11/10/2004

வலைப் பதிவில் எதிர்க் கொள்ளும் உபத்திரவங்கள்

முதலில் நேரம் மற்றும் தேதி ஆகியவை ஒவ்வொரு முறையும் ஞாபகமாக மேன்யுவலாக பதிக்க வேண்டியிருக்கிறது. இது ஆட்டமேட்டிக் ஆகப் பதிந்தால் நலம். இதற்கு முந்தையப் பதிவில் அதை மறந்ததால் சரியான நேரம் பதிவாகவில்லை. என்ன செய்வது? பிழையிலிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

ஒரு புதியப் பதிவை பதிக்க சுற்றி வளைத்துச் செயல் பட வேண்டியிருக்கிறது. Profile>Edit profile>Dashboard என்று மூக்கைச் சுற்றித் தொட வேண்டியிருக்கிறது. இதற்கு எதாவது மாற்று ஏற்பாடு செய்தல் நலம்.

இன்னொரு வகையில் பார்த்தால் இதுவும் நல்லதுக்கே என்றே தோன்றுகிறது. ஜாக்கிரதையாக இருப்போம் அல்லவா?

விளக்கங்கள் அளித்த பத்ரி அவர்களுக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Badri said...

டோண்டு சார்... நீங்கள் இன்னமும் blogger இடைமுகத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் சென்னையில் இருக்கின்றபடியால் சொல்லுங்கள், ஒருநாள் சந்திப்போம், விளக்குகிறேன்.

1. நேரம், தேதி ஆகியவை தானாகத்தான் பதியப்படுகின்றன. வேறு ஏதேனும் நேரம்/தேதியாக மாற்ற வேண்டுமென்றால்தான் நீங்கள் தேதி/நேரம் ஆகியவற்றை மாற்ற வேண்டும்.

2. Dashboard தான் இயல்புநிலை. அங்கிருந்து ஒரு தட்டில், (+) என்று இருக்குமே, அதைத் தட்டினால் ... புதிய பதிவை உள்ளிடலாம்.

3. விண்டோஸ் பாவிப்பவராக இருந்தால் (அப்படித்தானே?) நோட்பேடில், முரசு அஞ்சல் கொண்டு யூனிகோடு எழுத்துகளாக அடித்து, வெட்டி ஒட்டவும். இதனால் ஏதேனும் காரணங்களால் பதிவு கெட்டுப்போனாலும் மீட்டெடுக்க முடியும். நான் எப்பொழுதுமே என் கணினிக்குள் தனித்தனி டெக்ஸ்ட் கோப்புகளாக என் பதிவுகளை சேர்த்து வைக்கிறேன்.

dondu(#4800161) said...

என் தொலைபேசி எண்கள்: 044 - 22312948, 044 - 22324807. செல் பேசி எண்: 9884012948. முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.

dondu(#4800161) said...

பத்ரி அவர்களே,
நீங்கள் கூறியது போல நேரம் தானே பதியட்டும் என்று விட்டதன் பலன் 10-ஆம் தேதியன்று எழுதிய சுஜாதா பற்றிய வலைப் பதிவு 9-ஆம் தேதியின் கீழ் வந்து விட்டது. நான் ஏதாவது தவறாக செய்கின்றேனா என்பது புரியவில்லை.
அன்புடன் டோண்டு

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது