம் பாதிக்கப்பட்டு தாத்தா வீட்டுக்கு வருகிறான். தற்கொலை ஆதலால் போலீஸ் எல்லாம் வருகிறது.

சோவின் நண்பருக்கு சந்தேகம், தன்னுயிரை மாய்த்துக் கொள்ள ஏன் ஒருவருக்கு உரிமையில்லை என. சோ அதற்கான காரணங்களை விளக்குகிறார். தனது Madras by night என்னும் நாடகத்திலிருந்தும், புராணங்களிலிருந்து உதாரணங்கள் தந்து விளக்குகிறார். அவை சுவாரசியமாக உள்ளன. ஒரு புழு கூட தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போராடும். அடுத்த பிறவியில் தான் பன்றியாகப் பிறக்கப் போவதை அறிந்த ஒரு ரிஷி தன் மகனிடம் இது பற்றி கூறிவிட்டு, அருகில் தென்படும் பன்றியைக் காட்டி, அதற்கு தான் குட்டியாக எப்போது பிறக்கப் போகிறோம் என்பதை ஞான திருஷ்டியால் அறிந்து கூறுகிறார். தான் அவ்வாறு பன்றிக் குட்டியாக பிறந்ததுமே தன்னை கொன்று அப்பிறவியிலிருந்து விடுதலை அளிக்குமாறு கூறி இறக்கிறார். அவர் சொன்னது போலவே அவர் பன்றியில் வயிற்றிலிருந்து குட்டியாகப் பிறக்க அவர் மகன் அக்குட்டியைக் கொல்ல வருகிறான். இப்போது குட்டி அவனிடம் கூறுகிறது, தான் இறக்க விரும்பவில்லை என. அதுதான் உயிர்மேல் வரும் ஆசை என சோ கூறுகிறார். யாருமே இதற்கு விதிவிலக்கு இல்லை எனவும் கூறுகிறார். வாழ்க்கை ரொம்பவும் முக்கியம். நல்லச் செயல்களை செய்ய அது முதலில் தேவை.

ராமசுப்பு தங்காத்துக்கு வந்து சேர்ந்த செய்தியை அவனது பெற்ரோருக்கு தெரிவிக்க பாகவதர் முயற்சி செய்கிறார்.

அடுத்த சீன் நீலகண்டன் வீட்டில். வேம்பு சாஸ்திரிகள் நீலகண்டனுடன் பேசிக் கொண்டிருக்கிறார். தனக்கு ஆபீசில் ரொம்பத் தொல்லை எனக் கூற, வேம்பு சாஸ்திரிகள் அவருக்கு சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது என்றும் அவருக்கு ஏழரைச் சனி என்றும் கூறுகிறார். நீலகண்டன் அதை நம்ப மறுக்க, ஆனானப்பட்ட நளமகாராஜாவையும் அது விடவில்லை, சிவபெருமானையே இரண்டரை நாழிகை பீடித்தது. ஆகவே அதை அலட்சியம் செய்யலாகாது என கூறுகிறார் வேம்பு சாஸ்திரிகள்.

விளம்பர இடைவேளைக்கு பின்னால் சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு வேம்புவும் அவரது மனைவி சுப்புவும் வருகின்றனர். தங்கள் மகள் ஜயந்தியை அவாத்து கிருபாவுக்கு பாணிக்கிரகணம் செய்யுமாறு கேட்கின்றனர். அவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஜயந்திக்கும் சம்மதமா என கேட்டு சாம்பு நிச்சயப்படுத்திக் கொள்கிறார். ஆனால் கிருபாவின் சம்மதத்தை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவர்கள் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு கை செல்பேசியை டயல் செய்கிறது. யார் அது என்பதைக் காட்டவில்லை.

சிங்காரத்தின் தலைமையில் ஒரு வீட்டில் யார் கையையோ எடுக்க ஒரு கோஷ்டி புறப்பட அவன் மனைவி அவனைத் தடுக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அவன் அதற்காக தயங்கவில்லை. அவர்கள் ஒருவீட்டில் அடிதடி நடத்தி விட்டு வெளியே வருவதை அசோக் பார்க்கிறான். எபிசோட் அத்துடன் முடிந்தது.

பகுதி - 25 (06.03.2009):
முதல் சீனில் நாதனும் பாகவதரும் அசோக் திருவண்ணாமலைக்கு ஏன் சென்றான் என்பது பற்றி பேசுகின்றனர். துறவறம் மேற்கொண்ட பலர் அதற்கு முன்னால் பல முறை இம்மாதிரி காணாமல் போனவர்கள் என பாகவதர் கூறுகிறார். உதாரணத்துக்கு ரமண மகரிஷி செய்ததைப் பற்றி கூறி கொண்டிருக்கும்போதே அவ்வப்போது அசோக்கும் அதே மாதிரி செய்து நாதனையும் வசுமதியையும் டரியல் ஆக்குகிறான். அசோக்க்கிடம் பேசி அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்பதைக் கண்டறியுமாறு பாகவதரை நாதனும் வசுமதியும் கேட்டு கொள்கின்றனர்.

அதே போல பாகவதரும் கேட்க அசோக் தனக்கே கடைசி நிமிடம் வரை அவ்வாறு வீட்டை விட்டு போகப் போகிறோம் என்ற விஷயம் தெரியாது எனக் கூறி அவரைத் திகைப்பிலாழ்த்துகிறான். யாரோ யாரையோ கைலாசம் எனக் கூப்பிட்டதில் தான் மிகவும் ரோமாஞ்சனம் அடைந்ததாகவும், தான் இவ்வுலகுக்கு வந்ததே ஏதோ டூரிஸ்ட்போலத்தான் என்ற எண்ணம் வந்ததாகவும் கூறுகிறான். எதையோ தேடவே தான் வந்ததாகவும் அது கூடிய சீக்கிரம் தனக்கு கிட்டும் என நம்பிக்கையும் வந்ததாகக் கூறுகிறான். திடீரெனப் பார்த்தால் தான் திருவண்ணாமலையில் இருந்ததாகவும், யார் யாரோ அவனுக்கு சாப்பாடு போட்டர்கள் எனவும், யார் யாரோ இருக்க இடம் தந்ததாகவும் கூறினான்.

திருவண்ணாமலையில் இருந்தபோது திடீரென ஒருவரை பார்த்ததாகவும் அவர் தன்னிடம் அலைய எல்லாம் வேண்டாம், இருக்கும் இடத்திலேயே தன்னைப் போல சும்மா இருத்தலே நலம் எனக் கூறினார் என்றான். சமயம் வரும்போது அவனை அழைத்து செல்ல ஆட்கள் வருவார்கள் என்றும் கூறிவிட்டு அவர் மறைந்து விட்டார் எனவும் கூறினான். இதை யாருக்கும் இப்போதைக்கு கூறவேண்டாம் என பாகவதர் அசோக்கிடம் கூறுகிறார்.

பிறகு பாகவதரும் வசுமதியும் பேசுகின்றனர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க புத்திர காமேஷ்டி யாகம் செய்து வசுமதி அசோக்கை கருவுற்றிருந்தபோது நடந்த சில அற்புதங்கள் பற்றி பாகவதர் அவளைக் கேட்க அவளும் கூறுகிறாள். திடீரென மிருதங்க ஒலி கேட்டதாகவும் பிறகு நாதஸ்வர ஒலி கேட்டதாகவும் கூறினாள். பாகவதர் சொன்னதுபோல தான் கருவுற்றிருந்தபோது ராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற நன்னூல்களைப் படித்ததாகவும் கூறினாள். நல்ல சத்புத்திரன் வேண்டும் என வேண்டிக் கொண்டதையும் கூற அதே போலத்தான் அசோக் அவளுக்கு சத்புத்திரனாகப் பிறந்தான் என பாகவதர் கூறினார். சத்புத்திரன் இம்மாதிரி படுத்துவான் எனத் தெரிந்திருந்தால் தான் சாதாரண புத்திரனையே கேட்டிருப்பேன் என வசுமதி பெருமூச்சு விடுகிறாள்.

சோவை அவர் நண்பர் கேட்கிறார், வேண்டுதலில் வார்த்தைப் பிரயோகம் முக்கியமா என. ஆம எனக் கூறும் சோ ஒபாமா பதவி ஏற்பின் போது எடுத்துக் கொண்ட பிரமாணத்தில் சில வார்த்தைகள் தவறாக வந்ததால் பதவிப் பிரமாணம் மறுபடி எடுக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டார். இதற்கே இந்தப் பாடு என்னும்போது வேண்டுதலில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மறக்கலாகாது. தேவத்தச்சன் என்பவர் இந்திரனைக் கொல்ல விரும்பினார். அதைச் செய்யும் சக்தியுடைய மகனை வேண்டி தவம் செய்ய, வரம் கேட்கும் தருணத்தில் வார்த்தைப் பிரயோகம் தவறி விடுகிறது. அதாவது இந்திரனைக் கொல்லக்கூடிய மகன் என்பதற்கு பதில் இந்திரனால் கொல்லப்படவேண்டிய மகன் எனக் கேட்டு விடுகிறார். அதே போல அவருக்கு மகன் பிறந்து பிற்காலத்தில் இந்திரனால் கொல்லப்படுகிறான்.

[இத்தருணத்தில் எனக்கு சமீபத்தில் 1974-ல் வந்த கலியுகக் கண்ணன் என்னும் படம் நினைவுக்கு வந்தது. அதில் அப்படித்தான் தான் கடித்தால் மனிதன் இறக்க வேண்டும் என விரும்பிய எறும்பு கடவுளிடம் கடிச்சால் பிராணன் போக வேண்டும் என வேண்ட, கடவுளும் அவ்வாரே ஆகுக எனக் கூறிவிட்டார். ஆகவேதான் எறும்பு நம்மைக் கடித்தால் நாம் அதை தன்னிச்சையாக நசுக்கிக் கொல்கிறோமாம்].

மீண்டும் பாகவதர் மற்றும் வசுமதி. “சத்புத்திரன் வேண்டும் என வேண்டிக் கொண்டாய், கடவுளும் அவ்வாறே தந்தார். ஆனால் அவனை வளர்க்க நல்ல் ஆத்மபலம் தேவைப்படும்” என பாகவதர் கூற, தனக்குத்தான் அம்மாதிரி ஆத்மபலம் எல்லாம் இல்லையே என வசுமதி புலம்புகிறாள். ஒருவேளை அவளுக்கு அதுவும் கிடைக்க வேண்டும் என்பதும் பகவானின் இச்சையாக இருக்கலாம் எனக் கூறிவிட்டு, தங்கம் நகையாவதற்கு முன்னால் நெருப்பில் புடம்போடப்படுவதையும் பாகவதர் மிருதுவாகக் கூறுகிறார். “நல்ல வேளை ஞாபகப்படுத்தினீர்கள். தட்டானிடம் ஒரு டஜன் வளையலுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன்” எனக் கூறிவிட்டு தட்டான் கடைக்கு விரைகிறாள். இந்த லேடீஸை மாத்தவே முடியாது என பாகவதர் விரக்தியுடன் அலுத்துக் கொள்கிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

Unknown said...

Hello Sir,
Is there any way we can contact Mr.Cho Ramaswamy directly?
Any contact details like emali id or address to which he will reply to our mails in person. This help will be really appreciated.
TIA.
Reg,
Mona

dondu(#11168674346665545885) said...

//Is there any way we can contact Mr.Cho Ramaswamy directly?//
Try writing to him care of Thuglak. Mark clearly on the envelope that the letter is meant personally for him. I am sure the letter will be forwarded to him. Whether he would answer you or not, that is another matter.

Regads,
N. Raghavan

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்

1. தினகரன் கூட தலையங்கம் வெளியிட ஆரம்பித்துவிட்டதே ? (2ஆம் பக்கம்)எழுதுவது யார் ? கலாநிதியா ? தயாநிதியா ? அவர்களுக்கு இந்த அளவு தமிழில் எழுத வருமா ?

2. சன் டிவி, சன் எஃப்.எம், சன் பிக்சர்ஸ் போன்றவற்றின் வெற்றிக்குக் காரணம் கலாநிதியா இல்லை அவரது ஆப்த நண்பர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் பிஸினஸ் உத்திகளா ? (என்ன தான் அரசியல்/ஆட்சி பலம் உபயோகித்தாலும்)

3. ஸ்டாலின் மனைவி துர்கா ஏன் சாந்தா என பெயர் மாற்றிக்கொண்டுள்ளார் ?

4. அழகிரி மதுரைக்கு எம்.பி ஆனால் பாராளுமன்றத்தில் பேசுவாரா ? இந்தி தெரியுமா ?

5. மலைச்சாமி, மைத்ரேயன் போன்ற அதிமுக ராஜ்யசபை எம்.பி.க்கள் இதுவரை தமிழ்நாட்டுக்காக என்ன செய்துள்ளனர் ?

6. ஹிண்டு என்.ராம் பற்றியும் அவர் ஹிண்டுவை நடத்தும் விதம் பற்றியும் உங்கள் கருத்து என்ன ? (இட்லிவடை பதிவைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_1577.html)

7. ஜனதா நகர் காலனி என சோ வின் சீரியல் ஒன்று (தமிழ் தூர்தர்ஷன் ?) பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானதே ? பார்த்ததுண்டா ? அவரின் தம்பியும் அதில் நடித்திருப்பார்.

8. தமிழில் சிறந்த கொக்கோகக் கதைகள் யாவை ? (சரோஜாதேவியை குறிப்பிடாதீரும்). அவை இப்போது புத்தகமாக கிடைக்கிறதா ? தமிழ்வாணன் பதிப்பகம் சில (பல ?) புத்தகங்கள் வெளியிட்டுள்ளனரே ? படித்ததுண்டா ?

9. ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வார தொடர் (உதா. பா.ராகவன்) எழுதுபவர்களுக்கு ஒரு வார கட்டுரைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ? அதை ஒழுங்காக கொடுப்பார்களா ? (சாரு நிவேதிதா - யாரும் சரியாக பணம் கொடுப்பதில்லை என எழுதியுள்ளாரே ?)

10. இந்தக் கோடை மிக கடுமையாக இருக்கும் என சுற்றுப்புற சூழ்நிலை வல்லுனர்கள் சொல்கிறார்களே ? எப்படி (மின்வெட்டையும் சேர்த்து) சமாளிக்கப்போகிறீர்கள் ? என்ன பிளான் ?

mokrish said...

You blog is really interesting.

The attempt to capture the essence of Engey Brhamnan serial is nice.

In the recent episode, Ashok comes and checks the spelling of the word 'occasion'. During my college days, my professor gave a beautiful thumb rule for this word. He said 'do not allow an ASS into an occasion' emphasising that we should not use double 'ss'in this word.

Just thought I will share this

regards

Mokrish

dondu(#11168674346665545885) said...

//The attempt to capture the essence of Engey Brhamnan serial is nice.//
நன்றி. ஆனால் நான் செய்வது முயற்சி மட்டுமே. என்னதான் இருந்தாலும் சீரியலை நேரில் பார்ப்பது போல வராது. ஆகவேதான் முடிந்த அளவுக்கு சம்பந்தப்பட்ட எபிசோடுகளின் வீடியோக்களின் சுட்டிகளைத் தருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

இன்று நடந்த உண்ணாவிரத்துக்கு சோ சென்றிருந்தாரா?

போகவில்லை என்றால் ஏன்?

இந்த உண்ணாவிரதம் இலங்கை தமிழர்களுக்காக என்றால் ஏன் அதை தவிர மற்ற அனைதையும் பேசுகிறார்கள்?

ஒருவர் புகழும் போது நார்மலாக நமக்கு கூச்சம் வரவேண்டும்!
ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியிம் சரி ஒருவித புன்னகையுடன் அமர்ந்திருகிறார்களே, அவ்வளவு கொடிய நெஞ்சமா அவர்களுக்கு?

இன்னுமா அ.தி.மு.க ஓட்டு போடும் எண்ணம் உங்களுக்கு?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
சோ போனாரா இல்லையா எனத் தெரியாது. இலங்கை பிரச்சினை சம்பந்தமாக சோ அவர்களின் நிலைப்பாட்டை பார்க்கும்போது போயிருக்க மாட்டார் எனத் தோன்றுகிறது. அவ்வளவே.

மற்றப்படி முகஸ்துதிக்கு மயங்குபவர்கள் என்னும் வகையில் ஜெயும் சரி கருணாநிதியும் சரி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

ஆனால் என்ன செய்வது தீவிரவாத எதிர்ப்பு என்னும் விஷயத்தில் ஜெ அதிகம் ஸ்கோர் செய்கிறாரே. அதே போல நிர்வாகத் திறமையிலும் அவர் கருணாநிதியைவிட மேல்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அரசியல் வாதிகளுக்கு சுய விளம்பரம் தற்புகழ்ச்சி தேவையான ஒன்று. இது பற்றி குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கரிகாலன்.

Anonymous said...

1.ஜெயலலிதாவின் திடீர் இலங்கை கரிசனம் அவரை கரை சேர்க்குமா? ஒரேடியாய் கவிழ்க்குமா?
2.இடியாப்பச் சிக்கலில் தேர்தல் களத்தில் தற்சமயம் யார்?
3.சோவின் நிலை தர்ம சங்கடமா?
4.அவரது பாஜவும் இலங்கை பிரச்சனையில் "டகால்டி" வேலை காட்டுதே?
5.ஒருவேளை கூட்டணி பலம்,விலைவாசி உயர்வு,கலைஞரின் உடல் நலக்குறைவு ஆகியவற்றால் ஜெ வெற்றிபெற்றுவிட்டால்,காங்கிரஸ் கலைஞரை கைகழுவுமா?
6.மத்திய அரசும் ,மாநில அரசும் போட்டி போட்டு இப்படி அநியாயமாய் அதன் உழியர்களின் வருமானத்தை கூட்டிகொண்டே போவதை பார்த்தால்?
7.அரிசி விலை 50 ஐ தாண்டுமாமே?
8.குறள் டீவி எப்படி?
9.அடுத்த தொலைதொடர்பு அமைச்சர் அழகிரியா?
10.கனிமொழி ?

Anonymous said...

Watch "Thirumbi Parkiren" in Jaya tv - every night 10.00pm - This week it is Cinema experiences of Cho.
(Last week it was Saroja Devi)

- Mahesh

Anonymous said...

வியாழன் கேள்வி பதில் பகுதிக்கு.

1) உங்களிடம் வாரா வாரம் கேள்வி கேட்கும் வாசகர்கள் எதற்காக கேள்வி கேட்கிறார்கள் என ஆய்ந்ததுண்டா ? உங்கள் பதில்கள் சுவாரசியமானதாகவோ, இல்லை அறிவார்த்தமானதாகவோ, புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும்விதமாகவோ இல்லாத போது - மாங்கு மாங்கென்று எதற்கு கேள்விகள் கேட்கிறார்கள் ?

2) யார் இந்த கேள்வி கேட்கும் நபர்கள் / அனானிகள் ? உங்களிடம் கேள்விகள் கேட்பதால் அவர்களுக்கு என்ன பயன் ?

குமார்.வி

Anonymous said...

//Anonymous Anonymous said...

வியாழன் கேள்வி பதில் பகுதிக்கு.

1) உங்களிடம் வாரா வாரம் கேள்வி கேட்கும் வாசகர்கள் எதற்காக கேள்வி கேட்கிறார்கள் என ஆய்ந்ததுண்டா ? உங்கள் பதில்கள் சுவாரசியமானதாகவோ, இல்லை அறிவார்த்தமானதாகவோ, புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும்விதமாகவோ இல்லாத போது - மாங்கு மாங்கென்று எதற்கு கேள்விகள் கேட்கிறார்கள் ?

2) யார் இந்த கேள்வி கேட்கும் நபர்கள் / அனானிகள் ? உங்களிடம் கேள்விகள் கேட்பதால் அவர்களுக்கு என்ன பயன் ?

குமார்.வி//


சபாசு!

Anonymous said...

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

காலா காலத்துக்கு இப்படியே ஒழசிக்கிட்டே இருந்து
இந்த கன்னி தீவு மண்ணுகே எரு ஆக வேண்டியாது தானா ?
நம்ப சொந்த ஊருக்கு போவது எப்போ ?
இளவரசி முகத்த பார்ப்பது எப்போ ?
புள்ள குட்டி மொகத்த பார்ப்பது எப்போ ?
இன்னும் எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருபது ?

ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

பூங்கொடி , சீக்கிரமே இந்த தீவு சொர்க்க பூமி ஆகிவிடும் போல் இருக்கின்றது
எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே ?
சந்தேகம் என்ன ?
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது

நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாயிந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாயிந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்




விடுதலை வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

வால்பையன் said...

//பூங்கொடி , சீக்கிரமே இந்த தீவு சொர்க்க பூமி ஆகிவிடும் போல் இருக்கின்றது
எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே ?
சந்தேகம் என்ன ?
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது//


ஹா ஹா ஹா

இன்னும் கூட விரியும்
காது கிழியும்!

Unknown said...

Dondu Sir,

Where can I get "Engey Brahmanan" book written by Mr. Cho ?.

Mangai said...

பாம்பு panchangam என்றால் என்ன? மத்ததற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்
என்று சொல்லவே இல்லையே?

The serial is a good attempt. But I beleive when Cho or the serial characters try to explain about some things that the people aren't aware of seriousness is lacking or they just touch the subject and move away.

Not sure if the same will be taken up later and explained.

Any way it is a great releif to watch as it doesn't fall in any of the usual mega serial norms of 4-5 daughters, two family for the father, revenge and going to all extremes beyond all boundaries, extra marital affairs etc.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது