12/30/2006

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 3

இதற்கு முன்பு இந்த வரிசையில் வந்த
இரண்டாம் பதிவு
முதல் பதிவு

இதற்கு முந்தைய 2 பதிவுகளில் நீங்கள் தவிர்க்க வேண்டிய நபரகளை பற்றி பேசும்போது தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்களையே குறி வைத்தேன். இப்பதிவில் சற்று வேறு மனநிலைகளில் இருப்பவர்களைப் பற்றி கூறுவேன்.

நான் சமீபத்தில் 1963-69 காலக் கட்டத்தில் பொறியியல் கல்லூரியில் படித்த தருணம் அது. என் நண்பன் ஒருவன். பெயர் ராமகிருஷ்ணன் என்று வைத்துக் கொள்வோமே. (அவன் இப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பதால் அவனது உண்மைப் பெயரை கூறவில்லை). அவன் நன்றாகப் படிப்பவன். தினமும் தவறாது அன்றன்றைய பாடங்களைப் படித்து விடுபவன். ஹாஸ்டலில் இருந்தான். ஆனால் அவ்வாறு படிப்பது விடியற்காலை 3 மணியிலிருந்துதான். நாள் முழுக்க ஊர் சுற்றுவான். தான் ஒன்றுமே படிப்பதில்லை என்றெல்லாம் ஃபிலிம் காட்டுவான். அவன் சொல்வதை அப்படியே நம்பி சில அசடுகள் அவனுடன் ஊரை சுற்றும். இரவு 10 மணி வரை கொட்டம் அடித்து விட்டு படுக்கப் போய் விடுவான். அசடுகளும் அவ்வாறே செய்யும்.

ஆனால் விடியற்காலை 3 மணிக்கு ஃபிரெஷாக எழுந்து படித்து விடுவான். அது தெரியாத மற்ற அசடுகள் காலை 7 மணி வரை தூங்கும். கடைசியில் பரீட்சையில் இவன் எல்லா சப்ஜெக்டுகளையும் க்ளியர் செய்து போய்க் கொண்டே இருப்பான். அசடுகள் கம்பார்ட்மெண்டுகள் வாங்கும். இவன் ஒரு உதாரணமே. ஆனால் வாழ்க்கையில் இவனைப் போல பலர் உண்டு. தாங்கள் நேரத்தை வீணாக்குவதுபோல நடிப்பார்கள். எனக்கு எப்போதுமே இவர்களின் மோட்டிவேஷன் புரிந்ததேயில்லை. நல்ல வேளையாக நான் ஹாஸ்டலில் இருந்ததில்லை. இவனிடம் நான் மாட்டிக் கொள்ளவில்லை. இவனை பற்றி நான் என் தந்தையிடம் பேசினேன். அப்போது என் ஆச்சரியம் எல்லாமே அவன் எப்படி ஊர் சுற்றினாலும் அவ்வாறு எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றான் என்பதுதான். ஆனால் நான் அவனை வர்ணித்ததுமே என் தந்தை கூறினார், அவன் நடிக்கிறான் என்று. ஏனெனில் அவர் படிக்கும்போது கூட அவருடன் ஒருவன் இதே குணநலன்களுடன் இருந்தானாம். அப்புறம் விசாரித்ததில் என் தந்தை கூறியது போலத்தான் எனது கிளாஸ்மேட்டும் நடந்து கொள்கிறான் என்று தெரிய வந்தது.

அப்படிப்பட்டவர்களை நிச்சயம் தவிர்க்கவும். அதிலும் இப்போதெல்லாம் டீம் செயல்பாடுகள் அதிகம். இந்த குணாதிசியம் உள்ளவர்கள் தாங்கள் முன்னுக்கு வந்தால் போதாது, மற்றவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதற்காகக் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் காலில் விழுவார்கள், காரியம் முடிந்ததும் காலை வாருவார்கள்.

ஒரு பிரசித்தி பெற்ற அமெரிக்க பதிப்பாளர் ஒரு சமயம் கூறினார், "வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க நீங்கள் வெற்றி பெற்றால் மட்டும் போதது, உங்கள் நண்பர்கள் அதே சமயம் தோற்கவும் வேண்டும்" என்று.

அரசியல்வாதிகள் பலரும் இவ்வாறுதான் செயல்படுவார்கள்.

"தமிழ்வழிக்கல்வி எல்லோருக்கும் விழுந்து விழுந்து சிபாரிசு,
ஆனால் ஆங்கில மீடிய கல்வியில்தான் அவர்தம் வாரிசு"

என்ற ரேஞ்சில் செயல்படுவார்கள். அவர்களை பற்றி ஏற்கனவே வேணமட்டும் எழுதியாகி விட்டதால், இங்கு அவர்களை பற்றி அதிகமாகக் குறிப்பிடமாட்டேன்.

ஆனால் வேறு சில பதிவர்களை பார்க்கிறேன். உலகமயமாக்கலை எதிர்ப்பார்கள் ஆக்கிரோஷமாக. ஆனால் கூர்ந்து பார்த்தால், அப்பதிவுகளையும் அவர்கள் அதே உலகமயமாக்கல் கொள்கையால் உண்டான வேலைகளில் இருந்து கொண்டே வேலை நேரத்தில் போடுவார்களாக இருக்கும். அமெரிக்காவைத் திட்டுவார்கள், ஆனால் அங்கு வேலை செய்ய வாய்ப்பு வந்தால் அமெரிக்க தூதரக வாசலில் தேவுடு காப்பவர்களில் அவர்களே முதன்மையாக இருப்பார்கள்.

அது சரி, அது அவர்கள் பிரச்சினை, உமக்கென்ன வந்தது என்று கேட்பவர்களுக்கு எனது பதில்:

இப்பதிவு அவர்களைக் குறைகூறி அல்ல. அவர்கள் அப்படித்தான். ஆனால் அதே சமயம் அவர்கள் பதிவுகளை மற்றவர்கள் ஜாக்கிரதையாகவே அவதானிக்க வேண்டும் என்றெடுத்துரைப்பதற்காகவே. ஏனெனில் அவர்களது அறிவுறைகளை அவர்களே நம்புவதில்லை.

இருக்கட்டும், நான் கூற நினைப்பது என்ன?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

34 comments:

மகேஸ் said...

//அவர்கள் அப்படித்தான். ஆனால் அதே சமயம் அவர்கள் பதிவுகளை மற்றவர்கள் ஜாக்கிரதையாகவே அவதானிக்க வேண்டும் என்றெடுத்துரைப்பதற்காகவே. ஏனெனில் அவர்களது அறிவுறைகளை அவர்களே நம்புவதில்லை.//

நல்ல உள்குத்து டோண்டு அவர்களே.
நீங்கள் அந்தக் 'காட்டுஅரசரை'த்தானே கூறுகிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

நான் யாரையும் இங்கு குறிப்பாகக் கூறவில்லை. பதிவர்களில் பெரும்பாலானோர் மென்பொருள்/வன்பொருள் நிபுணர்களாக இருக்கும் இந்த சூழ்நிலையில் நான் கூறியது பலருக்கும் பொருந்தும். சம்பந்தப்பட்டவர் உணர்ந்து கொள்வர். அது போதும் எனக்கு.

என் கவலை எல்லாம் அவற்றால் திசை திரும்பாது மக்கள் தத்தம் வழியைத் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் என்பதே. அந்த வழி சரியோ தவறோ, முடிவு அவர்களுடையதாகவே இருத்தல் நலம்தானே.

லக்கிலுக் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார். இனி நடப்பவை எதுவுமே நல்லதாக இருக்கட்டும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி லக்கிலுக் அவர்களே. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//ஆனால் வேறு சில பதிவர்களை பார்க்கிறேன். உலகமயமாக்கலை எதிர்ப்பார்கள் ஆக்கிரோஷமாக. ஆனால் கூர்ந்து பார்த்தால், அப்பதிவுகளையும் அவர்கள் அதே உலகமயமாக்கல் கொள்கையால் உண்டான வேலைகளில் இருந்து கொண்டே வேலை நேரத்தில் போடுவார்களாக இருக்கும். அமெரிக்காவைத் திட்டுவார்கள், ஆனால் அங்கு வேலை செய்ய வாய்ப்பு வந்தால் அமெரிக்க தூதரக வாசலில் தேவுடு காப்பவர்களில் அவர்களே முதன்மையாக இருப்பார்கள். //

டோண்டு அய்யா,

நீங்க மறைமுகமா, என் கட்சி தலைவர் அசுரன் அய்யாவையும்,இளைய தளபதி ராஜ்வனஜ் அய்யாவையும் இடிக்கறீங்கன்னு புரியுது.ஆனா இன் கட்சி IT கூலிகளை மறு காலனி ஆதிக்க மோகினி ஆட்டத்திலே மயங்கவிடக்கூடாது என்ற கொள்கை உறுதியை கொச்சைப் படுத்தவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேனய்யா.அதே மதிரி மறு காலனி ஆதிக்கத்துக்கு தரகு வேலை பார்க்கும் திராவிட கட்சிகளுக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்வதும், அமெரிக்க பார்ப்பனீயத்துக்கு ஆப்பு வைக்கத்தான் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிகிறேனுங்கய்யா.ஒட்டு மொத்தமா என் கட்சியை தி மு க,பா ம க, ரேஞ்சுக்கு இறக்கிடாதீங்கய்யா.

பாலா

dondu(#11168674346665545885) said...

மறுபடியும் கூறுகிறேன். நான் யாரையும் பெயர் கூறி குறிப்பிடவில்லை.

அவரவர் தத்தம் நிலையை தேர்ந்தெடுத்துக் கொள்ள தமது முடிவையே எடுக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//அவரவர் தத்தம் நிலையை தேர்ந்தெடுத்துக் கொள்ள தமது முடிவையே எடுக்க வேண்டும்//

டோண்டு அய்யா,

எல்லாரும் இப்படி இருந்துட்டா, எம் மக்களான, IT கூலிகளின் தலைக்கு மேல் வெள்ளம் போகாம இருக்க முயற்சி மேற்கொள்ளுவது யார் (என் தலைவரைத் தவிர) என்பதை அடையளம் காட்ட நீங்கள் கடமைப் பட்டுள்ளீர்கள்.அமெரிக்க பார்ப்பனீயத்துக்கு ஆப்பு வைப்பதற்கு மாற்று வழிகளையும் முன் வைக்க நீங்கள் கடமைப் பட்டுள்ளீர்கள்.

பாலா

dondu(#11168674346665545885) said...

"அமெரிக்க பார்ப்பனீயத்துக்கு ஆப்பு வைப்பதற்கு மாற்று வழிகளையும் முன் வைக்க நீங்கள் கடமைப் பட்டுள்ளீர்கள்."

இதற்கு சற்று சுற்றிவளைத்து பதில் கூறுவேன்.

வியட்னாம் போர் நடந்த சமயத்தில், சமீபத்தில் 1967-ல் டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் அமெரிக்காவுக்கு எதிர் நிலை எடுக்க நான் அவரைச் சாட, அதை புன்முறுவலுடன் கேட்ட என் தந்தை என்னிடம் "உன்னை மாதிரி உண்மையான அமெரிக்கனிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?" என்று கேட்டார்.

ஏதேனும் புரிகிறதா? :))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//உன்னை மாதிரி உண்மையான அமெரிக்கனிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?" என்று கேட்டார்.

ஏதேனும் புரிகிறதா? :))))))))))//

டோண்டு அய்யா,

புரிகிறது அய்யா,இரண்டு விஷயம் சொல்றீங்க.

1)அமெரிக்க பார்ப்பனீயத்துக்கு அவங்களே ஆப்பு வச்சிப்பாங்க. அசுரன் அய்யா தேவையில்லை.
2)Why should Asurans of the world masquerade as "More American" than Americans themselves? அப்படீன்னு ஒரு கேள்வியை வக்கிறீங்க இல்லையா?

ஆனா என்னைப் பொருத்தவரை என் தலைவர் அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்கறதுலே முழு மூச்சோடு எறங்கிட்டா,நம்ம தமிழ்நாடு பொழைச்சுக்குமே என்ற நப்பாசை தான்,நான் அந்த கொள்கையை ஆதரிப்பதின் காரணம்.இந்த கொள்கை விளக்கத்தையும் நான் உங்க முன்னே வைக்கிறேனுங்கய்யா.

பாலா

dondu(#11168674346665545885) said...

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் ஒரு காட்சி:

ஒற்றர் தலைவன்: எல்லாம் நீங்கள் தந்த யானைப்பால்தான்.

புலிகேசி: ஞானப்பால்

ஒற்றர் தலைவன் (அழுத்தம் திருத்தமாக): யானைப்பால்

புலிகேசி (கேமரா லுக்குடன்): முடியல்லெ.

அந்த நிலைமைக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்களே.

பாலா: Why should Asurans of the world masquerade as "More American" than Americans themselves?

டோண்டு ராகவன்: முடியல்லெ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்..

Easier said than done.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார்.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

இந்தப் பதிவோட மத்த ரெண்டு பகுதியையும் படிச்சேன். நல்லா இருந்தது. அவ்வளவுதானா இல்லை இன்னும் மிச்சமிருக்கா இந்த விஷயம்?

dondu(#11168674346665545885) said...

இன்னும் ஒரு பதிவுக்கு விஷயம் வரும் என நினைக்கிறேன் மதுசூதனன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பின்னுட்ட சூராவளி பாலா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமென்று இருகிறேன் , டோண்டு சார் , நீங்களும் வரீங்களா ?

பாலா ர.ம

3 வது நெடுக்கு சந்து ,

பொள்ளாச்சி பக்கம்.

Anonymous said...

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் ஒரு காட்சி:

ஒற்றர் தலைவன்: எல்லாம் நீங்கள் தந்த யானைப்பால்தான்.

புலிகேசி: ஞானப்பால்

ஒற்றர் தலைவன் (அழுத்தம் திருத்தமாக): யானைப்பால்

புலிகேசி (கேமரா லுக்குடன்): முடியல்லெ.

அந்த நிலைமைக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்களே.
:))))))))

நீங்க நெஜம்மாவே பாவம்தான் சார்.

தங்கம்மா

ரவி said...

இந்திய மண்ணில் உயர்கல்விவரை முடித்துவிட்டு, இந்திய இலவச காற்றை சுவாசித்துவிட்டு, இந்திய நீரை இலவசமாக பருகிவிட்டு, பாரின் போய், அங்கிருந்து இந்தியா கேவலம், இந்தியன் கே(கோ?)வலன், இந்தியா பக்கம் இனிமே எட்டிகூட பாக்கமாட்டேன் என்று சொல்லித்தொலைபவர்களை அருமையான சாடல்...!!!

dondu(#11168674346665545885) said...

நன்றி செந்தழல் ரவி அவர்களே. அவ்வாறு நடப்பவர்களை நான் இன்னும் தொடவே ஆரம்பிக்கவில்லை.

அவர்களுக்கும் இருக்கு அடுத்த பதிவுகளில்.

நான் கூறியவர்கள், "வெளிநாட்டு மோகம் எல்லாம் கூடாது, உலகமயமாக்கல் பாவம், கம்யூனிசமே சிறந்த தீர்வு" என்று ஜல்லியடிப்பவர்கள். அவர்கள் இதுவரை அமெரிக்கா போகாததற்கு காரணம் வாய்ப்பு இல்லாததால்தானே தவிர வேறு லட்சியம் போன்ற மண்ணாங்கட்டிகள் எல்லாம் இல்லை. அவற்றை மற்றவர் பின்பற்ற வேண்டும் என்று மட்டும் எதிர்ப்பார்ப்பவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு சார்,

நீங்கள் குழந்தை என நினைக்கும் மேடை கூப்பாட்டு ஞானியின் கருத்து தங்களின் பார்வைக்காக:



https://www2.blogger.com/comment.g?blogID=19205891&postID=3803393322440214355

luckylook said...

http://dondu.blogspot.com/2007/01/37.html

போலியை கடுமையாக எதிர்ப்பவர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பதிவரின் லட்சணத்தை மேற்கண்ட தொடுப்பில் பாருங்கள்.

வரதன், பிரகாஷ், செர்வாண்டஸ், முகம்மது யூனுஸ் என்றெல்லாம் மற்றவர்களை திட்டவே பயன்படும் முகவரிகளில் சம்பந்தப்பட்ட பதிவரின் பதிவுகளில் மட்டுமே பெரும்பாலான கமெண்டுகள் விழும். போலிக்கும் இந்த முகவரிகளுக்களும் வார்த்தைகளில் மட்டுமே வித்தியாசம்.

ஊருக்கு தான் உபதேசம், நமக்கல்ல :-))))))))

18 January, 2007 12:48


தங்களை நேர்மையில்லாதவர் என்று கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது. "போடா ஜாட்டான்" என்று போகும் உங்களை "மழலை பிதற்றல்கள்" பார்க்கும் பார்வை இதுதான்.

நீங்கள் ஏற்கனவே ஓரிடத்தில் சொல்லியிருப்பது போல மனிதர்கள் திருந்துவார்கள் என்பதோ, நம் கருத்தை புரிந்துகொள்வார்கள் என்பதோ நடக்காத விஷயங்கள்தான் போலிருக்கின்றது.

உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே இங்கு பதிகிறேன்.

Anonymous said...

நீங்க சொல்றது சரிதான். இவ்வளோ கூர்மையான புத்தியோட இருக்கற டோண்டு சார் ஏன் லக்கிலுக்கை அடையாளம் கண்டுக்கலைன்னு நானும் யோசிச்சு இந்த கன்க்ளூஷனுக்கு வந்திருக்கேன்.

நீங்க சுட்டின அதே பதிவுலே கவிதாவுக்கு லக்கிலுக் கொடுத்த பதிலைப் பாருங்க.

"luckylook said...
//லக்கி லுக், நீங்க கொடுத்த சுட்டியில போய் பார்த்தால் நீங்களும் நிறைய பதில் ராகவர் சார்'க்கு போட்டு இருக்கீங்க..
நிஜமாவே தெரியாமதான் கேட்கிறேன்.. உங்களை, எல்லாம் "நிஜ போலி" திட்ட மாட்டாறா.. திட்டமாட்டாறுன்னா.. ஏன்..எப்படி எதற்கு ன்னு ரகசியத்தை சொன்னீங்கன்னா.. நாங்களும் அதையே கடைப்பிடித்து ராகவன் சார் பதிவில் பதில் போடுவோம் இல்ல..//
:-))))))

அதெல்லாம் வரும். அதுமட்டுமல்ல அண்ணன் பாலபாரதி குறிப்பிட்ட போலிகளிடமிருந்து அதை விட மோசமா வரும். இதைப் போயி பெரிய விளம்பரமா பெருமையா சொல்லிக்க முடியுமா என்ன?

இதையெல்லாம் நெனைச்சிக்கிட்டு மூலையிலே உக்காந்து அழுதுகிட்டிருந்தா ஆட்டையிலே பவுண்டரிகளும், சிக்ஸருமா வெளாச முடியாது :-))))

போலியாருடன் ஆரம்ப காலத்தில் ரொம்ப மோசமாக மோதியவர்களில் நானும் ஒருவன். காலப்போக்கில் போலியாருக்கு என் மீது கோபம் குறைந்திருக்கலாம். அவரையே கலாய்த்து சில பதிவுகள் நான் போட்டதை கூட அவர் ரசித்திருக்கிறார்.

கமெண்டு மாடரேஷன் எதுக்கு வெச்சிருக்கீங்க? எவ்வளவு போலி கமெண்டு வந்தாலும் அதை வெச்சி மெயிண்டெயின் பண்ணிக்கலாமே?
18 January, 2007 14:12"

இப்ப எனக்கு கொஞ்சம் புரியுது.முதல்லே போலியை எதிர்த்து சண்டை போட்டுருக்கார், கருத்து.காமிலே. அப்பால போலி அவரைப் பத்தின டீடைல்ஸை தெரிஞ்சு வச்சுண்டு அவரை பிளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிருக்கார். அதனாலே அப்பப்ப டோண்டு சாரை எதிர்த்து அவர் எழுதறாருன்னு நினைக்கிறேன்.

இப்படி செஞ்சதாலத்தான் "காலப்போக்கில் போலியாருக்கு என் மீது கோபம் குறைந்திருக்கலாம்" என்று லக்கிலுக் நெனச்சுருக்கலாம்.

அது உண்மையா இல்லையாங்கறதை டோண்டு சார்தான் சொல்லணும்.

கட்டபொம்மன்

bala said...

//மனிதர்கள் திருந்துவார்கள் //

மியூஸ் அய்யா,

மனிதர்கள் திருந்துவார்கள்.சில குழந்தைகள்?சந்தேகம்,தான்.Juvenile delinquents..மாற மாட்டாங்க.

பாலா

dondu(#11168674346665545885) said...

நீங்க சுட்டிய பதிவை பார்த்தேன் ம்யூஸ் அவர்களே.

No comments.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Dear Kattabomman,

No comments other than to say that giving in to a blackmailer is very painful to the victim.

I don't like blackmailers, period.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்துக்கு நன்றி பாலா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

அண்ணன் பாலபாரதி குறிப்பிட்ட போலிகளிடமிருந்து அதை விட மோசமா வரும்.

1. உங்கள் அண்ணன் பாலபாரதி குறிப்பிட்டவர்கள் அனானிகளாகத்தான் பதிவிட்டிருக்கிறார்கள். யாருக்கும் போலியாக இல்லை.

இதிலிருந்து அவர்கள் நேர்மையானவர்கள் என்பது தெரிகின்றது.

2. போலிக்கும், உங்கள் அண்ணன் பாலபாரதியால் முத்திரை குத்தப்படுபவர்களுக்கும் மலைக்கும், மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.

3. அனானியாக எழுதப்பட்ட அந்த கதையை நானும் படித்தேன் (http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_116917074479877300.html)
பின் நவீனத்துவ பாணியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட கதை. இந்த நையாண்டியும் நக்கலும் கதைக்கருவின் தரத்தை மறக்கச் செய்துவிடுகின்றது. ரமேஷ்-ப்ரேம் போன்றவர்களின் கதைக்கு இணையான கதை இது.

இது பற்றி வயிறெரியும் ஒரு பதிவில் ஒரு பதிவர் இந்த கதை ஹரிகிருஷ்ணன் என்பவருடைய டேபிள் டென்னிஸ் எனும் கதையிலும் சிறந்தது என்று குறிப்பிட்டிருந்தார். டேபிள் டென்னிஸ் என்கின்ற கதையை எழுதியது வேறொருவர் என்று நினைக்கிறேன். யாராவது சொல்ல முடியுமா?

3. அந்த கதையை வெளியிட்டிருப்பவரேகூட ஆபாசமாய் ஹிந்து தெய்வங்களை வர்ணிக்கும் போக்கை கண்டித்தே அதை வெளியிட்டிருக்கிறார். இத்தகைய வெளியிட வற்புறுத்தப்பட்ட அவருடைய நிலை குறித்து அவரது வருத்தத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். மற்றவர்கள் தங்களது ஆபாசக்கதைகளை நிறுத்திய பின் அவரும் அக்கதையை எடுத்துவிடுவார் என்று நினைக்கிறேன். ஆபாசக் கதைகளை எழுதி அதை சொறிந்து கொள்ளும் சுவராக உபயோகப்படுத்திக்கொள்பவர்களுக்கு மத்தியில் வாழும் நிலை கொடுமையானது. நல்ல மன நிலையிலிருப்போர்கள், ஆண்மையுள்ளவர்கள் நல்ல குடும்பப் பெண்ணோடு வாழ்க்கை நடத்துவார்கள். புலன்கள் தாண்டிய இணைய வெளியில் சுகம் தேடி வலைப்பதிவுகளின் ஃபைபர் இணைப்புக்களை தங்களது சுயபோக சுக்கிலத்தாலும் சுரோணிதத்தாலும் அசிங்கப்படுத்துவதில்லை. இந்த அசிங்கத்தை விலக்க அவற்றின்மேல் மண்வாரி இறைப்பவர்களின் செயல் காரணங்கள் விலக்கிப் பார்த்தால் தவறாகவே தெரியும். காரணங்கள் என்ன என்று தேட ஜாதி மத வெறி இல்லாதிருக்கும் இதயம் தேவை.

ஹிந்து தெய்வங்களை ஆபாசமாய் எழுதும் பால பாரதிக்கு ஆபிரகாமிய மதங்களின் சுவர்க்க சுகங்கள் பற்றியோ, அந்த மதத்தை சேர்ந்த பெரியோர்களின் செயல்கள் பற்றியோ சொல்லும் தைரியம் இருக்குமா என்பதும் தெரியவில்லை.

ஜாதி ஒழிய வேண்டும் என்று கூக்குரல் இடும் இவர்கள் தங்கள் சொந்த ஜாதி சங்கங்கள் அழிய என்னென்ன காரியங்கள் செய்து வருகிறார்கள் என்பது பற்றி அறிய ஆவலாய் உள்ளது.

லக்கி லுக்கை ப்ளாக்மெய்ல் செய்வதுபோல இவரையும் செய்யத் துணிவார்களானால் அது மிகவும் வருந்தத்தக்கதே.

இந்த ப்ளாக்மெய்லர்கள் மற்றும் இந்த பிராணிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் மத வெறியர்களும், அடுத்தவரை ஹிந்துத்துவவாதி என்றும், மோசமானவர்கள் என்றும் முத்திரை குத்தும் தொழில் நடத்துவது சிரிப்பை வரவழைக்கின்றது.

இதற்குப் பதிலாக இவர்கள் இவர்களின் தரத்திலிருந்து பலமடங்கு உயர்வான விபச்சாரத் தொழில் செய்யலாம்.

ரவி said...

////பின் நவீனத்துவ பாணியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட கதை////

எனக்கு ஒரு மண்ணும் புரியலை...!!! யாராவது இந்த பின்நவீனத்துவத்துக்கு விளக்கம் கொடுத்தா நல்லாருக்கும்...

////ஜாதி ஒழிய வேண்டும் என்று கூக்குரல் இடும் இவர்கள் தங்கள் சொந்த ஜாதி சங்கங்கள் அழிய என்னென்ன காரியங்கள் செய்து வருகிறார்கள் என்பது பற்றி அறிய ஆவலாய் உள்ளது.////

இது அவங்க அவங்க தனிப்பட்ட விஷயம்...

///லக்கி லுக்கை ப்ளாக்மெய்ல் செய்வதுபோல இவரையும் செய்யத் துணிவார்களானால் அது மிகவும் வருந்தத்தக்கதே.///

இது முன் முடிவு !!! இவரையும் அப்படீன்னு யாரை சொல்லுறீங்கன்னும் புரியல..

//இந்த ப்ளாக்மெய்லர்கள் மற்றும் இந்த பிராணிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் மத வெறியர்களும், அடுத்தவரை ஹிந்துத்துவவாதி என்றும், மோசமானவர்கள் என்றும் முத்திரை குத்தும் தொழில் நடத்துவது சிரிப்பை வரவழைக்கின்றது.///

சரி, உண்மையான மத தீவிரவாதிங்க உலாவுறாங்களே வலையில்...அவங்களை சொல்லிக்காட்டினால் தப்பில்லையெ !!!!

//இதற்குப் பதிலாக இவர்கள் இவர்களின் தரத்திலிருந்து பலமடங்கு உயர்வான விபச்சாரத் தொழில் செய்யலாம். ///

இது அக்ரமம்...!!!

லக்கிலுக் said...

டோண்டு சார்!

மியூஸ் அடிக்கடி விபச்சாரம், விபச்சாரம் என்று சொல்கிறாரே? அவருக்கு ரொம்பவும் பிடித்த தொழில் அதுதானா? :-)))))

Muse (# 01429798200730556938) said...

டோண்டு அவர்களே,

<>மியூஸ் அடிக்கடி விபச்சாரம், விபச்சாரம் என்று சொல்கிறாரே? அவருக்கு ரொம்பவும் பிடித்த தொழில் அதுதானா? :-)))))<>

எனக்கு வேறு ஒரு நேர்மையான தொழில் சோறு போடுகின்றது.

விபச்சாரத் தொழிலாளிகளின் (மாமாக்களையும் சேர்த்து) நிலை மனித அவலங்களில் ஒன்று. அதை விடக் கேவலமானது இந்த விபச்சாரத்திற்கு கஸ்டமர்களாக இருப்பவர்கள்.

விபச்சாரம் என்பது பெண்ணடிமைத்தனத்தின் உச்சக்கட்ட அநியாயம்.

வறுமையின் கொடுமையால் இச்செயலக்குத் தள்ளப்பட்ட பெண்கள் இந்த இழிநிலையில் இருந்து விடுபட வேண்டும்.

வறுமைக்காக இந்தத் தொழிலில் தள்ளப்பட்டவர்களும் இருக்கிறார்கள், பெரிய புத்திசாலி என்று பெயர் வாங்க மத வெறியர்களையும், ஜாதி வெறியர்களையும் ஆதரித்து வாழ்நாளை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். பாவம், கடைசியில் அவர்களும் யாருக்காக வாழ்நாளை நடத்துகிறார்களோ, அவர்களாலேயே ப்ளாக்மெயில் செய்யப்பட்டு வாழ்கிறார்கள். இவர்களது நிலையையும் நான் வருத்ததுடனேயே அவதானிக்கிறேன். பாவம் !

bala said...

//மியூஸ் அடிக்கடி விபச்சாரம், விபச்சாரம் என்று சொல்கிறாரே? அவருக்கு ரொம்பவும் பிடித்த தொழில் அதுதானா//

டோண்டு அய்யா,

குழந்தை லக்கி ஒரு பிஞ்சிலே பழுத்த ப்ராடிஜி போலிருக்கிறதே.இப்பவே வெள்ளை தாடி லெவலில் பேசறாரே.

பாலா

GiNa said...

அதாவது, ஊருக்கெல்லாம் சாமி இல்லைன்னு உபதேசம் பண்ணிவிட்டு சத்தமில்லாமல் சாய்பாபா அதிருத்ர ஹோமத்தில் பங்கேற்பவர்கள் மாதிரியா :) ?

bala said...

//எனக்கு ஒரு மண்ணும் புரியலை...!!! யாராவது இந்த பின்நவீனத்துவத்துக்கு விளக்கம் கொடுத்தா நல்லாருக்கும்//

செந்தழல் ரவி அய்யா,

என்ன நீங்க இப்படி எழூதிட்டீங்க?வெளியே மிதக்கும் அய்யாவோட பதிவுகளை படிச்சி ரசிச்சிருக்கீங்க.ஜால்ராவும் போட்டு இருக்கீங்க.அதுக்கப்புறமும் இந்த கேள்வியா?
சரி, எதுக்கும் அவரோட"காமன் சென்ஸ் வேண்டாம்" என்ற பதிவை பாருங்க.அதுல அவரோட முன்னும்,பின் பிறமும் காட்டுகிற, ஃபோட்டோ இருக்கும்.வலது பக்கம் இருக்கற ஃபோட்டோவை பாருங்க.வெளியே மிதக்கும் அய்யாவோட பின் புறத்துல நவீனமாக ஏதோ இருக்கும்.அது இருக்கறதால, அவர் பின்ன நவீனம்.புரிந்ததா?

பாலா

Muse (# 01429798200730556938) said...

செந்தழல் ரவி,

////ஜாதி ஒழிய வேண்டும் என்று கூக்குரல் இடும் இவர்கள் தங்கள் சொந்த ஜாதி சங்கங்கள் அழிய என்னென்ன காரியங்கள் செய்து வருகிறார்கள் என்பது பற்றி அறிய ஆவலாய் உள்ளது.////

இது அவங்க அவங்க தனிப்பட்ட விஷயம்...



எது அவங்க தனிப்பட்ட விஷயம், ரவி?

தங்களது ஜாதி வெறியின் அரசியல் ஆணிவேராக உள்ள ஜாதி சங்கங்களை குறை எதுவும் சொல்லாமல் மற்ற ஜாதியை மட்டும் மட்டம் தட்டுவதா?

சாணிப்பால் கொடுப்பவர்களை காப்பாற்றுவது இந்த ஜாதி சங்கங்கள்தான் என்பது தங்களுக்கு தெரியாதா?

கம்யூனிஸ்ட்டுக்களின் பேச்சை நம்பி போராட்டம் நடத்திய வெண்மணி தோழர்களை எரித்தவன் தன் சாதிக்காரனாய் இருந்ததால் பாதிக்கப்பட்ட தலித்துக்களுக்கு எதிராய் குரல் எழுப்பிய ஈவேராவின் குரலாக இவர்கள் தங்களை கற்பனை செய்துகொள்ளுவது ஏன், ரவி?

தலித் பெண்கள் ஜாக்கெட் போட்டதால்தான் துணி விலை ஏறி விட்டது என்று சொன்னவரை அடியொற்றியவர்கள் ஜாதியை அழிப்போம் ஆனால் அந்த ஜாதி தான் பிறந்த ஜாதி இல்லை என்பதில் உறுதியாய் இருப்பதும், தொடர்ந்து தன் ஜாதியிலோ, அல்லது தன்னைவிட உயர்ந்த ஜாதியிலோ மட்டும் திருமணம் செய்துகொள்ளுவதும், தன் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் ஓட்டுப்போடுவதும் அவர்களது தனிப்பட்ட விஷயம் என்கிறீர்களா?

அந்தண குணங்கள் எதுவும் இன்றி ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தங்களை பிராமணர்களாக நினைத்துக்கொள்ளும் முட்டாள்தனத்திற்கு சப்பை கட்டுகிறீர்களா?

எந்த மதத்தில் பிறந்தாலும் ஏதேனும் ஒரு ஜாதியில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு (ஷேக், சைய்யது, மொகல், பதான், கிருத்துவ நாடார், கிருத்துவ செட்டியார், கிருத்துவ தலித், கிருத்துவ ஐயர், தேவர், பறையர், பள்ளர்) மற்றவரை தாழ்வாகவோ உயர்வாகவோ நினைத்துக்கொண்டு வாழ வழிவகுக்கும் தங்களுடைய ஜாதிச்சங்கங்களை அழிக்காமல், எதேனும் பலமில்லாத தலித்தையோ, பார்ப்பனரையோ போட்டு வதக்கிக்கொண்டு ஜாதி அழிப்பே தன் லட்ஷியம் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களின் செயல்கள் உங்களுக்கு எப்படி அவர்களது தனிப்பட்ட விஷயமாகத் தெரிந்தது?

சிலர் ஆக்ஸிஜன் இல்லாமல்தான் நாங்கள் சுவாசிக்கிறோம் என்று சொன்னால் அந்த கேப்பை தேனை ருசிக்கும் பக்குவத்தை பெறுவது எப்படி?

ஏதேனும் ஓரிரு ஜாதிகளை அழித்தால் ஜாதிகள் எல்லாம் அழிந்துவிடுமா?

ஜாதிச்சங்கங்களை அழிக்காமல் சாதிகளை அழிப்பது எப்படி?

தன்னுடைய ஜாதியையும், அதன் சொத்தான ஜாதிசங்கங்களயும் அழிக்காமல் அடுத்தவர்களின் பலமில்லா சொத்தை ஜாதிகளை மட்டும் அழிப்போம் என்று சொல்லுகிறவரை கொள்ளைக்காரர் என்று கூறலாமா?

dondu(#11168674346665545885) said...

வழக்கம் போலவே அமர்க்களமான பின்னூட்டம் தென்னாட்டு வினோத் துவாவான ம்யூஸ் அவர்களே.

ஜாதி சங்கம் வைத்துக் கொள்வார்கள். அது தங்கள் சொந்த விஷ்யம் என்பார்கள். பிராம்மண ஜாதி சங்கம் மட்டும் அக்கிரமம் என்பார்கள். பிராம்மணன் பூணல் போடுவது அவன் சொந்த விஷயம் அல்லவாம். அதை இவர்கள் வெட்டுவார்களாம். அதை எதிர்த்து இப்போது பிராம்மணர்கள் நிற்கிறார்கள் என்பதும் அவர்களுக்கும் ஜீரணிக்க முடியாதாம்.

ஆகவேதான் கூறுகிறேன். (இப்பதிவில் கூறியபடி). அவ்வாறு இரட்டை நிலை எடுப்பவர்களை நான் குறை கூறவில்லை. அவர்கள் அப்படித்தான். அவரவர் தங்களுக்கு சரி எனப்படுவதை செய்து கொண்டு போங்கள். இப்போது இன்னொரு நிலையையும் தெளிவுபடுத்துவேன்.

டோண்டு ராகவன் கூறிவிட்டான் என்பதற்காக எல்லோரும் அதை செய்வார்கள் என்று டோண்டு ராகவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது