பகுதி - 28 (11.03.2009):
கிருபாவுடன் அவன் வீட்டில் அவன் தந்தை, தாய் ஆகியோர் முதலில் திரையில் வருகின்றனர். வேம்பு சாஸ்திரிகளின் பெண் ஜயந்தி தனக்கு சரிப்படாது என கிருபா கூறிவிடுகிறான். யாரையேனும் மனதில் வைத்திருக்கிறானா என்ற கேள்விக்கு அப்படி ஏதும் இல்லை என மழுப்புகிறான். முதலில் தயங்கினாலும் கிருபாவுக்கும் மனது என ஒன்று உண்டு. தாங்களும் அவன் அபிப்பிராயத்தை கேட்டுத்தான் வேம்புவிடம் பெண் பார்க்க வரப்போவதாகக் கூறியிருக்க வேண்டும் என்பதை உணருகின்றனர். வேறு வழியின்றி சாம்பு சாஸ்திரிகள் வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் நேரில் விஷயத்தைக் கூறச் செல்கிறார்.
வேம்பு வீட்டில் சாம்பு விஷயத்தைச் சொன்னதும் அங்கும் டிஸ்கஷன் நடக்கிறது. ஜயந்தியே விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்கிறாள். அவள் அன்னை சுப்புலட்சுமியோ தனக்கு முதலிலிருந்தே இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லை என்பதை நினைவுபடுத்தி தன் பெண்ணுக்கு வேறு நல்ல இடத்தில் வரன் பார்ப்பதாகவும், அப்படி செய்யாவிட்டால் தான் தூத்துக்குடி சுப்புலட்சுமி அல்ல எனவும் சூளுரைக்கிறாள். அவள் ரொம்பத்தான் பொறந்தாத்து பெருமை பீற்றிக் கொள்கிறாள் என வேம்பு அபிப்பிராயப்படுகிறார்.
அசோக் காலேஜிலிருந்து விலக்கப்பட்டது பற்றி நீலகண்டன், அவர் மனைவி பர்வதம் மற்றும் மகள் உமா விவாதிக்கின்றனர். நீலகண்டனுக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது. அசோக் இம்மாதிரியே இருந்தா யார் பெண் தருவார்கள் என நொடிக்கிறாள் பர்வதம். ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய பாம்பு கதையை உரைக்கிறாள் உமா. சாதுவின் வார்த்தையை கேட்டு அநியாயத்துக்கு சாத்வீகமாகப் போனதால் அப்பாம்பு கல்லடிப் படுகிறது. பின்னால் அந்த சாதுவே பாம்பிடம் தான் அதை கொத்த வேண்டாம் என்றுதான் சொன்னதாகவும் சீற வேண்டாம் எனக் கூறவில்லை என்றும் கூறுகிறார். அசோக்கும் சிறிது சீறியிருக்க வேண்டும் என பர்வதம் அபிப்பிராயப்படுகிறாள்.
அடுத்த விஷயமாக கிருபா ஜயந்தியை நிராகரித்த விஷயத்தை கையில் எடுக்கிறாள் உமா. பர்வதமும் தன் தரப்புக்கு பேச, இந்தப் பெண்களுக்கு மட்டும் எங்கேருந்துதான் இந்த வம்பெல்லாம் கிடைக்கிறதோ என நீலகண்டன் அதிசயிக்கிறார்.
நாதன் வீட்டில் அவர் டெலிபோனில் தன் மானேஜரிடம் சரியாக வேலை செய்யவில்லை எனச் சீறுகிறார். அவர் ஏன் கீதையில் பகவான் சொன்னதைப் போல பலனை எதிர்ப்பார்க்காது காரியம் ஆற்றக் கூடாது என அசோக் ஆலோசனை கூற நாதன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் சொல்வதுபோல செய்வதைவிட பேசாமல் தானும் காவியுடுத்து அவனுடன் அமர வேண்டியதுதான் எனக் கூறுகிறார்.
இப்போது சோவும் நண்பரும். பேசாமல் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து காவியுடுக்க வேண்டியதுதானா என நண்பர் கேட்க, சோ அவர்கள் அப்படியில்லை என விளக்குகிறார். இல்லறத்தில் தீவிரமாக ஈடுபட்ட கிருஷ்ணர் தன்னை நித்ய பிரும்மச்சாரியாகவும், அப்போதுதான் பலகாரங்களை மூக்குபிடிக்க உண்ட துர்வாசர் தன்னை நித்ய உபவாசம் செய்பவராகவும் வர்ணித்துக் கொள்ளும் கதையை சோ கூறுகிறார். அதாவது காரியத்தின் பலன் மேல் யாருக்கும் அதிகாரம் இல்லை, கடமை ஆற்ற வேண்டும் அவ்வளவுதான்.
நீலகண்டன் வீட்டில் அசோக்கை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்ததாக உமா கூறுகிறாள். ரௌடி ஒருவன் கட்டை பஞ்சாயத்து செய்து ஒருவன் கையை வெட்டியதைத் தான் பார்த்ததாக அசோக் போலீசிடம் வாக்குமூலம் தந்திருப்பதாக அவள் கூறுகிறாள். இவனுக்கு எதற்கு அந்த வேலை என சலித்து கொள்ளும் நீலகண்டன், பரவாயில்லை, நாதனுக்கு வையாபுரியின் சப்போர்ட் இருப்பதால் அவர் அவனிடம் சொல்லி அசோக்கை காப்பாற்றலாம் என நீலகண்டன் கூற அந்த ரௌடியே வையாபுரியின் ஆள் சிங்காரம்தான் என்பதையும் உமா கூறுகிறாள். தன் தந்தை ஏதேனும் செய்து அசோக்கை காப்பாற்ற வேண்டும் என அவள் ஒத்தைக்காலில் நிற்க, அவள் தேவைக்கு அதிகமாகவே அசோக் விஷயத்தில் பரிவு காட்டுவதாகவும், அதெல்லாம் அசோக்கின் அன்னை வசுமதிக்கு பிடிக்காது என்றும் பர்வதம் தன் பெண்ணை எச்சரிக்கிறாள்.
பகுதி - 29 (12.03.2009):
மகாதேவ பாகவதர் வீட்டுக்கு போலீஸ்காரர் வந்து அவரது பேரன் ராமசுப்பு அவன் அறைத்தோழன் தூக்குமாட்டிக் கொண்டு இறந்தது சம்பந்தமான போலீஸ் விசாரணைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறிவிட்டு செல்கிறான்.
நீலகண்டன் வீட்டில் வேம்பு சாஸ்திரிகள் வந்து அடுத்த நாள் சூரிய கிரகணம் ஆதலால் கிரகணப் பீடை வராமலிருக்க அவர் தர்ப்பணம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். கிரகணம் என்பது வெறுமனே வான சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை நிகழ்வு. அதற்கெல்லாம் தர்ப்பணம் செய்வது என்பது மூட நம்பிக்கை என நீலகண்டன் கூறிவிடுகிறார்.
சோவின் நண்பர் அவரிடம் பீடை என்றால் என்ன பொருள் எனக் கேட்க, அவரும் நிதானமாக விளக்குகிறார். கிரகங்கள் எப்படி மனிதனின் வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என்ற கேள்விக்கும் பதிலளிக்கிறார். மன்நிலை பாதிக்கப்பட்டவர்களது செயல்பாடுகள் அமாவாசை பௌர்ணமி தினங்களில் தீவிரம் அடைவதையும் சுட்டிக் காட்டுகிறார். சூரிய கிரகணம் பற்றியும் பேசுகிறார்.
மீண்டும் நீலகண்டன் மற்றும் வேம்பு சாஸ்திரி சீனில் வருகின்றனர். ஆதிமனிதன் பல விஷாய்ங்களைக் கண்டு பயந்தான், ஆகவே பரிகாரம் என்றெல்லா அலைந்தான். தனக்கு அம்மாதிரி பயம் ஏதும் இல்லை. ஆனால் தன்னம்பிக்கை உண்டு என நீலகண்டன் விளக்குகிறார்.
போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலை பற்றி விசாரணை நடக்கிறது. ராமசுப்பு அந்தப் பையனின் தந்தை அவனை திட்டியதாகவும், அவனை செத்துப் போகும்படி கூறியதாகவும் கூற, இன்னொரு பையன் ராமசுப்புவின் பணத்தை அப்பையன் எடுத்ததாகவும், அதனால் ராமசுப்பு அவனை ரொம்பவுமே திட்டிவிட்டதாகவும் கூறுகிறான். போலீசார் ராமசுப்பு தினம் ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என அவனிடம் கூறுகின்றனர்.
நாதனின் சமையற்காரியிடம் அவளை 30 ஆண்டுகளுக்கு முன்னால் தள்ளி வைத்த அவளது கணவர் அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். அவள் பிடிகொடுக்காமல் பேசுகிறாள்.
இதற்கிடையில் சிங்காரம் வீட்டிற்கு வரும் அவன் கையாள் அவனைப் பற்றி போலீசில் புகர் வந்திருப்பதை கூறுகிறான்.
வேம்பு வீட்டில் அவரது மகள் ஜயந்தி கிருபா ஒரு பெண்ணைக் காதலிப்பதைக் கூற, வேம்புவும் சாம்பு வீட்டுக்கு வந்து அது பற்றிக் கூறுகிறார். சாம்பு திகைக்கிறார். வேம்பு அவரை சமாதானப்படுத்துகிறார். கிருபாவின் தங்கை அப்பக்கம் வந்து அவன் ஜட்ஜாத்து பெண் பிரியாவை விரும்புவதைக் கூறுகிறாள். வேம்புவும் சாம்புவும் இது பற்றிப் பேச ஜட்ஜாத்துக்கு செல்கின்றனர்.
மீண்டும் சோவும் நண்பரும். காதல் என்பது ரொம்ப அதிகமாகி விட்டது போலிருக்கிறதே என நண்பர் கூறுகிறார். ஆம் என சோவும் ஆமோதிக்கிறார். எட்டுவகை திருமணங்கள் பற்றிக் கூறும் சோ, அவற்றில் மிகச்சிறந்தது தாய் தந்தையர் சம்மதத்துடன் நடத்தப்படும் அரேஞ்ச்ட் கல்யாணமே என அபிப்பிராயப்படுகிறார்.
பகுதி - 30 (13.03.2009):
சிங்காரம் வையாபுரி வீட்டுக்கு வந்து தனக்கு நேரிட்ட பிரச்சினை பற்றிக் கூறுகிறான். அதுவும் நாதனின் மகன் அசோக்கே தனக்கு எதிராக சாட்சி சொல்ல வருகிறான் என்றும் எடுத்துரைக்கிறான்.
வையாபுரி அசோக் வீட்டுக்கு வந்து நாதனிடம் பேசுகிறான். நாதன் அசோக்கை கூப்பிட்டு விசாரிக்கிறார். ஒன்றும் பலனில்லை. அசோக் தனது செயல்பாட்டில் உறுதியாக நிற்கிறான்.
போலீஸ் வையாபுரி வீட்டுக்கு வந்து அவனைத் தேடமுயல, சர்ச் வாரண்ட் எடுத்துவருமாறு வையாபுரி போலீசிடம் கூறுகிறான்.
ஜட்ஜ் வீட்டில் வேம்பு ஜட்ஜிடம் கிருபா பிரியா காதல் பற்றி எடுத்துரைக்கிறார். ஜட்ஜ் ஒன்றும் பிடி கொடுத்து பேசாமல் அந்த இடத்தை விட்டு வீட்டினுள்ளே செல்கிறார்.
சோவிடம் அவர் நண்பர் ஜட்ஜ் ஸ்டேட்டஸ் பார்க்கிறாரா எனக் கேட்க, அவர் ஆமாம் என்கிறார். வைதிகர்களுக்கு கிருஹஸ்தர்கள் மரியாதை எல்லாம் தந்தாலும் கல்யாணம் என்று வரும்போது, பொருளாதார நிலையும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதையும் கூறுகிறார். ஆனானப்பட்ட கிருஷ்ணரே ருக்மிணியிடம் இது பற்றி பேசும்போது, அவளோ ராஜகுமாரி, ஆனால் தான் அவ்வளவு அந்தஸ்தில் இல்லை என்பதை கூறுவதையும் சோ குறிப்பிடுகிறார். வைதிகர்களை பல கிருகஸ்தர்கள் ஒரு எம்ப்ளாயீயாகவே பார்ப்பது துரதிர்ஷ்டவசமானதே, ஆனால் அதுதான் யதார்த்தம் என்றும் கூறுகிறார். சாம்பு சாஸ்திரிகளின் பிள்ளை என்னமோ நன்கு படித்தவனே. இருப்பினும் அந்தஸ்தில் குறைந்தவன். ஜட்ஜ் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எளியமுறை யாப்பிலக்கணம்
-
*எளியமுறை யாப்பிலக்கணம்*
பிற்பகல் நேரம். பதிவில் இல்லாத எண்ணில் இருந்து ஒரு வாட்சாப் தகவல் வந்து
விழுந்தது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கி...
3 weeks ago
14 comments:
1.அமெரிக்க மக்களுக்கும் ,இந்திய மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை,வேற்றுமை என்ன என்ன?
2.வள்ளுவர் பெயர்,காந்தி பெயர்,அண்ண பெயர்,காமராஜ் பெயர் ஆகியவைகளை கெடுத்தது யார்?
3.ஆளும் அரசியல் வாதியோடு கைகோர்த்து அநியாயம் செய்யும் அதிகாரிக்கு என்ன என்ன கிடைக்கும்?
4.ஏழை,பணக்கரன்,மிடில் கிளாஸ் ஆகியோரது நிலை இந்தியாவில் இப்போ எப்படி?
5.அரசின் பணம் தேவையற்ற விளம்பரமாய், தண்ணிர் போல் செலவளிப்பது பற்றி?
6.பல பத்திரிக்கைகள் பிரிக்கப் படமாலே பழைய பேப்பர் கடைக்கு போவது பற்றி?
7.இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து செழிக்கும் போது பணவீக்கம் இல்லம்லே போகுமா?
8.தமிழ் நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் இன்னும் பழைய பொலிவுடன் இருப்பது எது?
9.சிரஞ்சீவி இன்னுமொரு என்டிஆரா?
10.நேதாஜி உயிருடுடன் வந்தால்?
11.சென்சார் போர்டு இருக்கா?
12.லஞ்சம் உங்கள் பாணியில்/ஸ்டெயிலில் விளக்கவும்?
13.தமிழகம் சட்டம் ஒழுங்கு இப்போ எப்படி?
14.தேர்தல் முடிவு தொங்கு நிலையா?
15.அரசியல் ஏமாளி யார்?
16.காங்கிராசாரின் தனி சிறப்பு எது?
17.இன்றைய லஞ்சத்தின் அளவு எது?
18.அரசியல் கட்சிகள் உங்கள் பார்வையில்?
19.யார் அரசியல் கொத்தடிமைகள்?
20.இட ஒதுக்கீடு எதிர்ப்பு அடங்கி விட்டதா?
21.பஞ்சாயத்துராஜ் சட்டம் இருக்கா?
22.இரண்டாவது பசுமைப்புரட்சி/வெண்மை புரட்சி வருமா?
23.சாதிச் சங்கங்கள் இந்த தேர்தலில் ?
24.அடுத்த வைகோவின் நீதி கேட்டு நடைப்பயணம் நடக்குமா?
25.சுப்பிரமணிய சாமி அடுத்து என்ன செய்வார்?
மொக்கை போட்டே அனைவரையும் கொல்லுவதால் இன்றிலிருந்து ”மொக்கைசாமி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவீராக!
26.இந்தியா நாடு உலக நாடுகளிடமிருந்து எதில் வித்தியாசப் படுகிறது.
27.அந்தக்கால அரசியலுக்கும் தற்கால அரசியலுக்கும் உள்ள வேறுபாடு?
28.கழகக் கட்சிகளில் எது பரவாயில்லை?
29.உலகில் தொடர் நிகழ்ச்சியாய் வருவது எது?
30.மனைவி அமைவதெல்லம் இறவன் கொடுத்த வரமென்பார்
அப்படியென்றால்
கணவன்,பிள்ளைகள் ,மாமனார்/மாமியார்/நாத்தினர்/சகலை/ஓரகத்தி/மருமகன்/மருமகள்/பேரன்/பேத்தி/மச்சினர் அமைவதெல்லாம்
//வால்பையன் said...
மொக்கை போட்டே அனைவரையும் கொல்லுவதால் இன்றிலிருந்து ”மொக்கைசாமி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவீராக!//
யு டூ டெயில்பாய்
//Anonymous said...
//வால்பையன் said...
மொக்கை போட்டே அனைவரையும் கொல்லுவதால் இன்றிலிருந்து ”மொக்கைசாமி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவீராக!//
யு டூ டெயில்பாய்//
ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ
தேர்தல் கூட்டணி கலட்டா,விடுதலை சிறுத்தையும்-கங்கிரஸ்-திமுக பலப்பரிட்சை,பாகிஸ்தானில் கலவரம்,இலவச அறிவிப்புகள் பரவலாய் தேர்தல்களத்தில்,வைகோவின் திரிசங்குநிலை,ஸ்டாலினா?அழகிரியா முந்துவது யார்?,சன் குழுமம் என்ன செய்யப் போகிறது அடுத்து?
இப்படி பதிவுகள் தொடருமா?
மீண்டும் டோண்டுவின் பதிவு களைகட்டட்டும்?
paa. raagavan's blogroll hasn't updated in a while - any problems?
Hey RV, No problem, wait for the turn………..
பாராவின் வலைப்பூக்கள் இற்றைப்பட மாட்டேன் என்கின்றன. ஏதோ ஃபீடில் தகராறு என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Can you please post the translation of the article at
http://www.theatlantic.com/doc/200904/india-modi
1)சரத்குமாருடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எத்தனை ஓட்டு கிடைக்கும் ?
2)அருண் ஜெட்லியை இழப்பது பாஜகவுக்கு பெரிய இழப்புதானே ?
3)மாயாவதி மற்றும் ஜெயலலிதா தயவில் அத்வானி பிரதமராவாரா ?
Post a Comment