பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரியர் ஃப்ரீட்ரிஷ் ஹேயக் மேல் உள்ள அபிமானத்தால் தன்னை ஹேயக் ஆர்டர் என அழைத்து கொள்ளும் என் நண்பர் சந்திரசேகர் ஹேயக்கின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். நன்றி சந்திரசேகர். இதை முதலில் எனது ஆங்கில வலைப்பூவில் பதித்தேன். இப்போது தமிழிலும் அந்த நிகழ்ச்சியை தடித்த சாய்வெழுத்துகளில் பதிக்கிறேன். இதில் வரும் நான் என்பது Ronald Kitching. [Ronald Kitching என்பவர் Mont Pelerin Society-யின் ஆயுள் உறுப்பினர். 1976-ல் ஹேயக் அவர்கள் ஆஸ்திரேலியாவில் பல பிரசங்கங்கள் செய்தார். அவற்றுக்கு Ronald Kitching மிகவும் உதவினார். “தனிமனித மற்றும் பொருளாதார சுதந்திரம்” என்னும் தலைப்பில் புத்தகமும் எழுதியுள்ளார்].
அக்டோபர் 1976-வாக்கில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் F. A. Hayek ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம் தங்கி பல பிரசங்கங்கள் நிகழ்த்தினார். அப்போது நடந்த ஒரு விஷயத்தை இப்போது கூறுவேன். இதுவரை இது பற்றி பலருக்குத் தெரியாது. ஒரு லெக்சர் டூர் செய்யும்படி ஹேயக்குக்கு பொருளாதார நிபுணர் மார்க் டியர் (Mark Tier) அழைப்பு அனுப்பினார். அச்சமயம் அது தனக்கு தோதுப்படாததால் ஹேயக் முதலில் மறுத்துள்ளார். பிறகு நிலைமையில் மாற்றம் வரவே ஹேயக் இது பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை சேர்ந்த பொருளாதார நிபுணர் மற்றும் பாரிஸ்டரான Roger Randerson என்பவருக்கு இது பற்றி எழுதினார். தான் நியூசிலாந்த் மற்றும் ஜப்பானுக்கு செல்லும் முன்னால் ஒரு மாதம் ஆஸ்திரேலியாவில் கழிக்க இயலும் என்று கூறியுள்ளார். இந்த ரோகர் என்பவர் ஹேயக்கிடம் The London School of Economics-ல் மாணவராக இருந்திருக்கிறார்.
நானும் ரோகரும் நல்ல நண்பர்கள். ஆகவே அவர் எனக்கு இது பற்றி போனில் தகவல் தெரிவித்தார். அவர் ஹேயக்குக்கு எழுதி அவரது ஃபீஸ் எவ்வளவு என கேட்டறியச் சொன்னேன். இப்போது கூட ஹேயக்கின் விடை எனக்கு நினைவில் உள்ளது. ஹேயக் கூறினார்: “எனக்கும் என் மனைவிக்கும் ஆஸ்திரேலியாவிலும், வெளியிலும் போகவர முதல் வகுப்பு விமானப் பயணச்சீட்டுகள், முதல்தர தங்கும் வசதிகள் மற்றும் வாரத்துக்கு இரண்டுக்கு மிகாத லெக்சர்கள் ஆகியவை உறுதி செய்யப்படின் அவற்றுக்கு மேலே ஒன்றும் தர வேண்டியதில்லை”.
ரோகர் உடனே இதையெல்லாம் கணக்கு போட்டு சுமார் $25,000 ஆகும் என்றார். அவருக்கு வணிக உலகில் நல்ல பரிச்சயங்கள் இருந்ததாலும், எனக்கு ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழிலுலகில் நல்ல தொடர்புகள் இருந்ததாலும் இந்த டூருக்கான புரவலர்களைப் பெறுதல் சுலபமாக இருக்கும் என முதலில் எண்ணினோம். ஆனால் இது விஷயமாக ஒரு வாரம் முட்டி மோதி அலைந்து திரிந்ததில் ஒன்றும் நடக்காது எனத் தெரிந்தது. ஒருவர் கூட இந்த ‘புரட்சிகரமான’ செயலுக்கான செலவுகளை ஸ்பான்சர் செய்ய முன்வரவில்லை. சற்றே மனவாட்டத்துடன் வீடு திரும்பினேன். ரோகருக்கு ஃபோன் செய்து அவர் விஷயம் என்ன எனக் கேட்டேன்.
அவர் கூறினார், “அடேங்கப்பா, எல்லாருமே பம்முறாங்கப்பா. அவனவன் எகிறி குதிச்சு ஓடறான்.” இப்போது என்னிடம் இது விஷயமாக சாதாரணமாக எல்லோரும் சொன்னதை குறிப்பிட்டேன், “இந்த மாதிரி புரட்சிகரமான நபரின் வலதுசாரி சிந்தனைகளுக்கு நாங்கள் ஒப்புதல் தந்ததாக தோற்றம் வருவதை நாங்கள் விரும்பவில்லை.” அவருக்கும் அதே பதில்தான் கிடைத்ததாக அவரும் குறிப்பிட்டார்.
நான் சொன்னேன், “அவங்க கிடக்கிறாங்க விடப்பா, இதற்கான செலவை நானே ஏத்துக்கறேன்”. அவர் சொன்னார், “இதானே வேணாங்கறது. நானும் நீயும் பாதி பாதி ஏத்துக்கலாம்”.
ஆக, இந்த வேலை முடிந்தது. இப்போது இன்னொரு யோசனை சொன்னேன். அதாவது இன்னொரு முறை முயற்சி செய்வது. யாரேனும் பெயரை குறிப்பிடாமல் ஏதேனும் காண்ட்ரிப்யூட் செய்தால் நல்லதுதானே. இந்த முயற்சியில் எங்களுக்கு மிக உதவியாக இருந்தவர்கள் Mr. Ref Kemp, Director of The Institute For Public Affairs in Victoria, Mr. Viv Forbes in Brisbane, and Mr. R. H. (now Sir Robert), Norman OBE of Cairns. ரோகர் பின்னால் “சமூக நீதியுடன் கூடிய ஜனநாயக சோஷலிசம்” என்னும் தலைப்பில் ஒரு சிறு கையேடு வெளியிட்டார். அதில் ஹேயக்கின் மூன்று முக்கிய லெக்சர்கள் இடம் பெற்றன. அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “பொது நலனை மனதில் கொண்ட 62 தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து இந்த விஷயத்துக்காக சந்தாக்கள் கிடைத்தன. (தொகைகள் $50 முதல் $2,000 வரை இருந்தன), ஆனால் லிஸ்ட் எதுவும் தரப்படாததன் காரணம் பலர் தங்கள் பெயர் வெளியே வருவதை விரும்பவில்லை. இருப்பினும் அவர்கள் தாராள மனதுக்கு மிக்க நன்றி.
ஹேயக்கின் இந்த வருகை தனிப்பட்டவர்கள் சிலர் சேர்ந்து எடுத்த கூட்டுறவு முயற்சி. வேறுவழியேயில்லைதான். அரசு மேலிடங்களில் சிபாரிசு பிடித்து பல அரசுசார் விடுதிகளில் சலுகை விலையில் அறை பிடிப்பது போன்றவைக்காக எடுத்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்டன”.
பெரிய இடங்களில் உள்ள “அறிவுஜீவிகளிடம்” இருந்து புகார்கள் வந்தன. அபாயகரமான முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் முயற்சி இது, இந்த தந்திரசாலி யூதர்களின் இன்னொரு ஏமாற்றுவேலை, ‘bankers plot’ என்றெல்லாம் அவதூறுகள் குவிந்தன. மத நம்பிக்கை இல்லாத கத்தோலிக்கர்தான் ஹேயக் என்பதை இங்கு போகிறபோக்கில் கூறிவிடுகிறேன்.
சும்மா சொல்லப்படாது, மனிதர் தூள் கிளப்பினார். அக்டோபர் 11, 1976 அன்று அவர் பிரதம விருந்தினராக ராபர்ட் மூருடன் பங்கேற்ற கான்ஃபரன்ஸ் ABC network மூலம் ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. அரசு தலைவர்களுடன் சந்திப்பு, பல செமினார்கள், லெக்சர்கள் உட்பட 60 நிகழ்ச்சிகள் நடந்தன. ரொம்ப பிசியான ப்ரொக்ராம்தான், ஆனால் 76 வயது இளைஞ்ரான ஹேயக்குக்கு அது பெரிய விஷயமே இல்லை.
இதற்கிடையில் அவருக்கு நான்கு நாட்கள் Atherton Tableland என்னும் இடத்தில் ஓய்வு தரலாம் என ரோகர் முடிவு செய்தார். அங்கு என்னுடைய பெரிய பண்ணை வீடு இருந்தது. என்னுடைய 6 பிள்ளைகளில் மூவர் ஹாஸ்டலில் இருந்தனர். நிறைய இடம் இருந்தது. ஹேயக்கும் அவர் மனைவியும் அங்கு சௌகரியமாகத் தங்க முடிந்தது.
என் வீட்டின் சுவற்றில் ஒரு பொலிகாளையின் படம் இருந்தது. அக்காளை எனக்கு சொந்தமானது. அதன் பெயர் பணவீக்கம் (Inflation) என கேலியாக வைத்திருந்தேன், ஏனெனில் அதன் வளர்ச்சி விடாமல் தொடர்ந்தது. “இப்போது அதன் எடை 3,000 பவுண்டுகள்,” என நான் அவரிடம் கூறினேன்.
ஹேயக் சிரித்து விட்டு பணவீக்கம் பற்றி தனக்கும் சிறிது தெரியும் என்றும் இந்த பணவீக்கத்தையும் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். அவர் பார்த்த பல பணவிக்கங்களுக்கெதிரில் இந்த பணவீக்கம் ஜுஜுபி என்றும், என்னிடம் வேலை செய்பவர்கள் அதன்மீதேறி சுலபமாக சவாரி செய்கிறார்கள் என்றும், நானே அதன் மீது ஏறியிருக்கிறேன் என்றும் கூறினேன்.
“ஓக்கே, எது எப்படியாயினும் நானும் அதை பாக்க விரும்புவேன்,” என்று ஹேயக் உறுதியுடன் கூறினார். ஆகவே அவ்வாறே செய்யத் திட்டமிட்டேன்.
முதலில், அவர் ஒத்துக் கொள்லும் பட்சத்தில் ஏணிவைத்து அவரையும் அக்காளை மேல் ஏற்றி வைத்து போட்டோ எடுப்பது என எண்ணினேன். போட்டோவுக்கு தலைப்பாக “ஹேயக் பணவீக்காதின் மேல் சவாரி செய்கிறார்” வைக்க எண்னினேன். ஆனால் என் மனைவி இதற்கு ஒத்துக் கொள்ள மறுத்து விட்டாள். பெரியவர் எங்காவது விழுந்துகிழுந்து வைத்தால் என்ன செய்வது என்பதே அவளது ஆட்சேபணை. ஆகவே இத்திட்டத்தை கைவிட வேண்டியதாயிற்று.
அடுத்த நாள் அவரை காளையிருக்கும் இடத்துக்கு அழைத்து சென்ரேன், காளையுடன் சேர்த்து அவரை நிற்க வைத்து போட்டோக்கள் எடுத்தேன். இப்போது இன்னொரு ஐடியா வர அதையும் அவரிடம் சொன்னேன். அதாவது அவர் காளையின் கொட்டைகளை பிடிப்பது. அவருக்கும் ஐடியா பிடித்தது. அவ்வாறே போஸ் கொடுத்தார். (ஹேயக்குக்கு சாதாரணமாகவே மிருகங்கள் என்ரால் பயமேதும் இல்லை. அக்காளையுடனும் அவரால் நட்பு பாராட்ட முடிந்தது. ஆகவே காளையும் முரண்டு பிடிக்கவில்லை). போட்டோவின் தலைப்பு? வேறென்ன, “பணவீக்கத்தின் கொட்டைகளைப் பிடித்த ஹேயக்” தான்.
படத்ததை எடுத்ததுமே ஹேயக் சொன்னார், அமெரிக்கர்களிடம் மட்டும் இப்படம் கிடைத்தால் அது சுலபத்தில் பிரபலமாகும் என்று. இது சம்பந்தமாக லண்டனில் உள்ள Adam Smith Institute-ஐ சேர்ந்த டாக்டர். ஈமன் பட்லர் எனக்கு ஒரு சமயம் இன்னொரு விஷயம் கூறினார். ஒரு மதிய உணவின்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு இப்படம் பரிசாக அளிக்கப்பட்டது என்றும், தனது அபிமான பொருளாதார நிபுணர ஹேயக் இம்மாதிரி பணவீக்கத்தின் கொட்டைகளை பிடிப்பதைக் காட்டும் இப்படத்தைப் பெற்று அவர் மகிழ்ச்சி அடைந்தார் என்றும் கூறினார். ஹேயக்கின் பேத்தி அவருக்கு இப்படம் எடுக்கப்பட்ட நிகழ்ச்சியின் பின்புலனை கூறினாராம்.
பணவீக்கத்தின் கொட்டைகளைப் பிடிக்கும் ஹேயக்
மீண்டும் டோண்டு ராகவன்.
இதில் என்ன விசேஷம்னு நினைத்து இப்பதிவைப் போட்டாய் என கேட்கும் முரளி மனோகருக்கு என் பதில் இதுதான். பல இடையூறுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்த்து செயல்பட்டால் வரும் இன்பமே தனிதான். அம்மாதிரி நிகழ்ச்சிகளை பதிவு செய்வதில் எனக்கும் மகிழ்ச்சியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
12 hours ago
18 comments:
A million thanks Dondu sir! I can't express the enjoyment which I had throughout the reading of this great Tamil post.
I read it more than thrice, indeed it has infinite satisfaction!
I don't know how the non-economics people understand the word 'inflation'.
தமிழில் பணவீக்கம் என்று கூறுவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி டோண்டு ஐயா. தமிழில் அட்டகாசமான பதிவு.
எங்க கல்லூரி தலைவர் சில சமயம் இந்த இதை பயன்படுத்துவார்... "உங்க HOD வரட்டும் அவன் கொட்டையை பிடிச்சி கசக்குறேன்". இதே போல டைடில் வைத்தால் சூப்பரா இருக்கும்
Thuglak cartoos
http://www.thuglak.com/thuglak/curissue/images/sree_03_03_2009.jpg
என்ன தான் சொல்ல வர்றிங்க
தாவூ தீருது!
அவரு தான் உளறி கொட்டிருக்காருன்னா
நீங்க அதை மொழி பெயர்ப்பு வேற செஞ்சிருக்கிங்க!
@வால்பையன்
ஹா ஹா ஹா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"எங்க கல்லூரி தலைவர் சில சமயம் இந்த இதை பயன்படுத்துவார்... "உங்க HOD வரட்டும் அவன் கொட்டையை பிடிச்சி கசக்குறேன்". இதே போல டைடில் வைத்தால் சூப்பரா இருக்கும்".
Hey Anonymous! can you tell me the college name? But don't worry I will not say "கொட்டையை பிடிச்சி கசக்குறேன்" if you don't tell.
DUE TO RECESSION IN IT INDUSTRY MANY ENGINEERING GRADUATES ARE FINDING IT VERY DIFFICULT TO GET A GOOD JOB IN 2009-2010.
FOR THEM A GOLDEN CHANCE OF GETTING A VERY GOOD OFFER FROM GOVT OF INDIA PSU BSNL.
---------------------------
BSNL RECRITING 4000 JUNIOR TELECOM OFFICERS .
THE LINKS FOR THE OLD QUESTION PAPERS
http://current-news-results-notices.blogspot.com/2009/02/bsnl-jto-sample-paper-question-paper.html
http://current-news-results-notices.blogspot.com/2009/02/wwwbsnlcoin-job-bsnl-jto-2009-details.html
for downloading jto application
application downloads
http://www.bsnl.co.in/Misc/jto2009.doc
http://www.bsnl.co.in/Misc/jto2009.pdf
---------------------------------
courtesy:current-news-results-notices.blogspot.com
/பணவீக்கத்தின் கொட்டைகளைப் பிடித்த ஹேயக் - இதுவரை பேசாப் பொருளைப் பேசத் துணிகிறார் Ronald Kitching/
என்ன ஒரு அருமையான தனித்தமிழ் [கொஞ்சம் ஜூனூன் டைப் தமிழ் மாதிரி], டோண்டு சார் இது?
தி.மு.க ஆட்சிக்கு வந்து கொஞ்சம் தெம்புடன் இருந்த ஆரம்ப காலங்களில் கோவை மற்றும் சில இடங்களில் தனித்தமிழ் தான் விளம்பரப் பலகைகளில் இருக்க வேண்டும் என்று 'அன்போடு' இயக்கம் நடத்திய காலங்களில், காபிக் கடையெல்லாம் "கொட்டை வடிநீர் குழம்பியகம்" ஆகிப் போன மாதிரி அங்கே ஏதாவது ஆகிப் போனதா?
கேள்விகள்--
1. வழக்கறிஞர்களுக்கு ஒரு சங்கம் போதாதா? அதில் பிரிவு தேவையா - தி.மு.க/அ.தி.மு.க என்று?
2.ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைக்கு இந்த வக்கீல்கள் கொடுத்த மரியாதை சரிதானா?
3. உச்ச நீதி மன்றம் சொல்லிய பிறகும் இவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது சரியா?
4.எல்லா கட்சி தலைவர்களும், போர் நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே, யாராவது புலிகள் ஆயுதங்களைக் கீழே போட
வேண்டும் என்றார்களா? அது மட்டும் நடந்தால் போரே இருக்காதே!
5.தமிழ் நாட்டில் பா.ஜ.க. தேறுமா? அல்லது அதோகதி தானா?
http://thatstamil.oneindia.in/movies/specials/2009/03/11-chennai-to-host-israel-film-festival.html
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட சங்க அரங்கில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இஸ்ரேல் திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகமும் , இந்திய-இஸ்ரேல் நட்பு சங்கம், சென்னை திரைப்பட சங்கம் மற்றும் இந்தியன் சினி அப்பிரிஷியேசன் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன
கடைசியில் காரோட்டி கண்ணப்பனும் கைவிரித்துவிட்டாரே, கன்னித்தமிழ் காவலராம் வைகோவின் அரசியல் எதிர்காலம் இனி ?
மதிமுக அதிமுகவில் இணையுமா?
பாமக ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் ?
மயிலை சேகர் ஏன (அம்மா),(அதிமுகா),வால் ஒரங்கட்டப்படுகிறார்?
பாஜகவின் எதிர்க்கட்சி அந்தஸ்து தொடருமா?இல்லை சீட் குறையுமா?
//வால் ஒரங்கட்டப்படுகிறார்?//
நான் யாராலும் ஓரங்கட்டப்படவில்லை.
நான் நினைத்தால் எல்லோரையும் ஓரங்கட்டிவிடுவேன் என பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்
//மயிலை சேகர் ஏன (அம்மா),(அதிமுகா),வால் ஒரங்கட்டப்படுகிறார்?//
மயிலை சேகர் ஏன் அம்மாவால்,அதிமுகவால் ஓரங்கட்டப்படுகிறார்?
கமலக்கண்ணன்
இந்தியாவில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற்றோர் தடை செய்யபட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவது குற்றமா?
இந்தியாவில் இன வெறியை தூண்டும் வெளிநாட்டவரை தண்டிப்பது எப்படி?
@கலைராஜா
நீங்கள் கூறுவது புரியவில்லை.
இந்தியாவில் இன வெறியை தூண்டும் வெளிநாட்டவரை தண்டிப்பது அவரை நாடு கடத்துவதே ஆகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தியாவில் 6 மாதங்களாக ஒரு இலங்கை நாட்டை சேர்ந்த எம்பி ஊர் ஊராக சென்று இன வெறியை தூண்டி வருகிறார்.அவரை விட்டு வைத்து இருப்பது ஏன்? அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற முடியாதா?
இதோ தமிழ் இணைய உலகில் ஒரு கனடா நாட்டு குடுயுரிமை பெற்றவர் எழுதும் எழுத்துகளை படித்து பார்க்கவும்
http://tamilnathy.blogspot.com/2008/12/blog-post_21.html
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்
Post a Comment