நண்பர்களே,
வரும் ஞாயிற்றுக் கிழமை, ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு வைக்க எண்ணியுள்ளோம் (டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள் மற்றும் நான்). சென்னை வலைப்பதிவாளர்கள், சென்னையில் தற்சமயம் இருக்கும் வெளியூர் வலைப்பதிவாளர்கள் ஆகியோரைக் கண்டு உரையாட ஆசை. சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடிக்கலாம்.
போன முறை செய்து நன்றாக வெற்றி கண்ட அதே முறைதான். மீட்டிங்கிற்கான செலவு பற்றி பேசுகிறேன். இம்முறையும் சந்திப்புக்கு வருபவர்கள் எல்லோருமே செலவை பகிர்ந்து கொள்கிறோம். செலவு என்ன பெரிய செலவு, போண்டா, காபி ஆகியவைக்கு ஆவதுதான். நிறைய பேர் வந்தால் ஒரு ஹாலை அங்கே இரண்டு மணி நேரத்துக்கு எடுக்க வேண்டி வரலாம். சாதாரணமாக இது தேவைப்படாது, பார்க்கலாம்.
போன முறை ஒரு சிறு குறைபாடு தென்பட்டது. பலர் காபி மட்டும் போதும் எனக் கூறிவிட்டனர். ஆனால் டிவைடிங் சிஸ்டமில் எல்லோரையும் போலவே காண்ட்ரிப்யூட் செய்தனர். எனக்கு உறுத்தலாக இருந்தது. இம்முறையாவது தயவு செய்து கூச்சமின்றி ஆர்டர் செய்யுங்கள். உட்லேண்ட்ஸ் டிஃபனை அனுபவித்து உண்ணவும். சற்றே காலி வயிற்றுடன் வரவும். வழக்கம் போல வசூல் செய்யப் போவது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவனே. போண்டா மட்டுமே உணவல்ல, இட்லி வடையும் (பதிவாளர் அல்ல), ஆனியன் ஊத்தப்பமும், பூரி கிழங்கும், பாஸந்தியும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவும்.
This will be strictly Dutch treat.
இம்முறையும் போன முறையைப் போலவே போதிய அவகாசம் கொடுத்துள்ளோம். வரும் எண்ணம் உள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டமாக அதை வெளியிடலாம். தொலைபேசியிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
டோண்டு ராகவன்: 9884012948
டி.பி.ஆர். ஜோசஃப்: 9840751117
சாதாரணமாக பேச வேண்டிய அஜெண்டாவெல்லாம் கூறுவதில்லை. இருப்பினும் இம்முறை பேச ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அதுதான் தமிழ்மணம் கை மாறிய விஷயம். அருமை நண்பர் காசி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர் இத்தனைக் காலம் இதைக் கட்டிக் காத்து அருமையாக நடத்தியுள்ளனர். அவர்களுக்கு நமது நன்றியும் மேலே மேலே அவர்கள் தத்தம் புது முயற்சிகளில் வெற்றி பெறவும் எமது வாழ்த்துக்கள். புது நிர்வாகத்தினரை திறந்த மனதுடன் இதய பூர்வமான வரவேற்பையும் நல்க வேண்டும். இதையெல்லாம் பற்றி நிச்சயம் பேசலாம். மேலும் இருக்கவே இருக்கிறது எல்லோரையும் பாதிக்கும் இன்னொரு விஷயமும் கூட, ஹி ஹி ஹி.
நானும் ஜோசஃப் சாரும் காலையில் வைத்துக் கொள்ளலாமா எனவும் யோசித்தோம். ஆனால் அதில் பல பிரச்சினைகள், ஆகவே வேண்டாம் என விட்டு விட்டோம். மேலும் உட்லேன்ட்ஸ் டிரைவ் இன்னின் சௌகரியம் மற்றதில் இல்லை என்றும் கூற வேண்டும்.
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காலை 11.20 க்கு சேர்க்கப்பட்டது:
யார் வருகிறார்களோ இல்லையோ போலி டோண்டு முதலிலேயே இப்பதிவில் அட்டெண்டன்ஸ் கொடுத்து விட்டான்.
ஜோசஃப் சார் பெயரில் பின்னூட்டமிட்டு விட்டான். ரொம்ப இயல்பானதாக இருந்ததால் எப்போது ஜாக்கிரதையாகச் செயல்படும் டோண்டு ராகவனே சற்று அச்ந்து பின்னூட்டத்தை மட்டுறுத்தல் செய்து பதிலும் போட்டு விட்டான். திடீரென ஒரு சந்தேகத்தில் எலிக்குட்டி சோதனை செய்து பார்த்து, வந்தது அந்த இழிபிறவி என்பதை உணர்ந்து, அவனது பின்னூட்டத்தையும், தனது பதிலையும் அடையாளம் இன்றி அழித்து விட்டான்.
இருப்பினும் அவன் கேட்ட கேள்வி பலரும் கேட்கக் கூடியதே. ஆகவே இங்கு அது பற்றி பதிவிலேயே கூறிவிடுகிறேன்.
கேள்வி:
வலைப்பதிவர் சந்திப்புக்கு குடும்பத்துடன் வரலாமா? நீங்கள் அழைத்து வருகிறீர்களா?
பதில்:
ஐடியா நன்றாக உள்ளது ஜோசஃப் அவர்களே, ஆனால் சமாளிக்க முடியுமா எனத் தெரியவில்லை. நீங்களேதான் பார்த்தீர்களே, பெரிய அளவில் டேபிள் போடுவதற்கு உட்லேண்ட்ஸ் தரப்பில் போன முறை சற்று தயக்கம் இருந்ததென்று.
அது மட்டும் காரணமில்லை, என் குடும்பத்தினர் தமிழ் வலைப்பூவில் சிறிதும் ஆர்வம் காட்டாதவர்கள். வலைப்பூவில் நடக்கும் அசிங்கத் தாக்குதல்களை பற்றி ஒன்றும் அறியாதவர்கள். மேலும், அவர்களுக்கு போர் வேறு அடிக்கும், ஆகவே நான் அழைத்து வரப்போவதில்லை.
போன முறை ஒருவர் தன் மகளை அழைத்துவர, நான் கூறியது நினைவிலிருக்கிறதா? அதாவது போட்டோவில் அப்பெண் கண்டிப்பாக வரக்கூடாது ஏனெனில் அதை அசிங்கமான முறையில் எக்ஸ்ப்ளாயிட் செய்ய ஒரு இழிபிறவி அலைந்து கொண்டிருக்கிறதல்லவா? ஜயராமன் சார் காமெராவில் பேட்டரி தொல்லை செய்ததால் ஒரு போட்டோவுமே எடுக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்.
இருப்பினும் இப்போது நான் தெளிவாகக் கூறுகிறேன். அழைத்து வருபவர்கள் தாராளமாக அழைத்து வரட்டும். காண்ட்ரிப்யூஷனும் அதற்கேற்ப மாறும். அதாவது அவர்களும் டிவைடிங் சிஸ்டத்தில் வந்து அவர்களை அழைத்து வருபவர்கள் காண்ட்ரிப்யூட் செய்து விடுவார்கள்.
அவர்கள் நலனுக்காக அவர்களைப் பற்றி நான் இப்பதிவுக்கு அடுத்து வரும் மீட்டிங்க் பற்றிய பதிவில் ஒன்றும் குறிப்பிடாமல் விட்டு விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
16 hours ago
26 comments:
மறுபடியும் உட்லண்ட்ஸா? cafe coffee day போன்ற இடங்களில் சந்திக்கலாமே? நாமாக அவர்களை அழைக்காமல் அவர்கள் ஆர்டர் எடுக்கக் கூட வரமாட்டார்கள். அதே போல பில்லை நாம் கேட்கும் பொழுதுதான் தருவார்கள். இல்லையென்றால் ECRல் எத்தனையோ தாபாக்கள் இருக்கின்றன.
உட்லேண்ட்ஸின் முக்கிய ஆகர்ஷனமே அது சென்னையின் மத்தியப் பகுதியில் உள்ளது என்பதாலேயே. எல்லா இடங்களுடன் நல்ல கனெக்ஷன் உண்டு. மழை பெய்தால் சட்டென்று உள்ளே செல்ல இயலும். காத்திருப்பவர்கள் நிற்பதற்கு தோதான இடம் உண்டு.
நீங்கள் சொல்லும் இடம் அவ்வாறு உள்ளதா? இசிஆர் ரோட் ரொம்பவும் ஒதுக்குப் புறமில்லை? இருந்தாலும் விவரங்கள் தாருங்கள். கண்டிப்பாக விவாதிப்போம். மற்றவர்களும் தங்கள் கருத்துக்களைத் தாராளமாகக் கூறட்டும். 6 நாட்கள் நேரம் இருக்கிறது.
கை கட்டு அவிழ்த்து விட்டார்களா? கால் கட்டு போடுவது பற்றி வீட்டில் பெரியவர்கள் ஒன்றும் பேசவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு மற்றும் ஜோசப் ஐயா அவர்களின் முயற்சிக்கு நன்றி.
ஜி.ரா வின் கருத்துதான் என்னோடதும். முடிந்தால் வேறு பல இடங்கள் முயன்று பார்க்கலாம். பேசுவதற்கு புதுமையாக ஒரு நல்ல சூழ்நிலையும் பல புது இடங்களில் கிடைக்கலாம். வரவர, உட்லண்ட்ஸ் சந்தைக்கடை மாதிரி (அதுவும் ஞாயிற்றுகிழமை மாலையில்) ஆகி விடுகிறது என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால், புது இடங்களில் பில் கூட ஆகலாம். இது ஒரு விஷயமாக எனக்கு இல்லை, மற்றவர்களுக்கு எப்படியோ???
ஆனால், இந்த தடவை அறிவித்து விட்டதால் உட்லண்ட்ஸே இருக்கட்டும்.
நன்றி
ஜி.ரா. மற்றும் ஜெயராமன் கூறும் கருத்துகள் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டியவையே. இம்முறையே கூட அதை செய்து பார்க்கலாம். என்ன புக் ஒன்றும் செய்யவில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
*********** Private message******
dondu sir,
Plase can you let me know your email address? Now i am in India. I will contact you soon.
Thanks and Regards,
Mahesh..
*********** Private message******
மகேஸ்,
தங்கள் இந்தியாவில் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி.
மீட்டிங்குக்கு வாங்களேன். பேசலாம். போண்டாவை பார்த்து பயப்படாதீர்கள்.
நன்றி
ஒரு சந்தோஷமான செய்தி. ஜி.ராகவனிடம் நான் கேட்ட கேள்வி (கால் கட்டு எப்போது போடப் போகிறார்கள்) மகேஷுக்கு பொருந்தி விட்டது. மனிதர் இந்தியாவுக்கு வந்ததே அதற்குத்தான். இரண்டு நாட்களில் மதுரை போய் விட்டு அப்புறம்தான் வரப்போகிறாராம். ஆகவே மீட்டிங்கிற்கு அவர் வர இயலாது எனக் கூறி விட்டார். எப்படியும் அவரை சந்தித்து விடலாம் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருத்தம்தான்.
மனிதர் போண்டோவிலிருந்து தப்பித்தாலும், இன்னொரு விஷயத்தில் பலமாக மாட்டிக்கொண்டு விட்டாரே!
சாரி சார்,
கொஞ்சம் லேட்டாயிருச்சி..
ஜி.ராவோட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று..
மாற்றம் தேவைதான்..
ஜயராமனுடைய கேள்வியும் நியாயமானதே.. ஆனால் பில்லில் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இருக்காதென்றே நினைக்கிறேன்.. ஆனால் இம்முறை உட்லண்ட்ஸிலேயே வைத்துக்கொள்ளலாம். அடுத்த முறை எங்கே நடத்துவதென அங்கேயே தீர்மானிக்கலாம்.
போலி ஜோசஃபின் பின்னூட்டத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கும்.
அந்த யோசனையை நிராகரிக்கிறேன். பெண் வலைஞர்களுடன் கணவர்கள் வருவதில் தவறில்லை. ஆனால் மனைவியரை இதில் ஈடுபடுத்தாமலிருப்பதே நல்லது என்பது என் அபிப்பிராயம்.
எங்கே ஜி!யைக் காணோம்..
போலியைக் கண்டு அஞ்சாதீர்களென அவருக்கு இதன்மூலம் அழைப்பு விடுக்கிறேன்:)
பினாத்தல் சுரேஷ் ஒருமுறை என்னை தொலைப்பேசியில் அழைத்து சார் நான் சென்னையில்தான் இருக்கிறேன். உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்றார். நான் அப்போது மும்பை செல்வதற்காக ஏர்போர்ட்டில் இருந்தேன். நான் சென்னை வந்ததும் கூப்பிடுங்கள் சார் என்றேன். பின்னர் எந்த விவரமும் இல்லை.
அவர் சென்னையிலிருந்தால் அவசியம் கூட்டத்திற்கு வருமாறு அழைக்கிறேன்.
அதேபோன்று சென்னையில் அன்று இருக்கக்கூடிய அனைவரும் இதை தனி அழைப்பாக ஏற்றுக்கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்..
முதல் கூட்டத்திற்கு ஆறு பேர், சென்ற கூட்டத்திற்கு பத்துக்கும் மேலே.. அந்த கணக்கில் பார்த்தால் இந்த கூட்டத்துக்கு குறைந்தது இருபது பேராவது இருக்கவேண்டும்..
பினாத்தல் சுரேஷ் அவர்கள் சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வருவார் என்றுதான் நினைக்கிறேன்.
"போலியைக் கண்டு அஞ்சாதீர்களென அவருக்கு இதன்மூலம் அழைப்பு விடுக்கிறேன்:)"
நானும் இந்த அழைப்பில் சேர்ந்து கொள்கிறேன். போலியிடம் பயப்பட்டால் காரியத்துக்கு ஆகாது. தீயவர் முகத்தில் காறி உமிழச் சொன்ன முண்டாசுக் கவிஞனை நினைவில் கொள்வோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார் நல்ல முயற்சி நடத்துங்கள் எனது வாழ்த்துகள் என்ன சார் செலவு என்ன ரூ1000ம் வருமா அதை டொண்டு சாரும் ஜோசப் சாரும் செய்யக் கூடாதா?
பிரச்சினை காசில் இல்லை என்னார் அவர்களே. போன தடவை டட்ச் ட்ரீட் எவ்வளவு மனநிறைவைத் தந்தது என்பதை நீங்கள் நேரில் பார்த்திருக்க வேண்டும். அந்தப் பங்கேற்புதான் முக்கியம். அதற்கு எல்லோருடைய இன்வால்மெண்டும் முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அட ennar சார்,
என்ன இப்டி சொல்லி போட்டீங்க?
நீங்க வாங்க சார்! பைசா ப்ரீயாகவே ஜமாய்ச்சுடலாம்?
நன்றி
ஊரிலிருந்தால் சந்திக்கலாம்
அன்புடன்...ச.சங்கர்
நன்றி சங்கர் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்களின் அழைப்புக்கு நன்றி டோண்டு சார். இம்முறை கண்டிப்பாக வருகிறேன். புதியவனாகிய எனக்கு மற்ற வலைப்பதிவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு - தவற விட மாட்டேன். இடம், கட்டணம் ஒரு தடையில்லை.
உங்கள் வரவு நல்வரவாகுக கிருஷ்ணா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாளை வலைப்பதிவர் மீட்டிங் என்பதை நினைவுபடுத்தவே இப்பின்னூட்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யா
அங்கு நடக்கும் சம்பவங்கள் முழுமையாக பதிவிடுங்கள் அதையாவது தெரிந்து கொள்கிறோம்
கண்டிப்பாகச் செய்யப்படும் ஊர் சுற்றி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன்,
ஜி! யின் பின்னோட்டத்தை இங்கு காணவில்லை. வேறு ஒரு பதிவில் இன்று அவருடைய பின்னூட்டம் பார்த்ததாக ஞாபகம். அவரிடம் பேசியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர் என் வீட்டு அருகாமையில் இருப்பதால் அவர் விருப்பப்பட்டால் நான் அவருடன் சேர்ந்து வருகிறேன். விவரம் தெரியவில்லை.
நன்றி
ஜி அவர்களுடன் பேசியாகி விட்டது. அவருக்கு உடல் நலம் சரியில்லை. முடிந்தால் வருவதாகக் கூறினார். எதற்கும் நமக்காக நாளை காலை அவரை நேரில் சந்திக்க முடியுமா?
பை தி வே சிமுலேஷனைப் பார்க்க முடியுமா? அவர் நம்பர் எனக்குக் கிடைக்கவில்லை.
எது எப்படியானாலும் மீட்டிங் நிச்சயம் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சற்று நேரம் முன்பு சிமுலேஷன் அவர்கள் தொலை பேசினார். இன்று காலை ரசிகவ் ஞானியார் பேசினார். இருவரும் மீட்டிங்கிற்கு வரும் சாத்தியக்கூறுகள் பலமாகவே உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெயகமல் மற்றும் சரவணன் வரவு நல்வரவாகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மா.சிவக்குமார் அவர்களும் வருவதாகக் கூறியுள்ளார். நான் சரியாக ஐந்து மணிக்கு வீட்டை விட்டு புறப்படுகிறேன். அதற்கு மேல் வர விருப்பம் தெரிவிக்க என் செல்லில் பேசவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment