இந்தத் தலைப்பில் சுஜாதா குமுதத்தில் எழுத ஆரம்பித்தத் தொடர் கதையைப் பற்றிப் பேசப் போகிறேன். இக்கதை தொடங்கி சில வாரங்களுக்குள் நிறுத்தப் பட்டது. ஏனெனில் இது ஒரு ஜாதிப் பிரச்சினைக்கு வழி வகுக்கும் போல் தோன்றியது.ஆனால் சில வார இடைவெளிக்குப் பிறகு அதே கதையை சுஜாதா சில மாற்றங்களுடன் "ரத்தம் ஒரே நிறம்" என்றத் தலைப்பில் வெற்றிகரமாக அதே குமுதத்தில் எழுதி அவருக்கு எதிராக திரை மறைவில் வேலை செய்தவர் மூக்கை அறுத்தார்.
முதலில் எழுதப்பட்டக் கதையில் மாடன் என்னும் நாடார் ஜாதியைச் சேர்ந்த வாலிபனைப் பற்றி விவரிக்கப் பட்டது. அவன் தங்கை வெள்ளைக்காரன் வீட்டுக்கு வேலைக்காரியாகச் செல்கிறாள். காலம் 1857-ஆம் வருடத்துக்கு முந்தியது. அதில் வரும் வில்லன் வெள்ளைக்காரன் செங்கல்பட்டுக்கு வேட்டைக்கு செல்லும் தருணத்தில் கதை மேலே சொன்னபடி நிறுத்தப் பட்டது.
இப்போது இரண்டாம் கதைக்கு வருவோம். இதில் கதை செங்கல்பட்டு வேட்டையுடன் ஆரம்பிக்கிறது. வில்லன் கோட்டைக்குத் திரும்பும் வழியில் முத்துக்குமரன் (அதுதான் பெயர் என்று ஞாபகம்) என்பவனுடன் சன்டை போட்டு அவன் அப்பாவைக் கொன்று விடுகிறான்.
இரண்டாம் கதை போன போகிலிருந்து என்னால் சில விஷயஙளை ஊகிக்க முடிந்தது.முதல் கதை நிறுத்தப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? முத்துக்கருப்பன் யானையடியில் வைத்துக் கொல்லப்பட்டிருப்பான். மாடன் தப்பித்துச் சென்று முத்துக்குமரன் காதலியொடு சேர்ந்து வட இந்தியா சென்றிருப்பான். மாடன் தன் தங்கையைக் கொன்றதிற்காக வில்லன் வெள்ளைக்கரானை பழி வாங்கத் திட்டம் தீட்டியுருப்பான். அது நடக்காதலால் இரண்டாம் கதையில் கொல்லப்படுவதற்கென்று ஒரு கொள்ளைக்காரன் தாண்டவராயன் வர வேன்டியிருந்தது. ஆக முத்துக்குமரனுக்கு ஒரு பதவி உயர்வு.
இக்கதையால் உருவானப் பிரச்சினைகளைப் பற்றி பிற்காலத்தில் சுஜாதா எழுதும்போது எஸ்.ஏ.பி அச்சமயம் தனக்குப் பொறுமையாக இந்த விஷய்த்தின் கருப்பு, சிவப்பு மற்றும் வெளுப்பு பற்றிக் கூறியது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரச்சினையில் எஸ்.ஏ.பி மற்றும் சுஜாதா பெருந்தன்மையாக நடந்துக் கொண்டனர்.
ஆனாலும் சுஜாதா ஓரிரு முறை இது பற்றி வேடிக்கையாகக் கோடி காட்டியுள்ளர். கணேஷ் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஜாதியைப் பற்றிக் கூற, வசந்த் கூறுவான்: "பாஸ் வேண்டாம். தொடர்கதையை நிறுத்திருவாங்க" என்று.கதை முடிந்ததும் சுஜாதா வெளியிட்டிருந்த சான்றுச் சுட்டிகள் மிக அருமை. இக்கதையில் வந்த நீல் என்பவன்தான் நீலன் துரை என்று ஊகிக்கிறேன். அவனது சிலை வெல்லிங்டன் தியேட்டர் எதிரில் வைக்கப் பட்டிருந்தது என்றும் பொது மக்கள் போராட்டத்துக்குப் பிறகு அது அகற்றப்பட்டது என்றும் படித்ததாக ஞாபகம். அந்த இடம் சிலைகளுக்கு ராசியில்லாத இடம் என்று எனக்குப் படுகிறது. திரு. மு. க. அவர்கள் சிலையும் அந்த இடத்தில் இருந்தது. எம்.ஜி.ஆர். இறந்த சமயத்தில் பொது மக்களால் சேதம் செய்யப் பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
19 hours ago

1 comment:
அந்த கதையில் எனக்கு பிடித்தது ம.செ.வின் ஒவியங்கள்
Post a Comment