hayyram
கேள்வி-1. சார் கையோடு ஒரு கேள்வியும் போட்டு விடுகிறேன். ஐந்து வருடம் கருணாநிதியின் ஆட்சியும் தமிழர்களின் வனவாசமும் முடியும் தருவாயில் கருணாநிதியின் சாதனைகளை (அல்லது ஊழலை) பட்டியலிட முடியுமா? (உங்கள் கை வலித்தால் என்னை திட்டாதீர்கள்)
பதில்: மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு டெர்ம் முழுவதும் ஆட்சியை செய்த தில், உலக ரிக்கார்ட் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பங்குதாரராக இருந்து நல்லபடி அதை செய்தது, ராசா தலித்து என்ற கார்டை வைத்து அழுவாச்சி காரணங்களைத் தந்தது, அதே சமயம் தன்க்கு ஒத்து வராத தலித்து அதிகாரியான உமாசங்கரை ஆட்டிப்படைத்த சாதனை ஆகியவையே அவரது இந்த ஆட்சிக்கான சாதனைகள். ஊழல்? ஊழல்களே சாதனை என்னும் போது இது என்ன சிறுபிள்ளைத்தனமாக கேள்வி?
கேள்வி-2. ஒவ்வொரு முறை துக்ளக் படிக்கும் போதும் சோவிற்கு வயசாகிறதே என்று கவலை தோன்றி விடுகிறது. சோவிற்கு பிறகு துக்ளக் என்னாகும்? உங்கள்கணிப்பு ப்ளீஸ்?
பதில்: யாரும் யாரையும் நம்பி இல்லை. நடப்பது நடந்தே தீரும். அது பற்றி இப்போது என்ன கவலை? சோவே அவ்வாறு கவலைப்படுவதாகத் தெரியவில்லையே.
நக்கீரன் பாண்டியன்
கேள்வி-3. தயாநிதிமாறன்-மதுரையார் நட்புக் கூட்டணி நிரந்தரமா அல்லது?
பதில்: நிலையற்ற சமநிலை என்பார்கள். பூ என ஊதினால் கீழே விழுந்துவிடும் இக்கூட்டணி.
சஸ்பென்சின் உச்சக்கட்டம் என்ன என ஒரு கேள்வி உண்டு. அதன் பதில் இப்படிப் போகும். இரு சர்தார்ஜிகள் ஒன்றாக சேர்ந்து நிர்வாணமாக குளித்துக் கொண்டிருக்கிறார்கள். சோப் கீழே விழுந்து விட்டது. யார் அதைக் குனிந்து எடுப்பார்கள் என்பதுதான் சஸ்பென்சின் உச்சக் கட்டம். இது ஏன் எனக்கு இப்போது நினைவுக்கு வர வேண்டும்?
கேள்வி-4. மலைவாசஸ்தல ஜாகை மாற்றங்கள்-தமிழக அரசியல் பெரும் புள்ளிகள்- உங்கள் விமர்சனம்?
பதில்: பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான். நாம் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்ப்பதை விட?
கேள்வி-5. யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி காமராஜ் நேர்மைக்கு வாய்ப்பில்லைதானே?
பதில்: மோதி இருந்து ஆட்சி செய்யும் இப்போதைய குஜராத்தை மறந்து பேசலாமா? மனதிருந்தால் எப்போது வேண்டுமானாலும் மோதி ஆட்சிக்கு இணையாண ஆட்சி நமது தமிழகத்திலும் வரவியலும். என்ன, மனதுதான் இருக்காது.
ஆனாலும் நமது சக தமிழ்ப்பதிவர்கள் குஜராத் கலவரத்தை கையில் எடுத்துக் கொண்டு கூச்சல் போடுவார்கள். அதே பதிவர்கள் மோதி குஜராத் கலவரத்தைத் தூண்டியதாக ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் இடி போன்ற மௌனம் பாவிப்பார்கள். பொய் சாட்சி புகழ் டீஸ்டாதான் அவர்களுக்கு பைபிள் போல.
கேள்வி-6. போகிற போக்கை(centarl da increased 18 % for 2010) பார்த்தால், அரசு ஊழியர் கா(வீ)ட்டில் மட்டும் இனி பண மழையாமே?
பதில்: என்ன, பஞ்சப்படி 18% உயர்ந்ததா? மத்திய அரசு பென்ஷனரான டோண்டுவுக்கு களிப்பளிக்கும் விஷயமாயிற்றே. ஆ, காந்தி இறந்து விட்டாரா?
கேள்வி-7. மென்பொருள் வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்துவிட்டதே-இது தொடருமா?
பதில்: பயனர்களுக்கு புதுப்புது மென் பொருட்கள் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கும் வரை இது ஏன் தொடராது? நடுவில் அவற்றை வாங்கும் சக்தி தற்காலிகமாக குறைந்ததே அப்போது ஏற்பட்ட சுணக்கத்துக்குக் காரணம்.
ஆனால் ஒன்று பழைய உற்சாக நிலை, அதனால் மென்பொருள் நிபுணர்களுக்கு அதிகமாகிக் கொண்டே போகும் பண வரவெல்லாம் இருக்குமா என்பதுதான் சந்தேகம். ஏனெனில் மென்பொருட்கள் மேல் இருந்த பிரமிப்பு இப்போது அவ்வளவாக இல்லை. மக்கள் அவற்றுக்கு பழகிக் கொண்டார்கள் என்பதும் ஒரு காரணமே.
virutcham
கேள்வி-8. அலைபேசி விலையை வெகுவாக குறைத்து ராசா மக்களுக்கு பெரிய சேவை செய்து இருப்பதாகவும் அவரை வேண்டும் என்றே குற்றவாளியாக்குவதாகவும் இங்கே சில பதிவுலக பிரபலங்கள் எழுதினார்களே. இப்போ அவர்கள் கருத்தில் மாற்றம் இருக்குமா?
பதில்: ராசா மட்டும் தனியாக ஊழல் செய்திருக்க முடியாது. ஆகவே தான் மாட்டினால் மற்றவர்களும் மாட்டுவார்கள் என்ற எண்ணத்துடன் அவர் இருக்கிறார் என நான் நினைக்கிறேன்.
மேலும், அவ்வளவு பேரும் மாற மாட்டார்கள். பூத் ஏஜெண்டுகள் எல்லாம் மாறுவார்கள் என நினைக்கக் கூடாதுதானே.
பார்வையாளன்
கேள்வி-9. சாருவின் புத்தக விழா குறித்து உங்கள் கருத்து... இளைஞர்கள் பெருமளவில் திரண்டது தமிழ் இலக்கியத்துக்கு நல்லதுதானே?
பதில்: சமோசா நன்றாக இருந்தது என சிலர் கூறியுள்ளார்கள். நான் போகவில்லை, ஏனெனில் சாருவின் எழுத்துக்கள் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை.
கேள்வி-10. தமிழின் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு- உங்கள் பார்வை என்ன?
பதில்: திராவிட இயக்கம் எனப் பார்த்தால் அதன் தந்தையாக மற்றும் பகுத்தறிவுப் பகலவன் என குருட்டுத்தனமாக போற்றப்படும் கன்னட ஈ.வே.ராமசாமி நாயக்கர் விருப்பப்படி விட்டிருந்தால் தமிழ் என்றைக்கோ கோவிந்தாவாகியிருக்கும். நல்ல வேளையாக அண்ணாத்துரை போன்றவர்கள் இருந்தார்களோ, தமிழ் பிழைத்ததோ.
ஆனால் பொருள் ஒன்றுமே இல்லாமல் மணிக்கணக்கான நேரம் பேசி கைத்தட்டுகள் வாங்கவே தமிழ் அதிகம் பயன்பட்டது. கீழே இந்திரன் சந்திரன் படத்தின் கடைசி சீனைப் பாருங்களேன். கமல் சம்பந்தமில்லாது சில தமிழ் வாக்கியங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேச மக்களும் குருட்டுத் தனமாகக் கைதட்டுவார்கள், கமல் அவர்களை அதற்காகவே சாடுவார்.
கேள்வி-11 இணையத்தின் வருகை தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது- உங்கள் பார்வை..
பதில்: கண்டிப்பாக ஏற்படுத்தியுள்ளது. ஒத்துக் கொள்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் அறிந்த உதாரணத்துடனேயே இதை விளக்குவேன். அதாவது டோண்டு ராகவனது அனுபவம்.
சமீபத்தில் பிப்ரவரி 2002-லிருந்து கணினி வாங்கி இணையப்பக்கங்களை மேய ஆரம்பித்தேன். ஆனால் அக்டோபர் 2004 வரை தமிழ் பக்கங்கள் பக்கம் வந்ததே இல்லை. திடீரென 2004 நவம்பரில் வந்து வலைப்பூவும் துவக்கினேன். அதன் பிறகு எனது தமிழ் ஆளுமையில் ஏறுமுகமேதான். அதற்கெனவே காத்திருந்தது போல தமிழ் மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. எனது கணினியில் எனது எல்லா மொழிகளுக்கும் தனித்தனி ஃபோல்டர்கள் வைத்துள்ளேன். அவற்றில் மிகப்பெரியது தமிழ் மொழிக்கானதுதான். ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்ல ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து கூட தமிழுக்கு மாற்றும் வேலைகளும் அதிகமாக வருகின்றன. எனது அயல் நாட்டு வாடிக்கையாளர்கள் அனைவருமே எனது தமிழ் மொழிபெயர்ப்புக்காகத்தான் என்னுடன் தொடர்பு கொள்கின்றனர்.
மிகச் சாதாரண தொழில்காரனான எனது நிலையிலேயே இந்த மட்டில் அதிக உயர்வு என்றால் மற்றவருக்கும் அதே மாதிரித்தானே?
கேள்வி-13 பிராமணர் அல்லாத ரஜினி ,பிராமணர் போல நடந்து கொள்ள பார்ப்பது.. பிராமணர் இனத்தை சேர்ந்த கமல், பிராமணர் அல்லாதவர் போல் காட்டி கொள்வது- ஒப்பிடுக
பதில்: நண்பர் வஜ்ரா சொன்னது போல, “முதலில் பிராமணர் என்றால் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று நீங்களே கட்டமைத்துக்கொண்டுள்ள பிம்பத்தை உடையுங்கள். பின்னர் ரஜினி பிராமணர் போல் நடந்துகொள்கிறாரா இல்லை கமல் பிராமணர் போல் நடந்துகொள்கிறாரா என்று ஆராய்ச்சி செய்யுங்கள். சிவாஜிராவ் கெயிக்வாட் என்பது பிராமணப் பெயர்தான்”.
அப்படியில்லை, ரஜனி பிராமணர் இல்லை என்றும் சிலர் கூறுகிறர்கள். அது இருக்கட்டும், அவரது இரண்டாம் மகளது திருமணம் சம்பந்தமாகவா உங்கள் கேள்வி? அவர் பிராமணரோ இல்லையோ, அவரது மனைவி ஐயங்கார், இரண்டாம் மாப்பிள்ளை ஐயர். ஆகவே பார்ப்பன முறைப்படித்தான் திருமணம் நடந்தது. ஏன் என்ன பிரச்சினை இதில்?
பிராமணர்களை சாடும் சோகால்ட் பகுத்தறிவு வாதிகள், பார்ப்பனர்கள் காற்றே ஆகாது என வார்த்தைக்கு வார்த்தை அவர்களைத் திட்டி “செந்தமிழில்” எழுதுபவர்கள். ஆகியோரில் பலர் தமது வீட்டுப் பெரியவர்களது சொல்லுக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி, அக்கினி வளர்த்து, பார்ப்பன புரோகிதர்களை வைத்து சப்தபதி மந்திரங்கள் முழங்க எல்லோரும் பாராட்டும் முறையில் மணம் செய்து கொள்வது நடந்திருக்கிறது.
கருணாநிதியின் மனைவியே சத்திய சாய்பாபா காலில் விழுந்து ஆசி பெற்றதை கலைஞரே அருகில் இருந்து பார்த்தவர்தானே.
மற்றப்படி கமல் நடந்து கொள்வது ஆஷாடபூதித்தனமானது என்பதும் உண்மைதான். தானும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனரைத் திட்டிவிட்டால் சாதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாசிலார்களாக தம்மையே பாவித்துக் கொள்ளும் எடுபட்ட சில ஜாட்டான் பயல்கள் தன்னை வாழ்த்துவார்கள் என மனப்பால் குடிக்கும் சில தொடைநடுங்கி பார்ப்பனர்களில் அவரும் ஒருவர்.
ஆனாலும் என்னைப் பொருத்த மட்டில் அவரது அபார நடிப்புத் திறமை, திரையுலகத்துக்கான அவரது டெடிகேஷன் ஆகியவையே முக்கியமானவை. அவரது தனிப்பட்ட கருத்துக்கு அவருக்கு முழு அதிகாரம் உண்டு. நான் யார் அதை பழிக்க?
கேள்வி-14 தொடர்புடைய கேள்வி... இப்படி கமல் போலியாக நடிப்பதால், பிராமணர் அல்லாதாரின் நம்பிக்கையை பெற்று விட முடியாது .. அதே சமயம் பிராமணரின் எரிச்சலையும் சம்பாதித்து கொள்கிறார்.. இந்த தேவையில்லாத போக்கு ஏன்? (அல்லது அவர் என்ன செய்தாலும் பிராமணர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பார்களா)?
பதில்: என்னைப் பொருத்தவரை கமலை பார்ப்பனர் என்பதற்காகவே திட்டுபவர்கள் ஜாட்டான்கள் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். அத்தருணங்களில் கமலுக்கு எனது ஆதரவு உண்டு. அந்த ஜாட்டான்களையும் ஜாட்டான் என அழைத்து சாடுவேன்.
என்ன இருந்தாலும் கமல் எனக்கு நெருங்கிய உறவு முறை. எப்படி என்கிறீகளா? கமலின் அக்காவின் கணவரின் தங்கையின் கணவரின் அத்தை பிள்ளைதான் இந்த டோண்டு ராகவன்.
இது கமலுக்குத் தெரியுமா எனக் கேட்பவர்களுக்கு எனது பதில் அவர் அண்ணா சாருஹாசனிடமே இதை நான் கூறியாகி விட்டது. அவருக்கு என் மாமா பிள்ளையை நன்கு தெரிந்திருக்கிறது. இப்போது டோண்டு ராகவனையும் தெரிந்து கொண்டார். ஆளை விடுங்கள் சாமி.
ஞாஞளஙலாழன்
கேள்வி-15. பிராமணர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் நாட்டில் சமஸ்கிருதப் பாசம் இருக்கிறது?
(இதற்கு நான் சான்றுகள் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன்).
பதில்: வடமொழியுடன் சிறிது பரிச்சயம் ஏற்பட்டாலும் அதன் வீச்சு புரியும். பார்ப்பனர்கள் விஷயத்தில் அவர்களது பரிச்சயம் டீஃபால்டாகவே அதிகம். தனிப்பட்டவர் படிக்காவிட்டாலும் கூட அவர்கள் வீடுகளில் நடக்கும் திருமணங்கள், சிரார்த்தம் ஆகிய சடங்குகள் போது மந்திரங்களை கேட்கவாவது செய்வார்கள். ஆகவேதான் நீங்கள் கூறுவது போல நடக்கிறது.
கேள்வி-16. ஆங்கிலத்தில் 'ஞா', ழ, ள போன்ற உச்சரிப்புகள் இல்லை..இவ்வாறாக ஒரு மொழியில் இருக்கும் உச்சரிப்புகள் மற்ற மொழிகளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் ஏன் தமிழில் சமஸ்கிருதம் சார்ந்த எழுத்துகளைப் புகுத்தப் பிராமணர்கள் முற்படுகிறார்கள் (அல்லது ஆதரவு தெரிவிக்கிறார்கள்)?
பதில்: நான் ஏற்கனவேயே இன்னொரு தருணத்தில் கூறியது போல வடமொழி சுலோகங்களை கூறும்போது உச்சரிப்பு ரொம்பவுமே முக்கியம். அதே சமயம் பலருக்கு தேவநாகரி லிபியில் படிக்க வராது. அம்மாதிரி சமயங்களில் கிரந்த எழுத்துக்கள் துணைக்கு வருகின்றன.
கேள்வி-17. கிருஷ்ணா, ஷிவா, ஷக்தி, பிரம்மா, சரஸ்வதி, லக்ஷ்மி போன்ற தெய்வங்கள் தமிழர்களின் தெய்வங்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை (பெயரே சான்று). இந்த தெய்வங்கள் வட நாட்டிலிருந்து தமிழகத்திற்கு பல்வேறு மன்னர்களால் புகுத்தப் பட்டிருக்கலாம். அவற்றின் வழிபாட்டு முறையும் தமிழில் இல்லை. தமிழர்களிடத்தில் சிறு தெய்வ வழிபாட்டுமுறை இருக்கிறது. அது ஏன் பிராமணர்களிடத்தில் இல்லை?
பதில்: இல்லை என எவ்வாறு கூறுகிறீர்கள்? ஏதேனும் கருத்துக் கணிப்பு எடுத்தீர்களா, அல்லது மற்றவர் எடுத்ததை படித்தீர்களா? தமிழ் தனி வடமொழி தனி என்பது மிகச் சமீபத்தில்தான் வந்தது. கோவில்களில் வழிப்பாட்டு முறை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. காலம் செல்லும் போக்கில் வல்லவை நிற்கும், அல்லவை மறையும்.
மற்றப்படி எனது அன்னை வழி பாட்டனார் திரு. ரங்காச்சாரி அவர்கள் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் உபாசகர். எங்கள் உறவினர்கள் பலர் சிறு தெய்வங்களை பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருகின்றனர்.
நண்பர் எல்.கே. கூறுகிறார்: “மிக மிகத் தவறான தகவல். எனக்குத் தெரிந்து பல பிராமண குடும்பங்களின் குல தெய்வங்கள் எல்லை தெய்வங்களே. எங்கள் குடும்பதிற்க்கே கண்ணூர்பட்டியில் (ராசிபுரம்-நாமக்கல்) பெரியாண்டவர்தான் குலதெய்வம். சேலம் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் உள்ள பிராமணர்கள் அங்கு வருகின்றனர்””.
என்ன சரிதானே?
pt
கீழ்கண்ட செய்திகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
கேள்வி 17. அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
பதில்: நான் ஜெயா டிவியில் 19.12.2010-ல் வெளியான சோவின் பேட்டியை பார்த்தேன். மேலே உள்ள கேள்விக்கு சோ கேலியாகப் புன்னகை செய்து கூறியதாவது.
இக்குற்றச்சாட்டு வந்தது நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதிலிருந்து. கருணாநிதி நீரா ராடியாவிடம் இக்கேள்வியை வைத்திருக்க வேண்டும், அல்லது ரத்தன் டாட்டாவிடம்.
இக்குற்றச்சாட்டை தயாநிதி மாறனே மறுக்கவில்லை. ஏண்டா பாவி மறுக்கவில்லை என்று அவரையாவது கேட்டிருக்க வேண்டும். அது ஒன்றுக்கும் அவருக்கு வக்கு இல்லை. சோ ராமசாமியிடம் வருகிறார்.
டோண்டு ராகவன் இங்கு சேர்ப்பது. தினகரன் கொலை விவகாரத்தில் அழகிரியின் பங்கு பற்றி கேள்வி கேட்ட ஜெயா டிவி நிருபரிடம் “நீதாண்டா கொலைகாரன்” என பண்புடன் சீறியவர்தானே இந்தப் பெருந்தகை? அவரிடம் போய் நாகரிகமான நடவடிக்கையை எல்லாம் எதிர்ப்பார்ப்பது ஓவர் இல்லையா?
கேள்வி-18. பொங்கல் பண்டிகைக்குள் கட்சியைத் தொடங்கும் விஜய், தனது புதிய கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக, சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
பதில்: நான் ஏற்கனவே சொன்னது போல விஜய் முதலில் தன்னை ப்ரூவ் செய்ய வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்வது நல்ல பயிற்சியாக அமையும் அவ்வளவே.
கேள்வி-19. படங்களில் பாலுறவை திணிக்கிறார்கள். பாலுறவு பக்தி மாதிரி, நெஞ்சுக்குள் வைத்திருக்க வேண்டும் வெளியே காட்டக் கூடாது. தேவையில்லாமல் பாலுறவு திணிக்கப்படுகிறது.- என்றார் வைரமுத்து.
பதில்: இவ்வளவு உருகுபவர் அம்மாதிரி காட்சிகளுக்கு பாடல் வரிகள் தாரமலிருக்க இவர் தயாராமா? அதெல்லாம் செய்தால் புவ்வாவுக்கு என்ன செய்வாராம்? வெறும் ஆஷாடபூதி.
கேள்வி-20. கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.
பதில்: அவர் கவலை அவருக்கு. மகன் மந்திரி பதவியில் இல்லாமல் இருக்கும் இந்த நாட்களில் அவரது கம்பேனி தள்ளாடுகிறதே. அப்போது நீங்களா உதவப் போகிறீர்கள்?
கேள்வி-21. மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும், மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வில் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
பதில்: சீமான் ஒன்றும் புதிதாகக் கூறவில்லையே? ஆனால் இதையெல்லாம் அவர் எப்போதிலிருந்து கூற ஆரம்பித்தார் என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
12 hours ago
58 comments:
1.பலர் எதிர்பார்த்த படி திமுக-காங் கூட்டணி முறிந்து விடும் போல் அறிகுறி தெரிகிறதே?
2.அம்மாவுக்கு பிடிக்கும் தலைமை மகனுக்கு வேப்பங்காய் என்ன காரணம்?
3.ஜெ.யின் லாவக அணுகுமுறை மாற்றம் தேர்தல் வரை தொடருமா?
4.ஆன் லயின் டிரெடிங் தான் இந்த விஷ விலையேற்றத்திற்கு காரணம் என் தெரிந்த பிறகும்?
5.பெரிய கர்பரேட் நிறுவண தலைவர்கள் தான் இந்தியா ஆட்சி அதிகாரத்தை முடிவு செய்கிறார்கள் என்ற செய்தி நல்லதிற்கா?
டோண்டு ராகவன் said...
// //நான் ஏற்கனவேயே இன்னொரு தருணத்தில் கூறியது போல வடமொழி சுலோகங்களை கூறும்போது உச்சரிப்பு ரொம்பவுமே முக்கியம். அதே சமயம் பலருக்கு தேவநாகரி லிபியில் படிக்க வராது. அம்மாதிரி சமயங்களில் கிரந்த எழுத்துக்கள் துணைக்கு வருகின்றன.// //
நீங்கள் சொகிறபடி வடமொழி சுலோகங்களை உச்சரிக்க விரும்புகிறவர்களுக்குத்தானே அது பிரச்சினை. இதற்கு மற்றவர்களை ஏன் வதைக்க வேண்டும்?
ஏதோசில மாணவர்கள் மேற்படிப்புக்காக ரசிய நாட்டுக்கு போகிறார்கள், அதற்காக பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் ரசிய மொழியை கற்பித்தால் அது நியாயமாகுமா?
விருப்பமுள்ளோர் கிரந்தமோ வடமொழியோ தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளட்டுமே. அதைவிட்டுவிட்டு பாடபுத்தகத்திலும் யூனிகோடிலும் அதனை எதற்காக திணிக்க வேண்டும்?
Some of Good Works done by Current DMK Govt..
1. Majority Voters who really votes belongs to Rural and semi urban areas, DMK Govt. has done many schemes and welfare programs that are directly felt and used by these people. Examples, 1 Re per 1 KG Rice in Ration Shops, 108 Ambulance, Medical Insurances Scheme for Under Privileged and Poor People, Concrete houses to replace Huts, 7000 crores co-op loan cancel for farmers , Free Star rated pumpsets to the Formers, New Industries and IT parks even at places like Kovai & Trichi, Eco Parks, Road development and Fly Overs even at growing cities like Kovai, Madurai and Trichi, Increased amount for Poor Women Marriage scheme, Increased revenue Support for Self help Groups
2. Govt Jobs given to approx 5.5 lacks unemployed persons, Nominal Monthly support for unemployed youths registered at Employment Exchange.
3. Drinking Water scheme done in many districts, like Cauveri Water for Ramanad Dist & Sivaganga Dist, Okkanekkal Drinking Water Scheme for Dharmapuri & Krishnagiri Dist – Work In Progress. De-saltaion plants for Chennai.
4. In the last 5 years, at least one major Infrastructure work is done in 95% of Taluks & Unions. Like New Govt Office Buildings, Local Body Buildings, Court Buildings, Underground Drainage System, Cement Roads etc.
5. Special reservation given to Arunthathiyars and Minorities, this has ensured that these neglected section people to get admission to Professional Courses and Govt Jobs.
6. Abolition of Entrance Exam has benefited majority of Rurel & Poor students and special quota and free education for First Time Graduate family.
7. Metro Rail Scheme for Chennai, New secretariat & Assembly building, New parks (Semmozi Poonga, Adyar Poonga ) and many flyovers in the City.
8. World Class State of Art Anna Centenary Library Building
9. Special Development packs for other cities like Kovai.
10. New Handloom Parks in Madurai and other 3 places in TN.
These are some of the achievements of DMK Govt in the last 5 years and these schemes directly benefit the END Voters. In Service Industry they call as End User Satisfaction, like that End Voters are happy in DMK Rule.
In Contrast, during ADMK rule, many policies hit the common voters directly, like H Ration Card, over night Sacking of Lacks of Govt Employees, Sacking of Road Workers, Anti Conversion Act, Ban on Animal Scarification etc. These policies directly affected voters.
Can any one point one major infrastructure work done by previous ADMK Govt, just they cut the ribbon for Madras Medical College New Building and Koyambedu Bus Terminus, actual work of these were completed during previous DMK Govt.
Can anyone policy made during current DMK Govt affect at least a section of Voters & People? Even the electricity cut was due to improper planning for earlier ADMK regime, not invested in long term power generation to meet growing future demand. But the DMK govt has taken steps to add more power production plants and in coming years, shortage of production will be fulfilled.
the rain water harvesting system was ONE of the major highlight of the ADMK regime. (ALL OF US ENJOY THE BENEFITS EVEN TODAY. Just because it was done by the previous government, the current regime has not done an effective campaign to keep the System in good condition thereby losing the benefit we are going to get after few years, the same way you tried to say about the power)
If we start talking the way this Government has arm twisted for the benefit of the family members of the ruling party and because of that the money that the End users have lost indirectly, it will be a huge money compared to the peanuts they have thrown. Eg., the Spectrum change of hands for huge sum (in the guise of business transaction) after the allocation by the government has been pitched back to the End users by the persons who have purchased.
I can go long, but i have only one word to say "THROW THIS GOVERNMENT OUT".
டோண்டு ராகவன் said...
// //கேள்வி-16...ஏன் தமிழில் சமஸ்கிருதம் சார்ந்த எழுத்துகளைப் புகுத்தப் பிராமணர்கள் முற்படுகிறார்கள் (அல்லது ஆதரவு தெரிவிக்கிறார்கள்)?
பதில்: நான் ஏற்கனவேயே இன்னொரு தருணத்தில் கூறியது போல வடமொழி சுலோகங்களை கூறும்போது உச்சரிப்பு ரொம்பவுமே முக்கியம். அதே சமயம் பலருக்கு தேவநாகரி லிபியில் படிக்க வராது. அம்மாதிரி சமயங்களில் கிரந்த எழுத்துக்கள் துணைக்கு வருகின்றன.// //
ஏதோ ஒரு சிலர் வடமொழி மந்திரங்களை கூறவேண்டும் என்று கூறி, தமிழின் இடத்தை அபகரித்து அழிக்க பார்ப்பனர்கள் துடிக்கின்றனர்.
யுனிகோடு அமைப்பு ஒவ்வொரு மொழிக்குரிய எழுத்துகளுக்குத் தக இடங்களை ஒதுக்கிவைத்துள்ளது. தமிழ்மொழிக்கு 128 இடங்களை இந்த அமைப்பு வழங்கியுள்ளது. அதில் 72 இடங்களில் மட்டும் தமிழ் எழுத்துகளும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க்குறியீடுகளும், வழக்கில் உள்ள இன்றியமையாதவையாகக் கருதப்படும் கிரந்த எழுத்துகளும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
நிரப்பப்படாமல் உள்ள 56 இடத்தில் கிரந்த எழுத்துகள் 26 ஐச் சேர்க்கும்படி சிலர் யுனிகோடு அமைப்புக்குக் கருத்துரு வழங்கியுள்ளனர். அவர்களுள் சிறீரமணசர்மா(காஞ்சி சங்கரமடம்) என்னும் வல்லுநரும் ஒருவர்.
இதுதொடர்பாக நடத்தப்பெற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக யுனிகோடு ஆணையத்துக்கு இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிரந்தப் புலவர்கள் 14 பேர்களில் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாத்திரி, இரமண சர்மா (காஞ்சி சங்கரமடம்) ஆகிய இரு பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழறிஞர்களோ, கல்வெட்டுத் தொல்லியல் அறிஞர்களோ இக்குழுக்கூட்டத்தில் இடம்பெறவில்லை.
இதனிடயே, இந்த பெருங்கேடு குறித்து அறிஞர்களின் கருத்தறிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் பேராசிரியர் க.அன்பழகன், வைரமுத்து, வா.செ.குழந்தைசாமி, மு.ஆனந்தகிருட்டினன், கனிமொழி, அரவிந்தன், இரவிக்குமார் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் கூடி ஆலோசித்தனர்.
தமிழறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு உரிய முடிவெடுக்கலாம் என்று முதலமைச்சர் நடுவண் அரசுக்கு ஒரு வேண்டுகோள் மடல் விடுத்துள்ளார்.
இதன் காரணமாக அமெரிக்காவில் நடபெற்ற யூனிகோடு கூட்டத்தில் இப்பொருள் குறித்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.
அதாவது, பார்ப்பன சதி ஒன்று தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
1. வரும் தேர்தலில் திமுக என்ன பொருள் இலவசமாக கொடுப்பதாக இருக்கிறார்கள்?
2. சச்சினின் சமீபத்திய சாதனை பற்றி...?
3. சென்னையில் தற்பொழுது குளிர் ஜாஸ்தியாக தெரிகிறதே? உலகம் வெப்பம ஆவதலா?
டோண்டு சாரின் விமர்சனம்?
1.நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம்- சுப்பிரமணிய சாமி.
2.ஊரெல்லாம் பற்றி எரியும் நானோகார், ஒரு லட்சம் விலை சொல்லிட்டு 2 லட்சத்துக்கு விற்கும் நானோ கார், விற்பனையே ஆகாத நானோ கார்.. இதுக்கு விருதாம்..
3.தம்பி விஜய் மாசற்ற தமிழன்-உரக்கச்சொன்ன சீமான்!
4.சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.
5.வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
//1. வரும் தேர்தலில் திமுக என்ன பொருள் இலவசமாக கொடுப்பதாக இருக்கிறார்கள்? //
ரேஷன் கார்டு வைத்திருப்போர் அனைவருக்கும் காணி நிலத்துக்கு பட்டா இலவசம்.
நிலம் எங்கே என்று பகுத்தறிவில்லாமல் கேட்கக் கூடாது!!
//மோதி இருந்து ஆட்சி செய்யும் இப்போதைய குஜராத்தை மறந்து பேசலாமா?//
மோதி எங்கே காமராஜர் எங்கே .. இரண்டுக்கும் ஒப்பீடு போடுதல் மகா கேவலம்.
மோதி நல்ல நிர்வாகியாக இருக்கலாம் ஆனால், நல்ல தலைவன் இல்லை. இஸ்லாமியரைக் கொன்று குவித்தவனைப் போய், மக்களுக்காகவே வாழ்ந்த கர்ம வீரரோடு ஒப்பிட்டு பேசுவது.... சாணியை வைத்துக் கொண்டு சாம்பார் செய்யுங்கள் என்பதை போல் உள்ளது
@அங்கிதா வர்மா
கோத்ராவுக்கு பிறகு வந்த கலவரத்துக்கு மோதி பொறுப்பல்ல என சுப்ரீம் கோர்ட் நியமித்த பிரத்தியேக விசாரணைக் குழு அறிக்கை அளித்து இருப்பது பற்றி நான் இட்ட இடுகைக்கு உங்களைப் போன்று பொய் சாட்சி புகழ் டீஸ்டா ஆதரவாலர்கள் இடிபோன்ற மௌனம்தானே காத்தீர்கள்?
பார்க்க: http://dondu.blogspot.com/2010/12/blog-post_2515.html
கோத்ராவில் இசுலாமிய கொலையாளிகள் ரயில் பெட்டியை எரித்து கரசேவகர்களைக் கொன்றதற்கு யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் கலவரம் வெடித்திருக்கும். அப்போது மோதி ஆட்சியில் இருந்தார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லவியலும்?
அதை வைத்து-அதை மட்டும் வைத்து-சீக்கியக் கொலைகள் புகழ் காங்கிரஸ் இரு தேர்தல்களில் வேணமட்டும் பேசி, தலைமை தேர்தல் கமிஷனரே காங்கிரஸின் பூத் ஏஜெண்டாக செயல்பட்டு தலைகீழாக நின்றாலும், உண்மை அறிந்த குஜராத் மக்கள் மோதியின் கட்சியைத்தானே தேர்ந்தெடுத்தனர்.
உள்ளாட்சித் தேர்தலிலும் மோதிக்குத்தானே வெற்றி?
நீங்களே கூட வேறு வழியின்றி மோதி நல்ல நிர்வாகி என சர்டிஃபிகேட் தர வேண்டியிருந்தது?
உங்களுக்கெல்லாம் தினகரன் ஊழியர்கள் கொலை புகழ், 1,76,000 கோடி ஊழல் புகழ் கருணாநிதி ஆகியோர்தான் நல்லவர்கள் போலிருக்கிறது.
டோண்டு ராகவன்
// Prakash said...
Some of Good Works done by Current DMK Govt..
1. Majority Voters who really votes belongs to Rural and semi urban areas, DMK Govt. has done many schemes and welfare programs that are directly felt and used by these people. Examples, 1 Re per 1 KG Rice in Ration Shops, 108 Ambulance, Medical Insurances Scheme for Under Privileged and Poor People, Concrete houses to replace Huts, 7000 crores co-op loan cancel for farmers , Free Star rated pumpsets to the Formers, New Industries and IT parks even at places like Kovai & Trichi, Eco Parks, Road development and Fly Overs even at growing cities like Kovai, Madurai and Trichi, Increased amount for Poor Women Marriage scheme, Increased revenue Support for Self help Groups
திமுக ஆட்சியின் சாதனை பற்றிய
இந்த புள்ளி விபரங்களுக்கு டோண்டு அவர்களின் முழுமையான பதிலடி என்ன?( தனிப் பதிவு என்றாலும் உலகிற்கு உண்மையை கொண்டு வரலாம்- அதில் இந்த திடங்களுக்கு வாங்கப் பட்டுள்ள கடன் விபரங்களை தரவும்.-)-உங்களின் பதிவு பலரின் கண்ணெய் திறக்க உதவட்டுமே- இந்த சமயத்தில் துக்ளக் சோ அவர்கள் சொன்ன மாதிரி மீண்டும் ஒரு முறை இந்த வரலாற்று சாதணையாளர்களின் ஆட்சி தமிழ் நாட்டிற்கு வந்தால் ?
ஒரு அதீத கற்பனை
(தொடர்ச்சி)
ஒரு அதீத கற்பனை
1.7 கோடி தமிழ் குடுபஙகளுக்கும் 3 வேளை சைவ/அசைவ உணவு (வீட்டிற்கே வந்து விடலாம்)
2.அனைவருக்கும் எல்சிடி கலர் டீவி ஹை.டி டிவிடி பிளேயர், ஹோம் தியேட்டர் வசதியுடன் இலவசமாய் தரப் படலாம்
3.அனைவருக்கும் எல்லா வசதிகளுடன் மாடியுடன் கூடிய வசதி தரப்படலாம்
4.திபாவளி,பொங்கல்,அண்ணா,பெரியார்,கலைஞர்,ஸ்டாலின்,அழகிரி,கனிமொழி,ராஜா பிறந்த நாட்கள், இப்படியாக வருசத்துக்கு 12 செட் உடைகள் தரப் படலாம்
5.இலவச பஸ் வசதி தமிழ் நாடு முழுவதும்
6.இலவச சினிமா வாழ் நாள் முழுவதும்
இது போக யார் என்ன வசதி இலவசமாய் கேட்டாலும்
தரப் படலாம்
எனவே அனைவரும் உதய சூரியனை மறந்து விடாதீர்கள்
இந்த பார்பன ஆதிக்க சக்திகளின் வெற்றுக் கூச்சல் கண்டு யாரும் கலங்க வேண்டாம்
நம்மவர் ஆட்சி தொடர
நாளும் கலைஞரின்( மற்றும் அவரது பிள்ளைகள்,பேரன்,கொள்ளு பேரன் கள்) புகழ் பாடி ஆனந்தமாய் அமர்க்களமாய் நம்மை மறந்து வாழ வாங்கு வாழ்ந்திடுவோம்.
//Drinking Water scheme done in many districts, like Cauveri Water for Ramanad Dist & Sivaganga Dist, //
சார் காமெடி பண்ணாதீங்க,. மேட்டூர் அருகில் இருக்கும் சேலத்தில் வாரத்தில் ஒரு நாள்தான் சார் தண்ணீர் வருது. இதில் நீங்க ராம்நாத் பத்தி பேசறீங்க...காவேரி தண்ணிய பத்தி இப்படி சேலத்து காரன்கிட்ட சொல்லிடாதீங்க. கட்டிவெச்சு போலந்துருவங்க. அவ்வளவு எரிச்சல்ல இருக்காங்க அங்க
//உங்களுக்கெல்லாம் தினகரன் ஊழியர்கள் கொலை புகழ், 1,76,000 கோடி ஊழல் புகழ் கருணாநிதி ஆகியோர்தான் நல்லவர்கள் போலிருக்கிறது.//
எத்தனை ’சோ’ க்கள் ,சாமிகள், வந்தாலும் என்ன சொல்லாலும்,பேசினாலும்.எழுதினாலும்
தமிழகத்தில் தமிழன் ஆட்சிதான் தொடரும்.
மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வேள்வியில் அங்கொன்று இங்கொன்றுமாய் நடை பெற்றதாய்
சொல்லப்படும் வாய் வழி குற்ற்சாட்டுகளை மக்கள் பெரிதாய் எடுத்து கொள்ள மட்டர்கள் என்பது வரலாற்று உண்மை.
திமுக புடம் போட்ட தங்கமாய் விரைவில் ஜொலிக்கும்.இது உறுதி
அட்டாலும் பால் சுவையில் குன்றாது
அளவளாய் நட்டாலும் நண்பல்லர் நன்பல்லரே
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
1 என்னை போன்றோருக்கு பிராமணர்கள் மீது துவேஷமும் இல்லை . அதீத அன்பும் இல்லை .ஆனால் முழு நேரமாக பிராமணர்களை எதிர்ப்பவர்கள் மனதில் பிராமணர்கள் மேல் அதீத மரியாதை இருக்கிறது என நினைக்கிறேன் . உங்கள் கருத்து ?
முக்கிய வேலைகளுக்கு பிரமணர்களை அமர்த்துததல் , ஆலோசனை கேட்டல் போன்றவை சில உதாரணங்கள்
2. இத்தகைய திறனை பிராமாணர்கள் பெற என்ன காரணம் ? (பிராமணர்கள் அபார அறிவுதிறன் கொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை . பிராமண துவேஷம் செய்பவர்கள் நினைக்கிறார்கள்
மிளகாய் பொடி said...
// //சென்னையில் தற்பொழுது குளிர் ஜாஸ்தியாக தெரிகிறதே? உலகம் வெப்பம ஆவதலா?// //
இது ஒரு எளிய கேள்வி. ஆனால், பதில் எளிதானது அல்ல.
சென்னை மட்டுமல்ல, உலகின் எல்லா பகுதிகளிலும் எல்லாவித இயற்கை சீற்றங்களும் வழக்கத்தை மீறி அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதற்கேற்றார் போல - பூமிப்பந்தின் மேற்பரப்பு வெப்பநிலை மிக அதிகமாக இருந்த ஆண்டாக 2010 மாறியுள்ளது. நிச்சயம் வரும் ஆண்டுகளில் இது தொடர்ந்து அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதைபடிவ எரிபொருள் பயன்பாடு அதிகமாவது, காடுகள் அழிக்கப்படுவது - ஆகியவற்றின் காரணமாக வளிமண்டல பசுங்கூட வாயுக்கள் அடர்த்தி அதிகமாகிறது. இதனால் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கிறது.
இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெப்பம் அதிகமாவதற்கும் - உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் அதிகரிப்பதற்கும் உள்ள தொடர்பை வைத்தே 'புவி வெப்பமடைவதால் இயற்கை சீற்றம் அதிகமாகிறது' என்கிறோம்.
அதே சமயம் ஒரு தனிப்பட்ட இயற்கை சீற்றத்தை வைத்து - அதற்கும் புவிவெப்பமடைவதுதான் காரணமா? என்று கேட்டால், ஆம் என்று பதில்கூற முடியாது. ஏனெனில், அதனை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்க வழியேதும் இல்லை.
எனவே, சென்னையில் குளிர் வழக்கத்தைவிட அதிகமாவதற்கு புவிவெப்பமடைவது காரணமாக இருக்கலாம். ஆனால், இதனை நேரடியாக தொடர்புபடுத்தி மெய்ப்பிக்க முடியாது.
இதுகுறித்து மேலும் தகவலுக்கு, காண்க: http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_3780.html
ANKITHA VARMA said...
// //மோதி நல்ல நிர்வாகியாக இருக்கலாம் ஆனால், நல்ல தலைவன் இல்லை. இஸ்லாமியரைக் கொன்று குவித்தவனைப் போய், மக்களுக்காகவே வாழ்ந்த கர்ம வீரரோடு ஒப்பிட்டு பேசுவது.... சாணியை வைத்துக் கொண்டு சாம்பார் செய்யுங்கள் என்பதை போல் உள்ளது// //
மிகச்சரியான கருத்து. அதனை நான் வழிமொழிகிறேன்.
டோண்டு ராகவன் said...
// //தலைமை தேர்தல் கமிஷனரே காங்கிரஸின் பூத் ஏஜெண்டாக செயல்பட்டு தலைகீழாக நின்றாலும், உண்மை அறிந்த குஜராத் மக்கள் மோதியின் கட்சியைத்தானே தேர்ந்தெடுத்தனர். உள்ளாட்சித் தேர்தலிலும் மோதிக்குத்தானே வெற்றி?// //
தேர்தலில் மோதி வெற்றிபெற்றதற்கு காரணம் - பெரும்பான்மை மக்களாக இந்துக்கள் இருப்பதுதான். அதுவும் 'இந்துத்வா' கருத்தை ஏற்கிற இந்துக்கள். தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் புனிதர் ஆகமாட்டார்கள்.
சூடான் நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்த 'ஒமர் அல் பசீர்' பன்னாட்டு நீதிமன்றத்தால் ஒரு போர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளி- ஆனால், 2010 தேர்தலில் மக்கள் ஆதரவைபெற்று வெற்றிபெற்ற நாட்டின் தலைவராகவும் இருக்கிறார்.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்த ராசபட்சே 2010 தேர்தலில் பெரும் வெற்றி பெறவில்லையா?
அதுபோன்றதுதான் மோதியின் வெற்றியும்.
எழிலரசுவுக்கு சினிமா நகைச்சுவை வசனகர்த்தாவாக நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் முனைந்து செயல்பட்டால் சிரிப்பொலி தொலைக்காட்சியில் க்ரியேட்டிவ் ஹெட் ஆக விரைவில் நியமிக்கப்படலாம்!
மறைமொழியை எழுத்துப் பிழையின்றித் தட்டிடலாமே!
அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
கோத்ராவுக்கு பிறகு வந்த கலவரத்துக்கு மோதி பொறுப்பல்ல என சுப்ரீம் கோர்ட் நியமித்த பிரத்தியேக விசாரணைக் குழு அறிக்கை அளித்து இருப்பது ....
கோத்ராவில் இசுலாமிய கொலையாளிகள் ரயில் பெட்டியை எரித்து கரசேவகர்களைக் கொன்றதற்கு யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் கலவரம் வெடித்திருக்கும். அப்போது மோதி ஆட்சியில் இருந்தார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லவியலும்?
- டோண்டு ராகவன்.
Fantastic, Mr Raagavan !
’ஆட்சியில் இருந்தார்’ என்பதே போதும்.
He did not do -court said! Ok.
But, in a State where a communal riots takes place and a large number of one community get murdered in broad daylight; their houses ransacked and put on fire; their women raped and killed; their children orphaned.
The court said: The CM did not do it. :-)
Take this e.g. In Chennai city, suppose, everywhere robberies, chain snatchinga, molestation of women, burgleries at houses and commercial ests. and the citizens cant live in peace and women cant venture out of homes.
The Police chief of the city did not do it at all - the court said. :-)
Next lets go to the Godhra train massacre.
A massacre took place. A communal riot broke out after that. It was quite expected, according to you.
The man, who presided over the governance, is not responsible. Because, the riot was expected.
On this logic, wherever a riot is expected, the chief governor of the State, can go to the top of his house and play fiddle, as Nero did when the Rome was burnt.
Modi is innocent :-)))
Why cant the people remove this incompetent but innocent and honorable man and put in place a man who can anticipate the riot and prevent it and save the lives of the citizens?
Why cant the people remove this incomepetent and innocent and honourable man and put in place another under whose governance the minority can live in peace?
2. இத்தகைய திறனை பிராமாணர்கள் பெற என்ன காரணம் ? (பிராமணர்கள் அபார அறிவுதிறன் கொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை . பிராமண துவேஷம் செய்பவர்கள் நினைக்கிறார்கள்
My reply, if you want:
They are genetically superior people. Like Jews, they are the 'Chosen People' of God.
//தேர்தலில் மோதி வெற்றிபெற்றதற்கு காரணம் - பெரும்பான்மை மக்களாக இந்துக்கள் இருப்பதுதான். அதுவும் 'இந்துத்வா' கருத்தை ஏற்கிற இந்துக்கள். தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் புனிதர் ஆகமாட்டார்கள்.//
ரொம்பத்தன் சவுகரியமாக சுப்ரீம் கோர்ட் நியமித்த எஸ்.ஐ.டி. கூறியதை மறைக்கிறீர்கள்? எனது அப்பதிவில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை போய் பார்க்கவும்.
அப்படி பார்த்தால் 1984 சீக்கியக் கொலை புகழ் ராஜீவ் காந்தியின் கட்சியுடன் கூடத்தான் மரம் வெட்டிக் கட்சி கூட்டு கண்டது. அதற்கு என்ன கூறுவீர்கள்?
இந்த இடத்தில் பேசப்படுவது ஊழலர்ற நிர்வாகம்தான். மோதி அதை கொடுக்கிறாரா இல்லையா என்பது முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//On this logic, wherever a riot is expected, the chief governor of the State, can go to the top of his house and play fiddle, as Nero did when the Rome was burnt.//
ரொம்ப கண்டீர்களோ? 1984-ல் ராஜீவ் செய்தது போலவா மோதி நடந்து கொண்டார்? கயில் கணினி இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதக் கூடாது.
கோவை குண்டு வெடிப்புக்கு கருணாநிதியும் பொறுப்பு ஏற்க வேண்டும்தானே. தினகரன் கொலைகள்?
டோண்டு ராகவன்
//They are genetically superior people. Like Jews, they are the 'Chosen People' of God.//
உளறல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//They are genetically superior people. Like Jews, they are the 'Chosen People' of God.//
i expected this answer . u fulfilled that. thanks for that
"உளறல்"
அப்படியெல்லாம் கிடையாது.
I meant you, being a brahmin, that too, a vadaglaia aiyangaar, is far superior to all other Tamils, born in other communiites or castes, in brain powers.
It is a compliment. Why dont you take that way, Sir?
Merry Christmas !
//It is a compliment.//
But an undeserved one. I can do without that, thank you.
According to the rules of logic, it commits the fallacy of hasty generalization.
Regards,
Dondu N. Raghavan
/1. வரும் தேர்தலில் திமுக என்ன பொருள் இலவசமாக கொடுப்பதாக இருக்கிறார்கள்? /
1.7 கோடி தமிழ் குடுபஙகளுக்கும் 3 வேளை சைவ/அசைவ உணவு (வீட்டிற்கே வந்து விடலாம்)
2.அனைவருக்கும் எல்சிடி கலர் டீவி ஹை.டி டிவிடி பிளேயர், ஹோம் தியேட்டர் வசதியுடன் இலவசமாய் தரப் படலாம்
3.அனைவருக்கும் எல்லா வசதிகளுடன் மாடியுடன் கூடிய வசதி தரப்படலாம்
4.திபாவளி,பொங்கல்,அண்ணா,பெரியார்,கலைஞர்,ஸ்டாலின்,அழகிரி,கனிமொழி,ராஜா பிறந்த நாட்கள், இப்படியாக வருசத்துக்கு 12 செட் உடைகள் தரப் படலாம்
5.இலவச பஸ் வசதி தமிழ் நாடு முழுவதும்
6.இலவச சினிமா வாழ் நாள் முழுவதும்
இது போக யார் என்ன வசதி இலவசமாய் கேட்டாலும்
தரப் படலாம்
கோவை குண்டு வெடிப்புக்கு கருணாநிதியும் பொறுப்பு ஏற்க வேண்டும்தானே. தினகரன் கொலைகள்?
Mr Raaghvan
The Bomb blasts, or murder of a few persons and
the communal riots which rages for many days during which the people lived in fear of losing their lives and limbs, and livlihood -
ARE NOT THE SAME.
i expected this answer . u fulfilled that. thanks for that
- LK
Welcome.
My comments are genuine. The Tamil brahmins are superior to others in intelletual powers. It is a fact acknowledged and conceded by all Tamils.
I am proud of you, Sir. Persons like Arul are jealous of you.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
At least you have accepted my general truth, unlike Dondu Raagavan. He refused my compliment.
Merry Christmas to you Sir.
//But an undeserved one//
ஏழு மொழி தெரிந்த polyglot.
ஜெயா டிவியே வந்து பேட்டி எடுத்த வி ஐ பி.
அரசியல் தூய்மை, வாழ்க்கைத் தூய்மையுடைய சோ இராமசாமியின் வலது கரம்.
துக்ளக் பத்திரிக்கையின் வருங்கால எடிட்டர் (ஒரு கெஸ்தான்)
எல்லாவற்றிற்கும் மேலாக - ஜோரா கைதட்டுங்கோ ! -
உலகநாயகனுக்கு உறவினர்.
Mr Dondu Raagavan richly deserves all compliments from the readers of this blog and others also.
However, if he feels that such compliments should come from a better person, I am in agreewith that.
Since I will be out from now upto 1st Jan.
I say a WARM HAPPY NEW YEAR
பொலிக பொலிக பொலிக.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை
வணக்கம் டோண்டு சார்,
சமீபத்தில் தான் சோ அவர்களின் 'எங்கே பிராமணன்' முதல் பாகத்தை முடித்தேன்; சுத்தம்! என சொல்லாதீர்கள்! துக்ளக்கில் இது தொடராய் வந்தபோதே படித்திருந்தேன் (90களின் தொடக்கத்தில், இல்லை?).
இதன் சாரம் மட்டும் நினைவில் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு புத்தக வடிவில் இப்போதுதான் படித்தேன்.
Well, திரு சோ அவர்களின் நேர்மை, துணிவு, நகைச்சுவை பற்றி இந்த கடிதம் இல்லை - That is just Obvious Truth.
நான் கேட்க வந்தது, இந்த சாரம் -
'பிராமணன்' என்பது ஒரு உயரிய status, பிறப்பில் இல்லை, அது நடத்தையில் தான் இருக்கிறது. It's kind of Elite status, it's not birth right, should be earned -
நீங்கள் இதை ஏற்று கொண்டு இருப்பீர்கள் என உறுதியாய் நம்புகிறேன் ("யார் சொன்னது" என்று குண்டைப்போடாதீர்கள்!)
ஆனால் பிராமண சமுதாயத்தில் இந்த சோவின் கருத்திற்கு பொதுவாக வரவேற்பு எப்படி இருந்தது என ஆவலாய் இருக்கிறது.
சலசலப்பு அலை, முணுமுணுப்பு அலை அல்லது நிறைய எதிர்ப்பு அலை?
ஏனெனில் அவர் கால காலமாய் நம்பப்பட்டு வந்தவைகளை போட்டு உடைத்திருக்கிறார் - Definition of வர்ணம், பிராமணப்பெற்றோர்களுக்கு பிறந்தாலேயே பிராமணன் என்றாகிவிடாது, etc.,
நீங்கள் இதைப்பற்றி பதிவுகள் முன்னரே எழுதி இருந்தால் மன்னிக்க (உங்கள் archive-ல் நான் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை).
எனது இந்த கேள்வியை நீங்கள் தனிப்பதிவாயும் போடலாம், உங்கள் கேள்வி பதில் பகுதியிலும் போடலாம், உங்கள் இஷ்டம் உங்கள் வலைப்பதிவு!
உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி!
Essex சிவா
//The Bomb blasts, or murder of a few persons and
the communal riots which rages for many days during which the people lived in fear of losing their lives and limbs, and livlihood -
ARE NOT THE SAME. //
கோவை குண்டு வெடிப்பு என்றால் குண்டுவெடித்த நிமிடங்கள் மட்டும் கணக்கல்ல. அதனால் ஏற்பட்ட உயிர், பொருளாதார, மனித நம்பிக்கை இழப்புகள், கலவரங்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். 2 ஆண்டுகள் கோவையில் இருந்து ஏற்றுமதியான குண்டூசியைக் கூட ஐயத்தோடு பார்த்த அவலம், அதனால் ஏற்பட்ட தொழில் இழப்புகள், அது காரணமாக ஏற்பட்ட வேலையிழப்புகள் இதெல்லாம் உங்களுக்குப் பெரிதல்ல!
ஒரு காவலர் போக்குவரத்து விதிமீறலைக் கண்டித்ததற்காகக் கொல்லப்பட்ட போதும் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்காது வாக்குவங்கி அரசியல் நடத்திய கேவலமான தலைமை சிறந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
இப்படிப் பேசுவது சிலருக்கு ஆறுதல் தரும். பேசிக் கொள்ளுங்கள். ஆனால், ஆறுதலுக்காக ஆராரோ வந்து நின்று ஆராரோ செய்த குற்றங்களுக்கு அஞ்சுகச் செல்வனைச் சுட்ட அத்தாட்சி ஏதுமில்லை என்று ஆற்றுப்படை பாடினாலும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவாறே அரிதுயில் கொண்டகுற்றம் அளப்பரிய குற்றம் தான்.
பார்வையாளன் said...
// //இத்தகைய திறனை பிராமாணர்கள் பெற என்ன காரணம் ? (பிராமணர்கள் அபார அறிவுதிறன் கொண்டுள்ளதாக நான் நினைக்கவில்லை . பிராமண துவேஷம் செய்பவர்கள் நினைக்கிறார்கள்// //
பார்ப்பனர்களோ, அல்லது வேறு எந்த ஒரு இனமோ - பிறப்பிலேயே அறிவுத்திறனுடன் பிறப்பது இல்லை. மரபியல் ரீதியில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே.
அவரவருக்கு கிடைக்கும் வாய்ப்பு, வாழும் சூழல் போன்றவையும் - அவரவரின் சொந்த உழைப்பு மற்றும் தனது இலக்கில் ஆர்வம் போன்றவையும்தான் அறிவாளியையும் வெற்றியாளனையும் திறமையாளனையும் உருவாக்குகிறது.
எனவே, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து, பெற்றோர் மற்றும்சுற்றத்தாரின் கல்வி மற்றும் அதிகாரப்பதவிகள், தனக்கு கிடைக்கும் நட்புவட்டம், தான் வாழும் இடம் (நகரம்/கிராமம்), அதிகாரத்தில் உள்ளவர்களுடனான தொடர்பு, தனக்கு பயன் தரும் வகையிலான அரசின் கொள்கை - இவற்றையெல்லாம் பயன்படுத்தும் தன்னார்வம் போன்றவையே திறமையாளனை உருவாக்குகின்றன.
இவை எதுவும் இல்லாதவகளில் ஒருசிலர் கூட தனது கடின உழைப்பின் மூலம் அறிவாளியாக, திறமையாளனாக உருவெடுக்க முடியும்.
மொத்தத்தில் - எந்த ஒரு இனமும் இயல்பிலேயே அபார அறிவுத்திறனுடன் இல்லை. இந்த விடயத்தில் எல்லோரும் சமமே.
கருனாநிதியும் ஜெயலலிதாவும் கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்தவர்களுக்கு சர்ச் கட்ட பட்டா வழங்குவது முதல் சலுகைகள் பல வாரி வழங்குவதாக மண்டியிட்டு முழங்கியிருப்பதை பற்றி தங்கள் கருத்து?
/They are genetically superior people. Like Jews, they are the 'Chosen People' of God/
தீண்டாமையின் தொடக்கப்புள்ளிக்கு வந்து விட்டீர்கள். அடுத்து...பிராமணர்கள் பிரம்மனின் தலையிலிருந்து வந்தவர்கள்...என்று ஆரம்பிக்க வேண்டியதுதானே...!
//எனக்குத் தெரிந்து பல பிராமண குடும்பங்களின் குல தெய்வங்கள் எல்லை தெய்வங்களே.//
வழி மொழிகிறேன்
இந்த குலதெய்வ வழிபாட்டை இன்னும் தொடர்பவர்கள் ஏராளம். வீட்டில் எந்த நல்ல காரியம் நடக்க இருந்தாலும் முதலில் குல தெய்வ வழிபாட்டை செய்வதை பலரும் இன்னும் வழக்கத்தில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இருக்கிறோம்.
//துக்ளக் பத்திரிக்கையின் வருங்கால எடிட்டர்//
@ டோ. ராகவசாமி... சீ... இல்லை @டோண்டு ஐயா:
மெய்யாலுமா தலீவா? சோவுக்குப் பிறகு டோ. ரைமிங் நல்லாகீதுபா!!
மரபியல் ரீதியில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே."
உண்மை...
ந்ம்மை போன்றவர்கள் அப்படித்தான் நினைக்கிறோம்.
ஆனால் தீவிர பிராமண துவேஷத்தில் இருப்பவர்கள், பிராமணர்களை பார்த்து மனதளவில் மலைக்கிறார்கள்..
தங்களுக்கு சொந்த வேலை , அவசிய வேலை என்றால் பிராமணர்களையே பயன்படுத்துகிறார்கள்.. அவர்கள் ஆலோசனையை முக்கியமாக நினைக்கிறார்கள்..
@பார்வையாளன்
பார்ப்பன வெறுப்புடன் பலர் இருப்பதாக நான் நம்பவில்லை. பகுத்தறிவு பேசுவது என்பது பார்ப்பன எதிர்ப்பு என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று, எல்லோரும் அல்லது பெரும்பாலானோர் 'பார்ப்பனர்களைப் பார்த்து மனதளவில் மலைக்கிறார்கள்' என்றும் கருத முடியாது.
அதேசமயம் ஒருசிலர் "பார்ப்பனர்களைப் பார்த்து மனதளவில் மலைக்கிறார்கள். தங்களுக்கு சொந்த வேலை, அவசிய வேலை என்றால் பிராமணர்களையே பயன்படுத்துகிறார்கள்.. அவர்கள் ஆலோசனையை முக்கியமாக நினைக்கிறார்கள்" என்பது உண்மையாக இருக்கலாம்.
இதுவும் ஒருவகையான மூடநம்பிக்கையே தவிற வேறு அல்ல. அதாவது, 'பார்ப்பனர்களைப் பார்த்து மனதளவில் மலைக்கிறவர்கள் பகுத்தறிவுவாதியாக வேடம் போடுகிறார்கள்' என்று கருதலாம்.
"மரபியல் ரீதியில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே" என்பது குறித்து விரிவாக அறிய பின்வரும் நூலைப் படிக்கவும்:
THE GENIUS IN ALL OF US
What science and super-achievers teach us about human potential
– by David Shenk
http://geniusblog.davidshenk.com/
//இந்த குலதெய்வ வழிபாட்டை இன்னும் தொடர்பவர்கள் ஏராளம். வீட்டில் எந்த நல்ல காரியம் நடக்க இருந்தாலும் முதலில் குல தெய்வ வழிபாட்டை செய்வதை பலரும் இன்னும் வழக்கத்தில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இருக்கிறோம். ///
முற்றிலும் உண்மை. தினமுமே முதலில் எங்கள் குல தெய்வமான பெரியாண்டவரை வணங்கிவிட்டுத்தான் மற்ற வேலை. இது எனது தந்தையிடம் இருந்து நான் கற்றது. இன்றும் தொடருகிறது
Some of 'Good' Works done by Current DMK Govt!!
சென்னை மாநகர காவல்துறையினருக்கு உணவுப்படி மிகக் குறைவாக இருக்கிறது என்று நீண்ட காலமாக ஒரு புலம்பல் இருந்தது. ஒரு வழியாக, இது முதல்வர் கவனத்துக்கு போக, உணவுப்படியை 80லிருந்து 100 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியானது. ஆனால், மாதத்தில 25 நாட்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்த உணவுப்படியை, 20 நாட்களாக குறைத்து விட்டார்கள்.
மிகைப்பணி ஊதியத்தை 150 ரூபாயிலிருந்து 200 ரூபாயா உயர்த்திவிட்டதாக அறிவித்தார்கள். அதுவும் அறிவிப்போடு நின்று போனது. வாரத்துக்கு ஒரு நாளைக்கு கிடைக்கும் மிகைப்பணி ஊதியம், கடந்த ஜூலை மாசத்திலேயிருந்தே காவலர்களுக்கு வரவில்லை.
//பகுத்தறிவு பேசுவது என்பது பார்ப்பன எதிர்ப்பு என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.//
இங்கே பகுத்தறிவோடு கொடுக்கபப்டும் பின்னூட்டங்கள் பகுத்து அறிவதா பகுத்து வருப்பதா என்பதை புரிந்து கொள்ளும் பகுத்தறிவு வாசிப்பவர்களுக்கு இருக்கிறது.
உச்சரிப்பு குறித்த உங்கள் விளக்கம் உங்களுக்கு விளங்கினால் சரி.
பல வருடங்கள் முன்பு வரை வெளி மாநிலத்தவர்கள் தமிழில் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்துக்கள் இல்லையே என்று கிண்டல் செய்யும் போது, நான் கூறுவது குறைவான எழுத்துக்களுடைய நிறைவான மொழி தமிழ். மேலும் எழுத்துக்கள் குறைவாக இருப்பதால் படிக்கவும் எளிதாக இருக்கும். அவர்கள் அதை ஏற்க மறுப்பார்கள்.
ஆனால் என் மகனுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் போது தான் இது எனக்கு சரியாகப் புரிந்தது. எனது கொஞ்சம் தமிழ் அறிவு ஆர்வம் குறித்து யோசித்த போது அதற்கு பாடப் புத்தகம் தாண்டிய என் வாசிப்பு ஒரு காரணம் என்றே தோன்றியது. இன்றைய தலைமுறை தமிழை வாசிக்க எழுத விரும்புவதில்லை. அதை ஒரு பாடமாக மட்டுமே காண்கிறார்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இப்போ பாட புத்தகம் தாண்டிய வாசித்தலை தொலைக்காட்சியும் கணினியும் ஆக்ரமித்தாயிற்று . அடுத்த தலைமுறைக்கு தமிழை சுவாரஸ்யமாக்க என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே.
தமிழ் மீதான ஆர்வம் என்பதும் வட மொழி பயம் என்ற கண்ணாடி வழி பார்த்து தமிழ் வளர்க்க முயற்சி செய்தல் என்பதற்கும் அடிப்படை வித்யாசங்கள் இருக்கு. வட மொழி எழுத்துக்கள் வந்து தமிழை சிதைக்கும் என்றால் அது ஏற்கனவே சிதைந்த மொழி தான்.
அப்போ முதலில் செய்ய வேண்டியது தமிழை சுத்தப் படுத்துதல். அப்போ நிறைய பேரின் பெயரையும் மாற்றி வைக்க வேண்டி வரும்.
தமிழுக்கு இன்றைய எதிரி ஆங்கிலம் தான் என்பது தெரிந்தும் தெரியாதது போல் எத்தனை நாள் அரசியல் செய்வீர்களோ
virutcham said...
// //வெளி மாநிலத்தவர்கள் தமிழில் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்துக்கள் இல்லையே என்று கிண்டல் செய்யும் போது// //
எந்த ஒரு மொழியிலும் மற்றொரு மொழியின் வார்த்தைகள் அனைத்தையும் 'உள்ளது உள்ளபடி' வாசிக்க போதுமான எழுத்துக்கள் இருக்காது. வெளி மாநிலத்தவர்களுக்கு தேவையான எழுத்துகள் தமிழில் இல்லை என்பது தமிழனது சிக்கல் அல்ல.
தமிழின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு மற்ற மொழிகளில் எழுத்துக்கள் இல்லை என்று மற்றவர்கள் கவலைப்படாதபோது - மற்ற மொழிகளின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு தமிழில் எழுத்துக்கள் இல்லை என்று தமிழர்கள் எதற்காக கவலைப்படவேண்டும்?
வெறும் 26 எழுத்துக்களுடன் ஒரு மொழி உலகையே கட்டி ஆளும்போது - தமிழ் மொழியில் போதுமான எழுத்துக்கள் இல்லை என்பது கேலிக்கூத்து.
தமிழ் மொழியில் 'தமிழ் வார்த்தைகள்' அனைத்தையும் எழுத போதுமான எழுத்துக்கள் உள்ளன. கூடுதல் எழுத்து எதுவும் 'தமிழுக்கு' தேவையே இல்லை.
கூடுதல் எழுத்துக்கள் தேவை என்கிற கோரிக்கை, வேற்று மொழி சொற்களை எழுதுவதற்காகத்தான் முன்வைக்கப்படுகிறது. எனவே, தமிழ் ஒரு குறையுள்ள மொழி என்கிற வாதமே ஒரு கட்டுக்கதை.
"தமிழுக்கு இன்றைய எதிரி ஆங்கிலம் தான்" என்கிற உங்களது கருத்தை, ஆம் அதுதான் முதன்மையான எதிரி என்கிற வகையில் நான் வழிமொழிகிறேன்.
தமிழகத்தில் "தூயதமிழ்" என்று சொல்லி அரசியல் நடத்தும் தலைவர்களையு்ம் அவர்களின் தொண்டர்களையும் பாருங்கள். தலைவர்களின் பிள்ளைகள் இலண்டன் பொருளாதாரக் கல்விக்கூடத்தில் (London School of Economics) படிப்பார்கள். பேரன் பேத்திகள் இந்தியும் ஆங்கிலமும் ஃபிரெஞ்சும் படிப்பார்கள். மகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருப்பார். பெயர்களும் தமிழில் இருக்க மாட்டா. உறவினர் பிள்ளைகள் அமெரிக்காவில் படிப்பார்கள். கோடிகளில் தொழில் செய்வார்கள். தொழில் நிறுவனத்தில் நிர்வாகப் பணிபுரிவோர் வடமாநிலத்தவர். கேட்டால் அரசியலையும் வணிகத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பர்.
ஆனால் தொண்டன் பிள்ளைகள் தமிழ்ப் பெயர் தாங்கி வாழ்வர். தமிழ் மட்டுமே படிப்பர். தமிழகத்தில் சரியான வேலை கிடைக்காது. தமிழகம் தாண்டிப் போகவும் முடியாது. அவர்களுக்கு பிற மொழிகளையும் படித்தவனே உன் எதிரி என்று அடையாளம் காட்டிச் சீரழிப்பர்.
இந்தத் தொண்டர்களும் அதை கேள்வி கேட்காது அப்படியே ஏற்பதுவே பகுத்தறிவு என்று தலைவனின் சரக்கைக் கூவிக் கூவி விற்பர்.
சற்றே சிந்தித்தால் அத்தகைய தலைவர்கள் இவர்களை அரசியல் இலாபத்திற்குத் தவிர வேறேதற்கும் பயன்படுத்துவதில்லை என்பது தெளிவாகும். தெளிவாகச் சிந்திக்கத் தெரிந்தால் தானே!!
hmsjr said...
// //இந்தியும் ஆங்கிலமும் ஃபிரெஞ்சும் படிப்பார்கள். மகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருப்பார். பெயர்களும் தமிழில் இருக்க மாட்டா. ....ஆனால் தொண்டன் பிள்ளைகள் தமிழ்ப் பெயர் தாங்கி வாழ்வர். தமிழ் மட்டுமே படிப்பர். தமிழகத்தில் சரியான வேலை கிடைக்காது. தமிழகம் தாண்டிப் போகவும் முடியாது. // //
மிகத்தவறான புரிதல்.
1. இந்தி, ஆங்கிலம், ஃபிரெஞ்சு எந்த ஒரு மொழியையும் எவரும் படிப்பதை எவரும் எதிற்கவில்லை. தமிழை கட்டாயம் படிக்கவேண்டும் என்பதே கோரிக்கை. இது மற்ற மொழிகளைப் படிப்பதற்கு எந்த விதத்திலும் தடையாகாது. அய்யமென்றால் பன்மொழி அறிஞர் டோண்டு அவர்களிடம் கேட்கவும்.
2. தாய்மொழியை படிப்பதாலோ, தாய்மொழி வழியே படிப்பதாலோ வேலை கிடைக்காது, வேறு நாடுகளுக்கு போகமுடியாது என்பது உளறல். செர்மன் நாட்டினர், சப்பான் நாட்டினர், ஃபிரான்சு நாட்டினர் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டுவது எப்படி?
3. பெயர் என்ன மொழியில் இருக்கிறது என்பதற்கும் மொழி அறிவிற்கும் தொடர்பேதும் இல்லை.
//"தமிழுக்கு இன்றைய எதிரி ஆங்கிலம் தான்" என்கிற உங்களது கருத்தை, ஆம் அதுதான் முதன்மையான எதிரி என்கிற வகையில் நான் வழிமொழிகிறேன்.//
நல்லா வழி மொழிஞ்சீங்க போங்க.
சமஸ்க்ருத போபியா பீணிக்கப்பட்டவர்கள்
கார்பொரேட் , கம்பெனி, விமானம், ரயில்வே, சிக்னல், தீபம், ராஜா, பஸ், சார், மோட்டார் வாகனம் இப்படி ஒரு பாட்டியல் போட்டு இதில் எதெல்லாம் தமிழ் என்று ஒரு முடிவுக்கு வந்து இனிமே தமிழல்லாத எழுத்துக்களை பேசவோ எழுதவோ கூடாது. மீறினா தண்டம் என்று ஒரு அறிவிப்பை விடுக்கலாம்.
மேலும் அதை இன்னொரு மொழியில் எழுத நேர்ந்தாலும் தமிழ் சிதைவுறாமல் இருக்க வேண்டும் என்றும் கட்டளை இடலாம். உதாரணம் ராசா. இதை என்றே ஆங்கிலத்திலும் rasa எழுதினால் எல்லா தரப்பினரும் அப்படியே உச்சரிப்பார்கள் இல்லையா
virutcham said...
// //கார்பொரேட் , கம்பெனி, விமானம், ரயில்வே, சிக்னல், தீபம், ராஜா, பஸ், சார், மோட்டார் வாகனம் // //
நிறுவகம், நிறுமம், வானூர்தி, தொடர்வண்டி, சுட்டுக்குறி, விளக்கு, ராசா, பேருந்து, அய்யா, தானியங்கி ஊர்தி
இதுக்கெல்லாம் தமிழ் இருக்கானு கேட்கலை. இதெல்லாம் இப்போ தமிழ் ஆகி விட்டதானு கேட்டேன். எந்த கிரந்த எழுத்து உதவியும் இல்லாமல் இப்படி ஏற்கனவே எழுதிக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதை கொஞ்சம் நினைவு கூர்ந்தேன்.
அது சரி வான ஊர்தி என்றால் வானத்தில் ஊர்ந்து செல்லும் எல்லா ஊர்திகைளும் குறிக்காதா?
சென்னை வான ஊர்தி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் என்று தான் பெயர் வைக்கப் பட்டு இருக்கிறதா? எனக்குத் தான் தெரியலையா?
ராசா இனிமேல் ஆங்கிலத்திலும் Rasa தான் என்று ஒரு போராட்டம் நடத்தினால் என்ன?
ஒரு ஒரிலே ஒரு ராசா இருந்தாராம். ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தாராம்.
எனக்குப் புரிந்த வித்யாசம் ராசா ஒரு தாய் செல்லமாக அழைப்பது போல் இருக்கும்.
ராஜா - ஒரு ராஜ்ஜியத்தை ( ராசியத்தை ???) நாட்டை ஆளும் ஆளுமையை குறிக்கும்.
ராஜாவை ராசான்னு எழுதினா தமிழ் ஆகிவிடும் என்றால் கார்பொரேட் கூடத் தான் தமிழ். அதுக்கு எதுக்கு நிறுவகம் என்று ஒரு தமிழாக்கம் ?
விருட்சம் அய்யா,
(அய்யா அல்லது ஐயா - எது சரி ?)
ராஜாவை ராசா என்று எழுதினால் மட்டும் இவ்வார்த்தை வட மொழி இல்லை என்று ஆகி விடுமா?
A RAJA வை ஆண்டிமுத்து அரசர் என்று எழுதினால், சட்டப்படி செல்லாது.
DR . ராமாதாசை மாலடிமை என்று கூற ஆரம்பித்து, இடையிலேயே விட்டுவிட்டார்கள்.
ரோஜாவை ரோசா என்று எழுதினால் அது எழுத்து மாற்றமேயன்றி மொழி மாற்றமில்லை என்று
ஒரு முறை வைரமுத்து கூறியிருக்கிறார்.
எனவே, கார்பொரேட் என்று எழுதுவதே போதுமானது.
@virutcham
ராசா என்பது ஒரு சிறப்புப்பெயர்ச்சொல் (Proper Noun) - எந்த மொழியில் எழுதினாலும் அது அதுவேதான். மொழிக்கேற்ப வார்த்தை மாறாது.
சிறப்புப்பெயர்ச்சொல் உச்சரிப்பை மொழிக்கேற்ப மாற்றுவது ஒரு உலக வழக்கம். லக்ஷ்மண் என்பதை கம்பர் இலக்குவன் என்றதுபோல, பழனியப்பன் சிதம்பரம் என்பதை வட இந்தியர்கள் பலனியப்பன் சிதம்பரம் என்பது போல - ராஜாவை தமிழில் ராசா என்றுதான் எழுதமுடியும். ஏனெனில் "ஜா" தமிழ் எழுத்து அல்ல.
"கார்பொரேட்" என்பது பொது பெயர்ச்சொல் (Common Noun) - இதனை வேற்றுமொழியில் மொழியாக்கம் செய்ய முடியும். எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள் - அல்லது இதையே ஒரு கேள்வியாக திரு. டோண்டு அவர்களிடம் கேளுங்கள்.
Proper Nouns - Proper nouns are nouns that refer to specific entities. Writers of English capitalize proper nouns like Nebraska, Steve, Harvard, or White House to show their distinction from common nouns.
Common Nouns - Common nouns refer to general, unspecific categories of entities. Whereas Nebraska is a proper noun because it signifies a specific state, the word state itself is a common noun because it can refer to any of the 50 states in the United States. Harvard refers to a particular institution of higher learning, while the common noun university can refer to any such institution.
@ அருள்:
மோட்டார் என்பதைக் குறிக்கிம் தமிழ்ச்சொல் விசைப்பொறி, இயக்கி என்பன. தானியங்கி என்பது Auto என்பதைக் குறிப்பது! நிற்க.
//தலைவர்களின் பிள்ளைகள் இலண்டன் பொருளாதாரக் கல்விக்கூடத்தில் (London School of Economics) படிப்பார்கள்.... உறவினர் பிள்ளைகள் அமெரிக்காவில் படிப்பார்கள். கோடிகளில் தொழில் செய்வார்கள். தொழில் நிறுவனத்தில் நிர்வாகப் பணிபுரிவோர் வடமாநிலத்தவர். கேட்டால் அரசியலையும் வணிகத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பர்.//
இந்தக் கூற்றை வசதியாக விட்டுவிட்டீர்களே!
//A RAJA வை ஆண்டிமுத்து அரசர் என்று எழுதினால், சட்டப்படி செல்லாது.//
இப்படியும் செய்திகள் செய்தி ஏடுகளில் தரப்படலாம்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த நிர்வாக ஒழுக்கக்கேடு தொடர்பான வழக்கெழுவினாவில் (issue/problem) (பிரச்சினை என்பது வடமொழிச் சொல்லின் மரூஉ) குற்றம் சாட்டப்பட்டு பொறுப்பு நீத்த மைய அரசின் தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து இராசா மைய விசாரணை அமைவனத்தின்(CBI) அலுவலகத்துக்கு உசாவுதலுக்கு (enquiry) அழைக்கப்பட்டமை நாமறிந்ததே. முதல் நாள் உசாவல் முடிந்தபிறகு வெளிவந்த அமைச்சர் புன்னகைத்தபடி குழுமியுருந்த செய்தியாளர்களிடம் அளவளாவினார். இரண்டாம் நாள் உசாவலின் முடிவில் மைய விசாரணை அமைவனத்தின் அலுவலகத்துக்கு வெளியே வந்த அமைச்சர் இறுகிய முகத்துடன் தமது மகிழ்வுந்தில்(car) ஏறிச் சென்று விட்டார். அவர்தம் சாதி குறித்து எடுத்துச் சொல்லியும் விசாரணை அலுவலர்கள் அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் விடையளித்தல் இன்றியமையாதது என்று கூறிவிட்டதே அமைச்சரின் துயரத்துக்குக் காரணம் என்று கமுக்கமாய்த் தகவலாதாரம் தருவோர் தெரிவித்தனர்.
பெயர்ச்சொல், சிறப்புப் பெயர்ச்சொல் என்று உதாரணங்கள் சொல்வது இருக்கட்டும். நான் எடுத்துக் கொண்டது உதாரணங்கள் தான்.
சமஸ்க்ரித போபியா இல்லாமல் இருந்தால் நீங்கள் கிரந்த எழுத்துக்கள் இல்லாமலே இன்று ஆங்கிலம் தமிழில் கலந்து விட்டதைப் பற்றியும் பேசி இருப்பீர்கள். நான் கேட்பது தமிழ் காவலர்கள் என்ன செய்கிறீர்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அனுமதித்துக் கொண்டு என்று தான்.
புதிய கிரந்த எழுத்துக்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றிய ஒரு முடிவுக்கு வரும் முன் முதலில் தமிழில் கிரந்தங்கள் இல்லாமலேயே பிற மொழிகளைக் கலக்க முடியும் என்பதை நினைவில் கொண்டு இதை மொழிக் கலப்பு என்ற நோக்கில் அணுகாமல் வேறு நியாமான காரணங்கள் இருக்கா என்று பார்த்து அதை முன் வைக்கலாமே. கொஞ்சம் பகுத்தறிவோடு யோசிக்கலாமே.
// //மோட்டார் என்பதைக் குறிக்கிம் தமிழ்ச்சொல் விசைப்பொறி, இயக்கி என்பன. தானியங்கி என்பது Auto என்பதைக் குறிப்பது!// //
நீங்கள் சொல்வது சரிதான். 'மோட்டார் வாகனம்' என்பதற்கான தமிழ்வார்த்தை - இயக்கு ஊர்தி என்பதுதான்.
எனினும் 'மோட்டார் வாகனம்' எனும் சொல் "automobile" என்பதை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இதன் தமிழ் வார்த்தைதான் தானியங்கி ஊர்தி.
hmsjr said...
// //இப்படியும் செய்திகள் செய்தி ஏடுகளில் தரப்படலாம்....
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த நிர்வாக ஒழுக்கக்கேடு தொடர்பான வழக்கெழுவினாவில் (issue/problem) (பிரச்சினை என்பது வடமொழிச் சொல்லின் மரூஉ) குற்றம் சாட்டப்பட்டு பொறுப்பு நீத்த மைய அரசின் தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து இராசா மைய விசாரணை அமைவனத்தின்(CBI) அலுவலகத்துக்கு உசாவுதலுக்கு (enquiry) அழைக்கப்பட்டமை நாமறிந்ததே. முதல் நாள் உசாவல் முடிந்தபிறகு வெளிவந்த அமைச்சர் புன்னகைத்தபடி குழுமியுருந்த செய்தியாளர்களிடம் அளவளாவினார். இரண்டாம் நாள் உசாவலின் முடிவில் மைய விசாரணை அமைவனத்தின் அலுவலகத்துக்கு வெளியே வந்த அமைச்சர் இறுகிய முகத்துடன் தமது மகிழ்வுந்தில்(car) ஏறிச் சென்று விட்டார்.// //
வேற்று மொழி சொல் இல்லாத மொழி என்று உலகில் எதுவும் இல்லை. உலகமொழிகளுக்கெல்லாம் தமிழும் ஏராளமான சொற்களை வழங்கியிருக்கிறது.
எடுத்துக்காட்டு - அரிசி: ENGLISH: rice, ARABIC: 'arz, DANISH: ris, DUTCH: rijst , FINNISH: riisi, FRENCH: riz , GERMAN: Reis , GREEK: oríza, HEBREW: órez, HUNGARIAN: rizs, ITALIAN: riso, NORWEGIAN: ris, POLISH: ryż, PORTUGUESE: arroz , RUSSIAN: ris, ROMAN: riža, SLOVENE: riž , SPANISH: arroz , SWEDISH: ris எல்லாமொழிகளிலும் 'அரிசி' என்பது அவரவர் மொழிக்கேற்ப மாறியுள்ளதைக் கவனிக்கவும்.
எனவே, வேற்று மொழிச்சொல்லுக்கு மாற்றாக, ஒரு மொழியில் வழக்கத்தில் ஏற்கனவே உள்ள சொல்லை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு - பேருந்து (பஸ்).
தமிழின் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை - இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகள் வேற்று மொழிச்சொற்களை தவிற்க நினைத்தால் - அந்த மொழிகளே வழக்கொழிந்து போகும்.
உங்களது கருத்தை பின்வருமாறும் எழுதலாம்:
"அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான சிக்கலில் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகிய நடுவண் அரசின் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா நடுவண் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டது நாமறிந்ததே. முதல்நாள் விசாரணை முடிந்து வெளியே வந்த அமைச்சர் புன்னகைத்தபடி செய்தியாளர்களிடம் பேசினார். இரண்டாம் நாள் விசாரணையின் முடிவில் நடுவண் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் இறுகிய முகத்துடன் தமது மகிழுந்தில் ஏறிச் சென்றுவிட்டார்."
virutcham said...
// //புதிய கிரந்த எழுத்துக்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றிய ஒரு முடிவுக்கு வரும் முன் முதலில் தமிழில் கிரந்தங்கள் இல்லாமலேயே பிற மொழிகளைக் கலக்க முடியும் என்பதை நினைவில் கொண்டு இதை மொழிக் கலப்பு என்ற நோக்கில் அணுகாமல் வேறு நியாமான காரணங்கள் இருக்கா என்று பார்த்து அதை முன் வைக்கலாமே. கொஞ்சம் பகுத்தறிவோடு யோசிக்கலாமே.// //
தமிழில் கிரந்த எழுத்துக்கள் வேண்டும் என்பதற்கு திரு. டோண்டு அவர்கள் கூறும் காரணம் - சமற்கிருத மந்திரங்களை சரியாக உச்சரிக்க அவை தேவை என்பதுதான். சமற்கிருத மந்திரங்களை சரியாக உச்சரித்துதான் ஆகவேண்டும் என்பவர்கள் - சமற்கிருதத்தை கற்கவும், கிரந்த எழுத்துக்களை அவர்கள் மட்டும் தனியாக கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. யாருக்கு பசிக்கிறதோ அவர்கள்தான் சாப்பிட வேண்டும். சிலருக்கு பசிக்கிறது என்பதற்காக ஊரில் எல்லோரும் சாப்பிட முடியாது.
ஆக, தமிழுக்கோ, தமிழனுக்கோ இந்த காரணம் கட்டாயமானது அல்ல. செருப்புக்காக காலை வெட்ட தேவையில்லை.
எனவே, "வேறு நியாமான காரணங்கள் இருக்கா என்று பார்த்து" அதை நீங்களே முன் வைக்கலாமே?
Post a Comment