10/18/2005

இரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

நான் சாதாரணமாக பத்திரிகைகளிலிருந்து என்னுடைய வலைப்பூ பதிவுகளுக்கு விஷயம் எடுப்பதில்லை. இருப்பினும் 5 - 5 - 2005 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டரில் 34 மற்றும் 35 பக்கங்களில் வெளியான இரு சாட்டையடிகளுக்கும் இடையே உள்ளத் தொடர்பைக் கண்டதால் இப்பதிவு.

முதல் சாட்டையடி இதோ. மும்பை வாழ் தமிழர்கள் சிலர் மறைந்தத் தமிழகத் தலைவர் ஒருவரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மும்பை மாநகர காவல் துறையின் அனுமதி வேண்டி சிலர் அருகிலுள்ள ஏரியா காவல் நிலத்தை அணுகியுள்ளனர். அங்குள்ள இன்ஸ்பெக்டர் தன்னிடம் வந்தவர்களை வரவேற்று அமரச் செய்து அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார். முடிவில் வெளியான விஷயம் என்னவென்றால் வந்திருந்த ஒருவருக்கும் தன் சொந்தத் தாய் தந்தையின் பிறந்த நாட்கள் தெரியவில்லை.

அவர்கள் நாணமடையும் அளவுக்கு அவர் அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். அதாவது சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் தங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தப் பெற்றோருக்கு அனுப்பாமல் சம்பத்தமேயில்லாத தலைவனின் பிறந்த நாளுக்கு செலவழிப்பது வீண் செலவே. அவர்களும் தாங்கள் திருந்தியதாகக் கூறியுள்ளனர்.

இப்போது இரண்டாம் சாட்டையடி. தில்லியில் இருக்கும் டாக்டர் அன்புமணியின் இரு குழந்தைகளும் "மேட்டர் டே" என்னும் ஆங்கில - இந்திப் பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் தமிழே கிடையாது. இவ்வளவிற்கும் தில்லித் தமிழ் சங்கம் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இங்கு நடத்துகிறது. இவற்றில் எதிலும் சேர்க்காமல் ஆங்கில - இந்திப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார் அன்புமணி. அவர் தந்தை என்னவோ இங்கு எல்லாம் தமிழ் என்றிருக்கிறார். இந்த சாட்டையடியில் கூறப்படாத ஒரு உண்மையை இங்கே கூறுகிறேன் "தில்லி தமிழ் கல்விக் கழகம்" ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நல்ல தரமானக் கல்வி. ஆனாலும் மேட்டுத் தமிழ்க்குடியினர் ஆறாவதிலிருந்துதான் இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதற்கானக் காரணம் பிறகு.

முதலில் ஃபீஸ் பற்றி. அங்கத்தினர் கட்டணம் மாதத்துக்கு ரூ. 20. குழந்தையின் படிப்புக்காக மாதம் அறுபது பைசாக்கள் மட்டுமே! இதில் இன்னொரு சமாசாரம். அங்கத்தினர் கட்டணம் ஒரு முறை மட்டுமே கட்ட வேண்டும். அதாவது ஒருவரூகு ஒன்றுக்கு மேற்பட்டக் குழந்தைகள் இருந்தால் மற்றக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அறுபது பைசாக்கள் செலுத்தினால் போதும். இந்த நிலை என் பெண் படிக்கும்போது (1988-ல்) இருந்தது. இப்போது சிறிது உயர்ந்திருக்கலாம்.

ஆனாலும் ஐந்தாம் வகுப்பு வரை மேட்டுக்குடியினர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் படிக்கவைத்து ஆறாம் வகுப்பு வரும் போதுதான் இங்கு வருகின்றனர். அப்போதும் தமிழை எடுக்காமல் குழந்தைகள் ஹிந்தி எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த நிலை? முதல் ஐந்து வகுப்புகளில் தில்லியில் வீட்டுவேலை செய்யும் சேலத்துக்காரர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். சொல்லிவைத்தால் போல் அவர்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்பதை ஆறாம் வகுப்பு வரும்போது கைவிட்டு விடுகின்றனர்.

அன்புமணி அவர்களின் விவகாரத்துக்கு வருவோம். முதல் சாட்டையடியில் இன்ஸ்பெக்டர் கூறியது என்ன? உங்கள் பெற்றோர்களை மதியுங்கள், தலைவன் மூன்றாம் மனிதனே. அந்த இன்ஸ்பெக்டரைப் பார்க்காமலேயே அன்புமணி அவர்கள் இம்மாதிரி யோசித்திருக்க வேண்டும். "தமிழ் உணர்வு எல்லாம் மற்றவருக்கே. என் பிள்ளைகள் எதிர்காலம் எனக்கு முக்கியம்." நல்ல ப்ராக்டிகலான முடிவு என்றுதான் கூற வேண்டும்.

இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? "வேலையற்றுப் போய் தலைவர்கள் தங்கள் அரசியல் எதிர் காலங்களுக்காகத் துவக்கும் போராட்டங்களை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்". அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்.

இன்னும் ஒரு படி மேலே செல்வேன். அன்புமணி அவர்களை இங்கு நான் குறை கூற வரவில்லை. அவர் தான் ஒரு நல்ல தந்தை என்பதை நிரூபித்துள்ளார். அவர் வழியில் செல்வதே அவர் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லதுதான். நல்லது யார் செய்தாலும் அதை பின்பற்றுவது நல்லதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

250 comments:

«Oldest   ‹Older   201 – 250 of 250
கொழுவி said...

//மஸ்ட் டூவுக்கு ஜெர்மன் பிரென்ஞ்சு இரண்டும் தெரியும் அந்தப் பாசமே காரணம்//
டோண்டு மாமாவிற்கு தமிழ் தெரியும். அதனாலேயே எனக்கும் அவரில் பாசம்.

dondu(#11168674346665545885) said...

//தண்ணி அடிச்சிருக்கியா?//
"இனிமேதாண்டா அடிக்கனும்!"
தண்ணியடிக்கறதுக்கு முந்தியே இப்படியா மூர்த்தி ஐயர்வாள். லோகம் தாங்காது தெரியுமொல்லியோ. ஒண்ணும் நல்லால்லே போங்கோ. ரௌத்ரம் ஆரோக்ய நாசம்னு சொன்னேன்னோல்லியோ. சாந்தம், சாந்தம்.
"ஆனாலும் உன்னைமாதிரி டோண்டுமாதிரி பார்ப்பண வெறியன் இருக்குற வரைக்கும் பார்ப்பண எதிர்ப்பாளர்களும் இருக்கத்தாண்டா செய்வாங்க பேமானி!"
நன்னா தீர்ர்க்காயுசா இருங்கோ. எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்தான் நேக்கு ஆசை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

//ஏண்டா விருந்தாளி வீட்டுக்கு வந்தப்ப பொறந்தவனே//

ஏனுங்க.. வீட்டுக்கு யாராச்சும் வந்திருக்கும் போது பொறக்க கூடாதாமா? அட போங்கப்பா.. இந்த சின்ன புள்ளயாண்டாளுக்கு ஒரு மண்ணுமே புரியல்லை.

அப்புறம் மாமா!!! அதென்னது புனா அறுந்த பன்னின்னு.. அதுக்கு என்ன அர்த்தமுங்க?

Dondu Onkel... Pourriez-vous svp expliquer à ce sujet?

dondu(#11168674346665545885) said...

"//ஓ அதுவா, மஸ்ட் டூவுக்கு ஜெர்மன் பிரென்ஞ்சு இரண்டும் தெரியும் அந்தப் பாசமே காரணம்.//ஆமாம்யா... வுட்டா அப்டியே வரிசையா வேல் வேல்னு சொல்லிட்டே போவியே... "
நிஜமாகவே நையாண்டியை மிகவும் ரசித்தேன் மூர்த்தி அவர்களே.

"எந்த எழவா இருந்தா உனக்கென்னய்யா.. உன்னைப்போல நான் வெறியன் இல்லை. ஜாதி என்பது எனக்குத் தேவையில்லை."
நல்ல பாலிசிதான். ஆனாலும் தாங்களே அதை ஒவ்வொருமுறையும் மீறறேளே, அது ஏன்? ஒவ்வொருவரின் ஜாதியையும் நீங்கள் ஆராயப்புகவேதான் இத்தனை பிரச்சினையும் ஆரம்பிச்சதுன்னு தெரியுமோல்லியோ. விட்டு தொலையுங்கோன்னா.

"இருங்க சோடா குடிச்சிட்டு வறேன்!"
க்ளப் சோடா? குடிச்சுட்டு வாங்கோ காத்திண்டிருக்கோம் நாங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Quand on coupe le pénis au cochon, il criera très fort n'est-ce pas? Tu ne l'as pas deviné?

Il me semble que Murthi a l'expérience de première main dans ce cas.

Amicalement,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

என்ன ஆச்சரியம், அரை மணியா ஆரையும் காணும்? வசந்தன் எங்கே?

dondu(#11168674346665545885) said...

300-வது பின்னூட்டம் நேக்குத்தான், ஹையா, ஜாலி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

இதோ வந்திட்டேன் டோண்டு!
300 ஆவது பின்னூட்டத்துக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் இந்தப் பக்கத்துக்கு வருவதென்று இருக்கிறேன். ஏனென்றால் இந்தப்பக்கம் கணியில் இறங்கி முடிய நேரமெடுக்கிறது. மூர்த்தி போய்விட்டதால் இத்தோடு முடிந்து விடுமென்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

மூர்த்தியின் ஒரு பின்னூட்டத்தை நீக்கி விடுகிறேன். ஏனெனில், இப்பின்னூட்டத்தின் தரம் ரொம்பவுமே கீழ்த்தரம். நடுவில் வேலையாக வெளியே போக வேண்டியிருந்தது. அதனால் அதை எடுப்பதில் தாமதம். நான் தான் அவர்கள் என்னை அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் துர்வாசனே. இம்மாதிரி நீங்கள் போடும் பின்னூட்டங்களை நிச்சயம் வரவேற்பேன். மூர்த்தி ஐயர்வாள் அவர்களுக்கும் நிச்சயம் வரவேற்பு உண்டு. சரி, இப்போது நீங்கள் எழுதியதைப் பார்ப்போம்.
"உட்லண்ட்ஸ் டிரைவின் ஹோட்டலில். அங்கே படித்த நன்கு மூத்த பல பிராமணர்கள் இவருக்கு ஆலோசனை தருகின்றனர் என்று தற்போது எனக்குக் கிடைத்த செய்தி ஒன்று சொல்லிற்று."
என்ன கற்பனை? அங்கு வரும் பார்ப்பனர்களில் ஐயங்கார்கள் நெத்தியில் பட்டை, கழுத்தில் கொட்டை ஆகியவற்றை அணிந்து கொண்டு வருவதாக உங்கள் செய்திகள் கூறவில்லையா? சுப்பிரமணியம் சுவாமி அவர்களின் கற்பனை தோற்றது போங்கள்.

இப்போது மதி அவர்கள் எழுதியதை நீங்கள் எடுத்து போட்டதற்கு:
"நான் சொல்லாததை சொன்னதாக திரிப்பதும் நல்ல நாடகம்"
மதி அவர்களுக்கு அப்போதே நான் பதிலும் கொடுத்தேனே, இடப்பற்றாக்குறை காரணமாக விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். என் பதில் இங்கே:
"கண்டிப்பாக திரிக்கவில்லை மதி கந்தசாமி அவர்களே. பின்னூட்டம் இடும் அளவுக்கு சாரம் இல்லை, ஆகவே இடுவதற்கு கருத்தும் இல்லை என்றுதானே பொருள் வரும்? அப்படி கருத்து இருந்திருந்தால் நான் இப்பதிவில் கூறிய இந்த விஷயத்துக்கு மட்டுமாது சாரம் இருந்திருக்கும் அல்லவா. ஏதாவது ஒன்றுதானே உண்மை? ஆகவே "மதி அவர்கள் தனக்கு இதில் ஒன்றும் கருத்து இல்லை என்று கூறிச் சென்று விட்டார்" என்று எழுதினேன். இது எப்படி திரித்தல் ஆகும் மதி அவர்களே?"
அதே மாதிரி கார்த்திக்ராம்ஸ், பெயரிலி, மூக்கன் ஆகியோருக்கும் அந்தந்த இடங்களில் பதில் கொடுத்து விட்டேன். இன்னொரு முக்கிய விஷ்யம், இவை யாவும் "என் வெளிப்படையான எண்ணங்கள்" பதிவுக்கு வர வேண்டியவை. ஆகவே நீங்களும் அங்கெ செல்வது நலம். இருந்தாலும் இங்கு இட்டதற்கான பதிலையும் கூறி விடுகிறேன்.
"மற்ற வலைப்பதிவர்களுக்கு ஆசானாய் முன்னோடியாய் இருந்திருக்க வேண்டிய டோண்டு அவர்கள் ஜாதியப் பதிவுகளில் கவனத்தினைச் செலுத்தி தம்மைத்தானே குறைத்துக் கொண்டார்."
நான் கூற வந்ததைக் கூறி விட்டேன். ஏற்பதும் ஏற்காததும் மற்றவர் விருப்பம், மற்றப்படி ஆசானாகவெல்லாம் இருக்க விருப்பம் இல்லை. உயர்ந்த பீடங்களுக்கும் நமக்கும் ஒத்துக் கொள்ளாது துர்வாசனே.
"மஸ்ட் டூ அவர்கள் உங்களுக்கு எப்படி மருமகன் என்று நாங்கள் அறிந்து கொள்ளலாமா?"
அதாவது மஸ்ட் டூவின் அன்னையை என் தங்கையாகப் பாவிக்கிறேன் என்று பொருள். போதுமா? தேவையின்றி கற்பனையை ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
"பிராமணர்கள் எப்போதிலிருந்து சமஸ்கிருத அர்ச்சனையில் இருந்து பிரெஞ்சு அர்ச்சனைக்கு மாறினீர்கள்?"
நான் எழுதியதில் இருந்த ஜெர்மன் வாக்கியத்தை விட்டு விட்டீர்களே? அது சரி இந்தப் பின்னூட்டம் இப்பதிவுக்கு எப்படி வந்தது? மஸ்ட் டூ அவர்கள் பதிவில் பதிப்பதுதானே? அங்கும் ஏற்கனவே பதித்திருந்தால் நான் இங்கு கூறியதை இக்னோர் செய்யவும். ஏற்கனவே இப்பதிவின் பின்னூட்டங்கள் மிக அதிகமாகி விட்டன. மற்றப் பதிவுக்கு போக வேண்டியவை இங்கு வர வேண்டாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விசிதா அவர்கள் இட்டப் பின்னூட்டத்துடன் ஒத்துப் போவதாக அப்போதே அவரிடம் கூறி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"எல்லோரையும் தமிழில் படிக்கச் சொல்லி விட்டு, தன் வீட்டுப்பிள்ளைகளை ஹிந்தியுலும், ஆங்கிலத்திலும் படிக்கவைக்கும் அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
வாருங்கள் பார்த்தா அவர்களே, அதைப்பற்றி பதில் கூற மனதில்லை பலருக்கு. அவர்கள் சௌகரியமாக நான் போகிற போக்கில் கூறியதைப் பிடித்து கொண்டு தொங்கி, வாந்தி வருவதாகக் கூறி அப்பால் சென்றனர். அவர்களில் ஒருவர் நான் கூறியதில் சாரம் இல்லை என்று கூறி சென்றார். ஒரு வேளை இம்மாதிரி அரசியல்வாதிகள் செய்வது சகஜம்தானே என்று நினைத்திருக்கலாம் அவர். ஆனால் ஒன்று ஹிந்தி படித்தால்தானே பேரனுக்கு மந்திரி பதவி கிடைக்கும்? தங்கள் பிரசாரங்களை நம்பி தங்கள் எதிர்க்காலத்தையே தொலைத்தத் தலைமுறௌகளைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?
அப்பாடா, நீங்களாவது இப்பதிவுக்கேற்ற கேள்வி கேட்டீர்களே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"திருமயிலையின் படித்துறைகளில் ஆரம்பிக்கும் உங்களின் பார்ப்பன துவேஷமானது கடைசியில் திட்டமாக வெளிவருவது எண்மருடன் கூடிய உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில்தான்."
பார்ப்பன வெறி என்று கூற நினைத்து பார்ப்பன துவேஷம் என்று போட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன், சரிதானே? எண்மர்? அதில் ஒருவன் நான் என்றால், மீதி எழுவர் யார்?

ஜெயலலிதா அவர்கள் செய்த நல்ல செயல்களில் ஒன்றாக நான் கருதுவது எல்லோரையும் கட்டாயப்படுத்தி மழைநீர் சேமிப்பு திட்டம் நிறைவேற்றியதே. இன்னொரு நல்ல செயல் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியாக இருப்பதே. மற்றப்படி அவரது சர்வாதிகாரப்போக்குடன் ஒப்புதல் இல்லை என்று கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஜெயேந்திரர்? சோவின் நிலையுடன் முழுக்க ஒத்துப் போகிறேன் என்று எப்போதோ எழுதி விட்டேன்.

"தமிழ் இணையத்தில் பார்ப்பணர் என்று நீங்கள் மார் தட்டுவது போலவே தலித் என்றும் வன்னியன் என்றும் முக்குலத்தோன் என்றும் மறவன் என்றும் முதலி என்றும் எல்லோருமே மார்தட்டினால் நிலைமை என்ன ஆகும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்."
வீர வன்னியன், வன்னியன், குழலி ஆகியோர் யார்? அவரவர் மனசாட்சிப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கு யார் நாட்டாமை? சொந்தப்பதிவில் கவனம் செலுத்துவதே நலம். மற்றவர் பதிவுக்கு போய் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை லென்ஸ் கொண்டு பார்ப்பது தேவையற்றச் செயல் என்பதே என் கருத்து. உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அது உங்கள் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வன்னியன் said...

ஐயா டோண்டு!
நான் இந்த விவாதத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறேன். ஏனென்றால் இது எவ்விதத்திலும் என்னோடு சம்பந்தப்பட்டதன்று. ஆனால் என்பதிவையும் சாதிப்பதிவு என்ற வகைக்குள் (அல்லது குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதும்) அடக்கிவிட்டீர்கள். குறைந்த பட்சம் என்பதிவை ஒரு முறையாவது வந்து பார்த்துவிட்டு நான் யார்? என்ன எழுதுகிறேன், என்று அறிந்திருக்கலாம். லாடு லபக்கு தாசும் இப்படித்தான் என்னை வன்னிய சாதியென்று ஓரிடத்தில் (மன்னை மாதவனின் பதிவில்) சொல்லி அவருக்குப் பதிலளித்தேன். சாதி பற்றி நான் கருத்திலெடுப்பதில்லை. அப்படிப்பார்த்தாற்கூட ஈழத்தில் வன்னிய சாதியென்று எதுவுமில்லை. வன்னியில் இருப்பவனெல்லாம் வன்னிய சாதியா? பண்டார வன்னியன் வன்னிய சாதியா? (நீங்களே என்னை வரவேற்கும்போது பாயும் புலி பண்டார வன்னியன் என்று விழித்திருந்தீர்.)

இதைவிட அப்பா துவக்குச் செய்வார் என்ற பதிவில்கூட எனக்குப் பின்னூட்டம் போட்டிருந்தீர்கள்.

நான் ஈழத்தைச் சேர்ந்தவன். வன்னி என்ற இடத்தைக் கருத்திற்கொண்டே நான் இந்தப்பெயரை வைத்துள்ளேன். ராமதாசுக்கும் எனக்கும் வன்னிய சாதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. என் பதிவை வாசித்திருந்தும் நீங்கள் என் பெயரை இங்குப் பாவித்துள்ளீர்கள். இதற்கு என் காட்டமான மறுப்பைச் சொல்கிறேன்.

வன்னியன் said...

ஐயா டோண்டு!
நான் இந்த விவாதத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறேன். ஏனென்றால் இது எவ்விதத்திலும் என்னோடு சம்பந்தப்பட்டதன்று. ஆனால் என்பதிவையும் சாதிப்பதிவு என்ற வகைக்குள் (அல்லது குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதும்) அடக்கிவிட்டீர்கள். குறைந்த பட்சம் என்பதிவை ஒரு முறையாவது வந்து பார்த்துவிட்டு நான் யார்? என்ன எழுதுகிறேன், என்று அறிந்திருக்கலாம். லாடு லபக்கு தாசும் இப்படித்தான் என்னை வன்னிய சாதியென்று ஓரிடத்தில் (மன்னை மாதவனின் பதிவில்) சொல்லி அவருக்குப் பதிலளித்தேன். சாதி பற்றி நான் கருத்திலெடுப்பதில்லை. அப்படிப்பார்த்தாற்கூட ஈழத்தில் வன்னிய சாதியென்று எதுவுமில்லை. வன்னியில் இருப்பவனெல்லாம் வன்னிய சாதியா? பண்டார வன்னியன் வன்னிய சாதியா? (நீங்களே என்னை வரவேற்கும்போது பாயும் புலி பண்டார வன்னியன் என்று விழித்திருந்தீர்.)

இதைவிட அப்பா துவக்குச் செய்வார் என்ற பதிவில்கூட எனக்குப் பின்னூட்டம் போட்டிருந்தீர்கள்.

நான் ஈழத்தைச் சேர்ந்தவன். வன்னி என்ற இடத்தைக் கருத்திற்கொண்டே நான் இந்தப்பெயரை வைத்துள்ளேன். ராமதாசுக்கும் எனக்கும் வன்னிய சாதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. என் பதிவை வாசித்திருந்தும் நீங்கள் என் பெயரை இங்குப் பாவித்துள்ளீர்கள். இதற்கு என் காட்டமான மறுப்பைச் சொல்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

"மீதி எழுவரும் மயிலையில்தான் சுற்றிக் கொண்டுள்ளனர்."
சென்னையின் மீதி இடங்கள் என்ன பாவம் செய்தன?

"இந்த நிலைதான் எல்லா ஊர்களிலும் என்று நினைக்கிறேன். மழைநீர் சேமிக்க குழி வெட்டச் சொன்னால் எல்லோரும் ரோட்டைக் குடைந்து வைத்துள்ளனர் என்பது நான் என் கண்களால் பார்த்த உண்மை."
அந்தந்த வீடுகளில் இத்திட்டத்தை செயல் படுத்தியதில் போர் கிணறுகளில் நீர் மட்டம் பராமரிக்கப் படுவது நிஜம். ஒரு சுமாரான மழைக்குப் பிறகு கூட கிணறுகளில் நீர் ஏறுகிறது. மற்றப்படி திட்டத்தை சரியாக நிறைவேறாதது சம்பந்தப்பட்டவர்கள் செய்த சொதப்பல்கள். போர் கிணறுக்காக வெட்டிய குழியில் குழந்தை விழுந்ததற்காக அம்மாதிரி கிணறுகளே கூடாது என்று சொல்ல இயலுமா?

தீவிரவாதம் பற்றி. ஜெயாவது ஏதோ செய்தார். முக அவர்கள் அதுவும் செய்யாது துழாவினார். ஜெயேந்திரர் கைதைப் பற்றி நான் என் நிலையை ஏற்கனவே கூறி விட்டேன். மேலே கூற ஒன்றும் இல்லை.

வீரப்பன்? அவன் இறந்ததே நிம்மதி. அரசுப் பணம் விரயமாவதிலிருந்து தப்பியது.

மற்றப்படி ஜெயின் வெற்றிக்கு நீங்கள் அடுக்கும் காரணங்கள் எல்லம் ஏறக்குறைய ஏற்புடையவையே. ஆனால் பார்ப்பன ஓட்டுக்கள் அதிக அளவில் எங்கு உள்ளன, தேர்தல் போக்கை கட்டுப்படுத்தும் அளவுக்கு? முக்குலத்தோர் வாக்குக்களே காரணம் என்றால் ஏற்கலாம்.
ஆனால் ஒன்று, மு.க. உடன் ஒப்பிட்டால், தராசு இவர் பக்கம் சாய்கிறது என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெரிய தவறு என் தரப்பில் நட்ந்து விட்டது. மன்னிப்பு கோருகிறேன் வன்னியன் அவர்களே. பண்டாரக வன்னியன் என்று நான் உங்களை அழைத்தது ஞாபகத்தில் உள்ளது. ஆனாலும் அது வன்னி என்ற பெயரிலிருந்து வந்தது என்பதது என் கருத்திலிருந்து விலகி விட்டது. மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஆனால் இப்பதிவில் ஆரம்பம் முதல் பல உறுப்பினர்கள் என்ன என்னவோ பேசியும் எடுத்துச் சொல்லியும் தாங்கள் செவிமடுக்க மறுப்பதேன் டோண்டு அவர்களே?"
1. என் ஜாதியைப் பற்றிய பின்னூட்டங்கள் இப்பதிவுக்குரியவன அல்ல
2. இருந்தாலும் நான் ஏன் என் நிலைப்பாட்டை எடுத்தேன் என்பதைப் பல இடங்களில் தெளிவுபடுத்தி விட்டேன். பலரும் ஒப்புக்கொண்டும் விட்டனர்.
3. வேறு என்ன செய்ய வேண்டும் நான் என எதிர்ப்பார்க்கிறீர்கள்? நான் கூறியது கூறியதுதான். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு அது. என் நிலை எனக்கு, மற்றவர் நிலை அவருக்கு. இதில் என் வயது எங்கிருந்து வந்தது? 59 வயதெல்லாம் ஒரு வயதா? நான் இன்னும் 25 வயது சிந்தனைகளுடனேயே இருக்கிறேன்.
4. வெறுமனே ஜாதியைப்பற்றி மட்டும் நான் பேசவில்லை. என் மற்றப் பதிவுகளும் தொடர்கின்றன. உண்மையைக் கூறப்போனால் அவர்றில் சந்தேகம் கேட்டு வந்தால் மகிழ்ச்சியுடன் பதிலளிக்கத் தயார். ஆனால் அங்கு வரும் பின்னூட்டங்கள் சோர்வையே அளிக்கின்றன.

"அடுத்தவனுக்கு அறிவுரை கூற மட்டும் உங்களுக்கு எங்கிருந்து தகுதி வந்தது?"
நான் யாருக்கு அறிவுரை கூறினேன்? நிச்சயமாக எனக்கு அது சம்பந்தமாக எந்தத் தகுதியும் இல்லை. பொது விஷ்யங்களைப் பற்றி நான் பேசுவதெல்லாம் என் கருத்துக்களின் அடிப்படையிலேயே. சிலர் அவற்றுடன் உடன்படுகின்றனர், சிலர் இல்லை. நானே கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளன. இதில் மற்றவருக்கு அறிவுரை? எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நான் பேசுவது specifications-படி செயலாக்கப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டம் பற்றியே. மொட்டை மாடிகள், கூறைகள் ஆகியவர்றில் விழும் மழைநீர் முறைப்படி குழாய்கள் மூலம் அதற்கான குழிகளில் இறக்கப்படவேண்டும். அவ்வாறு செய்வது மிகுந்த பலனை அளிக்கிறது என்பது நானே நேரில் பார்த்தது.
நான் இருக்கும் நங்கநல்லூரில் இத்திட்டம் மிக அதிக வெற்றி பெற்றுள்ளது. அதை பிடிவாதமாக மக்களை வற்புருத்தி செய்வித்த முதல்வர் பாராட்டுக்குரியவர். அரைகுறையாக வேலை செய்தவர்கள் அதற்கு அனுபவிக்க வேண்டியதுதான்.
மழை நீர் சேமிப்பு திட்டம் பற்றி மேலும் பார்க்க:
http://www.rainharvesting.co.uk/

"யார் யார் ஒப்புக் கொண்டனர்..? உங்களை உற்சாகப்படுத்தியவர் என்ற பெயர்ப் பட்டியலை இங்கு வெளியிட முடியுமா தங்களால்?"
என்னுடைய இப்பதிவின் பின்னூட்டம் ஒன்றிலேயே குழலி அவர்கள் என்னால் இன்ஸ்பைர் ஆனதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அவரைத் தவிர அனேகம் பேர் உண்டு, ஆனால் அவர்கள் அனுமதியில்லாமல் அவர்கள் பெயரை வெளியிடுவதற்கில்லை. மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்கள் என்னால் இன்ஸ்பைர் ஆனதாகக் கூறினார் என்றுதான் கூறினேன். வேறு எதையும் கூறவில்லை. அவர் கூறியது முழுமையாக இதோ:
"தமிழ்மணம் இணையதளத்தின் மீதும் வலைப்பூ எழுதுபவர்கள் மீதும் எமக்கு தனி மரியாத உண்டு, ஏனெனில் இதற்கு முன் பல ஃபாரம்களை பார்த்துள்ளேன் அங்கெல்லாம் ஆரோக்கியமற்ற ஆபாச வார்த்தைகளோடு எழுதுவர், இங்கே தான் மிக ஆரோக்கியமாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் எழுதப்படுகின்றன. இதுவரை மருத்துவர் இராமதாசு மீதான சொல்லடிகள் பற்றி எழுதாமல் இருந்தேன் ஏன் எனில் எனக்கு சாதிய முத்திரை குத்தப்படும் என்ற அச்சமும் அதற்குமேல் எல்லா பதிவுகளும் சாதிய கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும் என்ற அச்சமுமே காரணம். ஆனால் டோண்டு அவர்கள் தைரியமாக அவரின் சாதிப்பெயரை சொல்லியும் பதிவுகள் எழுதியும் அவருடைய நல்ல பதிவுகள் பலரால் படிக்கப்பட்டு வருவது எனக்கு தைரியத்தை கொடுத்துள்ளது,அது மட்டுமின்றி இந்த தளங்களிலே எழுதுபவர்களின் முதிர்ச்சியையும் காட்டுகிறது. இதுவே என்னை மருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் பற்றிய பதிலுரை எழுதலாம் என தூண்டியது, எனது எண்ணங்களை வார்த்தைகளாக்கி கொண்டுள்ளேன் விரைவில் எனது பதிவை தருகிறேன். எனது பெரும்பாலான கருத்துகளை முன்னமயே வீரவன்னியன் என்ற பெயரிலே ஒருவர் எழுதிவிட்டார், அவருடைய பதிவையும் இந்த சுட்டி வழியாக படியுங்களேன் சாதிக் கட்சிகளை விலக்குங்கள்"

மற்றவர்கள் யார் என்பதை நான் ஏன் உங்களுக்கு கூற வேண்டும்? வேறு ஏதாவது விவாதம் செய்யலாம். இதை இத்துடன் விட்டுவிடுவோம் சரிதானே? வரப்போகும் சட்டசபைத் தேர்தல் பற்றிப் பேசுவோமா? மற்றப்படி ஜாதியைப் பற்றி நிறையப் பேசிவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன். பலவிஷயங்களில் நம் கருத்து ஒத்துப்போகவில்லை என்பதை பேசாமல் ஒப்புக்கொண்டு இப்போதைக்கு நட்போடு பிரியலாம் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

இங்கு நான் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்,
என்னுட்டிய பதிவுகளில் எந்த இடத்திலும் சாதி சார்பாகவோ அல்லது வன்னிய சாதிதான் உயர்ந்தது என்றோ எழுதவில்லை, நான் எழுதியது, எனது பின்னூட்டங்களெல்லாம் பாமக,இராமதாசு மற்றும் அன்புமணி மீதான கண்மூடித்தனமான காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்படும் தேவையற்ற விமர்சனங்களை எதிர்த்தானேயொழிய எந்த இடத்திலும் சாதிச்சார்பாக எழுதவில்லை, தயவு செய்து எனது பதிவுகளை சாதிச்சார்பான பதிவாக கருத வேண்டாம், எனது பதிவுகளின் சுட்டி இதோ குழலி பக்கங்கள், சுட்டியிலுள்ள விடயங்களை படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் சாதிச்சார்பாக எழுதியுள்ளேனா அல்லது பாமக,இராமதாசுவின் மீதான
கண்மூடித்தனமான காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்படும் தேவையற்ற விமர்சனங்களை பற்றி எழுதியுள்ளேனா என்று.

dondu(#11168674346665545885) said...

நான் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவன் என்று ஒப்புக்கொண்டேன் அவ்வளவுதான். இணையத்தில் பார்ப்பன எதிர்ப்பு பரவலாக இருக்கும் இந்த நேரத்தில் அதைக் கூற ஒரு துணிவு வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். ஏனெனில் ஆ ஊ என்றால் பார்ப்பனீயம் என்றெல்லாம் ஆரம்பித்து விடுகிறார்கள். நான் வெளிப்படையாக அவ்வாறு கூறியதைத்தான் மற்றவர்கள் பார்ப்பன வெறி என்று முத்திரையிடுகிறார்கள். அவ்வாறு செய்தாலும் கவலையில்லை என்றுதான் என் முடிவில் இன்னும் இருக்கிறேன்.

என்னுடைய பதிவில் தாங்கள் ராமதாசு அவர்கள் மேல் விழும் சொல்லடிகளைப் பற்றி முதலில் ஏன் எழுதவில்லை என்பதற்கு என்ன கூறினீர்கள் என்பதைப்பாருங்கள். எங்கே அவ்வாறு செய்தால் தங்களுக்கு சாதி முத்திரை குத்தி விடுவார்களோ என்று தயங்கியிருக்கிறீர்கள். நான் எடுத்த என் நிலையைப் பார்த்து தாங்களும் தைரியம் பெற்றீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதன் பிறகுதான் உங்கள் ராமதாசு அவர்களைப் பற்றியப் பதிவுகள் வந்தன. உங்கள் பின்னூட்டத்தை முழுமையாக இப்போதுதான் இரு பின்னூட்டங்களுக்கு முன்னால் போட்டுள்ளேன்.

அவ்வாறு எழுதியதையோ அல்லது உங்கள் வன்னிய சாதியையோ நீங்கள் மறுக்கவில்லைதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

துர்வாசர் என்ற புது பெயரில் மீண்டும் வந்திருக்கும் 'நண்பரே' நல்வரவு. அபாரமான மூளை சார் உங்களுக்கு.

நான் தான் 'நான் தான்' என்ற பெயரில் இங்கே பின்னூட்டமிட்டேன் என்று கண்டுபிடித்ததோடு, நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் என்ற மாபெரும் உணமையையும் கண்டு பிடித்து விட்டேர்களே!! சபாஷ்..! இன்னும் பாதிப் பேர் ரஜினி ராம்கி தான் மாயவரத்தான் என்ற பெயரில் எழுதி வருகிறார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு?!

போகட்டும்.. 'நான் தான்' சொன்னதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. முதலில் தரக் குறைவாக பேச ஆரம்பித்தது மூர்த்தி தான். (அதாவது 'இனிமேல் இந்த பதிவின் பக்கம் வர மாட்டேன்' என்ரு கூறி விட்டு இப்போது வேறு வேடம் பூண்டு வந்திருக்கும் அதே நண்பர் மூர்த்தி தான்!)

பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் பிடிக்காதவர்கள் அதை எதிர்த்து பேச எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை எங்களுக்கும் இருக்கிறது. இதில் தப்பேதுமில்லை!

இதே அளவு மூர்க்கத்தனத்தை வேறு யாருடைய பதிவிலாவது காண்பித்திருக்கிறீர்களா? காண்பித்து தான் பாருங்களேன்.

எனவே, அதே அளவு உங்கள் லெவலுக்கு இறங்கி பதில் பின்னோட்டமிட 'நான் தான்' போன்று ஒருவர் இங்கு தேவைப்படுவதால், 'நான் தானை' வாழ்த்தி வரவேற்பதில் தயக்கமில்லை.

நேற்றே இதை சொல்லியிருப்பேன். ஆனால் நேரமின்மையால் இரண்டு நாட்கள் இந்தப்பக்கம் வர இயலவில்லை.

பார்ப்பனர்கள் தான் வலைப்பதிவில் குழுவாக இருக்கிறர்கள், தலித், வன்னியர் போன்றோர் அப்படி இல்லை என்பது முழு பூசணி கொடியையே சோற்றுப் பருக்கையில் மறைப்பது போல!

ஆக, இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், மரியாதை குறைய்வாக எவன் பேசினாலும் பதிலடியும் மரியாதை குறைவாக கொடுப்பதில் தப்பில்லை என்று நான் எனது பதிவிலேயே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.

வேறொரு பெயரில், கண்டபடிக்கு பேசிவிட்டு பதில் காட்டமாக வந்தவுடன், இனிமேல் இந்தப்பக்கம் வர மாட்டேன் என்று சொல்லி விட்டு ஓடி விட்டு இப்போது வேறு பெயரில் வந்தால் மட்டும் தெரியாமல் போய்விடுமாக்கும். தான் தான் உலக மகா புத்திசாலி என்று நெனப்பு சிலருக்கு! கஷ்டகாலம்!!

dondu(#11168674346665545885) said...

குழலி என்னால் இன்ஸ்பைர் ஆனார் என்பதைதவிர வேறு எதுவும் கூறவில்லை என்பதை ஏற்கனவே உங்க்ளுக்கானப் பதிலிலும், குழலிக்கானப் பதிவிலும் சொல்லி விட்டேன். அதையே எத்தனை தடவை கேட்பீர்கள்? இப்போது சற்று வேறு கோணத்திலிருந்து கூறுகிறேன். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
1. பார்ப்பன எதிர்ப்பு நிறைந்த வலைப்பதிவர் உலகத்திலே நான் பார்ப்பனன் என்பதை அறிவித்து கொண்டேன். பல பதிவுகளும் போட்டேன், அவை நன்றாகப் படிக்கப்பட்டும் வந்தன.
2. குழலி அவர்கள் பல நாட்கள் ராமதாசுக்கு எதிரான சொல்லடிகளை எதிர்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.
3. ஆனாலும் தன்னை வன்னிய சாதி முத்திரை குத்தி விடுவார்களோ என்று தயங்கியிருக்கிறார்.
4. என் பதிவுகளைப் பார்த்திருக்கிறார். டோண்டுவே அவ்வாறு எழுதிவிட்டு வெற்றிகரமாக பதிவுகள் போட்டு வருகிறார் என்று பார்த்திருக்கிறார்.
5. துணிந்து அவரும் தன் பதிவை ஆரம்பித்தார்.
6. தன் மனப் போராட்டத்தைப் பற்றி எனக்கிட்டப் பின்னூட்டத்தில் தெரிவித்தார். அவருக்கு நான் அவ்வாறே செய்யுமாறு தைரியம் கூறினேன்.

அவர் பார்ப்பனீயத்துக்கு ஆதரவு தெரிவித்தார் என்று கூறவில்லை. நான் எடுத்த நிலைக்கு ஆதரவு தெரிவித்து தானும் அதே நிலையை எடுத்தார். அவ்வளவுதான்.

சரி மூர்த்தி அவர்கள் கொடுத்த பின்னூட்டமும் அதற்கான என் மறுமொழியையும் பாருங்கள்:
மூர்த்தியுடையது 201-வது பின்னூட்டம், என்னுடையது அதற்கடுத்தது:
"நானொரு பிராமனர் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டு வலைபதியும் டொண்டு அய்யாவுக்கு இவ்வளவு பின்னூட்டங்கள் வருமென்று சத்தியமாக நானே எதிர்பார்க்கவில்லை!

சொன்னது சொன்னதுதான்.. எனவே இனிமேல் நான் ஐயங்கார் இல்லை என்று அவர் மறுப்பறிக்கை இடத் தேவையில்லை!

இனிவரும் காலங்களிலாவது அவர் ராஜாஜி.. பிராமணர்.. ஐயங்கார்.. என ஒரு குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டாமல்.. தன் ஜாதி மறந்து மனிதத்துக்காக யோசிப்பார்... வலைபதிவார் என உறுதியாக நம்புகிறேன். என் எதிர்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதேபோல 'மனவாடு' என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே மாயவரத்தான்கள் ஆதரிக்காமல் நடுநிலையாகப் பேசுமாறும் வேண்டி விரும்பிக் கொள்கிறேன்.

ஒரு சின்னதகவல்:- காசியின் மதிப்பீட்டு முறையைப் பயன்படுத்தி டொண்டு அய்யாவுக்கு ஆதரவாக 20 பின்னூட்டங்களும் எதிராக 15 பின்னூட்டங்களும் இட்டேன்!(சோதனைக்காக மட்டும்)
# போஸ்டட் பை மூர்த்தி : 10:31 காலை
அதற்கு என் பதில்:
"நான் ஜாதியை கூறியது அலையென இணையத்தில் பொங்கி வந்த பார்ப்பன விரோதக் கருத்துகளை சவாலோடு எதிர்நோக்கவே. மேலும் ராஜாஜி, சோ, கல்கி, கமலஹாசன் ஆகியோரை நான் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்காக ஆதரிக்கவில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். மாமனிதர் ராஜாஜியைப் பற்றி எழுதவேண்டியவை இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது என்பதையும் இப்போதே கூறுவேன்."

ஆக மூர்த்தி அவர்களும் என் நிலையை ஒரு மாதிரியாக அப்போது ஒத்துக்கொண்டார் என்றும் கூறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

உலக மகா புத்திசாலி (?!) துர்வாசர் எனும் _______ அவர்களே, திரும்ப திரும்ப நான் அமெரிக்காவில் இருப்பன் என்று நீங்கள் சொல்லுவதிலிருந்தே உங்களின் புத்திக்கூர்மை நன்கு புலப்படுகிறது. எனக்கு மென்பொருள் குறித்து ஒரு மண்ணும் தெரியாது தான். ஆனால் நீங்கள் 'ஐ.எஸ்.பி.' முகவரியை வைத்துக் கொண்டு என்ன என்னவோ உளறி கொண்டிருக்கிறீர்கள் என்று மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும். அதனால் தான் 'நான் தான்'னும் மாயவரத்தானும் ஒன்று தான் என்று எனது 'அமெரிக்க' ஐ.எஸ்.பி. முகவரியை வைத்து வாதம் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. இதிலிருந்தே உங்கள் கம்ப்யூட்டர் புலமை நன்கு புலனாகிறது!!! நான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்று கூறி விட்டு திடீரென மயிலாப்பூரிலா இருந்தாய் என்றும் கேட்கிறீர்கள். என்ன கண்றாவி இது?!

'என்னை மிரட்டினால் பயந்து விடுவேன்' என்று எல்லோரும் சொன்னார்கள் (ஓ.. அதுக்கு ஒரு கூட்டம் போட்டு பேசினீங்களாக்கும்?!) என்று அபத்தமாக பிதற்றியிருக்கிறீர்கள். திண்ணை விவகாரம் குறித்து மேற்கொண்டு பேசுவதில்லை என்று சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயம். எனவே, அது குறித்து யார் எதை உளறினாலும் அது குறித்து பேசுவதாக இல்லை.

ஆக, மிரட்டச்செய்வோம் என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. தலையில் அல்லது விஷயத்தில் 'சரக்கு' இருந்தால் அடுத்தவரை எதற்காக மிரட்டப் போகிறீர்கள்?

டோண்டுவிடம் மரியாதை குறைவாக பேச ஆரம்பித்ததால் தான் வசந்தன் அவர்களும், நான் தான் அவர்களும் மூர்த்தியிடம் மரியாதையாக பேசச் சொன்னார்கள் என்பது இங்கு எல்லாருக்கும் தெரியும். அதற்கு பதிலடியாக எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசி தனது உன்மை ரூபத்தை வலை உலகுக்கு காட்டியது யார் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

எல்லா இடங்களிலும் போய் எழுதுவேன் என்று பம்மாத்து கூறுகிறீர்களே..! முதலில் போய் செய்து விட்டு வாருங்கள். அப்புரம் பேசுங்கள்.

எனக்கு ரஜினி பற்றி மட்டும் தான் தெரியும் என்று கூறியிருக்கிறீர்கள். பரவாயில்லை. ஒன்றுமே தெரியாமல் ஊருக்கு உபதேசம் செய்து சரக்கு தீர்ந்தவுடன் கண்ட வசைச் சொற்களை உபயோகித்து மரை கழண்டவரைப் போல் பிதற்றுவதை விட ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பது நல்லது தான். ரஜினியைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதில் தப்பேயில்லை. அது என் தனி மனித சுதந்திரம். அதில் தலையிட எந்த கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உருப்படியா எதுவும் தெரிஞ்சா எழுதுங்க சார்.. இல்லாட்டி அப்படி ஓரமா போய் குந்துங்க. போங்க..!

ஈழநாதன்(Eelanathan) said...

//எல்லோரையும் தமிழில் படிக்கச் சொல்லி விட்டு, தன் வீட்டுப்பிள்ளைகளை ஹிந்தியுலும், ஆங்கிலத்திலும் படிக்கவைக்கும் அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்//

எல்லோரும் குளித்துச் சுத்தமாக இருங்கள் அப்போதுதான் நோய் நொடிவராது என்று கூறிவிட்டு தான் குளிக்காமல் இருக்கும் அரசியல்வாதியைப் பற்றியும் அவனைக் குளிக்கச் சொல் நான் குளிக்கிறேன் என்று சொல்லும் என்னைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்.

மாயவரத்தான் said...

//அரசியல்வாதியைப் பற்றியும் அவனைக் குளிக்கச் சொல் நான் குளிக்கிறேன் என்று சொல்லும் என்னைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள். //
(முன்குறிப்பு : ஈழநாதன் சார்...நோய் நொடியையும் இந்தியையும் நீங்கள் சம்பந்தப்படுத்தியது இந்தியில் அனா,ஆவன்னாவே தெரியாத எனக்கு ஒப்பில்லை என்றாலும்...)

நீங்கள் 'நாயகன்' திரைப்பட வசனத்தால் கவரப்பட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது..!

dondu(#11168674346665545885) said...

"எல்லோரும் குளித்துச் சுத்தமாக இருங்கள் அப்போதுதான் நோய் நொடிவராது என்று கூறிவிட்டு தான் குளிக்காமல் இருக்கும் அரசியல்வாதியைப் பற்றியும் அவனைக் குளிக்கச் சொல் நான் குளிக்கிறேன் என்று சொல்லும் என்னைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?"

சுவாரசியமான கேள்வி ஆனால் ஆனால் தவறான ஒப்பீடு. விளக்குகிறேன். ஆங்கில ஹிந்தியில் படிப்பது மாணவர்களுக்கு பிற்காலத்தில் நிறைய நன்மை செய்கிறது என்பதுதான் எல்லோரும் ஒப்புக்கொள்வது. ஆனால் தமிழில் படித்தால் தமிழ்நாட்டில் மட்டும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட முடியும். இது ஒரு கசப்பான உண்மை. ராமதாசு அவர்கள் தமிழ்மக்கள் தத்தம் குழந்தைகளைத் தமிழ் மீடியம் வகுப்பில் சேர்க்கச் சொல்லுவார், ஆனால் அவர் பேரப்பசங்கள் மட்டும் தில்லியில் தமிழ் படிப்பார்களாம். இது என்ன போங்கு என்பதுதான் என் பதிவின் சாரம். அதே நேரத்தில் அன்புமணி தந்தை என்ற முறையில் தன் கடமையைச் செய்தார் என்றும் கூறினேன். ஆகவே தொண்டர்களே தலைவரின் பேச்சை இவ்விஷயத்தில் கேட்காதீர்கள் என்கிறேன்.

உங்கள் உபமானம் சற்றே மாற்றி எழுதினால் சரியாக இருக்கும். அதாவது நாட்டில் தண்ணீர் பஞ்சம், ஆகவே பொது மக்களே ஒரு குடம் தண்ணீரில் குளிக்கப் பழகுங்கள் என்று கூறிய அரசியல்வாதி தான் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஷவரில் குளிக்கிறார். இப்போது நான் எந்த நிலை எடுப்பேன் என நினைக்கிறீர்கள்?

அது சரி, குளிப்பது அவ்வளவு அலுப்பு தரும் விஷயமா உமக்கு? சிறு வயதில் குளிப்பதற்கு படுத்துவீர்களோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

மீண்டும் மீண்டும் நான் அமெர்க்காவிலிருப்பவன் என்று சொல்லி உங்கள் 'ஆழ்ந்த' திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். இதிலே எனது ஐ.எஸ்.பி.யும், நான் தான் ஐ.எஸ்.பி.யும் ஒன்று..அதுவும் அமெரிக்காவிலுள்ளது என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லி நீங்கள் கூறிக் கொண்டேயிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் துர்வாசர் @ ________. இதில் 'நோட் திஸ் பாயிண்ட்' வேறு. என்னை பற்றியும், நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் பற்றியும் அறிந்தவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். (உடனே அவர்கள் பார்ப்பனர்கள் என்று ஜல்லியடிக்க வேண்டாம்). நீங்கள் ஏதோ மகா புத்திசாலி என்பதைப் போல வேறு பெயரில் வந்து திசை திருப்ப பார்க்க வேண்டாம். 'நான் தான்' பதிலடி கொடுத்ததில் எந்த தவறும் இல்லை.

ஒருநாளாவது 'டேய் ரமேஷ் பார்ப்பண நாயே..' என்று என் பக்டிவில் பின்னூட்டம் இருந்தது என்பது முழுக்க முழுக்க உங்கள் கற்பனை. எனது பதிவுக்கு தினமும் விசிட் அடிக்க்ம் நண்பர்களுக்கு இது தெரியும். (இனிமேல் வரும் என்பது எதிர்பார்த்தது தான்!). இது வரை மற்ற வலைப்பதிவுகளை பார்த்ததே கிடையாது என்று துண்டு போட்டு சத்தியம் செய்த நீங்கள், இப்போது திடீரென எனது வலைப்பதிவு குறித்து பேசியதிலிருந்தே தெரியவில்லையா, நீங்கள் தமிழ் மணத்தில் பழம் தின்று கொட்டைஅயையும் முழுங்கியவர் என்று?! இன்னும் ஏன் இந்த வேஷம்?! அதே போலா டேய் பார்ப்பண நாயே என்று எந்த நாயாவது (நாய்க்குலம் மன்னிக்க!) என் பதிவில் பின்னூட்டம் இடுமானால் , அந்த இழி குல ஈனப்பிறவி குறித்து நான் கவலைப்பட வேண்டிய விஷயமில்லை. மூர்த்தி வார்ததைகளை கவனமாக கையாண்டிருந்தார் என்பது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அதான் பூனை வெளியில் குத்தித்து விட்டதே. இனிமேல் வேறு பெயரில் வந்து ஜல்லயடித்தால் தான் உண்டு. நான் எதற்குமே கோபப்படமாட்டேன், கெட்ட வார்த்தைகள் என்க்கு வரவே வராது என்று இங்கே தான் ஒரு நூறு பின்னோட்டங்களுக்கு முன்னர் கூறியிருந்தவர் அவர். அதைக் கூட பின்பற்ற முடியவில்லை. வேறு என்ன சொல்வது?! உங்களுக்கெல்லாம் சரக்கு தீர்ந்து விட்டால் கடைசியாக வீட்டிலுல்லாவர்களையெல்லாம் இழுத்து திட்டுவீர்கள், அல்லது பார்ப்பன நாயே என்று திட்டுவீர்கள். உங்களுக்கு தான் ஜாதியே கிடையாதே.. அப்புறம் எதுக்கு பார்ப்பணன் என்று திட்ட வேண்டும்?! இந்த லாஜிக்கெல்லாம் தெரிந்தால் நீங்கள் ஏன் இப்படி இருக்க போகிறீற்கள்?! ஜாதி இல்லை என்று கூறி தமிழில் என்னவிதமான கெட்ட வார்த்தைகள் இருக்கிறதோ அத்தனையும் சாக்கடை வாயிலிருந்து கொட்டுவதை விட ஏதேனும் சரக்கு இருந்தால் விவாதிக்க முன் வாருங்கள்.

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 349

வசந்தன்(Vasanthan) said...

இதுதான் 350 ஆவது பின்னூட்டம்.
நாநனூறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

dondu(#11168674346665545885) said...

350th comment.
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள் வசந்தன், என்னை ஒரு நிமிட வித்தியாசத்தில் வென்றீர்கள். 400-வதையும் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ். ஆனால் ஒரு வேண்டுகோள். இட்லி வடையில் கும்மா குத்தியது போல இங்கே வேண்டாம். வரும்போது வரட்டும்.
மற்று கருத்தினராயிருப்பினும் மூர்த்தி மற்றும் துர்வாசனுக்கு நன்றி. சும்மா சொல்லப்படாது, நல்ல உழைப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

//ஆனால் தமிழில் படித்தால் தமிழ்நாட்டில் மட்டும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட முடியும். இது ஒரு கசப்பான உண்மை. //

நிச்சயமாக இல்லை நான் 12ம் வகுப்பு வரை முழுக்க முழுக்க தமிழ்முறையில் பயின்றவன் தான், நான் மட்டுமல்ல இன்று பெங்களூரிலே, வெளிநாடுகளிலே இருக்கும் பல மென்பொறியாளர்கள் தமிழ்வழிக்கல்விபயின்றவர்கள் தான், எனக்கு இந்தியில் சலோ மட்டுமே தெரியும், அது கூட ஹைதராபாத்தில் வேலை செய்தபோது, தமிழ் மட்டும் நன்றாக பேசத்தெரிந்த ஆங்கிலத்தை புரிந்துகொள்ள மட்டுமே தெரிந்த எனக்கு பெங்களூரிலே இருந்த சில ஆண்டுகளில் ஓரளவு கன்னடமும், செகந்திராபாத்திலிருந்த சில மாதங்களில் ஓரளவு தெலுங்கும் பேசத்தெரிந்து கொண்டேன், அதற்காக என்னை பள்ளியிலேயே தெலுங்கும் கன்னடமும் கற்றுக்கொள்ள சொல்வதைப்பேன்றதுதான் இங்கு பள்ளியிலேயே இந்தி கற்றுக்கொடுக்க வேண்டுமென்பது.

மேலும் இந்தி படித்தால் வேலைகிடைக்குமென்பது தான் உலகிலேயே அடிக்கப்படும் மிகப்பெரிய ஜல்லி, இந்திபடித்தால்தான் வேலை கிடைக்குமென்றால் உத்திரபிரதேசம்,மத்தியபிரதேசம்,பீகார்,ராஜஸ்தான் போன்ற இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டமே இல்லையா?

நேரடியாக சொல்கின்றேன் இந்தி மக்களின் மேலதிகார உயர்வு மனப்பான்மையும் இந்தி எதிர்ப்புக்கு முக்கிய காரணம், இந்தி பேசும் அடித்தட்டு மக்களுக்கு கூட ஒரு மேலதிகார மனப்பான்மையுண்டு, பெங்களூரிலே வேலை செய்யும் தமிழர்கள்,தெலுங்கர்கள் எல்லோருமே கன்னட மொழியிலே ஓரளவு பேசவோ புரிந்து கொள்ளவோ செய்கின்றனர், ஆனால் எத்தனை இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இதை செய்கின்றனர், இதைப்பற்றி ஒரு நாள் என்னோடு வேலை செய்த இந்தியை தாய்மொழியாக கொண்டவரிடம் கேட்டபோது அவர் கொடுத்த பதில் "why should I learn Kannada? Hindi is a national language every body in India must learn Hindi?"
இது ஒரு சிறு உதாரணம் தான் இந்தி பேசும் மக்களின் மேலதிகார மனப்பாண்மைக்கு.

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்களே, நானும் தமிழ் மீடியத்தில் படித்தவன்தான். அதுவா பிரச்சினை? ஒரு குழந்தையின் தாய் தந்தையரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் குழந்தைக்கு எந்தக் கல்வி சிறந்ததோ அதையே அளிக்க முற்படுவார்கள். அமைச்சர் அன்பு மணியும் அதையே செய்தார். இப்பதிவில் கூற வந்தது என்னவென்றால் அப்படிப்பட்டத் தலைவர்களின் பேச்சை இம்மாதிரியான விஷயத்தில் கேட்காதீர்கள் என்பதே. ஏனெனில் மற்றவர்களிடம் தமிழ் தமிழ் என்றெல்லாம் ஜல்லியடிப்பார்கள். அவர்கள் குழந்தைக்கு தமிழ் சரியாக எழுதக்கூட வரப்போவதில்லை என்பதே உண்மை.
உங்கள் கண்டுபிடிப்பை அமைச்சர் அன்பு மணியிடம் சென்று கூற முடியுமா? தில்லியில்தான் தமிழ் கல்விக் கழகத்தின் பத்து பள்ளிகள் உள்ளனவே. அதில் பீசும் ரொம்பக் கம்மிதானே. இரு குழந்தைகளுகும் சேர்த்து மாதம் வெறும் 21.20 ரூபாய்கள் மட்டுமே என்பது தெரியுமா?
சரி, இப்போது நீங்கள் தமிழ் நாட்டில் வேலை செய்து இம்மாதிரி சம்பளம் வாங்கும் பட்சத்தில் உங்கள் குழந்தையைத் தமிழ்ப்பள்ளியில் சேர்ப்பீர்களா? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். நீங்கள் சேர்த்தாலும் உங்கள் மனைவியார் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? யோசியுங்கள் ஐயா. நீங்கள் படித்தப் போது உங்கள் ஊரில் என்ன வசதி இருந்ததோ யாருக்கு என்ன தெரியும்?

இப்போதைய வசதி இருந்திருந்தால் தங்கள் பெற்றோர் என்ன செய்திருப்பார்கள் என்று யோசியுங்கள். அப்போது செய்தது கட்டாயத்தின் பேரில், விரும்பி அல்ல. சில லட்சிய இளைஞர்கள் தலைவர்கள் பேச்சைக் கேட்டு எம்.ஏ. தமிழ் படித்து பிறகு வருந்தியது தெரியுமா? கமலுக்கு பொறுப்புணர்ச்சி வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள் அரசியல் தலைவர்களுக்கு அதை ஏன் எதிர்பார்ப்பதில்லை? அவர்கள் நிலைப்பாட்டை விளக்க மட்டும் வந்து விடுகிறீர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

மாயவரத்தான் said...

//எது எப்படி இருப்பினும் அவர்களின் பதிவுகளைப் படிக்காது நான் இங்கு கருத்து சொல்வது முறையன்று//

//இதுவரையில் மற்ற வலைப்பதிவுகள் படித்தது இல்லை என்று எந்த இடத்தில் சொன்னேன் என உங்களால் நிரூபிக்க முடியுமா? //

dondu(#11168674346665545885) said...

மனைவியார் = மனைவி அவர்கள் (ஒரு மனைவியைத்தான் மரியாதையாகக் குறிப்பிட்டேன்)
மனைவியர் என்றால் மனைவிகள் என்று பொருள். இது பன்மை. ஆனால் நான் குறிப்பிட்டது ஒருமை, அதுவும் மரியாதையுடன் குறிக்கப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

அதி புத்திசாலி என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளுபவர் தானே.. நல்ல வேளை மனைவியார் என்று சொன்னதற்கு எதற்காக மனைவி யார் என்று கேட்கிறீர்கள் என்று கேட்காமல் விட்டரே!

மாயவரத்தான் said...

இதோ முகமூடி பதிவிலே நண்பர் திருமலை உங்களை தேடுறாரு போங்க சார்..!

மாயவரத்தான் said...

ஸாரி மூர்த்தி அவர்களே.. பின்னோட்டம் என்ற பெயரில் நீங்களிட்ட கடுஞ்சொற்களைக் கண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் உங்கள் பெயரை இழுத்தது எனது தவறு தான். அப்படியெல்லாம் கடுஞ்சொற்களை கண்டவரிடம் வாங்க வேண்டும் என்று என் தலை எழுத்தா என்ன? நீங்கள் மற்றொரு பெயரில் இங்கு வந்து பின்னோட்டமிட்டிருக்க கூடும் என்ற யூகத்தின் அடிப்படையில் தான் அப்படிக் கூறினேன். அப்படி இல்லையென்றால் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அப்படி கீழ் தரமாக விமரிசனம் செய்வதுடன் துப்பாக்கியெல்லாம் தூக்கி வந்தவரை நோக்கி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் நடந்து கோண்டிருக்கின்றன. எனவே இது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற விரும்பவில்லை. கருத்துகள், மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதை நாகரிகமாக விவாதிப்பது எப்போதுமே நலம். வார்த்தைகள் தடித்து அடுத்தவரை மாங்காய் மடையானாக கருதும் தன்மை இல்லாதவரை அன்பும், சகோதரத்துவமும் எங்குமே தழைத்தோங்கும். எங்கள் நம்பிக்கை எங்களுக்கு. உஙள் நம்பிக்கை உங்களுக்கு. அதை அப்படியே மெயின்டைன் செய்வது தான் சாலச்சிறந்தது. அதை விடுத்து தான் ஏதோ உலக மகா புத்திசாலி போல அடுத்தவருக்கு கருத்து சொல்வதும், அடுத்தவரை பொதுவிலேயே மண்டையில் மசாலா கிடையாதா என்று கூறுவதெல்லாம் படித்தவருக்கு அழகே இல்லை. அடுத்ட நொடியே அதை விட தடித்த வார்த்தைகள் உங்களை நோக்கி வீசப்பட்டால் நஷ்ட்டம் யாருக்கு. இதை உங்களை நோக்கி மட்டும் சொல்லவேயில்லை மூர்த்தி அவர்களே. பொதுவாக சொல்கிறேன். நல்ல கருத்துகளோடு வாருங்கள்...விவாதிப்போம். உங்களுக்கு பிடிக்காத கருத்துகளாக இருந்தால் பொறுமையாக எடுத்துரைங்கள். அதை விடுத்து தனி மனித தாக்குதலிலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை மட்டுமோ தாக்குவதை தவிருங்கள். அப்படி எதுவும் கட்டாயமாக தாக்க நினைத்தால் உங்கள் பதிவில் அதை வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு சவுகரியப்பட்டால் அங்கே வந்து பதில் தருகிறோம். ஓ.கே.வா?! (ஆளாளுக்கு கருத்து கந்தசாமியா உலவிக்கிட்டிருக்காங்க.. என் பங்குக்கு இப்படி ஒரு நீண்ட விளக்கம். டோண்டு சார், கோச்சுக்காதீங்க!)

dondu(#11168674346665545885) said...

எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை மாயவரத்தான் அவர்களே. மிக சமநிலையில் அழகாக உங்க்ள் கருத்துக்களை கூறினீர்கள். நான் கூற நினைத்ததை நீங்கள் கூறியதால் எனக்கு வேலை மிச்சம். என் வக்கீல் நண்பர் கூறிய ஆலோசனையின் பேரில் எல்லா பின்னூட்டங்களும் என்னுடைய ஜி மெயில் ஆர்கைவ்ஸில் ஹெடர்ஸுடன் அப்படியே உள்ளன. என்னிடம் விசாரணைக்கு போலீஸார் வருவார்கள். அவர்களிடம் கொடுத்தால் துர்வாசனைக் கண்டு பிடிப்பது பிரச்சினையானக் காரியமே இல்லை. நண்பர் திருமலைக்கு நன்றி. உங்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.

என் உள்ளம் கவர்ந்த கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதன் எனக்காக எல்லாவற்றையும் பார்த்து கொள்வான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஈழநாதன்(Eelanathan) said...

நன்றி மாயவரத்தான் மற்றும் டோண்டு
இந்தி தெரிந்தால் தான் இந்தியா முழுவதும் பிழைக்க முடியுமென்பது இந்தியாவுக்கு வந்திராத எனக்கே குண்டுச் சட்டிக்குள் நீங்கள் ஓட்டும் குதிரையாகத் தான் தெரிகிறது.கேரளாவிலோ கர்னாடகாவிலோ கல்கத்தாவிலோ இந்தியையோ ஆங்கிலத்தையோ முழுமையாக வைத்துக் கொண்டு உங்களால் வாழமுடியாது.ஒப்புக்கு ஆங்கிலப் பாவனையை ஏற்றுக் கொள்ளலாம். எங்கே இந்திக்காரரிடம் போய் அவர்கள் எல்லோரும் கட்டாயம் ஆங்கிலம் படித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறிப்பாருங்கள்.

நான் குளிப்பது பற்றிக் கூறியது தூய்மையை மொழியின் தூய்மையைக் குறிப்பதற்காக.ராமதாஸ் அதனைப் பேணவில்லை என்பதற்காக நாங்களும் பேணமுடியாது என்பது எவ்வகை நியாயம்.மாயவரத்தான் பிறமொழிக் கலப்பு என்பது கூட மொழியைப் பொறுத்தளவில் நோய்தான் எனது ஒப்பீட்டில் எந்தவிதத் தவறுமில்லை.

dondu(#11168674346665545885) said...

"எங்கே இந்திக்காரரிடம் போய் அவர்கள் எல்லோரும் கட்டாயம் ஆங்கிலம் படித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறிப்பாருங்கள்."
இந்திக்காரன் ஆங்கிலம் படிக்கிறான் இல்லை நாசமாகப் போகிறான். இதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ஈழநாதன் அவர்களே. நாம் நம் வேலையைப் பார்ப்போம். அன்புமணிக்கு நீங்கள் கூறிய விளக்கங்கள் தெரியாதா? இருந்தாலும் அவர் ஏன் அவற்றைக் கடைபிடிக்கவில்லை? அவர் ஒரு தந்தை. தன் குழந்தைகளுக்கு எது நல்லது என்று தெரிவு செய்து கொண்டு அதன்படி நடக்கிறார். நான் என்ன கூறினேன் என்றால் அன்புமணியை இவ்வாறு யதார்த்தமாக நட்ந்து கொள்வதில் பின்பற்றுங்கள் என்றுதான். என் பதிவை மறுபடி படித்து பாருங்கள்.

"நான் குளிப்பது பற்றிக் கூறியது தூய்மையை மொழியின் தூய்மையைக் குறிப்பதற்காக.ராமதாஸ் அதனைப் பேணவில்லை என்பதற்காக நாங்களும் பேணமுடியாது என்பது எவ்வகை நியாயம்.மாயவரத்தான் பிறமொழிக் கலப்பு என்பது கூட மொழியைப் பொறுத்தளவில் நோய்தான் எனது ஒப்பீட்டில் எந்தவிதத் தவறுமில்லை."

நீங்கள் கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கும். வெளியே நல்ல மழை பொழிய, வீட்டுக்குள் உட்கார்ந்து விஸ்கி அடித்துவிட்டு உணர்ச்சியுடன் புலம்புவதற்குத்தான் பயன்படும். அதற்குள் வீட்டம்மா வந்து "நாளைக்கு தெருக்கோடி கான்வென்டில் நம் குழந்தைகளுக்கான அட்மிஷன் டெஸ்ட். நேரத்தை வீணாக்காது குழந்தைகளைத் தயார் செய்வோம் என்று கூறினால் விவாதத்தை முடித்து கொண்டு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்புவர்.

நான் கூறுவதை ஒத்து கொள்ளாவிட்டால் நீங்களே ஒரு முயற்சி செய்யுங்கள். எப்படியாவது உங்கள் குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அனுப்பி, தனித்தமிழ் பள்ளிகளில் சேர்த்து விடுங்கள். அவர்களாவது பிறமொழிக் கலப்பில்லாது தமிழ் படிக்கட்டும். இதற்கிடையில் சராசரித் தமிழர்கள் அன்புமணி சாரைப் பின்பற்றி எங்கள் வேலையைப் பார்த்து கொள்கிறோம்.

ஒரு சின்ன உண்மை நிகழ்ச்சியுடன் என் இப்பின்னூட்டத்தை முடிக்கிறேன். பேராசிரியர் நன்னன் காரசாரமாக தமிழ் நாட்டில் தமிழ் கல்வி மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற கருத்தைத் தாங்கி காரசாரமாக விவாதம் செய்ய அவருடன் விவாதம் செய்தவர் "ஐயா உங்கள் பேரப் பசங்களே ஆங்கில மீடியத்தில்தான் படிக்கிறார்கள்" என்று எடுத்து காட்ட அவர் அதே மூச்சில் அது வேறு பிரச்சினை அதைப் பற்றிப் பேச இங்கு நாம் கூடவில்லை என்று கூறி விட்டார். அவரும் ப்ராக்டிகல்தான். ஆனால் என்ன இவர் கூறுவதற்காக மற்றவர்கள் முட்டாளாக வேண்டும் என்று பலரும் நினைப்பதுதான் வியப்பாக இருக்கிறது. கருணாநிதி அவர்களே தன் பேரன் ஹிந்தி படித்ததால்தான் மந்திரி ஆக முடிந்தது என்று கூறிவிட்டார், நீங்கள் என்னடாவென்றால் இப்படிக் கூறுகிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

//தில்லியில்தான் தமிழ் கல்விக் கழகத்தின் பத்து பள்ளிகள் உள்ளனவே. அதில் பீசும் ரொம்பக் கம்மிதானே. இரு குழந்தைகளுகும் சேர்த்து மாதம் வெறும் 21.20 ரூபாய்கள் மட்டுமே என்பது தெரியுமா?
//

இன்று தில்லியிலிருக்கும் எனது நன்பரோடு பேசிய பொழுது இந்த விவகாரத்தைப்பற்றியும் பேசினேன்,
டோண்டு சார் நீங்கள் தில்லியிலுள்ள தமிழ்ப்பள்ளிகள், அதனுடைய கல்விக்கட்டணம் பற்றி எழுதியிருந்தீர், ஆனால் மிக வசதியாக (அல்லது தெரிந்தோ தெரியாமலோ) அந்த பள்ளிகளின் தரத்தையும், ரிசல்ட்டைப்பற்றியும் எழுதவில்லை, நன்பரிடம் பேசிய பொழுது மேட்டர்டே பள்ளியின் தரம்,உள்கட்டமைப்பு பற்றியும் கூறினார், தமிழ்பள்ளிகளின் உள்கட்டமைப்பு தரத்தைபற்றியும் கூறினார். தமிழகத்தில் தமிழ்பாடவழி அல்லது தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிகளில் பல பள்ளிகள் நல்ல உள்கட்டமைப்போடும் தரமாகவும் உள்ளன, அந்த அளவு தில்லியில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை,அன்புமணி அவர்கள் தமிழகத்திலே இருக்கும்போது இந்த மாதிரியான பள்ளிகளில் சேர்க்காமல் இருந்தால் நிச்சயம் விமர்சனத்துக்குறியதே, ஆனால் தில்லியிலே தமிழ்வழிப்பள்ளிகள் சரியான உள்கட்டமைப்பில்லாமல், மேட்டர்டே பள்ளி அளவுக்கு தரமில்லாமல் இருக்கும்போது அன்புமணியின் செய்கையை விமர்சிப்பது சரியானதாக தெரியவில்லை.

தங்களது இந்த பதிவு பின்னூட்டங்கள் மிக நீண்டதாக ஆகிவிட்டதால் டவுன்லோட் ஆக நேரம் பிடிக்கின்றன, அதனாலும் எனது கருத்தை பதிவு செய்யவேண்டுமென்பதாலும் இது தொடர்பாக எனது பக்கங்களில் ஒரு பதிவு எழுதலாம் என உள்ளேன்.

dondu(#11168674346665545885) said...

அபார கற்பனை குழலி அவர்களே. அன்புமணி அவர்கள் தில்லி தமிழ் கல்விக் கழகப் பள்ளியை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை நானே இப்பதிவில் கொடுத்தேனே. அது இங்கு மறுபடியும்.
"ஆனாலும் ஐந்தாம் வகுப்பு வரை மேட்டுக்குடியினர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் படிக்கவைத்து ஆறாம் வகுப்பு வரும் போதுதான் இங்கு வருகின்றனர். அப்போதும் தமிழை எடுக்காமல் குழந்தைகள் ஹிந்தி எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த நிலை? முதல் ஐந்து வகுப்புகளில் தில்லியில் வீட்டுவேலை செய்யும் சேலத்துக்காரர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். சொல்லிவைத்தால் போல் அவர்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்பதை ஆறாம் வகுப்பு வரும்போது கைவிட்டு விடுகின்றனர்." ஆக இதற்கு காரணம் மேட்டுக்குடி மனப்பான்மையே. வேறு ஏதும் இல்லை.

டி.டி.இ.ஏ. பள்ளிகளில் தரம் குறைவு என்று யார் ஐயா கூறியது? நான் 20 வருடம் தில்லியில் இருந்தவன். ஒவ்வொரு வருடமும் இப்பள்ளிகளிலிருந்து ரேங்கில் மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

உங்கள் வாதத்துக்கே வருவோம். அன்புமணி அவர்கள் என்ன நிரந்தர தில்லி வாசியா? தமிழகத்துக்குத்தானே வந்தாக வேண்டும்? இங்குதான் நல்ல தரமான தமிழ்ப் பள்ளிகள் உள்ளனவே. தாத்தா வீட்டில் ஆள்படையில்லையா? இங்கு தமிழ்ப் பள்ளியில் சேர்ப்பதுதானே?

மறுபடி கூறுவேன், அன்புமணி ப்ராக்டிகலாக நடந்து கொண்டிருக்கிறார். அவரைப் போய் அவ்வாறு நடக்கக் கூடியவர் அல்ல என்றெல்லாம் கூறி அவர் ஒரு நல்லதந்தை இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடாதீர்கள். அது சரி, உங்கள் குழந்தைகளையாவது தமிழகத்தில் உங்கள் மாவட்டத்திலேயே படிக்க வைப்பதுதானே.

தயவு செய்து எல்லாவற்றுக்கும் சப்பைக்கட்டு கட்டாதீர்கள். நான் கூறிய செய்தி: அன்புமணியைப் போல ப்ராக்டிகலாக இருங்கள். அவர் தந்தை செய்யும் போராட்டங்களில் உங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைத்தால் கலந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவரவர் குடும்பங்களைப் பார்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தொண்டன் அடிப்பட்டு சாவான். அன்புமணிகள் மந்திரிகள் ஆவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அவர் மத்திய அமைச்சராக இருப்பதால் செக்கியூரிட்டி ரீசன்ஸ் இருக்கலாம்..

வீட்டில் குழந்தைகள் தமிழில் தானே பேசப்போகின்றன, பள்ளியில் படித்தால் மொழி அறிவு தானே வளரப்போகிறது என்ற எண்ணம் இருக்கலாம்.

அல்லது டெல்லியில் செட்டிலாகும் எண்ணம் இருக்கலாம்..அல்லது பிள்ளைகளை மத்திய அரசியலில் இறக்கும் திட்டம் இருக்கலாம்...

எவ்ளோ லாம் போட்டாலும், எனக்கு தோன்றுவது, அவர் புள்ளைங்கள எங்கன படிக்கவெச்சா நமக்கென்ன டோண்டு ராகவன் அவர்களே ?

dondu(#11168674346665545885) said...

//எவ்ளோ லாம் போட்டாலும், எனக்கு தோன்றுவது, அவர் புள்ளைங்கள எங்கன படிக்கவெச்சா நமக்கென்ன டோண்டு ராகவன் அவர்களே?//
நான் அதைத் தவறா சொல்லல்லியே. உண்மை கூறப்போனா அவரை மாதிரி எல்லா தொண்டர்களுமே நல்ல தந்தையா இருக்கணும்னு சொல்றதுதான். இப்படிப்பட்ட தலைவர்கள் பொதுமக்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளை தமிழிலேதான் படிக்க வைக்கோணும்னு ஜல்லியடிக்கும்போதுதான் இம்மாதிரி பேச்செல்லாம் வரும். அதுக்கெல்லாம் கோபப்பட்டால் முடியுமா?

நானே பதிவு போட்டிருக்கேனே அன்புமணி அவர்கள் சிறந்த தந்தைன்னு.

//வீட்டில் குழந்தைகள் தமிழில் தானே பேசப்போகின்றன, பள்ளியில் படித்தால் மொழி அறிவு தானே வளரப்போகிறது என்ற எண்ணம் இருக்கலாம்.//
அப்ப ஊராருக்கெல்ல்லாம் உபதேசம் பண்ணக்கூடாது தெரிஞ்சுதா? அவங்க பண்ணாங்க ஆகவே இந்தப் பதிவு.

இதுல ஒரு வேடிக்கை என்னன்னா, இந்தப்பதிவு திடீர்னு இப்ப வரும்னு எதிர்ப்பார்க்கவில்லை. நான் செய்ததெல்லாம் வெறும லேபல் போட்டதுதான்.

இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் தமிழ்மணத்தை இன்னும் பீடித்து வரும் போலியாரின் வரவுக்கான அறிகுறிகளைப் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Oru jathi Arasiyalvathiya Nallavan solla-poi ivvalavu bejar ai pochu!
jathi Arasiyavathi ellarume kettavangathanya!

Anonymous said...

///இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் தமிழ்மணத்தை இன்னும் பீடித்து வரும் போலியாரின் வரவுக்கான அறிகுறிகளைப் பார்க்கலாம்.///

வீரப்பனை வீரப்பர் என்று கூறுவது போலவா இது ஹா ஹா ஹா !!!

dondu(#11168674346665545885) said...

//வீரப்பனை வீரப்பர் என்று கூறுவது போலவா இது ஹா ஹா ஹா !!! //

சரி உங்க ஆசையைக் கெடுப்பானேன். போலியன் அப்படின்னே வச்சுண்டா போச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

என்னோட மருமானை பத்தியா பேசரீங்க

«Oldest ‹Older   201 – 250 of 250   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது