10/07/2005

இக்கேள்விகளை முயற்சி செய்யலாமா?

என்னுடைய முந்தைய கேள்விகளில் இரண்டுக்கு பதில் வரவில்லை ஆதலால் அவற்றை இங்கு முதல் இரண்டு கேள்விகளாக கேரி ஓவர் செய்கிறேன்.

1. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?

2. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).

3. நான் கிழே குறிப்பிடுவது என்ன? ஒரு க்ளூ தருகிறேன். இதற்கு ஆங்கில அறிவு தேவை.
வில்லியம் சித்திரை
வில்லியம் வைகாசி
வில்லியம் ஆனி
வில்லியம் ஆடி

4. கீழே உள்ள மூன்று 10-களில் ஒரே ஒரு நேர்க் கோட்டைப் போட்டு அவற்றை 9.50 ஆக ஆக்க முடியுமா?
10 10 10

5. அப்பா பையனிடம் என்ன பிறந்த நாள் பரிசு வேண்டும் எனக் கேட்க, பையன் இவ்வாறு எழுதிக் காண்பிக்கிறான்: S U I T. அப்பா உடனே கோபத்துடன் அதெல்லாம் கட்டுப்பிடி ஆகாது என்று கூறிவிடுகிறார். பையன் கேட்டது என்ன?

6. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் என்ன?: A E F H I K L M ? ?

7. இந்த சமன்பாடு சரி என்று கூறுவது கோயின்சாமி. 8 + 8 = 91. எப்படி சரியாகும்?

8. கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் மதுரையை நோக்கிச் செல்லும் பாதையில் கீழ்க்கண்டவர்களை எதிர் கொள்கின்றனர். இரண்டு ஆண்கள், ஒவ்வொரு ஆணுக்கும் இரு மனைவியர், ஒவ்வொரு மனைவிக்கும் நான்கு குழந்தைகள். அவர்களுடன் சேர்த்து டோண்டு ராகவனையும் சந்திக்கின்றனர். இப்போது மதுரையை நோக்கிச் செல்வது எத்தனை பேர்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

பாலராஜன்கீதா said...

மூன்றுபேர்தான். (கோவலன், கண்ணகி, கவுந்திஅடிகள்) :-((

dondu(#11168674346665545885) said...

"மூன்றுபேர்தான். (கோவலன், கண்ணகி, கவுந்திஅடிகள்)"
சரியான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலராஜன்கீதா said...

6. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் என்ன?: A E F H I K L M ? ?

N T ( LETTERS WITH STRAIGHT LINES ONLY)

dondu(#11168674346665545885) said...

N T சரியான விடை. அட்டேங்கப்பா கேரி ஓவர் ஆன முதல் 2 கேள்விகளுக்கும் விடை வந்து விடும் என நம்பிக்கை வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

contivity said...

கேள்வி 7க்கான விடை:

8 + 8 = 91 ஐத் தலைகீழாகப் படித்தால் 16 = 8 + 8 என்று வரும். கோயிஞ்சாமி தலைகீழாகப் படித்தாதாலேயே சரி என்கிறார்

Qn # 3 You mean William I, William II , William III, William IV?

பாலராஜன்கீதா said...

the son asked "spacesuit"

பாலராஜன்கீதா said...

// 2. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? //

பாதங்கள் வாத்தின் பாதங்கள்போல இல்லையா ?

பாலராஜன்கீதா

கீதா said...

#2 பொதுவாக வாத்துக்கு கைகள் இருக்காது. Donald Duck -க்கு இருக்கு. அது தானோ?

கீதா
http://geeths.info

ENNAR said...

டோண்டு சார் நல்ல பதிவு சார் உங்களது கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் மதுரை போகிறார்கள் நீங்கள் எங்க சார் போகிறீர்கள்

என்னார்

dondu(#11168674346665545885) said...

"டோண்டு சார் நல்ல பதிவு சார் உங்களது கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் மதுரை போகிறார்கள் நீங்கள் எங்க சார் போகிறீர்கள்"

நான் அங்கு இல்லாவிட்டால் கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் யாரை எதிர்க்கொண்டார்கள் என்று எப்படிக் கூற இயலும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

the son asked "spacesuit

மிகச் சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

8 + 8 = 91 ஐத் தலைகீழாகப் படித்தால் 16 = 8 + 8 என்று வரும். கோயிஞ்சாமி தலைகீழாகப் படித்தாதாலேயே சரி என்கிறார்
Quite right
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

Qn # 3 You mean William I, William II , William III, William IV?

தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

டொனால்ட் டக் சம்பந்தமாக இதுவரை வந்த விடைகள் அத்தனையும் தவறான விடைகளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலராஜன்கீதா said...

// 4. கீழே உள்ள மூன்று 10-களில் ஒரே ஒரு நேர்க் கோட்டைப் போட்டு அவற்றை 9.50 ஆக ஆக்க முடியுமா?
10 10 10 //

முடியாது :-((

dondu(#11168674346665545885) said...

4. கீழே உள்ள மூன்று 10-களில் ஒரே ஒரு நேர்க் கோட்டைப் போட்டு அவற்றை 9.50 ஆக ஆக்க முடியுமா?
10 10 10 //
முடியாது :-((

கண்டிப்பாக முடியும். முயற்சி செய்யவும். முடியாது என்பது சரியான விடை அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலராஜன்கீதா said...

// 4. கீழே உள்ள மூன்று 10-களில் ஒரே ஒரு நேர்க் கோட்டைப் போட்டு அவற்றை 9.50 ஆக ஆக்க முடியுமா?
10 10 10 //

10 TO 10 (time) :-((

dondu(#11168674346665545885) said...

"10 TO 10 (time) :-(("
வாழ்த்துக்கள் பாலராஜன்கீதா. சரியான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலராஜன்கீதா said...

2. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).

கண் இமைகள் ?
சும்மா ஊகித்தது :-(((

dondu(#11168674346665545885) said...

"கண் இமைகள் ? சும்மா ஊகித்தது"

தவறான விடை

அன்புடன்,
டோண்டு ராகவன்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//நான் கிழே குறிப்பிடுவது என்ன? ஒரு க்ளூ தருகிறேன். இதற்கு ஆங்கில அறிவு தேவை.
வில்லியம் சித்திரை
வில்லியம் வைகாசி
வில்லியம் ஆனி
வில்லியம் ஆடி//

Female members of William's Family?(April,May,June & July?)

dondu(#11168674346665545885) said...

"Female members of William's Family?(April,May,June & July?)"
தவறான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Simulation said...

டொனால்ட் டக், ஷார்ட்ஸ் போட்டுக் கொள்ளாமல், ஷேம் ஷேம்முடன் வரையப்பட்டது. இதனால் பின்லாந்தில் இந்த கார்ட்டூன்கள் தடை வேறு செய்யப்பட்டனவாம். தகவல் உபயம். எனது மகன் அனிருத்.

- சிமுலேஷன்

dondu(#11168674346665545885) said...

தவறான விடை சிமுலேஷன் அவர்களே. சரி உங்கள் எல்லோருக்கும் ஒரு க்ளூ. பொருட்குற்றம் டொனால்ட் டக்கின் பெயரிலேயே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Simulation said...

Donald duck என்பது பெண்பால்.

Donald என்பது ஆணின் பேராக இருப்பதால், அது Donald drake என்று இருந்திருக்க வேண்டும்.

-சிமுலேஷன்

மதுமிதா said...

3.
will i am chiththirai
will i am vaikaasi
will i am aani
will i am aadi

is it correct dondu

dondu(#11168674346665545885) said...

அப்பாடி, டொனால்ட் ட்ரேக் என்பது சரியான விடை. இக்கேள்விக்கு பதில் இப்படி இழுத்தடிக்கும் என்று நினைக்கவேயில்லை.
அறியாமையால் செய்த தவறை வால்ட் டிஸ்னி உணர்ந்தபோது காலம் கடந்து விட்டிருந்தது, அதற்குள் டொனால்ட் டக் பெயர் ட்ரேட்மார்க் ரேஞ்சுக்கு சென்று விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுமிதா உங்கள் விடை தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுமிதா said...

1.Schmidt ற்கு கொடுத்திருப்பார் ரசாயனத்துறை என்பதால்

மதுமிதா said...

1. Arendt இயற்பியல் என்பதால்
அளித்திருக்கலாம்

Karl Fritz ற்கு கணித நிபுணர் என்பதால் அளித்திருக்கலாம்.

அல்லது தானே பதவியை ஏற்றுக் கொண்டிருக்கலாம்

விடையைச் சொல்லிவிடுங்கள் டோண்டு அவர்களே

இன்னொரு பதிவு வரையிலும் வேண்டாம்

dondu(#11168674346665545885) said...

ஓக்கே மதுமிதா. இக்கேள்விக்கு விடை போங்குத்தனமானது. நான் ஒரு ஜெர்மன் ஜோக் புத்தகத்தில் படித்தது. இவ்வளவு டிஸ்க்ளைமருக்குப் பிறகு பதிலளிக்கிறேன்.
அடினார் அந்த வேலையை தன் மச்சானுக்கு கொடுத்தார்.

அடிக்காதீங்கப்பா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுமிதா said...

ஆஹா!

உலகம் இவ்வளவு சின்னதா
உருண்டையாய் சுத்தி வருதே

நற நற நற நற நற நற

நற நற நற நற நற நற

dondu(#11168674346665545885) said...

ஜெர்மனியும் நம்மூரைப்போலத்தான் என்று அமைதி கொள்வோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலராஜன்கீதா said...

வில்லியம் சித்திரை
வில்லியம் வைகாசி
வில்லியம் ஆனி
வில்லியம் ஆடி

william's spring ?

dondu(#11168674346665545885) said...

"william's spring ?"
No. (How about the southern sphere?)
Regards,
Dondu Raghavan

P.S. William's one of the shortened forms is Bill. Hence the above Williams refer to monthly bills.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது