முதலில் நான் இட்ட பதிவு பார்க்கின்சன் விதியும் டோண்டு ராகவனும் போட்டு இரண்டரை ஆண்டுகள் போல ஆகி விட்டன. போன மாதம் நடந்த நிகழ்ச்சியே அது பற்றி நான் இன்னொரு பதிவையும் போட தூண்டுதலாக அமைந்து விட்டது.
என் அறையில் சுவற்றோரமாக சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த டாட்டா இண்டிகாம் இணையத் தொடர்பு கேபிள் திடீரென ஆணியிலிருந்து விலகித் தொங்க நானும் எதார்த்தமாக சோபாவின் ஒரு கைப்பிடியில் காலை வைத்து ஏறி அதை ஆணியில் திரும்ப மாட்ட முயற்சிக்க, சோபா ஒரு புறம் ஒருக்களிக்க, நின்று கொண்டிருந்த நான் சாஷ்டாங்கமாகக் கீழே படுத்த கோலத்தில் கிடந்தேன். (கட்டிலடியில் ஒரே குப்பை என்பதையும் கவனித்தேன்).
வீட்டம்மாவும் மகளும் பதறியபடி ஓடி வந்து தூக்கிவிட, பிறகுதான் தெரிந்தது வலது முழங்காலில் வலி என. நல்ல வேளையாக எலும்பு முறிவு இல்லை. ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எல்லாம் எடுத்தார்கள். பிறகு 10 நாட்கள் காலுக்கு கரெண்ட் கொடுத்து சிகிச்சை.
இந்தழகில் அடிப்பட்ட சில நாட்களிலேயே நான் ஏற்கனவேயே குறிப்பிட்ட அந்த மார்க்கச்சு உற்பத்திச் சாலைக்கு துபாஷியாக வேறு அழைப்பு வந்தது. போய் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அப்போதுதான் அந்த தொழிற்சாலையின் லைன்களின் எண்ணிக்கை, நீள அகலங்கள் ஆகியவை புலப்பட்டன. முழங்காலில் வேறு வலி, பார்த்தால் பசி தீரும் படத்தில் படம் முழுக்க சிவாஜி நொண்டிக் கொண்டே வருவாரே, அம்மாதிரி நடை (என்ன, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்னும் பாடல் மற்றும் சரோஜாதேவிதான் மிஸ்ஸிங்).
பிசியோ தெரப்பிஸ்டோ பல பயிற்சிகள் சொல்லித் தந்து வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டியிருக்கும் என்ற பீதியை வேறு கிளப்பினார். இந்த களேபரத்தில் நான் சாதாரணமாக செல்லும் வாக்கிங் எல்லாமே கோவிந்தா.
இங்கு பார்க்கின்ஸன் எங்கு வருகிறார் எனக் கேட்கிறான் முரளி மனோகர். விஷயத்துக்கு வருகிறேன்.
இத்தனை நாட்களாக நடை பழகுவதை டேக்கன் ஃபார் கிராண்டட் ஆக கருதியிருக்கிறேன். அதை இப்போது செய்ய முடியாது என்ற நிலை வந்ததும்தான் அதன் அருமை புரிந்தது. வயதும் கூடிக் கொண்டே போகிறது, மனத்தளவில் இன்னும் 25 வயது வாலிபனாகவே இருந்தாலும் என்பது வேறு உறைத்தது.
இப்போது எல்லாம் சரியாகி விட்டது. வாக்கிங் எல்லாம் மறுபடி துவங்கியாயிற்று. ஆனால் எத்தனை நாட்களுக்கு? ஆகவே முடிந்தவரை அதைச் செய்து பார்த்து விடுவது என்பதே இப்போதைய நிலை. வாக்கிங்கின் இன்பத்தை அனுபவிக்க தவற விடக்கூடாது. கையில் கிடைத்த நேரத்தை வீணாக்காது பயன் படுத்த வேண்டும் என்ற உணர்வு வந்துள்ளது.
அத்துடன் கூடவே வாழ்வின் மற்ற சந்தோஷங்கள் எல்லாம் வரும்போதே சந்தோஷப்பட்டு விட வேண்டும். சிறு சந்தோஷமானாலும் பரவாயில்லை. கான்ஷியஸ் ஆக அதை அனுபவிக்க வேண்டும்.
ஆகவே எனது சந்தோஷங்களைப் பட்டியலிட ஆசைப்படுகிறேன்.
பல சந்தோஷங்கள். அருமையான தாய் தந்தையர். காதல் மனைவி. அன்பான மகள். நல்ல இஞ்சினியரிங் மற்றும் மொழி பெயர்ப்பு அனுபவங்கள். நான் சந்தித்த அருமையான மனிதர்கள் - பள்ளி, கல்லூரி நண்பர்கள், மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன், அல்லியான்ஸ் பிரான்ஸேய்ஸின் சாரதா லாற்டே, ஐ.டி.பி.எல். பொது மேலாளர் ஜலானி, தமிழ்மண இணைய நண்பர்கள் - கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் எனக்கு இன்னல் வந்தபோது ஆதரவு தெரிவித்தவர்கள், வலைப்பூவில் நான் இது வரை இட்ட ஆயிரத்துக்கும் அதிக தமிழ் இடுகைகள், அவற்றால் எனது தமிழில் மேம்பாடு, 56 வயதில் முதன்முறையாக கணினியுடன் சம்பந்தம் ஏற்பட்டு அதைக் கையாளுவதில் நான் பெற்ற வெற்றிகள், அவற்றால் வந்த பல மொழிபெயர்ப்பு வேலைகள் ... எதைச் சொல்ல, எதை விட? வாழ்க்கை இன்பமயமானது.
நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் மட்டுமே சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.
அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது அவரிடம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சீறினார், “Your days are numbered" என்று. அண்ணா அமைதியாக பதிலளித்தார், "Yes, but my steps are measured"
ஆம், நான் எடுக்கும் அடிகளும் அளவுடனேயே எடுக்கப்படுகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
22 hours ago
23 comments:
கால் சரி ஆகி விட்டதுதானே ? உடல்நிலை முக்கியம் கவனித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வணங்கும் மகர நெடுங் குழைநாதன் உங்களுக்கு நீங்க ஆயுளை தரட்டும்
சந்தோஷங்கள் தொடரட்டும்!
இனிய வாழ்த்து(க்)கள்.
மகர நெடுங் குழைநாதன் --> மகரநெடுங்குழைகாதன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
great post
சீக்கிரம் குணமைடைய வேண்டுகிறேன்..
விரைவில் குணமடைய எங்கள் வாழ்த்துகள்.
get well soon.
நல்லெண்ணங்களைத் தெரிவித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
கால் முழுக்கவே குணமாகி விட்டது. நேற்று கூட 5 கிலோமீட்டர் தூரம் வேக நடையில் செல்ல முடிந்தது.
நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முழுக்கவே குணமாகி விட்டது அறிந்து மகிழ்ச்சி.
பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது பிரார்த்தனைகள்.
WISH YOU A SPEEDY RECOVERY.
Enjoy Life -- there is no 2nd chance!
Before middle age – Do not fear!
After middle age – Do not regret!
Enjoy Your Life While You Can!
Do not wait till you cannot even walk just to be sorry and to regret.
As long as it is physically possible, visit places you wish to visit.
When there is an opportunity, get together with old classmates, old colleagues & old friends. The gathering is not just about eating; it’s just that there is not much time left.
Money kept in the banks may not be really yours.
When it is time to spend, just spend, & treat yourself well as you’re getting old.
Whatever you feel like eating, just eat! It is most important to be happy.
Food which are good for health – eat often and more - but that is not everything.
Things which are not good for health – eat less but once in a while do not abstain from them totally. Treat sickness with optimism. Whether you are poor or rich, Everyone has to go through the birth, aging, sickness and death.
There is no exception, that’s life. Do not be afraid or worried when you are sick.
Settle all the outstanding issues before hand and you will be able to leave without regret.
Let the doctors handle your body,
God handles your life & loves you,
But be in charge of your own moods
If worries can cure your sickness, then go ahead and worry.
If worries can prolong your life, then go ahead and worry.
If worries can exchange for happiness, then go ahead and worry.
Look After Four Old Treasures
1. Your old body – pay more attention to health, you can only rely on yourself on this.
2. Retirement funds – money that you have earned, it is best to keep them yourself.
3. Your old companion – treasure every moment with your other half, one of you will leave first.
4. Your old friends – seize every opportunity to meet up with your friends. Such opportunities will become rare as time goes by. WITH FRIENDS, EVERYDAY YOU MUST LAUGH, DANCE & BE HAPPY!!
Running water does not flow back. So is life, make it happy!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
//நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் மட்டுமே சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.//
சிறந்த அறிவுரை. வாழ்த்துக்கள்.
Dondu Sir, glad to know that you are better. It was a great post.
யுவகிருஷ்ணா என்பவர் நீங்கள் அண்ணாவை புகழ்ந்துவிட்டதாக எண்ணி கிரேட் போஸ்டு என்கிறார் போலும்...
இந்த வயதில் தயவு செய்து இனி சோபா மேல் ஏறுவது, ஸ்டூல்போட்டு குதிப்பது போன்ற வேலைகளை செய்யாமல் இருங்கள். உங்கள் மனதுக்கு வேண்டுமானால் வயதாகாமல் 18லேயே இருக்கலாம். ஆனால் உடலுக்கு வயது ஆகியே தீரும்.
Good Luck Raghavan Ji.
Continue to talk like an youngster, but (as Vajra suggested) you may want to avoid jumping around.
regards
Boston Sriram
Wishes & prayers for you to get well and live well.
எழுதும் போது இருப்பது போலவே ஸ்டூல், சோபா ஆகியவற்றின் மீது ஏறும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்த உயரத்தில் ஏறுவது போன்ற உடலலை வருத்திச் செய்ய வேண்டிய சிறு வேலைகளை கூடிய மட்டிலும் தவிர்க்கப் பாருங்கள். கீழே விழுந்தும் கட்டிலின் கீழே அழுக்கு என்று கவனித்தீர்களாமே..... நல்லா குடுக்குறாருய்யா டீட்டெய்லு......
ஃபிசியோதெரபி பயிற்சிகள் காலுக்கு உரம் தரும்.(எனது அனுபவம்).
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!
How is Parkinson's law applicable to this? it might be Murphy's law instead
@Sri Ram
It is the corrollary that is applicable here. Please see http://dondu.blogspot.com/2009/01/blog-post_08.html
Regards,
Dondu N. Ragahvan
Post a Comment