சமீபத்தில் 1989 ஆரம்பித்தபோது அந்த ஆண்டு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை உள்ளடக்கியிருக்கும் என்று சிறிதும் நினைத்திருக்கவில்லை. 1985-ல் கர்பசியவ் (Gorbachev) சோவியத் யூனியனின் தலைவராக ஆனபோதே கம்யூனிசத்தின் வீழ்ச்சி வேகம் அடைய ஆரம்பித்து விட்டது என்பதை இப்போது - 2006-ல் பின்னோக்கி பார்க்கும்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நிச்சயமாக 1989-ல் அது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதுதான் நிஜம். கம்யூனிச உலகில் பல அதிரடி விஷயங்கள் நடக்கின்றன என்று அவ்வப்போது பத்திரிகைகளில் படித்து வந்தாலும் சோவியத் யூனியன் இருக்கும் வரை உலகில் உள்ள ஜனநாயக சுதந்திர சக்திகளால் ரொம்ப சாதிக்க முடியாது என்றுதான் தோன்றியது.
அக்டோபரில் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் 40-ஆம் ஆண்டு விழா அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. "40 Jahre Bestehen der DDR" (40 வருடங்களாக ஜெ.ஜ.கு.) என்றெல்லாம் வெற்றிகரமாக பேனர்கள் கிழக்கு ஜெர்மனியில் பறந்தன. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே புகைச்சல் ஆரம்பித்தது.
ஹங்கேரி தனது எல்லைத் தடைகளை நீக்கியது. அதன் வழியாக ஆஸ்திரியா பிறகு அங்கிருந்து மேற்கு ஜெர்மனி என்ற கணக்கில் பல கிழக்கு ஜெர்மானியர்கள் ஓடத் துவங்கினர். தூர்தர்ஷனில் அக்காலக் கட்டத்தில் இவையெல்லாம் பரபரப்பாகப் பார்க்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனியின் அதிபர் ஹோனேக்கர் படு டென்ஷனானார். கர்பசியவ் உதவி ஒன்றும் செய்ய இயலாது என கைவிரித்து விட்டார். அடுத்த சில நாட்களிலேயே விழவே விழாது என்று கருதப்பட்ட பெர்லின் சுவர் விழுந்தது. அடுத்த ஓராண்டுக்குள் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியில் இணைந்தது.
Cold war என்ற பெயரில் கிழக்குக்கும் மேற்கிற்கும் நடுவில் நடந்து வந்த யுத்தம் அமெரிக்கர்களின் வெற்றியுடன் முடிவடைய ஆரம்பித்தது.சோவியத் யூனியனின் ஆதரவு இல்லை என்றானதால் சீட்டுகட்டு மாளிகைகள் போல செக்கொஸ்லாவிக்கியா, ருமேனியா, போலந்த், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டு அரசுகள் கவிழ ஆரம்பித்தன. அப்போதிலிருந்து 1991 திசம்பர் வரை இழுபறியாகக் கிடந்த சோவியத் ஒன்றியமும் இறுதி மூச்சை விட்டது. Cold war-ம் முடிவுற்றது.
இதையெல்லாம் அன்றைய ஊடகங்களின் வாயிலாக நேரடியாகப் பார்த்த எனக்கு உணர்வுகள் கலந்து இருந்தன. ஒரு பக்கம் தீவிர அமெரிக்க ஆதரவாளனான நான் அமெரிக்காவின் இந்த வெற்றிக்கு சந்தோஷப்பட்டேன். அதே சமயம் 42 ஆண்டுகளாக அதனுடன் போராடிய சோவியத் யூனியனின் வீழ்ச்சி எனக்குள் பரிதாபத்தையும் ஏற்படுத்தின. அதுவும் அதன் கடைசி இரண்டு ஆண்டுகளில் பல விஷயங்கள் வெளியில் வந்தன. சூப்பர் பவராகக் கருதப்பட்ட சோவியத் யூனியன் உண்மையிலேயே எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை விளவித்தது. செண்ட்ரலைஸ்ட் பிளான்னிங் என்ற பெயரில் என்னவெல்லாம் கம்யூனிஸ்டுகள் கூத்தடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இப்படியெல்லாம் அறிவுகெட்டத்தனமாகவெலாம் நாட்டை ஆள முடிய்மா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. மனித இயற்கைக்கு விரோதமான பல கோட்பாடுகளை மார்க்ஸ் சொன்னார், லெனின் சொன்னார் என்பதற்காக மட்டுமே அவற்றை கடைபிடித்தவர்களின் அறியாமை புலப்பட்டது. எதுவும் இவ்வுலகில் இலவசம் இல்லை என்ற உண்மையை கவனியாது வேலை செய்தால் இப்படித்தான் நடக்கும் எனக் கூறிவிடலாம்.
எதற்கெடுத்தாலும் மான்யம் என்று கூறி மக்களை சோம்பேறிகளாக்கினால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னமேயே ஏய்ன் ரேண்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய "அட்லாஸ் தோள்களைக் குலுக்கினான்" என்ற நாவல் கூறியபடியே சோவியத் யூனியனில் நடந்தது. அந்த நாடே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து பல தொழிற்சாலைகள் வேரோடு பெயர்க்கப்பட்டு பல வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அது சம்பந்தமான பேப்பர்களை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு நான் மொழி பெயர்க்கும் வேலை தொண்ணூறுகளில் பெற்றேன். அப்போது நினைத்துக் கொண்டேன், அடாடா இந்த தொழிற்சாலைகளை எவ்வளவு நம்பிக்கையுடன் ஆரம்பித்தனர், இப்போது இவ்வாறு இடம் மாறுகின்றனவே என்ற கிலேசம் என் மனதில் ஏற்பட்டது.
இப்போதும், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு இன்னும் பூர்த்தியடையவில்லை. அது ஏற்பட 1990-க்குப் பிறகு பிறந்தவர்கள் வயதுக்கு வந்து பொது வாழ்க்கையில் பங்கெடுக்கும்போதுதான் நடக்கும் எனத் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
20 comments:
விவாத மேடையின் கீழ் வகைப்படுத்த முயன்றேன். முடியவில்லை. மறுபடி முயற்சிக்கும் முன்னால் யாரோ வகைபடுத்தாதவை கீழ் இந்த இடுகையை போட்டு விட்டார்கள். இந்த வகைப்படுத்தலை மாற்றுதல் எவ்வாறு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல நினைவு கூறல். இது போல "சமீப" கால வரலாற்று நிகழ்ச்சிகளை உங்கள் பார்வையில் தொடர்ந்து தாருங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
சார்,
அடுத்த பதிவு போடுங்கள்...அதை தமிழ் மணத்துக்கு அனுப்புங்கள்...
அப்போது இதுவும் வரும்... வகைப்படுத்தாதவை என்று காட்டி,
அப்போது வகைப்படுத்தி விடுங்கள்...
நன்றி மா.சிவகுமார் அவர்களே. இருபதாம் நூற்றாண்டில் பல சரித்திர மகத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நடந்தன. அதிலும் முதல் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்கள் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தன. அவற்றுக்கு சற்றும் சளைக்காமல் 1989 நிகழ்ச்சிகள் இருந்தன. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஜெர்மனி உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன. செக்கோஸ்லவாக்கியா இரண்டாயிற்று, யூகோஸ்லாவியா பல துண்டுகள் ஆயிற்று.
அதையெல்லாம் அவ்வப்போது பத்திரிகைகள் மூலம் படித்தது மறக்க முடியாததுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி வஜ்ரா அவர்களே. நாளைக்கு நான் போடப்போகும் புதிய பதிவு எனக்கு நீங்கள் குறிப்பிட்ட உதவியை செய்யுமா எனப் பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
இப்போதும், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு இன்னும் பூர்த்தியடையவில்லை. அது ஏற்பட 1990-க்குப் பிறகு பிறந்தவர்கள் வயதுக்கு வந்து பொது வாழ்க்கையில் பங்கெடுக்கும்போதுதான் நடக்கும் எனத் தோன்றுகிறது.
//
சத்தியமான உண்மை என்றே சொல்லவேண்டும்...
கிழக்கு ஜெர்மன் பெண்ணிற்கு கிபூட்ஸ் (kibutz) வாழ்க்கை பிடிக்கும் என்றால் மேற்கு ஜெர்மன் ஆசாமிக்கு Hitchhiking செய்து பாலஸ்தீன் பார்க்கவேண்டுமாம்!!
அப்பவே நினைத்தேன்...இது மாதிரி ஏதாவது எபெக்ட் இருக்கும்னு.!!
கேட்டா மழுப்பிவிட்டான்..
"கிழக்கு ஜெர்மன் பெண்ணிற்கு கிபூட்ஸ் (kibutz) வாழ்க்கை பிடிக்கும் என்றால் மேற்கு ஜெர்மன் ஆசாமிக்கு Hitchhiking செய்து பாலஸ்தீன் பார்க்கவேண்டுமாம்!!
அப்பவே நினைத்தேன்...இது மாதிரி ஏதாவது எபெக்ட் இருக்கும்னு.!!
கேட்டா மழுப்பிவிட்டான்.."
பின்னூட்டம் முழுமையானதாக இல்லை என நினைக்கிறேன். ஏதாவது அவசரப்பட்டு, பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது பப்ளிஷ் பட்டனை அழுத்தி விட்டீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன்,
சிறப்பான பதிவு, நன்றாக எழுதியுள்ளீர்கள் !
இது போல் நிறைய எழுதவும், நாங்களும் நிறைய அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
USSR உடைந்ததில் எனக்கு அப்போது கொஞ்சம் வருத்தமே ! (இது பல ஆங்கில fictions வாசித்ததால், அதாவது Iron curtain-க்கு பின்னால் நடப்பதாகக் கூறப்பட்ட பல விஷயங்கள் பிரமிக்க வைப்பதாக இருக்கும்!)
நீங்கள் Frederick Forsyth-இன் Devil's Alternative மற்றும் The Icon வாசித்திருக்கிறீர்களா ? அதோடு, Robert Moss-இன் Moscow Rules என்ற நாவலை நிச்சயம் படிக்க வேண்டும். அதில், USSR-இல் ஒரு ராணுவப் புரட்சி ஏற்படுவதைப் பற்றி சுவாரசியமாக சொல்லப் பட்டுள்ளது.
என்றென்றும் அன்புடன்
பாலா
Devil's Alternative வாசித்திருக்கிறேன். ஆனால் அது சோவியத் யூனியன் செயலுடன் இருந்த போது எழுதப்பட்ட கதையல்லவா?
ஐக்கான் படித்ததாக நினைவு. மற்ற புத்தகங்களை வாசிக்க முயல்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார் மொத்தமே அவ்வளவு தான்...
நீங்க சொன்ன கிழக்கு, மேற்கு ஜெர்மனி ஒருங்கிணைப்பு பூர்த்தியாகவில்லை என்பதற்கான நான் பார்த்த live example அவ்வளவே!
வஜ்ரா அவர்களே, நீங்கள் பார்த்த லைவ் உதாரணம் உங்களைப் பொருத்தவரை தெளிவாக இருக்கலாம். ஆனால் படிப்பவர்களுக்கு? எப்போது, எந்த பேக்ரௌண்டில் யார் என்ன கூறினார் என்பதை எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் ஆகியவை உபயோகித்து எழுதினால்தானே புரியும்.
கிப்புட்ஸ் போயிருக்கிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது வாழ் நாளில் நான் நாளிதழ் படிக்கும் முன்னர், படிக்க ஆரம்பித்த பின்னர் நடந்த நிகழ்வுகள்
1. ஜெயபிரகாஷ் இயக்கம்
2. அவசர நிலையும் சஞ்சய் காந்தியும்
3. 1970களின் எண்ணெய் விலை ஷாக்
4. 1980களில் ரீகனின் ஸ்டார் வார்ஸ்
5. 1980களில் ஈரான் ஈராக் யுத்தம்
6. எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஜெயித்த தேர்தல்கள்
7. ஈழப்போராட்டம்
8. ராஜீவ் காந்தியின் சமாதான முயற்சிகள்
9. போஃபோர்ஸ் ஊழல் விவகாரங்கள்
10. அயோத்தியும் இந்துத்துவா வளர்ச்சியும்
11. மண்டல் கமிஷனும் இட ஒதுக்கீடும்
12. 1990களின் பொருளாதார சீர்திருத்தங்கள்
13. இணையப் புரட்சி
14. 1991 ஈராக் போர்
15. ஒய் 2கே யும் இந்திய மென்பொருள் துறை வளர்ச்சியும்
15. இந்தியா அணுகுண்டு வெடித்தது
அன்புடன்,
மா சிவகுமார்
Reg. Forsyth...Pl. read "The Fourth Protocol" too. One of the best cold war stories. He had introduced Kim Philby in that-Philby defected to USSR from MI5 and that was a shock to the western world that time.
Though I don't read pulp fictions these days(Ashokamithiran writings occupies my time :) ), "Fourth Protocol" stands out for its fine details and the commando action at the climax.
In the movie the last James Bond Pierce Brosnan played the russian spy character.
The Fourth Protocol படித்திருக்கிறேன். எல்லாம் பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்தின் உபயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
எப்போது, எந்த பேக்ரௌண்டில் யார் என்ன கூறினார் என்பதை எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் ஆகியவை உபயோகித்து எழுதினால்தானே புரியும்.
//
அதுவும் சரிதான்...
இஸ்ரேலில், summer மாணவர்கள் வந்து செல்லும் விடுதியில், சில நாட்கள் வந்த கிழக்கு ஜெர்மன் பெண் சொன்னது.
அதே போல் வந்த மேற்கு ஜெர்மன் ஆள் செய்தது.
அதே போல் பல ஜெர்மனியர்கள் பேசிக் கொள்வதே அபூர்வமாக இருக்கும். அவர்கள் taste பயங்கர வேறுபாடு. நீங்கள் சொன்ன angle ல் ஒரே ஒரு முறை யோசித்தேன்..ஆனால் இருக்காது, என்று விட்டுவிட்டேன்..
இப்போது நீங்கள் அந்த பிரிவினை இன்னும் முற்றிலும் நீங்காமல் உள்ளது என்பதைச் சொல்லும் போது ஒருவேளை இருக்கலாம் என்று தோன்றியது.
//
கிப்புட்ஸ் போயிருக்கிறீர்களா?
//
ம்ம்.. போயிருக்கிறேன்...அங்கே நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்...
ஒரு conference நடந்த சமயம், இந்தியாவிலிருந்து என் பேராசிரியர் வந்திருந்தார். Dead sea அருகில் உள்ள Ein gedi கிபூட்ஸில் அதிசய ஆப்பிரிக்க, ஆசிய, மரங்கள் வளரவைக்கும் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தோம்...அப்போது அந்த தோட்டக்காரன் கிப்பூட்ஸ் பற்றி ஒரு வாக்கியம் சொன்னார்..
From each according to his ability, to each according to his need
என்று.
வந்த பேராசிரியர், ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்.
உடனே wait a minute, அது கார்ல் மார்க்ஸ் சொன்னது என்றார்.
அந்த தோட்டக்காரன், இல்லை, மார்க்ஸாவது மன்னாங்கட்டியாவது, இது பழய ஏற்பாட்டில் உள்ளது என்று விளக்க பேராசிரியர் வியந்து போனார்.!!
இன்னும் சில விஷயங்கள். கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர். மற்ற யூதர்கள் எங்கெல்ஸ், ரோசா லுக்ஸெம்பர்க் (நம்ம ரோசா வசந்த் அவர் பாதிப்பில்தான் ரோசா என்று வைத்துக் கொண்டார், அதனாலேயே அவரை எனக்குப் பிடிக்கும்).
இஸ்ரேல் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சோவியத் யூனியனும் அதன் உபக்கிரக நாடுகளும் ஐ.நா.வில் அளித்த வோட்டுகளே.
நம்மூர் இடது சாரியினர் மற்ற மறதியாளர்கள் இதை பற்றி மூச்சு விட மாட்டார்கள்.
கிப்புட்ஸ் மாதிரி பரிசோதனையை நீங்கள் சோவியத் யூனியனில் கூட பார்க்க இயலாது. திலீப் குமார் நடித்த நயா தௌர் படத்தில் மட்டுமே பார்க்கவியலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
கிப்புட்ஸ் மாதிரி பரிசோதனையை நீங்கள் சோவியத் யூனியனில் கூட பார்க்க இயலாது. திலீப் குமார் நடித்த நயா தௌர் படத்தில் மட்டுமே பார்க்கவியலும்.
//
அந்த சோதனை வெற்றி தோல்வியில்லாமல் முடிவடைந்து வருகின்றது...!
இன்று இருக்கும் கிப்பூட்ஸ்கள் கார்பரேட் மயமாகி வருகின்றது...! பலர் கிப்பூட்ஸ் விட்டுச் செல்வதும்...(தனி நபர் சுதந்திரம் பாதிப்புக் குள்ளாகின்றது என்பதற்காக) கூட்டுப் பண்ணை விவசாயம் செய்யும் கிப்பூட்ஸ்களை MNC வாங்கி அதே கிப்பூட்ஸ் வேலையாளர்களை திரமைக்கேற்ப ஊதியம் கொடுத்து பணிக்கமர்த்தி நிர்வாகிக்கின்றது...
You are quite right Hayekorder (a somewhat unusual name that:)))
History Repeats Itself - the second time as farce, they say. Non compris? That will be another post, probably the next.
Regards,
Dondu N.Raghavan
1989-ல் எனக்கு வயது 16. அதே காலக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்ததாக நினைக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எங்கே இதையெல்லாம் பார்க்கும் பொறுமையிருந்தது? நீங்கள் அதைப் பற்றி ஒரு தனிப்பதிவு போடுவீர்களா?
கிருஷ்ணன்
நீங்க பரவாயில்லை சார். கம்யூனிச எதிர்ப்பிலே முதல்லேருந்தே தெளிவாகவே இருந்திருக்கீங்க.
என்னை எடுத்துக்குங்க. சின்ன வயசில் நான் பக்கா கம்யூனிஸ்டாக்கும். அப்புறம் மெதுவா அவங்க தகிடுதத்தத்தைப் பாத்து வெறுத்து ஒதுங்கினேன். அப்புறம் வேலை, குடும்பம்னு ஆச்சு. இப்ப இன்னும் சில மாசங்கள்தான் இருக்கு ஓய்வுக்கு.
ஏதோ கிருஷ்ணா ராமான்னு இருக்கலாம்னு தோணுது.
முனிவேலு
Post a Comment