சோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத சில விஷயங்களும் உண்டு. சில சமயங்களில் சோ அவர்களது கருத்தை நான் முதலில் ஆதரிக்கவில்லை. அவற்றில் இரண்டு முக்கிய விஷயங்கள் புலிகள் மற்றும் வி.சிங் பற்றியவை. எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் கிட்டத்தட்ட அத்தனை பேரும் புலிகள் ஆதரவு நிலை எடுத்திருக்க (நான் உட்பட) சோ அவர்கள் மட்டும் அவர்களை முதலிலிருந்தே சரியாகக் கண்டு கொண்டதை காலப்போக்கில் நானும் அறிந்து எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.
வி.பி. சிங் விஷயமும் அவ்வாறே. முதன் முதலில் அவர் ராஜீவ் மந்திரிசபையில் நிதி அமைச்சராக வந்தபோது நானும் மற்றவர்களைப் போலவே அவரை திருவாளர் சுத்தம் என்பதாகவே கணித்திருந்தேன். என்ன சோ இப்படி பேசுகிறாரே/எழுதுகிறாரே என்று திகைப்பும் அடைந்தேன்.
வி.பி. சிங் பற்றி சோ கூறியதை முதலில் பார்ப்போம்.
"வி.பி. சிங் செயலாக இருந்தக் காலக்கட்டம் ஒரு aberration. நான் முதலிலிருந்தே அவரை எதிர்த்து வந்திருக்கிறேன். என்ன, நான் பாரபட்சமாகப் பேசுகிறேன் என நினைப்பது உங்கள் உரிமை. காங்கிரசிலிருந்து வெளியேறியதிலிருந்தே, ஏன் அதற்கு முன்பாகவும் கூட நான் அவரை அதிகமாகவே விமரிசனம் செய்து வந்துள்ளேன். அவரிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்படி சந்திரசேகர், ஹெக்டே, ஜனதா கட்சியில் உள்ள எனது நண்பர்கள் என எல்லோரையும் எச்சரித்தேன்.
ஆனால் அவர்களோ வி.பி. சிங் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு மத்தியில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று மட்டும் விரும்பியதாகவும், தானே பிரதமராகவெல்லாம் ஆசைப்படவில்லை என்ற ரேஞ்சில் மட்டுமே சிந்தித்தனர். ஆனால் நானோ அப்படியில்லை விஷயம் என்றுதான் கூறிவந்தேன். தான் என்னவோ விருப்பமேயின்றி பிரதமராவது போன்ற டிராமாவெல்லாம் போடுவார் என்றும் கூறினேன். அதே போல பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சமயம் சந்திரசேகர் முதுகில் குத்தி வி.பி. சிங்கை பிரதமராக தெரிவு செய்ய உதவிய தேவிலால்தான் வி.பி. சிங்கையும் பிறகு கவிழ்த்து சந்திரசேகர் பிரதமராக வழி செய்யப் போகிறார் என்றும் கூறிய ஒரே பத்திரிகையாளனும் நான்தான். கடைசியில் நான் சொன்னபடித்தான் நடந்தது”.
சோ சொன்னது 100 சதவிகிதம் முற்றிலும் உண்மை. நான் அக்காலக் கட்டங்களிலேயே இதையெல்லாம் துக்ளக்கில் படித்துள்ளேன். பிறகுதான் வி.பி. சிங் பற்றி எனது கருத்தும் அப்படியே எதிராக மாறியது. அவரைப் பற்றி பற்றி சோ மேலும் சொன்னதில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
தான் ராஜீவின் மந்திரி சபையில் அங்கம் வகித்தபோதே பிரதமரைக் கண்காணிக்க வெளி ஏஜென்ஸியின் துணையை இவர் நாடியிருக்கிறார். இதைவிட பெரிய துரோகம் இருக்க முடியாது. அப்போதிலிருந்தே இவரை அபாயமானவர் எனக் கணித்ததாக சோ அவர்கள் கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனில் எல்லாம் இவருக்கு உண்மையான அக்கறையில்லை. ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷன் அறிக்கையை இவர் தூசி தட்டி எடுத்ததற்கு முக்கியக் காரணமே பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் இடையே வந்த கருத்து வேற்றுமை மட்டுமே. அக்கட்சியினரிடமிருந்து பிற்படுத்தப்பட்டோரின் வோட்டுகளை பிரிக்க அவர் செய்த யுக்திதான் இது.
இப்போது டோண்டு ராகவன்.
ஆனால் மண்டல் கமிஷனால் அவருக்கு பிரயோசனம் ஏதும் லேது என்பதே பெரிய நகைமுரண். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த அறிக்கையை, ஆழ்ந்து படிக்காது அதிலுள்ள விஷயங்களை இற்றைப்படுத்தாது அப்படியே அமலாக்கி சொதப்பியதால் வந்த விளைவுகள் இன்னமும் நம்மிடையே உள்ளன. மண்டல் அந்த அறிக்கையை தயாரித்த சமயத்திலேயே அவர் பயன்படுத்திய தரவுதளங்கள் கிட்டத்த 40 ஆண்டுகள் பழமையானவை. ஆக அவர் அறிக்கையை தயார் செய்த சமயத்திலேயே அது காலாவதியான விசித்திரமும் நடந்தது. அதைப் போய் வைத்து வி.பி. சிங் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டியது பற்றி அதனால் வந்த விளைவுகள் சீரியசாக இல்லாதிருந்தால் நாம் இப்போது சிரித்திருக்கலாம். ஆனால் விளைவுகள் பயங்கரமாகப் போனதில் அதுவும் நாம் செய்ய இயலாது.
இப்போது என்ன ஆயிற்றென்றால் பள்ளிச் சிறுவர்களும் ஜாதி பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். தனது குறுகிய சுயநலனுக்காக இந்த மனிதர் நாட்டையே அடமானம் வைத்து விட்டார் என்றுதான் கூறவேண்டும். பாஜக ஆதரவை நீக்கியவுடன் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டு எப்படியாவது தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள அவர் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதிலும் சற்றே ஆறுதல்.
தான் பிரதமராக இருந்தபோது ராஜீவுக்கு தந்த பாதுகாப்புகளை பெருமளவுக்கு குறைத்ததும் இவர் செய்த இன்னொரு குளறுபடி. அதே ராஜீவ் பாதுகாப்பு குறைபாட்டால் இறந்ததும் எல்லா முன்னாள் பிரதமர்களுக்கும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட, அதனாலும் மிக அதிகப் பயன் அடைந்ததும் இந்த மனிதர்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
-
நியூயார்க் நகரின் மையத்தில் அமர்ந்து செய்த ஒரு காணொளி. அந்த இடத்தில்
அப்போது உருவான எண்ணம் அப்படியே வெளிவரவேண்டும் என நினைத்தேன். மைக்
பொருத்துவது வரை ஒரு ...
3 hours ago
70 comments:
You will not beleive I am fan of cho from my seventh or eigth standard/ As a boy I exactly thought V.P.singh is mr.clean and he would clean up indian politics as projected by main stream media. HIndu was is his major supporter. My respect for Mr.Cho increased when I realised his prediction about him was absolutely right. He rightly identified Chandrashekar abd backed him up. Chandrashekar in his short term boldy dismissed anti national DMK govt then and refused to surrender to rajiv Gandhi's blackmail tactics. So came that election.
I totally agree with LTTE issue you said. I too was of same opinion as yours early.
SInce then Mr.Cho is my "Adarsham".
Please post more about our thalaivar.
வி.பி.சிங் பற்றி சோ எழுதியது அனைத்தும் உண்மையென்று பகுத்தறிவு ஜல்லிகளும்,மரம் வெட்டு மைனர் குருப்புகளும் வி.பி.சிங்கைப் பாராட்டுவதில் இருந்தே தெரியவில்லையா?.நேருவும் இதே போல் தேவையில்லாத புகழுடையவர் என்பது எனது கருத்து.
If it is so then why cho is going on supporting and praising miss jeyalalitha ,after seeing all the incidents and corruptions during her two ruling periods?
Hint:- In this week (thuklak issue dated3.12.2008)also he is charging that actor vijaykanth actions are indirectly supporting DMK(powercut in tamilnadu)therby spiltting the anti DMK votebank.
ஊழல் விஷயத்தில் கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை சோ பல முறை கூறியுள்ளார். ஜெயலலிதா தேவலை என்னும் சொல்லும் விஷயங்கள் தீவிரவாதம் மற்றும் புலிகள் விஷயத்தில் அவர் எடுத்த உறுதியான செயல்பாடுகளே. திமுக பதவிக்கு வரும்போதெலாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது என்பதை மறுக்க இயலாது.
இதே ஜெயலலிதாவை சோ 1996 தேர்தலில் முழுக்க முழுக்க எதிர்த்திருக்கிறார். தமாகா - திமுக உடன்பாட்டிற்காக உழைத்தார் என்பதை மறக்கலாகாது.
இப்போது விஜயகாந்தை பார்ப்போம். அவர் தனது முன்னேற்றத்துக்கு தடையாக இப்போதைக்கு அதிமுகாவையே பார்க்கிறார். ஆகவேதான் திமுக எதிர்ப்பை அடக்கி வாசிக்கிறார் என்று சோ கூறுகிறார். விஜயகாந்த் விஷயங்களை இப்படி பார்க்கிறார். அதாவது திமுக பலவீனமான கட்சி. இப்போதைக்கு அது ஆட்சிக்கு வந்தாலும் அதை அடுத்த தேர்தலில் கவிழ்க்கலாம். இப்போதைக்கு அதிமுக வெற்றி பெறாது பார்ப்போம் என்ற நிலையில் அவர் உள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிங்,
தைரியமாக செயல்பட்டவ்ர், வடக்கில் ஒரு ‘பெரியார்’ இல்லை என்று வருந்தியவர்.
ம்..தெற்கில் இர்ந்த்தால் நிறய பேர் வருந்துகிறார்கள் (அவரிடம் வளர்ந்த்வர்களே)
ஆமாண்டாப்பா! நாங்கல்லாச்சும் மரம் வெட்டி மைனர்கள்.ஆனா நீங்கல்லாம் மனுஷங்க மேலேயே மண்ணெண்ணையை ஊத்தி பத்தவச்சவங்கல்லாசே! சும்மா சொல்லக்கூடாது . நம்ம சோ ஆதரிச்ச சந்திரசேகரும் ஆதரிக்கிற சுப்ரமணிசாமியும் எவ்ளோ நல்லவங்கன்னு மக்களுக்கே தெரியும்.விபி சிங் பற்றி பேசவும் ஒரு யோகியதை வேண்டும். அது உனக்கும் கிடையாது. பீய் துடைக்க கூட பயன்படாத துக்ளக் நடத்தும் சோவுக்கும் அந்த அருகதை கிடையாது.
//ஆனா நீங்கல்லாம் மனுஷங்க மேலேயே மண்ணெண்ணையை ஊத்தி பத்தவச்சவங்கல்லாசே!//
ஹலோ பாட்டாளி மன்னிக்க அய்யா பாட்டாளி கோத்ரா இரயிலில் அவங்களே தான் தீ வெச்சிகிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாங்கன்னு தானே லாலு அறிக்கை கொடுத்தார்.
//
பீய் துடைக்க கூட பயன்படாத துக்ளக் நடத்தும் சோவுக்கும் அந்த அருகதை கிடையாது.
//
தோடா, சொந்தப் பெயரில் வந்து கருத்துச் சொல்லக்கூட துப்பு கெட்டவனெல்லாம் யாருக்கு என்ன அருகதை இருக்குன்னு சொல்ல வந்துட்டான்யா.
யாரை யோக்கிய சிகாமணிகள் என்கிறீர்? அரசியலில் ஆட்சி செய்வது ஒரு கலை( பல கொலை ) . எதிர் கட்சிகள் எதையும் எதிர்க்கும். ஆளுங்கட்சி எதையும் செய்யும். பார்க்கிற நாம் எல்லாம் "ஜனநாயகவாதிகள்" . கொலை செய்தல் தூக்கு (மெலிந்தவனுக்கும், வக்கதவனுக்கும்) . முன்ஜாமீன் பணக்கார, அரசியல்வாதிகளுக்கு இதுதான் இந்திய ஜனநாயகம். பாரத மாதா க்கு ஜே
'''பீய் துடைக்க கூட பயன்படாத துக்ளக்'''
Dondo sir,
Next time if you use oopps.. sorry read Thuklak please remember the above. he he he he .......
Your friend
Sathappan
Dondu sir,
I also didnt like the bankrupt politics of VP singh. He was a political disaster. Good that people gave him VRS.
But our traditon is not to speak ill of the dead. May he rest in peace.
I was also one of those who first believed this fellow V.P.singh as if he is going to cleanse the system, particulalry with the way he took up the Bofors issue & promised to bring the guilty to book within 100 days of assuming power. Now all of us know the fate of Bofors probe even after 20 years nobody has been even arrested or questioned. I was disappointed & disillusioned with V.P. Singh mainly because of this.
Though he prides himself as if he is messiah of backward classes, this guy never got himself admitted to any Govt. hospital for treatment to his disease. We can guess the reason must be because of the reservation only. Which politician would like to be killed by a half-baked doctor treating in a Govt. hospital, who got qualified for reasons other than merit? All talks of social equity etc is only for votes & for public consumption & not for practicing.
It is similar to the security situation in the country. All politicians would like them to be covered with highest possible category of security so that they are safe from terrorist act while at the same time they don't bother about what happens to the public due to the scant regard to the nation's security/ intelligence matters.
During last week, when our nation was attacked by nature (cyclone/ rains) in south and terrorists in west, the only good news came from North when this guy passed away.
Good riddance.
வழக்கம் போலவே ஒரு பார்ப்பன புலம்பல். அவ்வளவுதான் , வேறென்ன சொல்ல?
என்னமோ இட ஒதுக்கீட்டாலும் , மண்டல் கமிசனாலும் தான் ஊருக்குள் சாதி வந்தது , சாதியைப் பற்றீ பேசுகிறார்கள் என்பதைப் போல இருக்கிறது இந்தக் கட்டுரை...
சாதி என்ற ஒன்று இருந்தது , அதனால்தான் இட ஒதுக்கீடு என்ற விடயமே வந்தது என்றதொரு அடிப்படை உண்மையைக் கூட கண்டு கொள்ளவில்லை சோ அவர்கள்.
அதில் ஒரு அபத்தமான பின்னூட்டம் வேறு , பகுத்தறிவாளர்கள் வி.பி.சிங் கை பாராட்டுவதால் மட்டுமே சோ சொன்னது உண்மையாகி விட்டதாம்....இதைவிட அபத்தம் வேறென்ன வேண்டும்.?
இந்த நூற்றாண்டில் இந்தியா கண்ட தன்னலமில்லாத மாபெறும் தலைவன் வி.பி.சிங். தலைவர்கள் இறக்கும் தருவாயில் அவரைப் பற்றி நல்லவைகளை பேச வேண்டுமென்பது மரபு...
மரபை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை , இது போன்ற உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களையும் , ஆதாரப்பூர்வமற்ற புழுதி வாரித் தூற்றுதலையுமாவது செய்யாமலிருந்தால் அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.
இறந்த ஒரு மனிதனை பற்றிய பார்வைகளில் கூட நாகரீகம் இல்லாத நாமெல்லாம் தலைவர்களைப் பற்றி பேசக்கூட லாயக்கில்லாதவர்கள்.
முதலில் நம்மை நாம் திருத்திக் கொள்வோம் , பிறகு மற்ற்வர்களை பற்றி விமர்சிப்போம்.
நன்றிகள்
//During last week, when our nation was attacked by nature (cyclone/ rains) in south and terrorists in west, the only good news came from North when this guy passed away//
oru manishalai yennathaan pidikkallanaalum athukkaka ippdai sollutharthu bhagavanukke adukkathungo.
What ever may be the hidden agenda behind mandal commission,the opperessed and backward people have got some relief in education as well as in job.
The so called f.c people have given bad comments because VP.Singh has implemented mandal commision and gave 27 % reservation to O.B.C..
Now it has paved way for reserving 27 % seats in IIT/IIM and other higher studies in india.
The day is not far off, that such reservation may be extended to judiciary also,then only the real social justice will emerge.
mandal kaaththon annal vpsingh avarkaliln athmaa santhi adaiya
pirarththikkiren
மதிபாலா said...
//இறந்த ஒரு மனிதனை பற்றிய பார்வைகளில் கூட நாகரீகம் இல்லாத நாமெல்லாம் தலைவர்களைப் பற்றி பேசக்கூட லாயக்கில்லாதவர்கள்.
முதலில் நம்மை நாம் திருத்திக் கொள்வோம் , பிறகு மற்ற்வர்களை பற்றி விமர்சிப்போம்.
well said mr.மதிபாலா.
Thank you very much for your timely comments at this juncture.
ஒருவர் இறந்த சமயத்தில் அவரை பற்றிய கடும் விமர்சனங்களை தவிர்ப்பது மனித இயல்பு. ஒவ்வொரு அரசியல்வாதியும் நல்லவைகளையும் செய்து உள்ளனர். அஞ்சலி செலுத்தும் சமயத்தில் அவற்றை பற்றி எழுதலாமே. இல்லை, அப்படி எழுத பிடிக்கவில்லை என்றால், எழுதுவதை தவிர்க்கலாம்.
1.கலைஞர் அவர்களின் குடுமபத்தில், கழக உடன்பிறப்புக்களின் மகிழ்ச்சியை கூட்டும் வகையில் நடந்த சமரசம் எப்படி,யாரால் நடத்தப்பட்டது?
2.சமரசம் தொடருமா?
3.மதுரை மாவீரன் அழகிரி திடிரென சமாதானம் புரியாத புதிராய் உள்ளதே?
4.ஸ்டாலின் அவர்களுக்கு லயன் க்ளியரா?
5.இனி கேப்டன் கதை அவ்வளவுதானா?
6. அம்மையார் ஜெ.யின் கனவும் கலைந்துவிட்டதா?
7.இனி கலைஞர் டீவி தொடருமா?
8.கலைஞர்+சன் குழும செய்தி சேனல்கள் முன்னால் மத்தவை எல்லம் காற்றில் கரையும் பெருங்காயமாகுமா?
9.அரசு டீவி,ராயல் கேபிள் விஸன் ஆகியவற்றின் எதிர்காலம்?
10.ஸ்பெக்டரம் சர்ச்சை அடங்குமா? எகிறுமா?
11.2000 கோடி பெற்றதாய் செல்லப்படுபவ்ர் தனிமைபடுத்தப்படுவாரா?
12.இரண்டாம் அக்னிநட்சத்திரமா?(பிரபு ,கார்திக்,மணிரத்னம் கூட்டணி)
13.மதுரை தினகரன் வழக்கு என்னவாகும்?
14.பெரியவரின் நிம்மதி அவரது 85 வது வயதில் குருப்பெயர்ச்சி தந்த அருளா?
15.ஸ்டாலினைவிட தயாநிதி படித்தவர்,பண்பாளர்,இளைஞர்,நிர்வாக இயல் படித்தவர்,திறைமைசாலி... இதில் தங்களுக்கு மாற்று கருத்து உண்டா?
1.இந்தியாவில் நடைபெற்றுவரும் பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை தேடி கைது செய்வதை முனைப்புடன் செயல் பட தடுப்பது இஸ்லாமியர் ஓட்டு வங்கியா?
2.அமெரிக்கா செய்ததுபோல் இந்தியாவும் ராணுவரீதியாக ஆக்கிரமிப்பு பகுதிகளில் தீவிரவாதிகளின் செயல் திட்டத்தை முழுவதும் முடக்கலாமே?
3.கேரள முதல்வருக்கு என்ன ஆச்சு? இப்படி ஒரு சிக்கல்?
4.பம்பாய் ஸ்டார் ஹோட்டல் களுக்கு தீவிரவாதிகளின் செயலால் சேதம் மதிப்பு எவ்வளவு இருக்கும்?
5.புல்லட் புரூப் கோட்டுகளிலும் உழலா?
ஆமா, வி.பி.சிங் பார்பனர்களுடைய மடியில கைவெச்சா, நம்ம சோ சும்மாயிருப்பாரா, இதுவே அவுரு பார்பனர்கள் பாவம், நாதியற்று கிடக்கிறார்கள், அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பாரானால், சோ மட்டும் என்ன, ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரை ஒரு குறை தீர்க்க வந்த தூயவராகத்தான் பார்த்திருக்கும். ஆனால் அந்த ஆளோ, பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன், சாமானத்திலிருந்து பிறந்தவன், குண்டியில் இருந்து பிறந்தவனுக்கெல்லாம் வாரி வழங்கினால் நாங்க பொறுத்துக்குவமா?
எல்லாத்துக்கும் மேல சோ ஜெயலலிதாவையும் கண்டிக்கறாராம், அவ ஒரு பாப்பாத்திங்கற ஒரே காரணத்துனால தான் சோ அவ என்ன செஞ்சாலும் " ஜெயலலிதா ஒரு வீர மங்கை, தமிழகத்துக்கு கிடைத்த ஒரு அற்புத தலைவர் " அப்டீன்னெல்லாம் புகழ்றாரு, அதே அந்தப் பொம்பள ஒரு வேற சாதிக்காரியா இருந்தா, அவளோட திரைப்பட கால வாழ்க்கையை அலசுவதிலிருந்து, அவ எவ்வளவு ஒழுக்கமானவன்னு துக்ளக்குல ஒரு சிறப்பு பதிவே போட்ருப்பாரு,
இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் நீங்க மாத்திரம் திருந்தவே மாட்டீங்கடா!!!
//மணிகண்டன் said...
ஒருவர் இறந்த சமயத்தில் அவரை பற்றிய கடும் விமர்சனங்களை தவிர்ப்பது மனித இயல்பு. ஒவ்வொரு அரசியல்வாதியும் நல்லவைகளையும் செய்து உள்ளனர். அஞ்சலி செலுத்தும் சமயத்தில் அவற்றை பற்றி எழுதலாமே. இல்லை, அப்படி எழுத பிடிக்கவில்லை என்றால், எழுதுவதை தவிர்க்கலாம்.//
எழுதுவதும் எழுதாததும் அவங்க அவங்க இஷ்டம். வி.பி.சிங் போன்ற ஓட்டு பொருக்கிகளுக்கெல்லாம் இதவிட கேவலமான அர்ச்சனைகள் கிடைக்க வேண்டும்.
டோண்டு சார்,
கடைசியில் பதிவுலக சிங்கம் உங்கள் கேள்வி பதிலையும் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டாரே?
அவர் வசவுகள் எல்லை தாண்டுகிறது.
மனத் தாங்கல் ஏதாவது இருக்குமே ஆனால் பேசித் தீர்க்கலாமே?
இனி சேரவே மாட்டார்கள், சேர விடமாட்டேன் என்றவர்களெல்லாம் சமரசம் ஆகும் போது, இரு நல்ல நண்பர்களுக்குள் இது தேவை இல்லையே.
இருவரின் அடுத்த பதிவு சமாதான
,சமரச, சந்தோசச் செய்தியை சகோதர உணர்வுடன் பெருமையுடன்,
தாங்கி வரவேன்டும்.
நாளயப் பொழுது நல்லதாய் விடியட்டுமே!
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
இறையாற்றல்
கருணைபுரியட்டும்.
பரஸ்பர நல்லுணர்வு மலர்ந்து மணம் வீசி , தோழமை பாசத்தோடு பண்புபோற்றி சிறக்கட்டுமே!
My only Question to pro-Mandal pro-VPS here:
do u really think Goundars, Vanniyars as backwards?
Last time I checked they were the most powerful lobby in all parts of TN for more than a century enslaving and torchering the Dalits. Quota for Oppressed Dalits is Fine, but why the f§è&ég quota for their Oppressers too?????
பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் பிராமணரல்லாத முற்பட்ட சமுகத்தினர் தான். இதில் சிறப்பு அம்சம் என்ன வென்றால் பிராமணரை கல்வி கேள்விகளில் வெற்றி கொள்ளமுடியாத முற்பட்ட சமுகத்தினரில் ஒரு பகுதியினர் நீதிக் கட்சி தொடங்கி அது தி.க வாய் மாறி தி.மு.க/அதிமுக/மதிமுக என கிளை பரப்பி இருப்பது உண்மையல்லவா?(திமுக அன்பழகன், அதிமுக விசலாட்சி நெடுஞ்செழியன்,காங்கிரஸ் ஜெயந்தி நடராஜன் போன்றோர்)
பிராமண சமுகத்தினர் தகவல் தொழில் நுட்பத் துறை,விளம்பரத்துறை,கம்பெனி நிர்வாகம் என அரசு வேலைகளை நம்பமால் வெகுவாய் முன்னேறிவிட்டனர் என்பது கண்கூடு.
திரும்ப திரும்ப பிராமணர்களை மட்டும் தாக்குவது ஏற்புடையதல்ல?
பிராமணர்களைவிட மற்ற ஆதிக்க சாதிகள்தான் ஒடுக்கப்பட்டோருக்கு சொல்லெணாத் துயரத்தையும் துன்பத்தையும் தந்தனர் என்ற வரலாற்றை மறந்து
இட ஒதுக்கீடு என்றாலே அப்பாவி பிராமணர்கள் மீது மட்டும் (குறிப்பாய் டோண்டு ராகவன்,பத்திரிக்கையாளர் சோ,நரேந்திரமோடி,அத்வானி)பாய்வது ஏனோ?
டோண்டு ராகவன் சாரின் உடன் பதிலென்ன?
//
'''பீய் துடைக்க கூட பயன்படாத துக்ளக்'''
Dondo sir,
Next time if you use oopps.. sorry read Thuklak please remember the above. he he he he .......
Your friend
Sathappan
//
டேய் @த்தப்பன், நீ கழுவுறவன் இல்லையா, தொடைக்கிறவனா நீயி ? கருமம் டா சாமி.
மொதல்ல போயி கழுவுடா...
//திரும்ப திரும்ப பிராமணர்களை மட்டும் தாக்குவது ஏற்புடையதல்ல?
பிராமணர்களைவிட மற்ற ஆதிக்க சாதிகள்தான் ஒடுக்கப்பட்டோருக்கு சொல்லெணாத் துயரத்தையும் துன்பத்தையும் தந்தனர் என்ற வரலாற்றை மறந்து
இட ஒதுக்கீடு என்றாலே அப்பாவி பிராமணர்கள் மீது மட்டும் (குறிப்பாய் டோண்டு ராகவன்,பத்திரிக்கையாளர் சோ,நரேந்திரமோடி,அத்வானி)பாய்வது ஏனோ?//
இந்த அனானி ஐயாவுக்கு எங்கிருந்து ஞானம் வந்துதுன்னு தெரியல,
ஐயா, ஆதிக்க சாதிகளோ, இல்ல பிரம்மனின் தலையிலிருந்து பொறந்த சாதிகளோ எவனோ ஒரு கருமந்தரம் புடுச்சவனுகளெல்லாம் சேர்ந்து தாண்டா மனுஷனையே மனுஷனோட மலம் அள்ள வெச்சீங்க, இதுல வேற மோடிங்கற தீவிரவாதி சொல்றான், மலம் அள்ளுறது புணியமான வேலையாம். அப்படீன்னா ஒவ்வொரு பார்ப்பானும், பாப்பாத்தியுமா போய் அந்த புண்ணியத்தை வாங்கி கட்டிக்க வேண்டியதுதான, இதுல வரலாறு வேற பிராமிணர்களை அப்பாவின்னு சொல்லுதாம், எங்க அந்த வரலாற்றை காட்டு பார்ப்போம்.
ஆதிக்க சாதின்னு அதென்ன புதுசா ஒரு சாதி, இவிங்க பிரம்மனோட எதிலிருந்து பிறந்தாங்க???
அது யார்ரா அந்த அப்பாவி பிராமிணன்? நீ சொல்லிருக்கற (டோண்டு ராகவன்,பத்திரிக்கையாளர் சோ,நரேந்திரமோடி,அத்வானி) இவிங்க தானா?
முதல்ல மூஞ்சிய காட்டிட்டு அப்புறமா இந்த் பூணூல் பசங்களுக்கு வக்காலத்து வாங்கு, அவுனுங்களாட்டவே ஏண்டா அனானியா வர்ரீங்க?
பாட்டளியின் கூட்டாளி said...
ithu 2 muchunga
பாட்டாளியின் கூட்டாளி @த்த்ப்பன் என்று எழுதினால் எப்படி படிக்கிறது. அது "சா" வா அல்லது "சூ" வா
குப்புக் குட்டி
என்று தணியும் இந்த பிராமண துவேசம்
என்று குறையும் தராசுகளின் கோபம்.
போன தலைமுறையில் நடந்த தவறை
60 ஆண்டுக்குப் பின்னும் ப்ளஸ்பேக்காய்
காலம் ரொம்ப மாறிப் போச்சு
சமத்துவம் இப்போ ஆட்சி செய்யுது
- ராமசாமி
// Anonymous said...
பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் பிராமணரல்லாத முற்பட்ட சமுகத்தினர் தான். இதில் சிறப்பு அம்சம் என்ன வென்றால் பிராமணரை கல்வி கேள்விகளில் வெற்றி கொள்ளமுடியாத முற்பட்ட சமுகத்தினரில் ஒரு பகுதியினர் நீதிக் கட்சி தொடங்கி அது தி.க வாய் மாறி தி.மு.க/அதிமுக/மதிமுக என கிளை பரப்பி இருப்பது உண்மையல்லவா?(திமுக அன்பழகன், அதிமுக விசலாட்சி நெடுஞ்செழியன்,காங்கிரஸ் ஜெயந்தி நடராஜன் போன்றோர்)//
Is it true?
dondu sir please explain
தராசு,
ஏங்கன்னு இப்படிக் குதிக்கிற, குளிர்ந்த தண்ணியில குளிச்சுட்டு வீட்டுல தூங்குடா செல்லம். ரொம்ப டென்ஷன் உடம்புக்கு ஆகாது கண்ணு. பொதுப் பிரச்சனைக்கு நீ
ஏண்டா இப்படி கஷ்டப்படுற, இருக்கிற மூளைய ஏன் இப்படிக் கசக்கிற
-மகுட பூபதீஸ்வரன்
குப்புக் குட்டி sir,
My name is sathappan with 'S' only Not SU..
Check your back and close your VA-SU
Sathappan
Anonymous said...
My only Question to pro-Mandal pro-VPS here:
do u really think Goundars, Vanniyars as backwards?
Last time I checked they were the most powerful lobby in all parts of TN for more than a century enslaving and torchering the Dalits. Quota for Oppressed Dalits is Fine, but why the f§è&ég quota for their Oppressers too?????//
It is told that the benefits of 27 %(BC) & 20 % (MBC) caste based reservation are cornered by some castes.
western region:- gounders and naidus(BC)
northern region:- vanniyars (MBC)
southern region :- thevars(MBC)
nadars(BC).
The other backward caste people, whose voting strength is limited, are not getting their legitimate share even after 40 years of reservation regime.
It is written in one of the tamil weeklies,that some people belonging to forward community( not biramins)have managed to get BC certificate and got berth in reservation.
Who is going to help the backward minorities of backward castes?
who will render the real social justice?
Who can bell the cat?
Will the saviour of backward caste Kaligar do somthing as he has done somthing in sc/st reservation (inner allotment)?
Tharasu,
//அவுனுங்களாட்டவே ஏண்டா அனானியா வர்ரீங்க?//
What moral right you have to ask others this question? First of all you don't have the guts to show your true identity & you are calling the kettle black?
//sathappan said...
குப்புக் குட்டி sir,
My name is sathappan with 'S' only Not SU..
Check your back and close your VA-SU
Sathappan//
SABAS
SARIYANA
SATTAIYADI
SARI
SATHTHAPPAN
SIR
ATHU YENNA VA-SU
///இப்போது என்ன ஆயிற்றென்றால் பள்ளிச் சிறுவர்களும் ஜாதி பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்///
அனானி அண்ணனுங்களா,
எங்க போயிருந்தீக, இப்பத்தான் வந்தீகளா, இல்ல முதல்லிருந்தே இந்த சிண்டு முடியறதெல்லாம் நீங்க தானா?
இப்ப பள்ளிகூட பசங்கெல்லாம் ஜாதிய பத்தி பேசறாங்கன்னா, ஜாதியை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வைச்சதே இவிங்க தான், இவிங்களுக்கு சாதகமா இருக்கறவரைக்கும் சாதி ஒரு பெரிசா தெரியல, ஆனா அவசியமா தெரிஞ்சுது, என்னைக்கு மலம் அள்ளறவன் எல்லாம் முழிச்சுட்டு மண்டையில போட ஆரம்பிச்சானோ, உடனே இந்த பச்சோந்திகளெல்லாம் அய்யோ, சாதிக்கொடுமையை பாருங்கோ, ப்ள்ளிக்கூட பசங்கெல்லாம் சாதி பத்தி பேசறாங்கோனு நீலிக் கண்ணீர் வடிக்கறாங்கோ.
இதை தட்டிக் கேட்டா எனக்கு பார்ப்பன் துவேஷினு முத்திரையா?
என்ன கொடுமைய்யா இது???????????????
அண்ணே கருணாநீதி அண்ணே,
இங்க முகம் காட்டாம் ஒளிஞ்சுட்டு பேசறது யாருண்ணே?
எனக்குன்னு ஒரு Blogspot இருக்குண்ணே, அங்க போய் பாருங்க, நான் யாருன்னு தெரியும்.
ஆனா மத்தவங்களை பாத்து விரலை நீட்டுறதுக்கு முன்னால உங்க மௌதுகை கொஞ்சம் பாருங்கண்ணே, உங்களுக்கு ஏதாவது முகவரி இருக்காண்ணே, முதல்ல அத சரி பண்ணீட்டு, அப்புறமா அவங்களுக்கு வக்காலத்து வாங்குங்கண்ணே
//நேருவும் இதே போல் தேவையில்லாத புகழுடையவர் என்பது எனது கருத்து.//
எனக்கும் இதே கருத்து உண்டு !
Thambi Tharasu,
So what if you have a blog? As long as you don't display your real name or identity, you stove, don't call any kettle black. Understand?
I know when questions on "morality" is raised, you guys obviously can't answer straight, isn't it?
BTB, also try and learn to read names properly before starting blogs or writing comments in blogs.
//எனக்குன்னு ஒரு Blogspot இருக்குண்ணே, அங்க போய் பாருங்க, நான் யாருன்னு தெரியும்.//
தராசு
Gender: Male
Industry: Human Resources
Location: Chennai : India
My Blogs Team Members
தராசு
Is this the full information about the great "tharasu"
Anonymous = other option(name w/o url)=Google/Blogger w/o any information such as original name,age..etc.
ALL ARE SAME ONLY.
YAAR SOLLUKIRARKAL YENPATHALLA
YENNA SOLKIRAR
YEPPADI SOLKIRAR
YENTHA NOKKATHTHIL SOLKIRAAR
Dondu sir allowing such comments ( from all the three types cited above)after editing only.
please give your opinion on the subject.
May I request dondu sir to give a verdict on this dispute since he has conduted a great war and got success in that battle against "poli"
என்ன சாத்தப்பன்,
நான் பாட்டாளியின் கூட்டாளி கிட்ட தானே சந்தேகம் கேட்டேன். நீங்க எதுக்கு பதில் சொல்றீங்க! உங்களை மாதிரி அவரும் இங்க்லீசில் எழுதியிருந்தால் நான் கேட்டே இருக்க மாட்டேன். நீங்க நாகரீகம் இல்லாம கமென்ட் எழுதுற ஆள் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது "@" இதுக்கு தப்பா அர்த்தம் வந்த்துடப் போகுதேன்னு கேட்டேன்.ஸாரிங்க சாத்தப்பன் நீங்க இவ்வளவு மனசு வருத்தபட்டத்தை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமாகி போச்சு. . ரியலி ஸாரி!! மனசிலே இருந்து அதை அழிச்சிடுங்க ப்ளீஸ் ! வலை தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் , தயவு செய்து யாருடைய பெயரையும் கொச்சை படுத்தாதீர்கள்.
- குப்புக் குட்டி.
வெள்ளிக் கிழமைக்கு,
"நாட்டுக் கோட்டை" என்று ஏதேனும் ஊருக்குப் பெயர் இருக்கா? அது எங்க இருக்கு?
வட்டிக் கடை என்றதும் சேட்டு தான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்ப தமிழர்களுக்கு இந்த தொழில் சேட்டு மூலம் தான் தெரியுமா ?
காசு நிறைய இருந்தும் சிலவே செய்யாமல் (ஆடம்பரத்துக்கு அல்ல அத்தியவசியத்துக்கே) வாழ்க்கை முழுதும் சிலர் உழல்கிறார்களே அது பரம்பரை வியாதியா ? எனக்கு தெரிந்து ஒரு சமுதாயத்தில் ஒரு கூட்டம் அப்டியே வாழ்கிறது.
அப்பச்சி என்ற சொல்லுக்கு தாத்தா என்று அர்த்தமா! திருநெல்வேலிக்கார்ர்கள் -டம் இன்னும் இந்தச் சொல் வழக்கத்தில் இருக்கிறதாமே!
சில பேருக்கு மஞ்சள், "படிக்க" சிலருக்கு நீலம், "பார்க்க" சிலருக்கு பச்சை, "பேச" சிலருக்கு சிவப்பு, "போக" -பிடிப்பது ஒரு வகையில் மன விகாரங்களுக்கு வடிகால் தேடும் உளரீதியான செயல் என்கிறார்கள். வலையில் யாரையேனும் கருத்துகளால் சாடமுடியாத போது அசிங்கமாக எழுதுகிறார்களே ! இது ஒரு நோயா அல்லது இது தான் எண்ணுக்குத் தெரியும் என்ற இயலாமையா ?
-குப்புக் குட்டி
/// இந்த நூற்றாண்டில் இந்தியா கண்ட தன்னலமில்லாத மாபெறும் தலைவன் வி.பி.சிங். தலைவர்கள் இறக்கும் தருவாயில் அவரைப் பற்றி நல்லவைகளை பேச வேண்டுமென்பது மரபு...///
மதிபாலா அவர்களே ! இப்படி நல்ல விதமாக எழுத எனக்கும் ஆசைதான். ஆனால் இப்படி ஒரு அயோக்யதனமான பதிவை கண்டதும் கோபமாகிவிட்டேன்.ஆனாலும் தனி சுற்றுக்காக மட்டுமே நடத்தப்படும் துக்ளக் பற்றி மாற்று கருத்து இல்லை.
நல்லதந்தி அவர்களுக்கு கோத்ரா மட்டும் தான் தெரியும் போல.நான் சொல்லுவது நம்ம பி ஜெ பி காரனுங்க மண்டல் கண்டன ஆர்பாட்டத்தின் போது கூட இருக்கிறவன் மேலேயே மண்ணெண்ணெய் ஊத்தி கொளுதுனத்தை பற்றி.
///வி.பி.சிங் போன்ற ஓட்டு பொருக்கிகளுக்கெல்லாம் இதவிட கேவலமான அர்ச்சனைகள் கிடைக்க வேண்டும்.///
அ ஆ அவர்களே, ஓட்டு பொறுக்கிகளுக்கு ஆர்ச்சனை தானே, கொடுத்துட்டா போச்சு. வி பி சிங் ஓட்டு பொறுக்கின்னா அத்வானி ஓட்டு ஊம்பி. வாஜ்பாய்...வேண்டாம் ... வாய கிளறாதீங்க...!
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
//நேருவும் இதே போல் தேவையில்லாத புகழுடையவர் என்பது எனது கருத்து.//
எனக்கும் இதே கருத்து உண்டு //
நவ இந்தியாவின் சிற்பி என போற்றி புகழப்படும் பண்டிட் நேருஜி அவர்களை குற்றம் சொல்லுவது அந்த கடவுளுக்கே அடுக்காது.
அவரது ஆட்சிக் காலம் வரை இப்பொழுது தலைவிரித்தாடும் ஜாதீய/மத உணர்வுகள் ஒரளவுக்கு கட்டுக்குள் இருந்தன.
sons of the soil எனும் வெறிக் கோஷம் அறவே கிடையாது.
மாநிலங்கள் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில்.
லஞ்ச,லாவணய அரசியல் வியாபாரம் மிக மிகக் குறைவு.
மாநிலக் கட்சிகளை கட்டுப் படுத்தி ஒரே இந்தியாவை கட்டிக் காத்தார்.
அவரால் நிர்மாணிக்கப்பட்ட கோயில்களாம் பொதுத்துறை நிறுவனங்கள் தான் இன்றய பொருளாதார சிக்கலில் நமது பாரதத்தை ஒரளவுக்கு காப்பற்றியுள்ளது என்று தெரிந்த பிறகும் எப்படி சொல்ல முடிகிறது.
இறுதியாக ஆனால் உறுதியாய் சொல்லலாம்,
ஓட்டு பொறுக்கி அரசியல் கடைசி வரை பண்ணாத பண்பாளர் அவர்.
ஆசிய ஜோதியை நன்றியுடன் ஒவ்வொரு இந்தியனும் வணங்கி மகிழவேண்டும்.
பின்குறிப்பு:
1964 லிருந்து 12/2008 வரை நடந்துள்ள அரசியல் மாற்றங்கள்,அமைக்கப் பட்ட கமிஷன்கள்,அரசியல் தலைவர்கள் அடித்த அந்தர் பல்டிகள்,சேர்த்த பெரும் சொத்துகள்,கட்சி/அணி மாற்றங்கள்...இவைகளை கணக்கில் கொண்டு முடிவு எடுக்கவும் நண்பர்களே!
ஒலகமே அதிரும்படியாக இந்தியாவில் ஒரு பயங்கர சம்பவம் நடந்திருக்கு அத பத்தி ஒன்னும் எலுதாம எவனோ ஒரு லூசு, பாப்பானுங்களுக்கு ஆப்பு வச்சானாம் அவன் செத்துப்பூட்டானாம் அது இவனுங்களுக்கு ஒரே கொண்டாட்டமாகீது.
இதனால தான் இந்த பாப்பர பயலுகள இந்தியாவிலிருந்து தொரத்தனும்னு பெரியான் சொன்னாம்போல.
இவனுங்க எல்லாம் இந்தியனுன்ங்களா? இச்சுரேலில நடந்திருந்தா பதிவு போட்டு வெடிப்பானுங்க. கேவலம் புடிச்சவனுங்க.
Don’t worry குப்புக் குட்டி sir,
It’s only a Nick name which my girl friend usually calling me.You want to know who is my girl friend?
Thanks for your Matured mind!
///நீங்க நாகரீகம் இல்லாம கமென்ட் எழுதுற ஆள் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது////
I know your நாகரீகம் .
Your friend,
Sathappan
தமிழகத்தில் மேல் ஜாதிகளை எல்லாம் (பார்ப்பானர், முதலியார், சைவப்பிள்ளைமார் என்று குறிப்பிட்டு சிலரைத் தவிர) பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டதால் தமிழகத்தில் ஜாதி அடிப்படை இடஒதுக்கீட்டை எதிர்ப்பதே இல்லை. தமிழ் நாட்டில் இஞ்சினியரிங், மெடிக்கல் பட்டப்படிப்பிலும் கட் ஆப் மதிப்பெண்கள் வித்தியாசம் குறைவாக இருப்பதும் இதுவே காரணம்.
பிற மானிலங்களில், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதப்படும், கவுண்டர்கள், வன்னியர்கள், தேவர்கள் போன்ற ஜாதிக்கு இணையான ஜாதிகள் முற்பட்ட வகுப்பாக பிரிக்கப்பட்டுள்ளதால் குறிப்பாக வட மாநிலங்களில் ஜாதி அடிப்படை இடப்பங்கீட்டினை எதிர்ப்பவர்கள் அதிகள் இருக்கிறார்கள்.
இங்கேயோ ஜாதி அடிப்படை இடப்பங்கீட்டை எதிப்பவனையெல்லாம் "பார்ப்பான்" என்ற ஒரே பிரஷ் கொண்டு தீ(தி)ட்டி விடுகிறார்கள்.
பிறப்பு, படிப்பு , மேற்படிப்பு, வேலை, பதவி உயர்வு, இறப்பு, இறந்த பின் எரிக்கும் இடத்தில் என்று எல்லா இடத்திலும் ஜாதி தான் முதல் கேள்வியாக இருக்கும் பட்சத்தில் ஜாதி எப்படி அழியும். அதை ஆதரிக்கும் இந்த திராவிட நாய்க்கூட்டம் ஜாதி ஒழிப்பு செய்கிறது என்று எவனாவது நம்பிக் கொண்டிருந்தால் அவனைவிட அடிமுட்டாள் இருக்கவே முடியாது.
அப்படி அடிமுட்டாளாகத்தான் இருப்பேன், மாற மாட்டேன், என்று சொல்பவர்களிடம் விவாதம் செய்து பிரயோசனம் இல்லை.
உங்கள் பதிவில் நீங்கள் சுட்டியுள்ளது போல் தயாரித்தபோதே காலாவதியான ரிப்போர்ட்டை அமுல் படுத்தி இந்தியாவைத் துண்டாடிய ஒரு கையாலாகாதவனுக்கு இப்படி ஜால்ரா தட்டும் கூட்டம் இருக்கும் போது "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்" என்று தான் தோன்றுகிறது.
இந்த நாட்டை இதுவரை ஆண்டவன்,ஆள்கிறவன் எந்த ஆட்சியா இருந்தாலும் உயர்ஜாதிகாரன்தானே!
என்னமோ எந்த துறையா இருந்தாலும் அதில் இவனுங்களை தவிர எவன் உள்ளான்?
இந்த நாடு நாசமா போனதே இவனுங்கலால்தானே.!
மனிதனை மதிக்க தெரியாத ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத, பண்பாடு தெரியாத, மிதி பட்டவனை மீண்டும் மீண்டும் ஏறி மிதிக்கும் உங்களிடம் சாபத்தை தவிர வேறு என்ன கிடைத்து விடபோகிறது?!
இந்த நாட்டின் பிரதான தலைமை பொறுப்பேற்ற ஒரு மாமனிதனை கையாலாகாதவன் என்று கம்யுனிஸ்டுகளை காயடிப்பவன் என்பவனும் லூசு என்று கபிலவஸ்து என்ற லூசுகளும் பினாத்துகிரதென்றால் இவங்கள் மனித ஜென்மங்கள்தானா? இவனுங்களை எந்த செருப்பால் அடிப்பது?
திறமை திறமை என்று பேசும் இவனுங்க போன்ற மனநோயாளிகளிடம்தான் நம் நாடு சிக்கி சீரழிகிறது.
இன்னும் ஒரு படி மேலாக மோடின்கிற பிசாசு ஆட்சி செஞ்சா மட்டுமே இந்தியாவை இனி காப்பாத்த முடியும் முநிகிட்ட வேண்டிக்கிட்டுருக்கிற இட்லி வடை சுண்டல் கூட்டத்துகிட்ட இருந்தும் நாட்டை காப்பாத்துமாறு... எவன் கிட்ட கேக்கிறது?
திறமையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மனநோயாளிகளா ? சூப்பரப்பு.
பின்னிட்டீங்க. இனிமே எவனாவது திறமையைப் பத்தி பேசினாவே அவன கீழ்பாக்கத்துக்கு அனுப்பிறல்லாம்.
இனிமேல், திறமை அடிப்படையில் எந்த ஒரு கம்பெனியும் வேலை வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால் அது மனநோயாளிக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் வேலை பார்ப்பவர்களும் மனநோயாளிகளே.
இனிமேல் எல்லா வேலையும் ஜாதி அடிப்படையில் தான் வழங்கப்படவேண்டும். மீறினால் பாட்டாளிகள் எல்லாம் சேர்ந்து பொறியல் ச்சீ மறியல் செய்வார்கள்.
அப்பாடா, ஜாதி ஒழிஞ்சிரும்டா..
நான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்பதால் இந்த அற்பத்தனமான கட்டுரைக்கு சொல்லிக்கொள்ள புதிதாக ஒன்றுமில்லை. ஒரே ஒரு பாராட்டைத்தவிர...
"நாற்பதாண்டுகாலம் அனைவராலும் மறுக்கப்பட்டு தூசிபடிந்துகிடந்த சமூகநீதிக்கு விடியலைத் தந்தவர்" முதுகெலும்பு இருந்த வி.பி.சிங் என்ற மாமனிதர் என்பதை உலகத்திற்கு உங்கள் கட்டுரை மூலம் உணர்த்தியதற்கு மிக மிக நன்றி!
அன்புடன்...
ஓசை செல்லா
//சோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான்//
மிக மிக ஆபத்து.
அதுவும் அந்த வார்த்தையை நீங்கள் கூறுவது, வரும் தலைமுறைக்கு யாரை வேண்டுமானாலும் அப்படியே நம்பலாம் என்று அர்த்தபட்டுவிடும்
//ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷன் அறிக்கையை இவர் தூசி தட்டி எடுத்ததற்கு முக்கியக் காரணமே பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் இடையே வந்த கருத்து வேற்றுமை மட்டுமே.//
இந்த வார்த்தையினால் பா.ஜ.க-வினால் பிற்படுத்த பட்ட மக்களுக்கு துளியும் நன்மையில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது இல்லையா?
எனக்குன்னு ஒரு Blogspot இருக்குண்ணே, அங்க போய் பாருங்க, நான் யாருன்னு தெரியும்.//
-- அட ச்சே இதுக்குதான் குய்யோ கிய்யோனு குதிகறீங்களா? போய் பாத்தேன் அப்டி ஒன்னும் நல்லா இல்லையே? ஒருவேள டோண்டு மாதிரி இட்லிவடை மாதிரி பிரபலமா இல்லையேனு பிரமான த்வேஷமா? அதுக்கெல்லாம் மண்டக்குல சின்னதா மூளைன்னு ஒன்னு வேணும், சரி விடுப்பா உங்க தரம் என்னன்னு உங்க பின்னூடத்திலே தெரியிது!!
//பிராமணரை கல்வி கேள்விகளில் வெற்றி கொள்ளமுடியாத முற்பட்ட சமுகத்தினரில்//
இது எப்படி சாத்தியம்,
பார்பனர்களுக்கு மூளை பெரிதா என்ன?
இல்லை கிளையாக இன்னொரு ”இது” இருக்குதா?
ஒழுங்கா படிக்காம கல்வியில வெற்றி கொள்ள முடியலங்கறது எந்த விதத்தில் நியாயம்?
//வலை தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் , தயவு செய்து யாருடைய பெயரையும் கொச்சை படுத்தாதீர்கள்.
- குப்புக் குட்டி.//
பிள்ளையவும் கிள்ளியாச்சு
தொட்டிலையும் ஆட்டியாச்சு
சூப்பர் சார்
//வி பி சிங் ஓட்டு பொறுக்கின்னா அத்வானி ஓட்டு ***. வாஜ்பாய்...வேண்டாம் ... வாய கிளறாதீங்க...!//
அவர்களிடமே மீண்டும் கூட்டணி வைப்பவர்களை என்னவென்று திட்டலாம் அனானி.
அவர்களும் அதுக்கு தானே போகிறார்கள். பஸ்ஸ்டேண்டு பக்கம் நல்லா போணியாகுதாம்
Last question for 5-12-2008 Q & A
for want of a nail the shoe was lost
for want of a shoe the horse
was lost
for want of a horse the rider was lost
for want of a rider the battle was lost
for want of a battle the kingdom was lost
and all for the want of a horseshoe
Seeing this rhyme for all time reference, what is your expert comment in connection with present conditions in India?
//
//ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷன் அறிக்கையை இவர் தூசி தட்டி எடுத்ததற்கு முக்கியக் காரணமே பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் இடையே வந்த கருத்து வேற்றுமை மட்டுமே.//
இந்த வார்த்தையினால் பா.ஜ.க-வினால் பிற்படுத்த பட்ட மக்களுக்கு துளியும் நன்மையில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது இல்லையா?
//
இல்லை.
பா.ஜ.க வினால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்படப்போகும் தீமையை தடுக்க முடியவில்லை.
//இப்பதிவை இடக்காரணமான கேள்விகள் அமைத்த குப்புக்குட்டிக்கு: நீங்கள் யாராக இருந்தாலும் வாழ்க. //
அண்ணன் குப்புக் குட்டிக்கு வாழ்த்துக்கள்.டோன்டு சாரின் பாரட்டுக்குத்தான்.ஆனால் சாத்தப்பன் சார் கோபத்தை கொஞ்சம் குறைக்க ஏதாவது சொல்லுங்க.
வால்பையன் அண்ணா சொல்லியது போல் தொட்டிலை ஆட்டி ஒரு தலாட்டு பாடி,நீங்கள் கிள்ளிய குழந்தையை சமதானப் படுத்துங்களே.
ராமசாமி
//வால்பையன் அண்ணா சொல்லியது போல்//
ஏன் இந்த கொலைவெறி
நான் ஒரு பச்ச கொழந்தை என்னய போய் அண்ணா போட்டுகிட்டு, சும்மா வாலுன்னு சொல்லுங்க
//
நான் தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்பதால் இந்த அற்பத்தனமான கட்டுரைக்கு சொல்லிக்கொள்ள புதிதாக ஒன்றுமில்லை. ஒரே ஒரு பாராட்டைத்தவிர...
"நாற்பதாண்டுகாலம் அனைவராலும் மறுக்கப்பட்டு தூசிபடிந்துகிடந்த சமூகநீதிக்கு விடியலைத் தந்தவர்" முதுகெலும்பு இருந்த வி.பி.சிங் என்ற மாமனிதர் என்பதை உலகத்திற்கு உங்கள் கட்டுரை மூலம் உணர்த்தியதற்கு மிக மிக நன்றி!
அன்புடன்...
ஓசை செல்லா
//
40 ஆண்டுகாலமா ? 2000 வருசம்ன்னாங்களே ?
சிலருக்கு வாயில சனி, கொஞ்ச நாளா எனக்கு விரலில் சனி போலிருக்கு. ஸ்பெஷல் கரக்டருக்கு (@) என்ன அர்த்தம்-ன்னு கேட்கப் போயி தான் நான் மாட்டிகிட்டேன். அவரு எய்தவன் இருக்க அம்பை நொந்துகிட்டாரு. இருந்தாலும் அப்பவே சாரி வேற சொல்லிட்டேன். மறுபடி வால் அண்ணே தான் தேரை இழுத்தது தெருவில் விட்டிருக்கிறார். இனிமேல் இதை வால் அண்ணேன் பார்த்துக்குவார். ராமசாமி அண்ணே உங்க ஊரூ ஈரோடா ? சாந்தம் சமாதானம் இது தன் நான் விரும்புவது.
குப்புக் குட்டி.
//சாந்தம் சமாதானம் இது தன் நான் விரும்புவது.
குப்புக் குட்டி.//
மங்களம் உண்டாகட்டும்.
நல்லதயே நினைப்போம்
நல்லதையே பேசுவோம்
நல்லதையே எழுதுவோம்
நல்லதையே எதிர்பார்ப்போம்.
குப்புகுட்டி அண்ணாச்சியின்
நல் எண்ணம் வாழட்டும்.
சாத்தப்பன் சார் சமதானம் ஆனமாதிரிதான் தெரிகிறது.
//sathappan said...
Don’t worry குப்புக் குட்டி sir,
It’s only a Nick name which my girl friend usually calling me.You want to know who is my girl friend?
Thanks for your Matured mind!
///நீங்க நாகரீகம் இல்லாம கமென்ட் எழுதுற ஆள் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி எழுதியிருக்கக் கூடாது////
I know your நாகரீகம் .
Your friend,
Sathappan
//சிலருக்கு வாயில சனி, கொஞ்ச நாளா எனக்கு விரலில் சனி போலிருக்கு//
குப்புக் குட்டி.
ha ! ha ! ha !
Mr.குப்புக் குட்டி,
Who is ராமசாமி ???
Anyway , what do you feel about –
''பீய் துடைக்க கூட பயன்படாத துக்ளக்'''
Back to square one.
Sathappan
கடல் பொங்கிய போது, ஓர் கடல் தவளை கிணற்றில் வந்து வீழ்ந்ததாம்.நீ யார் எங்கிருந்து வருகிறாய் என்றதாம் கிணற்றுத் தவளை. நான் கடலில் இருந்து வருகிறேன் என்ற பத்தில் வந்ததும், அப்டின்னா என்றதாம் கி. தவளை. அப்படின்னா நிறைய தண்ணீர் இருக்கிற இடம் என்றதாம் கடல் தவளை. உடனே உன் கடல் இவ்வளவு பெரிசு இருக்குமா ஒரு அடி குதித்து கண்பித்ததாம் கி. தவளை. இல்லை அதை விடப் பெரிது என்றதாம் கடல் தவளை. மீண்டும் மீண்டும் ஒவ்வொரு அடியாக குதித்து அதே கேள்வியைக் கேட்க, கடல் தவளை இல்லை இல்லை என்று சொல்ல, வெறுப்பான கி.தவளை போடா பொய் சொல்லி நாயே! என்ற கையாலாகாத கோபத்துடன் உலகத்திலயே என் கிணறு தான் பெரிது என்றதாம். அது சரி என்று சிர்த்துக் கொண்டதாம் க. தவளை. அதனால் மேலும் கடுப்படைந்த கி.தவளை உன் கடல் நீர் "இது" கழுவக் கூட உதாவது என்றதாம்.
நீதி: இந்தக் கதையில் நான் கி. தவளையின் கட்சி. க. தவளைக்கு கடலையும் தெரியம் கிணறையும் தெரியும். ஆனால் கி. தவளை -க்கு பாவம் கடல் கருப்பா சிவப்பா என்று தெரியாது. தெரியாத ஒன்றை அது எப்படி ஒப்புக்கொள்ளும். அதனால் அதுக்குத் தெரிந்த உபயோகத்தை நினைத்துப் பார்க்கிறது , அது அதற்கு உதவாது என்கிறது. அது சரி தானே ? பின்னே வெந்து விடாது ? அட்லீஸ்ட் அரிக்கும் என்று நினைக்கிறேன். (situation warrants அதனால் நான் எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது) இந்த கதைக்கு எந்த உள் அர்த்தமும் இல்லை . Just ஒரு கதை. அவ்வளவு தான்.
சாத்தப்பன் அண்ணே !
என் முகத்துக்கு நேரே கேள்விக் குறி போட்டதால், உங்களுக்கு என் பதில் (உங்கள் கருத்துக்களை தான் எதிர்கொள்கிறேன், உங்களை அல்ல.புரிதலுக்கு நன்றி -your friend -குப்புக் குட்டி)
அந்த விசயத்துக்கு எதுக்கு அவ்வளவு காஸ்ட்லி பத்திரிகை.? . அதுக்கு ...ம் .. ம் ... .ம்ஹூம் ம் ... .ம்ஹூம் நிச்சயமா சரிவராது 26 பக்கம் தான். உலத்திலேயே மிக மட்டமானா தாளில் வருவது துக்ளக் மட்டுமே. உபயோகம் இல்லை என்று கண்டு கொண்டுவிட்டால் அப்புறம் விட்டு விட வேண்டியது தானே. மற்றவர்கள் கருத்து எதற்கு. அப்படி பிறர் கருத்தை அறிய ஆவலாக இருந்தால் ஒரு கட்டணக் கழிப்பறை குத்தகைக்காறரை அணுகவும்.
வலை தமிழ்ர்களுக்கு
நம் நாட்டு சீதோஷன நிலைக்கு யாரேனும் பேப்பர் யூஸ் செய்தால், எங்கயாவது பொது இடத்தில் அவர்கள் இருக்கும் போது "டே நீ இந்த அவனானானானானாடா நீ ..."( வடிவேலு குரலில் ) என்று மக்கள் கேட்க மாட்டார்களா ?
குப்புக் குட்டி.
சார் இத வச்சு தனிப் பதிவு போட்டுடாதீக! தமிழ் நாடு தாங்ககாது
Mr.குப்புக் குட்டி.
Iam sorry, I can’t think (Not use) thuklck beyond what I endorsed by பாட்டாளி said.... That’s my FIRM opinion.
You may follow/worship or read like a geetha… bible……and whatever 5 times a day..
Don’t exhibit your story which suits you. I can also tell stories Suits me and attacking others.
So... Please comment in open mind without any Hidden agenda’s.
As a person, I like CHO and his (comedy) writings. We need some comedian after Ashokan. After all CHO is an excellent comedian. I hope you accept that.
Take care and Still your friend
Sathappan
Note -Thanks to Dondo sir, encouraging such a stinking debat
என் நண்பர் ஓர் நீதி கதைத் திரட்டை காண்பித்தார் , அதில் பார்த்த இந்தக் கதை பிடித்திருந்தது. ஒரு ஆர்வத்தில அதை டை-ப்பி விட்டேன். out of context -ல் அதுக்கு பொருள் வந்திடக் கூடாதேன்னு தான், அதுக்கு உள் அர்த்தம் இல்லைன்னு கூட குறிபிட்டுருந்தேன்.. அந்தக் கேள்விக்கு ஏற்கனவே ஒருத்தர் உங்களுக்கு பதில் சொல்லிட்டாரு. மறுபடி நீங்க விளையாடா தான் அந்தக் கேள்வியைக் கேடீங்க ! நானும் விளையாடா தான் பதில் சொன்னேன். அந்தக் கதைக்கும் நம்ம டாபிக்கும் ரொம்ப மெலிசா சின்னமா ஒரு லிங்க் வந்து தொலைக்கிறது என்று இப்போ புரியுது.. அந்த இடைஞ்சலான கதையை தவிர்த்திருந்தால் நலமாக இருந்திருக்குமோ என்று இப்போ தோனுது. உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டும் என்ற நோக்கம் எனக்குகொஞ்சம் கூட கிடையாது.
மற்றபடி துக்ளக் புத்தகத்தை நான் வாங்குவதில்லை, அதை நான் கையால் கூட தொடுவது இல்ல. அவர் சொல்ற எல்லாக் கருத்தையும் நான் உடனே ஏற்றுக் கொள்வதில்லை ( இரண்டு நாள் கழித்து தான் ஏற்றுக்கொள்வேன்) நான் சோவின் பக்தனும் அல்ல. பொதுவில் வில்லங்க்கமான கருத்துக்களை வைத்தால் பலர் எதிர்பார்கள். உதைப்பார்கள். அப்போது வலிக்குது அப்புறம் நான் அழுதிடுவேன் என்று கைப்புள்ள மாதிரி சொன்னா நல்லாவா இருக்கும். அவர் அந்த எதிர்ப்புகளை சிக்சர் ஆக தூக்கிவிடுகிறார். அதனால் அவர் வியாபாரம் அமோகமாகிறது.
எல்லாத்தையும் மறந்திடுங்க உங்களுக்காக ஒரு ஜோக் (!?)
-----------------------------------நர்ஸ் : டாக்டர் ஆபரேஷன் தியேட்டரில் phone வைக்க வேண்டாம்னு சொன்னா கேட்டீங்களா ?
டாக்டர்: ஏன் என்னாச்சு ?
நர்ஸ் : அதுவும் இப்போ dead.
-----------------------------------அண்ணே! என்ன கடைசில Still your friend -ன்னு போட்டுடீங்க ! நீங்க கோச்சுகிட்டு போனாக் கூட நான் வந்து கட்டி புடிச்சுகிட்டுவேன்.
உங்கள் நண்பன் குப்புக் குட்டி.
பின் குறிப்பு: இப்போதெல்லாம் துக்ளக்-ஐ நெட்டில் தான் படிக்கிறேன்.
Oh GOD….
I told you..stop reading Thukluk or else.....you become ‘Non-stop’ $%#@^&*$
Take care and see Doctor preferably in Kilpak.
(Not) your friend.
Sathappan
அண்ணே !
கோச்சுக்காதீங்க. எங்க ஊர்-லேயே இராமநாதபுரத்தில் நல்ல டாக்டர் இருக்காரு. பார்த்து டிரிட்மென்ட் எடுத்துக்கிறேன்.
கோயம்பத்தூர் வந்தா அவசியம் வீட்டுக்கு வாங்க !
உங்களை அநுவாவி சுப்ரமணியர் கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்.
பாசமுள்ள தம்பி
குப்புக் குட்டி
"அடுத்தப் பதிவுகளில் நிஜமாகவே அவரது(CHO) நாடகங்களைப் பற்றி எழுதப் போகிறேன்" --- 6/15/2008
waiting for this post eagerly. when will u give us a post on this?. and a small obligation whenever u got a little time to waste do visit my blog
Post a Comment