சில நாட்களுக்கு முன்னால் பினாத்தல் சுரேஷ் என் வீட்டிற்கு வந்திருந்தார். மனிதர் 35 நாட்கள் லீவில் வந்திருக்கிறார். பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். பிறகு அங்கிருந்தே என்றென்றும் அன்புடன் பாலாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
இன்று மாலை ரோசா வசந்த், ரஜினி ராம்கி, பினாத்தலார், உருப்படாதது நாராயணன், என்றென்றும் அன்புடன் பாலா, ஐகாரஸ் பிரகாஷ் மற்றும் நான் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் சந்திக்குமாறு பாலா ஒரு ப்ரொக்ராம் ஆர்கனைஸ் செய்தார். மாலை 6.30 க்கு மீட்டிங் ஆரம்பிக்க வேண்டும். என் கார் டிரைவ் இன்னில் நுழையும்போது மணி 6.20. பாலாவும் பினாத்தலாரும் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து ஐகாரஸ் பிரகாஷ் வந்து சேர்ந்தார். செல் பேசியில் விசாரித்ததில் ரஜினி ராம்கியும் ரோசாவும் தாங்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறினர். அதற்குள் மணி 7 ஆகி விட, முதலிலேயே வந்திருந்த நாங்கள் நால்வரும் உள்ளே சென்று டேபிளில் அமர்ந்தோம். போண்டா (வழக்கமான!) மற்றும் சாம்பார் வடை ஆர்டர் செய்தோம். சிறிது நேரத்தில் ராம்கியும் ரோசாவும் ஒரே சமயத்தில் வந்தனர். கடைசியாக வந்தவர் நாராயணன்.
சந்திப்புக்கு எதிர்பாராத இன்னொருவரும் வருகை புரிந்தார். அவர்தான் திருவாளர் மழையார். அவரவர் வாரி சுருட்டிக் கொண்டு உள்ளே மூவ் செய்தோம். சர்வர் பதறிப் போய் வர அவரிடம் நாங்கள் உட்காரப் போகும் டேபிளைக் காண்பித்தேன். புதிதாக வந்தவர்களுக்கு ஆர்டர் செய்த போது அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நானும் பாலாவும் எங்க்களுக்காக ஆளுக்கொரு பூரி செட் ஆர்டர் செய்து கொண்டோம்!
பேச்சு பல விஷயங்களை நோக்கிச் சென்றது. தேன்கூடு போட்டியில் தான் பெற்ற அனுபவத்தை பினாத்தலார் கூறினார். நாராயணன் அவர்கள் சிவாஜி படத்தில் கமல் கெஸ்ட் ரோல் செய்வதாக ஹாட் நியூஸ் தந்தார். ரோசா வசந்த சாரு நிவேதிதாவுடன் தன் அனுபவத்தைக் கூறினார். கமல் படங்கள் டிஸ்கஷனில் மைக்கேல் மதன காமராஜன் எல்லோருடைய ஏகோபித்த ஓட் பெற்று சிறந்தப் படமாக அறிவிக்கப் பட்டது.
ரஜினி ராம்கி எழுதிய இரு புத்தகங்கள் பற்றியும் பேசினோம். இன்னும் அவற்றை நான் படிக்கவில்லை, படிக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.
கமலைப் பற்றிப் பேசும்போது, நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் எழுதிய கமல் பதிவு பற்றி பேச ஆரம்பித்து, அப்பதிவால் பிரபலமானவரைப் பற்றி பேச ஆரம்பித்து, இது காரியத்துக்காகாத வேலை என்று தீர்மானம் செய்து அந்த நூலிழையை முடித்துக் கொண்டோம்.
வெளியில் மழை தூற ஆரம்பித்தது. 9 மணியளவில் நான் முதலில் விடை பெற்றுக் கொண்டு செல்ல, என் கார் என்னை வீட்டில் கொண்டு விட்ட 5 நிமிடத்துக்குள் பாலா தன் வீட்டிலிருந்து ஃபோன் செய்தார். இந்த சந்திப்புக்கானப் பதிவை போடுவேனா என்று கேட்க, நான் ஓம் என்றேன். இதோ அந்தப் பதிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
18 comments:
மிக்க நன்றி வணக்கத்துடன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடுத்த முறை நான் சென்னை வரும் பொழுதும் சந்திக்கலாம். ஆனால் டிரைவ் இன் இல்லை. போண்டா இல்லை. படிக்கிற எங்களுக்கே திகட்டிப் போச்சே. எப்படி ஐயா?
டி.பி.ஆர். லீவு. ஜிரா வரலையா?
டோண்டு சார், என்ன பேசினீர்கள் என்று விளக்கமாகப் பதிவு இட்டால், எங்களுக்கும் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட திருப்தி ஏற்படும்.
இந்த சந்திப்பின் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விட்டுப் போயிற்று. எந்த வலைப்பதிவாளர் சந்திப்புக்கும் இதுவரை என்றென்றும் அன்புடன் பாலா வந்ததேயில்லை. எப்போது நான் தொலைபேசியில் கூப்பிட்டாலும் மனிதர் விலாங்கு மீனாய் வழுக்கி ஓடி விடுவார். அதிலும் முக்கியமாக சனி ஞாயிறு மீட்டிங் என்றால் கேட்கவே வேண்டாம். ஸ்லோகம் கிளாஸுக்கு செல்ல வேண்டியிருக்கும் ஆகவே வர இயலாமல் போய் விடும்.
இம்முறை இரண்டு விஷயங்கள் வேறுபட்டன. ஒன்று சனி ஞாயிறு இல்லை. இரண்டு இந்த மீட்டிங்கை ஆர்கனைஸ் செய்ததே இவர்தான்.
இணையப் பதிவாளர்களில் இவர் இதுவரை நேருக்கு நேர் சந்தித்தவர்கள் கைவிரல்கள் எண்ணிக்கையில் வந்து விடுவார்கள். (நான், நேசமுடன் வெங்கடேஷ், தேசிகன், திருமலை). ஆகவே இதனாலும் இந்த மீட்டிங் மனநிறைவை அளித்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"படிக்கிற எங்களுக்கே திகட்டிப் போச்சே. எப்படி ஐயா?"
உட்லேண்ட்ஸ் போண்டாவில் என்ன விசேஷம் என்றால், எல்லோரும் அதைத் திட்டுவார்கள், ஆனால் உட்லேண்ட்ஸ் சென்றதும் அதைத்தான் முதலில் ஆர்டர் செய்வார்கள். பூரி, வடை சாம்பார், இட்லி எல்லாமும்தான் கிடைக்கும்.
உட்லேண்ட்ஸுக்கு வேறு சௌகரியங்களும் உண்டு. சென்னைக்கு வாருங்கள். நீங்கள் சொல்லும் இடத்தில் ஆர்கனைஸ் செய்தால் போயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"என்ன பேசினீர்கள் என்று விளக்கமாகப் பதிவு இட்டால், எங்களுக்கும் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட திருப்தி ஏற்படும்."
நான் அளித்தது வெறும் முன்வரைவுதான். மீதி ஆறு பேர்களும் பின்னூட்டமிடுவார்கள். விட்டுப் போனதை அவர்கள் போட்டுக் கொள்வார்கள் என நம்பிக்கை உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர்கள் பார்த்து பேசிக்கொள்வது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
இதில் முனைந்தும் இந்த சுற்றத்தை மேலும் தழைத்தும் பல பேர் நன்றாக முயற்சி பண்ணி வருகிறார்கள். அதில் நீங்கள் முக்கியமானவர்.
இப்படி நடந்த மீட்டிங் விவரம் அறிந்து சந்தோஷம்
நன்றி
நன்றி ஜயராமன் அவர்களே. திடீரென முடிவானதால் சந்திப்பைப் பற்றி முன்கூட்டியே எழுத முடியவில்லை. இம்மாதம் நிச்சயம் ஒரு பொது சந்திப்பு உண்டு. ஜோசஃப் சார் வரட்டும். அவருடன் பேசி பிறகு பதிவு போடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்,
நான் சந்தித்ததாக நீங்கள் கூறியவரில் ஒருவரை விட்டு விட்டீர்கள், ஐயா ! காசியை கோவையில் சந்தித்து இருக்கிறேனே ! அது குறித்து ஒரு பதிவும்
போட்டேனே !
சந்திப்பிலிருந்து சில குறிப்புகள்:
நான் நினைத்து வைத்ததிலிருந்து மாறுபட்டவராக ரோசா தோன்றினார் (சற்று சின்னவராக) ! பிராகஷின் போட்டோ வை பார்த்திருந்ததால், வியப்பு
எதுவும் இல்லை. ராம்கி போட்டோ வில் பார்த்ததை விட சற்று நிறம் கம்மியாக (அவர் தலைவர் போலவே!) தோன்றினார். பினாத்தலார் சுறுசுறுப்பாக சின்னப் பையன் போலவே இருந்தார். அவரும், 'உருப்படாதது' நாராயணனும் சம்ம ஜாலி பேர்வழிகள் ! இருவருக்குமே நல்ல மெமரி, கமலின்
நகைச்சுவைப் படங்களிலிருந்தும், தில்லுமுல்லு படத்திலிருந்தும் வசனங்களை எடுத்து விட்டு இடத்தை கலகலப்பாக ஆக்கினர். ராம்கி அதிகம் பேசாமல்,
அனைவரையும் கவனித்தபடி இருந்தார். For a change, டோ ண்டு அவர்களும் அதிகம் பேசவில்லை. என்ன காரணமோ ?
ஐகாரஸ் தன் பிசினஸ் குறித்து சற்று விளக்கினார். ரோசா, ராம்கியிடம் "ரஜினி ரசிகர் என்ற வகையில் ரஜினி குறித்து புத்தகம் எழுதினீர்கள். கலைஞர் பற்றி புத்தகம் எழுதியதற்கு தூண்டுதல் என்ன ?" என்று கேட்டதற்கு, ராம்கி புன்னகையை பதிலாக வழங்கினார் !
முக்கியாமான விஷயம், "இடலி
வடை யார்? அவர் எங்கிருந்து எழுதுகிறார்?" என்று ஒரு சின்ன விவாதம் நடந்தது ! சமீப காலமாக இலக்கியவாதியாக மலர்ந்திருக்கும் பினாத்தலார்,
ஐகாரஸ் தான் இட்லிவடை என்ற தன் சந்தேகம் தற்போது தீர்ந்து விட்டது என்று கூறினார் :) இட்லி வடையின் நகைச்சுவை/அரசியல் பதிவுகளுக்கு நிறைய வாசகர்கள் இருப்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது :) இட்லிவடை 'சென்னை ஆசாமி தான்' என்று பெரும்பாலார் கருதினர் (இட்லிவடை தான் சொல்ல வேண்டும் ;-))
இரவு 9.15 மணிக்கு மக்களுக்கு விடை கொடுத்தேன். ஐகாரஸ், ரோசா, பினாத்தலார், நாராயண் "தாக சாந்திக்கு" தி,நகர் பக்கம் போனதாகக்
கேள்வி ;-) மொத்தத்தில் அருமையான சந்திப்பு, கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி !
என்றென்றும் அன்புடன்
பாலா
"For a change, டோ ண்டு அவர்களும் அதிகம் பேசவில்லை. என்ன காரணமோ ?"
மற்றவர்களை பேசவிட்டு கவனிப்பதால் பல விஷயங்கள் தெரியவருகின்றன.
நீங்களும் காசி அவர்களும் ஒரே செட் என்று கூறியது எப்படியோ மறந்து விட்டது. இட்லி வடை பாஸ்டன் பாலாவாக இருக்கலாமோ என்ற எனது ஊகம் மற்றவர்களால் பகிர்ந்து கொள்ளப் படவில்லை. அதே சமயம் பிரகாஷ் அவர்கள் "காணாமல் போன பதிவு" என்ற தலைப்பில் எழுதியதையும் எல்லோரும் நினைவு கூர்ந்தோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முக்கியாமான விஷயம், "இடலி
வடை யார்? அவர் எங்கிருந்து எழுதுகிறார்?" என்று ஒரு சின்ன விவாதம் நடந்தது ! சமீப காலமாக இலக்கியவாதியாக மலர்ந்திருக்கும் பினாத்தலார்,
ஐகாரஸ் தான் இட்லிவடை என்ற தன் சந்தேகம் தற்போது தீர்ந்து விட்டது என்று கூறினார் :) இட்லி வடையின் நகைச்சுவை/அரசியல் பதிவுகளுக்கு நிறைய வாசகர்கள் இருப்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது :) இட்லிவடை 'சென்னை ஆசாமி தான்' என்று பெரும்பாலார் கருதினர் (இட்லிவடை தான் சொல்ல வேண்டும் ;-)) //
இப்படி ஒரு 'விவாதம்' நடந்த போது நான் அங்கே இல்லை. இது போன்ற விவாதங்களில் நான் கருத்து சொல்வதும் இல்லை, ஆர்வமும் கிடையாது. 'அனைவராலும்' என்ற வார்த்தை வருவதால் இதை எழுதுகிறேன்.
இப்படியெல்லாம் பில்டப் கொடுக்கும் போது எனக்கும் 'இதுவரை' பார்த்திராத பாலாவை பார்க்க வேண்டும் போல் தோணுகிறது! எப்போது சந்திக்கலாம் பாலா?!
அரை மணி நேரம் முன்புதான் நானும் பாலாவும் பேசிக் கொண்டிருந்தோம், அவர் உங்களை என் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் சந்தித்ததை நாங்கள் இருவருமே மறந்து விட்டது பற்றி. மன்னிக்கவும்.
பை தி வே, நான் உங்களைப் பற்றியும் மீட்டிங்கில் பிரஸ்தாபித்தேன். சிலரது பெயரைக் கேட்டதுமே நாம் அவரது உருவம் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து வைத்துக் கொள்வதைப் பற்றிப் பேசும்போது, உங்கள் பெயரைக் கேட்டு ஒரு முரட்டு உருவத்தை கற்பனை செய்து வைத்திருக்க, இவ்வளவு ஜெண்டிலாக நீங்கள் வந்து நின்றீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இவ்வளவு ஜெண்டிலாக நீங்கள் வந்து நின்றீர்கள்.//
ஹிஹி
//இப்படியெல்லாம் பில்டப் கொடுக்கும் போது எனக்கும் 'இதுவரை' பார்த்திராத பாலாவை பார்க்க வேண்டும் போல் தோணுகிறது! எப்போது சந்திக்கலாம் பாலா?!
//
மாயவரத்தான், மன்னிக்க வேண்டுகிறேன் :)
//இப்படி ஒரு 'விவாதம்' நடந்த போது நான் அங்கே இல்லை. இது போன்ற விவாதங்களில் நான் கருத்து சொல்வதும் இல்லை, ஆர்வமும் கிடையாது. 'அனைவராலும்' என்ற வார்த்தை வருவதால் இதை எழுதுகிறேன்.
//
ரோசா, தவறுக்கு வருந்துகிறேன் !
சார்!
ட்ரீட் ப்ரெஞ்சு ட்ரீட்டா இல்லையான்னு சொல்லவே இல்லையே? :-)
நான் சில தெலுங்கு நண்பர்களுடன் வெளியே போகும் போது வி.ஐ.வி.எஸ்-ஆ என கேட்பார்கள்.... அதாவது "வால் வால் இஷ்டம், வால் வால் செலவு" என்பதாக.... சங்கடமாக இருக்கும்.....
டட்ச் ட்ரீட்டா என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இல்லை. ஆர்கனைஸ் செய்தவன் நான் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாரி சார்.... டச்சு என்பதற்கு பதிலாக பிரெஞ்சு எனப் போட்டு விட்டேன்...
Post a Comment