நான் அவற்றை மிக விரும்பிப் படிப்பேன். ஆங்கிலத்தில் மட்டுமின்றி ஜெர்மன் மற்றும் பிரென்சு மொழிகளிலும் படித்து ரசித்துள்ளேன். அருமையான மொழி பெயர்ப்புகள் அவை. ஆங்கில மூலத்தில் உள்ள மேஜிக் அப்படியே மொழி பெயர்ப்பிலும் பார்த்து மகிழ்ந்தேன். நானும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்ற வகையில் என் சகாக்களின் திறமையில் மிகப் பெருமைக் கொள்கிறேன்.
அவ்வகையில் கா.ஸ்ரீ.ஸ்ரீயின் வி.ச. காண்டேகரின் யயாதியின் தமிழாக்கம் மிக அருமையானது. முதல் பாகம் மட்டும்தான் வந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்கள் வீட்டுக்குச் சென்று (1986-ல்) கேட்டப் பொழுது 2-ஆம் பாகம் எழுதவில்லை என்று கூறி விட்டார். எனக்கு மிகுந்த ஏமாற்றம். ஆனாலும் யயாதியை முழுமையாக படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். மராத்தி தெரியாது. அதனால் என்ன? ஹிந்தி தெரியுமே! எங்கள் அலுவலக (ஐ.டி.பி.எல்.) நூலகத்திலிருந்து எடுத்து 2-ஆம் பாகமும் படித்தேன். குறை தீர்ந்தது.
மொழி பெயர்ப்பது ஒரு நல்லக் கலை என்பதே நான் கூற விரும்புவது.
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
21 hours ago

3 comments:
ஹாரி பாட்டர், ஆங்கிலத்தில் மட்டுமே வாசித்திருக்கிறேன்.
படங்களைப் பார்த்து புத்தகத்தை எடை போடக் கூடாது என்பது அதன் மூலம் விளங்கியது.
ஹாரி பாட்டர் தமிழாக்கம் இருக்கிறதா? இல்லையெனில் யாரேனும் அம்முயற்சியில் உள்ளார்களா?
எனக்குத் தெரிந்து தமிழில் ஹாரி பாட்டர் புத்தகம் எதுவும் வரவில்லை. ஆனால் முதல் புத்தகத்தின் திரையாக்கத்தை நான் தமிழில்தான் பார்த்தேன். நல்ல டப்பிங். நல்ல மொழி பெயர்ப்பு. ஹாரி பாட்டரை விட அருமையான கதை இந்திய மொழிகளிலே உண்டு. கிருஷ்ணர் கம்சன் கதையைத் தான் குறிப்பிடுகிறேன்.
மீனாக்ஸ் வலைப்பூ ஆசிரியராக இருந்த போது ஹாரி பாட்டர் புத்தகங்கள் பற்றி எழுதினார். பாருங்கள்.
Post a Comment