எம். எஃப். ஹுசைன் மறைவு
ஒரு வழியாக ஒரு விவாதத்துக்குரிய மனிதர் இறந்து போனார். அவரைப் பற்றிய விவாதங்களும் முடிவடையும் என நம்புவோம். இறந்தவர் செய்த கெடுதல்களை பேசக்கூடாது என்பார்கள். ஆகவே அவர் செய்த நல்ல காரியத்தைப் பற்றிப் பேசுவோம். நன்றாக படம் வரைவார். மாதுரி தீட்சித்துக்கு ரசிகர். வேறு என்ன நல்லது செய்தார்? நினைவுக்கு வரவில்லை.
நினைவுக்கு வருவது ஒரு ஜோக்குதான். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பற்றி நான் ஏற்கனவேயே எழுதியுள்ளேன். முத்துசாமி தீட்சிதரின் படைப்புகளிலேயே சிறந்தது என என்று ஒருவனிடம் கேட்க, அவன் அழுத்தந்திருத்தமாக “மாதுரி தீட்சித்” என்றானாம். பரவாயில்லை ஹுஸேன். இந்த ஜோக்கையாவது நினைவுபடுத்தினாரே.
கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படும் வேண்டாத விருந்தாளி
பாவம் காங்கிரசாரும் என்னென்னவோ செய்து பார்த்து விட்டனர். சோனியா காந்தி, ராகுல் காந்தியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகளையும் சிறையில் அடைத்தாயிற்று. இப்போது பேரனின் முறை எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் என்ன, கருணாநிதி கூட்டணியில் தொடர்கிறார். மிஞ்சி மிஞ்சிப் போனால் வெளியே இருந்தாவது ஆதரவு கொடுப்பாராக இருக்கும்.
இப்படித்தான் ஒரு வேண்டாத விருந்தாளி விட்டை விட்டுப் போகாமல் அழிச்சாட்டியம் செய்தானாம். அவனிடம் ஜாடையாகக் கூறி பார்த்திருக்கிறார்கள், “உன் வீட்டார் உன்னைப் பிரிந்து ரொம்பக் காலம் ஆகி விட்டது போலிருக்கிறதே, வருந்த மாட்டார்களா” என்று. வே.வி.யிடம் இந்தப் பாச்சா பலிக்குமா? “அதற்குத்தான் நேற்றே என் வீட்டாருக்கு எழுதிப் போட்டு விட்டேன். நாளை எல்லோரும் இங்கேயே வந்து விடுவார்கள்” என்று சொன்னானாம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஃபேஸ்புக், லின்க்ட் இன் ஆகிய தளங்களிலிருந்து நட்பு கோரி பல அழைப்புகள் வருகின்றன. அங்கெல்லாம் நான் போவதே இல்லை. முதலில் உறுப்பினர் ஆனதுடன் சரி. தனிப்பட்டத் தகவல்கள் திருடப்படும் இக்காலத்தில் அங்கெல்லாம் போகாமல் இருப்பதே உத்தமம் என நான் நினைப்பதே அதற்குக் காரணம். ஆகவே அம்மாதிரி நட்பு அழைப்புகளுக்கு நான் எதிர்வினை கூடச் செய்வதில்லை.
உங்கள் புரிதலுக்கு நன்றி.
கொத்துக் கொத்தாக மின்னஞ்சல்கள் அனுப்புவது பற்றி
இது இன்னொரு தலைவலி. ஆனால் சில சமயங்களில் அவை நல்ல பதிவுகளுக்கும் காரணமாகின்றன என்பதையும் மறுக்கவியலாது. ஆகவே இது குறித்து எனது கருத்து நடுநிலையில்தான் உள்ளது.
ஆனால் எனது நண்பனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டது. எல்லோருக்கும் இம்மாதிரி மெயில்களை அனுப்பும்போது தவறுதலாக தன்னுடைய பே ஸ்லிப்பையும் அட்டாச் செய்திருக்கிறான் அந்தப் பேர்வழி. பிற்கு நான் ஃபோன் செய்து என்ன விஷயம் எனக் கேட்க, தவறுதலாக அனுப்பியதாகவும், அம்மின்னஞ்சலைத் திரும்பப் பெறும் முயற்சியில் இருப்பதாகவும் கூறுகிறான் அவன். டூ லேட் எனக்கூறிவிட்டு ஃபோனைக் கட் செய்தேன் நான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
21 hours ago
21 comments:
செத்தவர்கள் பற்றி பேசக்கூடாது... பேட் ..... எதற்கு கிண்டல்?
//முத்துசாமி தீட்சிதரின் படைப்புகளிலேயே சிறந்தது என என்று ஒருவனிடம் கேட்க, அவன் அழுத்தந்திருத்தமாக “மாதுரி தீட்சித்” என்றானாம்.//என்னே ஒரு சங்கீத ஞானம் அவருக்கு ?
http://www.sandeepweb.com/2011/06/10/death-of-a-pervert-may-his-soul-burn-in-hell/
இறந்து விட்டார் என்பதற்காக ஒருவர் செய்த தவறான காரியங்கள் நீங்கி விடாது..
A 'blackmark' once made, remains there forever.
// ஆனால் எனது நண்பனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டது. எல்லோருக்கும் இம்மாதிரி மெயில்களை அனுப்பும்போது தவறுதலாக தன்னுடைய பே ஸ்லிப்பையும் அட்டாச் செய்திருக்கிறான் //
அடுத்த தடவை.. சொத்து கணக்கையும் அட்டாச் செய்துடப் போறாரு.. பாத்து.. அனுப்பச் சொல்லுங்க..
அவர் தான் கொடுத்த பேட்டிகளில் இந்த சர்ச்சைக்குரிய ஒவியங்களுக்காக பாதுகாப்பின்மை நிலைமை வந்த போதும் மிகவும் மென்மையாகக் கையாண்டார் என்று சொல்லலாம். அவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களை கலைகண்ணோடு பார்க்கத் தெரியாத முட்டாள்கள் என்று இங்கே இணையத்தில் பாய்ந்து பாய்ந்து கலை பேசியவர்களை விட தனது நிலையை விளக்க அவர் நிதானமாகவே செயல்பட்டார்.
http://www.virutcham.com/2011/06/ஹுசேனை-தவறாகப்-புரிந்து/
1)தமிழனத் தலைவர் ஆதிக்க சக்திகளின் சதிகளையெல்லம் முறியடிக்கின்ற விதமாய் காங்கிரசுடன் லட்சிய உறவு தொடரும் என வெற்றி பேரிகை முழங்கியுள்ள பேராண்மைக்கு உங்கள் பதிலென்ன?
2)ஊழல் வழக்குகளில் தன் குடுபத்தாரை காக்க சோனியா அம்மையாரிடம் காவடி தூக்குகிறார் கலைஞர் எனும் பிற்போக்கு சக்திகளின் உளுத்துபோன வாதங்களின் முனை முறிகின்ற வகையில் மாறன், தன் மீது உள்ள வழக்குகளை சமாளிப்பார் என சொல்லும் ராஜ தந்திரத்திற்கு உங்கள் பதிலென்ன?
3) காங்கிராசார் மேல் எனக்கு வருத்தமில்லை இதுவெல்லம் எதிர்க்ட்சிகளின் சதி என ஆணித்திரத்துடன் போர்ப்பரணி பாடும் தலைவனின் வாக்கு வன்மைக்கு உங்கள் பதிலென்ன?
4)2ஜி வழக்குகளை உச்ச நீதி மன்றத்தில் சமாளிப்போம் என அறைகூவல் விடும் அரசியல் சாணக்கியனுக்கு உங்கள் பதிலென்ன?
5)அவர் கொண்டுவந்த சமச்சீர் கல்வியை முடக்க கருதியோருக்கு நீதிமன்ற மூலம் தடை ஆணை பெற்று சிங்கம் போல் சிலிர்த்து நிற்கும் மனு நிதிச் சோழனின் மறு பதிப்புக்கு உங்கள் பதிலென்ன?
6)2016ல் மீண்டும் கலைஞர் முதல்வராய் வருவார்.
வந்த உடன் மீண்டும்
கலைஞர் காப்பீட்டு திட்டம்
கலைஞர் வீடு வழங்கு திட்டம்
கலைஞர் சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம்
கலைஞர் டீவி வழங்கும் திட்டம்
கலைஞர் சமச்சீர் கல்வி திட்டம்
கலைஞர் உழவர் சந்தை திட்டம்
கலைஞர் காஸ் வழங்கு திட்டம்
கலைஞர் மிக்ஸி வழங்கு திட்டம்
கலைஞர் காலி மனை வழங்கு திட்டம்
கலைஞர் லேப்டாப் வழங்கு திட்டம்
ஆகியவற்றை
தலைவர் கொண்டு வருவார் என நம்பும் ஒரு கோடி திமுக தொண்டர்களுக்கு உங்கள் பதிலென்ன?
@ezhil arasu
Stupid questions, do not deserve an answer. Perhaps some of the readers might respond.
Regards,
N. Raghavan
@Virutcham
Sorry, I don't agree with you.
Anyhow the offender is no more, leave it.
Regards,
Dondu N. Raghavan
Why was his body buried in London and not in his chosen land for citizenship viz Qatar?After all next to saudi arabia isnt qatar closest to Allah?
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.""குறைகளை சுட்டிக்காட்டும் கட்சியாக தே.மு.தி.க., செயல்படும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
7.ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ஜெயலலிதா தகவல்
8.சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிடும் வகையில், அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
9."காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்தச் சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அரசு தலையிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
10."தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் தங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க.,வே காரணம்' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
TO
EZHILARASU
CLICK THE FOLLOWING LINKS TO KNOIW THE TRUTH ABOUT YOUR LEADER AND DMK
http://savukku.net/
http://truetamilans.blogspot.com/
http://idlyvadai.blogspot.com/
1.திமுக வின் தோல்விக்கு சில பார்பனர்கள்தான் காரணம் என்கிறாரே? இதே சில பார்பனர்கள்தானே ரஜினியை வைத்து திமுகவை வெற்றி பெற வைத்தார் என்பதை அவர் மறந்தாரோ?
2. இலைகாரன் என்பவர்தான் எழிலரசுவாக மாறியிருகிறாரோ?
ஆதிக்க சக்திகளின் தொண்டரடிப்பொடிகள்
பிற்போக்கு சக்திகளின் பிரதம ஊதுகுழல்கள்
தர்ப்பைபுல் அரசியல் விற்பன்னர்கள்
அனைவரும் ஒன்று கூடி சதி செய்து
பெரிய வரலாற்றூப் பிழை செய்து
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கபட்ட
அனைத்து மக்களின் முன்னேறத்தை குழி தோண்டி புதைத்துவிட்டது கண்டு
தமிழினத் தலைவர் வெகுண்டு எழுந்துள்ளார்
இனி அவர் விடும் கேள்விக் கணைகள் முன்னால் எந்த செப்படி வித்தையும் எடுபடாது.மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர்.தாங்கள் ஏமாற்றப்பட்டது கண்டு வருந்துவதாய் தகவல்கள் நாடு முழுவதும்.இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது.லட்சியக் கூட்டணியை பிரிப்பதற்கு நடக்கும் பார்ப்பனர் ஊடக தந்திரங்களை தலைவர் வெற்றி கொள்வார்.மாற்றத்தை நோக்கி தமிழகம்.மீண்டும் மலர்கிறது. லட்சோப லட்சம் திமுக தொண்டர்களிடையே ஒரு மறுமலர்ச்சி.1967ல் மக்கள் பார்த்த எழுச்சி.வெற்றி நிச்சயம்.
//ராஜரத்தினம் said...
1.திமுக வின் தோல்விக்கு சில பார்பனர்கள்தான் காரணம் என்கிறாரே? //
கலைஞர் கூறுவது உண்மை என்றால், தமிழ்நாடு ஏன் இந்தியாவே பார்ப்பனர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது!
http://idlyvadai.blogspot.com/2011/06/blog-post_12.html
http://youtu.be/yvQvlYuJsHY
6.நீதி மன்ற தடையானைக்கு பிறகும் சமச்சீர் கல்வியில் முதல்வரின் செயல் பற்றி?
7.இலங்கைப் பிரச்சனையில் அதிமுகவின் இரட்டைவேடம் என குற்றஞ்சாட்டுபவர் பற்றி?
8.முதல்வரின் டெல்லி விஜயம் மீண்டும் அதிமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு வித்திடும் என வரும் செய்திகள் பற்றி?
9.மாறன் சகோதரர்கள் சிவசங்கரனுடன் சமாதனத் தூது பற்றிய செய்தி பற்றி?
10.லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாய் மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் எஸ்.எம்.எஸ் பற்றி?
//ezhil arasu said...
1)தமிழனத் தலைவர் ஆதிக்க சக்திகளின் சதிகளையெல்லம் முறியடிக்கின்ற விதமாய் காங்கிரசுடன் லட்சிய உறவு தொடரும் என வெற்றி பேரிகை முழங்கியுள்ள பேராண்மைக்கு உங்கள் பதிலென்ன?//
IT IS REPORTED THAT DMK IS NERVOUS ABOUT THE DELHI VISIT OF CHIEF MINISTER JEYALALITHA.
NOW THE GREAT LEADER OF DMK IS CHARGING THAT SOME OWNERS OF NEWSPAPAERS ARE TRYING TO SPILT DMK CONG ALLAIANCE.
CONGRESS SPOKESPERSON IS TELLING THAT ALLIANCE WITH DMK IS SOUND.
WHAT WILL HAPPEN?
காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,விற்கும் இடையே, சிண்டு முடிய சில பத்திரிகைகள் முயற்சிப்பதாக, கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த 10ம் தேதி, அறிவாலயத்தில், கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.அப்போது, பத்திரிகையாளர்கள், 31 கேள்விகள் கேட்டனர். இதில், 22 கேள்விகள், காங்கிரசுக்கும், தி.மு.க.,விற்கும் உள்ள உறவை, எப்படியாவது துண்டிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை விமர்சித்து, நான் ஏதாவது கூறினால், அதை பெரிதுபடுத்தி, இருவருக்கும் இடையே கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்கப்பட்டவை.மொத்தம் கேட்கப்பட்ட, 31 கேள்விகளில், 22 கேள்விகள் காங்கிரசுக்கும், தி.மு.க.,விற்கும் இடையே சிண்டு முடியும் குணம் கொண்டவை. இதை கவனித்தால், பத்திரிகை தர்மத்தை குலைக்கும் செயலிலே, பத்திரிகையாளர்களே ஈடுபடலாமா என நினைக்கத் தோன்றுகிறது.இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
courtesy-dinamalr dated 14/6/2011
தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் டெல்லி பயணம்,பிரதம மந்திரியுடன் சந்திப்பு, பார்ப்பனர் சார்பு பத்திரக்கைகளுக்கு அளித்த நீணட நெடிய ஆங்கில பேட்டி, மந்திரி மேல் குற்றச் சாட்டு,தயாநிதியை மந்திரி பதவியிலிருந்து நீக்க
கோரிக்கை,திமுக ஆட்சியை ஹிட்லர் ஆட்சியுடன் ஒப்பிட்ட தன்மை,வட இந்தியப் பத்திரிக்கைகள் கொடுக்கும் ஆர்ப்பாட்ட விளம்பரம் ஆகியவற்றிற்கு விரிவான விளக்கமான பதில்?
விருட்சம் அவர்களே
உங்கள் குடும்பத்தினரை நிர்வாணமாக காட்ட மக்கள் கலைக்கண்ணுடன் பார்க்க அனுமதிப்பீர்களா? இந்துக்களின் தெய்வங்களை நிர்வாணமாக வரைவாராம். இவர் கலைக்கண்ணுடன் பார்ப்பாராம்? ஏன் இயேசு கிறிஸ்துவையும் முகமது நபியையும் நிர்வாணமாக வரைந்து மக்களை கலைக்கண்ணுடன் பார்க்க வாய்ப்பளியுங்களேன். பார்க்கலாம்.
@பாட்டி வைத்தியம்
அரைகுறையா படிச்சுட்டு யாருப்பா அது இப்படிப் பாயறது?
Post a Comment