இத்தனை நாளாக நானாயிற்று இகலப்பையாயிற்று என்று இருந்து விட்டேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ர்ப்பு வேலைகள் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் ஒருங்குறி எழுத்தில்தான் கோப்புகளைக் கேட்பார்கள். தஸ்கி கேட்டாலும் சமாளிக்க முடியும். Alt 1, Alt 2 மற்றும் Alt 3 என்ரு போட்டு டாகிள் செய்து கொள்ளலாம்.
ஆனால் இப்போது ஒரு வாடிக்கையாளர் வந்து பாமினியில் தட்டச்சு செய்யச் சொல்கிறார். அதையும் சுரதா பெட்டியின் தயவில்தான் செய்கிறேன். ஆனால், கோப்பிலிருந்து வாக்கியம் வாக்கியமாக இந்தப் பெட்டிக்கு கொண்டு வந்து தமிழில் தட்டச்சு செய்து அதை நகல் எடுத்து மறுபடியும் கோப்புக்குத் திரும்பிச் சென்று ஒட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
அதுவும் நேற்று இரவு நடந்ததுதான் கொடுமை. நம்முடைய நேரத்துக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் பின்னால் வாடிக்கையாளர் ஊரில் நேரம். அவருக்கு நம் நேரப்படி இன்று விடியற்காலை 3 மணிக்கு தமிழில் மொழிபெயர்த்த 6 கோப்புக்களைத் தர வேண்டியதிருந்தது. நான் மூச்சு பிடித்து வேலை செய்து நேற்று இரவு 11 மணியளவில் 6 கோப்புகளையும் அனுப்பினேன். 10 நிமிடத்துக்குள் அவரிடமிருந்து மின்னஞ்சல் சீறி வந்தது. பாதிக்கு மேல் படிக்க முடியவில்லையாம். அவர் கேட்ட பாமினி எழுத்துருவில்தானே கொடுத்தேன். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நல்ல வேளையாக அவரே என்ன பிரச்சினை என்று தெரியப்படுத்தினார். அதாவது சரியாகத் தெரியாத இடங்களில் எழுத்துருவின் பெயரைப் பார்த்தால் அது Bamini-க்கு பதில் Baamini என்று காட்டுகிறதாம். பிறகுதான் முழித்துக் கொண்டு கண்ட்ரோல் பேனலைத் திறந்து எழுத்துரு பக்கத்தில் பார்த்தால் Bamini மற்றும் Baamini இரண்டுமே இருக்கின்றன.
ஆனால் word கோப்பில் எழுத்துரு காட்டும் இடத்தில் க்ளிக் செய்து ட்ராப் டௌன் லிஸ்டைப் பார்த்தால் எல்லா எழுத்துருக்களையும் அழகாக Arial TimesRoman, TSCu_Paranar என்றெல்லாம் தெளிவாகப் போட்டிருக்க Bamini மட்டும் டீயயஅலெ என்றும் Baamini டீயயலெ என்பது போலவும் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை க்ளிக் செய்தால் முறையே Bamini அல்லது Baamini என்று சமர்த்தாக வருகின்றன. அதில்தான் நான் மயங்கி தவறு செய்தது. சிலவற்றுக்கு Bamini-யையும் பெரும்பானவற்றுக்கு Baamini என்றும் தேர்ந்தெடுத்து நகலிட்டிருக்கிறேன், ஏனெனில் நான் இரண்டையுமே பாமினி என்றே படித்திருக்கிறேன். அதிகப்படியான a என் உணர்வுக்குப் புலப்படவில்லை. மேலும், என்னுடையக் கணினியில் இரண்டு எழுத்துருக்களும் உள்ளனவாதலால் எனக்கு படிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் Bamini மட்டும் வைத்திருந்த வாடிக்கையாளர்தான் Baamini செலக்ட் செய்யப்பட்டிருந்த இடங்களில் படிக்க முடியாமல் பேய் முழி முழித்திருக்கிறார்.
பரணர் ஒருங்குறி எழுத்தில் என்ன சௌகரியம் என்றால் அது ஆங்கிலத்தையும் சப்போர்ட் செய்கிறது. ஆகவே ஆங்கிலக் கோப்புகளை முதலில் ஒட்டு மொத்தமாக பரணர் எழுத்துருவுக்கு மாற்றி விடுவேன். இகலப்பை வைத்து தட்டச்சு செய்தால் வழுக்கிக் கொண்டு வேலை ஓடும். ஆனால் பாமினி அந்த பாச்சா பலிக்காது. ஆங்கில எழுத்துக்கள் டீயயஅலெ ரேஞ்சில் குழப்பமாகி விடும். ஆகவே சுரதா பெட்டியிலிருந்து நகலெடுத்து வந்து மொழிபெயர்ப்புக்கான கோப்பிற்கு வந்து மாற்ற வேண்டிய வாக்கியத்தை மட்டும் எழுத்துரு மாற்ற வேண்டியிருக்கிறது. அதுவும் தமிழ் மொழிபெயர்ப்பில் நடுவில் ஆங்கில வார்த்தையை அப்படியே போட வேண்டுமென்றால் தொலைந்தேன். துண்டு துண்டாக பதிக்க வேண்டிய வேலை.
ஆகவே நேற்றைய பிரச்சினையைத் தீர்க்க Baamini காட்டும் இடத்திலெல்லாம் ஒவ்வொன்றாகப் போய் Bamini-க்கு மாற்ற வேண்டியிருந்தது. 11 பக்கங்களுக்கு மேல் வேலை. எல்லாவற்றையும் முடித்து, ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து 6 கோப்புகளையும் அனுப்பும்போது மணி விடியற்காலை 2.30. ஆனால் வாடிக்கையாளர் நல்லவர். பத்து நிமிடத்துக்குள் பதில் அனுப்பி, இப்போது நிலைமை ஓக்கே என்று கூறிவிட்டார். படுக்கும்போது 3 மணியாகி விட்டது. சிவா அவர்களின் பின்னூட்டங்கள் வேறு வந்து கொண்டிருந்தன. உற்சாகமாக அவற்றுக்கும் பதில் அளித்தேன் என்பதையும் இப்பதிவில் சொல்லி வைக்கிறேன். அவருக்கு என் நன்றி.
பாமினி விஷயத்தில் மேலும் சில இம்ஸைகள். சுரதா மாற்றியின் மேல் பெட்டியில் கமா அடித்தால் கீழ்ப் பெட்டியில் இ வருகிறது. அதே போல / அடித்தால் ஃ வருகிறது, சதுர அடைப்புகள் அடித்தால் முறையே ஜ மற்றும் ஸ வருகின்றன. செமிகோலன் அடித்தால் ஷெ வருகிறது. ரொம்பக் கொடுமைடா சாமி. ஆகவே கமா முதலியவற்றுக்கு மட்டும் ஏரியல் போன்ற எழுத்துருக்கள் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்போது என் சக வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
1. பாமினியை சுரதா எழுத்துரு மாற்றியில் அடிக்கும்போது கமா எல்லாம் கீழ்ப்பெட்டியில் வர என்ன செய்ய வேண்டும்?
2. இகலப்பை மாதிரி ஏதேனும் மென்பொருள் பாமினியை சம்பந்தப்பட்ட கோப்புகளில் நேரடியாக (பவர்பாயிண்ட், எக்ஸெல் ஆகியவை) அடிக்கத் தோதாக கிடைக்குமா? ஆங்கிலத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டிய இடங்களில் அப்படியே அவற்றைத் தொடாமல் தட்டச்சு செய்து காரியம் செய்து கொள்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
7 hours ago

11 comments:
டோண்டு, உங்களுக்கு ஒருங்குறி பரிச்சயமானால், இ-கலப்பை பாவித்து ஒருங்குறியிலேயே எழுதி விட்டு சுரதாவின் எழுத்துரு மாற்றிக்குச் சென்று ஒருங்குறியிலிருந்து பாமினிக்கு மாற்றி விடுங்கள்.
www.suratha.com/uni2bam.htm
வாருங்கள் Kanags அவர்களே. நீங்கள் சொன்ன யோசனையை செய்து பார்த்தேன். நான் அடித்த வாக்கியம் "அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம், what else shall I say" என்பதாகும். தமிழ் அழகாக கீழ்பெட்டியில் பாமினியில் வந்து விட்டது. கமா கூட அப்படியே வந்து விட்டது. ஆனால் ஆங்கில வாக்கியம்? ழுணஸ்ரீ என்ற ரேஞ்சில் வந்து வெறுப்பேற்றுகின்றன. &, %, = போன்றவையெல்லாம் மேல் பெட்டியில் இருந்தால் சுத்தம்தான். இந்தக் கஷ்டத்துக்கு நான் செய்ய வேண்டியதை நேரடியாகவே http://www.jaffnalibrary.com/tools/Bamini.htm உபயோகித்து செய்து விடலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"நல்ல வேளை 11 மணிக்கே வேலையை முடித்து அனுப்பியதால் அதன் பின் தப்பு ஏற்பட்டாலும் சரி செய்ய முடிந்தது."
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. நான் சாதாரணமாக ஒன்றுக்கு மேல் கோப்புகள் மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் ஒவ்வொரு கோப்பும் முடிய முடிய அனுப்பி விடுவேன். இந்த வாடிக்கையாளரோ அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும், மொத்தத்தையும் ஒன்றாக ஜிப் செய்து அனுப்பச் சொல்லிவிட்டார். இல்லாவிட்டால் முதல் கோப்பிலேயே தவறு தெரிந்து, அடுத்தக் கோப்புகளில் அதைச் செய்யாமலேயே இருந்திருக்கலாம்.
பரவாயில்லை, இதுவும் நல்ல அனுபவம்தான். இம்மாதிரி தினம்தோறும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வதால்தான் நான் அறுபது வயதிலும் இளைஞனாக இருக்கிறேன் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி தினகர் அவர்களே. உண்மை கூற வேண்டுமென்றால், என் மனதின் வயது 25ஐத் தாண்டவில்லை. ஒருமுறை என்னுடைய வீட்டம்மாவிடம் இதைக் கூற, அவர் என் மோவாயில் செல்லமாக ஒரு இடி இடித்து, "இதெல்லாம் தேவையா கிழவா" என்று கூறிவிட்டு அப்பால் சென்றார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன்: பாமினி மட்டுமல்ல, TAM, Shree-Lipi போன்ற பல mono-lingual எழுத்துக் குறியீடுகளும் இதே பிரச்னையைத் தரவல்லவை.
TAB, TSCII, Unicode எழுத்துக் குறியீடுகளில் இரண்டு மொழிகளின் (தமிழ், ஆங்கிலம்) எழுத்துக்களுக்கும் இடங்களை ஒதுக்கியிருப்பதால் ஒரே நேரத்தில் இவ்விரண்டு மொழிகளிலும் தட்டச்சு செய்யலாம்.
கஷ்டம்தான்!
///You are not old man.You are a "BOLD" man.(also gOLD man)///
தினகர்,
அடுக்கு மொழியில் அசத்தலாகச் சொல்லிவிட்டீர்கள். :-).
டோண்டு அவர்களே,
பாமினியில் நேரடியாய் தட்டச்சு செய்யலாம், ஆனால் விசைப்பலகைதான் வேறு. அதுதான் கொஞ்சம் கஷ்டம்.
சார்,
நானும் நம்ம க்நாக்ஸ் சொன்ன யோசனைப்படிதான் செய்யறேன். நீங்க சொன்னா மாதிரி ஆங்கில வாக்குகளை சேர்த்தால் பிரச்சினைதான்.
நீங்க சொன்னா மாதிரி வேர்ட்ல பாமினி எழுத்துருவோட பேரு சரியா எழுத்துரு லிஸ்ட்ல டிஸ்ப்ளே ஆகறதில்லை. அதுக்கு ஏதாச்சும் வழி இருந்தா நல்லாருக்கும்.
ஆனா ஒன்னு இந்த மாதிரி சின்ன சின்ன கஷ்டங்கள் இருந்தாத்தான் சார் வாழ்க்கையில ஒரு த்ரில் இருக்கும். இல்லன்னா வாழ்க்கை ஜவ்வு மாதிரி ஆயிரும். என்ன சொல்றீங்க?
"பாமினியில் நேரடியாய் தட்டச்சு செய்யலாம், ஆனால் விசைப்பலகைதான் வேறு. அதுதான் கொஞ்சம் கஷ்டம்."
கொஞ்சமா? Understatement of the year!
யளனகபக உபயோகித்தால் முடியும்தான். ஆனால் அது எவ்வளவு பேருக்குத் தெரியும்? நிறைய பேர் தமிழை பாவிப்பதை ஊக்குவிக்க வேண்டுமானால் ஃபோனெடிக் தட்டச்சு முறைதான் சரி. அதை வைத்து நேரடியாக பலவித கோப்புகளில் அடிக்க முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட எழுத்துருவின் நோக்கமே அடிபட்டுவிடுகிறது. அதிலும் ஆங்கில எழுத்துக்களை அது சப்போர்ட் செய்யவில்லையென்றால் கதையே கந்தல்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க ஜோசஃப். உங்கள் கன்வெர்டர் ஆ எல்லாவற்றையும் விழுங்கி ஆட்டோவை ட்டோ என்றும் ஆதி நகரை திநகர் என்றும் அடித்து அழும்பு செய்ததே? இப்போது பரவாயில்லையா? நான் இகலப்பையை வைத்து நேரடியாகவே பதிவுகளிலும் பின்னூட்டப் பெட்டிகளிலும் அடித்து விடுவதால் பிரச்சினையே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://iniyathalam.blogspot.com/2006/03/blog-post_114268231031218831.html
இது உபயோகமானால் உபயோகப்படுத்துங்கள்.தமிழ்மணத்தில் கிடைத்தது.
www.cocomment.com சரியாக வருகிற மாதிரிதான் தெரியுது. இது test comment
Post a Comment