நக்கீரன் பாண்டியன்
கேள்வி-1. நடிகர் விஜய்யின் திடீர் அம்மா(ஜெ) பாசம் யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்?
பதில்: நடிகர் விஜய் இன்னும் தன்னை ப்ரூவ் செய்யவில்லை. தேர்தலில் நிற்கட்டும், பிறகு தெரிந்து கொள்வோம் அவர் வல்லவரா அல்லது வெத்துவேட்டா என்று.
கேள்வி-2. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் அடுத்த வால் வைமேக்ஸ் விவகாரம் எனும் வரும் தகவல்களை பார்த்தால்?
பதில்: அது பற்றி இங்கு விவரமாக பதிவு இட்டிருக்கிறார்கள்.
ராசா கையை வச்சா எதுவும் உருப்பட்டதில்லைங்கறது நிரூபணமாகி விடும் போலிருக்கே. மேற்கு வங்காளத்தை சேர்ந்த மார்ச்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரசாந்த் சாட்டர்ஜிக்கு பாராட்டுகள். மேலே உள்ள பதிவில் உள்ள கிண்டலாக மஞ்சத்துண்டு என்ன சொல்லக்கூடும் என கற்பனை செய்து இடப்பட்ட ஒரு பின்னூட்டத்திலிருந்து சில வரிகள்:
"தலித்துகளை அவமானப் படுத்த ஆரியர்களின் இன்னும் ஒரு முயற்சி தான். வங்காளத்திலே பானர்ஜி, சாட்டர்ஜி,முகர்ஜி, காங்குலி என்பன பார்ப்பனீய டைட்டில்கள் என வங்காளத்தில் சாதிகள் என்ற நூலிலே பல ஆண்டுகளுக்கு முன் படித்த நினைவு. இந்த வைமாக்ஸ் பற்றி கிளப்பி இருப்பதும் ஒரு சாட்டர்ஜி தான். மிகத் திறமையாகப் பணியாற்றி நல்ல பெயர் எடுத்த திராவிட தலித்துக்கு இழுப்பெயர் தேடித் தர இன்னும் ஒரு பூணூலும் வந்து விட்டார். ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட ஆரியர் செயல்களிலே" .
இதையே நிஜமாவாகவே மஞ்சத் துண்டு சொன்னாலும் வியப்படைவதற்கில்லை.
கேள்வி-3. காலம் கடந்து நடத்தப் படும் சோதனைகள் கண் துடைப்பு அல்ல என சொல்வதை பார்த்தால்?
பதில்: அப்பா குதிருக்குள் இல்லைன்னு சொல்லற மாதிரியில்லை? ஏம்பா தெரியாமத்தான் கேக்கறேன்? இவ்வளவு மாசமா அமர்க்களம் நடந்துண்டு இருக்கு. மந்திரி பதவியும் பணால் ஆயிடுச்சு. இன்னும் ஆவணங்களை தன் வீட்டில் வைத்திருக்க ராசா என்ன கைநாட்டு கபோதியா?
கேட்பவன் கேனையாக இருந்தா கேழ்வரகில் நெய் வடியுதும்பாங்க, கருணாநிதி நியாயஸ்தர்னும் சொல்லுவாங்க.
கேள்வி-4. இலவச டீவி வேண்டாம் என்று சொன்ன புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் திரு விஜயகுமார் பற்றி?
பதில்: நீங்கள் இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு “கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி, ஃபேக்ஸ் செய்துள்ளது பாராட்டுக்குரியது.
ஆனால் அந்த டிவி உண்மையான அறுதிப் பெறுநர் முத்துவேல் கருணாநிதிக்கு போகாது நடுவிலேயே யாராவது உடன்பிறப்பு அபேஸ் செய்தாலும் அதை தாயுள்ளத்துடன் ரசிப்பார் நமது மாண்புமிகு முதல்வர் என நினைக்கிறேன்.
இல்லை, ஈ.வே.ராமசாமி நாயக்கரின் உண்மையான சீடராக இருந்தால், அந்த டிவிக்கான பணத்தை தன்னிடம் தவறாமல் தருமாறும் ஆணையிடலாம்.
கேள்வி-5. சுப்பிரமணிய சுவாமி தரும் அதிர்ச்சி தகவல்கள் பற்றி?
பதில்: அவை தரும் அதிர்ச்சி தரும் தகவல்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை சுப்பிரமணியன் சுவாமியை கோமாளியாகவே பார்த்தவர்கள் அதிர்ச்சியும் மன உளைச்சலை அடைவதுதான் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் தமாஷ்.
LK
கேள்வி-6. சார், போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து?
பதில்: கமல் என்பவர் ஒரு மாபெரும் கலைஞர். நல்ல திரைப்படங்கள் தருவதற்காக பாடுபடுபவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியில் இருக்கிறார். அதைவிட வேறு என்ன வேண்டும்?
கண்ணன் என்பவனை நம்மவர்கள் எல்லாமாகவும் பார்த்துள்ளோம். அவன் நம் மனத்துக்கு பிடித்த கடவுள். அவனைத் திட்டுபவர்களும்அ கூட் அவனைப் புறக்கணிக்க முடியாது. அவனது ராசலீலை பற்றி கேவலமாக பேசிய வக்கிரம் பிடித்த கிறித்துவ பாதிரியார்கள் அவன் தங்களைப் போலவே ஓரினச் சேர்க்கையிலும் மன்னனாக இருந்திருந்தால் வாழ்த்தியிருப்பவர்களாக இருந்திருக்கும்.
அவர்களது ஜட்ஜ்மெண்டுகளை ஒரு பரிசீலனையும் இல்லாது ஏற்கும் நமது அறிவு ஜீவிகளது போக்கு அவர்களுக்குத்தான் பிரச்சினை. கமலும் அவர்களில் சேர்த்தி. விட்டுத் தள்ளுங்கள்.
கேள்வி-7. வீட்டு வசதி வாரிய ஊழல் பற்றி?
பதில்: இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் தரும், தோண்டத் தோண்ட புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள். வேறென்ன கூறுவது? இந்த டிஸ்க்ரீஷனரி கோட்டா என்பதை ஒழித்துக் கட்ட வேண்டும். அலாட்மெண்டுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தகுதியற்றவருக்கு கொடுத்தால் அவ்வாறு செய்தவருக்கு அரபு நாடுகள்/சீனாவில் உள்ளது போல கல்லால் அடித்து/தலையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தர வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த ரூல்ஸெல்லாம் எனக்குத் தெரியாது என்று திருவாய் மலர்ந்தருளும் வீரப்பாண்டி ஆறுமுகம் போன்ற அடாவடி மந்திரிகளை சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.
எதற்கும் உண்மைத் தமிழன் இட்ட இந்தியாவின் ஊழல்களின் தந்தை கருணாநிதி என்னும் பதிவைப் பார்த்து விடவும்.
மிளகாய் பொடி
கேள்வி-8. யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் சீக்கியர் தானே? பின் ஏன் அவர்கள் டர்பன் அணிவதில்லை?
பதில்: எல்லா சிங்குகளுமே சீக்கியர்கள் அல்ல. எல்லா சீக்கியர்களுமே டர்பன், சிகை அணிவதில்லை. அவ்வாறு அணியாமல் இருப்பவர்களை மௌனா எனக் குறிப்பிடுவார்கள். நீங்கள் சொல்லும் யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் ஆகியோர் எப்படி என்பது எனக்குத் தெரியாது.
கேள்வி-9. டர்பன் என்பதற்கு சரியான தமிழ்ப் பதம் என்ன? தலைபாகை சரியாக இருக்காது என்பது என் எண்ணம்?
பதில்: தலைப்பாக்கட்டுன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன்.
கேள்வி-10. அம்மாவும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி இவர்கள் பக்கம் தானே?
பதில்: ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகமாகும்.
கேள்வி-11. நீங்கள் எந்த கம்பெனி செல்போன் கனெக்சென் வைத்து இருக்கிறீர்கள்?
பதில்: இது என்ன நாட்டுக்கு ரொம்பத் தேவையான விஷயமா என்ன? இருந்தாலும் கேட்டதால் சொல்கிறேன், நான் பாவிப்பது வோடஃபோன். வைத்திருப்பது மிகவும் அடிப்படையான நோக்கியா ஹாண்ட்செட். கேமரா, ப்ளூபெர்ரி போன்றவை சுத்தமாக லேது அந்த ஹாண்ட்செட்டில்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் பிறகு சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
7 hours ago
64 comments:
சார் கையோடு ஒரு கேள்வியும் போட்டு விடுகிறேன். ஐந்து வருடம் கருனாநிதியின் ஆட்சியும் தமிழர்களின் வனவாசமும் முடியும் தருவாயில் கருனாநிதியின் சாதனைகளை (அல்லது ஊழலை) பட்டியலிட முடியுமா? ( உங்கள் கை வலித்தால் என்னை திட்டாதீர்கள்)
1.தயாநிதிமாறன்-மதுரையார் நட்புக்கூட்டணி நிரந்திரமா அல்லது?
2.- மலைவாசஸ்தல ஜாகை மாற்றங்கள்-தமிழக அரசியல் பெரும் புள்ளிகள்- உங்கள் விமர்சனம்?
3.யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி காமராஜ் நேர்மைக்கு வாய்ப்பில்லைதானே?
4.போகிற போக்கை(centarl da increased 18 % for 2010) பார்த்தால்
அரசு ஊழியர் கா(வீ)ட்டில் மட்டும் இனி பண மழையாமே?
5.மென்பொருள் வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்துவிட்டதே-இது தொடருமா?
//கமல் என்பவர் ஒரு மாபெரும் கலைஞர். நல்ல திரைப்படங்கள் தருவதற்காக பாடுபடுபவர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியில் இருக்கிறார். அதைவிட வேறு என்ன வேண்டும்? //
அடாடா என்ன அருமையான பதில்.
மாணவன்: சார், இவன் என்னை அடிச்சி எங்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் புடுங்கிட்டான்.
வாத்தியார்: அவன் கணக்கில நூற்றுக்கு நூறு வாங்கிறவன், என்னமா படிக்கிறவன், அவனைப் போய்.........
ஜாம்பஜார் ஜக்கு பிக்பாக்ட்காரன், கபாலி வழிப்பறிக்காரன் அவனை மாதிரி இவனும்னு விடுப்பா...........
கலைஞரின் பாதிப்பு எல்லா தமிழர்களுக்கும் வந்துட்டுதே!
//மாணவன்: சார், இவன் என்னை அடிச்சி எங்கிட்ட இருந்த பணத்தை எல்லாம் புடுங்கிட்டான்.//
அப்படி கமல் யாரிடமிருந்து என்னத்தை பிடுங்கிட்டார்னு இந்த நையாண்டி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் ஆகியோர் எப்படி என்பது எனக்குத் தெரியாது. //
டோண்டுஜி யுவராஜ் ஒரு மோனா சர்தார், ஜஸ்வந்த் சிங் சர்தார் அல்ல.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
உங்களுடைய மற்ற பதிவுகளை வைத்துப் பார்க்கும் போது இதை நான் விளக்கி தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
தூங்குபவர்களை மட்டுமே எழுப்ப இயலும்.
//தூங்குபவர்களை மட்டுமே எழுப்ப இயலும்.//
அப்படி மெனக்கெட்டு எழுப்பினா என்ன ஏதுங்கற விவரங்களைச் சொல்லணும். ஒரு விஷயத்தைச் சொல்லற நீங்கதான் ப்ரூஃப் தரணும்.
உங்க பதிவுங்களை பார்த்தேன். அவற்றை மட்டுமே வைத்து நீங்கள் வெறுமனே மொக்கை மட்டுமே போடுபவர் எனச் சொல்லிட இயலுமா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவுகள் என்னைப் பொறுத்தவரை வெறும் பொழுது போக்கே. அதில் பெரிதா எதுவும் எழுதவும் இல்லை, எழுதப் போவதாகவும் உத்தேசம் கிடையாது. அதற்கு மொக்கை என்றோ இல்லையென்றோ யாருடைய சர்டிபிகேட்-ம் எனக்கு தேவைப் படவும் இல்லை.பதிவுகள் என்னுடைய நினைவுக் குறிப்பு மட்டுமே.
பின்னூட்டங்கள் இடச் சொல்லியும் ஓட்டுப் போடச் சொல்லியும் பிச்சை கேட்பதும் இல்லை. பின்னூட்டங்களை வாங்கிக் குவித்து ஆவப் போவதும் இல்லை.
அதற்கும் மேலே, என் தளத்திற்க்கு முதலாவதாக ஆட்கள் வருவதே குறைவு தான்.
உங்களுடைய பழைய பதிவுகளில் குறிப்பா தவிர்க்கப் படவேண்டிய நபர்கள் போன்றவை பயனுள்ளவை அந்த தரத்தில் பார்க்கும் போது நீங்கள் புரியாதது போல் நடிப்பதாகவே எனக்குப் படுகிறது.
உங்கள் அளவுக்கு பல தரப்பட்ட விஷயங்களில் எனக்கு ஞானம் கிடையாது.
சும்மா அட்டைக்கத்தி சண்டையிடும் பதிவர்களிடம் விவாதிப்பதில்லை. உங்கள் பதிவை இது வரை அப்படி நினைக்காததே அந்த பின்னூட்டத்திற்கு
காரணம்.
திரு.சோ-வின் மீது எனக்கு மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. அவரால் மட்டும் எப்படி யாருக்குமே சப்பைக் கட்டு கட்டாமல் இத்தனை வருடம் ஒரு பத்திரிக்கை நடத்தமுடிகிறது.
@ ரிஷபன்Meena
கமலுக்கு நான் ஏன் சப்பைக்கட்டு கட்டப் போகிறேன்? அது அவருக்குத் தேவையுமில்லை. என்னைப் பொருத்தவரை கமல் ஒரு மாபெரும் கலைஞர். அவர் படங்கலை காசு கொடுத்து பார்க்கிறேன். கொடுத்த காசுக்கு நல்ல நடிப்பு, தீர்ந்தது விஷயம்.
மற்றப்படி அவரது நம்பிக்கைகள் மற்றும் அவரது செயல்பாடுகள் அவரது தனிப்பட்ட விஷயம்.
அதுவே அவர் அரசியலுக்கு வந்து அதனால் மக்களுக்கு பாதிப்பு வந்தால், அவரை அரசியல்வாதியாக விமரிசனம் செய்து விட்டுப் போகிறேன். இதில் என்ன பிரச்சினை.
அவரது நாத்திகக் கொள்கைகள் மர்றும் கூற்றுகள் என்னை பாதிக்கவில்லை. அவ்வளவுதான் விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
i think there is a conspiracy to nail raja and put all the blame on him so that sonia and karuna and all the others involved can become scot free and claim themselves clean.
//கமலும் அவர்களில் சேர்த்தி. விட்டுத் தள்ளுங்கள்.//
நானும் கமலின் ஆஸ்தான ரசிகன் தான்.. ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை எல்லை தாண்டியதாகவே இருக்கிறது ... விட்டுத் தள்ளுவது கஷ்டம் தான்...
போலி நாத்திகவாதம் கமல் பேசும்பொழுது கண் காட்டி கொடுத்துவிடும்..
//அவரது நாத்திகக் கொள்கைகள் மர்றும் கூற்றுகள் என்னை பாதிக்கவில்லை. அவ்வளவுதான் விஷயம்// அதுதான் விஷயம். நம்மை நேரடியாக பாதிக்காத போது அந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம். இது சராசரி மனித இயல்புதான். ஆனால் கமல் பெரும்பாலும் ஒரு அதிகப்பிரசங்கி அதிலும் இந்து மதம் மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஓவராகவே எரிச்சல் மூட்டுபவர். அந்த மனிதர் மீது சினிமா திறமைகளைத் தவிர வேறு மரியாதையே எனக்கு கிடையாது. கமல் ஒரு அதிபுத்திசாலி அச்சுபிச்சு.
கமல் முடிந்த வரையில் ஐயர்களைக் கிண்டல் செய்வார்.
ஐயங்கார்களை தூக்கி நிறுத்துவார். இப்போது இஸ்லாமியர-
்கள் தன்னை கெரோ செய்கின்றனர் என்றவுடன் திடீர்
என்று தான் தான் நாத்திக கொள்கையைத் தூக்கிப் பிடிப்ப-
து போல் வேடம் போடுகிறார்.
நாத்திகம் பேசுபவர் எதற்கு சிறு தெய்வம் பெரு தெய்வம்
என்று பேச வேண்டும். (விஜய் டிவி பேட்டி)
அந்நிகழ்ச்சியில் பேசியது, இப்போது இந்த கவிதை எல்லாமே
கமலின் மாபெரும் நடிகன் (அப்படியா) என்ற தோற்றத்தில்
கரையும் என்று நான் நினைக்கவில்லை.
கமலின் படங்கள் ஆன்மிகப் படங்களை விட ஆன்மிகத்தை அழகாகவே இது வரை சித்தரித்து வந்திருக்கிறது. அவரது படங்கள் பேசப்படும் அளவு பெரு வெற்றி பெறுவதில்லை என்ற எரிச்சலில் இப்படி இறங்கி விட்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதுவும் தவிர இன்றைய நடுநிலை வாதிகளின் வியாதி அவருக்கும் பிடித்திருக்கிறது.
http://www.virutcham.com/2010/02/பகுத்தறிவு-கமலின்-படங்கள/
(பகுத்தறிவு கமலின் படங்களில் இழையோடும் உள்ளார்ந்த ஆன்மிகம் )
அலைபேசி விலையை வெகுவாக குறைத்து ராசா மக்களுக்கு பெரிய சேவை செய்து இருப்பதாகவும் அவரை வேண்டும் என்றே குற்றவாளியாக்குவதாகவும் இங்கே சில பதிவுலக பிரபலங்கள் எழுதினார்களே. இப்போ அவர்கள் கருத்தில் மாற்றம் இருக்குமா ?
கமல் முடிந்த வரையில் ஐயர்களைக் கிண்டல் செய்வார்
Interesting.
டோண்டு சாரின் பதில் என்ன?
01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?
02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?
03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?
04.எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள் ?
05.எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
06எத்தனை முறை வாக்களித்துள்ளீர்கள்?
07.அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் உண்மையாக வேலை செய்கிறீர்கள்?
08.உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?
09தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செயகேறீர்கள்?
10.எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?
11.எத்தனை மணி நேரம் தொலைக் காட்சி பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?
12.போனவருடம் எத்தனை பேருக்கு புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து அனுப்புநீர்கள்?
13.பாடல்கள் மட்டும் எத்தனை மணி நேரம் கேட்கிறீர்கள்?
14.தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிக்கை படிக்கிறீர்கள்?
15.எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறீர்கள்?
16.தினம் எத்தனை மணி நேரம் பேருந்து,ஈருருளிகளில் பயணிக்கிறீர்கள்?
17. பாடசாலையில் உங்களுக்கு பிடித்த பாடம் எது?
18. இப்போது, தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார்?
@pt
ரொம்பவுமே பெர்சனலான கேள்விகள். அது ஒரு காரணம். மற்றவர்களுக்கு அவற்றை அறிவதில் எந்த ஆர்வமும் இருக்கவியலாது.
ஆகவே பதிலளிக்க இயலாது, மன்னிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எழுதியவர் உங்களை ஒரு ரோல்மாடலாக வைக்க முடியுமா, அல்லது வைத்துக்கொண்டு கேட்டிருக்கிறார். பதில்களைப்படித்தவர்களுள் சிலரும் அப்படியே உங்களை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு.
ஜெயாடிவியில் பேசியவர், சோ ராமசாமியின் ஆத்ம விசிறி, தமிழ்பார்ப்ப்னர்களின் பாதுகாவலர்க்ளுள் ஒருவர், கழகக்குஞ்சுகளின் பரம் எதிரி - என்றெல்லாம் உங்களுக்குத் தோரணைகள் உண்டு. அதை விரும்புவோர் ஏராளம்.
அருள் கூட உங்கள் விசிறிதான். காரணம், நீங்கள் எழுதுவது பல எதிர் எழுத்துகளுக்குத்தூண்டுகோள் மட்டுமல்ல. அவற்றையும் பதிவிடுகிறீர்கள். அந்த வகையில் பலபதிவாளர்களுக்கு ஒரு முன்மாதிரி.
நான் வைணவதைப்பற்றி எழுதும்போது, அதை கிரகித்துக்கொள்கிறீர்கள். rarely interfering. அதிலிருந்து அம்மதத்தைப்பற்றி ஆழமாகத்தெரிகிறதோ, இல்லையே, அம்மதத்தையும் அம்மத்ததைகாக்கத் துடிப்போரையும் நீங்கள் பெரிதும் மதித்து அவர்களின் நன்றிக்கு ஆளாகிறீர்கள்.
எனவே டோண்டு ராகவன் you are a public personality. Answers to such personal queries will not only be interesting; but also, enlightening to persons like pt.
Another important point to note is your answers wont be lies; and they will have been quite practical.
For eg.
For No.1
If you answer it, it will tell us how a man, who is retired to a life of peace free from encumbrances financially, can care for the unfortunate and downtrodden. How much do you put away for them?
For No.3 if your anwser is postive, it will mean you still take care of your health. Physical labour at home is good for all of us. Further, it means you share domestic chores with your life. A role model for all husbands. Tell him whether you share the domestic chores with the housewife?
No.5 is important. Generally, people at your age has less sleep. We cant blame you. It is nature. Have you overcome that reduction?
Also, a good night sleep is a reference to clean conscience. If you have worries and cares, you cant sleep. Tell us how many hours do you sleep, I mean sound sleep.
All questions are important and the answers to them from you more important.
The last qn is asked only to find out whether you still keep up with younger generation; or have become the vile old fool who thinks only about his past and his death.
Who are you? That will come out from the answer to the last qn.
At present, which actress comes in your dream?
pt is waiting. I do want to chuckle.
1 சாரு வின் புத்தக விழ குறித்து உங்கள் கருத்து... இளைஞர்கள் பெருமளவில் திரண்டது தமிழ் இலக்கியத்துக்கு நல்லதுதானே??
2 தமிழின் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கு- உங்கள் பார்வை என்ன?
3 இணையத்தின் வருகை தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது- உங்கள் பார்வை..
4 பிராமணர் அல்லாத ரஜினி ,பிராமணர் போல நடந்து கொள்ள பார்ப்பது.. பிராமணர் இனத்தை சேர்ந்த கமல், பிராமணர் அல்லாதவர் போல்காட்டி கொள்வது- ஒப்பிடுக
5 தொடர்புடைய கேள்வி... இப்படி கமல் போலியாக நடிப்பதால், பிராமணர் அல்லாதாரின் நம்பிக்கையை பெற்று விட முடியாது .. அதே சமயம் பிராமணரின் எரிச்சலையும் சம்பாதித்து கொள்கிறார்.. இந்த தேவையில்லாத போக்கு ஏன் ? ( அல்லது அவர் என்ன செய்தாலும் பிராமணர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பார்களா ? )
//
4 பிராமணர் அல்லாத ரஜினி ,பிராமணர் போல நடந்து கொள்ள பார்ப்பது.. பிராமணர் இனத்தை சேர்ந்த கமல், பிராமணர் அல்லாதவர் போல்காட்டி கொள்வது- ஒப்பிடுக
//
முதலில் பிராமணர் என்றால் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று நீங்களே கட்டமைத்துக்கொண்டுள்ள பிம்பத்தை உடையுங்கள். பின்னர் ரஜினி பிராமணர் போல் நடந்துகொள்கிறாரா இல்லை கமல் பிராமணர் போல் நடந்துகொள்கிறாரா என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.
சிவாஜிராவ் கெயிக்வாட் என்பது பிராமணப் பெயர் தான்.
டோண்டு, நான் பிராமணர்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவனல்ல. எனவே பின்வரும் கேள்விகளை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்..
௧. பிராமணர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் நாட்டில் சமஸ்கிருதப் பாசம் இருக்கிறது?
(இதற்கு நான் சான்றுகள் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன்).
௨. ஆங்கிலத்தில் 'ஞா', ழ, ள போன்ற உச்சரிப்புகள் இல்லை..இவ்வாறாக ஒரு மொழியில் இருக்கும் உச்சரிப்புகள் மற்ற மொழிகளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் ஏன் தமிழில் சமஸ்கிருதம் சார்ந்த எழுத்துகளைப் புகுத்தப் பிராமணர்கள் முற்படுகிறார்கள் (அல்லது ஆதரவு தெரிவிக்கிறார்கள்)?
௩.கிருஷ்ணா, ஷிவா, ஷக்தி, பிரம்மா, சரஸ்வதி, லக்ஷ்மி போன்ற தெய்வங்கள் தமிழர்களின் தெய்வங்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை (பெயரே சான்று). இந்த தெய்வங்கள் வட நாட்டிலிருந்து தமிழகத்திற்கு பல்வேறு மன்னர்களால் புகுத்தப் பட்டிருக்கலாம். அவற்றின் வழிபாட்டு முறையும் தமிழில் இல்லை. தமிழர்களிடத்தில் சிறு தெய்வ வழிபாட்டுமுறை இருக்கிறது. அது ஏன் பிராமணர்களிடத்தில் இல்லை?
Vajra
Rajni who is Shivaji Rao Gaiekwad, is from Belgaum, on the borders of Maharashtra and Karnantaka, but is in Karnataka. The city is the bone of contention between the two states, Maha contends that since 80 percent of its population is Marati speaking, and before independence it was in Bombay province, the city should go to them.
I lived there. It has many many slums, including one for Tamils, as usual.
Shivarji rao gaikwad is a marata, the same caste to which Shivaji the samrat belongs. Such royal surnames as gaikwad even a beggar has in the city, just as rao is for both brahmins, shatriya and scs in AP.
Shivaji, both the king and the actor, are sutras. Because the king was a sutra, and as per Brhaminical code, a sutra cannot be anointed as King, the Brahmins of Maharastra refused to coronote Shivaji.
Shivaji took it as a challenge and brought the Kashi brahmins who conducted the ceremony. The brahmins went back to Khasti after that and along with them, went many Maharastrians.
As per the code, only a Kshatriya can be anointed as a king by the Brahmins.
In Benaras, or Khasi, or Varanasi, many such maharastrian families are living today, just as in our Tanjore who were also brought here by the same Shivaji.
//சிவாஜிராவ் கெயிக்வாட் என்பது பிராமணப் பெயர் தான்//
*ராவ்*
The first one where Rao is widely used is Maharashtra. Mostly Maratha Kashatriyasuse it either as an ending surname or as middle surname.
Next is Andhra, where people of all communities use.
The Madhva Brahmins of Karnataka, generally use this as surname, when do not use the village name as surname. The Madhva brahmins in tamilnadu, who speak minimal Kannada or Marathi at home, and generally use the Tamil names, without any surname, in keeping with the social trend there, are generally known as "Raoji" community. In the Mysore-Karnataka region, even a few smartha brahmins have 'rao' as a surname.
*கெயிக்வாட்*
History of Gaikwad's Origin
The Gaikwads are a Maratha clan and are considered as Chandravanshi Maratha's Descendants of Lord Shrikrisna Stem.
The Story of Name Formation :
The family name is a combination of the words gai (cow) and kavad (door). The traditional story relates that during the reign of Moguls, a Gaekwad ancestor, while in his fort, witnessed a Muslim butcher driving a cattle herd for the purpose of slaughter. Being a devout Hindu, he opened a small side door (kavad) to the stronghold for the cattle, thereby allowing the cows to escape their impending doom. Future generations took a great deal of pride in their roots that strongly displayed their predecessor’s religious fervor.[1]
//தமிழர்களிடத்தில் சிறு தெய்வ வழிபாட்டுமுறை இருக்கிறது. அது ஏன் பிராமணர்களிடத்தில் இல்லை? //
மிக மிகத் தவறான தகவல். எனக்குத் தெரிந்து பல பிராமண குடும்பங்களின் குல தெய்வங்கள் எல்லை தெய்வங்களே. எங்கள் குடும்பதிற்க்கே கண்ணூர்பட்டியில் (ராசிபுரம்-நாமக்கல்) பெரியாண்டவர்தான் குலதெய்வம். சேலம் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் உள்ள பிராமணர்கள் அங்கு வருகின்றனர்.
//அவர் என்ன செய்தாலும் பிராமணர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பார்களா ?// பெரும்பாலான பெண்களுக்கு (பிராமணப் பெண்கள் உட்பட) கமலை பிடிக்காது. அவனது நாராசமான காமப் படங்களும் பேச்சுக்களும் தான் காரணம். ரஜினி படத்திற்கு மனைவியின் அனத்தல் காரணமாகவே குடும்பத்துடன் போகும் ஆண்கள் இருக்கிறார்கள். கமல் படங்களுக்கு அப்படி பெண்கள் போக விரும்புவதில்லை. அதனாலேயே ரஜினி படங்களை குடும்பம் குடும்பமாக அந்து பார்ப்பதை அறிவோம். கமல் என்ன செய்தாலும் எற்றுக்கொள்ள யாரும் முட்டாள்கள் அல்ல. அவரது அதிகப் பிரசங்கித்தனம் வெறுப்பை மட்டுமே தோற்றுவிக்கும். பலாரென்று அறையலாம் போல தோன்றும். பெரும்பாலானவர்கள் தமிழ் சினிமாவின் வழிகாட்டுதலால் பிராமணர்கள் பற்றி தவறான கற்பனையுடனேயே அலைகிறீர்கள். பலரது கேள்விகள் படிக்கும் போதே சிறுபிள்ளைத்தனமானதாக துவேஷ மனப்பான்மையுடன் தானிருக்கிறது. அதை மாற்றி சராசரி உலகத்திற்கு வந்தீர்களென்றால் இது போன்ற அபத்த கேள்விகள் பிராமணர்கள் குறித்து கேட்கமாட்டீர்கள்.
LK
That is the impact of the omnipresent culture that surround them.
If you live in UK, your children will take Christian surnames or use them, even if you dont give them, in order to escape taunts and teasing by fellow classmates.
Thus, Mark Ramprakash the cricketer of England team. Many Hindu chidren have one Christian surname with the Hindu names. But they are not christians as we know. Mark, Jude, Luke, John, Tim, Jimmy - are not religious names in UK. They are considered merely as secular surnames particular to the local culture. Take one and be happy - is the motto there.
Similarly, living in villages for many many generations must have an impact, one of which this kulatheivam.
But still, the Iyers who have given up their Siva only Saivism, centuries ago, will accept any God worshipped by the local Tamils provided vegetarianism is allowed for them.
But we are not here, or the friend you guote is not referring to the actual practice. Even if he does not, I do.
Iyengars should not worship any local gods unless the god is a form of Maha Vishnu and his avatars or His Consort Shree.
It is written and It is rule. No prevarication with that.
In ten paasurams, Periyaazhvar is agonised over the scenes of Brahmin parents naming their children after 'other' gods. He insists they should choose only any name of Thirumaal.
If you find Dondu Ragavan is worshipping an amman, it is not allowed, but he exercises his freedom as an individual, thats all. Like him, so many who choose to worship different gods and goddesses. All of them are violating. They, however, name their children after Thirumal and His avtars, and His Consort Shree, because of fear of being caught as worshipper of other gods.
Citing only the rule, we can clearly say that the Brahmins rejected the local gods. Not only rejection, but ridiculed the local gods, if you read the history of Brahmins and Tamilnadu. This ridicule and keeping aloof from the locals made them suspicious in the eyes of Tamils, according to two articles published in Sakthi, Pollachi Mahalingam magazine authored by Kothandaraaman and Radha. Get the old issues where they appeared. Both authors described the reasons for historical prejudices, and how brahmins themselves contributed to such prejudices in one way or other.
LK said...
// //எனக்குத் தெரிந்து பல பிராமண குடும்பங்களின் குல தெய்வங்கள் எல்லை தெய்வங்களே.// //
பார்ப்பனர்கள் ஊருக்கேற்ற வேடம் போடுவது ஒன்றும் அதிசயம் அல்ல.
ஆனால், நாட்டார் தெய்வங்கள் இந்து மதத்தின் ஆகம விதிகளுக்குள் வருகின்றனவா? அவை இந்து மதத்திற்கு கட்டுப்பட்டவையா? மிக முக்கியமாக பார்ப்பன மேலாதிக்கத்தை நாட்டார் சாமிகள் தூக்கிப்பிடிக்கின்றனவா? என்கிற கேள்விகள்தான் முக்கியமானவை.
எந்த நாட்டார் சாமியாவது எனக்கு சமற்கிருதத்தில் ஓதினால்தான் புரியும் என்று சொல்கிறதா? என்று பாருங்கள்
கீழ்கண்ட செய்திகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
1.அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
2.பொங்கல் பண்டிகைக்குள் கட்சியைத் தொடங்கும் விஜய், தனது புதிய கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக, சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
3.படங்களில் பாலுறவை திணிக்கிறார்கள். பாலுறவு பக்தி மாதிரி, நெஞ்சுக்குள் வைத்திருக்க வேண்டும் வெளியே காட்டக் கூடாது. தேவையில்லாமல் பாலுறவு திணிக்கப்படுகிறது.- என்றார் வைரமுத்து.
4.கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.
5.மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும், மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வில் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
//எந்த நாட்டார் சாமியாவது எனக்கு சமற்கிருதத்தில் ஓதினால்தான் புரியும் என்று சொல்கிறதா? என்று பாருங்கள்//
தமிழிலே மட்டுமே ஓதவேண்டும் என்று பக்தர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு தன் பரிவாரங்களின் பெயரை வடமொழியில் எந்த்ச் சாமியும் வைத்துக் கொள்ளவில்லை!
//எந்த நாட்டார் சாமியாவது எனக்கு சமற்கிருதத்தில் ஓதினால்தான் புரியும் என்று சொல்கிறதா? என்று பாருங்கள்//
எந்த நாட்டார் சாமியாவது எனக்கு தமிழில் ஓதினால்தான் சொல்கிறதா? என்று பாருங்கள்.
மன்னிக்கவும் அருள் .எரிச்சலில் சொன்னேன். எந்தக் கடவுளுக்கும் மொழி வித்தியாசம் கிடையாது. கடவுள் அரபி மொழியில் தான் பேசுவார் என்பதெல்லாம் உங்களைப் போன்ற அல்லது உங்களுக்குப் பிடித்த கும்பல்கள் (உங்களுக்கு சப்பைக் கட்டு கட்ட அல்லது திசை திருப்ப இந்த விஷயம் போதுமல்லவா? :) )கற்பித்த பொய்கள். உலகைப் படைத்த பரமனுக்கு எல்லா மொழிகளும் தெரியாதா என்ன?
//தமிழர்களிடத்தில் சிறு தெய்வ வழிபாட்டுமுறை இருக்கிறது. அது ஏன் பிராமணர்களிடத்தில் இல்லை? //
I know a big Kannada Vaishnavite Brahmin family who have a Mariamman in TN as their Family God/Kulatheivam
கமல் செய்யும் செப்படி வித்தைகளெல்லாம் தன் மன்மதன் அம்பு படத்தை எப்பாடு பட்டாவ்து ஓட வைக்க வேண்டும் என்பதே காரணம்.
இதைதானே தசாவதாரம்,சண்டியர்,அவ்வை சண்முகி பட வெளியீட்டுகளில் செய்து சாதித்தார்.
இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமே
அதற்காக பெரியாரின் வாரீசு போல் பேசி இறை பக்தர்களின் மனதை புண்படுத்துதல் தவறு.
அது சரி நடிகர் தானே அவர் .பின் அவர் எப்படி நடப்பார்?வியாபாரமே அவருக்கு பிரதானம்
ஒரு வேளை கமல் படத்தை எதிர்த்து இவரது நண்பர்களே ஒவ்வொரு முறையும் இப்படி பிரச்சனைகளை கிளப்புகிறார்களோ?
இன்னொரு கேள்வி: ஒவ்வொரு முறை துக்ளக் படிக்கும் போதும் சோவிற்கு வயசாகிறதே என்று கவலை தோன்றி விடுகிறது. சோ விற்கு பிறகு துக்ளக் என்னாகும்? உங்கள்கணிப்பு ப்ளீஸ்?
எல்கே
பிராமணர்கள் என்றார் உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன்,பிராமணர் என்று அழைத்துக்கொள்ளும் நீங்கள் எந்தவிதத்தில் பிராமணர் என்று அழைக்கப்படாத மற்ற சாதிகளோடு உயர்ந்தவர். தெளிவுபடுத்துங்கள்.
நல்லதந்தி said...
// //எந்தக் கடவுளுக்கும் மொழி வித்தியாசம் கிடையாது.// //
உங்களது மேலான கருத்தை வரவேற்கிறேன். அப்படியே, "கிரந்த் எழுத்துகளை போட்டு எழுதி படித்தால்தான் 'சமற்கிருத மந்திரங்களை' உரிய ஒலிவடிவில் உச்சரிக்க முடியும். அப்படி உச்சரித்தால்தான் பெரும்பேறுகள் கிடைக்கும். ஒலி மாறினால் பொருள் மாறும் - பெரும் கேடு விளையும்" - என்று அள்ளிவிடும் டோண்டு சாரின் கருத்துக்கும் நீங்கள் விளக்கம் கொடுத்தால் புண்ணியமாய் போகும்.
அது என்ன சமற்கிருத மந்திரங்களுக்கு மட்டும் அப்படி ஒரு தனிச்சிறப்பு? (அப்படியே தமிழ் எழுத்துகளுடன் கிரந்த எழுத்துகளை கலந்து எழுதினால் மட்டும் 'சமற்கிருத மந்திரங்களை' உரிய ஒலிவடிவில் உள்ளது உள்ளபடி உச்சரிக்க முடியுமா என்பது சமற்கிருத வித்துவான்களுக்கே வெளிச்சம்.)
"உலகைப் படைத்த பரமனுக்கு எல்லா மொழிகளும் தெரியாதா என்ன?" என்று ஒரு அற்புதமான கேள்வியை கேட்டுள்ளீர்கள். சத்தியமாக என்னிடம் பதில் இல்லை! (எனக்கு நம்பிக்கையுள்ள பரமன் எனது சிந்தனையில் உள்ளதைக்கூட அறிவான் என்கிற ஒரு நம்பிக்கை உள்ளது.) அது போகட்டும்.
உங்கள் கேள்விக்கு நீங்களே பதில் சொன்னால் நன்றாக இருக்கும் - தமிழ் நாட்டின் பல கோவில்களின் கருவறைக்குள் சமற்கிருத மந்திரங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது ஏன்? உலகைப் படைத்த பரமனுக்கு தமிழ் தெரியாதா என்ன?
@குடுகுடுப்பை
நான் எங்கே உயர்ந்தவன் என்று சொன்னேன் ??? எப்ப சொன்னேன் ??? நான் பிறப்பால் பிராமணன் அவ்வளவே . உணமையான பிராமணன் இன்றைய சூழலில் இருக்க வாய்ப்பு இல்லை.
@அருள்
உங்கள் பேச்சுக்கே வருகிறேன் . ஒரு சொல்லை உச்சரிக்கும் பொழுது அதற்கு உரிய சரியான சப்தங்களுடன் உச்சரிக்க வேண்டும். சமஸ்க்ருதத்தில் உச்சரிப்பு மாறினால் பொருள் மாறும்
நான் எங்கே உயர்ந்தவன் என்று சொன்னேன் ??? எப்ப சொன்னேன் ??? நான் பிறப்பால் பிராமணன் அவ்வளவே . உணமையான பிராமணன் இன்றைய சூழலில் இருக்க வாய்ப்பு இல்லை. //
அப்படியென்றால், ஏன் பிராமணன் என்றழைத்துக்கொள்கிறீர்கள்?
//எந்தக் கடவுளுக்கும் மொழி வித்தியாசம் கிடையாது. //
இதை பிராமணர்கள் ஒத்துக்கொள்ளவில்லையே சாமி? அதுதானே பிரச்னையானது!
சமசுகிருத மந்திரங்கள் ஓதப்படுவது அம்மொழியில் ஓதும்போது மட்டுமே அம்மந்திரங்களுக்குப்ப்லன் உண்டு என்று சொன்னவர் டோண்டு மட்டுமல்ல.
பிராமணீயம் என்பதே அதுதான்.
வசதிக்குத் தக்க பேசாதீர்கள். தமிழை நீசபாசை என்று சொல்லி அதைத் தடுத்தவர்களும் பிராமணர்கள்.
ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழில். அதற்கு தெய்வசக்தி கிடையாது என்று பலனூற்றாண்டுகளாக வைத்தவர்கள் பிராமணர்கள்.
இராமானுஜருக்குப்பின்பேதான் அதற்கு முதல்மரியாதை கிடைத்தது. அவர்தான் ஆழ்வார் பாசுரங்கள் கோயில்களில் ஓதப்படவேண்டும்; பெருமாளுக்கு முன் திவ்வியபிரபந்த சேவை செல்ல வேண்டும். பிரபந்த பாராயணம் ஒவ்வொரு வைணவனும் தவறாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி அதையும் நடாத்திக்காட்டினார் சிரிரங்கத்தில்.
அதற்கு முன், நம்மாழ்வார் சூத்திரர் அவருக்கு பெருமாளைப்பற்றிப்பாட தகுதியில்லை என்றவர்கள் பிராமணர்கள்.
இன்றுதான் கதை மாறியிருக்கிறது. ஆனால் அருள் சொன்னது போல பழையகதையோடு சேர்த்துதான் இருக்கிறது.
வரலாற்றைத் தெரிந்து பேசினால் நன்று.
I know a big Kannada Vaishnavite Brahmin family who have a Mariamman in TN as their Family God/Kulatheivam
//
முக்கோடன்!
கன்னட வைணவமும் தமிழ் வைணவமும் வெவேறு சம்பிரதாயத்தைச்சேர்ந்தவை. தமிழ் வைணவம் அல்லது சிரிவைணவத்தை கோடிட்டுக்காட்டித் தந்தவர் இராமானுஜர். எனவே அதற்கு இன்னொரு திருப்பெயர்: இராமானுஜ தரிசனம் என்றும் உண்டு.
இராமனுஜ தரிசனத்தில், மகா விஸ்ணு, அவரின் துணைவியார், அவரின் அவதாரங்கள் மட்டுமே தெய்வங்கள்.
எந்தவொரு சிரிவைணவனுக்கும் குலதெய்வம் என்று இருந்தால், அது மேலே காட்டிய தெய்வம் மட்டுமே ஆகும்.
ஊர் ஊராக ஓடி பிழைப்பு நடத்தும் வன்னிய பிராடுகள், பச்சோந்திகள் மற்றவர்களை பற்றி பேச வந்துவிட்டார்கள்.
ஸ்ரீதர்
@hayyram
//4.கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.//
கட்டில் மெத்தை விலையெல்லாம் ஏறப்போகிறதாமே? வாங்கி வைத்துத் தேர்தல் அறிவித்தபிறகு விற்றால் நல்ல லாபம். பாமகவால் தற்போதைய பலன் இதுவே!
பாமகவினர் படுத்துக் கொண்டே அல்லவா வெற்றிபெறக் கனவு காண்கிறார்கள்?
தனியாக "நின்றால்" என்று ஏன் புரளி கிளப்புகிறீர்கள்.
"ஊர் ஊராக ஓடி பிழைப்பு நடத்தும் வன்னிய பிராடுகள், பச்சோந்திகள் மற்றவர்களை பற்றி பேச வந்துவிட்டார்கள்.
ஸ்ரீதர்
"
திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களுக்கு காட்டப்பட்ட வாழ்க்கை நெறி. இதை ஏன் நக்கலடிக்கிறீர்கள் ?
பாமகவினர் படுத்துக் கொண்டே அல்லவா வெற்றிபெறக் கனவு காண்கிறார்கள்?
தனியாக "நின்றால்" என்று ஏன் புரளி கிளப்புகிறீர்கள்.
அம்பி!
வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசமாகவும், மற்றவிடங்களில் பரவலாகவும் வாழ்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாமகவிற்கு ஓட்டளித்தால், பாமக ஒரு மாபெரும் சக்தியாகும். அவர்களை நினைத்து அரசியல் நடாத்துவது ‘கனவல்ல்’ ‘நிஜமாகும்’
ஆனால், உங்கள் ஜாதியின் நிலையென்ன?
மயிலாப்பூரில் கூட எல்லாரும் போடுவார்கள் உங்களுக்கு என்று உங்களால் நிச்சயமாக சொல்லமுடியாது. எஸ்.வி.சேகர் 500 ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார்.
வில்லிபுத்தூர் அக்ரகாரத்தில் ஒரு ஓட்டு பிசகாமல் தாமரைக்கனி வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து சுயேச்சை பார்ப்பனர் டெபாசிட் இழந்தார் என்று துகளக் நிருபரே எழுதியிருந்தார்.
மற்றவரை நக்கலடிக்குமுன், உங்களையும் சோதித்துக் கொள்ளும் ஓய்!
----------------
LK Said
உங்கள் பேச்சுக்கே வருகிறேன் . ஒரு சொல்லை உச்சரிக்கும் பொழுது அதற்கு உரிய சரியான சப்தங்களுடன் உச்சரிக்க வேண்டும். சமஸ்க்ருதத்தில் உச்சரிப்பு மாறினால் பொருள் மாறும்.
-------------------
அது தான் ஏன் என்று கேட்கிறேன். அந்த மந்திரங்களை மொழி மாற்றம் செய்ய முடியாதா என்ன? எல்லாருக்கும் புரியுமல்லவா? தான் கடவுளிடம் என்ன சொல்கிறோம் என்று தெரிந்து சொல்லலாம் அல்லவா? கடவுளுக்கு தமிழ் தெரியும் என்னும் போது இத்தனை ஆண்டு காலமாய் எது நம்மைத் தடுக்கிறது..?
ஞாஞளஙலாழன் said...
// //கடவுளுக்கு தமிழ் தெரியும் என்னும் போது இத்தனை ஆண்டு காலமாய் எது நம்மைத் தடுக்கிறது..?// //
மிக நியாயமான கேள்வி.
டோண்டு சாரும் அவரது சீடர்களும் நேர்மையாக பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
@அருள்
தமிழின் பெருமையை டோண்டு ராகவனிடம் கூற நினைப்பது கொல்லன் தெருவில் ஊசிவிற்கும் கதைதான்.
பெருமாள் ஊர்வல விழாவில் முன்னால் தமிழ்ப் பாசுரங்களை ராகத்துடன் இசைத்துச் செல்பவர்களும் சரி பெருமாளுக்கு பின்னால் வேத கோஷங்களை கூறியவாறு செல்பவர்களும் சரி இரு தரப்பினருமே பார்ப்பனர்கள்தான்.
சில கோவில்களில் பெருமாளை ஏளப்பண்ணுகிறவ்ர்களும் பார்ப்பனரே.
சிதம்பரம் கோவிலில் திருவாசகம், பெரிய புராணப் பாடல்கள் ஆகியவர்றை [பாடுபவர்கள் ஓதுவார்கள் மட்டுமல்ல, பார்ப்பன தீட்சிதர்களும்தான்.
கடவுளுக்கு எல்லா மொழியும் தெரியும் என்பதை எம்மவருக்குப் புதிதாகச் சொல்ல நாத்திகர்கள் என தங்களை வகைப்படுத்தியவர்களுக்கு கூற வக்கில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Arun Ambie said...
// //பாமகவினர் படுத்துக் கொண்டே அல்லவா வெற்றிபெறக் கனவு காண்கிறார்கள்?
தனியாக "நின்றால்" என்று ஏன் புரளி கிளப்புகிறீர்கள்.// //
1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்திலும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான்கு இடத்திலும் பா.ம.க தனித்து நின்றுதான் வெற்றி பெற்றது.
அண்மையில் நடந்த பென்னகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக' வை மூன்றாம் இடத்துக்கு தள்ளி - தனித்து நின்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது பா.ம.க.
உங்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய செய்தி: கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு இடம்கூட வேற்றி பெற்ற கட்சி எதுவும் இல்லை - பாமக'வைத் தவிர.
//உங்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய செய்தி: கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு இடம்கூட வேற்றி பெற்ற கட்சி எதுவும் இல்லை - பாமக'வைத் தவிர.//
அப்படியா, பிறகு ஏன் போயஸ் தோட்டம், அறிவாலயம் எனப் போய் மாறி மாறி காவடி எடுத்து அன்புமணிக்கு சீட்டு தரச் சொல்லி பிச்சை எடுக்கிறார்கள்?
வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என புருடா விட்ட உங்களவரை விஜயகாந்த் உங்கள் கோட்டையிலேயே வெற்றி பெற்றதை மறந்தீரோ?
எது எப்படியானாலும் தனியாகவே நில்லுங்கள். தமிழகத்துக்கு நல்லது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் said...
// //சிதம்பரம் கோவிலில் திருவாசகம், பெரிய புராணப் பாடல்கள் ஆகியவர்றை [பாடுபவர்கள் ஓதுவார்கள் மட்டுமல்ல, பார்ப்பன தீட்சிதர்களும்தான்.// //
சிதம்பரம் கோவில் கருவறைக்குள் சமற்கிருத மந்திரங்கள்தான் அனுமதிக்கப்படுகின்றன. தமிழ் அனுமதிக்கப்படுவது இல்லை.
(நான் என்னை நாத்திகன் என்று வகைப்படுத்திக் கொள்ளவில்லை.)
டோண்டு ராகவன் said...
// //எது எப்படியானாலும் தனியாகவே நில்லுங்கள். தமிழகத்துக்கு நல்லது.// //
தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் தனித்து நிற்க முன்வந்தால் - பாமக அதில் முதலாவதாக முன்வரும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை தெளிவு படுத்தியுள்ளார்கள்.
மற்ற கட்சியுடன் கூட்டணியாக நிற்பதற்கு இந்திய தேர்தல்முறைதான் காரணம்."முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு காரணமாகும்.
இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன.
இந்த முறையில் வாக்குகள் வீணடிக்கப் படுகின்றன. அதாவது, தமது வாக்கால் தாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்று பலரையும் அவநம்பிக்கை கொள்ள செய்கிறது.
எனவே, "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.
"விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை" வரும்போது பாமக மட்டுமல்ல - எல்லா கட்சிகளும் தனியாக நிற்கும். அப்படி ஒரு நிலை வந்தால் - கட்சிகளின் பலம் தானாக தெரிந்துவிடும்.
@அருள்
ஆக, அதுவரைக்கும் பிச்சை எடுக்க வேண்டியதுதான். நடத்துங்கள், வேறு வழியில்லை.
மருத்துவரது கம்பேனியும் பிழைக்க வேண்டாமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@டோண்டு ராகவன்
கூட்டணி என்பது தனி ஆவர்த்தனம் அல்ல. பெரியகட்சிகள் பல தொகுதிகளில் சிறிய கட்சிகளிடம் ஆதரவு பெறுகின்றன. சிறிய கட்சிகள் சில தொகுதிகளில் பெரிய கட்சிகளிடம் ஆதரவு பெருகின்றன. இதில் யாரும் யாரிடமும் பிச்சை எடுப்பது இல்லை. எல்லா கட்சிகளும் மக்களிடம்தான் பிச்சை எடுக்கின்றன.
அரசியல் குறித்து கொஞ்சமாவது புரிந்துகொள்ள முயலுங்கள். அரசியலில் எவரும் எவருக்கும் தயவு காட்டுவது இல்லை, விட்டுக்கொடுப்பதும் இல்லை. யாரும் யாருக்கும் நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. மக்கள் ஆதரவு எந்த அளவோ, அந்த அளவுதான் கட்சிகளின் மதிப்பும். பாமக பிச்சை எடுப்பதாகக் கூறுவது உங்களது குருட்டு நினைப்பு. அவ்வளவுதான்.
எனவே, பாமக'வுடன் கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகளிடமும் உங்களது பொன்னான ஆலோசனைகளைக் கூறுங்கள்.
//வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசமாகவும், மற்றவிடங்களில் பரவலாகவும் வாழ்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாமகவிற்கு ஓட்டளித்தால், பாமக ஒரு மாபெரும் சக்தியாகும். அவர்களை நினைத்து அரசியல் நடாத்துவது ‘கனவல்ல்’ ‘நிஜமாகும்’//
சரி சரி.... இப்போது புரிகிறது... ஜோ ஏன் அருளுக்கு கைகொடுக்கிறார் என்று!!! ரைட்டு விடு!!
பாமக தேர்தல் வரலாறு:
1991 சட்டமன்றத் தேர்தல்: 7% வாக்குகள். 194 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு 165 தொகுதிகளில் டெபாசிட் இழந்து 1 தொகுதியில் வென்றது.
1996 சட்டமன்றத் தேர்தல்: 7.61% வாக்குகள். 116 தொகுதிகளில் திவாரி காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு 99 தொகுதிகளில் டெபாசிட் இழந்து 4 தொகுதிகளில் வென்றது.
2001 சட்டமன்றத் தேர்தல்: 5.56% வாக்குகள். 27 தொகுதிகளில் அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு எங்கும் டெபாசிட் இழக்காமல் 20 தொகுதிகளில் வென்றது.
2006 சட்டமன்றத் தேர்தல்: 5.98% வாக்குகள். 31 தொகுதிகளில் திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு எங்கும் டெபாசிட் இழக்காமல் 18 தொகுதிகளில் வென்றது.
ஆக வரலாறு தெரிவிப்பது என்னவென்றால், முதலிரண்டு தேர்தல்கள் பாமகவுக்கு தரித்திரம். பிறகு வந்த வெற்றி கூட்டணியின் சரித்திரம்.
பலமான் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதே பாமகவுக்கு நல்லது. பாமகவுடன் கூட்டுச் சேர்வதால் பலமான கட்சிகளுக்கு நல்லதா என்றால் இல்லை என்ற முடிவை (அருள் & கோவின் திருப்திக்காக) விவாததித்து அறிவிக்க வேண்டும்.
விகிதாசார வாக்கு வைத்தாலும் செல்வாக்கு சரிகிறது என்பதே சரித்திரம் சொல்லும் சான்று.
//பலமான் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதே பாமகவுக்கு நல்லது. பாமகவுடன் கூட்டுச் சேர்வதால் பலமான கட்சிகளுக்கு நல்லதா என்றால் இல்லை என்ற முடிவை (அருள் & கோவின் திருப்திக்காக) விவாததித்து அறிவிக்க வேண்டும்// பமக கூட்டனி தான் கடந்த தேர்தலில் ஜெயாவை தோற்க்கடித்தது.
//வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசமாகவும், மற்றவிடங்களில் பரவலாகவும் வாழ்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாமகவிற்கு ஓட்டளித்தால், பாமக ஒரு மாபெரும் சக்தியாகும்.//
சோ அமலன் ரயென் ஃபெர்னாண்டோவின் (ஜோ என்பது வடமொழி எழுத்துத் துணையுடன் எழுதப்படுவது, அதனால் தவிர்க்கப்படுகிறது) கருத்து கற்பனை வளமிக்கதாக இருக்கிறது. வன்னியர்களில் எத்தனை பேருக்கு மரம் வெட்டுவது முதல் வைத்தியர் (மருத்துவர் என்றால் அந்தச் சாதியுமா என்ற கேள்வி வரலாம்!) குடும்பம் பதவியில் தொடர்வது வரை ஏற்புடையதாக இருக்கிறது?
மைலாப்பூரில் போடுவது இருக்கட்டும், விருத்தாசலத்தில் விசயகாந்து போட்ட போடு விருத்த வைத்தியரின் வீரத்தை விக்கித்துப் போக வைத்ததே.
எந்தச் சாதியும் ஒட்டு மொத்தமாக யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை. சோ அமலன் ரயென் ஃபெர்னாண்டோ சொல்லவருவது யாதெனில் வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக ஓட்டுப் போட்டால் மட்டுமே பாதையோர மரமகற்றும் கட்சி (பாமக)மாபெரும் சக்தியாகும் என்பது. இன்று பலமான கட்சிகளாக இருக்கும் திமுக ஒரேயொரு சாதியைத் திட்டியும், அதிமுக எந்தக் குறிப்பிட்ட சாதியையும் சாராமலும் வளர்ந்தவை.
சாதிச் சங்கங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் தமிழகத்து மக்கள் தொகை 20 கோடியைத் தாண்டும். ஆனால் இருப்பது சற்றொப்ப 8 கோடி சொச்சம் தான்.
ஏதோ மொத்தச் சாதிசனமும் எங்கள் பின்னால் வந்தால், எங்களுக்கு வாக்களித்தால் என்ற கனவு படுத்துக் கொண்டே காண மிகவும் வசதியானது.
(hmsjr என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானே. Open IDல் போட்டுப் பார்க்கலாம் என்று செய்த முயற்சி அது.) Feedback system goofs up. Pardon me please, if this is a repeat, DR!
எம்புட்டு நேரம் தான் சீரியஸாவே பேசிகிட்ருக்கிறது. ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டாமா...அதுக்குத் தான் இந்த செய்தி.
கட்சியைக் கலைக்க தயார் : ராமதாஸ் சவால்
பா.ம.க., அளவுக்கு கொள்கை பிடிப்புள்ள கட்சி தமிழகத்தில் வேறு எதுவும் இல்லை. அவ்வாறு, பா.ம.க.,வை விட நல்ல கொள்கை உள்ள கட்சி வேறு உள்ளது என கூறினால், பா.ம.க.,வை கலைத்து விட்டு, அந்த கட்சியில் சேர நான் தயாராக உள்ளேன்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=150473
சரி சரி.... இப்போது புரிகிறது... ஜோ ஏன் அருளுக்கு கைகொடுக்கிறார் என்று!!! ரைட்டு விடு!! ''
Thanks.
Because some are mistaking me for Arul.
அந்தப்பொய்க்கு இந்தப்பொய் பரவாயில்லை.
ஏனென்றால் -
என் கருத்துகள் அனைத்துமே என் கருத்துகள் மட்டுமே.
(ஜோ என்பது வடமொழி எழுத்துத் துணையுடன் எழுதப்படுவது, அதனால் தவிர்க்கப்படுகிறது//
நான் தனித்தமிழ் இயக்கத்தைச்சேர்ந்தவன் அல்ல.
எனவே எப்படியும் எழுதலாம்.
என் வழி என் வழியே.
பார்ப்பனருகளும் வன்னியர்களும் எண்ணிக்கையில் வேறானவர்கள். ஒருவர் குறைவு, மற்றொருவர் அதிகம்.
பார்ப்ப்னர்களோடு ஒப்பிடும்போது மற்ற ஜாதியினர்களிடையே ஒற்றுமை உணர்வு அதிகம்.
பார்ப்பனர்கள், தங்கள் வாழ்க்கையை தனித்தனியாகப் பார்க்கிறார்கள். எனவே ஜாதியாக ஒன்று சேர்ந்து சாதிக்கவேண்டும் என்ற உணர்வு இருப்பதில்லை. மேலும் அவர்கள் தங்கள் வாழ்வுக்குத் தமிழகத்தையே நம்பி இராமல் இருப்பதால், ஒரு ஒட்டு இல்லை. அதனால் அவர்கள் பொதுவிடயங்களில் கலந்து கொள்வதில்லை. ஒரு சிலர் கம்யூனிஸ்டுகளாக இருந்து பொதுத்தொண்டு புரியலாம். மற்றவர்கள் கோயில் குளம் என்று வரும்போது மட்டும்தான் பொது.
இன்னிலை வட்நாட்டுப்பிராமணர்களிடம் இல்லை. எனவே அங்கு அவர்கள் தனித்து தெரிவதில்லை.
மற்ற மக்களுக்கு இருக்கிறது.
அப்படியே பார்ப்ப்னர்கள் ஒன்று சேர்ந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதனால், கட்சிகள் மற்றவர்களைக்கவனித்து விட்டுத்தான் இவர்களை கவனிக்க வரவேண்டும்.
பார்ப்பனர்களுக்கு ஜாதிச்சங்கம் இருக்கிறது. ஆனால் கட்சியில்லை. மற்றவருக்கு இரண்டும் உண்டு.
@Arun Ambie (alias) hmsjr said...
// //ஆக வரலாறு தெரிவிப்பது என்னவென்றால், முதலிரண்டு தேர்தல்கள் பாமகவுக்கு தரித்திரம். பிறகு வந்த வெற்றி கூட்டணியின் சரித்திரம்.// //
// //ஏதோ மொத்தச் சாதிசனமும் எங்கள் பின்னால் வந்தால், எங்களுக்கு வாக்களித்தால் என்ற கனவு படுத்துக் கொண்டே காண மிகவும் வசதியானது.// //
பென்னகரம் இடைத்தேர்தலில் தனித்துநின்று பாமக இரண்டாவது இடம் பிடித்தது.
1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வன்னியர்களின் அரசியல் கட்சிகளான மாணிக்க வேலரின் பொதுநல கட்சி வடார்க்காடு மாவட்டத்திலும், இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி தென்னார்க்காடு மாவட்டத்திலும் தனியாக போட்டியிட்டு 25 சட்டமன்ற தொகுதிகளை வென்றனர்.
வரலாறு தெரிந்தால் பேசுங்கள். வன்னியர்கள் ஒன்றுதிரண்டு வாக்களித்து சாதனை படைத்திருக்கிறார்கள். கூடவே, வடமாவட்டங்களின் பல தொகுதிகளில் பாதியளவுக்கு சற்று கூடுதலான வன்னியர்கள் வாக்களித்தாலே வெற்றி பெற முடியும். எல்லா வன்னியர்களும் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டிய தேவை இல்லை. அந்த அளவுக்கு வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர்.
இந்து அமைப்புகளும் இந்தப் பாடலுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பாடலை நீக்குவதாக கமலஹாசன் அறிவித்தார்.
http://www.tamilhindu.com/2010/12/manmadhan-ambu-filmsong-controversy/
Post a Comment