வலைப்பூ பதிப்பது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று கனவிலும் எண்ணியது இல்லை. தமிழில் தட்டச்சு செய்கிறோம் என்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நான் ஒரு மொழிபெயர்ப்பாளன். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கும் மொழி பெயர்ப்பது என் வேலை. மின் பொறியியலில் பட்டம் பெற்று அத்துறையில் 23 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. மொழி பெயர்ப்பாளனாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் உண்டு. புத்தகஙள் படிப்பதில் மிக்க விருப்பம்.
என் கன்னி முயற்சிக்கு சக வலைப்பதிவாளர்களின் ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறேன். பின் வரும் வலைப்பூக்களில் மீண்டும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
17 hours ago
15 comments:
Vaanga..Vaanga...vandhu jyothyila aikkiyam aagunga..!
vaanga vaanga.
pls do write abt your experiences translating from one language to another. Maybe you could also tell us the common factors in these three languages and the differences.
Welcome to Tamil Blogs!
natpudan,
Mathy
வாங்க வாங்க!!!!! வணக்கம்.
ஆரம்பிங்க!!! உங்க அனுபவங்களையெல்லாம் படிக்கக் காத்துகிட்டு இருக்கோம்.
என்றும் அன்புடன்,
துளசி.
வாங்க கோண்டு...ஸாரி டோண்டு...
(யாரு இந்த டோண்டு-ன்னு பாத்துட்டு இருந்தேன். Dystocia blog cmt regd.. ;-))
வாங்க வாங்க
வாங்க வாங்க டோண்டு,
அப்படியே இந்த மாக்ஸ்மியுல்லர் பவன், அல்ல்யன்ஸ் ஃப்ரான்க்காய்ஸ் போன்ற நிறுவனங்கள் (?) எதற்கு அமைக்கப்படுகின்றன. யார் பணம் கொடுக்கிறார்கள்.. என்ன வேலை நடக்கிறது போன்ற சமாச்சாரங்களையும் எடுத்து விடவும்
- அலெக்ஸ்
டோண்டு,
வாங்க! வாங்க! ஜெர்மானிய கலாச்சாரத்தைப் பற்றி என் போன்ற தமிழனுக்கு விரிவாக சொல்லுங்க
Mr.Raghavan,
Hope you remember me. I was the one who initiated you to the world of Tamil Blogs, when you had commented on my siRuvayathu sinthanaigaL sometime back :-))
I have posted many articles after that one. Pl. have a look and give your comments.
Happy Blogging!!!!!!
enRenRum anbudan,
BALA
வாங்க! வாங்க! உங்களை தமிழ் வலைப்பதிவுகளுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
இதென்ன மூணு வருசம் முன்னாடி நீங்க எழுதின வலைப்பதிவு இன்னைக்கு திடீர்னு unread-ல வந்து நிக்குது என் கூக்ள் ரீடர்ல?
அதாவதுங்க, நான் புது பிளாக்கருல கொடுத்திருக்கிற லேபலிங் உபயோகித்து பழைய பதிவுகளுக்கும் போடும்போது அவை தமிழ்மணத்தால் திரட்டப்படுகின்றன. அவ்வளவுதான் விஷயம்.
கூகள் ரீடர்? அது என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐப்பி, கிய்ப்பினு என்னென்னவோ சொல்றீங்க கூக்ல் ரீடர் தெரியாதா? இல்ல என்னெய கிண்டல் பண்றீங்களா?
உங்க உரல், இன்னும் சில பேரோட உரல் எல்லாம் நான் என்னோட கூக்ள் ரீடர்ல போட்டு வச்சிருக்கேன். நீங்க பதிவை எழுதி ஏற்றியவுடன் அது எனது ரீடர்ல unread mail மாதிரி வந்து நிக்கும். உரல்-னா url தான?
கிண்டல் எல்லாம் இல்லை. தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.
தமிழ்மணம் போல ஒரு திரட்டி, ஆனால் அவரவர் எழுப்பியுள்ள கூகள் ரீடர் பட்டியல் முழுக்க முழுக்க அவரவர் உபயோகத்துக்கானது என்று கூகள் ரீடரை பற்றி இப்போது எனது புரிதல் வந்துள்ளது. சரிதானே? அல்லது மேலும் ஏதேனும் உண்டா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கும் அவ்வளவுதான் தெரியும்
எனக்கு ஒரு பின்னூட்டம் இட்டா என்ன கொறைஞ்சா போய்டுவீங்க..? :P
வணக்கம் பூக்குட்டி அவர்களே.
பின்னூட்டம் போடத் தடையொன்றுமில்லை. உங்கள் 4 வலைப்பூக்களில் மூன்றின் விஷயங்கள் எனக்கு சுவாரசியமாக இல்லை. உங்கள் ஜாயிண்ட் வலைப்பூ வேண்டுமானால் பார்க்கலாம். அதில் நீங்கள் போட்ட ஏதாவது ஒரு இடுகையின் சுட்டி தாருங்கள்.
கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன்.
மாயக்கண்ணாடி பட விமரிசனத்தில் ஒரு பதிவர் சேரனின் விக்கை டோண்டு ராகவனுக்கு பொருத்தி பார்க்கலாம் என ஐடியா கூறியிருந்தார். அது ஒரு வேளை நீங்களா? நானும் அந்த கிராஃபிக்ஸை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். லக்கிலுக்கிடம் கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment