இப்போது இரண்டாம் பதிவுக்கு செல்வோமா. அங்கு கூற மறந்தது இங்கே கூறிவிடுகிறேன். அதாவது, ஒரு பழைய பதிவை வகைபடுத்த வேண்டுமானால் மீள்பதிவைத் தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை. வகைபடுத்தாவிட்டால் அவற்றிற்கான பின்னூட்டங்கள் வரும்போது தமிழ்மணத்தில் அவற்றை இற்றைப் படுத்தப்பட முடியவில்லை. இப்போது இரண்டாம் பதிவின் மீள் பதிவுக்கு செல்வோம்.
எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 1947-ல் பாலஸ்தீனத்தை யூதப் பகுதியாகவும், யூதரல்லாதப் பகுதியாகவும் பிரிக்க வந்தத் தீர்மானம் தேவையான 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் சோவியத் யூனியனும் அதன் ஆளுகைக்குட்பட்ட நாடுகள்தான். அறுபதுகளில் சோவியத் யூனியன் அரேபியர்களுக்கு ஆதரவாகப் போட்ட ஆட்டங்களைப் பார்த்தவர்களுக்கு இது நம்ப முடியாததுதான்.
என் நினைவுகளிலிருந்து எழுதுகிறேன். தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது. பிரிட்டன் நடு நிலைமை வகுத்தது. அமெரிக்கா ஆதரித்தது. சோவியத் யூனியனும் அதன் ஆளுமைக்குட்பட்ட நாடுகளும் ஆதரித்தன. சோவியத் யூனியன் ஏன் அவ்வாறு செய்தது?
எந்த நாடாயினும் சரி, ராஜரீக விஷ்யத்தில் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்தல் அவசியம். "நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர விரோதியும் இல்லை, நிரந்தரம் நம் நாட்டின் நலனே" என்பதே தாரக மந்திரம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தத் தருணம். சோவியத் யூனியனுக்கு மத்தியக் கிழக்கு ஆசியாவில் ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. அது இஸ்ரேலாக இருக்கும் என்று நினைத்தது. ஏனெனில் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியனும் அவரது கட்சியும் சோஷலிசக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. இஸ்ரேல் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்தது. மெதுவாக சோவியத் யூனியன் அரேபியர்கள் பக்கம் சாய ஆரம்பித்தது.
1948-ல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது அமெரிக்கா அதற்கு de facto அங்கீகாரம்தான் கொடுத்தது, சோவியத் யூனியனோ de jure அங்கீகாரமே கொடுத்தது. முன்னதை விடப் பின்னது அதிக சக்தி வாய்ந்தது.
இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது பென் குரியன் இஸ்ரேலியப் பகுதியில் வாழும் யூதரல்லாதவர்களை அங்கேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லோரும் புது தேசத்தில் சமக் குடியுரிமை பெற்று வாழலாம் என்றுக் கூறினார். ஆனால் சுற்றியிருந்த அரபு தேசங்கள் அவர்களை இடத்தைக் காலி செய்து தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் செல்லப் பணித்தனர். அப்போதுதான் யூதர்களைக் கடலுக்குள் தள்ளி ஒரேயடியாக இஸ்ரேல் இல்லாமல் செய்ய முடியும் என்று ஆசை காட்டினர். அப்போது வெளியேறியவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். 1948 போரில் இஸ்ரேல் எதிர்பாராமல் வெற்றி பெற்று விட்டது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக பாலஸ்தீனியர் அகதி முகாம்களில் மாட்டிக் கொண்டனர். இந்த அழகில் ஜோர்டான் வேறு யூதர் அல்லாதப் பகுதி என்று ஐ.நா. அறிவித்திருந்தப் பகுதியைக் கபளீகரம் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது. அதுதான் மேற்குக் கரைப் பகுதி. 1948 போர் நிறுத்தத்துக்குப் பின்னால் ஜெரூஸலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பெரும் பகுதி ஜோர்டனிடமும், ஒரு சிறு பகுதி இஸ்ரேலியரிடமும் வந்தது. இஸ்ரேலியரால் அழுகைச் சுவர் என்றுப் பெயரிடப்பட்ட பயைய யூதக் கோவிலின் இடிபாடு ஜோர்டான் வசம். 1948-லிருந்து 1967 வரை யூதர்களுக்கு அங்கே அனுமதியில்லை. 1956-ல் சூயஸ் கால்வாயை எகிப்தியர் தேசீயமயமாக்கினர். அப்போதிலிருந்து இஸ்ரேலியக் கப்பல்கள் அதில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இஸ்ரேலை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நசுக்கி அதை ஒன்றுமில்லாமல் செய்வதே அரபு தேசங்களின் நோக்கம்.
ஆனால் என்ன அக்கிரமம்! இஸ்ரேல் அழிய மறுத்தது. அது பாட்டுக்கு உலகெங்கிலிருந்தும் யூதர்களை வந்துக் குடியேறச் செய்துக் கொண்டிருந்தது. எந்த நாட்டிற்கும் இம்மாதிரி சந்தர்பங்களில் முழி பிதுங்கியிருக்கும். ஆனால் இஸ்ரேல் எல்லா சோதனைகளையும் தைரியமாக சமாளித்து வந்தது. இஸ்ரேலின் அந்த நாட்களை வர்ணிக்கும் லியோன் ஊரிஸ் என்னும் எழுத்தாளர் தன் நாவல் "எக்ஸோடஸ்"ல் இவ்வாறு எழுதுகிறார் (நினைவிலிருந்து எழுதுகிறேன், தமிழ் மொழி பெயர்ப்பு என்னுடையது):
"அவர்கள் (யூதர்கள்) எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்"
1956-ல் நடந்தப் போரில் இஸ்ரேல் சினாயை மிகத் துரிதமாகப் பிடித்தது. ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்தலால் அது சினாயைக் காலி செய்தது. அப்போது அமெரிக்கா இஸ்ரேலின் நலனைப் பாதுகாப்பதாக உறுதி கூறியது. இருப்பினும் இஸ்ரேலியக் கப்பல்கள் சூயஸ் கால்வாயில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதிலிருந்து இஸ்ரேல் ஒரு பாடம் கற்றுக் கொண்டது. அதாவது தன் நலனைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். நட்பு நாடுகள் எப்போதும் உதவிக்கு வருவார்கள் என்றுச் சொல்ல முடியாது. இதற்கு முன்னால் இப்படித்தான் 1938-ல் செக்கொஸ்லோவாக்கியா பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் கைவிடப்பட்டது.
1967-ல் நிலை என்ன? இஸ்ரேலுக்கு மறுபடி நெருக்கடி. அதைச் சுற்றியுள்ளத் தேசங்கள் அதை அழித்தே தீருவது என்றுக் கங்கணம் கட்டின. அப்போரைப் பற்றி என் முந்தையப் பதிவில் எழுதியுள்ளேன். யுத்தத்துக்கு சில தினங்களுக்கு முன் வெவ்வேறு நாடுகளிலிருந்த இஸ்ரேலியத் தூதுவரகங்களுக்கு உள்ளூர் யூதர்கள் வந்து இஸ்ரேலுக்காக சண்டையிட விருப்பம் தெரிவித்தனர். "ஏற்கனவே 60 லட்சம் பேரை ஹிட்லரின் வெறிச்செயல் கொன்று விட்டது. இன்னொரு படுகொலையை எங்களால் தாங்க முடியாது. நாங்களும் உங்களுடன் சேர்ந்து இறக்கிறோம்" என்றுக் கூறினர். இஸ்ரேலியரோ அவர்களிடம் இவ்வாறுக் கூறினர். "இறப்பதா, அதற்கு வேறு ஆள் பாருங்கள். நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்றனர்.
இஸ்ரேலிய எழுத்தாளர் எஃப்ரைம் கிஷோன் (Ephraim Kishon) எழுதியதைப் பார்ப்போம். அவருடையப் புத்தகம் "மன்னியுங்கள் ஐயா, நாங்கள் வெற்றி பெற்றதற்கு". அதில் உள்ளக் கட்டுரைகள் அச்சமயத்தில் இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்றில் தொடராக வந்தது. ஆரம்பக் கட்டுரைகள் இஸ்ரேல் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளை பற்றியவை. ஆகவே ரொம்ப ஸீரியஸாக இருக்கும். ஆனால் போருக்குப் பின்? ஒரே தமாஷ்தான். "நிர்பந்திக்கப்பட்ட அதிசயக் குழந்தை" என்றுத் தலைப்பிடப்பட்ட ஒரு படம். அதில் இஸ்ரேலை ஒரு பையனாகக் காண்பித்திருப்பார்கள். நாலா பக்கத்திலிருந்தும் வரும் தாக்குதல்களை தன் குத்துக்களால் எதிர்க் கொள்கிறான். இன்னொரு படத்தில் அவன் இஸ்ரேலியக் கொடியை ஏந்திக் கொண்டு ஒவ்வொரு ஊராகக் கைபற்றிக் கொண்டே செல்ல, அவன் பின்னால் சரித்திரம் ஒரு பெண் ரூபத்தில் கதறிக் கொன்டே வருகிறது: "இவ்வளவு வேகமாகப் போகாதே, எனக்கு மூச்சு வாங்குகிறது". இம்மாதிரிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அடுத்தப் பதிவில் இந்தியா இஸ்ரேல் பிரச்சினையை எவ்வாறு கையாண்டது என்பதைப் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
49 comments:
சென்ற பதிவிற்கு நான் அளித்த பின்னூட்டம் குறித்து கிருக்கன், வெங்கட், கருப்பி எழுதியது குறித்து...
முதலில் நான் உணர்ச்சி வசப்பட்டதாக கூறியது குறித்து....
சந்தேகமேயில்லை! "நான் பாகிஸ்தான் ஆதரவாளன்' என்று தலைப்பு வைத்து ஒருவர் ஒரு பதிவு எழுதினால் எத்தனை கண்டனங்கள் வரும் என்று யோசித்து பார்கலாமே! அட, நான் 'சிங்கள இனவெறியின் ஆதரவாலன்' எண்ரு தலைப்பு வைத்தால் எத்தனை கண்டனங்கள் வரும் என்று பார்கலாமே கறுப்பி. டோண்டு இஸ்ரேல் குறித்து அதற்கு ஆதரவாக எழுதுவதல்ல பிரச்சனை. இத்தனை ஆண்டுக்கால பிரசாரங்களில் ஒருவர் வேறு மாதிரி சிந்தித்தால்தான் ஆச்சரியம் வரும். ஒரு நாடு 'அரச பயங்கரவாதம்' எனபதற்கு சிறந்த உதாரணமாய் திகழுவது, ஆக்ரமிப்பு வன்முறையின் மூலம் மீண்டும் மீண்டும் நினைப்பதை நிறைவேற்றுவது, காலத்தின் துணை கொண்டு அதை லெஜிடிமைஸ் செய்வது என்பதற்கு சிறந்த உதாரணமாய் இருக்கும் ஒரு நாட்டை 'நான் ஆதரிக்கிறேன்' என்றால் கண்டனம் தெரிவிக்கமல் என்ன செய்ய வேண்டும். 'தென்னாப்பிரிக்க இனவெறியை ஆதரிக்கிறேன்' என்று தலைப்பு வைத்து பதிவு எழுதும் நபரிடம் பேசும் பக்குவம் சிலருக்கு இருக்கலாம், எனக்கு இல்லை.
அடுத்து கிருக்கன் 'பாயிண்டு விட வேண்டியதுதானே' என்கிறார்.என்ன பாயிண்டு விட? இது வரை அவர் எழுதியது எதிலாவது மற்றவர் சொல்வதை புரிந்துகொண்டு பதில் சொன்ன சம்பவம் உண்டா? எல்லாவற்றிற்கும் 'அசக்கு, குமுக்கு' என்று பதில் தருவதைதானே செய்கிறார், போன பதிவிலேயெ வெங்கட்டிற்கு எழுதியதை பாருங்கள். இதில் எப்படி அய்யா பேச முடியும்?
கொஞ்சம் நங்கநல்லூர் போய் டோண்டு பக்கத்து வீட்டிலிருக்கும் பாண்டுமாமாவிடம் கேளுங்கள். தள்ளி போய் இன்னொரு ரங்குமாமா விடம் கேளுங்கள். இவர்கள் யாராவது கொஞ்சமாவது வித்தியாசமாய் பேசிய சரித்திரம் இருக்குமா என்று பாருங்கள். எல்லோரும் ஒரே விதமாய் எத்தனை வருடங்களாய் பேசி வருகிறார்கள். இப்போது ஹிட்லர் ஆதரவை வெளிப்படையாய் பேசமாட்டார்கள். வீட்டுக்குள் மட்டும் பேசுவார்கள். இன்றய தேவையாய் இஸ்ரேலை பிடித்துகொள்கிறார்கள். இதில் இவர்களிடம் என்னத்தை அய்யா பாயிண்டு விட முடியும்?
அடுத்து, இந்தியாவிற்கு என்ன லாபம், ...யாவிற்கு என்ன லாபம் என்ற கேள்வி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். இந்தியாவின் லாபத்தை முன்வைத்து பேசுவதல்ல எனது நோக்கம். அமேரிக்காவின் லாபம் ஈராக்கை புணர்வதிலே இருக்கலாம்( இல்லாமலும் இருக்கலாம்) அதை மீறி பேசும் அறிவு விவாதங்களில்தான் எனகு ஆர்வம். ஆகையால் இங்கு விவாதம் சாத்தியப்படாது.
இஸ்ரேல்/பாலஸ்தீன் பிரச்சனை குறித்து சிறு குறிப்பு என் பதிவில் வரும். விரிவாய் எழுத நேரமில்லை எனினும் ஒரு கடமையாய் அது வெளிவரும்.
"யுத்தத்துக்கு சில தினங்களுக்கு முன் வெவ்வேறு நாடுகளிலிருந்த இஸ்ரேலியத் தூதுவரகங்களுக்கு உள்ளூர் யூதர்கள் வந்து இஸ்ரேலுக்காக சண்டையிட விருப்பம் தெரிவித்தனர். "ஏற்கனவே 60 லட்சம் பேரை ஹிட்லரின் வெறிச்செயல் கொன்று விட்டது. இன்னொருப் படுகொலையை எங்களால் தாங்க முடியாது. நாங்களும் உங்களுடன் சேர்ந்து இறக்கிறோம்" என்றுக் கூறினர். இஸ்ரேலியரோ அவர்களிடம் இவ்வாறுக் கூறினர். "இறப்பதா, அதற்கு வேறு ஆள் பாருங்கள். நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்றனர். "
Dondu Sir,
1. Can you please explain the difference between Jews and Israelites?
It would be nice if you provide more information on the misunderstanding that all the Israelites are Jews. That is not the real scenario. The purpose is to hide the difference is to blame it on the race.
2. It may add spicy if you add something about "anti-semitic" concepts and feelings.
3. Like various other self-developed ingenious ideas and actions, Israelites have come out with their own martial art - Krav Mago.
The Krav Maga was developed in Israel in the early forties when the underground liberation organizations were fighting for the independence of the State of Israel. At that time, it was illegal to possess weapons. The inventor and developer of the Krav Maga was a champion heavy weight boxer, a judo champion, and an expert in jiu-jutsu. In addition, he was as a trapeze acrobat and a well known dancer. The knowledge he thus obtained, contributed to the development of the Israeli martial art of self defense. There is no hidden meaning behind the name Krav Maga, and literarily means "contact fight / battle".
The Krav Maga was put into practice originally by the fighters of the liberation organizations that often went to battle armed with knives or sticks and with the knowledge of Krav Maga, and they were very successful. After the establishment of the State of Israel, Krav Maga was adopted as the official martial art taught in the defense forces, and especially in the elite police and army units. Krav Maga was integrated into army training by Imi Lichenfield, a career IDF officer and chief instructor at the army's physical training facility at the Wingate Institute. Imi is still active involved in the Krav Maga Association and maintains the role of president.
Over the years, the Krav Maga has turned into an integrated part of training in many disciplines such as educational institutes. Krav Maga is taught in many public schools in Isreal.
The Krav Maga is not an ecletic martial art system, rather, it was developed with the perception that the classic martial arts were lacking various elements. The defense needs in the eras that the classic martial arts were developed were different than those of today. New unique techniques for defense against pistols, guns and hand grenades were considered needed, and therefore developed.
Krav Maga has no katas or specific sequences that must be followed. Students use the basic moves in conjunction with any one of a number of other moves to fend off an attack, the key idea being adaptability to new situations through improvisation. Emphasis is put on speed, endurance, strength, accuracy and co-ordination especially for intensive Krav Maga training.
This I added here as additional information to your well narrated write-up.
சின்ன கொசுறு! இந்த muse ஒரு பக்கம் ஹிட்லரையும் புகழ்ந்துகொண்டு, இங்கே இஸ்ரேலையும் புகழ்ந்து வருவதை கவனியுங்கள்!
Dear Rosavasanth,
1. where have I praised Hitler? I have just quoted from Dondu sir's passage, which also has no appreciative comments on Hitler.
If you are talking about "anti-semitism," it is a widespread feeling not only pertained to Nazism. You might be knowing that there are people who are against Nazism to the core, but also have very strong "anti-semitic" feelings. Israelites are fighting against both the obstacles.
I am no fan of Hitler, Marx, Mao, Pol Pot, Gandhi, Savarkar or any other power structure for that matter. At the same time I am not against anything. I know that everything is good and bad, right and wrong. It depends upon what stance we take. I do not take any stance. I am just a witness.
2. You said:
"பாண்டுமாமாவிடம் கேளுங்கள். தள்ளி போய் இன்னொரு ரங்குமாமா விடம் கேளுங்கள்"
I know a few "mamas" who are very strong supporters of Palestine and very very anti-Israel for Israel's violent methods against violences.
Even your caste based accusations (the only stance you can pose) are untrue.
I meant exactly the following. Ofcourse you have all the freedom to deny or give possible explanation. My statement is based on my interpretation/
"To make a war and to win, a country should have the best logistics possible. This includes education, high level calibre in arts, science, human values, philosophy and various other disciplines. For example, before waging war Hitler developed his country as an economically powerful, stable country. America won the IInd World war because of its calibre and development in science.
In addition, only those countries that engage in big wars develop so quickly. Ofcourse there are countries that get doomed, but it is because of lack of good leadership.
That is the reason all those hawks are considered as great personalities. We need not feel guilty in knowing that our ancestors have indulged and won a lot of wars. In addition we can feel really proud that our ancestors followed a code of conduct during war and showed respect and kindness for the defeated."
In particular I quote "That is the reason all those hawks are considered as great personalities. "
நான் ஒன்றை சொன்ன காரணத்தால் இதை பதிலாக எழுதுகிறேன். ஒரு காலத்தில் பல பார்பனர்கள் காண்பித்த ஹிட்லர் புகழ்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் இந்த இஸ்ரேல் புகழ்ச்சியை பார்கிறேன்.
Hawks means:
"An advocate of an aggressive policy on foreign relations"
Personality means:
"The complex of all the attributes--behavioral, temperamental, emotional and mental--that characterize a unique individual;a person of considerable prominence"
Personalities can be good and bad. Great personalities include Buddha and Hitler, each represents extreme states. Great personality need not be a good personality. For example, you can say "Muse has a personality!!" ;-).
"ஒரு காலத்தில் பல பார்பனர்கள் காண்பித்த ஹிட்லர் புகழ்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் இந்த இஸ்ரேல் புகழ்ச்சியை பார்கிறேன். "
In that period many who are against British are supporters of Netaji are pro-Hitler and anti-allied forces. They are not only from the Brahmin community, there people who are from various other communities as well, including Brahmins.
It does not mean that all Brahmins are freedom fighters and anti-british. There are many in the community who are pro-British (even now).
muse, எனக்கு அர்த்தம் வேண்டுமெனில் டிக்ஷ்னரியை பார்த்துகொள்வேன். எழுதிய விஷயம் 'ஹிட்லரை புகழ்ந்தீர்களா', இல்லையா என்பதுதான். சொன்ன எதுவும் ஹிட்லர் பற்றிய புகழ்ச்சி இல்லையா? புகழ்வதை பற்றித்தானே நான் பேசினேன்.
இப்படி வேறு எதையாவது சொல்வதைத்தானே நானும் எதிர்பார்த்தேன்.
//In that period many who are against British are supporters of Netaji are pro-Hitler and anti-allied forces.They are not only from the Brahmin community, there people who are from various other communities as well, including Brahmins. //
உண்மைதான்! ஆனால் நான் சொல்ல விரும்பியது வேறு!
Sorry. I think I have not explained it properly.
What I praised was "WAR" not any particular personality. You could have noticed I praised America also along with Hitler. You can also add Stalin in the list.
நீங்களே சொன்னால் ஏற்றுகொள்கிறேன். பிடிவாதம் பிடிக்க எதிவுமில்லை. ஆனால் போரை ஆதரிப்பதும், அதற்கு தரும் வாதங்களும் ஒன்றும் பெருமை கொள்ளகூடியதாய் தெரியவில்லை.
எப்படியிருந்தாலும் ஸ்டாலின் பெயர் தேவையில்லை, நான் ஹிட்லர் அளவிற்கு ஸ்டாலினையும் எதிர்கிறேன். பெரிய வித்தியாசம் கிடையாது.
டோண்டு!
உங்கள் பதிவைப் படித்து வருகிறேன்.
இஸ்ரேலின் மொசாட் செய்த, செய்யும் செயற்பாடுகளையும் அவர்களின் நடவடிக்கைத் தன்மைகள் பற்றியும் கூறுவீர்கள் என்று நம்புகிறேன். தன்னைத் தக்க வைத்துக்கொள்ள என்ற பெயரால் அது செய்தவற்றைச் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். 'லியோன் ஊரிஸ்' எழுதிய 'எக்ஸோடஸ்' என்ற புத்தகத்தை (தமிழ் மொழிபெயர்ப்பை) மிகுந்த அக்கறையோடு வாசித்தவன் நான். மேலும் எலிகோகன் பற்றியும் இதர புலனாய்வாளர்களிக் 'வீர தீர சாகசங்களைப்' பற்றியும் சொல்லவும். சுவாரசியமாகக் கேட்கலாம். பயணக்கைதிகள் விடயத்தில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும் இறுகிய முறை பற்றிச் சொல்லவும். (எச் சந்தர்ப்பத்திலும் பணியாமல் தாக்குதல் மூலமே முறியடிப்பது என்ற கோட்பாடு. பயணக்கைதிகள் இறந்தாலும் பரவாயில்லை).
இப்படி உங்களிடமிருந்து நிறையவே இஸ்ரேல் பற்றி எதிர்பார்க்கிறேன். எழுதுங்கள்.
இப்போ ஒரு சந்தேகம். பலஸ்தீனம் யூதர்களின் தாயக பூமி என்பதற்கு விவிலியத்தை விட்டால் வேறு ஏதாவது நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கிறதா?
"பலஸ்தீனம் யூதர்களின் தாயக பூமி என்பதற்கு விவிலியத்தை விட்டால் வேறு ஏதாவது நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கிறதா?"
சரித்திரச் சான்றுகள் ஏராளம். எல்லாம் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. இப்போது கூட இஸ்ரேலில் ஓரிடத்தில் குடியுறுப்பை நிறுவினால் இஷ்டத்துக்குப் பெயர் வைக்க முடியாது (உதாரணத்துக்கு கே.கே.நகர்). புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், விவிலியச் சான்றோர்கள், சரித்திரப் பேராசிரியர்கள் ஆகியோர் அடங்கியக் குழுதான் இந்த வேலை செய்ய முடியும்.
இஸ்ரேலுக்காக ஐ.நா.வில் யார் எப்படி ஓட்டளித்தார்கள் என்று எழுதினேன். பென் குரியன் யூதரல்லாதவர்களை இஸ்ரேலிலேயே சேர்ந்து வாழலாம் என்றுக் கோரியதையும் இன்னும் பலவற்றையும் குறிப்பிட்டேன். அதை எல்லாம் விட்டு விட்டு பார்ப்பனீய சதி என்று எழுதினால் என்னதான் செய்வது? வெங்கட்டும் மற்றோரும் கேட்டக் கேள்விகளுக்கெல்லாம் நேரடியாகப் பதில் கொடுத்தேன். அவற்றுக்கெல்லாம் உங்கள் எதிர் வினை கொடுங்கள். நான் கொடுத்தத் தகவல்களில் இது வரை ஏதேனும் திருத்தம் இருந்தால் அதைக் கூறுங்கள். சாதிச் சண்டையிட பெரியாரைப் பற்றியப் பதிவுகள் உள்ளன. அதில் போடலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I am republishing below my comment (with some additions) I gave in Mr. Raghavan's post again here!
இஸ்ரேலியர்களோ பாலஸ்தீனியர்களோ, இரு தரப்பினருமே லேசுப்பட்டவர்கள் அல்லர். இரு தரப்பினரும் பல தவறுகள் இழைத்துள்ளனர், அநியாயங்களுக்கு காரணமாக இருந்துள்ளனர். பேருந்தில் / மார்க்கெட்டில் குண்டு வைத்து யூத மக்களை (யூதர்கள் எவ்வளவு பாதுகாப்பு உணர்வுடன் (security conscious) செயல்படுகின்றனர் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்!) கொல்வது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் என்றால், அதற்கு ஈடாக, இஸ்ரேலிய ராணுவமும் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்கின்றனர். பொதுவாக, இரு தரப்பிலும், அப்பாவி மக்களே (பெரும்பாலும் பெண்கள், சிறார்கள்) கொல்லப்படுகின்றனர்.
ஆகையால், இதில் இஸ்ரேலிய அல்லது பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு வீண் விவாதம் செய்வதில் ஒரு பயனும் இல்லை!!! அவர்கள் போடும் சண்டை போதாது என்று, இங்கு (இணையத்தில்) வேறு சண்டை போட வேண்டுமா என்ன? இந்திய ஆதரவளராக இருந்து கொண்டு ஒன்றிரண்டு நலிந்த இந்தியருக்கு உதவி செய்ய தலைப்பட்டால், நம் நாட்டுக்கு நலம். ஒன்று புரிகிறது, தமிழ் கூறும் இணைய நல்லுலகில், ஒருவர் தீக்குச்சியை பற்ற வைத்தால், அதை ஊதி ஊதி காட்டுத்தீயாக ஆக்குவதற்கு பலர் உள்ளனர் என்பது மிகத்தெளிவு :-((
போங்கய்யா! (இங்கு ஜெயம் திரைப்பட கதாநாயகி சதாவை மனதில் நினைத்துக் கொள்ளவும்!)
இஸ்ரேல் வரலாறு மற்றும் அப்பிரதேசத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும் (மற்ற வலைப்பதிவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் நோக்குடன்) இத்தொடர் அமையுமானால், மகிழ்ச்சியாக வரவேற்கிறேன்! நன்றி!
As Raghavan, as per his own words, is a staunch Israeli (Jewish! not clear) supporter, there could be some bias in the way he perceives (interprets and puts down) events that are anyway part of history. But, to get to know of things that happened in Israel and to Jews, in general, should be INTERESTING and WORTHWHILE, I suppose.
என்றென்றும் அன்புடன்
பாலா
வழக்கம் போல தன் பாணியிலேயே டோண்டு புரிந்துகொண்டாலும் ஒரு சின்ன விளக்கம்.
நான் பார்பனிய சதி என்று எதையும் சொல்லவில்லை. படித்து பார்க்கவும். பெரியார் பற்றி டோண்டு எழுதியதில் கூட அப்படி சொல்லவில்லை. 'இஸ்ரேல் ஆதரவாளன்' என்று அறிவிப்பதிலும், அதை பெருமையாய் சொல்லிகொள்வதையும் பார்பனியம்/இந்துத்வம் காட்டி வரும் ஒரு முகம் என்றுதான் குறிப்பிட்டேன்.போய் எந்த இந்துத்வ ஆதர்வாளரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். இஸ்ரேல் குறித்து இதே கருத்தைத்தான் குறிப்பிடுவார். அந்த போக்கை முன்வைத்தே குறிப்பிட்டேன்.(ஹிட்லருக்கு பின் இஸ்ரேல் என்று).
டோண்டுவிடம் 'ஒருவகை நேர்மை' வெளிப்படுவதாகத்தான் ஏற்கனவே சொன்னேன், சொல்கிறேன். இதன் அர்த்தம், சதி செய்யும் அளவிற்கு டோண்டுவிடம் திறமை இல்லை என்பதும் ஒரு காரணம்.
வெங்கட்டிற்கு பதில் சொன்னாரா? அதற்கு பெயர் பதிலா?
//"ஆனால் அனுபவித்த கொடுமைக்கு வட்டியுடன் சேர்த்து காசாக்கும் திறமையில் யாரும் யூதர்களின் காலடித்தூசுக்குகூட இணையாகமாட்டார்கள். "
அவர்கள் என்னதான் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? பேசாமல் சாக வேண்டுமா? அதைத்தானே ஐயா அவர்களின் விரோதியர் எதிர்ப்பார்த்தன? ஆனால் யூதர்கள் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. //
இதை போல தொடர்ந்து சொல்லிகொண்டிருக்க அறிவு, புலமை ஏதாவது வேண்டுமா? இதைத்தானே தொஅட்ர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.
// இப்போது கூட இஸ்ரேலில் ஓரிடத்தில் குடியுறுப்பை நிறுவினால் இஷ்டத்துக்குப் பெயர் வைக்க முடியாது (உதாரணத்துக்கு கே.கே.நகர்). புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், விவிலியச் சான்றோர்கள், சரித்திரப் பேராசிரியர்கள் ஆகியோர் அடங்கியக் குழுதான் இந்த வேலை செய்ய முடியும்.//
இதற்கு என்ன அர்த்தம்? இஷ்டத்திற்கு குடியிருப்பை நிறுவுவது பிரச்சனையா, அல்லது அதற்கு பெயர் வைப்பது பிரச்சனையா?
தொடர்ந்து ஆக்ரமிப்பை செய்வது, அதை காலத்தின் போக்கில் லெஜிடிமைஸ் செய்வது, பின் 'விவிலியத்தை பார்த்து' அதற்கு ஒரு பெயர் வைப்பது! அதை ஒரு குழுதான் செய்ய முடியுமாம்! என்னய்யா ஒளரல்!
ரொம்ப அலுப்பாயிருப்பதால் மீண்டும் இங்கே வருவதை நிறுத்திகொண்டு சொந்த வேலையை பார்க்க உத்தேசம். என் பதிவில் ஒரு தொடராய் இஸ்ரேல்/பாலஸ்தீன் பிரச்சனி குறித்து குறிப்புகள் வரும்-அது டோண்டுவிற்கு பதிலாய் இல்லாவிட்டாலும்.
# posted by ROSAVASANTH :
"நான் பார்பனிய சதி என்று எதையும் சொல்லவில்லை. படித்து பார்க்கவும். "
படித்துப் பார்த்தேன். நீங்கள் கீழே எழுதியதற்கு என்னப் பொருள் கொள்வது?
"ஒருக்காலத்தில் ஹிட்லர் ஆதரவாளர்களாகவும், பின்னர் இப்போதய சூழலுக்கு ஏற்ப இஸ்ரேல் ஆதரவாளராகவும், குள்ளநரித்தனம் செய்யும் பார்பனியத்தின் ஒரு முகம் காட்டும் டோண்டுவை கண்டிக்கிறேன்"
"தொடர்ந்து ஆக்ரமிப்பை செய்வது, அதை காலத்தின் போக்கில் லெஜிடிமைஸ் செய்வது, பின் 'விவிலியத்தை பார்த்து' அதற்கு ஒரு பெயர் வைப்பது! அதை ஒரு குழுதான் செய்ய முடியுமாம்! என்னய்யா ஒளரல்!"
நான் கூறுவது எல்லாம் நானே நேரில் படித்தது. இதை ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்தேன். "முடிவாகக் ஒன்று கூற ஆசைப்படுகிறேன் என்றுத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு மணிக்கணக்கில் பேசும் பேச்சாளர் போல இனிமேல் வரமாட்டேன் என்று எத்தனை முறைதான் கூறுவீர்கள்? இதுதான் உளறல். நான் மேலே எழுதியது அல்ல. அதுவும் விவிலியத்தைப் பற்றி என்னைக் கேட்டவருக்கு நான் கொடுத்த பதில்.
இஸ்ரேலை உலகப் படத்திலிருந்தே ஒழிப்பதுதான் என்றுக் கூறும் கூட்டத்தை அடக்குவது இஸ்ரேலின் கடமை. அதை அவர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் அதைத் தீவிரமாகத்தான் கையாள வேண்டும், கையாளுகிறார்கள். 1933-ல் பதவிக்கு வந்தப் பைத்தியக்காரன் உளறியதை சீரியசாக எடுத்துக் கொள்ளாததால் 60 லட்சம் பேரைப் பறி கொடுத்த இனம் யூத இனம். மக்கள்தொகையின் விகிதப்படிப் பார்த்தால் இது இந்தியாவில் 70 கோடியினர் இறப்பதற்குச் சமம்.
2000 வருட அடக்குமுறையின் போது யூதர்கள் எல்லாவித சமாதான முயற்சிகளையும் செய்துப் பார்த்து விட்டார்கள். அவர்கள் என்ன செய்தாலும் உதைக்கப்பட்டார்கள். உச்சக் கட்டமாக ஹிட்லர் யூதர்களை - பலர் வேறு மத்ங்களுக்கு சிலத் தலைமுறைகள் முன்னமே மாறியவர்கள் - சகட்டு மேனிக்குக் கொன்றான். உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆகவே இப்போது அவர்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. நல்லப் பெயர் வாங்கும் முயற்சியை விட்டு விட்டனர். உலகத்தாருக்கு இது புதிது. ஆகவே குதிக்கிறார்கள்.
அன்புடன்,
ராகவன்
Dear Muse,
Regarding Krav Maga:
WE SAVE LIVES
Krav-Maga (translates to Contact Combat) is the highly effective battle tested Israeli system of self defense, fighting skills and defensive tactics.
IKMF is based in Israel, the source of Krav-Maga
IKMF is a truly international organization with branches world wide
We give highest Level of education
Well trained & experienced Israeli & non Israeli instructors
Internationally Recognized Certifications of levels & grades
Instructors Courses and further education. All instructors are certified by the Israeli H.Q. of the IKMF.
Training/education for Military, Law-Enforcement & Security agencies
Possibilities to train in Israelincluding Touring & Training events
IKMF is led by Eyal Yanilov , the KM founder's right hand for over 15 years, the only person holding KM highest level and Founder's Diploma of Excellence.
See:
http://www.krav-maga.com/index2.html
If you enter "Krav Maga" within quotation marks in Google search, you get more than 200,000 hits. Enjoy.
Regards,
Dondu Raghavan
"இதை போல தொடர்ந்து சொல்லிகொண்டிருக்க அறிவு, புலமை ஏதாவது வேண்டுமா? இதைத்தானே தொஅட்ர்ந்து செய்துகொண்டிருக்கிறார்."
A matured discussion should not have such personal attacks. Any readers of this blog know that Mr. Dondu is more knowledged than those who accuse him.
I have respect for all those who comment and write in the blogs. However, this type of reactions would demean their real value.
உலகத்திடம் நல்ல பேர் வாங்குவது யாருக்கும் முக்கியமல்ல. அது முட்டாள்தனமானதும் கூட. அவரவர்க்கு அவரவர் வாழ்வுதான் முக்கியம். தன் இருப்பை நிலைநாட்ட ஓர் இனம் சாத்தியப்படும் எந்த வழியையும் உபயோகிப்பது தான் புத்திசாலித்தனம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
"உலகத்திடம் நல்ல பேர் வாங்குவது யாருக்கும் முக்கியமல்ல. அது முட்டாள்தனமானதும் கூட. அவரவர்க்கு அவரவர் வாழ்வுதான் முக்கியம். தன் இருப்பை நிலைநாட்ட ஓர் இனம் சாத்தியப்படும் எந்த வழியையும் உபயோகிப்பது தான் புத்திசாலித்தனம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
கண்டிப்பாக. அதே நேரத்தில் உதவிகளை செய்யத் தோதான மன நிலையில் இருக்கும் நாட்டில் போய் சதி செய்வதும், அவர்கள் தலைவனைக் கொல்வதும், பிறகும் உதவி கேட்பதும் பைத்தியக்காரச் செயல்களே. கையையும் காலையும் சும்மா வைத்துக் கொண்டிருந்தாலே பல உதவிகள் கிடைத்திருக்கும் என்ற நிலையிலிருந்தப் போது தேவையில்லாமல் வந்த இடத்தில் பிரச்சினைகளைக் கிளப்பி ஆதரவை சைபராக்கிக் கொண்டத் தலைமை அந்தப் போராடும் இனத்துக்கு நல்லதல்ல. யூதர்களைப் பார்த்து எல்லோரும் பாடம் கற்க வேண்டும். எங்கு மோத வேண்டுமோ அங்கு மட்டும் மோதுவார்கள்.
அராஃபாட் இவ்வாறு செய்ததால்தான் 1982-ல் இஸ்ரேல் அவரை லெபனானிடமிருந்து விரட்டியப் போது அவரையும் அவர் கூட்டாளிகளையும் வைத்துக் கொள்ள முதலில் எந்த அரபு நாடும் முன் வரவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மைதான். உதவிய கிட்லர் செத்தது இஸ்ரேலிருக்குப் பயங்கர பின்னடைவு?
"உண்மைதான். உதவிய கிட்லர் செத்தது இஸ்ரேலிருக்குப் பயங்கர பின்னடைவு?"
புரியவில்லை. கிட்லர் என்றப் பெயரில் யாரையும் கேள்விப்பட்டதில்லை. அவர் யார்? எப்படி இஸ்ரேலியருக்கு உதவினார்? கூற இயலுமா? நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவர் கிட்லர் என்று யாரை சொல்கிறார் தெரியவில்லையா? இந்தியர்கள் வெட்கமில்லாமல் 'ஆமாசாமி' போடுவோம் .
"அவர் கிட்லர் என்று யாரை சொல்கிறார் தெரியவில்லையா? இந்தியர்கள் வெட்கமில்லாமல் 'ஆமாசாமி' போடுவோம் ."
யாரைச் சொல்லுகிறீர்கள் என்பது இன்னும் புரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தக் கவிதைகள் - இந்த விவாதத்திற்கு தொடர்பாக இருக்கலாம்/இல்லாமல் இருக்கலாம். இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்கள் இதைப் படிப்பதால் பாதிப்பொன்றும்(!)இல்லை என்பதால்... உள்ளிடுகிறேன்.
ஒரு யூத நண்பனுக்கு
சாத்தியமற்றதை
என்னிடம் கேளாதே
நட்சத்திரங்களைக் கொண்டு வரும்படி
சூரியனிடம் நடந்து செல்லும்படி
என்னிடம் கேளாதே
கடலை வற்றவைக்கும்படி
பகலொளியைத் துடைத்து விடும்படி
என்னைக் கேளாதே
எனது கண்களை
எனது காதலை
எனது இளமை நினைவுகளை
அழித்து விடும்படி என்னைக் கேளாதே
நான் ஒரு வெறும் மனிதன்
ஓர் ஒலிவ மரத்தின் கீழ்
நான் வளர்ந்தேன்
எனது தோட்டத்துக் கனிகளை
நான் புசித்தேன்
திராட்சை வனங்களில்
வைனை நான் குடித்தேன்
பள்ளத்தாக்குகளில்
கள்ளிப் பழங்களை
அதிகம் அதிகம் நான் ருசி பார்த்தேன்
எனது செவிகளில்
வானம்பாடிகள் பாடல் இசைத்தன
நகரங்களிலும் வயல்வெளிகளிலும்
வீசிச் சென்ற சுதந்திரக் காற்று
எப்போதும் என்னைச் சிலிர்ப்படைய வைத்தது
எனது நண்பனே
எனது சொந்த நாட்டினை விட்டுப்
போகுமாறு
நீ என்னைக் கேட்க முடியாது.
-பெளசி அல் அஸ்மார்
2.
வாக்குமூலம்
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
எனது அட்டையின் இலக்கம் 50, 000.
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன் கற்கள் உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும்
ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ்
முழந்தாள் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
கோபச் சூழலில் அனைத்தும் இயங்கும்
ஒரு நாட்டின் புதல்வன்
காலம் பிறக்க முன்
யுகங்கள் உதயமாக முன்
சைப்ரஸ் மரங்களுக்கும் ஒலிவ் மரங்களுக்கும் முன்
களைகள் முதிர்ச்சியடைய முன்
ஆழச் சென்றன எனது வேர்கள்
எனது தகப்பன் ஓர் எளிய உழவன்
குலவழி அற்ற உழவன் என் பாட்டன்
எனது வீடு ஓர் வைக்கோல் குடிசை
பட்டங்கள் அற்ற வெறும் பெயர் எனது
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
எனது தலைமுடி மிகவும் கறுப்பு
எனது கண்கள் மண்ணிறமானவை
எனது அரபுத் தலையணி:
அதைத் தொடுவோரின் கைகளைப் பிராண்டும்
எனது விலாசம்:
மறக்கப்பட்ட ஓர் தூரத்துக் கிராமம்
அதன் தெருக்களுக்கு பெயர்கள் இல்லை
அதன் மக்கள் வயல்களில் உழுவோர்
கல் உடைக்கும் இடத்திலும் உழல்வோர்
எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
என் முன்னோரின் திராட்சை வனத்தை
திருடிக்கொண்டவன் நீ
நான் உழுத நிலத்தை
என் குழந்தைகளை திருடிக்கொண்டவன் நீ
எனக்கும் எனது பேரர்களுக்கும்
நீ விட்டு வைத்தவை இப் பாறைகள் மட்டுமே
அனைத்துக்கும் மேலையும்
இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் நான் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்
கவனம்
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்
எனது சினத்தை அஞ்சிக் கவனமாய் இருங்கள்.
-மஹ்மூட் தர்வீஷ்
மொழிபெயர்ப்பு: எம்.ஏ.நுஃமான்
நன்றி: "பலஸ்தீனக் கவிதைகள்"
"If you enter "Krav Maga" within quotation marks in Google search, you get more than 200,000 hits."
Wow. 200,000 hits. That is really amazing! When that much information is available on the net, I need not have provided details on Krav Maga. Blame it on my appreciation for the Israeli's attitude of their own version of everything and on my belief that martial art of a particular society represents their psychology, physiology, philosophy and the necessity of survival. I should not get triumphed by such trivial temptations.
இஸ்ரேல் உருவானதை ஐரோப்பியர்கள் ஆதரித்ததற்கு இன்னொரு காரணமும் சொல்வார்கள்.
இவர்கள் தங்கள் நாட்டில் இருப்பதை விரும்பாததால் எப்படியாவது இந்த தொல்லை ஒழிந்தால் சரி
என்று இந்த நாட்டை உருவாக்கித் தந்ததாக சொல்வார்கள்.
friends interesting discussions.
Need to remember that all Arabs are not muslims, Many of my arab friends are Catholic Christians.
Rosavasanth, I have had discussions with far left and right, interesting thing is the far left is equally worse as far right, but Indian media cleverly shows only the 'right' side as fanatics while downplays the other side (leftist). I will give more inputs on this later. Remember Indian communist are 'oxymoron' in a democracy, becoz they don't believe in it but still they do get elected.
Isn't Democracy a wonderful thing, where everyone has a say.
கருத்துக்கு நன்றி நெருப்பு சிவா அவர்களே. பாலஸ்தீன தீவிரவாதத்தை சப்பைகட்டும் அதன் அடிவருடிகளிடம் நாங்கள் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சங்கர நாராயணன் அவர்கள் பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://sankarmanicka.blogspot.com/2006/04/blog-post_27.html
பின்னூட்டத்தை நகல் எடுக்க மறந்து பப்ளிஷ் பட்டனை அழுத்தி விட்டதால் அதை என் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. இதன் நகலை அங்கு இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/2_29.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இவ்வளவு பேர் இவ்வளவு விளக்கமாக பின்னூட்டங்கள் எழுதியும், இத்தனை நாட்களுக்குப் பிறகு உங்கள் இசுரேல் ஆதரவு பதிவுகளை மீள் பதிவிட்டுள்ள உங்கள் கெட்டித் தனத்தை எண்ணி வியக்கிறேன். இரண்டு துருவங்களை ஆதரிக்கும் இரு தரப்பார் வாதம் செய்வது நேர விரயம்தான் என்பார் என் நண்பர் ஒருவர். அதற்கு, அப்போதைக்கு நேர விரயம் என்று பட்டாலும் எதிராளி சொன்ன கருத்துகள் மனதில் பதிந்து தீவிர நிலைகள் ஓரளவு மிதப்படும் என்று நான் பதில் சொல்வேன்.
இசுரேல் பற்றிய உங்கள் பதிவு, அதற்கான பின்னூட்டங்கள் அதை மீள் பதிவு செய்தது இதைப் பார்க்கும் போது என் நண்பர் சொல்வது சரி என்றே படுகிறது.
அன்புடன்,
சங்கர நாராயணன் அவர்கள் பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://sankarmanicka.blogspot.com/2006/04/blog-post_27.html
"மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய ஆடுகளத்தில், அவர்கள் வகுத்த விதிகளின்படி நடக்கும் போட்டியில் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்று இறங்குவதுதான் இன்றைய அமெரிக்க கலாச்சார மோகம்."
நண்பர்களோ எதிரிகளோ நிரந்தரம் அல்ல, நம் நாட்டு நலன்கள்தான் நிரந்தரம் எனும் தாரக மந்திரம் அமெரிக்கக் கண்டுபிடிப்பே அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயோ அதற்கும் முன்னமேயிலிருந்தோ கூட இது நடந்து வந்திருக்கிறது. அர்த்த சாத்திரம் எழுதிய கௌடில்யனும் கூறியிருக்கிறான், திருக்குறளில் பொருட்பாலில் வரும் பல குறள்களும் கூட அரசர் எவ்வாறு நாட்டு நலனை எல்லாம் காக்க வேண்டும் என்ப்தையெல்லாம் வகைபடுத்தி வைத்துவிட்டன.
முதலில் நாம் மற்றவருக்கு எடுத்துக் காட்டாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் கவைக்குதவாது. அவ்வாறு இளிச்சவாய்த்தனமாக நடந்து கொண்டுதான் சீனாவிடம் இவ்வளவு இடங்களை இழந்து நிற்கிறோம்.
அதெல்லாம் விடுங்கள், இஸ்ரேலுக்கு வருவோம். அது உண்டான நாளிலிருந்து சுற்றிலும் பகைவர்கள். அத்தனை பேருக்கும் தண்ணி காட்டி வந்திருக்கிறது. அதனிடமிருந்து கற்று கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு.
முக்கியமானது தன்னம்பிக்கை. பாலஸ்தீனரிடம் அது இல்லை. இல்லாவிட்டால் ஜோர்டானிடமும் எகிப்திடமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை இழந்து நிற்க மாட்டார்கள்.
அவர்களோடு சேர்ந்து கொண்டால் நாமும் இழப்போம்.
இந்தப் பின்னூட்டத்தின் நகலை என்னுடைய இஸ்ரேல் பற்றிய இரண்டாம் பதிவிலும் பின்னூட்டமிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/2_29.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மா. சிவகுமார் அவர்களே,
நான் இஸ்ரேல் பதிவுகள் போட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆயிற்று. இந்த இடைபட்டக் காலத்தில் பல புதிய பதிவாளர்கள் வந்துள்ளனர். அவர்களது எதிர்வினையும் தேவை என்பது ஒரு காரணம், நான் ஏன் அவற்றை மீள்பதிவு செய்கிறேன் என்பதற்கு.
இஸ்ரேல் பற்றிய பல பொய்கள் பலரால் விடாது அவிழ்த்து விடப்படும் நேரத்தில் அவற்றுக்கு சரியான பதில்கள் கூறுவது இன்னொரு காரணம். இவ்வாறு பல காரணங்கள் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி அன்னியன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிகச்சிறந்த பதிவு. சரக்கின்றி சத்தமிட்டுச் சேறடிக்கும் கூட்டத்தினைப்பொருட்படுத்தாது தொடர்ந்து எழுதுங்கள். இஸ்ரேலின் பலத்தின் பின்னணியில் இருக்கும் அமெரிக்க ஆதரவையும், எப்படி நிதி மற்றும் செய்தித்துறைகளில் உள்ள யூதர்களின் ஒட்டுமொத்த ஆதரவு சிறந்த ஒரு இஸ்ரேலியச் சார்பு அழுத்தத்தை உலக அரங்கில் அமெரிக்கா மூலம் உருவாக்க வல்லதாக இன்று உள்ளது என்பதையும் காணும்பொழுது பழைய இந்தியா புதிய இஸ்ரேலிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது எனத் தோன்றுகிறது.
நன்றி அருணகிரி அவர்களே,
அவ்வாறே செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஒரு சாதியினர் அனைவரும் இசுரேல் ஆதரவாளர்கள், இசுரேலை எதிர்ப்பவர்கள் எல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகள், இந்தியா அணுகுண்டு வைத்திருப்பதை எதிர்ப்பவர்கள் எல்லோரும், இரான் / சீன குண்டுகளை ஆதரிக்கிறார்கள்."
கண்ணில் வண்ணக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் இப்படித்தான் தெரியும். சொல்ல வந்தக் கருத்துகளை புரிந்து கொண்டு பதிலிடுங்கள்.
டோண்டு சார், நாம் மற்றவருக்கு எடுத்துக் காட்டாக இருப்பதற்காக மட்டும் இந்தியா நியாயங்களை பின்பற்ற வேண்டாம், நியாயங்களை பின்பற்றினால், நம்மை பிறர் வழி காட்டியாக கொள்வார்கள் என்பதுதான் என் கருத்து. கொஞ்சம் அடாவடியாக செயல்படும் பெரிய மனுசனின் நிழலில் நின்று கொண்டால் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்ற முட்டாள்தனத்தைக் கைவிட வேண்டும் என்பது என் கருத்து.
இசுரேலைப் பற்றி நீங்கள் எழுதுபவை எல்லாம் உண்மையில்லை என்று யாரும் சொல்லவில்லை. அந்த உண்மைகள் இசுரேலின் செயல்களையும், அதற்கு ஆதரவு தெரிவிப்பதையும் நியாயப்படுத்த மாட்டா என்பதுதான் வாதம்.
"நியாயங்களை பின்பற்றினால், நம்மை பிறர் வழி காட்டியாக கொள்வார்கள் என்பதுதான் என் கருத்து."
நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்கள். ஆனால் ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கையில் அதற்கெல்லாம் இடமேயில்லை. நாட்டின் சுயநலம்தான் முன்னிருக்க வேண்டும். இதை நான் கூறவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக இதுதான் சத்தியமாக இருந்திருக்கிறது.
நாம் நம் நலனைப் பார்ப்போமே, மற்றவர்கள் ஏன் நம்மைப் பின்பற்ற வேண்டும்? நீங்கள் நினைப்பதுபோல செயல்பட்டுத்தான் நேரு மற்றும் இந்திரா காந்தி காலகட்டங்களில் நாடு பல அவமானங்களை சந்தித்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிவக்குமார அவர்கள் கூறுவது போகாத ஊருக்கு செல்லும் வழியேயாகும். நாட்டாமை கூறுவதுபோல இந்தியா வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மா.சிவகுமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://masivakumar.blogspot.com/2006/05/blog-post_01.html
"அப்படி முடிவு செய்யத்தான் அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் உள்ளனர். நிறுவனத்தில் அதிகப்படியாக வரும் லாபத்துக்கு மூடி மறைக்காமல் முழுவதாக வரி செலுத்துவது, மிஞ்சி இருப்பதை பங்கு தாரர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களும் தம்முடைய வருமான வரியைச் சரியாகச் செலுத்துவதும்தான் இவர்கள் செய்யும் மிகப் பெரிய சமூகத் தொண்டாக இருக்கும்."
அரசாங்கத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அப்பணத்தைக் கொடுத்தால் என்னவாகும் என நினைக்கிறீர்கள்? அப்ப்டியே சம்பந்தப் பட்ட மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் சின்ன வீடுகளுக்கும்தான் பணம் போகும். அதற்கு சம்பந்தப் பட்ட நிறுவனமே செய்வது மேல். கொடுக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கெல்லாம் கொடுக்கும் அரசு என்ன முட்டாளா? அந்த விதிமுறைகளை சரியானபடி உபயோகித்து, வரிகளைக் குறைத்துக் கொள்வதும் அரசால் அனுமதிக்கப் பட்ட ஒரு நிலைதானே.
"ஆனால், பொருளாதார விதிகளின் படி சரியாக இயங்கும் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் அதிகப்படியான லாபமே இருக்க முடியாது. அதாவது, பொருட்களை வாங்கும் போதும் விற்கும்போதும், சமமாகப் போட்டியை ஒரு நிறுவனம் சந்தித்தால் வரும் பணம் செலவுகள் எல்லாம் போக எதுவும் மிஞ்சாது."
ஆகா, என்ன பொருளாதார சிந்தனை சார் உங்களுக்கு? எதுவும் மிஞ்சாமல் அப்படியே வாயில் விரலை வைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதானா?
நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பது தேச விரோதம், இந்தியா அயல் நாட்டுக் கொள்கையில் தன் சுயநலனைப் பார்க்காமல் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும், (எனது மற்றும் சங்கர நாராயணன் அவர்கள் இட்ட இஸ்ரேல் பதிவுகளில் நீங்கள் எழுதியது) அடாடா என்ன சிந்தனைகள். நல்ல வேளையாக முடிவு எடுக்கும் இடங்களில் நீங்கள் இல்லை. இருந்திருந்தால் நாடே கப்பரையை ஏந்தி பிச்சை எடுக்கப் போயிருக்கும்.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை உங்களுடைய பின்னூட்டம் வந்துள்ள என்னுடைய இந்த இஸ்ரேல் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/2_29.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu sir,
Israel was fighting for its survival until the 80s and the end of the cold war in 1991 changed the equations. Since the Oslo accords, Israel missed many excellent oppurtunities to make lasting peace with Palestinians.
Isaeli politicians are like our own
communal and caste based politicians. they whip up mass hysteria to up their careers. Netaynhu (spelling !!) was one such guy. In 2000 he purposely visted a controverisial area and mosque to stir up the current infitida. His politcal career was ending and he played a machiavillian role to re-surrect it. Pls re-read about that.
Israeli people are as naive and gullible and ill-informed like us.
Three former Mossad chief's had issued a joint statement some years ago, condmening the actions of Israeli politicians in perpetuating the violence. They argued that many actions of the state will create further rift and
create more Palestinian anger.
These there men must be knowing the
ground reality better than anyone..
US (because of the short-sighted lobbying by its powerful Jewish lobby) blindly supported whatever
Israel did ; vetoed many UN resolutions which were fair and correct. Bin Laden, who was sponsored by US in the 80s turned against US mainly because of this.
Religious feelings (Islamic terrorism) is a misnomer. after
9/11 he declared that US will know no peace until the Palestinians do.
In my opinion, both US and Isarel acted foolishly and arrogantly and
US paid a very dear price for its folly. I am not justifying bin laden,etc nor do i support the Palestinian PLA blindly. But if a people feel that injustice is meted out to them and they have nothing to loose but thier lives,
then no one can stop suicde bombers
and rebellion.
Until and unless Israel and US understand this, there will be no solution. and recently one Israli
ex-mossad man had asked the Palestinian leadership to bypass the Israel govt and go to the Israeli people directly for peace talks. Live and let live should be the motto ; and the entire Arab world is now ready to recognise Israel if it can recognise Palestine state.
We praise our Bhagath Singh, Vanjinathan and Subash Bose. They were 'terrorists' in the eyes of the British. So who is correct ?
one man's terrorist is another man's freedom fighter..
But Palestinian leadership is corrupt and divided. and they do not seem to understand and accept the core values of democracy...
When will all this end ?
athiyaman.blogspot.com
//Live and let live should be the motto ; and the entire Arab world is now ready to recognise Israel if it can recognise Palestine state.//
எங்கிருந்து இந்தப் புரிதலைப் பெற்றீர்கள்? சமீபத்தில் 1978-ல் எனது ஃபிரெஞ்சு ஆசிரியருடன் இஸ்ரேல் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவர் சொன்னார், அமெரிக்காவின் துணை இருக்கும் வரை இஸ்ரேலை அழிக்க முடியாது, ஆகவே இஸ்ரேல் தாராளமாக பாலஸ்தீனியருக்கு விட்டு கொடுக்கலாம் என்று. செக்கோஸ்லாவாக்கியா அவ்வாறு பிரிட்டனையும் பிரான்ஸையும் நம்பித்தான் 1938-ல் சந்தியில் நிறது என்றேன்.
1948-ல் பாலஸ்தீனர்களுக்கு வெஸ்ட் பேங்க், காஸா திட்டு ஆகிய இடங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டன. இஸ்ரேலுக்கு கொடுத்த நிலப்பரப்பில் அவர்கள் உடனடியாக அரசு நிறுவி செயல்பட ஆரம்பித்தானர். பாலஸ்தீனியர்களும் செய்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கும் பொருளாதார உதவிகள் கொடுத்திருக்கும் அமெரிக்கா. ஆனால் அவர்களை அவ்வாறு செய்ய விடாமல் சுற்றியிருந்த அரபு நாடுகள் பார்த்து கொண்டன. அப்போதுதான் உருவாகியிருந்த இஸ்ரேலை அழிக்க அதன் மேல் தாக்குதல் நடத்தின. யூதர்களை முழுக்க முழுக்க கொல்வதற்காக பாலஸ்தீனியர்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்று கூறினர். யுத்தம் நடந்தது. இஸ்ரேலை அழிக்க முடியவில்லை. இப்போதாவது பாலஸ்தீனியர் தங்கள் இடத்தில் அரசு நடத்தியிருக்கலாம். அதையும் அவர்கள் செய்யவில்லை. மாறாக, அகதிகள் முகாமில் கிடைக்கும் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருந்தனர். வெஸ்ட் பேங்கை ஜோர்டானும், காஸா திட்டை எகிப்து அபகரித்து கொண்டதுதான் நடந்தது.
1967-ல் இஸ்ரேலை முழுக்க அழிக்க இன்னொரு யுத்தம் எகிப்து, ஜோர்டா, சிரியா, லெபனான் நடத்தின. மறுபடி உதை வாங்கின.
ஆக, நீங்கள் என் வீட்டுக்கு வந்தப் போது நான் ஏற்கனவே கூறியதுதான். நீங்கள் 1967-க்கு முந்தைய நிலைக்கு இஸ்ரேல் செல்ல வேண்டும் என்கிறீர்கள். 1967-லோ 1948 நிலை என்றனர். வேடிக்கைதான்.
//But Palestinian leadership is corrupt and divided. and they do not seem to understand and accept the core values of democracy...//
இவர்களுடன் என்ன ஒப்பந்தம் வைத்து கொள்வது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதிலுள்ள சாதகங்களை மட்டும் எடுத்து கொண்டு அடுத்து வரும் அரசு ஒப்பந்தம் வெறும் பேப்பர் என்றுதான் கூறும்.
ஒன்று நிச்சயம். இஸ்ரேல் இன்னும் தன்னைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளது. இஸ்ரவேலர்கள் மஸாடாவை மறக்கவில்லை. நமக்கென்ன கூறிவிடுவோம், இஸ்ரேல் அராபியர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று. ஆனால் அநுபவிக்கப் போவது இஸ்ரேல்தானே.
அரேபியர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu sir,
you haven't answered about the 3 mossad ex-cheif's requests, political expediancey of the leadership, etc. And currently there is a hot debate within Israel about the effectiveness and
correctness of the attack against Lebnon. and the present PM is like to loose his post because of this.
and within US now questions and doubts about the US jewish lobby and blind support to Israel is being debated and discussed openly.
I didn't say Israel should pull back to 1967 or 48 borders. but
it could have halted its provocative and costly settlements in Palestine areas sometime ago.
and can recognise Palestinean govt.
While UK can negotiate with IRA and
settle N.Ireland problem, why not
Israel do it. most people there and
world wide agree that there can never be a millitary solution to a
ethnic problem.
And why did only US veto many UN resolutions against Israel while EU other neutral nations supported the resolutions ? do you think that the other nations are unduly partial or biased towards the Arabs or crazy or hate Israel ?
Osma bin Laden attacked US only because of its blind support to
Israrel, nothing else.
Pls take an objective stand and do not support Israel blindly. Are all actions of Israel and US correct, fair and just ? or they
saints ?
One former PM of Israel was assasinated by a fanatic because he dared to do the right thing...
athiyaman
//you haven't answered about the 3 mossad ex-cheif's requests, political expediancey of the leadership, etc. And currently there is a hot debate within Israel about the effectiveness and
correctness of the attack against Lebnon. and the present PM is like to loose his post because of this.
and within US now questions and doubts about the US jewish lobby and blind support to Israel is being debated and discussed openly.//
இஸ்ரேலும் சரி, அமெரிக்காவும் சரி ஜனநாயக நாடுகள். தத்தம் நலனுக்கு மேலோட்டமாக விரோதமாக இருக்கும் கருத்துக்களையும் விவாதிக்கும் நாடுகள். ஆனால் அதே மாதிரி இஸ்ரேல் பாட்டுக்கு இருந்து விட்டு போகட்டும், நாம் நமது பாலஸ்தீனத்தை நிர்வகிப்போம் என்று எங்காவது ஒரு கருத்தாவது அரேபிய நாடுகளில் வெளிப்படையாக எப்போதாவது கடந்த 60 ஆண்டுகளில் நடந்துள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான் கேள்விப்பட்டதில்லை.
இப்போது மொஸாட் தலைவர்கள் கூறியதற்கே வருவோம். நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஓய்வு பெற்றவுடன் அவர்களும்ம் அரசியலுக்கு வந்து விட்டார்களோ என்று. அப்படித்தான் என்றால் மற்ற அரசியல் தலைவர்களை இவர்கள் மட்டும் அதிக நேர்மையுடன் எங்கே நடந்து கொள்ளப் போகிறார்கள்?
//Osma bin Laden attacked US only because of its blind support to
Israrel, nothing else.//
ஒசாமா சொல்வதையெல்லாம் அப்படியே உண்மை என நம்ப வேண்டுமா என்ன? அவனுக்கு வேண்டியது இஸ்லாமிய தீவிரவாதம் மூலம் இசுலாமிய மதத்தை உலகெங்கும் பரப்ப வேண்டியது. இப்போதைக்கு இஸ்ரேல் அவனுக்கு கிடைத்துள்ள ஒரு சாக்கு, அவ்வளவே.
//I didn't say Israel should pull back to 1967 or 48 borders.//
மன்னிக்கவும் அவ்வாறு கூறியதாகத்தான் எனக்கு பட்டது. அது எனது தவறான புரிதல் என்றால் மன்னிக்கவும்.
//Pls take an objective stand//
இஸ்ரேல் சம்பந்தமாக டோண்டு ராகவன் அப்ஜக்டிவாக இருப்பதா? :))
//Are all actions of Israel and US correct, fair and just ? are they
saints?//
அவர்கள் புனிதர்கள் என்று நான் கூறவில்லை. அவர்கள் இஸ்ரேலின் பாதுகாவலர்கள்.
நான் இஸ்ரவேலர்களின் பிரச்சினையை 2000க்கும் அதிக ஆண்டுகளின் சரித்திரமாகப் பார்க்கிறேன். யூதர்கள் தங்களால் முடிந்த வரை பலமுறைகள் நன்றாக நடந்து நல்ல பெயர் எடுக்க முனைந்து பார்த்து விட்டனர். இந்த நீண்ட கால அலைச்சல்களில் எந்த தேசத்துக்கு சென்றாலும் அந்த தேசத்தின் உன்னதத்துக்கு பாடுபட்டனர். இருப்பினும் என்ன ஆயிற்று? கால தேச வர்த்தமானத்தை மீறி யூதர்களைக் கொல்வ்து மட்டும் விடாது நடந்து வந்திருக்கிறது. உச்சக் கட்டமாக அவ்ர்களில் வேறுமதங்களுக்கு மாறியவர்களையும் தேடிப் பிடித்து நாஜிக்கள் கொன்றதும் நடந்தது. இவ்வளவு ஆண்டுகள் கஷ்டப்பட்டு இஸ்ரேல் உருவானது. பாலைவனத்தை பூக்கச் செய்தனர். இன்னும் அவர்கள் மற்றவர்கள் கண்ணை உறுத்துகின்றனர். ஆகவே இப்போது நடப்பது என்னவென்றால், மற்றவர்கள் நல்லபிப்பிராயம் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் இருக்கும் முறையில் இருந்து கொள்கிறோம் போடா ஜாட்டான்களா என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir,
If Bin Laden wants to target Christianity, he would have attacked the Vatican first. He was
supported and sponsored by US during the cold war ; in Afhagnistan. (so was Saddam to contain Iran). Bin laden is neither
crazy nor a fool to turn aginst US for religious reasons. I had quoted his statement after 9/11.
US paid a dear price for its folly.
Germany will never be targeted by any terrorists because after learning a bitter lesson in WW 2, they have kept themselves aloof from all world affairs and remain low profile and neutral..
I too admire Israel for its acheivemnts and courage under adversity. and their economic miracle and ingenuity is great. they invented the drip irrigation and many innovative methods.
all this until 1990s.
now they are a powerful and arrogant bully who never learnt to make peace. Pls read about the peace movements within Isreal and the opinion of many Isrealis.
those 3 mossad chief's were realistic and pragmatic ; they never have any political ambitions.
and Sharon, the crafty politician who unleashed the current intifida to save his career is now in coma for over a year. karma vinay and ool vinai...he has the blood of thousands in his hands.
hopefully the recent debacle of attacking Lebnon and the conflict within PLA (hamas vs fatah) has made a unstable peace and makes the road map for peace a bit easy...
and US has a talent for creating a severe headache for itself and the world after spending a trillion dollars !!. Remember its Viatnam adventure. And Iraq (and esp arming Saddam in the 80s). They are somewhat crazy.
The only US (and NATO) action that
i wholeheartedly support was their
bombing of Serbia in 1999 to stop the Serbian genocide of mulims in
Bosnia. but for NATO bombing the
genocide would have continued.
US should have used the Bosnian
muslims it saved as a propoganda
weapon against 'Islamic' terrorits.
anbudan
Athiyaman
Post a Comment