சில நாட்களுக்கு முன்னால் ஒரு காலைப் பொழுதில் தொலை பேசி மணி அடித்தது. ஒலி வாங்கியை எடுத்துக் கேட்டால் சென்னைக்கு வந்திருக்கும் பி.கே.சிவகுமார் அவர்கள். பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அவருடன் பேச பல விஷயங்கள் எனக்கு இருந்தன. பலருக்கும் இருந்தன. ஆகவே ரஜினி ராம்கி அவர்கள் நேற்று (25.04.2006) மாலை உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். மின்னஞ்சல் முகவரி தெரிந்தவர்களுக்கு அஞ்சல் அனுப்பினார். என் தரப்பிலிருந்து மரபூர் சந்திரசேகர் மற்றும் வைதிகஸ்ரீ ஜெயராமன் அவர்களை நான் அழைத்தேன். ரோசாவசந்த் தனக்கு அடுத்த நாள் செமினார் இருப்பதால் வர இயலவில்லை எனக் கூறிவிட்டார்.
சரியாக 6 மணிக்கு என் கார் ட்ரைவ் இன்னை அடைந்தது. பி.கே.எஸ் அவர்களை என்னை அடையாளம் கண்டு கொண்டு தன்னிடம் அழைத்துக் கொண்டார். அவருடன் அவர் நண்பர்கள் ரமேஷ் மற்றும் ஸ்வாமினாதன் இருந்தனர். மெதுவாக வலைப்பதிவாளர்கள் வர ஆரம்பித்தனர். மரபூர் சந்திரசேகர் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் வெகு அருகில் பைக்கை நிறுத்தி என்னிடம் நான் எங்கே இருக்கிறேன் என்று செல் பேசியில் கேட்டார். பேசிக் கொண்டே திரும்பினால் பக்கத்திலேயே அவர் நிற்கிறார். 7 மணி வரை ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். கிட்டத்தட்ட 16 பேர் சேர்ந்து விட்டனர். வழக்கம் போல ரஜினி ராம்கி லேட்டாக வந்தார்!
நாலைந்து இடங்களைப் பார்த்து விட்டு பிறகு மரத்தடி ஒன்றில் (not the Yahoo group) டேரா போட்டோம். கடைசியாக வைதிகஸ்ரீ ஜெயராமன் வந்தார். வந்த வலைப்பதிவாளர்கள் என் நினைவிலிருந்து: பத்ரி, பி.கே.எஸ்., மரவண்டு கணேஷ், நிர்மலா, க்ருபா, மீனாக்ஸ், ரஜினி ராம்கி, ஐகாரஸ் பிரகாஷ், ஜெயராமன், சந்திரசேகர், சுபமூகா மற்றும் ஒரு ஆஜானபாகுவான மனிதர் (அவரைப் பற்றி பிறகு, ஆனால் நான் முதலிலேயே ஊகம் செய்து விட்டேன்.) ஏதேனும் பெயர் விட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பேச்சு எதிர்ப்பார்த்தபடி அதிகம் போலி டோண்டுவைப் பற்றித்தான். பல புதியவர்கள் என்னிடம் பிரச்சினையின் பின்புலனைப் பற்றி கேட்க எனக்குத் தெரிந்ததைக் கூறினேன். அவனை எதிர்க்கொள்ள சில அருமையான வழிகள் கிடைத்தன. கொடுத்தவர்களுக்கு நன்றி. அவன் யார் என்பதில் பெரும்பான்மையினருக்கு சந்தேகமே இல்லாததால் அது பற்றியப் பேச்சுக்கள் குறைவே. என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் அதிக நேரம் செலவழிக்கப்பட்டது.
சந்திப்பின் கடைசி தருணங்களில் பி.கே.எஸ். அவர்கள் எழுந்து நான் குறிப்பிட்ட அந்த ஆஜானுபாகுவான மனிதரை அறிமுகப்படுத்தினார். அவர்தான் வலைப் பதிவாளர் முகமூடி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
22 hours ago
23 comments:
>>>அவர்தான் வலைப் பதிவாளர் முகமூடி
அட.. வந்திருக்கலாமோ...?!!? :-)))
அட.. வந்திருக்கலாமோ...?!!? :-)))
...க்கலாமே...!!!! :-)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
ம்ம்ம்ம்ம்ம்...........:-))))
வாருங்கள் ராமசந்திரன் உஷா அவர்களே, கூற மறந்து விட்டேன். வடை சாம்பார், ஆனியன் ரவாதோசை, காப்பி பிரமாதம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சந்திப்பை அழகான கட்டுரை ஆக்கி இருக்கிறீர்கள்.... இதுபோல எங்களது கருத்துக் கள நண்பர்களும் விரைவில் சந்திக்க ஒரு பிளான் போடப்போகிறேன்.....
இனிமையான மாலை சந்திப்பு.
எல்லோரிடமும் ஆவலும், ஆற்றலும் தளும்பின.
எல்லோரும் (டோண்டு மாமாவை தவிர...) என்னை விட இளையவர்கள். முதல் நிமிடங்களிலேயே வெகுநாள் பழகியது போல பேசினார்கள்.
நல்ல நண்பர்களை கண்டேன்.
என் பழைய அலுவலகம், பம்பாய் மற்றும் வேறு சில நினைவுகளையும் சிறிது அசை போட்டேன்.
ப்ரீயாக டிபன் கிடைத்தது. என்ன ஏற்பாடு என்று தெரியும் முன்னே எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் (பைசா கொடுத்தீர்களா??)
தமிழ் இலக்கிய புத்தகங்கள் சிறுகதை புத்தகங்களுக்கு அறிமுகம் கிடைத்தது. வாசிக்க சந்தர்பம் ஏற்படுத்திக்கொள்ள போகிறேன்.
என்னை இழுத்துப்போட்ட ராகவன் அவர்களுக்கு நன்றி
அவ்வாறே செய்யுங்கள் லக்கிலுக் அவர்களே. நானும் கருத்து காமில் மெம்பர்தான். ஆனால் லாக் இன் செய்யமுடியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என் அழைப்பை மதித்து நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம் ஜயராமன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
valaippvil arivithu irundhal innum palar vanthirukkak kdum
அடுத்த முறை அவ்வாறே செய்து விடலாம் சிவஞானம்ஜி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், அடுத்தமுறை நான் சென்னை வரும்போது உங்களை எல்லாம் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.
//
அவன் யார் என்பதில் பெரும்பான்மையினருக்கு சந்தேகமே இல்லாததால் அது பற்றியப் பேச்சுக்கள் குறைவே.
//
அது தான் கண்டுபிடிச்சிட்டீங்களே, சீக்கிரம் படத்துக்கு வணக்கம் போடுற வழியப் பார்போம்!!
ஐயா, DD தொல்லை தாங்க முடியவில்லை, தினம் தினம் காலையில் மெயிலப் பார்தால் இவன் திட்டி தீர்தது தான் இருக்கிறது. எனக்கு மட்டும் என்ன திட்டவா தெரியாது...வெரி நாய்க் கடிக்கு நாயத் திருப்பிக் கடிக்க முடியுமா!! அதுக்காகத்தான் ignore செய்து வருகிறேன்...ஆனால், என் பொருமைக்கு எல்லை காஸா மற்றும் மேற்கு கரை பகுதிக்கு இடையில் இருக்கும் இஸ்ரேலைப் போல் மிகக் குறைவு.
நன்றி,
ஷங்கர்.
நல்வரவு கால்கரி சிவா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எல்லோர் ஆசையும் அதுதான் இஸ்ரேல் சங்கர் அவர்களே. ஆனால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றனவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூத்தூர் ஸ்ரீராம் அவர்களே. உங்கள் பதிவினுள் log in செய்து கொள்ளுங்கள்.
Click the "post a comment" button. Comment box will open along with the existing comments. There is a dustbin icon against each comment. Click that. You will be asked whether you want to delete the selected comment with or without trace or not. If you choose the former option, comment will be deleted with the mention "comment deleted by a blog administrator" You are thje blog administrator in your blog.
That's all.
Regards,
Dondu N.Raghavan
நல்லது ஸ்ரீராம் அவர்களே. மட்டுறுத்தல் செயலாக்கி விட்டீர்கள்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான மாலைப் பொழுது!
நம் சென்னை நண்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
ரஜினி ராம்கிக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
அன்புடன்,
'சுபமூகா'
//சந்திப்பின் கடைசி தருணங்களில் பி.கே.எஸ். அவர்கள் எழுந்து நான் குறிப்பிட்ட அந்த ஆஜானுபாகுவான மனிதரை அறிமுகப்படுத்தினார். அவர்தான் வலைப் பதிவாளர் முகமூடி.//
என்னது ஆஜானுபாகுவான நபர் முகமூடியா? அப்ப முகமூடி நானில்லையா? என்னங்க இது அநியாயம், அக்குறும்பா இருக்கு? யாரோ ஒருத்தர் தான்தான் முகமூடி என்றால் உடனே நம்பிவிடுவதா? பொஸ்ரனிலிருந்து ஒரு சின்ன கன்பர்மேஷன் கூட வேண்டாமா? என்னமோ போங்கள்... :-)
ரரா'தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடா? இருக்கட்டும். அவர நான் அப்புறமா பாத்துக்கறேன். ;-)
சந்திப்பு நல்லபடியாக நடந்தது என்பதில் மகிழ்ச்சி. காரசாரமாக ஏதேனும் விவாதிக்கப்பட்டதா?
நன்றி சுபமூகா அவர்களே. உங்கள் பெயரை எப்படி மறந்தேன் என்றே புரியவில்லை. இப்போது சேர்த்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"காரசாரமாக ஏதேனும் விவாதிக்கப்பட்டதா?" ..பட்டது. ஆனால் முக்கால்வாசிப் பேர் கோபமும் போலி டோண்டு மேல்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹும்.போலி டோண்டுவை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி பேசவே இல்லையாக்கும்[அல்லது அது பதிப்பிக்க உகந்த ரகசியம் இல்லையோ!)
//ரரா'தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடா? இருக்கட்டும். அவர நான் அப்புறமா பாத்துக்கறேன். ;-)
தெய்வமே... போட்டு குடுக்கிறீங்களே!.. என்ன பாவம் செஞ்சேன்?! :-(
பினாத்தல் சுரேஷ் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://penathal.blogspot.com/2006/04/29-apr-06.html
"டோண்டு அவர்கள் முகமூடியைப்பார்த்திருக்கலாம், ஆனால், இப்படி ஒரு டெஸ்கிரிப்ஷன் கொடுப்பதற்கு முகமூடியிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பது என் கருத்து. அவர் அப்படிச் செய்திருந்தால் அதற்கும் மன்னிப்புக் கோருவேன், பதிவை நீக்குவேன்."
சந்திப்பிலேயே நான் அது பற்றி பதிவைப் போடப் போவதாகக் கூறிவிட்டேன். முகமூடி அவர்கள் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை. அவர் உண்மை பெயரை கூறவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பி.கே.எஸ்.தான் முகமூடி என்று போலி டோண்டு என்ற இழிபிறவி கூறியிருந்தது. அப்படியெல்லாம் இல்லை என்று அவனுக்குக் கூறவே நான் எழுதிய வரிகளைச் சேர்த்தேன். வேறு ஒன்றும் இல்லை.
நீங்கள் எழுதியதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆகவே மன்னிப்பு எல்லாம் கேட்கத் தேவையில்லை, பதிவையும் நீக்கத் தேவையில்லை.
உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றி நான் எழுதியுள்ள இந்தப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment