6/09/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா?

வீடணன் மற்றும் கும்பகர்ணன் பற்றி நான் இட்ட இப்பதிவில் ஒரு பின்னூட்டத்தில் இவ்வாறு கூறியிருந்தேன்,

 dondu(#4800161) said...

"சீதை தீக்குளிப்பு, காட்டுக்கு கர்பிணியாக இருக்கும்போது துரத்தபடல் ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
என்னால் இவற்றை ஒத்துகொள்ள முடியவில்லை."ராமா நீ தவறு செய்துவிட்டாய்" என்று உரக்க குரல் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது"

என் நிலையும் அதுவேதான். சற்று விளக்கமாகக் கூறுகிறேன். 1 ஆண்டு தனியாக இருந்தது ராமரும்தானே, ஆதலால் அவரும் அக்கினிப் பரீட்சைக்கு உள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் அதை சீதையே கேட்கவில்லை என்பதுதான் சோகம். ஆணாதிக்கம் அக்காலத்திலேயே தலைவிரித்து ஆடியிருக்கிறது.

சீதை காட்டுக்கு தனியான போன நிகழ்ச்சியும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சீதையை ராமரால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் நிஜமே. ஆகவே மன்னராக நீடிக்கும் தகுதி அவருக்கு இல்லை. அவர்தான் பதவியைத் துறந்திருக்க வேண்டும் என்று நான் என் டில்லி நண்பர் சர்மாவிடம் கூறிக் கொண்டிருந்த அன்றுதான் ராமானந்த் சாகரின் உத்திர ராமாயணத்தில் அன்று அந்த நிகழ்ச்சி காட்டப்பட்டது. என்ன ஆச்சரியம், சாகரின் ராமாயணத்தில் நான் சொன்ன அதே நிலைப்பாட்டைத்தான் ராமர் எடுக்கிறார். ஆனால் சீதைதான் அதை மறுத்து தானே காட்டுக்குச் செல்வதாக எபிஸோட் அமைந்திருந்தது. இதற்கு ஆதாரம் ராமாயணத்தில் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என் மனதுக்கு அது ஆறுதலாக இருந்ததே”.


இது பற்றி இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ராமர் நிஜமாகவே அரச பதவியைத் துறந்து சீதையுடன் மீண்டும் வனவாசம் சென்றிருந்தால் கதையின் போக்கு எவ்வாறு சென்றிருக்கும்?

ராமாயணம் நம் எல்லோருக்குமே சொந்தம். அப்போது நானும் எல்லோரில் ஒருவனே. ஆகவே இதை மேலே விரிவுபடுத்தி எழுத எண்ணியுளேன். அதை நாடக ரூபத்தில் எழுதுவதா அலது கதை வடிவில் எழுதுவதா என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

முரளி ம்னோகருடன் பேசி ஒரு முடிவுக்கு வருவேன். எனது கற்பனை நல்ல முறையில் விரிவடைய என் அப்பன் ராமபிரான் அருள் புரியட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

sury siva said...

அரசியல், சாதி, மதம், இனம், மொழி இவற்றினுள்ளே ஏற்பட்டு வரும் மோதல்களைப் பற்றி எழுதுவதை இனி
தவிர்த்து இது போன்ற ஒரு ஆன்மீக, இலக்கிய வழி சார்ந்த படைப்பு முயற்சி பாராட்டுக்குரியதே.

இருப்பினும் அதில் தங்கள் மனம் நிலைத்திருக்கவேண்டுமே என்ற கவலையும் தோன்றுகிறது.

திரு இராமபிரான் அருளில் தாங்கள் நினைத்தவை, நினைப்பவை சித்திக்கட்டும்.

சுப்பு ரத்தினம்.

suvanappiriyan said...

வயதுக்கு ஏற்ற தொடரை தொட்டிருக்கிறீர்கள். இனி ஆபாசத்தின் பக்கம் செல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

எல் கே said...

ம். இதில் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் எதுவுமில்லை. நாம் இந்த காலத்தின் கண் கொண்டு, த்ரேதா யுக சம்பவங்களைப் பார்ப்பதே இவற்றிற்கு காரணம்,. இதை பற்றி சென்ற வருடம் நான் எழுதியது

http://lksthoughts.blogspot.in/2011/03/blog-post_08.html

pls go through comments also.

நான் said...

i don't like ramayanam because of this reason only.....i don't know the moral.......

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது