6/16/2011

எஸ். பாலசந்தரின் பொம்மை

சமீபத்தில் 1964-ல் வெளி வந்த இப்படம் உருவாக்கம் பெற நீண்ட காலம் (கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்) பிடித்தாலும் அதன் தயாரிப்பாளர் பாலச்சந்தரை அது ஏமாற்றவில்லை. சக்கைப்போடு போட்டது. அக்கால சென்னைத் தெருக்கள் பார்க்கப் பரவசம் தரும். மீனம்பாக்கம் பழைய ஏர்போர்ட்தான் அப்போதைய விமான நிலையம். ஒரு செக்யூரிட்டி பந்தாவும் இல்லாமல் ஏர்ப்போர்ட்டில் எல்லோரும் சகஜமாகப் புழங்கியது வேடிக்கையாக இருக்கும்.

காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் படம்.

முதல் பகுதி:


இரண்டாம் பகுதி:


இதில் வரும் “தத்தித் தத்தி நடந்து வரும் சின்னப்பாப்பா” பாடலுக்கு வாயசைக்கும் அப்பெண் குழந்தை மங்களாவுக்கு இப்போது வயது 57 இருக்கும். வி.எஸ். ராகவனை இளைஞனாகப் பார்க்கலாம். எல். விஜயலட்சுமி மட்டும் சளைத்தவரா என்ன? துள்ளிக் கொஞ்சும் இளமை!!!

மூன்றாம் பகுதி:
அடாடா என்ன கொடுமை. மீதிப் பகுதிகள் கிடைக்கவில்லையே? யூ ட்யூப்பில்தான் தேட வேண்டும். பார்ப்போம். இப்போதைக்கு பதிவைப் போடுகிறேன். உங்களில் ஆர்வமுள்ளவர்கள் முயற்சி செய்யுங்களேன். அவற்றின் எம்பெட்டிங் கோட் கிடைத்தால் பின்னூட்டமாகத் தரவும்.

அந்தப் பொம்மைக்காக எல்லோரும் நாய் படாத பாடுபட்டு அலைவதுதான் படம். கத்திபாராவிலிருந்து மீனம்பாக்கத்துக்கு டாக்சி 1.40 ரூபாய், மீட்டர்படி.

ஆறுதலாக அவர் புது முறையில் டைட்டில்ஸ் தந்ததையாவது பார்ப்போம்.

கடைசியாக டைட்டில்ஸ்:


அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: என் வேண்டுகோளுக்கு இணங்கி இப்படத்தில் திரையிடப்பட்ட, ஜேசுதாஸ் தமிழில் பாடிய முதல் பாட்டுக்கான வீடியோவின் சுட்டியைத் தந்த செந்திலுக்கு என் நன்றி. பாடல் இதோ:



03.11.2011 அன்று சேர்த்தது:
நண்பர் பால ஹனுமானுக்கு நன்றி. அவர் அன்புடன் விட்டுப் போன பகுதிகளுக்கான சுட்டிகள் தந்துள்ளார். அவற்றை வைத்து வீடியோக்களை எம்பெட் செய்கிறேன்.

மூன்றாம் பகுதி


நான்காம் பகுதி:


ஐந்தாம் பகுதி


ஆறாம் பகுதி

8 comments:

sendhil said...

additional trivia:
K.J.Yesudas First Song in tamil is in this movie
'Neeyum Bommai Naanum Bommai'

http://www.youtube.com/watch?v=ay2NUCfJ538

D. Chandramouli said...

Thanks Mr. Raghavan for evoking my memories. The title credit scenes were unique and nicely done. Wonderful to see the young Jesudas, LR Easwari and P. Suseela. N.C. Chakravarthy, I think, became a director himself (directed a Sivaji Ganesan movie?). V. S. Raghavan, Gopalakrishnan, Thair Vadai Desigan were easily identifiable. I think the movie, well ahead o fthe time, was released in Paragon Theater. A path-breaking movie by the 'Ashtavadhani' Veera exponent S. Balachander.

dondu(#11168674346665545885) said...

//I think the movie, well ahead o fthe time, was released in Paragon Theater//

இல்லை. பொம்மை படம் கெயிட்டி தியேட்டரில் வந்தது. பாரகனில் அதே நேரம் வெளியான படம் சிவாஜி சரோஜாதேவி நடித்த புதிய பறவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BalHanuman said...

அன்புள்ள டோண்டு ஸார்,

அருமையான பகிர்வுக்கு நன்றி. மற்ற பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

vijayan said...

யார் யாரையோ கட்டிக்கொண்டு அழும் தமிழ் பிராமணர்கள் வீணை பாலச்சந்தரை எண்ணி உண்மையில் பெருமை கொள்ளலாம்.

ரமணா said...

6.அடுத்த மாதம் கோவையில் கூடும் திமுக பொதுக்குழுவில் கூட்டணி மாற்றம் பற்றிய செய்தி வரும் போலுள்ளதே?
7.சமச்சீர் கல்வி பற்றிய முடிவில் இத்தனை இழுபறி நிலை, மாணவர் எதிர்காலம் என்னவாகும்?
8.தேமுக தலைவரின் நீண்ட மெளனம் ?
9.மாண‌வர் அனைவருக்கும் லாப்டாப் சாத்யமா?நலம் பயக்குமா?
10.பாஜக ஆட்சிக்கு வருவத‌ற்கான வாய்ப்புகள் உருவாகிறதா?

BalHanuman said...

>>அடாடா என்ன கொடுமை. மீதிப் பகுதிகள் கிடைக்கவில்லையே? யூ ட்யூப்பில்தான் தேட வேண்டும். பார்ப்போம்.

டோண்டு ஸார்,

இதோ நீங்கள் கேட்ட மீதிப் பகுதிகள்....

Part 3
http://www.youtube.com/watch?v=bzyEWTiGAPo&feature=related

Part 4
http://www.youtube.com/watch?v=Pqt66uDEuig&feature=related

Part 5
http://www.youtube.com/watch?v=VptD618g5zk&feature=related

Part 6
http://www.youtube.com/watch?v=mBr2bePGT3s&feature=related

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி பால ஹனுமான் அவர்களே. அவற்றையும் எம்பெட் செய்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது