இவர் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் நாங்கள் குடியிருந்தப்போது அந்த வீட்டின் சொந்தக்காரர். வருடம் 1968. எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.
சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.
முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.
இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.
மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயைழும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.
அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.
எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.
இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
20 hours ago
5 comments:
//இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்//
//சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.//
arputhamaana paadanggal!
//இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்//
சமையலை மட்டும் அவர்கள் செய்வதில்லையல்லவா? குழந்தை, வீடு, கணவன், துணி துவைப்பது போன்ற பலவிசயங்களோடு சமையலும் இருப்பதால் தான் அந்த 'பந்தா'. நானும் இப்போது சமைக்கிறேன். எளிதுதான். அப்போது நானும் அப்படித்தான் நினைத்தேன். அப்புறம் யோசித்துப்பார்க்கையில் புரிந்தது. ஆனாலும் சமையல் செய்வது சில சமயங்களில் நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல பதிவு. நன்றி
பந்தா தவறு என்று கூறவில்லை. இதை W.P.K. குறிப்பிட்டதற்கு ஒரு மனோதத்துவக் காரணம் உண்டு. அது சமையல் குறித்து இருக்கும் பிரமிப்பைப் போக்குவதேயாகும். அதை எடுத்து விட்டால் பிறகு அதைக் கற்பதில் உள்ள ஒரு பெரிய மனத்தடை விலகி விடும். கற்பதும் எளிதாகி விடும். நானும் என் தந்தையும் சமையல் கற்றுக் கொண்டது சுலபம் ஆனது இம்முறையில்தான் என்றுத் தோன்றுகிறது.
மற்றப்படிப் பெண்கள் மற்ற வேலைகளோடு சமையலையும் செய்கிறார்கள் என்பதில் ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சமையல் செய்துவது சுலபம் தான். நான் சமைக்கும் போது இரசாயன கூடத்தில் நிற்பது போல கற்பனை செய்துக் கொண்டு, சிட்ரிக் ஆசிட்(எலுமிச்ச சாறு), சோடியம் குளோரைடு(உப்பு) மற்றும் சில வேதிப் பொருள்களின் அளவை கூட்டி குறைத்து, ஆஹா ரசம் இன்னிக்கு சூப்பர்... இல்ல இன்னிக்கு சுமார்... வ்வ்வே.... என்று இரசித்து சமைப்பதே ஒரு சுவாரஸ்யம் தான். சுவாரஸ்யம் சேர்ந்துப் போவதால் சமையல் சுலபமாகிறது.
ஆனால்..... ஆனால்..... அதுக்கு அப்புறம் நடக்க போகும் கொடுமையை தான் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது...
அதாங்க சமைத்த பாத்திரங்களை கழுவுவது.... :-(
பாத்திரம் கழுவுவது போர்தான். ஆனால் நல்லவேளையாக எங்கள் வீட்டில் அதற்கு வேலைக்காரி இருக்கிறாள். அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் வாழும் மக்களுக்கு அந்த சௌகரியம் இல்லைதான்.
அது சரி, வலைப்பதிவு சகோதரிகள் பேச்சு மூச்சையே காணோமே? கையில் அகப்பையை எடுத்துக் கொண்டு, "தேரா மானிடா" என்று சீறி வருவார்கள் என்று நினைத்தேனே!
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment