11/13/2005

இரா முருகனுக்கு நன்றி

இரா முருகன் அவர்கள் சில வாரங்களுக்கு முன்னால் என்னுடன் தொலை பேசினார். என்னுடைய பக்கவாட்டுச் சிந்தனை (lateral thinking) அடிப்படையில் நான் கேட்டிருந்த ஒரு புதிரை தன்னுடைய ப்ராஜக்ட் M -ல் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டார். எனக்கு கசக்கவா செய்யும்? அதுவும் என்னுடைய அபிமான எழுத்தாளரே கேட்கும்போது? சந்தோஷமாக அனுமதி கொடுத்தேன். இன்றைய தினமணி கதிரில் வந்துள்ளது. இந்தப் பக்கத்தில் அதை பார்க்கலாம். விக்ரம் பற்றியக் கேள்வியுடன் கூட வந்த மற்றக் கேள்விகளை இப்பதிவில் பார்க்கலாம். (அப்பதிவில் நான் உபயோகித்தப் பெயர் ராமமூர்த்தி, இருப்பினும் விக்ரம் இன்னும் பொருத்தமாகவே உள்ளது. கேள்வி ரைமாக வருகிறது.)

தினமணி பக்கங்களை பார்க்கும்போது முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று. அதாவது இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் பார்ப்பதை விட Firefox-/ பார்ப்பது நலம். என்கோடிங் ஐ.எஸ்.ஓ. 8859-1 என்று இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

துளசி கோபால் said...

வாழ்த்துக்கள் டோண்டு!

வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷியா...? பேஷ் பேஷ்

dondu(#11168674346665545885) said...

நன்றி துளசி அவர்களே. தினமணி கதிர் கட்டுரையை படிக்க முடிந்ததா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

அன்புள்ள டோண்டு,

தினமணிக்கதிர் நான் வழக்கமாகப் படித்துவருவதுதான். அதனால் கஷ்டம்( படிக்க) ஏதுமில்லை.

மணியன் said...

வாழ்த்துக்கள். திரு இரா.முருகனும் உங்கள் கேள்வியை நன்றாக கட்டுரையில் கொண்டு வந்திருக்கிறார்.

dondu(#11168674346665545885) said...

"திரு இரா.முருகனும் உங்கள் கேள்வியை நன்றாக கட்டுரையில் கொண்டு வந்திருக்கிறார்."

நிச்சயமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது