நம் எல்லோருடைய மனத்திலும் ஒரு குழந்தை உண்டு என்பதை மறுக்க முடியாது. இப்போது கூட பார்க்குக்குப் போனால், ஊஞ்சலில் ஆட மனம் துடிக்கிறது. சிறு வயதில் நான் அதில் ரொம்ப தேர்ச்சி பெற்றவன். ஒருவர் மட்டும் ஆடும் ஊஞ்சலில் உயரே சென்று பீச் முழுவதையும் பார்க்கும் மகிழ்ச்சி இப்போதும் என் மனதில் ரீங்காரமிடுகிறது.
எனது நிறைவேறாத ஒரு ஆசை சக்கரம் ஓட்டுவது. பழைய சைக்கிள் சக்கரத்தின் ரிம்மை வைத்து என் நண்பர்கள் அலட்டுவார்கள். அந்த ரிம் க்ரூவில் ஒரு குச்சியை கொடுத்து தெருத் தெருவாக ஓடும் ஒரு சிறுவனின் மகிழ்ச்சியை முன்னால் நம்ம தல அஜீத் கூட ரேஸ் காரில் பெற முடியாது என்பது என் உறுதியான எண்ணம். இது எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. என் அப்பாவிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இப்போது ரிம் கிடைக்கும், ஆனால் அதை வைத்துக் கொண்டு ஓடினால் பக்கத்து, எதிர் வீட்டு மாமாக்கள் "என்ன ராகவையங்கார் ஸ்வாமி, இளமை திரும்புகிறதா" என்று கோட்டா பண்ணுவார்களே!
என்னை மாதிரி பலருக்கும் இம்மாதிரி ஆசைகள் உண்டு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சருக்கு மரத்தில் விளையாட ஆசைப்படாதவரும் உண்டோ? ஆனால், வருந்த வேண்டாம். நம்மைப் போன்றவர்களுக்குத்தான் கணினி விளையாட்டுகள் வந்துள்ளனவே.
இன்று எனது இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியம் அனுப்பிய மின்னஞ்சலில் டாம் மற்றும் ஜெர்ரி விளையாட்டு வருகிறது. டாம் ஆக இருக்கிறீர்களா அல்லது ஜெர்ரி ஆக இருப்பீர்களா என்பதை நீங்களே மாறி மாறி முடிவு செய்து கொள்ளலாம். பார்க்க:
நான் இரண்டாகவும் இருந்து பார்த்தேன். எலிக்குட்டியை க்ளிக் செய்யும் ஸ்பீட் போதவில்லை. என் பக்கத்து வீட்டு குட்டிப்பையன் அனாயாசமாக விளையாடினான். இன்னும் உழைத்து என் ஸ்கோரை மேம்படுத்த வேண்டும். நீங்களும் விளையாடிப் பாருங்கள். ஜெர்ரியாக என்னுடைய அதிகப்படி ஸ்கோர் 260, டாம் ஆக 210. அவ்வளவுதான்.
என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியத்துக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து உருவாக்கிய என் மற்ற பதிவுகள் பின் வருமாறு:
துணைவியின் பிரிவு
மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்
இருவழி ஒக்குஞ்சொல்
முதல் வேலை
மறக்காமல் உங்கள் ஸ்கோர்களையும் கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
5 hours ago
12 comments:
ஒரு காலத்தில வெறும் கல்ல கயித்தல கட்டி அப்படியே இழுத்துட்டு போற சிறுவர்களை பார்த்திருக்கிறேன். அதுல அவங்களுக்கு ஒரு ச்ந்தோஷம். அது மாதிரி சின்ன புள்ளயில விளயாடும் விளயாட்டுகளில் கிடைக்கும் ச்ந்தொஷ்ம் நீங்க சொன்ன மாதிரி பெரியவனாயி திரில்லிங்கா கார் ரேஸ் போனாலௌம் வர்றதில்லை, வாஸ்த்தவம் தான்!
நன்றி வெளிகண்ட நாதர் அவர்களே. அது சரி, நீங்கள் டாம் ஆகவும் ஜெர்ரியாகவும் எவ்வளவு ஸ்கோர் எடுத்தீர்கள் என்று சொல்லவேயில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அய்யா நான் டாம்மாக 390 புள்ளி....
ஜெர்ரியாக 2400 புள்ளி...
என்னிலும் பார்க்க என் தங்கை விளையாட்டுப் புலி...
நன்றி...
டோண்டு அவர்களே,
விளையாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. எலியாக 300 புள்ளி எடுத்தாலும், பூனையாக மூன்றிலக்கத்தையே தொடவில்லை.
உங்கள் பதிவு எனது பழைய பதிவொன்றை எனக்கு நினைவூட்டியது.
http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_04.html
எந்த செட்டிங்கில் நீங்கள் இந்த ஸ்கோர்களை எடுத்தீர்கள்? நான் சுலப செட்டிங்கில்தான் என்னுடைய பாயிண்டுகளை எடுத்தேன். செட்டிங்கை கடுமையாக்கினால் என் பவிஷு தெரியும் என நினைக்கிறேன்.
பை தி வே, நீங்கள் சுட்டிய உங்கள் பதிவைப் போய் இப்போதுதான் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. அங்கு நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
அதுதான் கூறுகிறார்களே, ஒவ்வொருவனுக்குள்ளும் குழந்தை, பெற்றோர் மற்றும் ஆசிரியர் இருப்பதாக.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகலை என்னுடைய "நீங்கள் எலியா பூனையா" பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_15.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல ஸ்கோர்கள்தான் தர்ஸன். ஆனால் நான் நினைக்கிறேன், டாம் ஆக நம் ஸ்கோர்கள் ஜெர்ரியாக இருந்ததை விடக் குறைவு என்று. ஏதாவது மனோதத்துவக் காரணம் இருக்குமோ.
இம்மாதிரி விளையாட்டுகளில் நீங்கள் அல்லது உங்கள் தங்கையைப் போன்ற குட்டிப் பையன்கள் மற்றும் குட்டிப் பெண்கள் அதிகம் ஸ்கோர் எடுக்கின்றனர் என்பதைப் பார்க்கின்றேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///எந்த செட்டிங்கில் நீங்கள் இந்த ஸ்கோர்களை எடுத்தீர்கள்? நான் சுலப செட்டிங்கில்தான் என்னுடைய பாயிண்டுகளை எடுத்தேன். செட்டிங்கை கடுமையாக்கினால் என் பவிஷு தெரியும் என நினைக்கிறேன். ////
நானும் சுலப செட்டிங்கில்தான் அதை எடுத்தேன். மேலும் இப்போது என்னுடைய மடிக்கணினியில் மவுஸ் இல்லாமல் தொடுபலகை வைத்தேதான் சமாளித்துவருகிறேன். தொடுபலகை வைத்து விளையாட்டுக்கள் விளையாடுவது அந்த அளவுக்கு எளிதாய் இல்லை.
நன்றி. இப்போதுதான் உங்கள் மறுமொழியை இங்கே பார்த்தேன். அத்துடன் "இரண்டு ஸ்பெஷல் மறுமொழிகளும்" வந்திருந்தன :-). அந்த இரண்டையும் அப்படியே படிக்காமல் விட்டுவிட்டு உங்கள் மறுமொழியை மட்டும் மட்டுறுத்தியிருக்கிறேன்.
மிக்க நன்றி முத்து அவர்களே. நான் நேரம் கிடைக்கும்போது செட்டிங்க்ஸை கடினமாக்கி முயற்சி செய்வேன்.
போலி டோண்டுவின் பைத்தியம் முற்றிக் கொண்டே போகிறது. அவனை குப்பையை போல ஒதுக்குவதே சரி. இந்த இடத்தில் உங்கள் மன உறுதியைப் பாராட்டுகிறேன். இம்மாதிரி எல்லோரும் இருந்துவிட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும்.
எனக்கு பின்னூட்டம் இடுவதா வேண்டாமா என்பதை மற்றவர்களுக்காக அவன் தீர்மானிக்க நினைப்பதுதான் கோபம் அளிப்பதாக உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பூனையாக இருந்து எடுத்த ஸ்கோர், எலியாக இருந்து எடுத்ததைவிடக் குறைவுதான் என்றாலும் நான் பூனைதான்.
எல்லோருக்குமே பூனை ஸ்கோர் குறைவாகவே உள்ளதாக நினைக்கிறேன். காரணம் என்னவாக இருக்கும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே,
இதற்கு பெரிதாய் மன உறுதி எதுவும் தேவையா என்று தெரியவில்லை. நாம் அடுத்தவருக்காகவோ, பயந்துகொண்டோ எதையும் செய்யப் போவதில்லை, நாம் விரும்பியதை நாம் செய்கிறோம், இதில் தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமும் லாப நட்டமும் இல்லாமல் இருக்கும்போது தானிதில் தலையிட்டால் தலையிடுபவருக்குக் கொஞ்சம்/நிறையவே மனதில் கோளாறு, அவருக்கு அம்மனக்கோளாறு தெரிந்திருக்கும் அல்லது தெரியாமலும் இருக்கும், ஏற்கனவே பலர் அவரிடம் சொல்லியிருப்பார்கள் அல்லது இதுவரை சொல்லாமலும் இருந்திருக்கலாம். இங்கே நான் செய்வது ஒன்றே ஒன்றுதான், போலிப்பின்னூட்டம் வந்தால் அதை ஒருஎழுத்துக்கூடப் படிக்காமல் அது போலிதான் என்று கண்டறிய, அது யாரென கண்டறிய எனக்கு நிறைய வழிகள் உண்டு. ஆபாசமாக என்றில்லை(ஆபாசமாக இருந்தால் அது எனக்கு வரவேவராது மென்பொருளே அதைக் குப்பைக்கு அனுப்பிவிடும்), சாதாரணமாகப் போலியாய் எழுதினால் நான் செய்வது அதில் ஒரு எழுத்துக்கூடப் படிக்காமல் அப்படியே குப்பைக்கு அனுப்புவது அவ்வளவுதான் :-)). அதைப் பற்றி நமக்கென்ன கவலை, எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.
பூனை, எலி விளையாட்டு பற்றி, பூனையாக அதிகமான புள்ளிகள் எடுக்கமுடியாமைக்கு அதன் விளையாட்டு அமைப்புதான் காரணம் என்று தோன்றுகிறது. கிரிக்கெட்டில் பேட்டிங் பிட்ச், பௌலிங் பிட்ச் என்றிருப்பதுபோல் இந்த விளையாட்டுக்களத்தை நம்ம ஜெர்ரிக்குச் சாதகமாக அமைத்துவிட்டார்கள் போலிருக்கிறது :-).
நன்றி முத்து அவர்களே, போலி டோண்டுவைப் பற்றி சொன்னாலும் சொன்னீர்கள் திருவாசகமாகச் சொன்னீர்கள்.
ஜெர்ரிக்கு சாதகமாகத்தான் கேம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் என் எண்ணமும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment