முதலில் தினமலரில் வந்த இச்செய்தியை பார்த்து விடுங்கள். பிறகு என் கருத்தைத் தெரிவிக்கிறேன்
ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று ராஜாவை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சி.பி.ஐ., ரெய்டில் நடந்தது என்ன?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.
ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. கடந்த 8ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். டில்லி, சென்னை, பெரம்பலூர் என 14 இடங்களில் நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், பண பரிமாற்றம் தொடர்பான ராஜாவின் முக்கிய டைரி ஒன்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். சி.பி.ஐ., நடவடிக்கையால், முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ராஜாவை அழைத்து முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.
சி.ஐ.டி., காலனியில் உள்ள இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, நேற்று காலை ராஜா சந்தித்தார். சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், சி.பி.ஐ., ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், முதல்வர் விளக்கம் கேட்டறிந்தார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அடுத்த கட்டமாக ராஜாவை அழைத்து விசாரணை நடத்தி, அவர் தரும் பதில்களின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ராஜாவை விசாரணைக்கு அழைத்தால், அடுத்து என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதனால் யார், யார் சிக்குவார்கள், டைரியில் யார், யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றன, விசாரணையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், முதல்வர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படுமோ என்று, தி.மு.க., தலைமை அஞ்சுகிறது. இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு தயார்: நேற்று முன்தினம் இரவு 12.10 மணிக்கு, டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜா, சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் பேட்டியளிக்கும்போது, "ஸ்பெக்ட்ரம் புகார் குறித்த சி.பி.ஐ., விசாரணை என்பது வழக்கமான நடைமுறை. சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்' என்றார்.
இப்போது டோண்டு ராகவன்.
கருணாநிதி நிச்சயமாகவே கேட்டிருக்கக் கூடிய ஒரு கேள்வியை நான் ஊகிக்கிறேன்.
“என்ன ராசா, நீங்கள் பதவி இழந்து இவ்வளவு நாட்கள் ஆச்சு. உங்களை விசாரிக்கவில்லையேன்னு எல்லோரும் கேள்வி கேட்டு, சுப்ரீம் கோர்ட்டும் அரசுக்கும் சிபிஐக்கும் கிடுக்கிப் பிடி போடுவதும் பல நாட்களாகவே எல்லோரும் பார்த்துத்தான் வந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இப்படியா அஜாக்கிரதையாக டயரியை ரெய்டில் சிக்குமாறு வைப்பது”?
ராசா என்ன பதிலளித்திருப்பார் என்பதை நான் உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
ஆனால் ராசா அப்பால் சென்றதும், கருணாநிதி மேலும் இம்மாதிரி யோசித்திருக்கலாம். டயரியை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேணும் என்பதே ராசாவின் நோக்கமாகக் கூட இருக்கலாம். அப்போதுதானே தன்னுடைய கூட்டாளிகள் மற்றும் புரவலர்களும் மாட்டுவர்? மேலும், இந்த நடவடிக்கைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதாக ராசா கூறுவது எந்த வரைமுறையில் வரும்? அப்ரூவராக மாறினால் தண்டனை கிடைக்காது/கணிசமான அளவில் குறையும் என்பது அவருக்குத் தெரியாதா?
இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதும் கருணாநிதி தன்னைத் தானே கேட்கும் கேள்வியின் விளைவுதானோ?
அது சரி, சுப்பிரமணியன் சுவாமியின் கூற்றுப்படி 10% (ராசா) 30% (கருணாநிதி) சம்பாதித்தவருக்கே இந்த மன உளைச்சல் என்றால் 60% சம்பாதித்தவர் (சோனியா) எவ்வளவு யோசிக்க வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
7 hours ago
11 comments:
//60% சம்பாதித்தவர் (சோனியா) எவ்வளவு யோசிக்க வேண்டும்? //
சூப்பரு
//இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம்// அது மட்டுமா சு சாமி சொல்வது பொல ராஜ உயிருக்கே ஆபத்து வரலாம்... யார் கண்டது. தா. கிருஷ்னனுக்கு அடுத்து ராஜாவோ என்னவோ
i dont think this is a serious attempt by cbi. one more opportunity for the dmk and raja to claim that they are innocent.
what happened to quattrochi. the cbi only let him go.
do you think sonia is such an innocent person to allow cbi to take its own course. all this cbi enquity is only a political stunt.
nothing will come out.
உங்கள் கற்பனை நன்றாக உள்ளது.
நாளை முதல் நான் வலைச்சரத்தில் ஆசிரியராக ஒருவார காலம் எழுதவுள்ளேன். உங்கள் ஆசி தேவை..
பிரபல பதிவரான உங்களுக்குத்தான் விளம்பரம் தேவையில்லையே, அதான்
உங்களை மேற்கோள் காட்டி நான் எழுதிய ஒரு பதினை சுய அறிமுகமாக செய்ய உள்ளேன் நாளை (திங்கட்கிழமை).
@ Madhavan Srinivasagopalan
முற்கூட்டியே எனது வாழ்த்துக்கள்.
ஆசிகளுடன்,
டோண்டு ராகவன்
Eventhough i have good respect for subramanium swami i dont think what he says about sonia is true. We should not take everything what swami says is true. swami's statements should be assimilated with atleast 40% suspicion. My take is MK 60% ,raja 40%. I dont hink sonia or her family has got anything out of this.
//Krishnakumar said...
Eventhough i have good respect for subramanium swami i dont think what he says about sonia is true. We should not take everything what swami says is true. swami's statements should be assimilated with atleast 40% suspicion. My take is MK 60% ,raja 40%. I dont hink sonia or her family has got anything out of this.//
Had this been true, why the hell the Centre should take action so belated? I think unless the top brass at Congress party had some Lion's share, some positive action could have been taken well before.
60% சம்பாதித்தவர் இன்னமும் அதிகமாக யோசிப்பதன் விளைவுதானே அபத்தமான ‘ஒன் மேன் கமிஷன்’, ‘பாஜக’ காலத்திலேயே 60,000 கோடி ஊழல் என்கிற மீடியா செய்தி’, தடாலடி ’சிபிஐ ரெய்டுகள்’?!
இனிவரும் காலங்களில் இன்னமும் இது திசைதிருப்பப்பட்டு, நீர்த்துப் போய், மறக்கடிக்கப்படுவதற்கான அத்தனை சூழ்ச்சிகளும் மத்திய அரசின் மூலமாகவே ’ஜாம் ஜாம்’ என்று அரசு ஆரவாரத்துடன் செய்யப்படும்.
வெட்கக்கேடு ;-(
//அது சரி, சுப்பிரமணியன் சுவாமியின் கூற்றுப்படி 10% (ராசா) 30% (கருணாநிதி) சம்பாதித்தவருக்கே இந்த மன உளைச்சல் என்றால் 60% சம்பாதித்தவர் (சோனியா) எவ்வளவு யோசிக்க வேண்டும்?//
அங்க தான் நீங்க தப்பு பன்றீங்க. மெய்னோ அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர். அவர் கையில் தான் சி.பி.ஐ (I mean CBI). அதனால், அவர் பயப்படத்தேவையில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கிறது. ராசா relaxed-ஆகவே 1 வருடம் கொடுத்த CBI தன் எஜமானி relax-ஆக டைம் கொடுக்க மாட்டார்களா என்ன?
என் கவலையெல்லாம். எடுத்தவனை விடுங்கள். அது இரண்டாம் பட்சம். முதலில் அந்த இலட்சம் கோடிகளை மீட்க வழியுண்டா?
so far nobody else has said such a thing. Pioneer,outlook and open magazines have not linked even an iota of it to sonia. Swamy always tries to link sonia to anything and everything. He even says sonia hired LTTE to finish off Rajiv. I think sonia is trying to clean little bit of the system unlike others. In recent memory no action has been taken against any corrupt politicans unlike the present govt. where heads of some ministers have rolled. I am not claiming that sonia acts 100% against all the corruption charges but atelast a honest attempt is being made by her in some cases which was absent before.
Had the govt. been in majority definetly sonia would have acted against DMK with more honesty.
still the people are believing?வடிவேலு:இன்னுமா இந்த ஊர் நம்ம நம்புது?
Post a Comment