இந்த ஹேலோ ஸ்கேன் பின்னூட்டத்தில் இரண்டுத் தொல்லைகள் காணப்படுகின்றன.
ஒன்று பின்னூட்டத்தின் அனுமதிக்கப்படும் அளவு. அது மிகவும் குறைவு என்று எனக்குப் படுகிறது. அதன் பலன் நீண்டப் பின்னூட்டங்கள் இரண்டு மூன்று என வெட்டப்பட்டுப் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.
இரண்டாவதாக இது பெயரிலிப் பின்னூட்டங்களுக்கு இடம் கொடுக்கிறது. அது விருந்தினர்களுக்கானப் பதிவு எனக் கூறப்படுகிறது. எது எப்படியானாலும் இது தவறாக உபயோகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
நான் கேட்கும் உதவிகள் இவைதான்.
1) பின்னூட்டங்களின் அனுமதிக்கப்பட்ட அளவை அதிகரிக்க வேண்டும்.
2) பெயரிலிப் பதிப்பைத் தடுக்க வசதி வேண்டும்.
3) தேவையானல் ஹேலோ ஸ்கேனைச் செயலிழக்கச் செய்ய முடிய வேண்டும்.
இம்மூன்று கோரிக்கைகளும் பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றினாலும் உண்மை அல்ல என்பதையும் கூறி வைக்கிறேன்.
அத்துடன் இன்னொரு கோரிக்கை. ஹேலோ ஸ்கேன் என் வலைப்பூவில் ரொம்ப நாளைக்கு இருக்காது என்றுத் தோன்றுகிறது. ஆகவே அதைப் பின்னூட்டங்களுக்கு உபயோகப் படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னொரு விஷயம். நான் மும்பையிலிருந்துத் திரும்பும்போது பத்ரி அவர்களிடமிருந்து எனக்குச் செல்பேசியில் ஒரு call வந்தது. வரும் வாரத்துக்கு தினசரி ஒரு முறையாவது பதிவு கொடுக்குமாறுக் கேட்டுக் கொண்டார்.
நானும் அதன்படி முதல் இரண்டு நாட்கள் கொடுத்தேன். பிறகு இன்றுதான் கொடுக்கிறேன்.
காரணம் ஒரு மிகப் பெரிய மொழிபெயர்ப்பு வேலையில் முழி பிதுங்குவதுதான். எது எப்படியிருப்பினும் மற்றப் பதிவுகளைப் படிப்பதில் தொய்வு இல்லை. பின்னூட்டங்களும் கொடுத்து வருகிறேன்.
அன்புடன்,
ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
14 hours ago
2 comments:
அன்புள்ள ராகவன்,
trackback எனப்படும் 'பின்தொடர்பு' வசதிக்காக மட்டுமே ஹேலோஸ்கேன் தேவைப்படலாம். அதன் பயன்பாடு நான் கண்டவரையில் தமிழ் வலைப்பதிவுகளில் மிகக்குறைவே. எனவே ஹேலோஸ்கேனை டெம்ப்ளேட்டில் இருந்தே எடுத்துவிடலாமே.இதில் என்ன சிரமம் என்று புரியவில்லை. பழைய இடுகைகளில் ஹேலோஸ்கேனில் எழுதப்பட்ட மறுமொழிகள் இழக்கப்பட்டுவிடுமே என்று பயப்படத்தேவையில்லை. நீங்கள் republish all என்ற கட்டளையை செய்யாத வரையில் முன்பு என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் இருக்கும்.
நிற்க.
இந்த பெயரிலிப் பின்னூட்டங்களை ஒழித்துக்கட்டுவதெல்லாம், அந்தப் பெரும் பெயரிலி, அதான் ஆண்டவன், அவன் வந்தாலுமே நடக்காது:-)) அனானிமஸ் பயனரை அனுமதிக்காதே என்றுதானேசொல்லமுடியும். ஒப்புக்கு ஒரு ப்ளாக்கர் கணக்கை ஒருத்தர் தொடங்கிவிட்டு பிறகு நம்மைப் போட்டு சாத்தலாமே! ப்ளாக்கரில் கணக்குத் தொடங்க பாஸ்போர்ட் (msn passport இல்லை, உண்மையான பாஸ்போர்ட்) கேட்கும் வரை இதை எப்படித் தவிர்க்கமுடியும்? எனவே அதை ஒருபுறமாய் ஒதுக்கிவிட்டு மேலே போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
மற்ற நண்பர்கள் ஏதும் யோசனை/கருத்து இருந்தாலும் (கந்சாமி எங்கேப்பா போனே?) தெரிவிக்கலாம்.
அன்புடன்,
-காசி
ஹேலஸ்கேனை டெம்ப்ளேட்டிலிருந்தே எடுத்து விடத்தான் நானும் நினைத்தேன். ஆனால் டெம்ப்ளேட்டில் எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாக உள்ளது. அதில் ஹேலொஸ்கேனைச் சேர்ந்தப் பதிவு என்ன என்பதைக் கண்டுக் கொள்ள இயலவில்லை. எதையாவதுத் தொட்டுப் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் மாறி விடுமோ என்ற லேசான பயம் வேறு.
அன்புடன்,
ராகவன்
Post a Comment