யூனி கோட் முறையில் தட்டச்சு செய்யும் போது மிகக் கவனம் தேவை. இல்லையென்றால் என் முதல் பதிவில் ஏற்பட்டது போல் நடந்து விடும். கவனக் குறைவில் கடைசி வரி அடிக்கும் போது மேல் பெட்டியில் அடிக்க வேண்டியதை கீழ் பெட்டியில் அடித்துத் தொலைத்து விட்டேன். விளைவை நீங்களே பார்க்கலாம்.
நிற்க. டோண்டு என்பது என் வீட்டில் எனக்களித்தச் செல்லப் பெயர். நான் சிறுவனாக இருந்த காலத்தில் அப்பெயர் மிக அவமானகரமாகத் தோன்றியது. முக்கியமாக என் பள்ளி நண்பர்களுக்கு அது தெரியக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் காலம் செல்லச் செல்ல அப்பெயர் பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஏனெனில் அது எனக்கு மட்டும் உரித்தான தனி அடையாளமாக ஆகி விட்டது.
டோண்டு
1 comment:
>>நீங்களே பார்க்கலாம்.
அது என்ன? ஒரு படமாக அதனை பிடித்து இந்தப் பதிவில் சேர்த்து விட்டால் பின் நாமும் இன்னொருவரும் இதே தவறிணை செய்யாமல் இருக்க உதவும்.
Post a Comment