ஞாநியை கே.பி. சுனில் பேட்டி கண்டதன் 9 வீடியோக்கள்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஆதியிலிருந்தே ட்ரேஸ் செய்து ஞாநி அளித்த தகவல்கள் இவற்றில் காணப்படுகின்றன.
அரசுக்கு வருவாய் இழப்பு என்பது அனுமானத்தின் அடிப்படையில் வந்தது என்று ராஜா கூறிவருவதை ஞாநி அழுத்தமான வாதங்களால் தகர்க்கிறார். ஒரு குறைந்த விலையில் லைசன்சுகளை பெற்றதுமே சம்பந்தப்பட்ட கம்பெனிகளது ஷேர்களின் விலை பல மடங்கு உயர்ந்ததே ராஜாவின் கூற்றைப் பொய்யாக்குகிறது. ஆனால் அதே சமயம் லைசன்சுகளை முதலில் வந்தவர்களுக்கு அளிப்பதாகக் கூறியதிலும் பல தில்லுமுல்லுகள் நடந்திருப்பதை ஞாநியின் பேட்டி கவர் செய்யவில்லை என்பதும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
அழகிரி வீட்டு திருமணத்தில் கலைஞர் குடும்பத்தின் அத்தனை உட்குழுக்களை சார்ந்தவர்களும் மேடையில் நின்று போஸ் கொடுத்த விஷயத்தில் அனைவருமே நடிப்புக்கான ஆஸ்கர் பெறத் தகுதியானவர்கள் என ஞாநி குறிப்பிட்டதும் தமாஷாக இருந்தது.
அதே போல ராசா மட்டுமே ஊழல் செய்திருக்க முடியாது, அவரது கட்சியினருக்கும் கணிசமான பங்குகள் போயுள்ளன என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறிய ஞாநி, ராசாவை இவ்வளவு காலம் காங்கிரசும் பிரதமரும் சகித்துக் கொண்டிருந்ததற்கு ஒரே காரணமாக கூட்டணி தர்மம் என ஜயந்தி நடராஜன் உளறியதை அப்படியே ஏர்றுக் கொண்ட பாவனையில் பேட்டி அமைந்திருந்தது என்பதும் ஏமாற்றமளிக்கிறது.
காங்கிரசுக்கும் ஊழல் பணத்தில் பங்கு போயிருக்கும் என்னும் எண்ணத்தைக் கூட வெளியிடாது சுனிலும் ஞாநியும் பூசி மெழுகியது ஆயாசத்தையே வரவழைக்கிறது. அதிமுக வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேரும் வாய்ப்பைக் கெடுக்கக் கூடாது என்பதற்காகவே ஜெயா டிவி அடக்கி வாசித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் ஞாநிக்கு என்ன கம்பல்ஷன் அதை மறைப்பதில்? ஒரு வேளை அது பர்றியும் அவர் பேச விரும்பியிருக்கலாம், ஆனால் அலவ் செய்யப்படவில்லை என்றால் அந்த விஷயத்தை அவர் கல்கியில் வெளியாகும் தனது ஓ பக்கங்களில் குறிப்பிடுவாரா என்பது இப்போது எனக்குள் எழும் முக்கியக் கேள்வி.
இந்தப் பேட்டி வெளியான தேதி வீடியோக்களில் காணப்படவில்லை என்பதை ஒரு தகவல் குறைபாடாகவே காண்கிறேன்.
இந்த விஷயத்தில் இன்னும் பலருடைய பேட்டிகளும் வந்துள்ளன, உதாரணத்துக்கு ஜெயலலிதா, சோ, வைக்கோ, தா. பாண்டியன், சுப்பிரமணியன் சுவாமி, பிரகாஷ் காரத் ஆகியோர்.
சோவின் பேட்டியை நான் ஏற்கனவே கவர் செய்து விட்டேன்.
அடுத்த பதிவில் சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டியா அல்லது பிரகாஷ் காரத்தின் பேட்டியா என்பதைப் பார்க்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
9 hours ago
4 comments:
இதைப்போன்ற வீடியோ பதிவுகளை எனது கணினியில் பார்க்கும்போது சில நிமிடங்கள் ஓடுகிறது; பின் buffer காத்திருத்தல்; பின் சில நிமிட ஓட்டம். இது அலுப்பாக உள்ளது; உருப்படியாக, தொடர்ச்சியான ஆடியோவும் கேட்பதில்லை. என்ன செய்தால் தொடர்ச்சியான காணொளி கிடைக்கும்.
-கண்ணன்.
விஜயகாந்த் ஒரு கிறித்துவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!
http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_07.html
//அவர் இதை ஒரு தொடராகஅடுத்த பதிவில் சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டியா அல்லது பிரகாஷ் காரத்தின் பேட்டியா என்பதைப் பார்க்க வேண்டும்.
\\
பார்ப்போம்
//உருப்படியாக, தொடர்ச்சியான ஆடியோவும் கேட்பதில்லை. என்ன செய்தால் தொடர்ச்சியான காணொளி கிடைக்கும்.//
முதலில் சுட்டியை க்ளிக் செய்யவும். அது ப்ளே ஆரம்பித்ததுமே ஸ்டாப் பட்டனை க்ளிக் செய்யவும். இப்போது டௌன்லோடிங் மட்டிஉம் நடக்கும்.
அதற்கு நேரம் அளித்து வேறு பக்கங்களில் மேயவும்.
பிறகு சில நிமிடங்கள கழித்துத் திரும்பி வந்தால் கணிசமான டேப் டௌன்லோட் ஆகியிருக்கும். அப்போது ப்ளே செய்தால் விடாமல் பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment