11/05/2005

நாளை உலகம் அழிந்தால்

நாட்டாமை அவர்கள் என்னுடை அப்புசாமி பதிவில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவே இப்பதிவு போடப்படுகிறது. பதில்கள் கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் தமாஷ்.

"1.உங்கள் ரசனை ஏன் எப்படி வித்யாசமாக இருக்குது?அது என்ன சோ,இஸ்ரேல் அப்படின்னு வில்லங்க பார்ட்டியாவே புடிக்குது உங்களுக்கு?"
சோ சம்பந்தமாக நான் இட்ட இந்தப் பதிவையும் அதன் பின்னூட்டத்தையும் பாருங்கள்.
இஸ்ரேலை பற்றி நான் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். என் ஆர்கைவ்ஸில் அவை படிக்கக் கிடைக்கும். இருப்பினும் உங்கள் கேள்விக்கான நேரடி பதிலை இங்கு இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.

கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.

ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் (அவர் ஒரு ஜெர்மானியர்) திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே."

2.உங்கள் கையில் ஒரு துப்பாக்கி,ஒரு ரவை உள்ளது.போலிடோண்டு மற்றும் ஒசாமா பின்லாடன் இருவரும் எதிரில் உள்ளனர்.யாரை சுடுவீர்கள்?
கண்டிப்பாக பின் லேடனைத்தான். போலி டோண்டு யார் என்பது எனக்குத் தெரியும். அவர் எழுதும் தமிழ் நடை பிடிக்கும். என்னை குறிவைத்து அவர் எழுதிய சில நையாண்டிகளுக்கு நானே சிரித்துள்ளேன்.

3.சோவுக்கு அப்புறம் துக்ளக் என்ன ஆகும்?
அந்தக் கவலை எனக்கும் உண்டு.

4.போலிடோண்டு உங்களை விட சிறப்பாக எழுதுவதாக பலரும் சொல்கிறார்களே.உண்மையா?
அவருக்கு எழுதுவது நன்றாக வருகிறது. தொழில் நுட்ப அறிவுடையவர்.

5.நாளை உலகம் அழியபோகிறது என்று வைத்துகொள்ளுங்கள்.அப்போது என்ன தலைப்பில் பின்னூட்டம் இடுவீர்கள்?
இப்பதிவின் தலைப்பையே வைத்து விட்டால் போகிறது. என்ன செய்வேன் என்று கேளுங்கள். இந்த நீதிக்கதையை கூறி இதனால் அறியும் நீதி யாது எனக் கேட்பேன். ஏதோ போகும் வழிக்கு புண்ணியம்.

6.பம்பாய் போனேன் என்று சொன்னிர்களே.நீங்கள் பம்பாய் போனதற்கு ஆதாரம் என்ன?எப்படி நம்புவது?
இதற்காக என் மூன்றரை வருட வாடகை ரசீதுகள், கன்ஸர்ன்ஸ் ரசிதுகள் எல்லாவற்றையுமா காட்ட முடியும்?

7.சொந்தகார் யாரும் வைத்துகொள்ள வேண்டாம் என்று எழுதியுள்ளீர்களே?மாருதி கார்கம்பனி காரன் பாவமில்லையா?ஜப்பான்காரன் பாவம் உங்களை சும்மா விடுமா?
நான் கூறும் வழி சுற்றுப்புறச் சூழல் கெடாமலிருக்கும் வழி. பிற்காலத்தில் சொந்தக் கார்கள் தடை செய்யப்படும் காலம் வந்தாலும் வியப்படைவதற்கில்லை.

8.நீங்கள் பிரதம மந்திரியாக மாறினால் என்ன சட்டம் முதலில் போடுவீர்கள்?
தலைவலி பிடிச்ச வேலை, நமக்கெதற்கு?

9.உங்களுக்கு பிடித்த blog எது?ஏன்?
வெங்கட், பத்ரி ஆகியோரது பதிவுகள் உள்ளடக்கங்களுக்காக, என்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவு திருவல்லிக்கேணி நினைவுகளுக்காக, நேசமுடன் வெங்கடேஷின் பதிவு அவர் தெளிவான நடை காரணமாக, இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

10.அது என்ன உங்கள் போட்டோவில் அப்படி ஒரு புன்சிரிப்பு? smile please என்று சொன்னதற்கு இவ்வளவு சிரிப்பா? அது என்ன பாஸ்போர்ட் எடுக்கும்போது எடுத்த போட்டோவா?
என் நங்கநல்லூர் நண்பர் பத்ரி நாராயணன் என்னை வெப் காமெராவில் எடுத்த போட்டோ அது. தர்சன் அவர்களின் சகோதரி மாற்றம் செய்த என் படம் இதோ:"hi hi....சும்மா டமாசு பண்ணினேன். நான் என்றும் உங்கள் ரசிகன்."
பிரச்சினையேயில்லை. உங்கள் கேள்விகளை நான் மிகவும் ரசித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

நாட்டாமை said...

சோ பற்றிய பதிவு சூப்பரோ சூப்பர்.10 கேள்விக்கும் தனி இழையில் பதிலளித்தமைக்கு டாங்கிஸு.சோவின் அருமை அவர் இல்லாமல் இருந்தால் தான் தெரியும்.அவர் தமிழனின் சொத்து.

சோவை பாராட்டி பின்வரும் கவிதையை எழுதுகிறேன்

சோவென்று மழை பெய்ய
சோவே காரணம்
எல்லாரும் சோக்கா இருக்கணும்னா
சோ பேச்சு கேளுங்க

J. Ramki said...

அட, மந்தவெளி மன்னாரு! ஷோக்கா இருக்குதுபா!

dondu(#11168674346665545885) said...

நன்றி நாட்டாமை அவர்களே. நான் காஷ்மீரைப் பற்றி எழுதிய நீதிக்கதை எப்படியிருந்தது?

நன்றி ரஜினி ராம்கி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாட்டாமை said...

காஷ்மிர் பதிவு சரியான லொள்ளு பதிவு.

ஆண் பெண் கற்புனிலை பதிவு சரியான ஜொள்ளு பதிவு

மந்தவெளி மன்னாரு போட்டொ ஒரு லல்லு பதிவு

மொத்ததில் சூப்பரப்பு

Vaa.Manikandan said...

photo nalla keethu pa!

dondu(#11168674346665545885) said...

நன்றி நாட்டாமை மற்றும் மணிகண்டன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டி ராஜ்/ DRaj said...

டோன்டு அவர்களே:

உங்களில் கருத்துக்கள் பல எனக்கு எற்புடையவை இல்லை எனினும், உங்களின் பதிவுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

உங்களை நோக்கி எறியப்படும் கண்டனங்களையும் நீங்கள் ரொம்ப இயல்பாக எதிர்கொள்கிறீர்கள்.

உங்களின் பன்மொழி புலமையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இன்னும் பல வருடங்கள் தமிழ்மணத்தில் பதிவுகள் இட வாழ்த்துக்கள்

dondu(#11168674346665545885) said...

நன்றி டி ராஜ் அவர்களே,

கருத்துக்கள் மாறுபடுவதே வாழ்க்கை. நான் கூறியது எல்லாவற்றையும் எல்லோரும் எப்போதும் ஒப்புக்கொண்டுவிட்டால் எனக்கே என் கருத்து சரிதானா என்பது குறித்து ஐயம் வந்து விடும். வாழ்க்கையும் ருசிக்காது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது