பதிவுக்கு போகும் முன்னால் முதலில் இப்பாட்டைக் கேட்டுவிடுவோம்.
கமலஹாசன் நடித்து வெளியான “பேசும் படம்” எண்பதுகளில் திரையிடப்பட்டது, டயலாக்கே இல்லாமல். அதில் ஒரு சீன். ரயில்வே மேம்பாலத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். ஒரு பெரிய துண்டை விரித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்திருப்பான். கமல் தன் கையில் இருக்கும் பணத்தை அவன் முன்னால் எண்ண, அவனோ தனது துண்டுக்கடியில் வைத்திருக்கும் கத்தை கத்தையான பணத்தைக் காட்டுவான். கமலுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.
சில காட்சிகள் கழித்து அதே பிச்சைக்காரனின் இறந்த உடல் அதே துண்டின் மீது கிடக்கும். பிணத்தை அப்புறப்படுத்த வருபவர்கள் பிணத்தை துண்டுக்கு அப்பால் தூக்கி வைத்துவிட்டு, துண்டை மடிப்பதற்காக அதை எடுத்து உதற அத்தனை ரூபாய்களும் பறக்கும். அவ்வளவுதான் எல்லாவற்றையும் விட்டு விட்டு பணத்தை அள்ள முயல்வார்கள். பிச்சைக்காரனின் கண்கள் திறந்த நிலையிலேயே ஒரு எதிர்வினையும் காட்டாது, எல்லா கூத்தையும் பார்ப்பதுபோல அவன் உடல் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்.
இதெல்லாம் இங்கே எதுக்கு என முரளி மனோகர் கோபப்படும் முன்னால் இன்று வெளியான ஜூவியில் நான் படித்த இச்செய்தியை சுருக்கமாகக் கூறுகிறேன்.
புட்டப்பர்த்தியின் சாயி ட்ரஸ்டினர் பல முக்கிய சாட்சிகளின் முன்னிலையில் சாய்பாபாவின் யஜுர் மந்திர அறையைத் திறந்து பார்த்ததில், 11.57 கோடி ரூபாய் ரொக்கம், 98 கிலோ தங்க நகை, 310 கிலோ வெள்ளி நகைகள், பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் உண்மையிலேயே வேறு பல பொருட்களும் கிடைத்ததாகவும் அவை எல்லாம் மாயமாக மறைந்தன என்ற வதந்தியும் எழுந்தது.
இச்செய்தியை படித்ததும் எழுந்த நினைவலைகளே மேலே எம்பெட் செய்யப்பட்ட வீடியோ மற்றும் பேசும் படத்தின் அந்த சீன் என் நினைவிலிருந்து வந்தன என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
21 hours ago
3 comments:
பணம் காத்த சதுக்க பூதமா சாய் பாபா??
அவரது மரணம் சொல்லும் சேதிகள் யோசிக்கச் செய்பவை.பொருத்தமான சிந்தனை உங்களது.நன்றி!
சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html
"வீடுவரை உறவு, கடைசி வரை யாரோ"
உலகில் தோன்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இது பொருந்துமன்றோ ?
நமக்கு -- வீடு வரை உறவு, கடைசிவரை யாரோ ?
பறவைகளுக்கு -- கூடு வரை உறவு, கடைசிவரை யாரோ ?
காட்டு விலங்குகளுக்கு -- காடு வரை உறவு, கடைசிவரை யாரோ ?
இந்த சாமியார்கிட்டயும் திருப்பதியிலேயும் காசு கொட்டுபவர்கள் செயல் விசித்திரமாக இருக்கும். தன் ஏழை கார் டிரைவருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகமாக கொடுக்க மாட்டார்கள். ஆனால் சாமியார்களுக்கும் திருப்பதி உண்டியலிலும் கோடிக்கோடியாக பணத்தைக் கொட்டுவார்கள். கண் முன் தெரியும் ஏழைக்கு உதவாமல் எங்கேயோ கொண்டுபோய் பணத்தைக்
கொட்டுவதால் என்ன புண்ணியமோ? மூடர்கள்!
Post a Comment