நான் படித்த ஒரு ஜோக். இஸ்ரவேலர்களுக்கு திடீரென ஒரு விபரீத எண்ணம் வந்தது. அதாவது தங்கள் பெயர் இப்படி ரிப்பேராயிருக்கிறதே என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் கம்பனியைத் தெரிவு செய்து அவர்களிடம் ஆலோசனை கேட்டனர். அவர்களும் சில நாட்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து ஒரு பெரிய அறிக்கை கொடுத்தனர். அதில் நூற்றுக் கணக்கானப் பரிந்துரைகள் இருந்தன. முதல் பரிந்துரை கூறியது: "இஸ்ரேல் என்றப் பெயருக்குப் பதிலாக இர்விங்க் என்றுப் பெயரைப் போடவும்." அவ்வறிக்கை குப்பைத் தொட்டிக்குப் போயிற்று.
இஸ்ரேல் என்றப் பெயரைக் கேட்டவுடன் பலருக்கு இங்கு ரத்தக் கொதிப்பே வந்து விட்டது. அதில் ஒரு புது மாப்பிள்ளையும் அடக்கம். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. எனக்கோ இஸ்ரேல் என்றப் பெயர் ஒரு புத்துணர்சியைக் கொடுக்கிறது.
சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1948-ல் 2/3 பெரும்பான்மையுடன் பாலஸ்தீனத்தை இரு பாகங்களாகப் பிரிக்கும் தீர்மானம் நிறைவேறியது. யூதப் பகுதியில் வசிக்கும் யூதரல்லாதவர்களுக்கு பென் குரியன் அங்கேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்ததையும் கூறினேன். ஆனால் சுற்றியுள்ள் அரபு தேசங்கள் அவர்களுக்குத் தவறான வழி காட்டின. ஹிட்லர் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்து விடப் போவதாக ஆசை காட்டின. அவர்களும் அரபு படைகளுக்கு வழி விட்டு அகதிகள் முகாமுக்குச் சென்றனர். 1948 யுத்தம் இஸ்ரேலியர் வெற்றியுடன் முடிவடைந்தது. அகதிகள் முகாம்களில் மாட்டிக் கொண்டனர். மேற்குக் கரை பகுதி மற்றும் யூதரல்லதவர்காக ஒதுக்கியப் பகுதியில் அவர்களைக் குடியேற்றி ஒரு தனி நாட்டை அமைப்பதில் அரபு தேசங்கள் ஒரு அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் குறி இஸ்ரேலே. எல்லா யூதர்களையும் கொன்று விடுவதே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்த கோஷம்.
நிலைமை இவ்வாறிருக்க இஸ்ரேல் அகதிகளைத் திரும்ப உள்ளே விடும் என்று எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம்? அறுபது லட்சம் மரணங்கள் போதாதா?
ஜூல 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.
1976-ல் என்டெப்பெயில் நடந்ததையும் எழுதியுள்ளேன். நம் அரசாங்கம் உட்படப் பலர் நடந்துக் கொண்டது ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. அதே மாதிரி நம் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டப்போது நாம் என்ன செய்தோம்? மேற்கொண்டு ஒப்பிட எனக்கு மனதில்லை.
1982-ல் பாலஸ்தீனியர் லெபனானைத் தங்கள் முட்டியின் கீழ் வைத்திருந்தனர். அங்கு அரசாங்கம் இருக்கிறதா என்றச் சந்தேகம் பலருக்கு. புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்டார். அப்போது இஸ்ரவேலர்கள் பாலஸ்தீனியரின் முகாம்களைத் தாக்கினர். அவர்களுக்கு லெபனான் ரகசிய உதவி செய்தது. கொல்லப்பட்டவரின் தம்பி புதிய ஜனாதிபதி. அவ்வளவு அலுத்துப் போயிருந்தனர் அவர்கள் பாலஸ்தீனியரின் அட்டூழியங்களால். லெபனானின் பெரும் பகுதியில் இஸ்ரவேலர்கள். பாலஸ்தீனியரை என்ன செய்வது? அவர்களை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமும் தயாராக இல்லை. அப்போது இன்னொரு அதிசயம் நடந்தது. அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கூறினார் இஸ்ரேலியப் பிரதமர் மெனாசெம் பெகின். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதை விட வேண்டும். இப்போது கூட இரு பாலரும் ஒத்துழைக்கலாம். வேறு வழியில்லாது அரபு தேசங்கள் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள முன் வந்தன.
சடில்லா முகாமைப் பற்றி. இஸ்ரவேலர்களுக்கு அதில் மறைமுகப் பங்கு இருந்தது என்று வெளிப்படுத்தியதே இஸ்ரேலியப் பத்திரிகைகள்தான். அதற்கானப் பொறுப்பை அவர்கள் சுமந்தே ஆக வேண்டும். ஆனால் ஒருவரும் அந்தப் படுகொலைகளுக்கு நேரடிப் பொறுப்புள்ளவரான லெபனானியரைக் கண்டிக்கவேயில்லை. அதுதான் உலகம். 1982-ல் இதையெல்லாம் குறித்து நான் ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது அப்படியே ஒரு திருத்தமுமில்லாது வெளியாயிற்று என் முழு முகவரியுடன். அது சம்பந்தமாக எனக்கு வந்தக் கடிதங்கள் எல்லாமே ஆதரவுக் கடிதங்கள்தான். இப்போதும் எனக்கு மின்னஞ்சலில் ஆதரவுக்கடிதங்கள்தான் வருகின்றன. வெளிப்படையாக எழுதத் தயங்குகின்றனர். அவர்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது. எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
அராஃபாத்துக்கு சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டதைப் பறைசாற்றுபவர்கள் கூடவே இஸ்ரேலியப் பிரதமருக்கும் வெளி உறவு மந்திரிக்கும் அதே பரிசு கொடுக்கப்பட்டதை சௌகரியமாக மறைத்து விடுகின்றனர்.
இன்னும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
6 hours ago
12 comments:
//
அராஃபாத்துக்கு சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டதைப் பறைசாற்றுபவர்கள் கூடவே இஸ்ரேலியப் பிரதமருக்கும் வெளி உறவு மந்திரிக்கும் அதே பரிசு கொடுக்கப்பட்டதை சௌகரியமாக மறைத்து விடுகின்றனர்.
//
அராஃபாத்துக்கு கொடுத்த சமாதானத்திற்கான பரிசை திரும்பப் பெற்று விடுவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் அதர்க்குள் அவர் சிவ லோகப் பதவி அடைத்ந்துவிட்டார்.
அராஃபாத் செய்த தீவிரவாதத்திற்கு அவருக்கு கிடைத்த பரிசு, "Nobel peace prize". மகாத்மா காந்திக்கு கொடுக்காமல் விட்டுவிட்டார்கள், அவர் தான் சத்தியமான Deserving candidate!
ஷங்கர்.
அது மட்டுமா சங்கர நாராயணன் அவர்களே, பாலஸ்தீனர்களுக்கு கிராண்டாகவும் நன்கொடையாகவும் அராஃபத்துக்கு வந்த பல மில்லியன் டாலர்கள் ஸ்வாஹா ஆகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். அது பற்றி ஏதேனும் செய்தி உண்டா? இல்லை இது வெறும் வதந்திதானா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அராஃபாத்துக்கு சமாதானப் பரிசு கொடுக்கப்பட்டதைப் பறைசாற்றுபவர்கள் கூடவே இஸ்ரேலியப் பிரதமருக்கும் வெளி உறவு மந்திரிக்கும் அதே பரிசு கொடுக்கப்பட்டதை சௌகரியமாக மறைத்து விடுகின்றனர்.
//
அஹா, இந்த தகவலை அப்படியே மறைத்துவிட்டார்களே!
நிஜமாகவே உங்களுக்குத் தெரியாதா, சமுத்ரா அவர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அஹா, இந்த தகவலை அப்படியே மறைத்துவிட்டார்களே!
//
இஸ்ரேல் பிரதமர் இட்ஸாக் ரபின் க்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது, அதே காரணத்திற்காக. (After he signed the Oslo accord.)
நாட்டைத் துண்டாக்குவதறகான வேலை செய்ததாக எண்ணி, அதற்க்காக அவரை சுட்டுக் கொன்றது ஒரு யூதன்.
நம்ம ஆளுங்களைப் போல், காந்தியய் கொன்றவரை villain ஆக சித்தரிப்பது போல் செய்யாமல், அவர்கள் react செய்த இன்றும் செய்கிற விதம் வியக்கத் தக்கது. இஸ்ரேலிய இடது சாரிகள் இந்திய இடது சாரிகள் போல் இல்லாமல், நிச்சயமாக சற்றே நடு நிலையான முடிவு எடுக்கிறார்கள் என்பது என் கணிப்பு.
ஷங்கர்.
Fact is, for the first time Yasser Arafat agreed to let Israel exist and perhaps that is thge reason they gave him Nobel Prize!
Regards,
Dondu N.Raghavan
சங்கர நாராயணன் அவர்களே,
மலர் மன்னன் அவர்கள் எழுதிய காந்தியும் கோட்ஸேயும் பகுதிகள் 1 மற்றும் 2 படித்திருக்கிறார்களா? என் வலைப்பூவிலேயே அவற்றை மறுபதிப்பு செய்திருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மலர் மன்னன், எழுதிய கட்டுரைகளை படித்திருக்கிறேன்.
இட்ஸாக் ரபின் மற்றும் மகாத்மா கொலைகளுக்கு எப்படி அந்த அந்த மக்கள் react செய்தார்கள், செய்கிறார்கள் போன்ற ஒரு comparitive study க்கு திரு. கொன்ராட் எல்ஸ்ட் எழுதிய கட்டுரையைப் பார்க்கவும்.
//
The anger of public opinion against Jewish fundamentalists will not fundamentally alter this approach, most of all because public opinion itself is not tempted to go to the opposite extreme, viz. to abandon all concerns for national security in favour of a purely moralistic and pacifistic stand. In India, by contrast, policy is to a large extent dictated by the contrived hysteria generated by the chattering classes in their sloganeering sessions.
//
ஷங்கர்.
மலர் மன்னன் எழுதியதை நான் மறுபதிவு செய்ததில் உண்டானப் பின்னூட்டங்களையும் பாருங்கள்.
பார்க்க:
http://dondu.blogspot.com/2006/01/blog-post_15.html
http://dondu.blogspot.com/2006/01/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear DR, I have stumbled into your blog and could not get out of that easily. It is scary - you share all my values- CHO, Kamaraj, Israel,Pro India and Pro-human, american but you have one edge- your self deprecating humor and doing some thing about your belief.All the best for your efforts. If we understand that we are just travellers and try and leave the world not worse off is the best thing we can do.
Regards. How I can write my views in Tamil. ? Pl help me
Murali Natarajan
I am hitting 50 this year and I live in Singapore- Give me some tips how to manage your wishes, values and the stark realities!
Dear Murali,
Am in a hurry as I am in a client's place and dashing off a reply in English. Will give detailed reply in the evening, when I am back at my computer.
Will tell you about Tamil typing in leisure.
Regards,
Dondu N.Raghavan
முரளி அவர்களே,
தமிழில் தட்டச்சிடுவது மிக எளிது. உதாரணமாக சுரதா பெட்டியில் மேலே இப்படி தட்டச்சிட்டால்
anbuLLa maanviziyee aasaiyil oor kaditham
waan ezuthavathennavenRaal uyirkkaathalil oor kavithai
கீழ்ப் பெட்டியில் இவ்வாறு வரும்.
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதவதென்னவென்றால் உயிர்க்காதலில் ஓர் கவிதை
அப்பெட்டியின் சுட்டி:http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
அதில் thaminglish-ஐ தெரிவு செய்யவும்.
மீதியை அப்புறம் பார்ப்போம். எனது மற்றப் பதிவுகளையும் படித்து கருத்து கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment