11/09/2004

வலைப் பதிப்பது அவ்வளவு எளிது இல்லைப் போலும்

உயிரைக் கொடுத்து ஒரு பத்தி அடித்து உள்ளிட்டேன். வலைப்பூவாக பதிப்பும் செய்தேன். பிறகு கணினியை மூடி விட்டு கடைக்குச் சென்றேன். திரும்பி வந்து கணினியைத் திறந்தால் மூடுவதற்கு முன்பு பதித்தது காற்றோடு போயே போச்சு. என்ன தவறு நடந்திருக்கும் என்பது பிடிபடவேயில்லை. பரவாயில்லை. தொலைந்தது ஒன்றும் பெரிய காவியமில்லை. போனால் போகட்டும் போடா என்று பாடி விட்டுப் பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.

நான் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பதை என் விவரஙளிலிருந்து ஏற்கனவே நீங்கள் அறிவீற்கள். மொழிபெயர்ப்பது வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் இருக்க வேண்டும் என்பது உலகளாவியக் கொள்கை ஆகும். அதாவது ஜெர்மன் மற்றும் பிரென்சிலிருந்து ஆங்கிலத்துக்கு நான் மொழி பெயர்க்கலாம். எதிர் திசையில் அல்ல என்று சாணக்கியர் அர்த்த சாத்திரத்தில் எழுதிவிட்டப் பாவனையில் எல்லோரும் அலட்டிக் கொள்வார்கள். இந்த நிலை எடுப்பவர்களில் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் முக்கியமானவர்கள்.

அது தவறு என்று நான் கூற மாட்டேன். ஆனால் எல்ல விதிகளுக்கும் விதி விலக்கு உண்டு அல்லவா? அதைத்தான் நானும் மற்றவர்களும் கூறுவது. இது பற்றி விவாதங்கள் மிகத் தீவிரமாக நடக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்களுக்கான வாசலில் (www.proz.com) இவை காணக் கிடைக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவப்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது