12/21/2010

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - 2

இது பற்றிய முந்தைய இடுகையில் பதிவர் அருள் ஒரு பின்னூட்டத்தில் கேட்டார்:

அதைத் தேட முனைந்த போது சட்டென கிடைக்கவில்லை. ஆனால் அதன் சாரம் என்னவென்றால், அதே உச்சரிப்பு அதிர்வுகள் தமிழிலும் கொணர ஏன் முயற்சிக்கலாகாது என்பதுதான் என நினைக்கிறேன். அருள் அவர்கள்தான் இதை கன்ஃபர்ம் செய்ய வேண்டும். தமிழிலும் அவ்வாறு அதிர்வுகள் உண்டுதான்.

இது சம்பந்தமாக தமிழில் உதாரணங்கள் தேட நான் முனைந்தபோது பம்பாய் சாரதா அவர்கள் பாடிய கந்தசஷ்டி கவசம் யூட்யூப்பில் கிடைத்தது. முதலில் அதை இங்கே போடுகிறேன். தமிழ்க்கடவுளாம் முருகன் பெருமையைப் பாட சொற்களால் இயலுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும், பாடலைக் கேளுங்களேன்.



அருணகிரிநாதரின் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற வரிகளைக் கொண்ட திருப்புகழையே எடுத்துக் கொள்ளுங்களேன். முதலில் அதைக் கேட்போம்.



இதே பாடல் வேறொரு ராகத்தில், ஸ்ரீனிவாஸ் மற்றும் நித்யஸ்ரீயின் குரல்களில்:



மேலே சொன்ன இரு அமரகாவியங்களிலும் உள்ள சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டியது அவசியம் அல்லவா? அதிலும் கந்தசஷ்டி சொற்களுக்கு நான் முன்னால் வடமொழி சுலோகங்களில் சொன்ன அதிர்வுகள் உண்டு. அவற்றைத் தவறாக உச்சரித்தால் விரும்பும் பலன்கள் கிட்டாது, விபரீதங்களுக்கும் வழிவகுக்கலாம் என்பதையே நான் கூறப் புகுந்தேன்.

இல்லாவிட்டால், கண்ணெதிரே தோன்றினாள் என்னும் படத்தில் “ஈஸ்வரா” எனத் துவங்கும் பாடலில் “பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று இருந்த வரியை பாடகர் உதித் நாராயண் “பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று பாடிய விபரீதம்தான் நடக்கும், பரவாயில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

68 comments:

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //அதிலும் கந்தசஷ்டி சொற்களுக்கு நான் முன்னால் வடமொழி சுலோகங்களில் சொன்ன அதிர்வுகள் உண்டு. அவற்றைத் தவறாக உச்சரித்தால் விரும்பும் பலன்கள் கிட்டாது, விபரீதங்களுக்கும் வழிவகுக்கலாம் என்பதையே நான் கூறப் புகுந்தேன்.

இல்லாவிட்டால், கண்ணெதிரே தோன்றினாள் என்னும் படத்தில் “ஈஸ்வரா” எனத் துவங்கும் பாடலில் “பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று இருந்த வரியை பாடகர் உதித் நாராயண் “பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று பாடிய விபரீதம்தான் நடக்கும், பரவாயில்லையா?// //

தமிழ் வார்த்தைகள் எதனையும் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதவும் படிக்கவும் முடியும். இன்னொரு மொழி எழுத்தின் உதவி தமிழுக்கு தேவையில்லை. எனவே, தமிழ் மொழியில் எழுத்துகளுக்கு பஞ்சம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேற்று மொழியில் உள்ள பெயர்ச் சொற்களில் சிலவற்றை மற்றொரு மொழிக்கு மாற்றும் போது - அப்படியே உள்ளது உள்ளபடி பயன்படுத்த முடியாது. அது மொழியின் தன்மைக்கு ஏற்ப மாறும். இது ஒரு உலக வழக்கம்.

எனவே, வேற்று மொழியின் பெயர்ச் சொற்கள் விடயத்தில் உலகின் எல்லா மொழிகளும் குறைபாடு உடையவைதான். பிரஞ்சு - ஆங்கில மொழிகளுக்கு இடையே எல்லா பெயர்ச் சொற்களும் ஒரே மாதிரியாகவா உச்சரிக்கப்படுகிறது என்பதை அம்மொழிகளை அறிந்த டோண்டு சார் தனது மனசாட்சியைத் தொட்டு விளக்கட்டும்.

உலகின் மற்ற மொழிகள் தமது மொழியின் எழுத்துக்களைக் கொண்டு ஒரு வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை என்கிற குறைபாட்டுக்காக மற்ற மொழியின் எழுத்துக்களை கடன் வாங்குவது உண்டா? அப்படிப்பார்த்தால், உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் என்பதை சரியாக உச்சரிக்க உலகின் எல்லா மொழிகளும் "ழ" எழுத்தை கடன் வாங்கியிருக்க வேண்டுமே. அதற்கு மாற்றாக உலகெங்கும் "ள" ஒலி பயன்படுத்தப்படுவது ஏன்?

தமிழில் விவிலியம் என்றும் திருக் குர்ஆன் என்றும் எழுதுகிறோம். இதனை மற்ற நாட்டுக்காரர்கள் எவறாவது படித்தால் அதன் பொருள் புரியுமா? இதுகுறித்து நான் - ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை மற்றொரு மொழியின் அடிப்படை அமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்வது இயல்பானதுதான். தமிழ் என்பதை மற்ற மொழிகளில் Thamizh என்று எழுதவில்லை, Tamil என்றுதான் எழுதுகிறார்கள். அதுபோலத்தான் இங்லீஷை - ஆங்கிலம் என்றும் ஹிந்தியை - இந்தி என்றும் தமிழில் எழுதுகிறோம். இராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர் லக்ஷ்மணனை - இலக்குவன் என்றும், விபீஷணனை - வீடணன் என்றும்தான் அழைத்தார். - என்று முன்பு டோண்டு சார் பதிலில் குறிப்பிட்டேன்.

"மந்திரங்களை தவறாக உச்சரித்தால் விரும்பும் பலன்கள் கிட்டாது, விபரீதங்களுக்கும் வழிவகுக்கலாம்" என்பது உண்மையானால், சமற்கிருத மொழி மூலமாக எழுதி படிப்பதுதான் மந்திரங்களை சரியாக உச்சரிக்க ஒரே வழி. ஒருபோதும் - தமிழ் எழுத்துக்கள் வழியே சற்கிருத வார்த்தைகளை உள்ளது உள்ளபடி உச்சரிக்க முடியாது.

உதித் நாராயண் “பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று இருந்த வரியை “பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே” என்று பாட முயன்றதற்கு காரணம் - அவருக்கு தமிழ் தெரியாது என்பதுதான். இதற்கும் எழுத்து சிக்கலுக்கும் தொடர்பு எதுவும் இல்லை.

MV SEETARAMAN said...

//ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை மற்றொரு மொழியின் அடிப்படை அமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்வது இயல்பானதுதான்.//

ஒலி வடிவத்துக்கு வரி வடிவம் தரமுயலும்போது.... எழும் பிரச்சனைகு...தீர்வுதான்... முந்தய தலைமுறை தமிழ் மக்கள் கண்டது... சிறப்பு துணய் எழுத்துக்கள். தமிழ் மக்கள் மேன்மக்களே !!!

Narayanan said...

dear arul, of all your comments, this is the most sensible and with some stuff.

keep it up.

Sivakumar said...

எனது தாய் மொழி தமிழ் அல்ல. எனது தாய் மொழியில்
எழுதுபவர்கள் மிகக் குறைவு. தமிழகத்தில் பிறந்த புண்ணியத்-
தால் எனக்கு தேவநாகரி லிபியில் பாண்டித்யம் இல்லை. என்
மொழியை எனக்குத் தெரிந்த தமிழில் தான் எழுத வேண்டும்.
அவ்வாறு எழுதும் போது தமிழ் எழுத்திற்குப் அருகில் 2, 3, 4
என்று போட்டால் மட்டுமே மக்களுக்குப் புரியும்.
சரி.... இப்போது தட்டச்சு செய்யும் போது ஒரு எழுத்தை
அடிக்க இரண்டு விசைகளை அழுத்த வேண்டும். அப்போது
தான் சரியான அர்த்தம் தரும்.
எடுத்துக்காட்டாக ஹிந்தியில் கா என்றால் அர்த்தம் இல்லை. கா2
என்று எழுதினால் மட்டுமே அர்த்தம் கொடுக்கும். இப்போது
மாற்றல் செய்துள்ள விசையில் சரியான தமிழ் தட்டச்சு முறை
இருக்கும். அதே போன்று இந்திய இன்ஸ்கிரிப்ட் முறையில் தமிழ்
எழுத்துக்களை அடிக்கும் வகையில் மாற்றம் செய்த விசைப் பலகை
இருக்கும்.
இது ஆங்கிலத் தட்டச்சு மற்றும் ஆங்கில diacritical என இரு தட்டச்சு
முறைகள் இருப்பதைப் போன்றது.
எல்லாரும் கொஞ்சம் புரிந்து கொண்டு விவாதம் புரியுங்களே-
ன்.

ஹைதர் அலி said...

அண்ணே சொந்த மதத்துக்கராய்ங்கள
பாண்டிச்சேரி வலைப்பூவில் தேடுனது மாதிரி தொரிந்தது
நான் என்னுடைய சொந்த மதத்த சேந்தாவன்
என்ன பேசிக்கிறுவோமா?

அருள் said...

சிவக்குமார் சார் - நீங்க என்னதான் சொல்ல வரீங்க?

ஞாஞளஙலாழன் said...

---------------------------------
"மந்திரங்களை தவறாக உச்சரித்தால் விரும்பும் பலன்கள் கிட்டாது, விபரீதங்களுக்கும் வழிவகுக்கலாம்" என்பது உண்மையானால்,
---------------------------------

உண்மையாகவே இருக்கலாம். டோண்டு சொல்கிற மாதிரி உச்சரிப்பு மாறும் பொழுது பொருள் மிக மோசமாக மாறிவிட வாய்ப்புண்டு.
ஆனால் பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், சமஸ்கிருதத்தில் தான் தன்னை போற்ற வேண்டும் என்று கடவுள் விரும்புவது (அப்படியா?) என் போன்ற இந்துகளுக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.

dondu(#11168674346665545885) said...

வடமொழியில்தான் தன்னை பூசிக்க வேண்டும் என கடவுள் விரும்புகிறார் என யாரேனும் கூறினால் அது புருடாவாகவே இருக்கும்.

எந்த மொழியில் இருந்தாலும் சரி, உச்சரிப்பு பிழையானால் அனர்த்தங்கள்தான் வரும். இது ஒரு புறம் இருக்கட்டும்.

வடமொழியில் ஏற்கனவேயே பல மந்திரங்கள் உள்ளன. அவற்றையும் சரியாக உச்சரிக்க வேண்டியதும் அவசியம்தானே.

யாருக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் என்ன பிரச்சினை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
என் போன்ற இந்துகளுக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.
//

அப்ப நீங்க பகுத்தறிவு மதத்தைச் சேர்ந்தவர் இல்லையா ?

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //வடமொழியில் ஏற்கனவேயே பல மந்திரங்கள் உள்ளன. அவற்றையும் சரியாக உச்சரிக்க வேண்டியதும் அவசியம்தானே. யாருக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் என்ன பிரச்சினை?// //

வடமொழி மந்திரங்களை சரியாக உச்சரிப்பது அவரவர் பிரச்சினை. இதில் தமிழை எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள்? என்பதுதான் கேள்வி.

சீனாவில் வேலைக்கு போக விரும்புகிறவன் சீன மொழியை கற்றுக்கொள்வது போல, வடமொழி மந்திரங்களை ஓத விரும்புகிறவர்கள் சமற்கிருதத்தையோ, அல்லது 40க்கும் மேற்பட்ட கிரந்த எழுத்துக்களையோ கற்றுக்கொள்ளட்டுமே. "யாருக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளட்டும்." அதில் ஒரு பிரச்சினையும் இல்லை, தவறும் இல்லை.

வீரனார், சுடலைமாடன், அய்யனார், மாரியம்மன், முனீசுவரன், தீப்பாய்ந்த அம்மன், குட்டியாண்டவர் என்று வடமொழி மந்திரம் தேவையே இல்லாத சாமிகளின் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கிரந்தம் எதற்கு? வடமொழிதான் எதற்கு?

எனவே, கட்டாய கிரந்தம் பாட புத்தகத்திலும் வேண்டாம். யூனிகோடிலும் வேண்டாம். எங்கள் தமிழுக்கு தமிழ் எழுத்துக்களே போதும்.

dondu(#11168674346665545885) said...

@அருள்
அது என்ன உங்கள் தமிழ்? எங்களுடையதும்தான் அது. கிரந்தம் என்பது தமிழகத்தில்தான் உருவாயிற்று. அதன் துணையை சில தமிழர்கள் நாடுகிறார்கள். வேறு சிலர் நாடுவதில்லை. இதெல்லாம் அவரவர் தேவைக்கேற்ப நடக்கப் போகும் விஷயம்.

இதில் என்ன உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் வேலை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganpat said...

@ARUL

K K ஷா என்ற பெயருடைய முந்தைய தமிழ் நாடு ஆளுனரை ஒரு விழாவிற்கு வரவேற்க எப்படி தமிழில் எழுதுவீர்கள்?

சாவே வருக வருக என்றா?
சாவை அன்புடன் வரவேற்கிறோம் என்றா?

Arun Ambie said...

//இதில் என்ன உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் வேலை?//
கிழக்கிலும் வடகிழக்கு, தென்கிழக்கு, கீழ்க்கிழக்கு, மேல்கிழக்கு என்று இருக்கிறது தெரியுமா? மேற்கு, தெற்கு, வடக்கு எல்லவற்றுக்கும் அப்படியே. வெகுபேரின் பிழைப்பே அதை வைத்துத் தான் ஓடுகிறது! அடிமடியில் கைவைப்பது நியாமில்லையே டோண்டு ஐயா?
(சார் என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பதால் அதன் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது)

அருள் said...

@டோண்டு ராகவன்

கிரந்தம் தமிழ்நாட்டில்தான் உருவானது. ஆனால், அதற்கு முன்பே தமிழ் மொழிக்கு எழுத்துவடிவம் இருந்தது. சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட வேறு இந்திய மொழிகளுக்கு அப்போது எழுத்துவடிவமே இல்லை. தமிழ் எழுத்துக்கு பின்னரே கிரந்தம் தோன்றியது, கிரந்தத்திற்கு பின்னரே இந்தியை எழுத தேவநாகரி தோன்றியது.

கிரந்தம் தமிழ்நாட்டில்தான் உருவானது என்றாலும் பழமையான இலக்கியம் எதிலும் கிரந்தம் இல்லை. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் கிரந்த எழுத்துகள் இல்லை. சிலப்பதிகாரம், கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலில் ஒரு இடத்திலும் கிரந்த எழுத்துகள் இல்லை.

"அதன் துணையை சில தமிழர்கள் நாடுகிறார்கள். வேறு சிலர் நாடுவதில்லை" என்றால் - நன்றாக நாடட்டுமே, யார் தடுத்தது? செர்மன் மொழி கற்க விரும்புகிறவர்கள் மாக்சுமுல்லர் பவனுக்கு போய் கற்றுக்கொள்வது போல கிரந்தம் கற்க விரும்புகிறவர்கள் அதனை தனியாக கற்றுக்கொள்ளட்டுமே. யார் வேண்டாமென்றது?

ஒருசிலர் செர்மன் மொழி கற்றுக்கொள்வதற்காக, எல்லா பள்ளிகளிலும் அம்மொழியை கற்பிக்க முடியாது என்பதைப்போல, கிரந்தமும் பள்ளிப்பாடத்திலிருந்து ஒழித்துக்கட்டப் படவேண்டும். யூனிகோடிலும் அது சேர்க்கப்படக்கூடாது.

// //இதில் என்ன உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் வேலை?// //

தமிழ் மொழி உழக்கு அல்ல. உலகில் பேசப்படும் 6909 மொழிகளில் அதிகமானோர் பேசும் மொழிகளின் பட்டியலில் தமிழ் 18 ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால் சமற்கிருதம் இருக்கிற இடமே தெரியாத மொழி. வெறும் 2950 பேர் பேசுவதாகக் கூறப்படும் மொழி. எனவே சமற்கிருதத்தை உழக்கு, ஆழாக்கு என்று கூறுவது தகும். தமிழுக்கு அது பொருந்தாது.

virutcham said...

எங்கள் தமிழ் தனித் தமிழ் என்று முழக்கம் செய்பவர்களுக்கு எது தனித் தமிழ் என்று சரியாகத் தெரிவதில்லையோ

கே: தமிழகத்தில் தமிழைத் தவிர வேறு மொழி கலந்து பேசினால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அரசுக்கு யோசனை கூறியிருப்பது பற்றி ?

ப : அபராதம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது சமஸ்க்ரித்த வார்த்தை

இது சமீபத்திய துக்ளக் கேள்வி பதிலில் இருந்து

அருள் said...

// //K K ஷா என்ற பெயருடைய முந்தைய தமிழ் நாடு ஆளுனரை ஒரு விழாவிற்கு வரவேற்க எப்படி தமிழில் எழுதுவீர்கள்? சாவே வருக வருக என்றா? சாவை அன்புடன் வரவேற்கிறோம் என்றா?// //

நடுவண் அமைச்சர் பழனிமாணிக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் எப்படி எழுதுவார்களோ, அப்படித்தான் தமிழில் எழுத வேண்டும்.

"சா அவர்களே வருக வருக" என்றும், "சா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்" என்றும் அழைக்க முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

Anonymous said...

அது என்ன உங்கள் தமிழ்?

An important question ! Thanks for raising it.

அவர்கள் தமிழ் என்றால், பிறமொழி கலப்பில்லாமல் தமிழை எழுத முடியும் என்று சொல்லி அப்படி எழுதிக்காட்டி, பிறரையும் எழுதவைத்து, தமிழின் தனித்தன்மையைக் காப்போரின் தமிழையே, அருள் ‘எங்கள் தமிழ்’ என்கிறார்.

’உங்கள் தமிழ்’ என்றால்,

1. பிறமொழி, குறிப்பாக வடமொழி (சமஸ்கிருதம்) கலப்புடனே எழுதப்படும் தமிழ்.

2. அக்கலப்பில்லாமல் தமிழ் எழுத முடியாது. அப்படி எழுதினால் நகைச்சுவை (கே.கே.சா என்பவரப்பற்றி இங்கே எழுதப்பட்டது)

3. அக்கலப்பு தமிழுக்கு அழகே தவிர இழிவல்ல (உவேசா)

4. வேண்டுவோர் அப்படி கலப்புடன் எழுதட்டும். உங்களுக்கென்ன ? (Dondu Raagavan asks)

எனவே, அருள் சொல்லும் ‘எங்கள் தமிழுக்கும்’ 1,2,3,4 சொல்லும் ‘எஙகள் தமிழுக்கும்’ வேறுபாடு உண்டு.

Ganpat said...

அருள்:

எளிதாக ஐ என்ற ஒரு விகுதியை சேர்த்து வேலையை முடிப்பதை விடுத்து "அவர்களே", "அவர்களை", என்று நீட்டி முழக்கி எழுதினாலும் எழுதுவீர் ஆனால் ஷா என்ற ஒரு எழுத்தை ஏற்கமாட்டீர் இலையா?

கலைஞர் கருணாநிதியை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது

மருத்துவர் ராமதாசுவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது

என்று எளிதாக எழுதலாம்

ஆனால்

ஆளுநர் சா அவர்களை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது

என்று பயந்து பயந்துதான் எழுத வேண்டும்!!

என்னே அறிவு!

ஒரு இனத்தின் மீது இருக்கும் உங்கள் துவேஷத்தை (அதாவது துவேசத்தை) ஒரு மொழி மீது
காண்பிக்காதீர்கள்.

நன்றி!

அருள் said...

@virutcham

ஈரோடு தமிழன்பன் "தண்டம்" என்றே குறிப்பிட்டிருப்பார். "அபராதம்" என்ற வார்த்தையை திணிப்பது சோவின் பார்ப்பன குசும்பு.

virutcham said...

சா என்று ஷா அவர்களை எழுதுவது சரியாகவே இருக்கட்டும். அதை எப்படி உச்சரிப்பது? எனக்கு முதலில் அது ஷா என்பது தெரிந்தால் தான் சா என்று எழுதப்பட்டதை ஷா என்று உச்சரிக்க முடியும்.
அவரை சா என்று அழைப்பதை அவர் விரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறை அல்ல. ஒருவரின் பெயரை அழைக்கும் போது அவர் பெயரில் தான் அழைக்க வேண்டும்
இன்னொரு மொழியின் துணை கொண்டு தான் தாய் மொழியையே ஒருவன் தெரிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளக் கூடாது

வட மொழியை அல்லது வேற்று மொழியை தமிழில் எழுவதில், உச்சரிப்பதில் மட்டுமே சிக்கல் வருவதாக எடுத்துக் கொள்ள முடியாது.

பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தரும் போது ஒரு உச்சரிப்பு மட்டுமே சொல்லித் தரப்படுகிறது.
உதாரணமாக தா (கொடு ) , தீ ( நெருப்பு ), தை ( தைத்தல் )
இப்போ இதே தா என்பது இ'து' என்ப'தி'ல் , வேறு உச்சரிப்பு. கதை, உதை, பாதம், வயது, மதம், பதம், வதம், வாதம், மாதம் இப்படி வரும் போதும் உச்சரிப்பு மாறுகிறது

இதில் சில வார்த்தைகள் நேரடி தமிழ் வார்த்தைகள் இல்லை. ஆனால் வழக்கில் வெகு இயல்பாக பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள்.

ஓன்று உச்சரிப்புகளுக்கு ஏதுவாக அதிக எழுத்துக்கள் இடம் பெற வேண்டும். அல்லது ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் உள்ள உச்சரிப்பு மாறுதல்களை விளக்கமாக சொல்லித் தர வேண்டும்.
இரெண்டும் இல்லாமல் தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.

வரும் சந்ததியினர் கற்கத் தயாராக இல்லாத மொழியாக தமிழ் மாறி வருவதை தெரிந்தே அதை மறந்து வெறும் உணர்ச்சி பூர்வ அணுகுமுறை உதவாது.

ஞாஞளஙலாழன் said...

'குறள்' என்கிற எனது நண்பனை வெளிநாட்டினர் 'குரல்' என்று அழைப்பதாக வருத்தப் படுகிறான். பேசாமல் 'ள' -வை ஆங்கிலத்தில் சேர்த்து விடலாமா?

-------------------------------
virutcham said
>வரும் சந்ததியினர் கற்கத் தயாராக இல்லாத மொழியாக தமிழ் மாறி வருவதை தெரிந்தே அதை மறந்து >வெறும் உணர்ச்சி பூர்வ அணுகுமுறை உதவாது.
------------------------------

இது எல்லா இந்திய மொழிகளுக்கும் பொருந்தும். காரணம் இந்திய மொழிகள் வணிக ரீதியாக பலன் தராததே. கிரந்த எழுத்துகளைப் புகுத்தி விட்டால் சரியாகி விடுமா?

தமிழின் தனிச் சிறப்புகளுள் ஒன்று அது வட மொழியிலிருந்து தனித்து நிற்பது. அதை ஏன் சிதைக்க வேண்டும்?

virutcham said...

ஊகமாக எல்லாம் சொல்லக் கூடாது. தண்டம் என்று தான் சொன்னார் என்றால் நிரூபணமாக சொல்லுங்கள்.

ஆமாம் தண்டம் என்றால் என்ன? வெறும் தண்டம் என்று ஒன்றுக்கும் லாயக்கிலாத ஒன்றை அல்லது ஒருவரை குறிக்க பயன்படுத்துவது உண்டு.

அருள் said...

Ganpat said...

// //நீட்டி முழக்கி எழுதினாலும் எழுதுவீர் ஆனால் ஷா என்ற ஒரு எழுத்தை ஏற்கமாட்டீர் இலையா?// //

வேறு எந்த மொழியில் வேற்று மொழி எழுத்துகளை இணைத்து எழுதுகிறார்கள்? அப்படி வேறு எந்த மொழியிலும் அந்நிய எழுத்துகள் அனுமதிக்கப்படாத போது, தமிழில் மட்டும் எதற்காக அந்நிய மொழிய எழுத்தை இணைக்க வேண்டும்?

தமிழ் இனத்தின் மீது இருக்கும் உங்கள் வெறுப்பை தமிழ் மொழி மீது காண்பிக்காதீர்கள்.

அருள் said...

virutcham said...

// //அவரை சா என்று அழைப்பதை அவர் விரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறை அல்ல. ஒருவரின் பெயரை அழைக்கும் போது அவர் பெயரில் தான் அழைக்க வேண்டும். இன்னொரு மொழியின் துணை கொண்டு தான் தாய் மொழியையே ஒருவன் தெரிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளக் கூடாது// //

உங்களது இந்த தலைசிறந்த கருத்தினை வடஇந்தியர்களிடமும் வெளிநாட்டினரிடமும் போய் கூறுங்கள்.

அவர்கள்தான் பழனியப்பன் சிதம்பரம் என்பதை "பலனியப்பன்" சிதம்பரம் என்கிறார்கள். பழனிமாணிக்கம் என்பதை "பலனிமாணிக்கம்" என்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் என்பதை "வில்லுப்புரம்" மாவட்டம் என்று ஒரு மாவட்டத்தையே அவமதிக்கிறார்கள்.

தமிழ்நாடு என்பதை "டமில் நாடு" என்று கூறி ஒரு மாநிலத்தையே கேவலப்படுத்துகிறார்கள்.

தமிழர் என்பதை "டமிலியன்" என்று ஒரு இனத்தையே அவமதிக்கிறார்கள்.

அருள் said...

virutcham said...

// //தா (கொடு ) , தீ ( நெருப்பு ), தை ( தைத்தல் ). இப்போ இதே தா என்பது இ'து' என்ப'தி'ல் , வேறு உச்சரிப்பு. கதை, உதை, பாதம், வயது, மதம், பதம், வதம், வாதம், மாதம் இப்படி வரும் போதும் உச்சரிப்பு மாறுகிறது.

ஓன்று உச்சரிப்புகளுக்கு ஏதுவாக அதிக எழுத்துக்கள் இடம் பெற வேண்டும். அல்லது ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் உள்ள உச்சரிப்பு மாறுதல்களை விளக்கமாக சொல்லித் தர வேண்டும். இரெண்டும் இல்லாமல் தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.

வரும் சந்ததியினர் கற்கத் தயாராக இல்லாத மொழியாக தமிழ் மாறி வருவதை தெரிந்தே அதை மறந்து வெறும் உணர்ச்சி பூர்வ அணுகுமுறை உதவாது// //

நிச்சயமாக நீங்கள் கில்லாடியான ஆள்தான்.

அது எப்படி, உலகின் எல்லா மொழிகளுக்கும் உள்ள அடிப்படையான தன்மையை - தமிழில் மட்டுமே உள்ள குறைபாடு போல காட்டுகிறீர்கள்?

ஆங்கிலத்தில் - "w" என்கிற எழுத்து "low, cow, bow, row, sow" வார்த்தைகளில் வேறுபட்டதாக உச்சரிக்கப்படவில்லையா?

"sound, cow, bough" வார்த்தைகளில் வேறுபட்ட எழுத்துக்கள் ஒரே உச்சரிப்பைத்தரவில்லையா?

"c, k, ck, ch, q" ஆகிய ஆங்கில எழுத்துக்கள் "க்" என்கிற ஒரே ஒலியை தரவில்லையா?

உச்சரிப்பே இல்லாத "silent letter" " என்று சில எழுத்துக்கள் இடத்துக்கு ஏற்ப மாறவில்லையா?

தயவு செய்து ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்பு வேறுபடுகளை ஒருகணம் கவனித்துவிட்டு தமிழை குறைசொல்ல துணியுங்கள்.

ஆங்கிலம் மட்டுமல்ல - உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலை இதுதான். இதுகுறித்து பன்மொழி வித்தகர் டோண்டு அவர்களிடம் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.

உச்சரிப்பு வேறுபடு இல்லாத மொழிதான் வேண்டும் என்றால் - அரபி அல்லது இசுபானிய மொழியை உங்களது மொழியாக மாற்றிக்கொள்ளுங்கள். அவற்றில்தான் உச்சரிப்பு வேறுபாடு அதிகம் இல்லையாம்.

மற்றபடி, வரும் சந்ததியினர் கற்கத் தயாராக இல்லாத மொழியாக தமிழ் மாறி வருவதாகக் கூறுவது உங்கள் வீட்டு பிள்ளைகளை மனதில் வைத்து நீங்கள் கூறும் கற்பனையான கருத்தாக இருக்கக்கூடும். தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாய பாடாமாக்கப்பட்டுவிட்டது. தமிழ் இனி வாழும்.

virutcham said...

ஆங்கில மொழியின் குறைபாடுகளை ஆங்கிலம் எப்படி களைந்தது களைந்து கொண்டு இருக்கிறது என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
எங்கள் வீட்டுப் பிள்ளை மட்டும்
இல்லை. இன்று மொழி என்பது மாணவர்களிடம் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை நாம் கவனிக்கத் தவறுவது நமது அறியாமை தான். தமிழை கட்டாய பாடமாக்கி விட்டால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடுமா?

http://kalachuvadu.com/issue-132/page03.asp
(தமிழ், கிரந்த ஒருங்குறிகள்)
காலச்சுவட்டில் வந்திருக்கும் இந்த கட்டுரை தனித் தமிழ் அரசியலாக்கப் படுவது பற்றி கூறுகிறது

அருள் said...

// //ஆமாம் தண்டம் என்றால் என்ன? வெறும் தண்டம் என்று ஒன்றுக்கும் லாயக்கிலாத ஒன்றை அல்லது ஒருவரை குறிக்க பயன்படுத்துவது உண்டு.// //

ஒரே வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு என்பது எல்லோரும் அறிந்த விடயம் - அது உங்களுக்குத் தெரியாதா?

"தண்டம் 1" - எந்த விதப் பயனும் இல்லாமல் போவது; வீண்; waste

"தண்டம் 2" - அபராதம்; fine

"தண்டம் 3" மடங்களின் தலைவர்கள் ஏந்தும் நுனியில் கொடி முடிந்துள்ள நீண்ட கம்பு (நம்ம பெரிய மூங்கில் எனப்படுகிற காஞ்சி சங்கராச்சாரி கோவணத்தை மூங்கில் குச்சியில் கட்டி வைத்திருக்கிறாரே, அதுதான்.)

இப்படி தண்டம் என்பதற்கு மூன்றுவிதமான பொருளை சுட்டுகிறது 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'.

இது தமிழின் தனிச்சிறப்பு அல்ல. உலகின் எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும்.

ஆங்கிலத்தில் உள்ள பல பொருள் சொற்களை இங்கே காண்க:

http://en.wikipedia.org/wiki/List_of_words_having_different_meanings_in_British_and_American_English:_A%E2%80%93L

http://en.wikipedia.org/wiki/List_of_words_having_different_meanings_in_British_and_American_English:_M%E2%80%93Z

dondu(#11168674346665545885) said...

//இதுகுறித்து பன்மொழி வித்தகர் டோண்டு அவர்களிடம் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.//
ஐரோப்பிய மொழிகள் imperfect மொழிகள் என்று கூறப்படுகின்றன. அதாவது எல்லா எழுத்துக்களும் ஒரே போல உச்சரிக்கப்படுவதல்ல. எல்லா உச்சரிப்புகளுக்கும் தனித்தனி எழுத்துக்களும் இல்லை.

ஆனால் இந்திய மொழிகள் அந்த விஷயத்தில் perfect மொழிகள் எனக்கூறப்படுகின்றன. அவற்றிலும் வடமொழி, தெலுங்கு ஆகியவை தமிழை விட அதிகம் perfect மொழிகள். நான்கு க, நான்கு ச, நான்கு த மற்றும் நான்கு ட உள்ளன. என்ன, ழ இல்லை.

தனித்தமிழ் சொற்களை மட்டும் எழுதினால் பிரச்சினையில்லைதான்.

ஆனால், உதாரணத்துக்கு எனது வீட்டு முகவரியில் Plot B-23 என வருவதை தமிழில் பிளாட் பி-23 என்றால், பார்ப்பவர்கள் அது B-யா அல்லது P-யா என குழப்பம் அடைய நேரிடும். இங்கு கூட பரவாயில்லை, பிளாட் B-23 என்றே எழுதி விடலாம். ஆனால் சுலோகங்களில் அவ்வாறு செய்ய இயலாது.

அம்மாதிரி இடங்களிலேதான் தமிழகத்திலே உருவான கிரந்த எழுத்துக்கள் வருகின்றன.

ஆகவே நாம் நமது தமிழை ஆங்கிலம் போன்ற இம்பெர்ஃபெக்ட் மொழிகளுடன் கம்பேர் செய்து அல்ப திருப்தியெல்லாம் படவேண்டாம்.

அதிக பெர்ஃபெக்ட் மொழிகளுக்கு ஈடாக உயர்வோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
அதிக பெர்ஃபெக்ட் மொழிகளுக்கு ஈடாக உயர்வோம்.
//

போச்சு.
வடமொழி தமிழைவிட ஒசத்தி என்று சொல்லிவிட்டீர்களா. இப்பொது பாருங்கள். தூக்கிக்கிட்டு வந்துவிடுவார்கள்.

நீங்களும் உங்கள் ஜாதியும் தான் அவர்கள் டார்கெட். நீங்கள் சொல்லிய கருத்து காணாமல் போகும்வரை பத்திபத்தியாக இங்கிலீசிலும், தமிழிலும் தட்டச்சுவார்கள்.

virutcham said...

@வஜ்ரா
நீங்க சொல்லுவது தான் சரி.
இவர்கள் திட்டும் சமூகம் தமிழை தமிழின் இயல்புக்காக விரும்புகிறது. தமிழ் வளர வேண்டும் என்றால் அது தமிழ் வளர வேண்டும் என்ற ஆர்வம் முயற்சி. ஆனால் இவர்களைப் போன்றவர்கள் செய்யும் தமிழ் சேவை என்பது வட மொழி எதிர்ப்பு என்ற போர்வைக்குள் ஒளிந்து தமிழையும் மூடி வைத்துவிடவே உதவும்.

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //உதாரணத்துக்கு எனது வீட்டு முகவரியில் Plot B-23 என வருவதை தமிழில் பிளாட் பி-23 என்றால், பார்ப்பவர்கள் அது B-யா அல்லது P-யா என குழப்பம் அடைய நேரிடும். இங்கு கூட பரவாயில்லை, பிளாட் B-23 என்றே எழுதி விடலாம். ஆனால் சுலோகங்களில் அவ்வாறு செய்ய இயலாது.// //

B யா? P யா? என்பது குழப்பம் இல்லை. அதற்கும் கிரந்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. பலர் தமது தலைப்பெழுத்தாக ஆங்கில எழுத்தை அப்படியே பயன்படுத்துகின்றனர். அதுபோலத்தான் இதுவும். A-Z ஆங்கில எழுத்துகளை பெரும்பாலானோர் அறிந்திருப்பதால் - இது ஒரு குழப்பம் ஆகாது.

"சுலோகங்களில் அவ்வாறு செய்ய இயலாது" என்று நீங்கள் கூறுவதுதான் உண்மையான சிக்கல். இதற்கு தீர்வு சுலோகங்களை பயன்படுத்த விரும்புவோர் அதற்கான தனி வசதிகளை தமக்குத்தாமே செய்துகொள்வதுதான். விருப்பமுள்ளோர் கிரந்தமோ வடமொழியோ கற்றுக்கொள்ளட்டுமே. அதைவிட்டுவிட்டு பாடபுத்தகத்திலும் யூனிகோடிலும் அதனை எதற்காக திணிக்க வேண்டும்?

வேத மந்திரங்களைக் கேட்கும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறிவிட்டு, இப்போது அதே மக்களை கிரந்தம் படிக்க சொல்வது முரண்நகையாக இல்லையா?

செருப்பின் அளவுக்காக காலை வெட்ட முடியாது என்பது எமது நிலைப்பாடு. செருப்புக்காக காலை வெட்ட வேண்டும் என்பது 'உங்களவா' நிலைப்பாடு - எது சரி என்பதை காலம் சொல்லும்.

R. Gopi said...

\\Plot B-23 என வருவதை தமிழில் பிளாட் பி-23 என்றால்,\\

என்னோட பாயிண்டும் அதுதான். ga, ka எங்கே வரும் என்று விதிகள் நிச்சயம் தமிழில் உண்டு.

சிக்கல் எங்கே வரும் என்றால் பிற மொழி எழுத்துக்கள் பயன்படுத்தும்போது. முடிந்தவரை ஆங்கிலம் பயன்படுத்தலாம் (நடைமுறையில் அதை நாம் அதிகம் பயன்படுத்துவதால்). மற்றபடி எனக்கு எந்த மொழியில் எழுதினாலும் சம்மதமே. உச்சரிப்பு சரியாக வந்தால் சரி.

சில மொழிபெயர்ப்புக் கதைகளில் சரியான தமிழ் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் ஒரிஜினல் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.அதில் தவறேதும் இருப்பதாக எனக்குப் படவில்லை.

Narayanan said...

//@virutcham

ஈரோடு தமிழன்பன் "தண்டம்" என்றே குறிப்பிட்டிருப்பார். "அபராதம்" என்ற வார்த்தையை திணிப்பது சோவின் பார்ப்பன குசும்பு//

arul, i take back my previous comment about you. i thought for once you were sensible. but your hatred overshadows your ability to understand.

Narayanan said...

i second arul in one aspect. most 'tamilians' are not able to pronounce the already available tamil consonants like ள, ழ etc. everything is only ல for them.

இந்த அழகில் புது எழுத்துக்களை வேறு சேர்த்து ஏன் அவர்களை கொடுமைப்படுத்தவேண்டும் என்று கேட்கிறேன்.

Anonymous said...

The Tamil that was before and immediately after Indpendence was the Tamil ruled by Tamil brahmins: more and more sanskrit words brazenly. No one could question them.

The efforts of Pure Tamil Movement, intiated by Non brahmin Tamil scholars, and carried forward vigorously, attractively and dramatically by Dravidian party leaders in the 50s onwards have borne fruits albeit gradually.

உணமை கசக்கும். இன்றைய தமிழுக்கும் அன்றைய தமிழுக்கும் பெரும் வேறுபாடு நன்றாகத் தெரியும் இரண்டையும் ஒப்பிடும்போது.

இன்று வெகுவாக வடமொழிச்சொற்கள் தமிழில் காலொழிந்துவிட்டன். 40 ஆண்டுகால வெற்றியே இப்படியென்றால்,
தனித்தமிழ் இயக்கம் தொடர்ந்து வேறூன்றித் தழைக்குமானால், நாளை பெரும்வெற்றி காத்திருக்கிறது.

ஆழ்வார்கள் எழுதிய தமிழ் அரியணையில் ஏறும்.

எந்த மொழி கலப்பில்லாமல் நிலைக்கிறதோ, அம்மொழி நீண்ட காலம் உலகில் வாழும்.

ஆங்கிலம் கலப்பில் திளைக்கிறது. மேலும் மேலும்.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அதை இரண்டாம் மொழியாகக் கொண்டோர் எண்ணிக்கை பெருகி, அம்மொழி உருத்தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் இங்கிலாந்தில் பரவுகிறது. (’The Last Lingua Franca : English Until the Return of the Babel" by Nicholas Ostler. London Pounds 20 - Allen Lane Publishers)

தனித்தமிழைப் படிப்பதிலும் கேட்பதிலும் உள்ள இன்பம் அலாதியானது.

தனித்தமிழுக்கு எதிர்ப்பு பார்ப்பனர்களிடமிருந்தே வருகிறது. அவர்கள்தான் வடமொழி கலப்பை பண்ணியவர்கள். வடமொழி தானாக வந்து கலக்கவில்லை. அது மட்டுமா ? எண்பது விழுக்காட்டிற்கும் மேலாக வடமொழியைக்கலந்து ஒரு புது நடை: மணிப்பிரவாளத்தை உருவாக்கினார்கள். கேட்டால், அதுவே சமணர்களை வெற்றிகொள்ள வழி என்றார்கள்.

வடமொழி கலக்காமல் எழுதும்போது நகைச்சுவை தரும் என்று சொல்லும் இந்த பார்ப்பனர்கள், ஆண்டாள் தன்னை விட்டுச்சித்தன் மகள் என்று சொல்லும்போது வாய்மூடிக்கிடக்கிறார்கள். ஆழ்வார்கள், ஸிரிதரனை சிரிதரன் என்று சொல்லும்போது நகைச்சுவையாக இருக்கிறது என்று சொல்லமுடியுமா?

ஆழ்வார்கள் வடமொழிச் சொற்களைத் தமிழ்படுத்தி எழுதினார்கள். பார்ப்பனர்கள், இன்று அதைத்தான் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்கே போயிற்று வடமொழியில்லாத் தமிழ் நகைச்சுவை என்ற கிண்டல்?

ஆங்கிலேயர்கள் தூத்துக்குடியை டூட்டுக்குரீன் என்றும் திருநெல்வேலியை டின்னவேலி, அல்லது டிருனெல்வேலி, சென்னையை மெட்ராஸ், மதுரையை மெஜுரா, தஞ்சாவூரைத் டாஞ்சூர் என்று சொன்னபோது அவர்களோடு இவர்களும் சேர்ந்துதான் அச்சொற்களை ஏற்றுக்கொண்டார்கள். அப்போது நகைச்சுவை வரவைல்லையா?

ஆக, வசதிக்கான பேச்சே இது.

நான் இங்கே எழுதிய தமிழில் ஏதேனும் கலப்பிருக்கிறதா? என்ன கெட்டுவிட்டது என் தமிழில்? ஏதேனும் வேண்டா நகைச்சுவையை நுமக்குத் தருகிற்தா?

தனித்தமிழில் எழுதினால் ஒரு செயற்கைத்தன்மை வரும் என்பதை இங்கே நான் எழுதியதிலிருந்து சொல்லவியலுமா?

அருள் said...

Jo Amalan Rayen Fernando said...

// //உணமை கசக்கும். இன்றைய தமிழுக்கும் அன்றைய தமிழுக்கும் பெரும் வேறுபாடு நன்றாகத் தெரியும் இரண்டையும் ஒப்பிடும்போது.

இன்று வெகுவாக வடமொழிச்சொற்கள் தமிழில் காலொழிந்துவிட்டன். 40 ஆண்டுகால வெற்றியே இப்படியென்றால், தனித்தமிழ் இயக்கம் தொடர்ந்து வேறூன்றித் தழைக்குமானால், நாளை பெரும்வெற்றி காத்திருக்கிறது.// //

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

இன்று தினமணி நாளிதழ் இணைய தளத்தில் - 21.12.1976 ஆண்டு தினமணி நாளிதழின் முதல் பக்கம் உள்ளது. அதில் ஒரு செய்தி: "மேட்டூரிலிருந்து ஜலம் விடப்பட்டது" என்று அப்போது வெளி வந்துள்ளது.

காண்க: http://www.dinamani.com/images/pdf/impressions/december/21dec1976.jpg

இப்போது எந்த பத்திரிகையாவது இப்படி "ஜலம் விடப்பட்டது" என்று எழுதுமா?

"நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும்"

Anonymous said...

arul, i take back my previous comment about you. i thought for once you were sensible. but your hatred overshadows your ability to understand. //

Why do you judge people here?

Just go on posting your views, opinions in comments. Let others do so.

Let views vs views.

A person appears to be sensible or not - is a subjective view. Who is interested in that ?

Arun Ambie said...

//தனித்தமிழுக்கு எதிர்ப்பு பார்ப்பனர்களிடமிருந்தே வருகிறது. அவர்கள்தான் வடமொழி கலப்பை பண்ணியவர்கள். வடமொழி தானாக வந்து கலக்கவில்லை. அது மட்டுமா ? எண்பது விழுக்காட்டிற்கும் மேலாக வடமொழியைக்கலந்து ஒரு புது நடை: மணிப்பிரவாளத்தை உருவாக்கினார்கள். கேட்டால், அதுவே சமணர்களை வெற்றிகொள்ள வழி என்றார்கள்.//

ஜோ! மொழியாய்வு பற்றிய பல்வேறு கருத்துக்களையும் படித்தறிந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நீங்கள் மர நிழலில் படுத்துக் கொண்டு மாங்காய் சாப்பிடுபவர் என்பதால் அருளை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பது நீங்கள் முன்பே தெளிவுபடுத்திய விஷயம். (அருளின் நிழல் நீங்களில்லை என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம்.)அதற்காக இப்படியா பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்வீர்கள்?
தமிழ்நாட்டில் அந்தணரை கண்மூடித்தனமாக எதிர்த்தால் ஒரு அறிவுஜீவி அந்தஸ்து கிடைக்கிறது என்பதற்காக இப்படியா?

மணிப்ரவாளம் உருவான வரலாறு வேறு விதம். கீழே தந்துள்ள சுட்டி மொழியாய்வு குறித்த தெளிவுகளைத் தேடுவோர்க்குப் பயனளிக்கும்.

http://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaich10

Anonymous said...

நான் எவனாகவும் இருந்து விட்டுப்போகட்டும். எழுதிய கருத்தை மட்டுமே விமர்சனம்பண்ணினால் நலம்.

வடமொழி எங்கிருந்து வந்தது? அதில் தமிழ்நாட்டில் தோன்றியதா? தமிழர்களுக்கு அது தாய் மொழியா? அல்ல, இரண்டாம் மொழியா?

ஒன்றுமே இல்லை.

அது வடநாட்டிலிருந்துதான் வந்தது. கொண்டுவந்தவர்கள் பிராமணர்கள் (ஏன் இச்சொல் என்றால், ‘பார்ப்பனர்கள்’ என்றால் தமிழ்நாட்டவரையே குறிக்கும்)

எனவே தமிழில் வடமொழியைக் கலப்பு செய்தவர்கள் பிராமணர்கள். அக்கலப்பு வைதீக சமயம் தமிழர்களிடையே வேறூன்றச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்யப்பட்டது.

இன்றும், வடமொழியில்லாம் இந்து வைதீக சமயம் இல்லை.

இதற்கெல்லாம் உங்களிடமிருந்து எதிர்ப்பு வராது. ஏனென்றல் இவை உண்மை. புரட்ட முடியாது. எப்படி இவை குற்றச்சாட்டுகள் ஆகும்?

உங்கள் அடிப்படை நோக்கே தவறாக இருக்கிறது.

வைதீகமதம் வடமொழி வேதங்கள், உபனிடதுகள் வைத்துத்தானே? அவை அனைத்தையும் இன்று கூட தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லையே? காரணம், மந்திரங்கள் அம்மொழியில்தானே ஓதவேண்டும்?

வேதத்தை ஒட்டியே தமிழ் வைணவமாகும்.

‘மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே’ என்பார் நம்மாழ்வார்.

‘வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு’ என்பார் பெரியாழ்வார்.

மதம் வாழ்க்கையில் இரண்டற கலக்கும்போது மதவழி வந்த மொழிநடையும் கலக்கிறது.

It is therefore not correct on your part to use the word 'crimes'. Brahmins just could not help using sanskrit in religious worship. It is unavoidable even today.

But to refuse the above fact i.e it was not brahmins who were responsbible for the entry of sanskirt - is to bury your head in the sand.

அருள் ஏற்கனவே சொல்லிவிட்டார்: அவர் மதம் வைதீகம் கலக்கா ஆதி தமிழர் மதம். There it is possible to do away with Sanskirt. I dont belong to his religion. Therefore, I am different from him.

In other variety i.e Vedic relgion, to which each and every brahmins should belong (இல்லாவிட்டால் அவன் பிராமணன் இல்லே) sanskirt is unavoidable.

Please understand these basic facts. Otherwise, you will be scoring same side goals and I will embarrass you by pointing them out. For ie.

There is absolutely nothing wrong in abundantly using Sanskrit in Vedic relgion.

Anonymous said...

”மணிப்ரவாளம் உருவான வரலாறு வேறு விதம்.”

எழுதியவர்கள் சமணர்களும், பிராமணர்களும்.

இதைப்பொய் என்பாரா அம்பி?

அருள் said...

Arun Ambie said...

// //தமிழ்நாட்டில் அந்தணரை கண்மூடித்தனமாக எதிர்த்தால் ஒரு அறிவுஜீவி அந்தஸ்து கிடைக்கிறது என்பதற்காக இப்படியா?// //

வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும்.

கடந்த நூற்றாண்டில் மணிப்பிரவாள நடை என்பதே, ஒரு பார்ப்பன மொழியாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

அயோத்திதாச பண்டிதரோ, அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கரோ, சேலம் அர்த்தநாரீச வர்மாவோ, தந்தை பெரியாரோ மணிப்பிரவாள நடையை பின்பற்றவில்லை.

மணிப்பிரவாள நடை என்பது தமிழை கொச்சைப்படுத்தியது, இதனை பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர் என்பது உண்மை. இதனை சுட்டிக்காட்டினால் அது பார்ப்பனரை குற்றம் சாட்டுவதாக ஆகிவிடுமா?

கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல என்பது மட்டுமல்ல - அவை உலகின் எந்த ஒரு மொழியிலும் பயன்படுத்தப்படாத எழுத்துக்கள் என்பதையும் கவனிக்கவேண்டும்.

சமற்கிருத வார்த்தைகளை தமிழ் வழியே எழுதமட்டுமே அவை பயன்பட்டன. இப்போது சமற்கிருதத்தின் தேவை கொஞ்சமும் இல்லை. பேசப்படாத ஒரு மொழிக்காக தமிழர்களை வதைப்பது கொஞ்சமும் நியாயமில்லை.

நெல்லை கபே said...

வடமொழியில் அஞ்சு 'க' இருக்கு என்பதனாலேயே தமிழிலும் அஞ்சு கொண்டு வரலாம் என்பது முட்டாள்தனமே அன்றி வேறில்லை...அங்கே 'ழ' இல்லை என்று 'ழ' சேர்க்கச் சொல்வீர்களா...ஆச்சர்யமான ஒன்று...தன் வீட்டுப்பிள்ளைகள் படிக்க இயலவில்லை என்று மொழியை மாற்று என்று சொல்வது....

நெல்லை கபே said...

/பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தரும் போது ஒரு உச்சரிப்பு மட்டுமே சொல்லித் தரப்படுகிறது/
உளறல்....நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்...அல்லது...உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்...?

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //இந்திய மொழிகள் அந்த விஷயத்தில் perfect மொழிகள் எனக்கூறப்படுகின்றன. அவற்றிலும் வடமொழி, தெலுங்கு ஆகியவை தமிழை விட அதிகம் perfect மொழிகள். நான்கு க, நான்கு ச, நான்கு த மற்றும் நான்கு ட உள்ளன. என்ன, ழ இல்லை.// //

இல்லாத கதைகளை எல்லாம் அள்ளிவிடுவதில் நீங்கள் திறமையானவர்தான் போலிருக்கிறது. தமிழ் உலகில் எந்த மொழிக்கும் குறைந்தது அல்ல. உண்மையில் இந்திய மொழிகளில் தனித்தியங்கும் திறன்படைத்த மொழி தமிழ்தான்.

தமிழ் ஒரு தொன்மையான உலக மொழி. தற்காலத்தைய ஏனைய இந்திய மொழிகளைவிட தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

தமிழ் மொழி வேறு மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் தனித்துவமான மரபைக்கொண்ட தற்சார்பு மரபைக்கொண்ட மொழியாக விளங்குகிறது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி மட்டும்தான் வடமொழியினின்று பெறப்படாத இந்தியச் சூழமைவில் தோன்றிய இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இந்திய மொழிகளில் ஏராளமான, உச்ச அளவு வளம் பொருந்திய பண்டைய இலக்கியங்களைக் கொண்ட மொழியாக இருப்பதும் தமிழ்தான்.

எனவே, தமிழை குறைவுடைய மொழியாக சுட்டுவது அறியாமையின் வெளிப்பாடே.

dondu(#11168674346665545885) said...

//எனவே, தமிழை குறைவுடைய மொழியாக சுட்டுவது அறியாமையின் வெளிப்பாடே.//
இவ்வாறு எழுதி நீங்கள்தான் உங்கள் மொழியறிவு குறைவை வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள். பெர்ஃபெக்ட் என குறிப்பிடுவது ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒவ்வொரு எழுத்து இருப்பதுதான்.

ஆங்கிலம் அந்த வகையில் குறைந்த அளவுக்குத்தான் பெர்ஃபெக்ட். ஜெர்மன் மொழி சற்றே அதிகமாக பெர்ஃபெக்ட் என்றெல்லாம் போகும்.

அவை எல்லாவற்றையும் விட தமிழ் மிக அதிக பெர்ஃபெக்ட். ஆனால் வடமொழி இந்த விஷயத்தில் தமிழை விட இன்னும் அதிகமாக பெர்ஃபெக்ட்.

மற்றப்படி பெர்ஃபெக்ட் என்பதற்கு வேறு முக்கியத்துவம் அல்ல.

சுலோகங்களில் உச்சரிப்பு முக்கியம் ஆகவே கிரந்த எழுத்துக்களையும் சேர்க்கும் முயற்சி. இதற்கு எந்த சோகால்ட் இணைய தாசில்தாரும் ஒப்புதல் தர அவசியமில்லை.

இது சம்பந்தமாக முயற்சிகள் நடக்கின்றன. அவ்வளவே. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.

இதில் எந்த மொழியையும் தாழ்த்திப் பேசும் அவசியம் ஆறு மொழிகள் அறிந்த டோண்டு ராகவனுக்கு இல்லை.

டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் said...

// //சுலோகங்களில் உச்சரிப்பு முக்கியம் ஆகவே கிரந்த எழுத்துக்களையும் சேர்க்கும் முயற்சி. இதற்கு எந்த சோகால்ட் இணைய தாசில்தாரும் ஒப்புதல் தர அவசியமில்லை. இது சம்பந்தமாக முயற்சிகள் நடக்கின்றன. அவ்வளவே. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.// //

இது தொடர்பாக முயற்சிகள் நடக்கின்றன என்று "உங்களவா" முயற்சிகளை மட்டுமே சுட்டுகிறீர்கள். இதில் "எங்களவா" முயற்சியையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

யுனிகோடு அமைப்பு ஒவ்வொரு மொழிக்குரிய எழுத்துகளுக்குத் தக இடங்களை ஒதுக்கிவைத்துள்ளது. தமிழ்மொழிக்கு 128 இடங்களை இந்த அமைப்பு வழங்கியுள்ளது. அதில் 72 இடங்களில் மட்டும் தமிழ் எழுத்துகளும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க்குறியீடுகளும், வழக்கில் உள்ள இன்றியமையாதவையாகக் கருதப்படும் கிரந்த எழுத்துகளும்(ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நிரப்பப்படாமல் உள்ள 56 இடத்தில் கிரந்த எழுத்துகள் 26 ஐச் சேர்க்கும்படி சிலர் யுனிகோடு அமைப்புக்குக் கருத்துரு வழங்கியுள்ளனர். அவர்களுள் சிறீரமணசர்மா(காஞ்சி சங்கரமடம்) என்னும் வல்லுநரரும் ஒருவர்.

இதுதொடர்பாக கிரந்தப்புலமை மிக்கவர்களைக் கொண்டு நடத்தப்பெற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக யுனிகோடு ஆணையத்துக்கு இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிரந்தப் புலவர்கள் 14 பேர்களில் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாத்திரி, இரமண சர்மா (காஞ்சி சங்கரமடம்) ஆகிய இரு பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழறிஞர்களோ, கல்வெட்டுத் தொல்லியல் அறிஞர்களோ இக்குழுக்கூட்டத்தில் இடம்பெறவில்லை.

இதனிடயே, இந்த பெருங்கேடு குறித்து அறிஞர்களின் கருத்தறிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் பேராசிரியர் க.அன்பழகன், வைரமுத்து, வா.செ.குழந்தைசாமி, மு.ஆனந்தகிருட்டினன், கனிமொழி, அரவிந்தன், இரவிக்குமார் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர் கூடி ஆலோசித்தனர்.

தமிழறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு உரிய முடிவெடுக்கலாம் என்று முதலமைச்சர் நடுவண் அரசுக்கு ஒரு வேண்டுகோள் மடல் விடுத்துள்ளார்.

இதன் காரணமாக அமெரிக்காவில் நடபெற்ற யூனிகோடு கூட்டத்தில் இப்பொருள் குறித்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.

இனி நல்லதே நடக்கும்.

Arun Ambie said...

@ ஜோ
//”மணிப்ரவாளம் உருவான வரலாறு வேறு விதம்.”

எழுதியவர்கள் சமணர்களும், பிராமணர்களும்.

இதைப்பொய் என்பாரா அம்பி?//

மொழியாய்வுகளைச சற்றேனும் படித்துவிட்டுப் பேசினால் இந்தக் கேள்வி பொருளற்றது என்பது புரியும்.

@அருள்:
//வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும்.//

வரலாற்றை ஓரமாக வைத்துவிட்டு ஆதரமில்லாத/இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் வெட்டி விவாதம் செய்வதற்கு எனக்கு நேரமில்லை, தேவையுமில்லை.

//@ மாயன்:
/பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தரும் போது ஒரு உச்சரிப்பு மட்டுமே சொல்லித் தரப்படுகிறது/
உளறல்....நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்...அல்லது...உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்...?//

மிகச்சமீபகாலமாக (20 ஆண்டுகள் on DR scale!!) எந்தப் பள்ளியிலுமே உச்சரிப்பு வேறுபாடுகள் முறையாகக் கற்றுத் தரப்படுவதில்லை.

உதாரணத்துக்கு ல, ள, ழ ஆகியவை ஒல்லி ல, குண்டு ல, சிறப்பு ல என்று சொல்லித் தரப்படுவதால் என்ன உச்சரிப்புத் துல்லியம் கிடைக்கும்? படிப்பது குண்டு ல போட்ட பல்லியில், சுவற்றில் போவது ஒல்லி ல போட்ட பல்லி என்றா பேசமுடியும்?

"வாளைப்பளம் அளுகி குளுகுளுத்து கீளே விளுந்தது" என்று பேசிவிட்டு, இதுல வர்ர எல்லா 'ள'வும் சிறப்பு ள தான் என்று disclaimer கொடுப்பீர்களா?

அருள் said...

Arun Ambie said...

// //வரலாற்றை ஓரமாக வைத்துவிட்டு ஆதரமில்லாத/இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் வெட்டி விவாதம் செய்வதற்கு எனக்கு நேரமில்லை, தேவையுமில்லை.// //

வரலாற்றை நான் ஓரம் கட்டச்சொல்லவில்லை. மாறாக, "கடந்த நூற்றாண்டில் மணிப்பிரவாள நடை என்பதே, ஒரு பார்ப்பன மொழியாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை" என்று மற்றொரு வரலாற்று உண்மையைத்தான் கூறினேன்.

அதாவது நீங்கள் சுட்டுகிறபடி, சமணர்கள் மணிப்பிரவாள நடையைக் கொண்டுவந்தாலும் பிற்காலத்தில் அது ஒரு பார்ப்பன மொழியாக இருந்தது என்கிற வரலாற்றைதான் நானும் கூறினேன்.

இதில் இட்டுக்கட்ட எதுவும் இல்லை.

// //மிகச்சமீபகாலமாக எந்தப் பள்ளியிலுமே உச்சரிப்பு வேறுபாடுகள் முறையாகக் கற்றுத் தரப்படுவதில்லை. உதாரணத்துக்கு ல, ள, ழ ஆகியவை ஒல்லி ல, குண்டு ல, சிறப்பு ல என்று சொல்லித் தரப்படுவதால் என்ன உச்சரிப்புத் துல்லியம் கிடைக்கும்?// //

ஒட்டுமொத்தமாக எந்தப்பள்ளியிலுமே தமிழ் சரியாக கற்றுத்தரப்படுவதில்லை என்பது ஒரு உத்தேசமான கருத்து. டோண்டு அவர்கள் வார்த்தையில் சொன்னால் - நீங்கள் என்ன பள்ளிதோரும் சென்று கணக்கா எடுத்தீர்கள்?

தமிழ்நாட்டில் ஆங்கிலம் கூடத்தான் முறையாக கற்றுத்தரப்படுவதில்லை என்று கருதப்படுகிறது. அதற்காக ஆங்கில மொழியையா குறைசொல்லமுடியும்?

உண்மையில் - உலகில் எல்லா மொழிகளிலுமே 'கற்பித்தலில்' குறைபாடு சில இடங்களில் இருக்கவே செய்யும். இது ஒரு கல்வித்துறை அமைப்பின் குறைபாடு. இதற்கு தமிழ் மொழியைக் குறை சொல்வது கேலிக்கூத்தான சாக்கு.

நெல்லை கபே said...

/உதாரணத்துக்கு ல, ள, ழ ஆகியவை ஒல்லி ல, குண்டு ல, சிறப்பு ல என்று சொல்லித் தரப்படுவதால் என்ன உச்சரிப்புத் துல்லியம் கிடைக்கும்? படிப்பது குண்டு ல போட்ட பல்லியில், சுவற்றில் போவது ஒல்லி ல போட்ட பல்லி என்றா பேசமுடியும்?/

அப்போ நாலு 'க' நாலு 'ச' நாலு 'த' நாலு 'ப' சேர்த்தால் உங்கள் பிள்ளைகள் இன்னும் சிரமப்படுவார்களே?

Arun Ambie said...

@ மாயன்:
//அப்போ நாலு 'க' நாலு 'ச' நாலு 'த' நாலு 'ப' சேர்த்தால் உங்கள் பிள்ளைகள் இன்னும் சிரமப்படுவார்களே?//
4 காட்சிகள் எந்திரன் படம் பார்த்துவிட்டு ரஜினிக்கு ஐஷ்வர்யா ராய் அக்காவா என்று கேட்ட கதையாக இருக்கிறது. இந்த சிரமத்தை சுலபமாய் சமாளிக்கத்தான் க்ரந்த எழுத்து வேண்டும் என்பது!

@ அருள்:
//தமிழ்நாட்டில் ஆங்கிலம் கூடத்தான் முறையாக கற்றுத்தரப்படுவதில்லை என்று கருதப்படுகிறது. அதற்காக ஆங்கில மொழியையா குறைசொல்லமுடியும்?//
தமிழை டோண்டு ஐயா குறை சொல்லவில்லை. (தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர் வேறொரு ஐயா!) சில விஷயங்கள் தமிழில் செய்யும் போது கடினமாக இருக்கின்றன. சுலபமாக்க வகை செய்யலாம் என்று தான் டோண்டு ஐயா சொல்கிறார். நிற்க.

தமிழ்நாட்டில் VETAவில் ஆங்கிலம் நன்றாகக் கற்றுத்தருகிறார்கள்.

நெல்லை கபே said...

/ இந்த சிரமத்தை சுலபமாய் சமாளிக்கத்தான் க்ரந்த எழுத்து வேண்டும் என்பது!/

'ல' 'ள' 'ழ' என்று இருக்கும்போது உச்சரிப்பில் தவறு நிகழ்கிறது என்கிறீர்கள் ...நாலு 'தா' 'க' 'ச' 'ப' என்று இருந்தால்...மேலும் தவறுகள் தானே நிகழும்...ஒரு 'க' என்று இருக்கையில்...நீங்களும் நானும் தமிழ் சரியாகப் பேசாமலா இருக்கிறோம்...எல்லா மொழிகளிலும் உச்சரிப்பு வேறு, எழுத்து வேறு என்பது இயல்பு...Only problems can be solved...should be solved...Language is not a problem to be solved...

virutcham said...

தண்டம் விளக்கத்தில் உங்கள் உள் நோக்கத்தையும் சேர்த்து விளக்கியதற்கு நன்றி.
இந்த மூன்று தண்டத்தையும் எப்படி உச்சரிப்பீர்கள்? ஒரே மாதிரியா? அல்லது உச்சரிப்பு மாறுமா? context based meaning ஆனால் அதே உச்சரிப்பு தான் என்பதா ?

இங்கே இதை விவாதிப்பதால் தமிழில் வட எழுத்தை புகுத்த நினைப்பதாக நீங்கள் எடுத்துக் கொள்வதை விடுத்து (தமிழ்படுத்திக் கொண்ட வட மொழி எழுத்துக்கள் ஏற்கனவே நிறைய இருக்கு) உண்மையிலேயே தமிழ் அடுத்த தலைமுறைக்கு பயன் பெற வேண்டும் என்ற பொது நோக்குடன் எதிர் வினை ஆற்றவும்.

Arun Ambie said...

//'ல' 'ள' 'ழ' என்று இருக்கும்போது உச்சரிப்பில் தவறு நிகழ்கிறது என்கிறீர்கள்//
ஏதோ நான் இட்டுக்கட்டிச் சொல்வது போல..............தவறு நிகழ்கிறது, சொல்கிறேன்.

//நாலு 'தா' 'க' 'ச' 'ப' என்று இருந்தால்...மேலும் தவறுகள் தானே நிகழும்...//
ல, ள, ழ எழுத்து வேறு பாடுகள் இருப்பதால் தவறு நிகழ்கிறது என்று புரிந்து கொள்ளவாவது முடிகிறது. திருத்திக் கொள்வோர் திருத்திக் கொள்ளலாம். உச்சரிப்புக்கு ஒரு எழுத்து இருந்தே ல, ள, ழ படும்பாடு பெரும் பாடாக இருக்கிறது. ஒரு த, ஒரு ப, ஒரு க என்றால் நாலுவித உச்சரிப்புக்கு வேறுபடுத்திக் காட்டுவதும் கடினம்.

Arun Ambie said...

டோண்டு ஐயாவுக்கு ஒரு கேள்வி.

வெங்காய விலை உயர்வு பற்றிப் பெரியாரிடம் தான் கேட்க வேண்டுமாமே? Your take, please?

அருள் said...

virutcham said...

// //தண்டம் விளக்கத்தில் உங்கள் உள் நோக்கத்தையும் சேர்த்து விளக்கியதற்கு நன்றி. இந்த மூன்று தண்டத்தையும் எப்படி உச்சரிப்பீர்கள்? ஒரே மாதிரியா? அல்லது உச்சரிப்பு மாறுமா? context based meaning ஆனால் அதே உச்சரிப்பு தான் என்பதா ?// //

பெரும்பாலும் தமிழில் ஒரு வார்த்தை ஒரேவிதமாகத்தான் உச்சரிக்கப்படுகிறது. இடத்துக்கு ஏற்ப உச்சரிப்பு மாறாது - பொருள் தான் மாறும். (பலமொழிகளிலும் இது இயல்பான ஒன்றுதான்.)

எடுத்துக்காட்டாக முந்தைய வரியில் 'பொருள்' என்பது 'கருத்து'. அதுவே, கடையில் என்ன பொருள் வாங்கினாய்? என்றால் அது ஒரு கடையில் விற்கப்படும் 'திட அல்லது திரவப்பொருளை'க் குறிக்கும்.

அவன் பொருளாசைப் பிடித்தவன் என்று கூறினால் - அது 'செல்வத்தை'க்குறிக்கும். சூழலியல் என்ற பொருளில் கட்டுரை வரைக என்றால் - அது சூழலியல் 'தலைப்பில்' என்பதாகும்.

இப்படி ஒரு வார்த்தை இடத்துக்கேற்ப பொருள் மாறுவது இயல்பானதே. பொருளுக்கேற்ப உச்சரிப்பு மாறுவதில்லை.

இதற்கும் வேற்று மொழி எழுத்துக்களை சேர்ப்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. வேற்று மொழி எழுத்துக்கள் வந்து இதில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தப்போவதும் இல்லை.

உண்மை இவ்வாறிருக்க "உண்மையிலேயே தமிழ் அடுத்த தலைமுறைக்கு பயன் பெற வேண்டும் என்ற பொது நோக்குடன் எதிர் வினை ஆற்றவும்" என்று நீங்கள் கூறுவதின் பொருள் விளங்கவில்லை.

அருள் said...

Arun Ambie said...

// //ஒரு த, ஒரு ப, ஒரு க என்றால் நாலுவித உச்சரிப்புக்கு வேறுபடுத்திக் காட்டுவதும் கடினம்.// //

அடடா... உங்களது அற்புதமான கண்டுபிடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் ஒரு 'தனித்தியங்கும்' வல்லமை படைத்த மொழியில் நீங்கள் கண்டுபிடித்த இந்த மாபெரும் கண்டுபிடிப்பை எவருமே கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?

அதுசரி... தமிழில் இரண்டு la (ல, ள)இருக்கிறது - இந்த இரண்டுவித உச்சரிப்பை இந்தி - ஆங்கில மொழிகளில் வேறுபடுத்திக்காட்டுவது கடினம் என்று அந்த மொழி அறிஞர்கள் கண்டுபிடிக்காமல் விட்டது எப்படி? உங்களைப்போன்ற கண்டுபிடிப்பாளர்கள் அந்த மொழிகளுக்கு வாய்க்கவில்லையோ?

தமிழின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு வட மொழியில் எழுத்துக்கள் உண்டா? என்பதற்கு உங்களது மேலான பதிலை எதிர்பார்க்கிறேன். ஆம், எனில் - 'ழ' என்பதை எப்படி எழுதுவார்கள்?

ஒருவேளை 'இல்லை' என்று நீங்கள் பதிலளித்தால் -

தமிழின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு வட மொழியில் எழுத்துக்கள் இல்லை என்று அவர்கள் கவலைப்படாதபோது -

வடமொழியின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு தமிழில் எழுத்துக்கள் இல்லை என்று தமிழர்கள் எதற்காக கவலைப்படவேண்டும்?

Sivakumar said...

அருள் சார்,
மற்றொரு சமயத்தில் எனது முதல் பின்னூட்டம் பற்றி விளக்-
க முற்படுகிறேன். மற்றபடி தமிழ் மொழியில் உள்ள ல,ள,ழ நிகரான
தேவநாகரி எழுத்துகள் கீழே:
ल - ல
ळ - ள
ऴ - ழ

அருள் said...

Sivakumar said...

// //தமிழ் மொழியில் உள்ள ல,ள,ழ நிகரான தேவநாகரி எழுத்துகள் கீழே: ल - ல, ळ - ள, ऴ - ழ// //

தங்களது விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் கூறியபடி /ऴ/ எனும் எழுத்து 'ழ' ஒலியைத்தான் தருகிறதா? என்பது இந்தி மொழி அறிந்தோருக்கே வெளிச்சம்.

எனினும், உங்களுக்கு தெரிந்த விளக்கம், இந்தி அறிந்த பிறருக்கு தெரியாமல் போய்விட்டதற்காக வருந்துகிறேன்.

இந்தி தெரிந்தோர் மூடர்களா? -

இல்லாவிட்டால், தமிழ்நாடு என்பதை

तमिऴनाडु என்று எழுதாமல், எதற்காக तमिलनाडु என்று எழுதுகின்றனர்?

தமிழ் மொழி என்பதை

तमिऴ भाषा என்று எழுதாமல், எதற்காக तमिल भाषा என்று எழுதுகின்றனர்?

Arun Ambie said...

//பெரும்பாலும் தமிழில் ஒரு வார்த்தை ஒரேவிதமாகத்தான் உச்சரிக்கப்படுகிறது. இடத்துக்கு ஏற்ப உச்சரிப்பு மாறாது - பொருள் தான் மாறும்.//
இதை மாறாத உச்சரிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறே உச்சரிக்கவும்.
perumpaalum(not perumbaalum) thamizhil oru vaarththai orE vithamaakaththaan (vidhamaahaththaan is wrong under the doctrine of single pronunciation) uchcharikkappatukirathu (not paduhiradhu). itaththukku (not idaththukku)Erpa uchcharippu maaraathu (not maaraadhu). poruL thaan maarum.

திடப் பொருள் என்பதை ஓருச்சரிப்புக் கோட்பாட்டின் கீழ் thitap poruL என்றே சொல்லவேண்டும் dhidap poruL என்றல்ல.

//ஒருவேளை 'இல்லை' என்று நீங்கள் பதிலளித்தால் -// Hypothesisக்கு பதிலளிப்பது உங்களுக்கு நன்றாகவே வருகிறது. அது கற்பனையின் பக்கம் இருக்கட்டும் அருள்.

எழுத்துக்கள் இருக்கின்றன என்று சிவகுமார் எழுத்தோடு காட்டிவிட்டார். இந்த எதார்த்தத்துக்கு பதில் சொல்லுங்கள்.

Sivakumar said...

அருள் கலக்குகிறார்.

நான் எழுத்துகள் இருப்பதைக் கூறினேன். ஆங்கிலேயர்கள் காலத்தில் மொழி மாற்றம் ஆங்கிலம் மூலம் நடைபெற்றதால் வந்த குழப்பம். இங்கிருக்கும் அறிஞர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் கூறி மாற்ற வேண்டிய செயல்.

பெரும்பாலான சமஸ்கிருத பகுதிகள் இவ்வகை எழுத்துகளைக் கொண்டுள்ளன.

அருள் said...

Arun Ambie said...

// //திடப் பொருள் என்பதை ஓருச்சரிப்புக் கோட்பாட்டின் கீழ் thitap poruL என்றே சொல்லவேண்டும் dhidap poruL என்றல்ல.// //

அடடா... எதற்காக குழப்பிக்கொள்கிறீர்கள் - "திடப்பொருள்" என்பதை "திடப்பொருள்" என்றுதான் உச்சரிக்க வேண்டும். இதில் மாற்றி உச்சரிக்க என்ன இருக்கிறது?

இன்னும் நீங்கள் குறிப்பிடுகிற - "பெரும்பாலும், விதமாகத்தான், படுகிறது, . இடத்துக்கு, மாறாது" - இவை அனைத்தையும் தமிழ்வழியே எத்தனைமுறை படித்தாலும் ஒரே உச்சரிப்புதான். இதனை எதற்காக ஆங்கில எழுத்துக்களில் எழுதி குழம்பிப்போகிறீர்கள்?

ஒருமொழியின் வார்த்தைகளை இன்னொரு மொழி எழுத்துக்களில் எழுதிப்படித்தால் இப்படித்தான் குழப்பம் வரும்.

அருள் said...

Arun Ambie said...

// //எழுத்துக்கள் இருக்கின்றன என்று சிவகுமார் எழுத்தோடு காட்டிவிட்டார். இந்த எதார்த்தத்துக்கு பதில் சொல்லுங்கள்.// //

அது எதார்த்தமே அல்ல.

வடமொழியில் / ल - ல, ळ - ள, ऴ - ழ / ஆகிய எழுத்துக்கள் இருப்பதாக அவர் கூறியது ஒரு சமாதானம். அவ்வளவுதான்.

இவற்றில் / ल - ல / மட்டும்தான் பரவலான பயன்பாட்டில் உள்ளது. ஏனெனில், இந்தி மொழி என்றாலே - அவற்றின் மெய்யெழுத்துகளாக क முதல் ह வரைதான் பரவலான பயன்பாட்டில் உள்ளன.

ळ , ऴ இவை இரண்டும் தமிழின் கிரந்த எழுத்துக்கள் (ஸ, ஹ, ஜ, ஷ) போன்று துணை எழுத்துக்கள் மட்டும்தான். அவை பரவலான பயன்பாட்டில் இல்லை.

ஆனாலும், அவர்கள் தமிழ்வார்த்தைகளை எழுத இந்த துணை எழுத்துக்களைக்கூட பயன்படுத்துவது இல்லை என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் தமிழ் மொழியை तमिऴ भाषा என்று எழுதாமல், तमिल भाषा என்று எழுதுவது.

மற்றபடி / ऴ - ழ / இந்த இரண்டு எழுத்துகளின் உச்சரிப்பும் ஒன்றல்ல. ஏதாவது ஒரு இந்திக்காரரிடம் / ऴ / எழுத்தைக்காட்டி, படிக்கச்சொல்லி உங்கள் காதால் கேளுங்கள்.

Arun Ambie said...

@ அருள்:
எழுத்து இருக்கிறதா இருந்தால் காட்டுங்கள் என்று உதார் விட்டீர்கள். சிவகுமார் காட்டியதும் ஒப்புக்கொள்ள முடியாது, அது சும்மா ஒளொலாகட்டிக்கு என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

தமிழின் சிறப்பு என்று கூட்டம் சேர்த்து மார்தட்டும் ழகர உச்சரிப்பு 'தமிழ் படித்த' பலருக்கு வருவதில்லையே? சிறப்பு ளகரம் என்று தானே சொல்கிறார்கள்.

ஆனால் ஸம்ஸ்க்ருதம் படித்தவர்கள் ऴ - ழ உச்சரிப்பு அறிந்தவர்கள், உச்சரிப்பவர்கள்.

iTTiAM said...

Arul Said,

//தமிழின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு வட மொழியில் எழுத்துக்கள் இல்லை என்று அவர்கள் கவலைப்படாதபோது -

வடமொழியின் எல்லா ஒலிகளையும் எழுதிக் காட்டுவதற்கு தமிழில் எழுத்துக்கள் இல்லை என்று தமிழர்கள் எதற்காக கவலைப்படவேண்டும்? //

மிகச்சரியான கேள்வி. இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் வருவதே இல்லை. இந்த புதிய எழுத்துக்களை சேர்க்கும் போது நடக்ககூடிய சிக்கல் என்னவென்றால், இவற்றை உபயோகித்து உச்சரிக்கப்படும் வார்த்தைகள் (அதாவது சமஸ்க்ருத/வடமொழி) நாளடைவில் தமிழே என்று கொள்ளப்படும் மயக்கத்தை தரும். அதன் விளைவாக தமிழில் புதிய சொல் உருவாக்கம் என்பது மட்டுப்படுத்தபடும். மொழி சிதைவுறும். தமிழின் இலக்கண விதிகள் பொருந்தாத தோற்றம் தரும். இது பல கேள்விகளுக்கும் வழிவகுக்கும். தற்போது ஆங்கிலம் குறித்த பகடிகளைபோல.

Sivakumar said...

http://www.unicode.org/charts/PDF/U0900.pdf

iK way,
Please check the above link.
Also, argue like Arul with proper reference.

Check my previous comment on regarding this issue.

அருள் said...

iK way said...

// //இந்த புதிய எழுத்துக்களை சேர்க்கும் போது நடக்ககூடிய சிக்கல் என்னவென்றால், இவற்றை உபயோகித்து உச்சரிக்கப்படும் வார்த்தைகள் (அதாவது சமஸ்க்ருத/வடமொழி) நாளடைவில் தமிழே என்று கொள்ளப்படும் மயக்கத்தை தரும். அதன் விளைவாக தமிழில் புதிய சொல் உருவாக்கம் என்பது மட்டுப்படுத்தபடும். மொழி சிதைவுறும். தமிழின் இலக்கண விதிகள் பொருந்தாத தோற்றம் தரும்.// //

நீங்கள் குறிப்பிடுவது சரிதான்.

யுனிகோடு அமைப்பு தமிழ்மொழிக்கு 128 இடங்களை வழங்கியுள்ளது. அதில் 72 இடங்களில் மட்டும் தமிழ் எழுத்துகளும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க்குறியீடுகளும், வழக்கில் உள்ள இன்றியமையாதவையாகக் கருதப்படும் கிரந்த எழுத்துகளும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நிரப்பப்படாமல் உள்ள 56 இடத்தில் கிரந்த எழுத்துகள் 26 ஐச் சேர்க்கும்படி சிலர் யுனிகோடு அமைப்புக்குக் கருத்துரு வழங்கியுள்ளனர். அவர்களுள் சிறீரமணசர்மா(காஞ்சி சங்கரமடம்) என்னும் வல்லுநரும் ஒருவர்.

இதுதொடர்பாக நடத்தப்பெற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக யுனிகோடு ஆணையத்துக்கு இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிரந்தப் புலவர்கள் 14 பேர்களில் முனைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாத்திரி, இரமண சர்மா (காஞ்சி சங்கரமடம்) ஆகிய இரு பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழறிஞர்களோ, கல்வெட்டுத் தொல்லியல் அறிஞர்களோ இக்குழுக்கூட்டத்தில் இடம்பெறவில்லை.

இதனிடயே, இந்த பெருங்கேடு குறித்து, தமிழறிஞர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு உரிய முடிவெடுக்கலாம் என்று முதலமைச்சர் நடுவண் அரசுக்கு ஒரு வேண்டுகோள் மடல் விடுத்துள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவில் நடபெற்ற யூனிகோடு கூட்டத்தில் இப்பொருள் குறித்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.

ஆக, இப்போது சிக்கல் என்பது "ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ" ஆகிய கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்து அல்ல. ஏனெனில், அவை ஏற்கனவே யூனிகோடில் (தமிழின் இடத்தில்) சேர்க்கப்பட்டுள்ளன.

காண்க: http://unicode.org/charts/PDF/U0B80.pdf

இவை போதாது என்று - தமிழின் இடத்தில் மேலும் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்கும்படி கூறுவது என்ன நியாயம்? எவராலும் பயன்படுத்தப்படாத, 99.9999 % மக்களால் படிக்க முடியாத, உலகின் எந்த மொழியிலுமே இல்லாத கிரந்த எழுத்துக்களை எதற்காக தமிழ் எழுத்துக்களாக காட்டவேண்டும்?

நல்லதந்தி said...

இந்த கட்டுரை பற்றிய எந்த ஒரு கருத்தும் இல்லாமல் இதை எழுதுகிறேன்.
திரு.டோண்டு! (இந்த இடத்தில் மரியாதை விளியாக, ஐயா, போடலாமா? அல்லது சார் போடலாமா என்று பார்த்தேன் எனக்கு இரண்டுமே பிடிக்கவில்லை, அதனால் திரு. இது ஓகே தானே!),முதலில் இந்த unicode குறியீடுகளில் நமக்கு அதாவது தமிழுக்கு கிடைத்த 56 நிரப்பப்படாத இடங்களைப் பற்றிய பேச்சில், ஏன் சமஸ்கிருதத்தை இழுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. அல்லது நீங்கள் இழுக்காமல் மற்றவர்கள் இழுத்தார்களா?. சமஸ்கிருதத்தை இழுக்காமல் ஆங்கிலத்தை உச்சரிக்க இது தேவை என்றால் அருள் போன்றவர்கள் ஒத்துக்கொள்ளத்தான் செய்வார்கள்.
தமிழ் unicode டிற்கு இத்தனை இடம் உள்ளது அதை எப்படி உபயோகமாக நிரப்பிக் கொள்ளலாமென்பதை அரசியல் சார்பும், மதரீதியான அமைப்பு சார்பும் இல்லாத தமிழறிஞர்களும் நன்கு ஆய்ந்து முடிவு செய்து கொள்ளட்டுமே!. நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்!.

ஆனால் ஒன்று நமக்குள் அடித்துக் கொண்டு தமிழுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை விட்டு விடக்கூடாது, என்பது மட்டுமல்ல, வீணடிக்கவும் கூடாது. அதுதான் முக்கியம்.

அருள் said...

@நல்லதந்தி

கிரந்தம் என்பது ஒரு மொழி அல்ல. அது சமற்கிருத வார்த்தைகளை தமிழ்வழியே எழுதுவதற்கான ஒரு ஏற்பாடு. எனவேதான் - இந்த சர்ச்சைக்குள் சமற்கிருதம் இழுக்கப்படுகிறது.

தமிழுடன் சமற்கிருதத்தைக் கலந்து மணிப்பவள (மணிப்பிரவாள) நடையில் எழுத கிரத்தம் பயன்படுத்தப்பட்டது. அதுதான் பின்னர் மலையாள மொழியாக ஆக்கம் பெற்றது. மலையாளம், பர்மிய மொழி, தாய் மொழி, சிங்களம் ஆகிய மொழிகளுக்கான எழுத்துக்கள் கிரந்தத்திலிருந்து தோன்றின.

அதேசமயம் - தமிழ் எழுத்துக்கள் கிரந்தத்துக்கு முன்பே தோன்றியவை. கிரந்தத்தால் தமிழ்மொழிக்கு எந்த பயனும் இல்லை. தமிழரல்லாதோருக்குதான் அது பயன்பட்டது.

மொத்தம் 48 கிரந்த எழுத்துகள் உள்ளன. அவற்றில் "ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ" ஆகிய சில எழுத்துக்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. அவை ஏற்கனவே யூனிகோடில் (தமிழின் இடத்தில்) சேர்க்கப்பட்டுள்ளன. இவை போதாது என்று - தமிழின் இடத்தில் மேலும் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்கும்படி கூறுவது நியாயம் அல்ல.

தேவையெனில், கிரந்தப்போராளிகள் இவற்றை மலையாளம், பர்மிய மொழி, தாய் மொழி, சிங்களம் ஆகிய மொழிகளின் இடத்தில் சேர்ப்பதற்கு முயலட்டும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது