3/19/2006

நாட்டாமை அவர்களுக்கு என் நன்றி

இன்று நாட்டாமை அவர்களிடமிருந்து ராஜாஜி குறித்த இந்த செய்திக் குறிப்பின் நகல் மின்னஞ்சலில் வந்தது.

இன்றைய தினமலர் வாரமலரில் அந்துமணி பா.கே.ப பகுதியில் இந்த செய்தியை பார்த்தாக எழுதியிருந்தார். இதை தன்னால் திறம்பட எழுத முடியாது (இது ஒத்துக் கொள்வதற்கு இல்லை) என்றும், நான் இதை எழுதினால் மிகவும் நல்ல பதிவாக சொல்வேன் (அப்படியெல்லாம் இல்லை) என்று தோன்றியதாலும் அதை எனக்கு அனுப்புவதாகக் கூறி, 'தங்கள் நாட்டாமை' என்று கையெழுத்திட்டிருந்தார் அவர்.

அவர் குறிப்பிட்டிருந்ததை நான் முன்னர் ஒரு முறை படித்திருக்கிறேன். இருப்பினும் எனக்கு இத்தனை நாள் அது நினைவுக்கு வரவில்லை. தினமலர் வாரமலரை இன்று இணையத்தில் தேடினால் நாட்டாமை அவர்கள் குறிப்பிட்டிருந்த இந்த செய்தி கிடைக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று கடைக்கு போய் வாங்கிப் பார்த்தால் இன்ற தினமலரை வாங்கிப் பார்த்தால் அதில் இருந்தது. அருமையான விஷயத்தை எனக்கு நினைவுபடுத்தியதற்கு நாட்டாமை அவர்களுக்கு என் நன்றி. தினமலர் அந்து மணி அவர்களுக்கும் என் நன்றி. இப்போது செய்திக் குறிப்புக்கு போவோமா?

அந்து மணியின் வார்த்தைகளில்:

அந்த போலீஸ் உயர் அதிகாரி பழைய காலத்து மனிதராதலால் தமக்குத் தெரிந்த, ராஜாஜி காலத்து போலீஸ் கதை ஒன்றைக் கூறினார்.

"ராஜாஜி முதலமைச்சரா இருந்த சமயம்பா... படித்த தலித் இளைஞர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க பெருமுயற்சி எடுத்துக் கொள்வார்... வகுப்பு வாரியாக அரசு வேலை தர வேண்டும் என்று விதி இருக்கிறது இல்லையா?

"ஆனா... அப்போ படிச்ச தலித் இளைஞர்கள் போதுமான அளவு இல்ல... 'அந்த உத்தியோகத்துக்கு தகுந்த தலித் அபேட்சகர் இல்ல'ன்னு காரணம் காட்டி, மேல் ஜாதிகாரர்களுக்கு அந்த உத்யோகத்தை கொடுத்துடறது வழக்கம். "ஒரு சமயம் எங்க டிபார்ட்மென்ட்ல டெப்டி சூப்ரண்டன்ட் வேலைக்கு தலித் வகுப்பின் உரிமை வந்தது. வழக்கம் போல் படித்த தலித் இளைஞர் ஒருவரும் இல்லை என்று, ஒரு மேல் ஜாதி இந்துவுக்கு வேலை கொடுக்க சிபாரிசு வந்தது.

"விடுவாரா ராஜாஜி! கில்லாடி மனுஷராச்சே... மேல் ஜாதிக்காரருக்காக வந்த சிபாரிசை ஒத்துக்காம, அப்போ சபாநாயகரா இருந்த சிவஷண்முகம் பிள்ளை மற்றும் சில தலித் தலைவர்களை கூப்பிட்டனுப்பினார்... அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, தகுதியான ஆளை கூட்டி வரும்படி பணித்தார்.

"தலித் தலைவர்கள் பி.ஏ., பாஸ் செய்த ஒரு தலித் இளைஞரை கூட்டி வந்தனர். அந்த இளைஞனை தமது அலுவலகத்திற்கு கூட்டி வரச் சொன்னார் ராஜாஜி. பின்னர், அங்கேயே அவ்விளைஞனை பரீட்சை செய்யும்படி சொன்னார். சிவஷண்முகம் பிள்ளையையும் தன் அருகிலேயே இருக்கும்படி செய்தார் ராஜாஜி. "பரீட்சை முடிந்தவுடன் ராஜாஜியிடம், "மற்ற தகுதியெல்லாம் இருக்கு. ஆனால், ஆள் ரொம்பவும் மெலிவா இருக்கிறார்... போலீஸ் உத்யோகத்திற்கு ஆள் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும்...' என்றார் போலீஸ் மேலதிகாரி.

"உடனே ராஜாஜி, "இவர் ஏழை தலித் இளைஞர். இதுவரை சரியான சாப்பாடே அவருக்கு கிடைத்திருக்காது. ஆகையால், இப்படி மெலிந்திருக்கிறார்... உத்யோகத்தை கொடுத்தால், சந்தோஷத்திலேயே சீக்கிரம் பருத்து விடுவார்!' என்று சொல்லி, அந்த தலித் இளைஞனுக்கு வேலை கொடுத்தார்.

"ராஜாஜி சொன்னது போலவே தான் நடந்தது. உத்யோகம் ஏற்றுக்கொண்ட ஆறு மாதத்திற்குள் கட்டிப்பிடிக்க முடியாதபடி பருத்து போய் விட்டார் அவ்விளைஞர். மிகத் திறமையான போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின்னாளில் சென்னை நகர போலீஸ் கமிஷனராகவும் ஆகி விட்டார் அவ்விளைஞர். அவர் வேறு யாருமல்ல... சிங்கார வேலு தான்...' என்று முடித்தார். விஷயத்தைக் கேட்டதும் புல்லரித்து விட்டது. (நன்றி: தினமலர், மார்ச் 19.2006 இதழுடன் இணைந்துள்ள வார மலர், பக்கம் 8)

இப்போது மறுபடியும் டோண்டு:

இம்மாதிரி பெருந்தன்மையான நடத்தைகளுக்கு ராஜாஜி அவர்கள் பிரசித்தி பெற்றவர். என்ன இருந்தாலும் மகாத்மா காந்தி அவர்களின் சம்பந்தி அல்லவா?

மீண்டும் என் நன்றி நாட்டாமை அவர்களுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

ஜோ / Joe said...

டோண்டு சார்,
உங்களை நான் கோட்சே ரசிகன் என்றல்லாவா நினைத்திருந்தேன்!

dondu(#4800161) said...

அப்படியெல்லாம் இல்லை என்று இப்போதாவது தெரிந்து கொண்டால் சரிதான்.

ராஜாஜியும் காந்திஜியும் சம்பந்திகள் என்பதே பலருக்கும் புதிய செய்தியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

ராஜாஜியின் மகள் லட்சுமியும் காந்திஜியின் மகன் தேவதாசும் காதல் வயப்பட்டப் போது பெரிசுகள் இருவரும் ஒரே மாதிரி ரியேக்ட் செய்தனர். காதலை ஒத்துக் கொண்டாலும் அது உண்மையானக் காதல்தானா என்பதை உறுதி செய்ய வேண்டி பல பரீட்சைகள் வைத்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருவரை ஒருவர் பார்த்து பேசக் கூடாது என்றெல்லாம் தடை விதித்தனர். இளையதலைமுறையினரான இந்த இருவரும் அச்சோதனைகளையெல்லாம் வென்றனர்.

தேவதாஸ் மற்றும் லட்சுமி ஆகிய இருவருக்கும் பிறந்தவர் ராஜ்மோகன். காந்திஜி மற்றும் ராஜாஜி அவர்களின் பேரன் என்ற பெருமையுடையவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாட்டாமை said...

டோண்டு அவர்களே,

ராஜாஜி மிகப்பெரும் தேசபக்தர்.மாபெரும் சுதந்திர போராட்ட தியாகி.அவரை ஏதோ மிகப்பெரும் ஜாதிவெறியர் போல் சித்தரித்து இப்போது எழுதுகிறார்கள்.கொஞ்ச நாள் கழித்து வரும் தலைமுறையினர் அதையே உண்மை என நம்பும் ஆபத்து ஏற்படும்.

தலித் கீழான வேலை தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் மனப்பாங்கு இருப்பவராக ராஜாஜி இருந்திருந்தால் ஒரு தலித்தை ஏன் ஷத்திரியன் செய்யும் தொழிலுக்கு இத்தனை எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கிறார்?இதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

தற்போதைய ஜாதி வெறியை சுதந்திர போராட்ட வீரர்கள் மீது காட்டும் இந்த மனப்பாங்கு எங்கே போய் முடியும் என தெரியவில்லை.நேதாஜி கூட பிராமணர் என்கிறார்கள்.உண்மையா பொய்யா தெரியவில்லை.உண்மையாக இருந்தால் அவர் மீதும் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பார்கள்.

dondu(#4800161) said...

நாட்டாமை அவர்களே, நான் மாமனிதர் ராஜாஜியைப் பற்றி இட்ட 5 பதிவுகளையும் படித்துப் பாருங்கள். அவரைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அவர் முன்வைத்த பொருளாதாரக் கொள்கைதான் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கிறது. மரணத்தை வென்றவர் அந்தப் பொல்லாத கிழவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

விஷயம் இப்படி இருக்க,

//தேவதாஸ் மற்றும் லட்சுமி ஆகிய இருவருக்கும் பிறந்தவர் ராஜ்மோகன்.
காந்திஜி மற்றும் ராஜாஜி அவர்களின் பேரன் என்ற பெருமையுடையவர்.//

காந்தி குடும்பத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவுங்க எல்லாம் 'காந்தி'ன்னு சர்நேம்
வச்சுக்கிட்டு இருக்கறதை ஜனங்களும் நம்புதே(-:

இதே செய்தியை நான் இணையம் வழி தினமலர் வாரமலரில்தான் படித்தேன்.

dondu(#4800161) said...

வாருங்கள் துளசி அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட காந்தி பெயர் பிரோஸ் காந்தியிடமிருந்து வந்தது. ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளில் இந்திரா காந்தி அவர்களைப் பற்றி எழுதும்போது மகாத்மா காந்தியின் உறவினர் இல்லை என்பதை அடைப்புக் குறிக்குள் போடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dinakar said...

Indra Gandhi's family name isnt gandhi.It is gandi.It is pronounced like like the word kandi in 'kandi'ppu.

dondu(#4800161) said...

Whether it is Gandi ot Gandhi, only the name as written in Devanagari script or Urdu script is the sole criterion in arriving at a conclusion in this regard. I feel that both names are same in this connection. In the film on Gandhi, he was called as Gandi by the whitemen.

Regards,
N.Raghavan

dinakar said...

what's so special about devanakiri and urudhu scripts?gandi is a persian name,not devanagiri or urudhu name.

dondu(#4800161) said...

Thanks a lot Dinakar for giving an opportunity to highlight the superiority of Indian language scripts to the Latin scripts. The reference to Devnagari or Urdu scripts is solely for the sake of unequivocal indication as to pronounciations of names.

Hindi or Urdu are known as perfect languages in that each letter or stroke is pronounced. Aletrnatively, each syllable is represented by a specific stroke. In Latin it is not so. Hence the name of Gandi or Gandhi should be seen in Devanagari or Urdu or Telugu or Malayalam and so on to get at the correct pronounciation.

As for Tamil, it is a perfect language as far as purely Tamil words are concerned. On the other hand, Gandhi is written as காந்தி, which may even be pronounced as Kanthi by unitiated. By the same token Madasami may be read as மடசாமி.

Regards,
N.Raghavan

dinakar said...

Thanks for the valuble information sir,

I have heard that in sanskrit and german written and spoken languages are the same.You have mentioned devanakiri,but is it the same case with german language too?

dondu(#4800161) said...

Not so fast Dinakar. German is more perfect than English in that it has got stricter pronunciation rules but it is still not as perfect as Sanskrit, whose script is Devanagari by the way and Devanagari is not a language.

For example in German you will have problems with long vowels, even though there are some complicated rules in this connection too. For example Gandhi may be pronounced as கந்தி as well, as vowel becomes short when followed by two consonants.

Regards,
Dondu N.Raghavan

dinakar said...

Just now I got pretty nasty comments from boli dondu.By God's grace I had enabled comment moderation and escaped from that nonsense being posted in my web.

dondu(#4800161) said...

What? That Pooli Doondu reported for duty just now? He is rather slow today. Anyhow, do not be bothered by that rifraff (இழிபிறவி).

Let's continue the discussion by taking Poli Dondu's name as example. In Tamil we will read it correctly as போலி டோண்டு but an unitiated Englishman will pronounce it as பொலி டொண்டு, which is not at all acceptable to anyone including Poli Dondu!!!!

Regards,
Dondu N.Raghavan

dinakar said...

You know how to tackle him, dont ya....

I dont care about him.He doesnt deserve it.

Talking about ..ழி.. which you just posted,does any other language has a ழி other than tamil and malayalam?My friends said chinese and french have a ..ழ..pronounciation.

dondu(#4800161) said...

In French, Jeanne is pronounced as Djanne and when written in Tamil it will be ழான். To that extent one can say ழ sound is represented in French but it is rather one way. For example, Tamil is not wriiten as Tamij but only Tamoul in French. It is not at all straight forward.

As for Malayalam, the ழ is just as in Tamil. Fact is Malayalam has been derived from Tamil.

Chinese I do not know.

Regards,
Dondu N.Raghavan

லக்கிலுக் said...

தினமலரில் இது போல திராவிடத் தலைவர்களின் துணிச்சலையோ, அல்லது சாதனையையோ அந்துமணி என்றுமே எழுதியதில்லை.... எழுதுவார்... எழுதிய பின் அந்தச் செயலை நக்கல் அடித்து இவர் கமெண்டையும் எழுதுவார்... தினமலர் இன்று மிக மோசமான நிலைக்கு (விற்பனையில்) போக முக்கியக் காரணம் அந்துமணியின் அரைகுறை எழுத்துக்களே.....

dondu(#4800161) said...

லக்கிலுக் அவர்களே, இப்பதிவில் ராஜாஜி அவர்கள் செய்த நல்லச் செயலைப் பற்றி பேசுகிறோம். இது ராஜாஜிக்குத்தான் பெருமை. அந்து மணி என்பவர் இந்த செய்தியை வெளியிட்டதற்காக எங்கள் நன்றிக்குரியவராகிறார். அவ்வளவே. மற்றப்படி இந்தப் பதிவில் அந்துமணி பற்றி பேச்சே இல்லை.

நான் தினமலர் படிப்பதில்லையாதலால் நீங்கள் அவரைப் பற்றிக் கூறியது ஒன்றும் அறியேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

நன்றி... நான் கொஞ்சம் திராவிட சிந்தனை கொண்டவன்... அதனாலேயே உணர்ச்சி வசப்பட வேண்டியது ஆயிற்று... இந்த வாரம் கூட அந்துமணி கலைஞரை தேவையில்லாமல் நக்கல் அடித்திருந்தார்.... அதுவும் வஞ்சப் புகழ்ச்சி அணியில்...

dondu(#4800161) said...

Dear Luckylook,

Sorry for giving reply in English. You are perfectly right in your reaction and so am I in pointing out that we are only talking of Rajaji here.

Can both of us be correct? Yes we can. That is life. I evoked the rules of logic.

Let us take the proposition "Some lawyers are honest". And let us say it is true. Now what about the other logical proposition, "Some lawyers are not honest". Is it true or false? Logic says it is doubtful only. I am talking about the lawyers who are honest and I know only about them. I do not know of lawyers who are not honest and I shall not speak of what I don't know. Tiresome? That's logic, a subject after my heart.

That's why I pointed out that the talk is not about Anthumani. Don't mistake me please.

Regards,
Dondu N.Raghavan

sivagnanamji(#16342789) said...

idhanya tamil nattukaran puthy.
rajaji gandhiji sammandhiya illavittalum idhaithan senjiruppar.
rajai yin perumayai enn pangu podreenga
sory dondu i dont relish your comment

dondu(#4800161) said...

நன்றி சிவஞானம்ஜி அவர்களே. நீங்கள் நான் எழுதிய இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

"இம்மாதிரி பெருந்தன்மையான நடத்தைகளுக்கு ராஜாஜி அவர்கள் பிரசித்தி பெற்றவர். என்ன இருந்தாலும் மகாத்மா காந்தி அவர்களின் சம்பந்தி அல்லவா?"

இதில் யார் பெருமையை யார் பங்கு போடுவது? அவர்களின் நட்பு மிக பிரசித்தி பெற்றதாயிற்றே. இருவருமே சிறந்த மனிதர்கள்தானே. நான் இந்த விஷயத்தை இங்கு கூறியதற்கு காரணம் இந்த விஷயம் பலருக்குத் தெரியாது என்பதால்தான். அதுவும் போகிற போக்கில் கூறியது.

ஆனால் ஒன்று, ராஜாஜி அல்லது காதிஜி இருவர் விஷயத்திலும் எதைக் கூறினாலும் பெரிய விஷயமாகத்தான் போய்விடுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

sivagnanamji(#16342789) said...

your passing remark sounds as if rajaji imbibed this quality because of his relationship with gandhiji
o.k?

dondu(#4800161) said...

Dear Sivagnamji,

I agree with you. It does sound that way. But then Dondu's regard for Rajaji is very well known in Thamizmanam and it cannot be my intention.

Regards,
Dondu N.Raghavan

SP.VR. SUBBIAH said...

////"இம்மாதிரி பெருந்தன்மையான நடத்தைகளுக்கு ராஜாஜி அவர்கள் பிரசித்தி பெற்றவர். என்ன இருந்தாலும் மகாத்மா காந்தி அவர்களின் சம்பந்தி அல்லவா?"///

ராஜாஜி அவர்களின் பெருந்தன்மைக்கு வேறு இரண்டு செய்திகள் என்னிடம் உள்ளன! அனேகமாக பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை!

ஏனென்றால் அவற்றை என்னிடம் கூறியவர் ராஜாஜி அவர்களின் மகன் வழிப்பேரன் மிஸ்டர் சுதர்சன்.

அவருடன் சிலகாலம் நான் ஒன்றாகப் பணி புரிந்திருக்கிறேன். அதனால் தெரியும்

கதை வடிவில் அவற்றை எனது நட்சத்திரப் பதிவு வாரத்தில் எழுத இருந்தேன்.
நேரம் இன்மையால் விடுபடடு விட்டது. கூடிய மட்டும் இந்த மாதத்திற்குள் எழுதிப் பதியலாம் என்று உள்ளேன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது