pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. அ.தி.மு.க.,வின் வீம்பால் வீண் செலவு: கருணாநிதி குற்றச்சாட்டு
பதில்: எண்ணைக்கிணறை சட்டசபையாக பயன்படுத்தாததால் கோபம் போலிருக்கு. எவன் அப்பன் வீட்டு துட்டு என தோட்டா தரணியை விட்டு செட் போடச் சொல்லி, கட்டிடத்தை அவசர அவசரமாக திறக்கச் செய்தாராம்? அடுத்து சமச்சீர் கல்வி. அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல இவர் செய்ததை சரி செய்ய வேண்டாமே?
கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கிறதா என்பதை பார்க்கட்டுமே இவர்.
கேள்வி-2. இலங்கை தீர்மானத்தால் அரண்டு போயுள்ள மத்திய அரசு
பதில்: யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். அதே சமயம் அதன் ஷாக் வால்யூ மட்டுமேதான் மிஞ்சும் என நினைக்கிறேன்.
கேள்வி-3. "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
பதில்: ஆம், 1996-ல் நடந்ததது 2011-லும் நடந்துள்ளது.
கேள்வி-4. மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தமிழக அரசுக்கு காங்., எம்.எல்.ஏ., பாராட்டு
பதில்: கருணாநிதி வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய பாராட்டு.
கேள்வி-5. தோட்டங்களாகும் மாடிகள்: வேளாண் பல்கலை திட்டம்
பதில்: நல்ல திட்டமாக உள்ளதே!.
கேள்வி-6. அதிமுக அரசின் திட்டங்களுக்கு அமோக வரவேற்பு: லயோலா கருத்துக்கணிப்பு
பதில்: Too early for such a poll.
கேள்வி-7.பாஜக தலைவர் முண்டே விலகலா?
பதில்: பாஜகாவிற்கு கட்டிவராத உட்கட்சிப் பூசல், துரதிர்ஷ்டவசமானது.
கேள்வி-8. தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்?
பதில்: சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம் இந்த விஷயத்தில்.
கேள்வி-9. லோக்பால் மசோதா: அனைத்து கட்சிக் கூட்டம் நடத்த முடிவு
பதில்: பிறகு கமிட்டி எல்லாம் போடுவார்கள். திட்டம் எல்லாம் கோவிந்தா என்பதை சோ ஏற்கனவேயே தனது நாடகம்/திரைப்படம் முகம்மது பின் துக்ளக்கில் கூறிவிட்டார்.
கேள்வி-10. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை: ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்
பதில்: இது அவரது கையெழுத்துதானாமா? அழகாக உள்ளது.
ரமணா
கேள்வி-11. லோக்பால் மசோதா நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா?
பதில்: இருக்காது.
கேள்வி-12. இந்த மசோதா வெற்றி பெறுமா இல்லை?
பதில்: வெற்றி பெறாது, மசோதா வருவதே சந்தேகம்.
கேள்வி-13. அமைச்சர் கபில் சிபிலின் பேட்டிகள் எப்படி?
பதில்: எந்தப் பேட்டி? இதையா குறிப்பிடுகிறீர்கள்? வழக்கமான க்ளீஷேக்கள் நிறைந்த பேட்டி.
கேள்வி-14. அதிமுக தலைவிக்கு இன்னும் அமைச்சர் சிதம்பரம் மேல் கோபம் குறையவில்லையா?
பதில்: ஏன் குறைய வேண்டும்?
கேள்வி-15. மீண்டும் ஜெயபிரகாஷ் நாராயண் டைப் எழுச்சி இந்தியாவில் வர வாய்ப்பு ஆகஸ்டு 15 க்கு மேலே?
பதில்: இல்லை.
கேள்வி-16. அடுத்த மாதம் கோவையில் கூடும் திமுக பொதுக்குழுவில் கூட்டணி மாற்றம் பற்றிய செய்தி வரும் போலுள்ளதே?
பதில்: பாவம் பார்வையாளர்கள். கீரி பாம்பு சண்டை வரும் என உதார் காட்டியே பிழைக்கும் கழைக்கூத்தாடிதான் நினைவுக்கு இத்தருணத்தில் வருகிறார்.
கேள்வி-17.சமச்சீர் கல்வி பற்றிய முடிவில் இத்தனை இழுபறி நிலை, மாணவர் எதிர்காலம் என்னவாகும்?
பதில்: சொர்க்கம், அதாவது திரிசங்கு சொர்க்கம்.
கேள்வி-18. தேமுக தலைவரின் நீண்ட மெளனம் ?
பதில்: நிலைமையை அவதானிக்கிறாரோ?
கேள்வி-19 .மாணவர் அனைவருக்கும் லாப்டாப் சாத்யமா?நலம் பயக்குமா?
பதில்: தேவையர்ற இலவசம். நன்மை பயக்காது.
கேள்வி-20. பாஜக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகிறதா?
பதில்: அதற்கு காங்கிரஸ் இன்னும் உழைக்க வேண்டும்.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
22 hours ago
9 comments:
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி
2.மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி
3.சென்னையில் துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிர்
4.லோக்பால் விவகாரத்தில் தி.மு.க.,வின் சுருதி மாறுகிறது
5.முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்கள் குவிகின்றன : 1000 ரூபாயாக உயர்ந்ததால் ஆர்வமோ ஆர்வம்
1.பாண்டிச்சேரி முதல்வரின் சந்திப்பு சோனியாவுடன், அதிமுக தலைவி என்ன சொல்வார்?
2.சுப்பிரமணியசாமி வீசும் ஊழல் வெடிகுண்டுப் புகார் அடுத்து யாரை தாக்கும்?
3.தாத்தா சூரியப்பேரனை கைவிட்டுவார் போலுள்ளதே?
4.செட்டி நாட்டுச் சீமானுக்கு சிக்கலாமே?
http://savukku.net/home1/976-2011-06-23-06-02-20.html
5.ஊடக வாய்களுக்கு மெல்வதற்கு அவல் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கிறதே?
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
7."சமூக பிரதிநிதிகள் நெருக்கடிக்கு பணிய வேண்டாம்': காங்கிரஸ்
8.இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு.
9.சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான் : தமிழச்சி தங்கபாண்டியன்
10.அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்கறிஞர்கள் மனு
இவர்களை ஒப்பிடுக:
கம்பன் திருவள்ளுவர்
பாரதி பாரதி தாசன்
கண்ணதாசன் வாலி
கவியரசு கவிப்பேரரசு
கவிப்பேரரசு பிறகவிஞர்கள்
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
11.நிலக்கரி விலை உயர்வு, சூரிய மின்சக்தி கவர்ச்சியாகிறது!
12.ஹசாரே, ராம்தேவுக்கு பதிலடி கொடுக்க ராகுல்: காங்கிரசில் வலுக்கிறது கோரிக்கை
13.எந்திரிச்சதும் குடி... ஏழை குடும்பங்களுக்கு "வெடி!'
14.வேண்டவே வேண்டாம்... ஆறு வழிச்சாலை!
15.தனியாரிடம் கூடுதலாக 1,200 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு: மின்வாரியம் டெண்டர் அறிவிப்பு
6.டீசல் லிட்டருக்கு ரூபாய் 3 விலையேற்றம் காரணம் காட்டி லாரி வாடகையை 20 % ஏற்றுவது பற்றி?
7.தமிழக முதல்வர் மேற்கு வங்க முதல்வரை பின்பற்றி வரிச் சலுகை தருவாரா?
8.மின்வெட்டு தொடர்கிறதே?
9.தேமுத்க எம்.எல்.ஏ பார்த்தீபனின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி?
10.முதல்வர் ஜெயலலிதாவின் 27.6.11 ஆங்கில டீவிக்கு (TIMES NOW) அளித்த பேட்டி பற்றி?
/மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்/
pt
AND
ரமணா
& Co
போட்டி போட்டு கேள்வி கேட்கும்
டோண்டுவின் ஆத்ம நண்பர்கள்
இருக்கும் வரை கேள்வி பதில் தொடருமே !
தொடரட்டும் உங்கள் பதிவுகள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
எழிலரசு
உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழினத்தின் காவல்தெய்வம் கலைஞரின் உண்மையான
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன்.
வாழ்க தமிழ்!
வாழ்க கலைஞர்!
வாழ்க தளபதி!
வாழ்க அஞ்சா நெஞ்சன!
வாழ்க கனிமொழி!
வாழிய வாழியவே !
2014 ல் நாற்பதும் நமதே!
2016 ல் 234 ம் நமதே!
//
கேள்வி-20. பாஜக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகிறதா?
பதில்: அதற்கு காங்கிரஸ் இன்னும் உழைக்க வேண்டும்.
//
பா.ஜ.க ஆட்சிக்கு வர காங்கிரஸ்காரர்கள் சொதப்பவேண்டும். அவர்கள் நல்லவே சொதப்பிவைத்தாலும் வாய்ப்பைப் பயன் படுத்தத் தெரியாமல் மங்குனியாட்டம் பா.ஜ.க இருக்கிறது.
எதிர்க்கட்சியாக காங்கிரசை கிழிக்காமல், இடதுசாரி ஜனநாயக விரோத தேசியவிரோத என்.ஜி.ஓ க்களை எதிர்கட்சிகள் போல் செயல்பட வாய்ப்பளித்துள்ளது பா.ஜ.க வின் செயல்பாடு.
/ezhil arasu said...
/மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்/
pt
AND
ரமணா
& Co
போட்டி போட்டு கேள்வி கேட்கும்
டோண்டுவின் ஆத்ம நண்பர்கள்
இருக்கும் வரை கேள்வி பதில் தொடருமே !
தொடரட்டும் உங்கள் பதிவுகள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
எழிலரசு
உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழினத்தின் காவல்தெய்வம் கலைஞரின் உண்மையான
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன்.
வாழ்க தமிழ்!
வாழ்க கலைஞர்!
வாழ்க தளபதி!
வாழ்க அஞ்சா நெஞ்சன!
வாழ்க கனிமொழி!
வாழிய வாழியவே !
2014 ல் நாற்பதும் நமதே!
2016 ல் 234 ம் நமதே!/
.)))))))
Post a Comment