4/29/2006

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 1

மிகுந்த யோசனைகளுக்கு பிறகு இஸ்ரேலைப் பற்றிய எல்லா ஐந்து பதிவுகளையும் மீள் பதிவு செய்யத் தீர்மானித்துள்ளேன். இதற்கு கடைசி தூண்டுதல் இஸ்ரேலில் இருக்கும் சங்கர நாராயணன் அவர்களின் பின்னூட்டம் கொடுத்தது. அதே நேரம் அவரும் இஸ்ரேலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை விவரித்து பதிவுகள் போட்ட வண்ணம் இருக்கிறார்.

அவரும் நானும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறோம். இஸ்ரேலுடன் உறவை பலப்படுத்துவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்பதே அது. பாலஸ்தீனிய ஆதரவு நமக்கு என்ன பெரிதாகக் கொடுத்து விட்டது? எல்லா ஆதரவையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர், ஆனால் பாகிஸ்தானுடன் பிரச்சினை என்றவுடனேயே அவர்கள் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானையே ஆதரிக்கின்றனர். வெளி உறவு விஷயத்தில் தேசத்தின் நலன்கள்தான் நிரந்தரம், நண்பனோ அல்லது எதிரியோ அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது முதல் பதிவுன் மீள்பதிவு பழைய பின்னூட்டங்களுடன்.

ஜூன் 5, 1967. நாசர் இஸ்ரேலியத் துறைமுகத்துக்கு வழியை அடைத்தார். ஐ.நா. துருப்புகளை சினாய் பாலைவனத்திலிருந்து திரும்பச் செல்ல வைத்தார். அப்போதைய பத்திரிகைகக்ளில் உலகின் அப்பகுதியின் வரைபடம் காண்பிக்கப்பட்டது. அதில் அம்புக் குறிகள் எல்லாம் இஸ்ரேலுக்குள் சுற்றியுள்ள அரபு நாடுகளிலிருந்து அதன் உள்ளே செல்வது போலக் காண்பிக்கப்பட்டிருந்தன.

ஜூன் 6. யுத்தம் ஆரம்பம். அதற்கு முந்திய நாள் இஸ்ரேல் தங்கள் ரிஸ்ர்வ் படைகளைத் திரட்டியது. சில நிமிடங்களில் அழைப்புகள் அனுப்பப்பட்டு இஸ்ரேலிய வீரர்கள் தத்தம் யூனிட்டுகளுக்குப் பயணப்பட்டனர். போகும் வழியில் வண்டியிலேயே முகச்சவரம் செய்து கொண்டு, போர் உடைகளை அணிந்துச் சென்றனர். இஸ்ரேலிய அரசியல் மற்றும் ராணுவத் தளபதிகள் ஒருங்கிணைந்துத் துல்லியமாகத் திட்டமிட்டனர்.

முதல் இரண்டு நாட்களில் எகிப்தின் அத்தனைப் போர் விமானங்களும் தரையிலேயே அழிக்கப் பட்டன. மற்ற நாடுகளின் விமானங்களும் தப்பவில்லை. அரேபியர்கள் முட்டாள்தனமாக தாங்கள் வெற்றி பெற்று வருவதாக யுத்தப் பிரசாரம் செய்ய அவர்களின் புரவரலரான சோவியத் யூனியனும் ஏமாந்து விட்டது. கோலன் உயரங்களிலிருந்து இஸ்ரேலிய வயல்களைத் தாக்கி வந்திருக்கிறது சிரியா. அவற்றைப் பிடித்தது இஸ்ரேலியரின் இன்னொரு படைப் பிரிவு. அதுவும் சிரியர்கள் எதிர்ப் பார்க்காத கோணத்திலிருந்து வந்தது அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. லெபனான் இரண்டு விமானங்களை இழந்து இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று ஒதுங்கியது. ஜோர்டானுக்கு இஸ்ரேல் சண்டையிலிருந்து விலகி நின்றால் அதைத் தான் தாக்கப் போவதில்லை என்று செய்தி அனுப்பியது. அது கேட்காமல் யுத்தத்தில் கலந்துக் கொள்ள, மிக அதிக உதை அதற்குத்தான். சொல்லப் போனால் இஸ்ரேலியர் மற்ற எல்லா முனைகளை விட ஜோர்டான் முனையில் உயிரை வெறுத்து சண்டையிட்டனர். அவர்களை ஜோர்டானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெரூசலத்தைப் பிடித்ததும்தான் நின்றனர் இஸ்ரேலியர். இதற்குள் யுத்தம் ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிவிட்டன. சோவியத் யூனியன் அரேபியர்களுக்குக் கொடுத்த ராணுவத் தளவாடங்களில் முக்கால்வாசி இஸ்ரேலியரிடம். இஸ்ரேலிய தளபதி மோஷே தயான் உலகப் பிரசித்திப் பெற்றவரானார். சோவியத் யூனியன் போர்நிறுத்தத்திற்கு வற்புறுத்த, போர் 6 நாட்களில் முடிவுக்கு வந்தது.

அது வரைக்கும் ஜெர்மானியர்கள் யூதர்களைப் படுகொலை செய்த விவரங்களைப் படித்து ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். இஸ்ரேலின் இந்த வெற்றி எனக்கு மிகுந்த மன்நிறைவைக் கொடுத்தது.

கதையின் நடுவிலிருந்து ஆரம்பித்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்கள் வீறு கொண்டெழுந்து ஒரு நாட்டையே நிறுவியது உலகில் இதுவரை நடந்திராத சாதனை. இறந்த மொழி என்றுக் கருதப்பட்ட ஹீப்ரூவை மறுபடி ஒரு பேசுமொழியாக ஆக்கியது சரித்திரத்தில் ஒரு சிறப்பிடம் பெரும். இதையெல்லாம் அடுத்தப் பதிவுகளில் பேசத்தான் போகிறேன். அதற்கு முன் 1967 ஒரு ட்ரெயிலரே. இது எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறைவைத் தந்தது.

ஆறு நாள் போரைப் பற்றி சில ஜோக்குகள்:
1. இஸ்ரேல் உல்லாசப் பயணத் துறை விளம்பரம் செய்கிறது: "இஸ்ரேலுக்கு வாருங்கள், பிரமிட்டுகளைப் பார்க்கலாம்."
2. சினாய் பாலவனத்தில் ஒரு எகிப்தியப் படை தூரத்தில் ஒரு இஸ்ரேலியப் போர்வீரனைக் கண்டு, அவனைப் பிடித்து வருமாறு ஒவ்வொருவராக அனுப்ப, ஒருவரும் திரும்பவில்லை. கடைசியில் ஒரு எகிப்திய வீரன் தலைதெறிக்க ஓடி வந்து தன் தலைவனிடம் கூறுகிறான்: "நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். அங்கு இரண்டு இஸ்ரேலியர்கள் உள்ளனர்."
3. நாசர் ராஜினாமா செய்தார். எஷ்கால் (அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர்) அதை ஏற்க மறுத்தார்.
4. நாசர் சோவியத் யூனியனிடம் அதிகத் தளவாடங்கள் கேட்டு எழுதுகிறார். அவருக்கு வந்த பதில்: "இஸ்ரேலியர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதற்கு லிஸ்ட் அனுப்பவும்."

இஸ்ரேலைப்பற்றி எழுத மறுபடியும் வருவேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

34 comments:

ROSAVASANTH said...

நான் ஒரு பாலஸ்தீன ஆதரவாளன்!

டோண்டுவிடம் பேச, இங்கே கருத்து கூற, விவாதிக்க எதுவும் இல்லாவிட்டாலும், மொட்டையாகவாவது (கண்ணில் படும் இடமெல்லாம்) ஒரு எதிர்கருத்தை சொல்லவேண்டும் என்பதால், 50 ஆண்டுக்கால bruttal யூத இனவெறிக்கு வக்காலத்து எந்த வகையில் வாங்கபட்டாலும் அதை கண்டிக்கும் விதமாய் எதாவது சொல்லவேண்டும் என்ற கட்டாயத்தாலும் நொந்தபடி இதை சொல்கிறேன்.

ஒருக்காலத்தில் ஹிட்லர் ஆதரவாளர்களாகவும், பின்னர் இப்போதய சூழலுக்கு ஏற்ப இஸ்ரேல் ஆதரவாளராகவும், குள்ளநரித்தனம் செய்யும் பார்பனியத்தின் ஒரு முகம் காட்டும் டோண்டுவை கண்டிக்கிறேன்.

நான் பாலஸ்தீன ஆதரவாளன்!

நாலாவது கண் said...

ஐயா!

'தமிழில் ஹிஸ்ட்ரி எழுத ஆட்கள் இல்லை; பலரும் ஒதுங்குகிறார்கள்' என்று நண்பர் பா.ராகவனிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒருமுறை சொன்னார். இதோ இன்னொருவர் வந்துவிட்டீர்கள். இரண்டாவது வரலாற் புத்தகத்தை முடிக்கும் தருவாயில் இருப்பவன் என்றவகையில் உங்களை வரவேற்கிறேன். வாங்க... வாங்க...!

- சந்திரன்

ROSAVASANTH said...

மீண்டும் இங்கே வரமாட்டேன். நான் எழுதியது விவாதத்திற்கான கருத்து அல்ல. என் கடமையாய் நினைத்து முன் வைத்த கண்டனம்.

நான் பார்பனியத்தின் எதிரி!

நான் பாலஸ்தீனிய ஆதரவாளன்!

நாலாவது கண் said...

ரோஸாவசந்த்!

'நான் இஸ்ரேலிய ஆதரவாளன்' என்ற தலைப்பில் எழுத வரும் டோ ண்டு அவர்கள் வரலாற்றை திரிக்காமல் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பில்தான் எனது வரவேற்பு. ஒருவேளை அவர் உண்மையை திரித்து எழுதுவார் என்றால் அதற்கு நானும் மறுமொழி எதிர்ப்பு தெரிவிப்பேன். அதோடு Declared பாலஸ்தீன ஆதரவாளனாக உள்ள நீங்களும், மற்றவர்களும் சும்மாயிருக்கப் போவதில்லை. எப்படியானாலும் சுதந்திரதிற்கு பிறகான இந்திய வரலாறு போல - விபரம் தெரியாமலும், தெரிவதும் ஒருதலைபட்சமானதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அதனால், இஸ்ரேல் -பாலஸ்தீனம் இரு தரப்பிலும் செய்த நியாயமான, தவறான விஷயங்கள் (டோ ண்டு எழுதவிட்டாலும்) வௌதவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

காத்திருப்போம்.

- சநதிரன்

dondu(#11168674346665545885) said...

ஜூன் 5 என்று எழுதிப் பதிவு செய்தவை அந்த் தேதி வரை கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளின் சுருக்கம். எல்லாம் அதே தேதியில் நடக்கவில்லை. இப்போது திரும்பப் படிக்கும் போது அவ்வாறுத் தோன்றியதால் அதை இங்கே எழுதுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

Dondu sir,

Please continue writing your observation about the six days of war. I have read the book "O, Jerusalem," which in my opinion is a book written without much prejudices. I have full confidence also in your writings as they are mostly non-prejudiced (in my observation).

You are writing on something that is considered as an untouchable subject in India. I warn you before hand that there are "n" number of people who will smear dirt on your blog as they think that they have got the political satori by the gods of the left wing religion. They do not want to get out of their illusiory deja-vu as they do not want to question their belief system, which is rooted on their caste based enemity that spread its tentacles to religion, education, culture and anything that says that Indians had a lot more positive points than other people in history. Two of their basic rules are as follows:

India=Hinduism=Brahminism=Castism

Anything_and_everybody_against_Hinduism+any_negative_feelings_on_India =secularism

By these standards, your appreciation of the valour and victory of Israel, a country that has won against countries of a religion, which is against Hinduism will be blamed on your blood rather than your honesty.

I have come across books written by the history mafia of India claiming that the Indian freedom struggle, independence, constitution, and power structure are well planned events by the Jews and Brahmins (especially brahmins from ward no.5 in Aminjakarai, Tamil nadu). Ouch!!

I may not get shocked if the future editions of such books say that you are from Mosad!

I hope there are a few who are not bothered about their caste and religion will trust your intentions.

PS: About Palestinians honesty: They were showing home made proofs that claim that September 11 attack was actually done by Israel and not by the softspeaking Bin Laden (the Holiest of the Holy).

dondu(#11168674346665545885) said...

நன்றி ம்யூஸ் அவர்களே. மொஸ்ஸாதைப் பற்றி எழுதியதைப் படித்ததும் நான் அறுபதுகளில் கண்டக் கனவொன்று நினைவுக்கு வருகிறது. கனவில் மோஷெ தயான் வருகிறார். ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேலியர் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நன்றி கூறுகிறார் அவர். மொஸ்ஸாதில் சேர வேண்டும் என்று நான் கேட்க அவர் அதை மறுத்து விடுகிறார். ஹகானாவிலாவது சேர்த்துக் கொள்ளும்படிக் கூற அவர் அங்கிருந்து ஓடியே போய் விடுகிறார்.

ஏப்ரல் 1978. பிரெஞ்சு டிப்ளோம் சுபெரியோர் (Diplome superieur) பரீட்சை. ஒரு பேப்பரில் நீங்கள் பார்க்க விரும்பும் நகரம் எது என்றுக் கேள்வி கேட்கப்பட்டது. மற்றவர்கள் என்ன எழுதினார்களோ எனக்குத் தெரியாது. நான் எழுதியது ஜெரூசலம் பற்றி. சுமார் 2000 இருண்ட வருடங்கள் கழித்து இப்போதுதான் அந்த நகரம் இஸ்ரேலியர் வசம் வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து எழுதினேன் ஒரு நீண்டக் கட்டுரை. என் பிரெஞ்சு ஆசிரியர் அவர்கள் என் பின்னால் நின்றுக் கொண்டு நான் எழுதியதைப் படித்திருக்கிறார். பரீட்சை முடிந்ததும் அவர் என்னைத் தனியாக அழைத்து நான் செய்ததில் இருந்த ரிஸ்கைப் பற்றிக் கூறினார். அதாவது பிரான்ஸ் இஸ்ரேலின் ஆதரவாளர் அல்ல. இந்தக் கட்டுரைக்கு ஒரு வேளை சுழித்து விட்டாலும் விடலாம். நான் அவ்வாறு எழுதியதற்காகக் கவலைப்பட்வில்லை என்று கூறி விட்டேன். ஆனால் நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர் விளையாட்டாகக் கூறினார், "ஒரு வேளை பேப்பரைத் திருத்தியவர் யூதராக இருந்திருக்கலாம்" என்று. இருக்கலாம்.
அன்புள்ள,
டோண்டு ராகவன்

SHIVAS said...

Born of blood, of pain, and dust A child born a man Forged by the hands of the unjust -I am your child

Tanks and bombs cannot shake me Far more than a man Your soldiers will never break me -I am your child

Injustice makes me stronger Stronger every day Blood just increases my hunger -I am your child

The song of justice will appease me A song you wont sing In your prison, death just frees me -I am your child

With every mother's tears My thirst increases You have created your worst fears - I am your child

A phoenix from the ashes I will rise again Pour the gas, I light the matches I am your child

Never did you understand all my suffering Now the child has become a man I am your child

I am INTIFADA

By Indira Rai-Choudhury July 22, 2004

நாலாவது கண் said...

டோ ண்டு ஐயா!

பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதும் தொடரைப் படிக்கிறீர்களா?

- சந்திரன

dondu(#11168674346665545885) said...

பாராவின் தொடரைப் படிக்காமல் இருப்பேனா ஐயா? புத்தகக் கண்காட்சியில் அவரைப் பார்த்தப் போதே கூறி விட்டேன். நான் ஒரு தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் என்று. எவ்வளவு தீவிரம்? ஒரு இஸ்ரேலிய யூதரை விட அதிகமாக.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganesh said...

Dondu
I must say 'Don't Do' this.!! ;)
Excellent writeup.
Interesting, I was watching History Channel, here in USA where they did special about Mozads.
India has a lot to learn from Israel, especially about Anti,counter-Terrorism.
With regarding your storym, here is some input, it seems Pres. Mubarak was saying to the world that they need to redraw the worldmap as Israel wont be there since his warplanes will finish them off, but Israel on that very night swiftly attacked and destroyed all his planes before they can even takeoff.
Anyway, I have some close friends both Jews and Plastenians so I will take a neutral stand on this.
Rosavasanth, why are you getting ticked off, you can always counter Dondus argument point by point, that should be the spirit instead of calling names.
BTW what did late Mr.Arafat done to Indian cause ?!, if any can you point them inspite of India's close assosiactionw with him !!

KKNK

dondu(#11168674346665545885) said...

கிறுக்கன் அவர்களே, நீங்கள் கூறியதில் ஒரு சிறு திருத்தம். இஸ்ரேலை அழித்து விடுவதாகக் கூறியது நாசர் அவர்கள், 1967-ல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Venkat said...

யூதர்களைவிட அதிகமாய் இஸ்ரேலை ஆதரிக்கவேண்டி உங்களுக்கு என்ன நிர்ப்பந்தம் என்று புரியவில்லை.

வஸந்த் சொன்னதைப்போல இதை வண்மையாகக் கண்டிக்கவேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது. What can be explained by ignorance need not be attributed to malice. உங்களுக்கு வரலாறு சரியாகத் தெரியவில்லை அல்லது சமகால நடப்பு புரியவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால், இரண்டும் சமவீதத்தில்.

இஸ்ரேலின் பல அநியாயங்களுக்கு அமெரிக்கா தொடங்கி இந்தியாவரை விரவிக்கிடக்கும் யூத லாபியின் பிரச்சாரங்கள்தான் துணை. உயிர்த்தெழுந்ததெல்லாம் சரிதான், ஆனால் அதுமாத்திரமே அவர்களை உங்கள் அளவுக்குத் தொழத் தகுதியாக்காது என்று எண்ணம். அதற்கு மேற்கொண்டு அவர்களின் அநியாயத்திற்கு அவர்களைக் காலடியில் போட்டு மிதிக்கலாம்.

வரலாற்றில் யூதர்களைவிடக் கொடுமைபடுத்தப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள், ஆனால் அனுபவித்த கொடுமைக்கு வட்டியுடன் சேர்த்து காசாக்கும் திறமையில் யாரும் யூதர்களின் காலடித்தூசுக்குகூட இணையாகமாட்டார்கள். இதில் பெருமைபேச ஒன்றுமில்லை. அநியாயம் என்றுதான் ஒரே வார்த்தையின் சொல்லவேண்டும்.

இந்தியா போல ஒரு நாட்டிலிருந்துகொண்டு யூதர்களைத் தொழுவதாகச் சொல்லுகிறீர்கள். தினசரி வாழ்க்கையில் யூதர்களின் பாதிப்பு இல்லாதவர் நீங்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்.

பெருமைப்பட ஒன்றுமில்லை, அவமானத்தை வலிந்து தலையில் தூக்கிவைத்துக்கொள்ளாதீர்கள்.

இராதாகிருஷ்ணன் said...

அராபியர்களுக்குச் சளைக்காமல் உணர்ச்சிவயப்பட்டுள்ளீர்கள். வீண்வம்பிற்காகவே இடப்படும் பதிவாகத் தெரிகிறது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

கறுப்பி said...

நான் டோண்டுவின் பதிவைச் சில காலங்களாகப் படித்து வருகின்றேன். அவரின் பதிவுகள் அனைத்துமே வேண்டுமென்று வாசகர்களை வம்புக்கிழுத்து விவாதம் செய்வது போலவே அமைந்திருக்கின்றன. ரோசாவசந்த் அனேகமான டோண்டுவின் பதிவுகளுக்கு உணர்ச்சிவசப்பட்டுப் பதிலளிக்கின்றார் என்றே தோன்றுகின்றது. டோண்டுவின் குறிக்கோள் அதுதானா என்ற சந்தேகமும் எனக்குள் எழுகின்றது. வாசகர்களை வம்புக்கிழுத்துத் தனது தளத்தைக் கலகலப்பாக்கவதுதான் டோண்டுவின் எண்ணம் எனின் அவருக்கு வெற்றியே. இப்பதிவில் இஸ்ரேலியர்களுக்குச் சார்பாகவும் முதல் பதிவில் ஈராவைத் தாக்கியும் தொடருங்கள் டோண்டு உங்கள் பணி மேலும் வளர்க..

dondu(#11168674346665545885) said...

"ஆனால் அனுபவித்த கொடுமைக்கு வட்டியுடன் சேர்த்து காசாக்கும் திறமையில் யாரும் யூதர்களின் காலடித்தூசுக்குகூட இணையாகமாட்டார்கள். "
அவர்கள் என்னதான் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? பேசாமல் சாக வேண்டுமா? அதைத்தானே ஐயா அவர்களின் விரோதியர் எதிர்ப்பார்த்தன? ஆனால் யூதர்கள் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. மகோனதமான் ரோம சாம்ராஜ்யம் அழிந்தது. யூதர்கள் தப்பிப் பிழைத்தனர். ஆயிரம் வருடங்கள் ஆளப் போவதாகப் பறைசாள்ளிய ஹிட்லர் அழிந்தான். நாஜி ஜெர்மனி அழிந்தது. யூதர்கள் 60 லட்சம் பேரை இழந்தும் தலை நிமிர்ந்து நின்றனர். 3 வருடங்களுக்குள் அடுத்தப் போரில் தஙளைச் சூழ்ந்துக் கொண்ட அரேபிய நாடுகளை வெற்றி கொண்டனர்.
"இந்தியா போல ஒரு நாட்டிலிருந்துகொண்டு யூதர்களைத் தொழுவதாகச் சொல்லுகிறீர்கள்"
தொழுவதாக யார் சொன்னது? தீவிரமாக ஆதரித்ததாகச் சொன்னேன். சரியாகப் படியுங்கள் வெங்கட் அவர்களே.
"யூதர்களைவிட அதிகமாய் இஸ்ரேலை ஆதரிக்கவேண்டி உங்களுக்கு என்ன நிர்ப்பந்தம் என்று புரியவில்லை."
நிர்ப்பந்தமா? சுய உந்துதல் ஐயா.
"உங்களுக்கு வரலாறு சரியாகத் தெரியவில்லை அல்லது சமகால நடப்பு புரியவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால், இரண்டும் சமவீதத்தில்."
அதையேதான் உங்களுக்குப் பொருத்திக் கூறுகிறேன்.
"பெருமைப்பட ஒன்றுமில்லை, அவமானத்தை வலிந்து தலையில் தூக்கிவைத்துக்கொள்ளாதீர்கள்."
இஸ்ரேலை ஆதரிப்பதில் பெருமைப் படுகிறேன்.
"வாசகர்களை வம்புக்கிழுத்துத் தனது தளத்தைக் கலகலப்பாக்கவதுதான் டோண்டுவின் எண்ணம் எனின் அவருக்கு வெற்றியே."
நீங்கள் கூறுவது பெரியாரைப் பற்றியப் பதிவுகளுக்கு வேண்டுமானாலும் ஓரளவுப் பொருந்தக் கூடும் (ஓரளவுதான்). ஏனெனில் அவர் கூறிய மற்றும் செய்தப் பல விஷயங்கள் நகைப்புக்குரியவை. இருந்தாலும் அவற்றையும் சீரியஸாக எடுத்துக் கொண்டுக் கூத்தாடுபவர்களைப் பார்க்க வருத்தம் ஏற்படுகிறது. கருப்பி அவர்களே, கோவிலுக்குச் சென்றத் தன் முதல் மனைவியைத் தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்தப் பெண்மணியை மன வருத்தம் அடையச் செய்ததைப் பற்றிப் பெண் என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கூற இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

நாலாவது கண் said...

கருப்பி,

ஒரு அம்சத்தில், உங்கள் கருத்துடன் நானும்஢ உடன்படுகிறேன். அதுவும், குறிப்பாக 'காஞ்சி பிலிம்ஸ்' திண்ணை தளத்திலிருந்து ஒருவிஷயத்தை எடுத்து தன் தளத்தில் போட்ட பதிவை... அது நமது அன்பர்கள் பலருக்கும் பார்க்க கிடைத்திருக்கும் என்றபின்னும், டோ ண்஢டு ஐயா அதை தனது தளத்துக்கு இடம் பெயர்த்திருந்தார். இங்கே அது பெரிய விவாதத்தைக் கிளப்பியது. பெரியார் மீது எல்லாரும் மரியாதை கொண்டிருக்க வேண்டும் என்றோ, அதற்கு எதிராகவோ நான் பேச வரவில்லை. ஆனால் தனக்குள் 'பெரியார் எதிர்ப்பு' அந்த அளவுக்கு கனன்று கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள முயன்றுவிட்டாரோ என்றே எனக்கு தோன்றியது. ஆனாலும் அப்போது அது குறித்து நான் பேசாமல் இருந்துவிட்டேன். அதற்கு, எரிகிற தீயிற்கு இன்னும் தூபம் போடக்கூடாது என்று எண்ணியதுதான் காரணம். ஆனால், ஒருமுறை அப்படி செய்தவர் தொடர்ந்து அப்படியே செய்து கொண்டிருக்க மாட்டார் (அவரது வயது... அனுபவம் போன்றவற்றை மனதில் கொண்டு) என்று எதிர்பார்க்கிறேன். அதனால்தான் இம்முறை இஸ்ரேல் பற்றிக்கூட, நடுநிலை வரலாறாக எழுத கேட்டுக் கொண்டேன். ஆனால் Declared supporterராக தொடங்கும்போது விளைவுகள் எப்படியிருக்குமோ என்ற பயமும் இருக்கிறது. ரஜினி ராம்கி ரஜினியைப் பற்றி Neutralலாக புத்தகம் எழுத முடியும் என்றால் டோ ண்டு அவர்களாலும் முடியும். அதற்கு அவர்தான் தயாராக வேண்டும். 'காவல்நாய்'களாக பலரும் இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவரை எழுதவிடுவோம். முயற்சியை முளையிலேயே கிள்ளிவிடக்கூடாது என்று நம்புகிறேன். பார்ப்போம் என்ன செய்கிறார் என்று! என்ன டோ ண்டு ஐயா, சரிதானே!

- சந்திரன்.

-L-L-D-a-s-u said...

//கருப்பி அவர்களே, கோவிலுக்குச் சென்றத் தன் முதல் மனைவியைத் தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்தப் பெண்மணியை மன வருத்தம் அடையச் செய்ததைப் பற்றிப் பெண் என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கூற இயலுமா?//

-nalla keeLvi?

ROSAVASANTH said...

சென்ற பதிவிற்கு நான் அளித்த பின்னூட்டம் குறித்து கிருக்கன், வெங்கட், கருப்பி எழுதியது குறித்து...

முதலில் நான் உணர்ச்சி வசப்பட்டதாக கூறியது குறித்து....

சந்தேகமேயில்லை! "நான் பாகிஸ்தான் ஆதரவாளன்' என்று தலைப்பு வைத்து ஒருவர் ஒரு பதிவு எழுதினால் எத்தனை கண்டனங்கள் வரும் என்று யோசித்து பார்கலாமே! அட, நான் 'சிங்கள இனவெறியின் ஆதரவாலன்' எண்ரு தலைப்பு வைத்தால் எத்தனை கண்டனங்கள் வரும் என்று பார்கலாமே கறுப்பி. டோண்டு இஸ்ரேல் குறித்து அதற்கு ஆதரவாக எழுதுவதல்ல பிரச்சனை. இத்தனை ஆண்டுக்கால பிரசாரங்களில் ஒருவர் வேறு மாதிரி சிந்தித்தால்தான் ஆச்சரியம் வரும். ஒரு நாடு 'அரச பயங்கரவாதம்' எனபதற்கு சிறந்த உதாரணமாய் திகழுவது, ஆக்ரமிப்பு வன்முறையின் மூலம் மீண்டும் மீண்டும் நினைப்பதை நிறைவேற்றுவது, காலத்தின் துணை கொண்டு அதை லெஜிடிமைஸ் செய்வது என்பதற்கு சிறந்த உதாரணமாய் இருக்கும் ஒரு நாட்டை 'நான் ஆதரிக்கிறேன்' என்றால் கண்டனம் தெரிவிக்கமல் என்ன செய்ய வேண்டும். 'தென்னாப்பிரிக்க இனவெறியை ஆதரிக்கிறேன்' என்று தலைப்பு வைத்து பதிவு எழுதும் நபரிடம் பேசும் பக்குவம் சிலருக்கு இருக்கலாம், எனக்கு இல்லை.

அடுத்து கிருக்கன் 'பாயிண்டு விட வேண்டியதுதானே' என்கிறார்.என்ன பாயிண்டு விட? இது வரை அவர் எழுதியது எதிலாவது மற்றவர் சொல்வதை புரிந்துகொண்டு பதில் சொன்ன சம்பவம் உண்டா? எல்லாவற்றிற்கும் 'அசக்கு, குமுக்கு' என்று பதில் தருவதைதானே செய்கிறார், போன பதிவிலேயெ வெங்கட்டிற்கு எழுதியதை பாருங்கள். இதில் எப்படி அய்யா பேச முடியும்?

கொஞ்சம் நங்கநல்லூர் போய் டோண்டு பக்கத்து வீட்டிலிருக்கும் பாண்டுமாமாவிடம் கேளுங்கள். தள்ளி போய் இன்னொரு ரங்குமாமா விடம் கேளுங்கள். இவர்கள் யாராவது கொஞ்சமாவது வித்தியாசமாய் பேசிய சரித்திரம் இருக்குமா என்று பாருங்கள். எல்லோரும் ஒரே விதமாய் எத்தனை வருடங்களாய் பேசி வருகிறார்கள். இப்போது ஹிட்லர் ஆதரவை வெளிப்படையாய் பேசமாட்டார்கள். வீட்டுக்குள் மட்டும் பேசுவார்கள். இன்றய தேவையாய் இஸ்ரேலை பிடித்துகொள்கிறார்கள். இதில் இவர்களிடம் என்னத்தை அய்யா பாயிண்டு விட முடியும்?

அடுத்து, இந்தியாவிற்கு என்ன லாபம், ...யாவிற்கு என்ன லாபம் என்ற கேள்வி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். இந்தியாவின் லாபத்தை முன்வைத்து பேசுவதல்ல எனது நோக்கம். அமேரிக்காவின் லாபம் ஈராக்கை புணர்வதிலே இருக்கலாம்( இல்லாமலும் இருக்கலாம்) அதை மீறி பேசும் அறிவு விவாதங்களில்தான் எனகு ஆர்வம். ஆகையால் இங்கு விவாதம் சாத்தியப்படாது.

இஸ்ரேல்/பாலஸ்தீன் பிரச்சனை குறித்து சிறு குறிப்பு என் பதிவில் வரும். விரிவாய் எழுத நேரமில்லை எனினும் ஒரு கடமையாய் அது வெளிவரும்.

dondu(#11168674346665545885) said...

காஞ்சி பிலிம்ஸ் அவர்கள் தளத்திலிருந்து ஒரு பதிவை என் தளத்திலும் போட்டதற்கு காரணம் அப்போதே எழுதி விட்டேன். ஒரு முறை சந்திரவதனா அவ்ர்களின் பதிவு ஒன்றில் சோமு அவர்கள் எழுதிய ரவிச்சந்திரிகா என்னும் புத்தகத்திலிருந்து ஒரு பாடலை நான் பின்னூட்டமிட அதை அவர் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்காக அடுத்தப் பதிவிலேயே போட்டார். அதே போலத்தான் நானும் கேள்வியின் தீவிரத்தை உணர்ந்து என் வலைப்பூவிலும் காஞ்சியின் பதிவை இட்டேன். ப்ளாக்கர் சொதப்பலால் ஒரு தளத்தில் காணாமல் போனாலும் இன்னொரு தளத்திலாவது அது காணக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு முக்கியக் காரணம்.

இப்போது சோவைப் பற்றிய என் பதிவில் நான் எழுதியதை இங்கு மறுபடியும் இடுகிறேன். அவர் எழுதுவது சில சமயன் சமன் செய்வதாக இருக்கும். ஒரு விஷ்யத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவே எல்லோரும் எழுதினால் அவர் இன்னொரு தரப்பின் நியாயங்களை எழுதுவார். ஆகவே சில சமயங்களில் மறுதரப்புப் பக்கம் அவர் சாய்வதாகக் கூடத் தோன்றலாம், அது உண்மையில்லை என்றாலும் கூட. இங்குள்ள அறிவு ஜீவிகள் இஸ்ரேலைப் பழிப்பதை ஒரு ஃபேஷனாகவே வைத்துக் கொண்டுள்ளனர். தராசு ரொம்பவும் அதிகமாகவே சம நிலையை விட்டு விலகியதாக நினைக்கிறேன். இஸ்ரேலை மற்றவர்கள் கடுமையாக எதிர்க்கும் போது அதன் தீவிர ஆதரவாளனான நான் சும்மா இருக்க முடியுமா?
நிற்க. இஸ்ரேலைப் பற்றி இரண்டாம் பதிவு வந்து விட்டது. பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

இஸ்ரேலியர்களோ பாலஸ்தீனியர்களோ, இரு தரப்பினருமே லேசுப்பட்டவர்கள் அல்லர். இரு தரப்பினரும் பல தவறுகள் இழைத்துள்ளனர், அநியாயங்களுக்கு காரணமாக இருந்துள்ளனர். பேருந்தில் / மார்க்கெட்டில் குண்டு வைத்து யூத மக்களை (யூதர்கள் எவ்வளவு பாதுகாப்பு உணர்வுடன் (security conscious) செயல்படுகின்றனர் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்!) கொல்வது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் என்றால், அதற்கு ஈடாக, இஸ்ரேலிய ராணுவமும் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்கின்றனர். பொதுவாக, இரு தரப்பிலும், அப்பாவி மக்களே (பெரும்பாலும் பெண்கள், சிறார்கள்) கொல்லப்படுகின்றனர்.

ஆகையால், இதில் இஸ்ரேலிய அல்லது பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு வீண் விவாதம் செய்வதில் ஒரு பயனும் இல்லை!!! அவர்கள் போடும் சண்டை போதாது என்று, இங்கு (இணையத்தில்) வேறு சண்டை போட வேண்டுமா என்ன? இந்திய ஆதரவளராக இருந்து கொண்டு ஒன்றிரண்டு நலிந்த இந்தியருக்கு உதவி செய்ய தலைப்பட்டால், நம் நாட்டுக்கு நலம். ஒன்று புரிகிறது, தமிழ் கூறும் இணைய நல்லுலகில், ஒருவர் தீக்குச்சியை பற்ற வைத்தால், அதை ஊதி ஊதி காட்டுத்தீயாக ஆக்குவதற்கு பலர் உள்ளனர் என்பது மிகத்தெளிவு :-((

போங்கய்யா! (இங்கு ஜெயம் திரைப்பட கதாநாயகி சதாவை மனதில் நினைத்துக் கொள்ளவும்!)

இஸ்ரேல் வரலாறு மற்றும் அப்பிரதேசத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும் (மற்ற வலைப்பதிவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் நோக்குடன்) இத்தொடர் அமையுமானால், மகிழ்ச்சியாக வரவேற்கிறேன்! நன்றி!

என்றென்றும் அன்புடன்
பாலா

சன்னாசி said...

பின்னூட்டத்திலும், முந்தைய பதிவுகளிலும் பார்த்து அலுத்துவிட்டபடியால்:
//கருப்பி அவர்களே, கோவிலுக்குச் சென்றத் தன் முதல் மனைவியைத் தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்தப் பெண்மணியை மன வருத்தம் அடையச் செய்ததைப் பற்றிப் பெண் என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கூற இயலுமா?//
ஐயா; நண்பர்களைவிட்டுக் கேலி செய்வித்தது, கோழிக்குஞ்சு மாதிரி எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்காமல், அந்தப் பெண்ணுக்கு தனியாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உரம் வேண்டும் என்பதற்காகவே என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். It was a harmless gig. திரும்பத் திரும்ப இதைச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள் ராகவன் அவர்களே. பெரியாரைப்பற்றிப் 'பல விஷயங்கள் தெரிந்த' உங்களுக்கு இது தெரியாமல் போனது வினோதமே.

-L-L-D-a-s-u said...

//ஐயா; நண்பர்களைவிட்டுக் கேலி செய்வித்தது, கோழிக்குஞ்சு மாதிரி எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்காமல், அந்தப் பெண்ணுக்கு தனியாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உரம் வேண்டும் என்பதற்காகவே என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்//

என்னே கண்டுபிடிப்பு .. முனைவர் பட்டம் உறுதி ..

சன்னாசி said...

தாஸ், தொடர்ந்து கலக்குங்கள்!! ;-)

கறுப்பி said...

ஐயோ ஐயோ ஐயோ டோண்டு.. என்னையா கேள்வி இது. இதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டுமா? அதுவும் முதல் கணவன் நண்பர்களை விட்டுக் கிண்டல் அடிக்க பெண் மனம் வருந்துகின்றாள். கோயிலில் வைத்து கன்னத்தில் ஒன்று குடுக்காமல் மனம் வருந்தினாள் என்றாள் வருந்தி விட்டுப் போகட்டும். ஆணாத்திக்க வாதிகளிலும் விட கோழைப் பெண்கள்தான் மாற வேண்டும். மாண்ட்ர்ஸர் எனக்காகப் பதிலளித்து விட்டார் என்றே நம்புகின்றேன்.

ரோசாவசந்த் என்னுடைய பின்னூட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என்று எண்ணுகின்றேன். டோண்டுவின் எல்லாப் பதிவுகளுமே வேண்டுமென்றே எழுதப்படுவது போல் எனக்குத் தெரிகின்றது. அதை தாங்கள் சீரியஸாக எடுத்து ஆராய்ந்து பதிலளிக்க வேண்டாமே என்பதுதான் என் கருத்து. மேலும் நான் சிங்களவரின் எதிரியல்ல. எனக்குச் சிங்கள நண்பர்கள் கனடாவில் இருக்கின்றார்கள். நான் சர்வாதிகாரத்தின் எதிரி. அது தமிழனாக இருந்தாலும் சிங்களவனாக இருந்தாலும். கோழைத்தனமாக கேள்வியற்று எதையும் ஏற்றுக்கொள்வதை நான் வெறுக்கின்றேன். அவ்வளவுதான்.

aathirai said...

டோ ண்டு சார்,
நீங்கள் தலித்ஸ்தான் ஆதரவாளரா என்று கேட்டதற்கு இன்னும் நீங்கள்
பதிலளித்த மாதிரி தெரியவில்லை.

அடிப்படை அறிவில்லாத பெரியாரின் எழுத்துக்களும், நடவடிக்கைகளும் அறிவாளிகளுக்கு
புரியவே புரியாது. வீணாக புரிந்துக் கொள்ள கஷ்டப்படாதீர்கள்.

பெரியார் தயவில் இந்த வார நட்சத்திரம் நீங்கள்தான். :)

Kasi Arumugam said...

//அடிப்படை அறிவில்லாத பெரியாரின் எழுத்துக்களும், நடவடிக்கைகளும் அறிவாளிகளுக்கு
புரியவே புரியாது. வீணாக புரிந்துக் கொள்ள கஷ்டப்படாதீர்கள்.

பெரியார் தயவில் இந்த வார நட்சத்திரம் நீங்கள்தான். :)
//

ஆதிரை, :claps: :claps: :claps:

kirukan said...

Dondu, RosaVasanth and All...

All replies in Dondus post (reg. Israel) with name kkirukan is not me...

by Original kirukan

dondu(#11168674346665545885) said...

ஆதிரை அவர்களே, தலித்ஸ்தான் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். இந்தியாவைப் பிளவுபடுத்தும் என்பதால் அதற்குக் கண்டிப்பாய் ஆதரவு இல்லை. அது கிடக்கட்டும். தங்கள் சுயமரியாதைக்காக தனியாக ஒரு டீக்கடை அமைக்கக் கூட இவ்வளவு யோசிப்பவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? தன் கையே தனக்குதவி என்றெல்லாம் கரடியாகக் கத்தியும் அவர்கள் ஆதரவாளர்கள் என்றுச் சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து ஒரு நேர்மறை எதிரொலியும் காணோமே. எல்லோரும் சட்டத்தின் துணையைத்தான் நாடுகின்றனர், மேல் சாதியினர் மனது வைக்க வேண்டும் என்கின்றனர். ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லைப் போங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அதுவும் முதல் கணவன் நண்பர்களை விட்டுக் கிண்டல் அடிக்க பெண் மனம் வருந்துகின்றாள். கோயிலில் வைத்து கன்னத்தில் ஒன்று குடுக்காமல் மனம் வருந்தினாள் என்றாள் வருந்தி விட்டுப் போகட்டும். ஆணாத்திக்க வாதிகளிலும் விட கோழைப் பெண்கள்தான் மாற வேண்டும்."
பெண்ணே பெண்ணுக்கெதிரி என்றுக் கூறுவதில் உண்மை இருக்குமோ? முதல் கணவனா? அந்தப் பெண்ண்மணிக்கு அவள் இறந்த வரை ஒரே கணவன்தான் அம்மா. (நீங்கள் முதல் மனைவி என்றுக் கூறுவதற்குப் பதிலாக முதல் கணவன் என்றுத் தவறாக எழுதி விட்டீர்கள் என நினைக்கிறேன். சரிதானே?).
கணவனைக் கன்னத்தில் அடிப்பதா? எந்த ஊரில் இருக்கிறீர்கள் அம்மா? இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இவ்வாறு செய்திருக்க முடியுமா? நீங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தப் போது ஒரு ஹோட்டலில் உங்களிடம் முன்பின் தெரியாத ஆண் கால் மேல் போட்டுக் கொண்டு உட்காரக் கூடாது என்றுச் சொன்னப் போது பேசாமல் காரில் போய் உட்கார்ந்தீர்கள் என்று நீங்கள்தானே எழுதினீர்கள்? (நீங்கள்தான் எழுதினீர்கள் என்று 99% நிச்சயமாக நினைக்கிறேன். அப்படியில்லையென்றால் மன்னிப்புக் கேட்கிறேன்). நிலைமை அப்படியிருக்க 90 வருடங்கள் முன்பு அந்தப் பெண்மணி கணவனுக்கு கன்னத்தில் அறை கொடுத்திருக்க முடியுமா?
மனைவிக்கு தைரியம் ஊட்டத்தான் அவ்வாறு செய்தார் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

உங்களைப்போலவே நானும் ஒரு ஆதரவாளன்.

aathirai said...

நீங்கள் நினைப்பது போல யாரும் காலம் மாறும் என்று சோம்பேறியாக உட்கார்ந்திருக்கவில்லை.
உரிமையை கேட்பதற்கும், பிச்சை கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உங்களுக்கு
விளக்குவதற்குள்..

விதண்டாவாதத்திற்கு எழுதுகின்றேன் என்று நீங்களே சொல்லிவிட்டதால் உன்ஹ்களுடைய
இரட்டை நிலைப்பாடுகளாஇப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்காமல் உருபடியாக வேறு
வேலை பார்க்க போகிறேன்.

கறுப்பி said...

//கருப்பி அவர்களே, கோவிலுக்குச் சென்றத் தன் முதல் மனைவியைத் தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்தப் பெண்மணியை மன வருத்தம் அடையச் செய்ததைப் பற்றிப் பெண் என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கூற இயலுமா?//
இதை எழுதியது தாங்கள் தானே.. அதிலிருந்தான் என் பதில் வந்தது.

dondu(#11168674346665545885) said...

நான் விதண்டாவாதத்துக்கு எழுதுகிறேன் என்றுச் சொன்னேனா? எப்போது ஆதிரை அவர்களே? இஸ்ரேல் சம்பந்தப் பதிவில் வந்துப் பெரியாரைப் பற்றிப் பேசுவதுதான் விதண்டாவாதம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது