நான் ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்த விஷயத்தை தந்த தமிழ் ஓவியாவுக்கு நன்றி, கூடவே விடுதலைக்கும். முதலில் பதிவைப் படிப்போம், பிறகு நான் கூற நினைப்பதை கூறி விடுகிறேன்.
நான் ஏறக்குறைய சுமார் 50- ஆண்டு காலமாகவே பார்ப்பனரல்லாத"கீழ்மக்கள்"-பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தப்படும் எல்லா சாதன வாய்ப்புகளையும் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான். பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள், அநீதிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது குறைந்திருக்கிற அளவுக்குச் செய்திருந்த போதிலும் அவை நிலைத்திருக்குமா என்று அய்யப்படுகிறேன்.
இவ்வளவு எடுத்துக் காட்டுவதற்கும் வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும், சொந்த எதிரிகளும், ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை விட்டு குற்றம் குறைகூற வழி காணத் துடிக்கிறார்கள். இருந்தாலும் நான் இதை இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். எல்லாத் துறைகளிலும் குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். எனது கருத்து மாறுதல்கள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சிக் கொண்டே இருக்குமே, தவிர பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூடக் காரணம் கொண்டதாய் இருக்காது. இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கேயிருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது எவ்வளவு மனவுரம் இருந்தாலும் நிதானம் தவறவும் தூண்டுவதாகிறது. என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
என்னைப் பொறுத்த வரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குக் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா?என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது தனக்கு இரு கொல்லர்கள் வேண்டுமென்றுக் கேட்கையில், அவர் சொன்னார். "கெட்டிக்காரர்களாயிருந்தால் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனத்தனப் போட்டியால் வேலை கெட்டு விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்தி என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்து அதன்படி வேலை செய்யக்கூடிய சுத்தி, சம்மட்டி பிடித்துப் பழகிய படிமானமுள்ள முட்டாளாயிருந்தால் போதும்" என்றார்.
ஆகவே தான் நான் நீடாமங்கலம் மாநாட்டிலும் தெளிவாகக் கூறினேன்.
என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன்.
நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.
மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்கு சர்வாதிகாரம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தோழர்களே! நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று?" என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக பொது நன்மைக்காகப் பயன்படுகிறதே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும், எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
------------- 10-02-1963- அன்று பெரியார் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.- "விடுதலை"-10-02-1963.
மீண்டும் டோண்டு ராகவன்.
நான் ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்ற எனது பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். “அச்சமயம் பலப் பொருந்தாத் திருமணங்கள் நடந்தன. அதாவது 50 வயதுக்காரர் 14 வயதுப் பெண்ணை மூன்றாம் அல்லது நான்காம் தாரமாகத் திருமணம் செய்துக் கொள்வது சர்வ சாதாரணம். இத்திருமணங்களை எதிர்த்து தி.க. ஒரு தார்மீகப் போராடமே நடத்தி வந்தது. பெரியார் அவர்களே அவற்றைக் கண்டித்து எழுதியும் இருக்கிறார். அச்சமயத்தில் பெரியார் இவ்வாறு செய்தது அக்கட்சியினரை ஒரு கேலிக்குரியப் பொருளாக்கி விட்டது. "எனக்கு புத்திசாலிகள் சீடர்களாகத் தேவையில்லை. முட்டாள்களே போதும்" என்று பெரியார் அக்காலக் கட்டத்தில் கூறியதாகவும் செய்திகள் படித்துள்ளேன்”. அதை படித்தபோது எங்கே எந்த சந்தர்ப்பத்தில் கூறினார் என்று சொல்ல என்னிடம் போதுமான சுட்டிகள் இல்லை. மேலே உள்ளது அக்குறையை போக்குகிறது. அது 1963-ல் கூறப்பட்டிருந்தாலும் 1949-லும் அதே கருத்தைத்தான் அவர் வைத்திருந்தார் என்பது வெள்ளிடைமலை.
அதாவது “நான் சொன்னேன் என்பதற்காக நீங்கள் அதை அப்படியே ஒப்பு கொள்ளாதீர்கள், உங்கள் பகுத்தறிவையும் உபயோகித்து கொள்ளவும்” என்று அவர் கூறியது தன் கட்சியில் இல்லாதவர்களுக்கு மட்டும்தான், அப்படித்தானே? மேலும், தமிழர்களைப் பற்றி பெரியார் அவர்கள் கூறியவை என்னும் தலைப்பில் வந்த எனது பதிவில் வந்த இந்த வரிகளையும் பார்ப்போம்: “"தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
சொன்னது யார்? ஆரியர்களா? தமிழை வெறுப்போர்களா? வட நாட்டுக்காரர்களா? சம்ஸ்கிருதுதத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்களா? காஞ்சி மடாதிபதியா? மும்பை எக்ஸ்பிரஸ் எடுக்கும் கமலஹாசனா?
இல்லை ஐயா,. இல்லை, தமிழர்களின் தந்தை என்றும் பெரியார் என்றும் ஒரு கூட்டத்தினரால் அழைக்கப் படும் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்னும் கன்னடியர். இப்படிப் பட்ட ஒரு ஆசாமியை, தமிழர்களை கருங்காலிகள் என்று அழைத்தவரையே, தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று அழைத்தவரையே கொஞ்சம் கூட வெட்கமின்றி, மான ரோஷமின்றி, தமிழர் தலைவர் என்று ஒரு கூட்டம் அழைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது. அவரது உண்மையான முகம் என்ன? அவர் தமிழர்களை பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்? மேலே படியுங்கள்.
'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
ஈ.வே.ரா.வின் முழக்கம்
தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில்
பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை,
தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.
சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில்
உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து
எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப் படவில்லை.
உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள், தனது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்னும் புத்தகத்தில், திரட்டியிருக் கொடுத்திருக்கும் மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம். .
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் அமையச் செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக் கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.
11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.
ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்து திருச்சி
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.
யார் இந்த கி.ஆ.பெ.?
ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.
ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.
அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை பின்வருமாறு:-
அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.
இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்' என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.
இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர்,
திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து
வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும்
திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.
எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள்,
கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா
என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.
ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?
இனியேனும் சொல்வாரா?
இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?
பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.
மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?
இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி வைத்திருப்பதே போதுமான சான்றாகும்.
நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற 'பித்தலாட்டக் கருங்காலி'களின் கோரிக்கையாகும்.
(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)”
அவ்வாறு தான் போதித்த பகுத்தறிவை தனக்கெதிராக தன் சீடர்களே பிரயோகம் செய்வதை அவர் ஒத்து கொள்ளவில்லைதான். ஆனாலும் அவர் எந்த காண்டெக்ஸ்ட்களில் இப்பொருள் வருமாறு கூறி வந்தார் என்பதைப் பார்த்தோமானால் அவ்வாறு சீடர்கள் பேசுவதை தன்னால் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க இயலாது என்ற நிலையில்தான் என தெரியவருகிறது.
ஒரு சமயம் கதிர்வேல் பிள்ளை என்னும் ஏழைப்புலவர் அவரிடம் வந்திருக்கிறார். அவருக்கு அருந்த பால் கொடுத்திருக்கிறார். அதே சமயம் புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தானே என்ற தொனியில் பேச அப்புலவரோ அவர் கொடுத்தப் பாலை வாயில் விரல்விட்டு வாந்தி எடுத்துவிட்டு அப்புறம் சென்றார். அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசும் பெரியார் அவர்களே "கதிர்வேல் பிள்ளை என்னும் வாயாடிப் புலவர்" என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இப்போது கூறுங்கள், தான் பிச்சை போடுகிறோம், அதைப் பெறுபவன் அதை அவமானத்துடன் சேர்ந்துதான் விழுங்க வேண்டும் என்ற இவரின் மனோபாவம்தானே இங்கு முன்னால் தெரிகிறது?
பெண்ணுரிமையை பேசியவரே தனது சொந்த வாழ்க்கையில் ஆணாதிக்க மனோபாவத்துடன் நடந்து கொண்டதை அவரே ஒத்துக் கொண்டது பற்றி நான் இட்ட விடாது கருப்புவுக்கு நன்றி
என்ற தலைப்பில் வந்த இப்பதிவில் வரும் சில வரிகளைப் பார்க்கலாம். “பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.
ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை”. ஒரு கையறு நிலையில் அவர் எழுதிய இவ்வரிகள்தான் என்னை அவர்மேல் பெருமதிப்பு கொள்ளச் செய்தன என்பதையும் இங்கு இன்னொரு முறை வலியுறுத்துவேன். “மகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம். மறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான்”.
இப்பதிவை முடிப்பதற்கு முன்னால் தமிழ் ஓவியாவின் பதிவிலிருந்து சில வரிகள்: “கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை”. அப்படியே இசுலாமிய மதக் கொள்கைதான். ஒரு தடவை உள்ளே வந்தவர்கள் வெளியே போவதை அங்கும் விரும்புவதில்லை. ஆனால் ஒரே ஒரு பெரிய வித்தியாசம், பெரியார் விஷயத்தில். விட்டுப் போனவர்களுக்கெதிராக ஃபத்வா எல்லாம் போடப்படுவதில்லை. திட்டுவதோடு சரி.
சரி, எனக்கு ஒரு சந்தேகம். ஹிந்து என்றால் திருடன் என்னும் பொருள் என்று பாரசீக மொழி அகராதியை வைத்து பேசுபவர்கள் ஏன் இன்னும் அதே மதத்தில் இருந்து லோல்பட வேண்டும்?
“மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என பெரியார் அவர்களே கூறியது வேறு இங்கு நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
இப்போது முரளி மனோஹர் கூறுவதாவது “அப்படியெல்லாம் மதத்தை விட்டுப் போனால் அவரது சந்ததியினர் பெறும் இடஒதுக்கீடு சலுகைகள் பறிபோய்விடுமே, அவற்றை நீயா வாங்கித் தருவே பெரிசு”? Your point is well noted, Murali! :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
55 comments:
சூடான இடுகைக்குத் தான் நால்வருக்கு ஏற்கனவே சூனியம் வைத்தாயிற்றே.
//இப்போது முரளி மனோஹர் கூறுவதாவது “அப்படியெல்லாம் மதத்தை விட்டுப் போனால் அவரது சந்ததியினர் பெறும் இடஒதுக்கீடு சலுகைகள் பறிபோய்விடுமே, அவற்றை நீயா வாங்கித் தருவே பெரிசு”? Your point is well noted, Murali! :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்//
இன்னா நயினா!
உறங்க்கின்னு இக்கிற புலியை இஸ்கிற!
யெம்மா தைரியம் சாமிக்கு
எந்தலைவரு பத்தி
வோணாம்
விட்று
கட்சி எச்சரிக்கை
சாக்கிரதை
மெட்ராசுக்காரனுக்கு கோவலு வந்திடுச்சுன்னா
அதுக்கப்பாலே
டப்பா டான்சு ஆயிடும்
டொப்பி எகிறிடும்
சொக்காய் கிழிச்சிடும்
நாஸ்டா துன்னுக்கின்னு
கம்னு இக்கனும்
வீட்டாண்ட உள்ள மண்டபத்திலே
போயி குந்திக்கின்னு
கப் சிப்
//சூடான இடுகைக்குத் தான் நால்வருக்கு ஏற்கனவே சூனியம் வைத்தாயிற்றே.//
:))))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கோவி.கண்ணன் said...
சூடான இடுகைக்குத் தான் நால்வருக்கு ஏற்கனவே சூனியம் வைத்தாயிற்றே.//
யாரந்த நால்வர்
கோவியாரின் புரியாத
புதிருக்கு விடை?
//சரி, எனக்கு ஒரு சந்தேகம். ஹிந்து என்றால் திருடன் என்னும் பொருள் என்று பாரசீக மொழி அகராதியை வைத்து பேசுபவர்கள் ஏன் இன்னும் அதே மதத்தில் இருந்து லோல்பட வேண்டும்?
“மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என பெரியார் அவர்களே கூறியது வேறு இங்கு நினைவுக்கு வந்து தொலைக்கிறது//
டோண்டு அய்யா,
அதானே.எனக்கென்னவோ தாடிக்கார தீவிரவாதி அய்யா இப்போ உயிரோடு இருந்திருந்தா ஒட்டு மொத்தமா எல்லா கருப்பு சட்டை தமிழர்களையும் புத்த மதத்திற்கு மாறி,காட்டு மிராண்டி தமிழ் மொழியிலிருந்து சிங்களத்துக்கு , மொழி மாற்றம் செய்து கொண்டு,தமிழகம் இந்தியாவைப் விட்டு பிரிந்து இலங்கையோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருப்பார் என்று தோன்றுகிறது.
எல்லா விஷயங்களையும் மஞ்ச துண்டு அய்யா கனவில் வந்து சொல்லிவிட்டுப் போகும் இந்த தீவிரவாதி, ஏன் இந்த விஷயத்தை மட்டும் மஞ்ச துண்டிடம் சொல்ல வரவில்லை என்பது புதிராகத் தான் உள்ளது.
பழனி தமிழ் ஓவியா இனி "சிங்கள ஓவியா" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுமானால் தாடிக்காரனின் ஆத்மா சந்தி அடையும் என்பதில் சந்தேகமில்லை.
பாலா
//யாரந்த நால்வர்//
கோவி கண்ணன், லக்கிலுக், செந்தழல் ரவி மற்றும் டோண்டு ராகவன் (வெள்ளிக்கிழமை பதில்கள் பதிவர்) என்பது கோவி கண்ணன் அவர்களின் கூற்று. அதுதான் உண்மையென்று எனக்கும் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//யாரந்த நால்வர்//
கோவி கண்ணன், லக்கிலுக், செந்தழல் ரவி மற்றும் டோண்டு ராகவன் (வெள்ளிக்கிழமை பதில்கள் பதிவர்) என்பது கோவி கண்ணன் அவர்களின் கூற்று. அதுதான் உண்மையென்று எனக்கும் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
கோவி கண்ணன்-
சிங்கை என்றாலே எல்லோருடைய ஞாபகத்தும் வரும் நல்லவர்.ஆசிரியர் சுப்பையா அவர்களின் வகுப்பறை2007. சிறப்பு சீனியர் மாணவர்.பல நட்சத்திரப் பதிவுகளை தந்து பரவலான வாசகர் ஆதரவு உள்ளவர்.
லக்கிலுக்-
பத்திரிக்கை உலகம் மற்றும் விளம்பர உலகில் கொடி கட்டி பதிவுலகை ஆளும், ஆளும் கட்சி ஆதரளாவர்.தலைவர் கலைஞரே மடல் எழுதி பாராட்டப்படும் உச்சத்தில் உள்ளவர்.நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்.
செந்தழல் ரவி
பதிவுலக் மும்மூர்த்திகளில்
பகவான் விஸ்னுவைப் போல் பல அவதாரம் எடுத்து பல சிறப்பு பதிவுகளை,நெஞ்சுரத்தோடு நேர்மையோடு பயமின்றி பதிந்து வருபவரும்,தமிழ் மண நிர்வாகிகளுக்கு நெருக்கமானவரும் ஆகும்.
தழலின் வெப்பமுடன் மூட நம்பிக்கைகளை பொசுக்கும் பேராற்றல்
பெற்ற பதிவுலகப் போராளி.திறமை சாலி
டோண்டு ராகவன்
பதிவுலகப் பெரியவர்.நான்கு ஆண்டுகளில் 3 லட்சத்தும் மேலான பார்வையாளர்களால் இவரது பதிவுகள் படிக்கப் படுவது ஒரு சிறப்பு.
இந்த பதிவுலகப் பிதாமகர் உண்மையிலே தைரிய சாலி.எதிரிகளையும்,துரோகிகளையும் அவரது கோட்டைக்கே சென்று மோதி வெற்றி பெற்ற வரலாறு பதிவுலக் சரித்திரம்.சமிபகாலமாய் பின்னூட்டங்கள் குறைந்தாலும் ஒரு பெரிய வாசகர் வட்டம் உள்ளது.
தினம் ஒரு பதிவு இவரது சமீபத்தியச் சதனை...
இந்த பதிவுலக ஜாம்பவான்களுக்கு சூன்யம் வைக்கும் தில் யாருக்கு இருக்கு?
அப்படியே வைத்தாலும் அது வைத்தவரையே திருப்பி தாக்கிவிடுமல்லவா!
Doonu Sir what a big article :-(((
are you make any challenge in Green Tamilan? (Ture Tamillan)
any way Dondu sir my advance wishes for you happy new year 2009. this for also your family and friends...
God (+) you Devil (-) you
yours
Puduvai siva..
உங்களுக்கு பிரச்சினை பெரியார் கன்னடர் என்பதும் , அவர் தமிழர்களை வெறுத்தார் என்பதுவுமா இல்லை அவர் சொன்ன பகுத்தறிவுக் கருத்துக்களா?
பெரியார் கன்னடர் என்பதும் , அவர் தமிழரல்லர் என்பதும்தான் பிரச்சினை என்றால் தமிழை நீச பாசை என்றும் , சமஸ்கிருதம் தேவ மொழி என்று சொல்லும் பார்ப்பனர்கள் யார் ?
அவராவது மொழியளவில் வேறு தாய்மொழியைக் கொண்டவர் என்பது ஊரறிந்தது. ஆனால் தன் தாய்மொழி தமிழ் என்று சொல்லிக்கொண்டே அதை நீச பாஷை என்று சொல்வது யாரை ஏமாற்ற?
அவரது பகுத்தறிவுக் கருத்துக்கள் தான் பிரச்சினை என்றால் அப்பிரச்சினை நாட்டுக்கு நல்லதுதான்.
நிற்க.
சாத்தான் வேதம் ஓதுவதை ( அவராவது தன் தாய்மொழியில் ஓதினால் சரிதான்!!) எப்படி நம்ப முடியாதோ அதே போலத்தான் அவர் தன் வாழ்நாள் முழுதும் எதிர்த்த பார்ப்பனர்களின் பெரியாருக்கெதிரான வாதத்தை நம்ப முடியாது.
அவர் கன்னடியராக இருந்தாலும் ஒரு மொழிக்கு சொந்தக் காரர் அல்லர். தமிழ்நாட்டில் தமிழைப் பேசி ஏமாற்றும் வேசியல்லர் அவர் , எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் , அரசியலில் போட்டியிடாமல் தன்னலமற்று ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடியவர்.
இன்றைக்கு பெரியாரின் பேச்சுக்களை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டும் நீங்கள் ,அவர் பெண்ணுரிமைக்காகவும் , சாதி ஒழிப்பிற்காகவும் குரல் கொடுத்தது பற்றி பெருமை பேசியிருக்கிறீர்களா?
இல்லையென்றால் , ஒரு சில பிட்களை மட்டும் வைத்து வாதிடுவீர்களென்றால் - எனக்கு பெரியாரை பிடிக்காது. அவரை வசமாகத் திட்ட நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமும் ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆஹா கிடைத்தது , யுரேகா யுரேகா என்று துள்ளிக் குதித்து பின் நடுநிலையாகவும் இருப்பது போன்றும் , ஆதாரத்தோடுதான் குற்றஞ் சாட்டுவது போன்றும் சித்தரிக்க முயற்சிக்காதீர்கள்.
அவராவது , எங்களுக்காக போராட முயற்சித்தார் , போராடினார் , உரிமைகளைப் பெற்றுத்தந்தார். அவர்களை எதிர்க்கும் பார்ப்பனர்கள் எங்கள் உழைப்பில் சுகமாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்.
எங்களுக்காக உழைத்தவனே எங்களின் வழிகாட்டி .....ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் !!!
எங்களை உழைப்பைச் சுரண்டி பிழைத்தவர்கள் அல்லர்.!!!!!
//உங்களுக்கு பிரச்சினை பெரியார் கன்னடர் என்பதும் , அவர் தமிழர்களை வெறுத்தார் என்பதுவுமா இல்லை அவர் சொன்ன பகுத்தறிவுக் கருத்துக்களா?//
அப்படிப்பட்ட பெரியாரே தனது கட்சிக்காரர்கள் பகுத்தறிவை மூட்டை கட்டி வைக்கச் சொன்னதை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பகுத்தறிவு இல்லாமல் போயிற்றே என்பதுதான் பதிவின் அடிநாதம். அதை மீண்டும் நிரூபித்த மதிபாலா அவர்களே, உங்கள் மனத்தளவு அடிமைச் சங்கிலிகள் உங்களுக்கே பிரீதி.
அன்புடன்,
டோண்டு ராகவ்ன்
அப்படிப்பட்ட பெரியாரே தனது கட்சிக்காரர்கள் பகுத்தறிவை மூட்டை கட்டி வைக்கச் சொன்னதை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பகுத்தறிவு இல்லாமல் போயிற்றே என்பதுதான் பதிவின் அடிநாதம். அதை மீண்டும் நிரூபித்த மதிபாலா அவர்களே, உங்கள் மனத்தளவு அடிமைச் சங்கிலிகள் உங்களுக்கே பிரீதி.//
முதலில் நான் திராவிடர் கழகத்தவன் அல்லன் , ஆகவே பெரியாரே சொன்னபடி என் பகுத்தறிவினை மூட்டை கட்டி வைக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆகவே , என் பகுத்தறிவை உபயோகித்து பெரியாரிடமிருந்த நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அல்லவைகளை விட்டுத் தள்ளும் ஒரு அன்னப்பறவையாகவே இருக்க முயற்சிக்கிறேன்.
நீங்கள் பெரியாரை தூற்றுவதை விட்டுவிட்டு எந்தவிதமான சார்பு நிலையுமின்றி அவரது கருத்துக்களைப் படித்துப் பாருங்கள்.
அவர் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி என்பது விளங்கும்.
ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளரை போற்ற வேண்டாம். தூற்றமாலாவது இருப்பீர்கள்.
நான் இப்படி பேசுவதையும் பகுத்தறிவற்று பெரியாரின் இன்னொரு பக்தன் பேசுவ்தாக நீங்கள் கருதினால் நான் சொல்ல ஒன்றுமே இல்லை.
ஒருவேளை கடவுள் இருந்தால் , உங்களுக்கு பெரியார் பற்றிய சார்பற்ற பார்வையைத் தருவாராக.
தோழமையுடனும் ,
நட்புடனும்,
மதிபாலா.
//முதலில் நான் திராவிடர் கழகத்தவன் அல்லன் , ஆகவே பெரியாரே சொன்னபடி என் பகுத்தறிவினை மூட்டை கட்டி வைக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆகவே , என் பகுத்தறிவை உபயோகித்து பெரியாரிடமிருந்த நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அல்லவைகளை விட்டுத் தள்ளும் ஒரு அன்னப்பறவையாகவே இருக்க முயற்சிக்கிறேன்.//
நீங்கள் திராவிடக் கழகத்தவர் என்று எங்குமே நான் சொல்லவில்லை. பெரியார் செலக்டிவாக பகுத்தறிவை உபயோகிக்க சொன்னது பற்றிய எனது கருத்துகளை உள்ளடக்கியதே இப்பதிவு. அதற்கு மீறி வேறெதுவும் சொல்லவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதலில் பெரியார் பற்றி நீங்கள் உதிர்க்கிற 'கருத்து முத்துக்கள்' புதுசு அல்ல. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி காலந்தொட்டு ரவிக்குமார், ம.வெங்கடேசன் காலம் வரை பலரும் கூறியதுதான். இதற்கான பதில்களைப் பெரியாரே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார். பெரியார் இறந்த பிறகு முன்வைக்கப்பட்ட அவதூறுகளுக்கு விடுதலை ராசேந்திரன்,. இப்போது தமிழ் ஓவியா என்ற பெயரில் பதிவிட்டுக் கொண்டிருக்கும் தோழர்.வா.ஓ.மா, அ.மார்க்ஸ், கவிதாசரண் உட்படப் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்துள்ளனர். இதுகுறித்து வெவ்வேறு சந்தர்ப்பங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள், குணாவை முன்வைக்கும் தமிழ்த்தேசியர்கள், பெ.மணியரசனின் த.தே.பொ.க, ரவிக்குமார் மற்றும் இவர்களுக்குப் பதில் சொன்ன நான் மேலே குறிப்பிட்டவர்கள் பதிலளித்த கட்டுரைகள், புத்தகங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவை வந்திருக்கின்றன. இவையெல்லாம் படிக்காமல், உங்கள் பார்ப்பனக் குஞ்சுகளுக்கு நீவிவிட்டுத் திருப்தியளிப்பதற்காக தடாலடிப் பதிவு போடுவது உங்களுக்குச் சரியென்றால் சரிதான். குறிப்பாகப் பெரியா தமிழ்த்தேசிய வாதியா, மொழி பற்றிய பெரியாரின் கருத்துக்கள் குறித்து மிகச் சமீபகாலத்திற்கு முன்பு கூட த.பெ.திகவிற்கும் த.தே.பொ.கக்கும் இடையில் கருத்தியல் போரே நடந்தது. கருத்தியல் ரீதியான அக்கறை இருந்திருந்தால் இதையெல்லாம் அவதானித்துப் பின் பதிவிடலாம். ஆனால், உங்களுக்குப் பெரியார் எதிர்ப்பும் அதன் மூலம் சுயசாதி அபிமானமும்தானே முக்கியம்? ஆண்களாய்ப் பிறந்த எல்லோருமே ஆணாதிக்கவாதிகள்தான். விகிதங்கள் வேறுபடலாம். அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்கிற சுயநேர்மை பெரியார் என்கிற அந்த கிழவனுக்கு மட்டும்தானிருந்தது. சுய விமர்சனத்தோடு கூடிய அந்த அறிக்கை ஒரு இலக்கியம். அதைப் புரிந்துகொள்ள சுயசாதி அபிமான மூளைக்கு ஆற்றல் போதாது.
//இதற்கான பதில்களைப் பெரியாரே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்.//
அப்படியா அவற்றிலிருந்து சில உதாரணங்களை எடுத்து விடுவதுதானே. முக்கியமாக தனது கட்சியினர் பக்த்தறிவை கழற்றி வைக்கவேண்டும் என்று கூறியது பற்றி.
//இவையெல்லாம் படிக்காமல், உங்கள் பார்ப்பனக் குஞ்சுகளுக்கு நீவிவிட்டுத் திருப்தியளிப்பதற்காக தடாலடிப் பதிவு போடுவது உங்களுக்குச் சரியென்றால் சரிதான்.//
என்ன செய்யறது ஆ ஊன்னா பாப்பன்னான்னக்க இந்த பாப்பான் வந்து கேப்பாங்கறது பத்தி ராய்ட்டர்லேயே செய்திகளில் சொல்லிட்டாங்களே.
அதே போல கீழ்வெண்மணியிலே தலித்துக்ளை கொளுத்தியது ஒரு நாயுடு என்றதும் பலீஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்த இவர் வசவசவென்று அதை பற்றி கருத்து கூறி எஸ்கேப் ஆனதுக்கும் முடிஞ்சா பதில் சொல்லிட்டு போங்க.
//அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்கிற சுயநேர்மை பெரியார் என்கிற அந்த கிழவனுக்கு மட்டும்தானிருந்தது. சுய விமர்சனத்தோடு கூடிய அந்த அறிக்கை ஒரு இலக்கியம். அதைப் புரிந்துகொள்ள சுயசாதி அபிமான மூளைக்கு ஆற்றல் போதாது.//
அது இல்லாமலா போன ஆண்டு மார்ச் மாதம் நான் அதுபத்தி பதிவு போட்டேன்? பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தாங்கள் குறிப்பிட்ட பதிவர்களில்
லக்கிலுக்- ஐ அவரின் எழுத்து ஸ்டைலுக்காக பிடிக்கும். இவரின் தொழிலுக்கு உதவும் என்று நினப்பில் எழுதுகிறாரோ என்னவோ இவரின் கருத்துக்கள் எல்லாம் அவர் ஒத்துக் கொள்வது போலவே சார்புடையவை. இருந்தாலும் நல்ல ஸ்டைல்.
செந்தழல் காந்தம் போல் கவரும் ஸ்டைலில் எழுதவில்லை என்றாலும் அறுத்துக் குமிப்பதில்லை.திடீரென உனர்ச்சி வசப்பட்டுவிடக் கூடியது இவரின் எழுத்து.இருந்தாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டாது.
பெரியவர் (ஏன் எல்லாரும் இப்படி குறிப்பிடுகிறார்கள் ஒரு தாதா மாதிரி தெரியலை)கருத்துகள் நன்றாக இருக்கிறது எழுத்து ஸ்டைல் திருப்திகரம் என்று சொல்லாமே தவிர படிப்பவரை கவர்ந்திழுக்கும் சக்தி இருப்பதாக சொல்லமுடியாது. ஆனாலும் இவரின் எழுத்தும் படிப்பவருக்கு அலுப்பைத் தராது.
மற்றவரை எழுதுகிறவர் என்றே கருத முடியாது. கம்ப எடுத்தவன் எல்லாம் காவல் காரன் ஆகிவிட முடியாது. கருத்துக்களில் முதலில் அவருக்கே தெளிவு இருக்குமா தெரியாது. எழுத்து ஸ்டைல் கேட்கவே வேண்டாம், ஒரு ரசனை கெட்ட ஸ்டைல்.
க.பழனிவேலன்
நீங்கள் திராவிடக் கழகத்தவர் என்று எங்குமே நான் சொல்லவில்லை. பெரியார் செலக்டிவாக பகுத்தறிவை உபயோகிக்க சொன்னது பற்றிய எனது கருத்துகளை உள்ளடக்கியதே இப்பதிவு. அதற்கு மீறி வேறெதுவும் சொல்லவில்லை.//
விளக்கத்திற்கு நன்றிகள் உயர்திரு.டோண்டு அவர்களே.
தமிழ் ஓவியா மற்றும் விடுதலை போன்ற வலைத்தளங்களை சுய புத்தியுள்ள மனிதர்கள் படிப்பதில்லை. அவர்கள் டார்கெட் ஆடியன்ஸ் எல்லாம் அடிமுட்டாள்களும் அறிவு கெட்டவர்களும் தான். அவர்கள் பதிவுக்கெல்லாம் இப்படி பப்ளிசிட்டி தேவையா.
//மற்றவரை எழுதுகிறவர் என்றே கருத முடியாது. கம்ப எடுத்தவன் எல்லாம் காவல் காரன் ஆகிவிட முடியாது. கருத்துக்களில் முதலில் அவருக்கே தெளிவு இருக்குமா தெரியாது. எழுத்து ஸ்டைல் கேட்கவே வேண்டாம், ஒரு ரசனை கெட்ட ஸ்டைல்.
க.பழனிவேலன்//
intha vimarsanam sariyillye.
marraavarthu lataest pathivai paarkkavum.
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழுவில் இருந்து தாம் விலகுவதாக, மு.க.அழகிரி இன்று திடீரென அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்
இது என்ன ஐயா புதுக் கதை?
இலங்கை அகதிகளுக்கான வசதிகள் குறித்து தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விஜயகாந்த் கூறியுள்ளதாகவும், அவர் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறியாமல் பேட்டியாக 'ஆனந்த விகடன்' வெளியிட்டதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி சாடியுள்ளார்.
எல்லோரும் சேர்ந்து வி.காந்தை இன்னுமொரு எம்ஜிஆர் ஆக்க்கிவிடுவார்களா?
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் விமானத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளநிலையில்
இது மற்றுமொரு இந்தியா பாகிஸ்தான் போருக்கு வழிவைக்காதா?
இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடி பொடிகளுடன் மோதிரம் வாங்கிக்கொள்கிறார்களே என்ன காரணம்?
மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும், ஆனால் இன்று மனிதனை மீண்டு மிருகமாக்கும் முயற்சிகள் கிட்ட தட்ட வெற்றி கண்டு கொண்டிருக்கிறது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும்
இல்லையா ?
மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?
தமிழீழ விடுதலையை ஆதரித்து பேசுவோரை கைது செய்ய வேண்டுமென தொடர்ந்து குரலெழுப்புவோர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழீழம் அமைவதில் எமக்கு உடன்பாடு இல்லையென்பதை தேர்தல் அறிக்கையாக முன் வைத்து அவர்கள் தேர்தலை சந்திக்க தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் -திருமாவளவன்.
தலைவர் கலைஞருக்கு தொந்திரவு கொடுக்க மாட்டடேன் என்று சொல்லி கொண்டே திருமாவளவன் இப்படி செய்வது
காங்கிரசாரையும் அதிமுக வையும் ஒரே அணிக்கு தள்ளிவிடாதா
இலங்கை விவகாரம் இங்கே கூட்டணிகளை சிக்கலாக்கிவிடுமா
//
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் விமானத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளநிலையில்
இது மற்றுமொரு இந்தியா பாகிஸ்தான் போருக்கு வழிவைக்காதா?
//
ஒரு மண்ணும் வைக்காது.
இதனால், தீவிரவாத முகாம்களில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகளுக்கு வார்னிங் கொடுத்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்கிறது ஆளும் இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவு காங்கிரஸ் அரசு.
ரகசியத் தாக்குதல் ரகசியமாக அல்லவா செய்யவேண்டும். இப்படி பகிரங்க அறிவிப்பு கொடுத்துச் செய்யுறதுக்கு இது என்ன கல்யாணச்சாப்பாடு சமையலா ?
எங்களைக் காயப்படுத்தலாம்; ஆனால், ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளதை பார்க்கும் போது
டாடவின் நேர்மை கலந்த தைரியம் தெரிகிறது இல்லையா?
இந்தியாவில் இந்த நேர்மை இல்லாத மற்றொரு பெரிய பணக்கார வியாபாரி யார்?
//இதனால், தீவிரவாத முகாம்களில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகளுக்கு வார்னிங் கொடுத்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்கிறது ஆளும் இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவு காங்கிரஸ் அரசு//
ஓ கதை அப்படியா?
இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்
க.கா.அ.ச
என்ன இருந்தாலும் ஓட்டு அரசியல்
பார்க்க்றார்கள் என்பதற்காக
காங்கிரஸாரின் தேச பக்தியை
சந்தேகிக்க வேண்டாம்
இப்பதான் வாழ்க்கையிலேயே உருப்படியான ஒரு பதிவை போட்டுள்ளீர்.
//
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் விமானத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளநிலையில்
இது மற்றுமொரு இந்தியா பாகிஸ்தான் போருக்கு வழிவைக்காதா?
//
இம்மா நாள் களிச்சி குண்டு போட்டா அங்கிட்டு குந்திகினு கிடக்கிறத்துக்கு அவனுங்க என்ன கூமுட்டையனுங்களா?
//kapilavastu said...
இப்பதான் வாழ்க்கையிலேயே உருப்படியான ஒரு பதிவை போட்டுள்ளீர்//
ithuthan vasisdar vaayaal pirammarishiyaa?
வரும் ஜன 6 ந்தேதி முதல் சீனா/கொரியா நாடுகளில் தயாரிக்கப்பட்ட மொபைல்களில் சர்வேதசக் குறியீடு எண் இல்லாதவை இந்தியவில் தடை செய்யப் படலாம் என்பது செய்தி.
அவைகளை முதலிலே தடை செய்திருந்தால் மக்களின் பொருளாதர இழப்பை தவிர்த்திருக்கலாமே?
தும்பைவிட்டு வாலைபிடிக்கும் செயலல்லவா இது?
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக இரா.பத்மநாபன் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளது திமுகவின் திருமங்கல வெற்றிக்கு வலு சேர்க்குமா?
நெல்லையில் அரசி ராதிகாவின் சமகவில் உ.த வாக பதவி ஏற்பு,இனி எல்லாம் வாரிசுதானா?
அடுத்து விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ்
எப்போ கட்சி தொடங்குவாங்கா?
தமிழக அரசியலும் சினிமாவும் ஈருடல் ஓருயிராய் இருப்பதற்கு புண்ணியம் கட்டியது திராவிடக் கட்சிகள்தானே?
ஹிந்து என்றால் திருடன் என்னும் பொருள் என்று பாரசீக மொழி அகராதியை வைத்து பேசுபவர்கள் ஏன் இன்னும் அதே மதத்தில் இருந்து லோல்பட வேண்டும்?
“மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்”
---------------------------------
This is NETHI ADI.
Sonnaalum vilangaadhu Manjal Kavignarukku ..........
//நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.//
It appears this very concept is stolen from ""Manusmirithi"". Also his is the very concept Brahmins are accused of practicing!!
What Periyar propagated and Our present Dravidian leaders implemented is Neo VARNDASRAM DHARMA". Now ""Neo Varnasramam"" is praciced and Politicians, Judiciary, Bearueocracy are neo-brahmins and all other are neo-suthras. It is defined as Social Justice.
பெரியாரை பின் பற்றுபவர்கள் எல்லாம் முட்டாள்களா?
பெரியாரை கடவுளாக்கும் பகுத்தறிவுவாதிகள் கண்டிப்பாக முட்டாள்களாகத் தான் இருக்க முடியும்.
பெரியார் சரியாத்தான் செலக்ட் பண்ணியிருக்கார்
well done mathibala,u have explained the story dondu is a parpaniya racist, mr dondu why didn
't u answer for this guestion தமிழை நீச பாசை என்றும் , சமஸ்கிருதம் தேவ மொழி என்று சொல்லும் பார்ப்பனர்கள் யா
//சமஸ்கிருதம் தேவ மொழி என்று சொல்லும் பார்ப்பனர்கள்..//
அவ்வாறு சொன்னவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் நீரே அனானி முகமூடியை எடுத்து தைரியமாகக் கேட்டுக் கொள்ளவும்.
உங்கள் பார்ப்பனக் குஞ்சுகளுக்கு நீவிவிட்டுத் திருப்தியளிப்பதற்காக தடாலடிப் பதிவு போடுவது உங்களுக்குச் சரியென்றால் சரிதான்.---மிதக்கும்வெளி said
I also think the same .
Why Dondu sir, Why ?.
Do some other work like reading OLD Thukluck another time ( some require 3 times)
he...he...he..he he ...
Your Best friend
sathappan
//sathappan said...
உங்கள் பார்ப்பனக் குஞ்சுகளுக்கு நீவிவிட்டுத் திருப்தியளிப்பதற்காக தடாலடிப் பதிவு போடுவது உங்களுக்குச் சரியென்றால் சரிதான்.---மிதக்கும்வெளி said
I also think the same .
Why Dondu sir, Why ?.
Do some other work like reading OLD Thukluck another time ( some require 3 times)
he...he...he..he he ...
Your Best friend
sathappan//
kuppukutty will give fitting reply for this.
sriram
I also think the same .
Why Dondu sir, Why ?.
Do some other work like reading OLD Thukluck another time ( some require 3 times)
he...he...he..he he ...
Your Best friend
sathappan//
kuppukutty will give fitting reply for this.
sriram//
.))))))))))))))))))))))))))
//சமஸ்கிருதம் தேவ மொழி என்று சொல்லும் பார்ப்பனர்கள்..//
அவ்வாறு சொன்னவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் நீரே அனானி முகமூடியை எடுத்து தைரியமாகக் கேட்டுக் கொள்ளவும்.///
உயர்திரு.டோண்டு அவர்களுக்கு, ஈழவன் என்ற அனானிக்கான உங்கள் பதில் இது.
தமிழ் நீஷ பாஷை இல்லை என்று குருக்கள் ஒத்துக்கோண்டால் சிதம்பரத்தில் தமிழில் பாட ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்??
வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தில் ஏன் இன்னும் மந்திரங்களை சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்???
தமிழில் மந்திரங்களைச் சொல்வதில் தமக்கேதும் பிரச்சினையில்லை என்று ஒத்துக்கொள்வார்களா ?
தமிழகத்தில் எங்குமே வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தை நாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் எப்படிக் கற்றார்கள்...???
இப்படி பலவாறான கேள்விகளுண்டு. நேரமும் , வாய்ப்பும் அமைந்தால் நாம் இதை ஒரு நல்ல விவாதமாக எடுத்துச் செல்லலாம்....இரு தரப்பிற்கும் தெளிவு கிடைக்கும்.....
ஒரு சிறு விளக்கம்...
நான் பார்ப்பனர்களிடையே வளர்ந்தவன்....ஒருகாலத்தில் அவர்கள் செல்வாக்கோடு இருந்திருப்பார்களோ என்றெனக்கு தெரியாது......ஆனால் என் வீட்டருகில் இருக்கும் பல பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள்..சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் , அவர்களில் பலர் திமுக கொடியை என்னோடு ஏந்தி "போடுங்கம்மா ஓட்டு , உதயசூரியனைப் பாத்து" என்று கூவிக்கொண்டிருந்தவர்கள்....
ஆனால் அவர்கள் மீதான அக்கறையும் , பரிதாபமும் எனக்கு சோ , சுப்பிரமணியம் சுவாமி இவர்களைப் பார்த்தவுடன் பனியாய் விலகிவிடுகிறது..
திராவிட அரசியலை எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்கள் கீழிருக்கும் தங்கள் சமுதாயத்தின் நிலை பற்றி என்ன செய்து கிழித்தார்கள் என்று சொல்லுங்கள்.....??? இராமயணத்தை தமிழில் எழுதுவதையும் , கூட்டணிக் கணக்குக்களாய் தூது போவதையும் தவிர்த்து???
தனது சமுதாயத்தை தூக்கி விட நினைத்த பெரியாருடன் ஆயிரம் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் , செயல்பாடுகளில் வேற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அவர் செயல்பட்ட நோக்கம் வெகு தெளிவானது...கீழிருப்பவனை கை தூக்கி விடுவது...அதற்கு எதிராக இருக்கும் பார்ப்ப்னர் , சாதி , மதம் , கோயில் , சாமி என்ற் அத்தனையையும் அவர் வீழ்த்தத் துடித்தார்...அப்படித்தான் நான் பெரியாரைப் பார்க்கிறேன்...நன்றிகள்...
மதிபாலா அவர்களே,
நான் சொன்னது சொன்னதுதான். என்னைப் பொருத்தவரை நான் அறிந்த ஆறு மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று டிவியிலேயே கூறியாகி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//திராவிட அரசியலை எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்கள் கீழிருக்கும் தங்கள் சமுதாயத்தின் நிலை பற்றி என்ன செய்து கிழித்தார்கள் என்று சொல்லுங்கள்.....???//
அப்படியா, திராவிட ஆட்சி கடந்த 40 ஆண்டுகளாக நடத்துபவர்கள் என்ன கிழித்தார்களாம்? இன்னும் உத்தபுரத்தில் பிள்ளைமார்களைத்தானே தாங்கி பிடிக்கிறார்கள்? பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் என்ன கிழித்தார்கள்? கண்டதேவி தேர் இழுப்பில் என்ன பிடுங்கினார்கள்? கீழ்வெண்மணி சம்பந்தமாக பெரியார் என்ன கிழித்தார்? அவர் தனது சகநாயுடுவின் குற்றத்தை கண்டு கொள்ளவேயில்லையே. அதற்கு பதில் கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் சொன்னது சொன்னதுதான். என்னைப் பொருத்தவரை நான் அறிந்த ஆறு மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று டிவியிலேயே கூறியாகி விட்டது.//
நான் உங்களைச் சுட்டவில்லை நண்பரே...நீங்கள் ஓரளவாவது நடுநிலையானவர் என்ற அடிப்படையிலேயே நான் இந்த விவாதத்தையே ஆரம்பித்தேன்...
பொதுவாகவே இவ்விவாதத்தை வைக்கிறேன்...
அதே போல , உங்கள் தமிழ் பற்றிய கருத்துக்கு என் சல்யூட்....அதிக மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராகிய நீங்கள் , உங்கள் அனுபவத்தைத் தோய்த்து இந்தக் கருத்திற்கு வந்திருக்கிறீர்கள்...ஆனால் அப்பேர்ப்பட்ட சிறப்புடைய் மொழியை கடவுள் வழிப்பாட்டிற்கு உபயோகிக்கக்கூடாதென்கிறார்களே அதைப்பற்றிதான் என் வினவலும்..
Dondu sir,
Iam sorry …..Please it’s only a provoking joke.
Take It Easy and Again sorry, if you really hurt.
Your B. friend
sathappan
///
அப்படியா, திராவிட ஆட்சி கடந்த 40 ஆண்டுகளாக நடத்துபவர்கள் என்ன கிழித்தார்களாம்? இன்னும் உத்தபுரத்தில் பிள்ளைமார்களைத்தானே தாங்கி பிடிக்கிறார்கள்? பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் என்ன கிழித்தார்கள்? கண்டதேவி தேர் இழுப்பில் என்ன பிடுங்கினார்கள்? ////
பெரிதாக ஒன்றும் பிடுங்கவில்லைதான்.....ஆனால் அனேகமாக தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட உரிமைப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.....வேறெந்த மாநிலத்திலும் இந்த அளவு கூட உரிமைப் போராட்டம் வலுப்பெறவில்லை அதற்கு காரணம் திராவிட இயக்கம்தான் என்றால் அது மிகையில்லை...!!ஆதிக்க சாதிகள் எதுவானாலும் அதை நான் ஒரே கோட்டில்தான் பார்க்கிறேன்.....வெறும் பார்ப்பனர்களை மட்டும் சாடித் தப்பித்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை...
///
கீழ்வெண்மணி சம்பந்தமாக பெரியார் என்ன கிழித்தார்? அவர் தனது சகநாயுடுவின் குற்றத்தை கண்டு கொள்ளவேயில்லையே. அதற்கு பதில் கூறவும்.
///
மன்னிக்கவும் , இதைப் பற்றிய தெளிவான பார்வை எனக்கில்லை...வயதில் மிக இளையவன் ,அச்சம்பவம் நடந்த நேரத்தில் நான் பிறந்திருக்கவேயில்லை...அதனால் பெரியார் அச்சம்பவத்தை பற்றி அமைதி காத்திருந்தால் அது விரும்பத் தக்கதல்ல...!!
அதனால்தான் பெரியாரை நோக்கிய ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ( எனக்கும் கூட ) அவரது நோக்கம் உயர்வானது , அதனாலேயே என்னால் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது என்கிறேன்...
//ஆனால் அப்பேர்ப்பட்ட சிறப்புடைய் மொழியை கடவுள் வழிப்பாட்டிற்கு உபயோகிக்கக்கூடாதென்கிறார்களே அதைப்பற்றிதான் என் வினவலும்.//
நல்ல கேள்வி. தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களிலும் தமிழ் வழிப்பாடும் உண்டு. சிதம்பரத்திலேயே கூட குருக்கள் தேவாரமும் பாடுகின்றனர். ஆனால் எதை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவிதிமுறை உண்டு. அதன்படித்தான் காரியங்கள் நடக்கின்றன. சிதம்பரம் கோவில் விவகாரத்தில் முக்கியமான விஷயம், அது இந்து அறநிலைத்துறையின் கீழ் வருவதில்லை. அதன் விதிமுறைகள் தனி. அங்கு அரசு நுழைந்து அடாவடி செய்யும் என்பதற்குத்தான் எதிர்ப்பு.
மசூதிகளில் போய் அரபி மொழியில் குரான் ஓதக்கூடாது என்று சொல்ல இயலுமா? அது என்ன இந்து கோவில்களுக்குள் மட்டும் அரசு நுழைய வேண்டும்? மதசார்பற்ற அரசு என்று சொல்லிவிட்டு கோவில்களில் மட்டும் ஏன் மூக்கை நுழைகிறார்கள்? இப்படி பல கேள்விகள் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல கேள்வி. தமிழகத்தில் உள்ள எல்லா கோவில்களிலும் தமிழ் வழிப்பாடும் உண்டு. சிதம்பரத்திலேயே கூட குருக்கள் தேவாரமும் பாடுகின்றனர். ஆனால் எதை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவிதிமுறை உண்டு. அதன்படித்தான் காரியங்கள் நடக்கின்றன.
////
நன்று....ஆனால் அவ்விதிமுறைகளை நிர்யணித்தது யார்?? கடவுளை சரிசமமாக எல்லோரும் வணங்குவதிலும் விதிகளை நிர்யணிப்பது தவறுதானே????
அவ்விதிமுறைகளை ஏன் அனைவருக்கும் பொதுவானதாக மாற்றக்கூடாது?
///
சிதம்பரம் கோவில் விவகாரத்தில் முக்கியமான விஷயம், அது இந்து அறநிலைத்துறையின் கீழ் வருவதில்லை. அதன் விதிமுறைகள் தனி. அங்கு அரசு நுழைந்து அடாவடி செய்யும் என்பதற்குத்தான் எதிர்ப்பு.
///
அது யாரைச் சார்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அய்யா...கோயில் என்பது வழிபாட்டுத் தலம்......அனைவரும் சென்று வரும் இடம்....இதே சிதம்பரம் கோயின் அறங்காவலர்கள் இது எங்கள் கோயில் , இங்கே யாரும் வர அனுமதியில்லை என்று சொல்லிவிட்டுப் போகட்டும் , யார் வேண்டாமென்கிறார்கள்..??
மசூதிகளில் போய் அரபி மொழியில் குரான் ஓதக்கூடாது என்று சொல்ல இயலுமா? அது என்ன இந்து கோவில்களுக்குள் மட்டும் அரசு நுழைய வேண்டும்? மதசார்பற்ற அரசு என்று சொல்லிவிட்டு கோவில்களில் மட்டும் ஏன் மூக்கை நுழைகிறார்கள்? இப்படி பல கேள்விகள் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.//
ஏன் சொல்லக் கூடாது???? மசூதிகளில் போய் வழிபடும் தமிழ் முஸ்லீம்கள் கண்டிப்பாகச் சொல்லலாம்....ஆனால் இந்துக்கள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் போய் மசூதிகளில் சொல்வது தவறல்லவா???
தவிர சிதம்பரத்தில் தமிழில் தேவாரம் பாட அரசா சொல்லிற்று?? இல்லையே - சிலர் பாட வேண்டும் என்றார்கள் , அதற்கு கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.....
சட்டத்தின் படி அந்த எதிர்ப்பு தவறென்று சொல்லி தேவாரம் பாடுபவர்களுக்கு பாதுகாப்புத் தந்தது மட்டும் தான் அரசாங்கம்....
இதிலென்ன தவறு?
//சட்டத்தின் படி அந்த எதிர்ப்பு தவறென்று சொல்லி தேவாரம் பாடுபவர்களுக்கு பாதுகாப்புத் தந்தது மட்டும் தான் அரசாங்கம்....//
சட்டத்தின் ஆதரவு கோவில் நிர்வாகத்துக்குத்தான், என கோர்ட்டுகள் தீர்ப்பு அளித்தன. இது ஒரு அரசியலாக்க முயற்சி. சாமியே கிடையாது என்று கொடி பிடித்த தி.க.வினர் முக்கிய பங்கேற்றனர்.
இன்னும் ஒரு நகை முரண். விதிகள் என்றால் அதை அனுசரிக்க வேண்டும், இல்லாவிடில் கட்சியை விட்டு வெளியேறு என்று பெரியார் சொன்னதை வைத்துத்தான் இப்பதிவே. பதிவை சரியாக பார்க்கவும். பெரியார் சொன்னதையும் நோக்கவும். அவரே உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சட்டத்தின் ஆதரவு கோவில் நிர்வாகத்துக்குத்தான், என கோர்ட்டுகள் தீர்ப்பு அளித்தன. //
சட்டத்தின் ஆதரவு ஒருதலைப் பட்சமாக இருக்கும் பட்சத்தில் அச்சட்டத்தையே மாற்றத்தான் வேண்டும்...!!
இது ஒரு அரசியலாக்க முயற்சி. சாமியே கிடையாது என்று கொடி பிடித்த தி.க.வினர் முக்கிய பங்கேற்றனர். //
இதிலென்ன தவறு , ஒரு சிவனடியார் தேவாரம் பாடத் தடை...அத்தடை முற்றீலும் நியாயமற்றது என்பதற்காக போராடி வாங்கித் தருவதில் என்ன தவறிருக்க முடியும் நண்பரே?
இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://thamilar.blogspot.com/2008/12/blog-post_25.html
//அசல் கன்னடரான இவர் (இளங்கோவன்) தமிழுக்கு ஏன் செம்மொழி?என வழக்கு போட துணிந்தவர்.. தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!//
தமிழனுக்கு தலைமை தாங்கும் யோக்கியதை கிடையாது என்றும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும் திருவாய் மலர்ந்தருளினவரின் தம்பி மகன் ஈ.வி.கே சம்பத்தின் மகன் வேறு என்பதையும் சேர்த்து கொள்வதுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://thamilar.blogspot.com/2009/01/blog-post_6517.html
//யோவ் தோண்டு அசத்திருரேரு, அனானியாவும், தோண்டுவாகவும் வந்து கலக்கறீரு, கலக்கும். supera-அ double act கொடுக்கறீரு. கமலே உம்மட்ட பிச்சை வாங்கனும் போல.//
//Anonymous said...
டேய் டோண்டு, உனக்கு ஏன்டா இந்த அனானி பொழப்பு...
உனக்கு இங்க என்னடா வேலை..
போடா போய் "சோ" வுக்கு ஆய் கழுவர வேலை இருந்தா பாரு.//
இப்ப அனானியா வந்தது மைக் என்கிற பதிவரே தனக்குத்தானே போட்டுக் கொண்டது என்று ஏன் கூறக்கூடாது?
//ஆம் - தமிழனுக்குத் தலைவன், தமிழ் தேசியர்களின் குரு குறுகிய ‘தமிழனவாதத்தைக்' கடந்து வரச் சொன்ன ஈரோட்டு ராமசாமி தான்.//
அதே பெரியார்தான் சக நாயுடு கீழ்வெண்மணியில் தலித்துகளை எதிர்த்தபோது சவசவ அறிக்கை கொடுத்து எஸ்கேப் ஆனார்.
அதே பெரியார்தான் தனது கட்சித் தொண்டர்களுக்கு பகுத்தறிவு இருக்கக்கூடாது என சொன்னார், பார்க்க, http://dondu.blogspot.com/2008/12/blog-post_21.html
அப்போதும் அவர் காலில்தான் விழுந்தீர்கள்.
இதே மைக் அவர்கள்தான் இளங்கோவனை கன்னடர் என திட்டிவிட்டு, அவர் பெரியாரின் பேரன் என நினைவுபடுத்தியதும் அசடுவழிந்த முகத்தை துடைத்துவிட்டு ஓசைப்படாமல் கன்னட ரெஃபரன்சை நீக்கினார். பார்க்க, http://thamilar.blogspot.com/2008/12/blog-post_25.html
இப்பதிவின் தலைப்புத்தான் என்னை பின்னூட்டமே போட வைத்தது. ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. அவர் கன்னடர் என்பது உங்கள் ஆட்சேபணையா அல்லது அவர் சொன்னது உங்கள் ஆட்சேபணையா என்பதை முடிவு செய்து கொள்ளவும்.
பெரியார் என்ற கன்னடரை நீங்கள் தலைவராக வைத்திருப்பதில் என்னவெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?
உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் நீங்கள் உணர்ச்சி வசப்படாது எழுதினால் அதிக பலன்கள் இருக்கும். இல்லை திட்டுவதுதான் உங்கள் நோக்கம் என்றால் உங்களுக்கு இம்மாதிரி கும்மிகள்தான் கிடைக்கும்.
இந்த பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதை காட்ட அதை எனது பெரியார் பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_21.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இங்கே டோண்டு அவர்கள் மென்மையாக பதிலளிப்பதால் இங்கே வந்து மழுப்பல்களைக் கொட்டுகிறவர்கள், இங்கே ஈவேராவைக் கிழி கிழி என்று கிழிப்பது தெரியாதது போல இருக்கிறார்கள்.
ஈவேரா அடிப்பொடிகள் ஈவேரா போலவே புத்திசாலிகள். உதை கிடைக்கும் என்று தெரிந்தால் அங்கே போய் வாலை ஆட்டமாட்டார்கள்.
Post a Comment